ந – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நகம் 1
நகர் 11
நகர்-வாய் 1
நகர்க்கு 1
நகர்க்கே 5
நகரம் 3
நகரி 1
நகரில் 3
நகருக்கு 1
நஞ்சும் 1
நடத்துவான் 1
நடந்ததே 2
நடந்தானும் 1
நடந்திட்டான் 1
நடந்து 1
நடப்பான் 1
நடு 2
நடுங்கா 1
நடுங்கி 2
நடுங்கும் 1
நடுங்குறுவாய் 1
நடுவே 1
நடை 3
நடையாளோடும் 1
நடையும் 2
நண்ணி 2
நண்ணு 1
நதி 1
நந்தும் 1
நம் 2
நம 1
நமக்கு 1
நயந்து 3
நரகம் 1
நரகில் 1
நரகுக்கு 2
நல் 26
நல்_நுதலும் 1
நல்_நுதலே 1
நல்ல 1
நல்லாள் 1
நலம் 1
நலன் 1
நளன் 18
நளன்-தன் 2
நளனும் 1
நளனே 1
நளனை 1
நறவ 1
நறவு 1
நறு 2
நறும் 4
நறை 1
நன் 3
நன்கு 1
நன்றி 1
நனைக்கும் 2
நனைப்ப 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


நகம் (1)

செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான் – நள:287/3

TOP


நகர் (11)

ஞான கலை வாழ் நகர் – நள:20/4
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/3
நல் உயிரும் வாழும் நகர் – நள:75/4
நன் நாடர் கோமான் நகர் – நள:87/4
நல் விளக்கே எங்கள் நகர் – நள:206/4
மன்றல் இளம் கோதை முக நோக்கி மா நகர் வாய் – நள:236/1
தன் வாயில் மென் மொழியே தாங்கினான் ஓங்கு நகர்
பொன் வாயில் பின்னாக போயினான் முன் நாளில் – நள:239/1,2
நாம வேல் வீமன் நகர் – நள:330/4
ஆக அயோத்தி நகர் அடைந்து மா கனக – நள:349/2
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர் – நள:357/2
அடைந்தான் அயோத்தி நகர் – நள:364/4

TOP


நகர்-வாய் (1)

நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1

TOP


நகர்க்கு (1)

இ நகர்க்கு ஈது என் பொருட்டா வந்தது என உரைத்தான் – நள:238/3

TOP


நகர்க்கே (5)

எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2
வீமன் நகர்க்கே விரைந்து – நள:255/4
சேதி நகர்க்கே திருவை செலவிட்டு அப்போதில் – நள:315/1
அன்னவனை காணாது அலமருவேன் இ நகர்க்கே
வந்தேன் இது என் வரவு என்றாள் வாய் புலரா – நள:320/2,3
அன்னை-தனை கான் விட்டு அவன் ஏக இ நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வள நாடு மற்று ஒருவன் – நள:391/2,3

TOP


நகரம் (3)

மா விந்தம் என்னும் வள நகரம் சூழ்ந்த ஒரு – நள:417/3
பொன் நகரம் எய்தும் புரந்தரனை போல் பொலிந்து – நள:424/3
நல் நகரம் புக்கான் நளன் – நள:424/4

TOP


நகரி (1)

பொன் நகரி சென்று அடைந்தான் போர் வேட்டு எழும் கூற்றம் – நள:382/3

TOP


நகரில் (3)

பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/3
அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில்
இன்று இருந்து நாளை எழுந்து அருள்க என்று உரைத்தார் – நள:235/2,3
வண்டு ஆடும் தார் நளனை மா நகரில் யாரேனும் – நள:237/1

TOP


நகருக்கு (1)

மாதோடு மன்னன் வர கண்ட மா நகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர் – நள:425/3,4

TOP


நஞ்சும் (1)

நஞ்சும் தொடுத்து அனைய நாம மலர் வாளி – நள:173/3

TOP


நடத்துவான் (1)

நடத்துவான் வட்டை நடந்து – நள:315/4

TOP


நடந்ததே (2)

மென் மாலை தோள் அசைய மெல்ல நடந்ததே
புன் மாலை அந்தி பொழுது – நள:106/3,4
நால்_ஆறு காதம் நடந்ததே தோலாமை – நள:378/2

TOP


நடந்தானும் (1)

நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/3

TOP


நடந்திட்டான் (1)

பன்னா நடந்திட்டான் பண்டு – நள:426/4

TOP


நடந்து (1)

நடத்துவான் வட்டை நடந்து – நள:315/4

TOP


நடப்பான் (1)

மட பாவை தன்னுடனே மன்னன் நடப்பான்
வனத்தே செல பணித்து மாயத்தால் சூழ்ந்தது – நள:232/2,3

TOP


நடு (2)

மன்றல் அம் தார் மன்னர் நடு அணைய வந்திருந்தான் – நள:135/1
ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம் – நள:234/2

TOP


நடுங்கா (1)

மக்களை முன் காணா மனம் நடுங்கா வெய்துயிரா – நள:390/1

TOP


நடுங்கி (2)

உற்றது அறியா உளம் நடுங்கி பொற்றொடிக்கு – நள:59/2
வழியல் நீர் என்றான் மன நடுங்கி வெய்துற்று – நள:272/3

TOP


நடுங்கும் (1)

மயங்கும் தெளியும் மனம் நடுங்கும் வெய்துற்று – நள:130/1

TOP


நடுங்குறுவாய் (1)

நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய் – நள:356/2

TOP


நடுவே (1)

தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே
தார் நிறுத்தும் தோள் வேந்தன் தான் – நள:379/3,4

TOP


நடை (3)

நடை வென்றாள்-தன்-பால் நயந்து – நள:43/4
நடை கற்பான் வந்தடைந்தோம் நாம் – நள:44/4
நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/4

TOP


நடையாளோடும் (1)

பெரும் தானை சூழ பெடை நடையாளோடும்
இருந்தானை கண்டான் எதிர் – நள:419/3,4

TOP


நடையும் (2)

அஞ்சல் மட அனமே உன்றன் அணி நடையும்
வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது – நள:34/1,2
வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது – நள:34/2

TOP


நண்ணி (2)

மண் இழந்து போந்து வனம் நண்ணி விண் இழந்த – நள:17/2
எண்ணி தச என்று இடுக என்றான் நண்ணி போர் – நள:342/2

TOP


நண்ணு (1)

நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2

TOP


நதி (1)

கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி – நள:197/3

TOP


நந்தும் (1)

செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும்
புழைக்கைக்கும் நேய பொதுவர் மகளிர்க்கும் – நள:179/2,3

TOP


நம் (2)

எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2
விந்தம் எனும் நம் பதி தான் மிக்கு – நள:415/4

TOP


நம (1)

நாராயணாய நம என்று அவன் அடியில் – நள:211/1

TOP


நமக்கு (1)

கழிய ஆர்த்தார் நமக்கு ஓர் காப்பு – நள:4/4

TOP


நயந்து (3)

நடை வென்றாள்-தன்-பால் நயந்து – நள:43/4
நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/4
நைகின்ற நெஞ்சாள் நயந்து – நள:388/4

TOP


நரகம் (1)

சென்றார் புகு நரகம் சேர்வாய்-கொல் என்று அழியா – நள:265/3

TOP


நரகில் (1)

அறத்தை வேர் கல்லும் அரு நரகில் சேர்க்கும் – நள:218/1

TOP


நரகுக்கு (2)

போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:212/3,4
போதுவாய் என்னுடனே என்றான் புலை நரகுக்கு
ஏதுவாய் நின்றான் எடுத்து – நள:308/3,4

TOP


நல் (26)

நல் நாட்டின் முன் நாட்டும் நாடு – நள:19/4
ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல்
பைம் கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடு போந்து – நள:32/2,3
நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா – நள:39/1
அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும் – நள:52/2
கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
நல் உயிரும் வாழும் நகர் – நள:75/4
நல் நாடும் சொன்னான் நளன் – நள:93/4
நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/3
நாண் உக்கு நெஞ்சு உடைய நல் வேந்தர் நீள் நிலத்து – நள:158/2
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3
நல் மாலை வேலான் நளன் – நள:163/4
வாய் அடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நல் நெஞ்சில் – நள:170/3
நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1
நல் விளக்கே எங்கள் நகர் – நள:206/4
நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி – நள:212/1
பொன் ஒழிய போதும் புறம்பு அணை சூழ் நல் நாடு – நள:214/3
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் – நள:216/3
பொன் நிறத்த புள் வடிவாய் போந்து இருந்தான் நல் நெறிக்கே – நள:258/2
நல் நாடு தோற்பித்தோன் நானே காண் என்றதே – நள:263/3
குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான் – நள:268/3
நல் உயிரும் ஆசையும் போல் நாறுதலும் மல் உறு தோள் – நள:296/2
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர் – நள:357/2
அருகு உடைக்கும் நல் நாட்டு அரசு – நள:357/4
நல் நாடும் கானகமும் நாடினான் மன்னு – நள:364/2
நல் நகரம் புக்கான் நளன் – நள:424/4
வாழி அரு மறைகள் வாழி நல் அந்தணர்கள் – நள:427/1

TOP


நல்_நுதலும் (1)

அன்னம் போய் கன்னி அருகு அணைய நல்_நுதலும்
தன் ஆடல் விட்டு தனி இடம் சேர்ந்து ஆங்கு அதனை – நள:52/2,3

TOP


நல்_நுதலே (1)

நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3

TOP


நல்ல (1)

நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம் – நள:32/1

TOP


நல்லாள் (1)

வரி வளை கை நல்லாள் மனை – நள:60/4

TOP


நலம் (1)

தீது வருக நலம் வருக சிந்தையால் – நள:221/1

TOP


நலன் (1)

பொன் புள்-அதனை பிடிப்பான் நலன் புகுத – நள:260/1

TOP


நளன் (18)

நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன்
மா சரிதம் கூற வரும் துணையாம் ஈசன் – நள:1/1,2
நேசர் இதம் கூர நில வலயம் தாங்கு நளன்
மா சரிதம் கூற வரும் துணையாம் பேசரிய – நள:2/1,2
பார் ஆர் நிடத பதி நளன் சீர் வெண்பாவால் – நள:7/1
நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து – நள:18/2
ஓடாத தானை நளன் என்று உளன் ஒருவன் – நள:25/1
நளன் என்பான் மேல் நிலத்தும் நானிலத்தும் மிக்கான் – நள:53/3
நல் நாடும் சொன்னான் நளன் – நள:93/4
வண் தார் நளன் போந்து வச்சிராயுதன் தொழுதான் – நள:97/3
தேவர் நளன் உருவா சென்றிருந்தார் பூ வரைந்த – நள:157/2
பொன் தேர் நளன் உருவாய் போந்து – நள:158/4
அறிந்தாள் நளன் தன்னை ஆங்கு – நள:160/4
நல் மாலை வேலான் நளன் – நள:163/4
நல் நெறியில் சூதால் நளன் களவு இயற்றி – நள:212/1
நாம் போதும் என்றான் நளன் – நள:230/4
இ கங்குல் போக இகல் வேல் நளன் எறி நீர் – நள:416/1
நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும் – நள:423/3
நல் நகரம் புக்கான் நளன் – நள:424/4
வாழி நளன் காதை வழுத்துவோர் வாழிய – நள:427/2

TOP


நளன்-தன் (2)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
என் மேல் எறிகின்ற மாலை எழில் நளன்-தன்
முன்னே விழுந்தது காண் முன் நாளில் அன்னதற்கு – நள:373/1,2

TOP


நளனும் (1)

நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2

TOP


நளனே (1)

மன்னவரில் வை வேல் நளனே மதி வதன – நள:166/1

TOP


நளனை (1)

வண்டு ஆடும் தார் நளனை மா நகரில் யாரேனும் – நள:237/1

TOP


நறவ (1)

ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2

TOP


நறவு (1)

கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் – நள:205/2

TOP


நறு (2)

புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும் – நள:213/1
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/2

TOP


நறும் (4)

பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும்
கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/2,3
நறும் தாமரை விரும்பு நல்_நுதலே அன்னாள் – நள:160/3
புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு – நள:353/1
கன்னி நறும் தேறல் மாந்தி கமலத்தின் – நள:384/1

TOP


நறை (1)

நறை ஒழுக வண்டு உறையும் நல் நகர்-வாய் நாங்கள் – நள:198/1

TOP


நன் (3)

நன் முகமே நோக்கினான் நாகம் சிறகு அரிந்த – நள:77/3
நன் நாடர் கோமான் நகர் – நள:87/4
மின் கால் அயில் வேலாய் மெய் என்று நன் காவி – நள:411/2

TOP


நன்கு (1)

நண்ணு புகழ் நளனும் நன்கு உரைத்த பெண் அணங்கின் – நள:98/2

TOP


நன்றி (1)

என்று உரைத்து வேத வியன் முனிவன் நன்றி புனை – நள:426/2

TOP


நனைக்கும் (2)

முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/3
சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும்
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா – நள:229/2,3

TOP


நனைப்ப (1)

வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/2

TOP