மெ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


மெய் (14)

மெய் திரு வந்து உற்றாலும் வெம் துயர் வந்து உற்றாலும் – நள:12/1
திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/4
விலங்குவன மெய் நெறியை விட்டு – நள:22/4
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/3
வில்லி கணை தெரிந்து மெய் காப்ப முல்லை எனும் – நள:106/2
கையில் கபோல தலம் வைத்து மெய் வருந்தி – நள:119/2
மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர் – நள:159/1
வெள்ளத்தான் வெள்ளி நெடும் கிரியான் மெய் அன்பர் – நள:180/3
தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே – நள:266/2
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட – நள:273/1
இவ்வளவு தீ வினையேன் என்பாள்-தன் மெய் வடிவை – நள:312/2
அ வண்ணம் கண்ட-கால் ஆற்றுவரோ மெய் வண்ணம் – நள:332/2
மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக – நள:404/1
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2

TOP


மெய்க்கீர்த்தி (1)

தெள் உற மெய்க்கீர்த்தி சிறந்து – நள:427/4

TOP


மெய்ம்மை (2)

தம் அனத்தை வாங்கும் தடம் தோளான் மெய்ம்மை
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/2,3
கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திரு மேனி வெந்து – நள:344/3,4

TOP


மெய்ம்மை-வாய் (1)

நெறி யானை மெய்ம்மை-வாய் நின்றானை நீங்கி – நள:228/3

TOP


மெய்ம்மையே (1)

ஏன்றோம் இது ஆயின் மெய்ம்மையே எம்மோடு – நள:216/1

TOP


மெல் (13)

பொதி இருந்த மெல் ஓதி பொன் – நள:55/4
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/4
விரிகின்ற மெல் அமளி வெண் நிலவின் மீதே – நள:128/1
வென்றி நில மடந்தை மெல் முலை மேல் வெண் துகில் போல் – நள:143/1
செல்லும் மழ விடை போல் செம்மாந்து மெல் இயலாள் – நள:163/2
கார் ஆரும் மெல் ஓதி கன்னி-அவள் காதல் எனும் – நள:176/3
சில் அரி கிண்கிணி மெல் தெய்வ மலர் சீறடியை – நள:202/1
வல்லி விடா மெல் இடையாள் மக்களை தன் மார்போடும் – நள:254/3
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட – நள:273/1
வெய்ய தரை என்னும் மெல் அமளியை தடவி – நள:290/1
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை – நள:290/3
வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு – நள:299/2
தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3

TOP


மெல்_இயலை (1)

வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு – நள:299/2

TOP


மெல்_ஓதி-தன் (1)

தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3

TOP


மெல்ல (2)

மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே – நள:106/3
செல்லு மடந்தை சிலம்பு அவித்து மெல்ல போய் – நள:185/2

TOP


மெலிந்த (1)

மெலிந்த தோள் வேந்தன் விரைந்து – நள:73/4

TOP


மெலிந்து (2)

விரை ஆடும் தாரான் மெலிந்து – நள:256/4
வினைவலி காண் என்றாள் மெலிந்து – நள:318/4

TOP


மெலிவாள் (1)

வாடி மெலிவாள் வன முலை மேல் ஓடி – நள:116/2

TOP


மென் (21)

வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன – நள:22/1
மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/2
தமையந்தி என்று ஓதும் தையலாள் மென் தோள் – நள:36/3
வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய – நள:46/1
மென் மயில் தன் தோகை விரித்து ஆட முன் அதனை – நள:49/2
மன் ஆகத்து உள் அழுந்தி வார் அணிந்த மென் முலையும் – நள:91/1
பொன் உலகம் காக்கும் புரவலனை மென் மாலை – நள:94/2
மென் மொழியும் சென்று உரைத்தான் மீண்டு – நள:98/4
வெள்ளம் போய் வேகின்ற மென் தளிர் போல் பிள்ளை மீன் – நள:102/2
மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே – நள:106/3
பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே – நள:109/3
பொன் அழகை தாமே புதைப்பார் போல் மென் மலரும் – நள:171/2
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3
திரை ஏற மென் கிடங்கில் சேல் ஏற வாளை – நள:204/3
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை – நள:231/1
மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை – நள:231/1
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர் – நள:239/1
தன் கண் துயில்வாளை தான் கண்டு மென் கண் – நள:275/2
வெறித்த இள மான்காள் மென் மயில்காள் இந்த – நள:297/1
செம் துவர் வாய் மென் மொழியாள் தேர்ந்து – நள:303/4
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை – நள:327/2

TOP