கா – முதல் சொற்கள்- கச்சிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கச்சிக் கலம்பகம் நூல் முழுமையும் காண இங்கே சொடுக்கவும் கச்சிக் கலம்பகம் நூலில் உள்ள சொற்கள் எண்ணிக்கையும், தொடரடைவு விளக்கமும்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
காக்க 1
காக்கைக்கு 1
காகுத்தன் 1
காஞ்சி 3
காஞ்சியுள்ளீர் 1
காட்சிதரீஇ 1
காட்சியினை 1
காட்டாரை 1
காட்டீர் 1
காண் 2
காண்-மின் 1
காண்பு 1
காண 3
காணா 2
காணிக்கை 1
காத்தாரை 1
காதம் 2
காதல் 2
காதலனே 1
காதலி 2
காதலின் 2
காதலுடையார் 1
காதனே 1
காதில் 1
காதை 1
காப்பரால் 1
காப்பாய்-கொலோ 1
காப்பீர் 1
காம 3
காமநயனியொடு 1
காமன் 1
காமனும் 1
காமுற 1
காய் 1
கார் 2
காரண 1
காரணத்தால் 2
கால் 5
காலம் 8
காலனை 1
காவணமே 2
காவிடை 1
காவிரி 1
காவினை 1
காள 1
காளை 1
காற்றை 1
கான் 2
கானத்து 1

கா (1)

சிற்றளையுள் உறைவாய் அலவா தென்வளி கா துறை வாய் அலவா – கச்சிக்-:2 65/2

மேல்

காக்க (1)

மால் உலகம் காக்க நரமடங்கல் உரு கொள அ மாலால் – கச்சிக்-:2 1/47

மேல்

காக்கைக்கு (1)

காக்கைக்கு அரியை கனிவித்தாரும் ஆவாரே – கச்சிக்-:2 29/3

மேல்

காகுத்தன் (1)

கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ – கச்சிக்-:2 1/21

மேல்

காஞ்சி (3)

வற்றா வள காஞ்சி வாழ்ந்து அருள் ஏகாம்பரனார் – கச்சிக்-:2 6/1
சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1
ஆர் காஞ்சி மேய அமலர் திரு மார்பு ஆரும் – கச்சிக்-:2 52/2

மேல்

காஞ்சியுள்ளீர் (1)

சிறுகாலின் மணம் அளவும் திரு காஞ்சியுள்ளீர் சேயிழையாட்கு அகலும் இடை திரு காஞ்சி உள்ளீர் – கச்சிக்-:2 21/1

மேல்

காட்சிதரீஇ (1)

உறு வகை மற்று இல்லை என உணர்ந்து எளிது காட்சிதரீஇ
மா கம்பத்தொடும் இறைஞ்சி வழிபாடுசெய உமையோடு – கச்சிக்-:2 1/16,17

மேல்

காட்சியினை (1)

கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே – கச்சிக்-:2 28/9

மேல்

காட்டாரை (1)

வெளிவீட்டாரை காட்டாரை வியன் மாவாரை சேவாரை – கச்சிக்-:2 19/1

மேல்

காட்டீர் (1)

வெறிது ஆசை கூடல் மணத்துற ஆலங்காட்டீர் விதி விழைவு கண்ட இடத்து உறவு ஆல் அம் காட்டீர்
அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே – கச்சிக்-:2 21/3,4

மேல்

காண் (2)

செற்றார் புரம் எரித்த தீயர் காண் அம்மானை – கச்சிக்-:2 6/2
கைம்மாறு என் செய்வனோ காண் – கச்சிக்-:2 77/4

மேல்

காண்-மின் (1)

தயங்கும் இடைச்சியீர் ஆடை நீக்காது ருசி காண்-மின் என்பீர் – கச்சிக்-:2 51/3

மேல்

காண்பு (1)

கண் இணையால் காண்பு அரிய காட்சியினை மானுமே – கச்சிக்-:2 28/9

மேல்

காண (3)

காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/2
வண கோலம் காண வருவீர் மனம் மகிழ்ந்தே – கச்சிக்-:2 83/4
என்ன தவம் செய்தேனோ உமை கம்பர் திரு கச்சி இடையே காண
துன்ன வரும் உடல் நீறும் கஞ்சுளியினொடு செம் கை சூலமும் செம்பொன் – கச்சிக்-:2 91/1,2

மேல்

காணா (2)

மா மேவும் நினது முடி மலர் அடி காணா திறத்தை – கச்சிக்-:2 1/2
ஏதமுற கோ எகினம் என போய் முடி காணா
வேதனை பெற்றோ வேதனையுற்றாள் வெளியானாள் – கச்சிக்-:2 18/3,4

மேல்

காணிக்கை (1)

மண்டு பயோதரகிரியை காணிக்கை இட்டீரால் வள்ளல் கச்சிக்-கண் – கச்சிக்-:2 51/2

மேல்

காத்தாரை (1)

களியுற்று ஆடும் கூத்தாரை அகிலம் அனைத்தும் காத்தாரை
அளியுற்று இனிது புணர்ந்திடுதற்கு அநங்கன் செயல் ஒன்று இலை மானே – கச்சிக்-:2 19/3,4

மேல்

காதம் (2)

காதம் கமழும் கடி ஆரும் மா தரு கீழ் – கச்சிக்-:2 28/1
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2

மேல்

காதல் (2)

தகவு ஈது தெரி காதல் ஒழிவாய் என் உரை கேள் தரை மீது எ நலம் எய்தி மகிழ்வாய் மின் அரசே – கச்சிக்-:2 12/4
கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என் காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை – கச்சிக்-:2 76/3

மேல்

காதலனே (1)

தேடும் திறத்தோர்க்கு அறிவித்தோன் தேவி உமையாள் காதலனே – கச்சிக்-:2 27/4

மேல்

காதலி (2)

மலை வளர் காதலி மருளினை – கச்சிக்-:2 1/72
மலை வளர் காதலி மங்கள வல்லி – கச்சிக்-:2 40/3

மேல்

காதலின் (2)

கவுணியருக்கு அணி முத்தம் காதலின் ஈந்து அருள்செயல் அ – கச்சிக்-:2 1/51
காதலின் வாழ் ஏகாம்பரர் முடியை காண அயன் – கச்சிக்-:2 18/2

மேல்

காதலுடையார் (1)

கடுக்கை தொடை நயந்தேன் காதலுடையார் யான் – கச்சிக்-:2 42/1

மேல்

காதனே (1)

பற்று_இலார் உளம் பற்றுறு பங்கய பாதனே பட பாம்பு அணி காதனே – கச்சிக்-:2 73/4

மேல்

காதில் (1)

காதில் பண் ஆரும் கவி இன்பம் மானுமே – கச்சிக்-:2 28/3

மேல்

காதை (1)

கைதவம் கண் அங்கியான் மன்மதனை வென்ற காதை என் காதல் நோக்கி இன்பு அளிக்க நேர்வர் அல்லரேல் அனை – கச்சிக்-:2 76/3

மேல்

காப்பரால் (1)

அவ மாலை அழித்து எனை காப்பரால் அரவ மாலை அணிந்து அருள் கத்தரே – கச்சிக்-:2 88/4

மேல்

காப்பாய்-கொலோ (1)

கரு புக்கு உழன்று எய்க்கவையாது அருள்கூர்ந்து காப்பாய்-கொலோ
பொருப்பு உக்கு வீழ புவிக்கு ஆடை பொங்க புரம் செற்ற செம் – கச்சிக்-:2 36/2,3

மேல்

காப்பீர் (1)

தாமனை ஒப்பீர் ஐந்து சரம் செய் துயர் நீக்கி அருள் தந்து காப்பீர்
கோமளை வாழ் இடத்தர் கச்சி மறுகு உலவு துளவ மண கொற்றியாரே – கச்சிக்-:2 82/3,4

மேல்

காம (3)

நகம் தரு மெல் இயல் காம விழி இரு நாழி நெல்லால் – கச்சிக்-:2 8/2
கம்பை நதி அயல் காம நயனியாம் – கச்சிக்-:2 40/15
காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3

மேல்

காமநயனியொடு (1)

நா ஆரும் புகழ் கச்சி நகரில் காமநயனியொடு முறை இறை சீர் நன்கு பாடி – கச்சிக்-:2 49/3

மேல்

காமன் (1)

கழை காமன் எய்யும் சரம் தைக்க நொந்தேன் கண்ணாளர் இந்த பனிக்காலம் ஓரார் – கச்சிக்-:2 66/2

மேல்

காமனும் (1)

கத்தனார் மகிழ்ந்த கச்சி வெற்பு_உடையாய் காமனும் மயங்குறு கவின் ஆர் – கச்சிக்-:2 89/1

மேல்

காமுற (1)

காமுற வணம் சேர் வில் வளை விட்டாய் கலை மதி ஒளித்தலை பெட்டாய் – கச்சிக்-:2 20/2

மேல்

காய் (1)

கருமை பகடு ஊர் காலனை காய் வெப்பும் தணிய பழ அடியார் – கச்சிக்-:2 80/3

மேல்

கார் (2)

கார் ஊர் சடையில் கரக்கும் ஆற்றினை – கச்சிக்-:2 1/64
கார் ஆனை தோல் உரித்த கறுப்பினானை களித்து உடலம் நீறு அணிந்த வெண்மையானை – கச்சிக்-:2 22/1

மேல்

காரண (1)

ஆரண அகில காரண பூரண – கச்சிக்-:2 1/92

மேல்

காரணத்தால் (2)

கழறல் அறு_தொழில் சேர் காரணத்தால் அம்மானை – கச்சிக்-:2 6/5
அத்த நீ அளித்த மாந்தழை அரிவைக்கு ஆருயிர் அளித்த காரணத்தால்
சுத்தனாம் அநுமன் சானகிக்கு அளித்த துணை அமை ஆழியோ இந்த்ரசித்தனால் – கச்சிக்-:2 89/2,3

மேல்

கால் (5)

கம்பத்தன் சிலை எடுக்க தலை நெரித்த கால் வலிக்கே – கச்சிக்-:2 1/24
தோளை தழுவின் சுகம் பெறலாம் ஊடல் ஒழிவீர் நீர்க்குமிழி சுழி தேம் புளினம் தோன்றிடுமால் துயரமுறுவேன் நடை கிழம் கால்
நாளை கழியாது இறால் இதழின் நறவை பருக நச்சு உற கொள் நான் அ கருப்பம் சிலை_வேளை நாணச்செய்வேன் மலங்குறேன் – கச்சிக்-:2 10/2,3
ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை – கச்சிக்-:2 52/1
ஓர் கால் செலின் அறு கால் உற்றனை என்பார் வளமை – கச்சிக்-:2 52/1
அதிகம் அன்று எளியேம் துயர் புரிந்திடும் அறக்கடை ஆயும் கால்
துதி கொள் ஏகம்பவாணனார் தூயவர் இதய ஆலயத்தூடு – கச்சிக்-:2 92/1,2

மேல்

காலம் (8)

மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம் – கச்சிக்-:2 67/1
மா தரையில் தரு நறும் பூ விரை விடுக்கும் காலம் மதன் சினந்து மங்கையரை விரைவு இடுக்கும் காலம்
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/1,2
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம் – கச்சிக்-:2 67/2
காதம் மணம் கமழ் சோலை பண் புணரும் காலம் கணவர் இளம் கோதையர்-தம் பண்பு உணரும் காலம்
சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/2,3
சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம் – கச்சிக்-:2 67/3
சீதமுறு கழை கரும்பின் கண் தழைக்கும் காலம் சிற்றிடையார் தம் தலைவர் கண்டு அழைக்கும் காலம்
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/3,4
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4
கோதறு சங்கு இனம் பழன பங்கம் உறும் காலம் குலவு கச்சியார் பிரிய பங்கமுறும் காலம் – கச்சிக்-:2 67/4

மேல்

காலனை (1)

கருமை பகடு ஊர் காலனை காய் வெப்பும் தணிய பழ அடியார் – கச்சிக்-:2 80/3

மேல்

காவணமே (2)

அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே – கச்சிக்-:2 21/4
அறிவேனும் செயல் இட்டீர் அம்பரம் காவணமே அளிப்பீர் அம் கொன்றை மலர் அம்பரம் காவணமே – கச்சிக்-:2 21/4

மேல்

காவிடை (1)

காவிடை பாடி ஆடுவர் மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்தவே – கச்சிக்-:2 30/4

மேல்

காவிரி (1)

வரமுறு காவிரி நதிக்-கண் குடியனே திரு மருவு மார்பினானும் – கச்சிக்-:2 31/2

மேல்

காவினை (1)

கரி வளர் காவினை
கதி தரு மாவினை – கச்சிக்-:2 1/89,90

மேல்

காள (1)

காள உரு காம விழி கன்னி-தனக்கு அ நாள் கருதி ஒரு குணம் குறியும் அரியவர்க்கு ஓர் குணமும் கொடுவா – கச்சிக்-:2 90/3

மேல்

காளை (1)

அ மானை கை அமைத்தான் அ காளை ஓடவைத்தான் – கச்சிக்-:2 7/1

மேல்

காற்றை (1)

காற்றை பிடித்து ஒர் சிறு கரகத்துள் மூடுவேம் கனலை வான் ஓங்க விடுவேம் – கச்சிக்-:2 78/1

மேல்

கான் (2)

கைகைக்கு கான் நடந்த காகுத்தன் பொறையினும் நீ – கச்சிக்-:2 1/21
கான் கொண்ட கொன்றையர் கச்சியை எய்தின் கலி அறுமே – கச்சிக்-:2 75/4

மேல்

கானத்து (1)

கானத்து உறவார் கம்பத்திடையே மகிழ்வாரே – கச்சிக்-:2 11/4

மேல்