வீ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


வீக்கிய (1)

வீக்கிய கச்சையர் வேல் வாளர் காக்க – நள:121/2

TOP


வீங்கு (2)

விழுது பட திணிந்த வீங்கு இருள் வாய்ப்பட்டு – நள:131/1
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3

TOP


வீச (1)

கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி – நள:191/1

TOP


வீசி (1)

விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1

TOP


வீசும் (1)

அறு கால் சிறு பறவை அம் சிறகால் வீசும்
சிறு காற்றுக்கு ஆற்றாது தேய்ந்து – நள:41/3,4

TOP


வீதி (4)

சீத களப செழும் சேற்றால் வீதி வாய் – நள:20/2
வென்றி மத வேடன் வில் எடுப்ப வீதி எலாம் – நள:28/1
வானும் தேர் வீதி மறி கடலும் மீன – நள:112/2
வான நெடு வீதி செல்லும் மணி தேரோன் – நள:294/1

TOP


வீமன் (20)

வீமன் திருமடந்தை மென் முலையை உன்னுடைய – நள:46/1
வில்லியரும் பொன் தாம வீமன் திருமகளாம் – நள:75/3
வீமன் மடந்தை மணத்தின் விரை தொடுத்த – நள:78/1
வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/3
எங்களிலே சூட்ட இயல் வீமன் மங்கை-பால் – நள:83/2
விண்ணவர் தம் ஏவலுடன் வீமன் திருமகள்-பால் – நள:98/1
வேலை பெறா அமுதம் வீமன் திருமடந்தை – நள:164/1
விருப்பான வீமன் திருமடந்தையோடும் – நள:165/3
கடப்பார் எவரே கடு வினையை வீமன்
மட பாவை தன்னுடனே மன்னன் நடப்பான் – நள:232/1,2
வீமன் திருநகர்க்கே மீள் என்றான் விண்ணவர் முன் – நள:243/3
வீமன் நகர்க்கே விரைந்து – நள:255/4
வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலா – நள:277/1
கொழுந்து ஓட வீமன் கொடி – நள:291/4
குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/4
ஆம் என்று அறியா அருமறையோன் வீமன்
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/2,3
நாம வேல் வீமன் நகர் – நள:330/4
வீமன் மடந்தை விழி முடிய கண்டு அறியா – நள:344/1
மீண்டு ஓர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை – நள:369/1
காதலித்தாள் வீமன் தன் காதலி என்று ஓதினான் – நள:371/2
வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில் – நள:383/1

TOP


வீமன்-தன் (3)

மின்னும் தார் வீமன்-தன் மெய் மரபில் செம்மை சீர் – நள:159/1
தீ கானகத்து உறையும் தெய்வங்காள் வீமன்-தன்
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/1,2
காமர் நெடு நாடு கைவிட்டு வீமன்-தன்
பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/2,3

TOP


வீர (1)

புக்கெடுத்து வீர புயத்து அணையா மக்காள் நீர் – நள:390/2

TOP


வீரர் (1)

வீரர் விறல் வேந்தர் விண் நாடு சேர்கின்றார் – நள:77/1

TOP


வீரன் (2)

வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின் – நள:176/1
சோர் குழலை நீத்த துயரோடும் வீரன்
திரிவான் அ தீ கானில் செம் தீயின் வாய்ப்பட்டு – நள:337/2,3

TOP


வீழ் (1)

வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள் – நள:407/1

TOP


வீழ்த்த (1)

கற்பின் தாழ் வீழ்த்த கதவு – நள:89/4

TOP


வீழ்ந்தது (2)

வான் முகிலும் மின்னும் வறு நிலத்து வீழ்ந்தது போல் – நள:292/1
மேல் ஆடை வீழ்ந்தது எடு என்றான் அவ்வளவில் – நள:378/1

TOP


வீழ்ந்தாள் (7)

தாதை திருவடி மேல் தான் வீழ்ந்தாள் மீது எல்லாம் – நள:61/2
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை – நள:290/3
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர் – நள:291/3
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம் – நள:292/2
பொன் வடிவின் மேல் அழுது போய் வீழ்ந்தாள் மென் மலரை – நள:327/2
பட்டதே என்ன போய் வீழ்ந்தாள் படை நெடும் கண் – நள:331/3
மலர்ந்த தார் வேந்தன் மலர் அடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீர் அவற்கு – நள:406/3,4

TOP


வீழ்ந்து (5)

அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு – நள:40/3,4
வியர்த்தாள் உரை மறந்தாள் வீழ்ந்து – நள:101/4
வெயிலால் உடல் உருகா வீழ்ந்து – நள:115/4
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் – நள:216/3
வென்று இருந்த தோளான் தாள் வீழ்ந்து – நள:235/4

TOP


வீழ்வார்-தம் (1)

நீர் உயிர்க்கும் கண்ணோடு நெஞ்சு உருகி வீழ்வார்-தம்
ஆர் உயிர்க்கும் உண்டோ அரண் – நள:131/3,4

TOP


வீழ (1)

தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2

TOP


வீற்றிருந்த (2)

மென் கால் சிறை அன்னம் வீற்றிருந்த மென் மலரை – நள:231/1
செம் பதிக்கே வீற்றிருந்த தேன் – நள:248/4

TOP


வீற்றிருப்ப (1)

வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப முற்றும் – நள:240/2

TOP