பூ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


பூ (32)

தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/2
தாது அவிழ் பூ தாரான் தனி காத்தான் மாதர் – நள:26/2
பூ நாடி சோலை புக – நள:27/4
தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின் – நள:29/1
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி – நள:42/3
பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன் – நள:44/1
புள்ளின் மொழியினொடு பூ வாளி தன்னுடைய – நள:55/1
பூ வேந்தர்-தங்கள் கிளை பொன் நகரில் ஈண்டிற்றே – நள:65/3
பூ மகளை பொன்னை பொரு வேல் விதர்ப்பன்-தன் – நள:66/3
பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய – நள:73/3
அங்கி அமுதம் நீர் அம் பூ அணி ஆடை – நள:99/1
புள் அரிக்கும் நாடன் திருமடந்தை பூ வாளி – நள:102/3
பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே – நள:122/3
எழுந்திருக்கும் ஏமாந்து பூ மாம் தவிசின் – நள:127/1
பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப – நள:132/1
பூ வாளி வேந்தன் தன் பொன் ஆவம் பின்னே இட்டு – நள:139/3
பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
தேவர் நளன் உருவா சென்றிருந்தார் பூ வரைந்த – நள:157/2
பூ மாலை பெற்று இருந்த போது – நள:162/4
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/2
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2
பூ மகட்கு சொல்லுவாள் போல் – நள:191/4
பூ மகளை பாரினோடும் புல்லினான் தன் மகனை – நள:239/3
புக்கு அளையும் தாமரை கை பூ நாறும் செய்ய வாய் – நள:246/3
ஆவி போல் ஆடையும் ஒன்று ஆனதே பூ விரிய – நள:264/2
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட – நள:273/1
பூ தாம வெண்குடையான் பொன் மகளை வெம் வனத்தே – நள:366/3
ஆக்கையே நோக்கின் அவன் அல்லன் பூ கமழும் – நள:368/2
அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1
பூ மாரி பெய்தார் புகழ்ந்து – நள:408/4
பூ உலகில் ஒப்பார் யார் போதுவார் காவலனே – நள:409/2
பூ விந்தை வாழும் பொழில் – நள:417/4

TOP


பூக்கும் (1)

வில் விளக்கே பூக்கும் விதர்ப்ப நாடு ஆளுடையான் – நள:206/3

TOP


பூகத்தின் (1)

பைம் தலைய நாக பணம் என்று பூகத்தின்
ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/1,2

TOP


பூங்காவில் (1)

நீங்கா உயிரோடு நின்றிட்டான் பூங்காவில்
வள்ளம் போல் கோங்கு மலரும் திருநாடன் – நள:392/2,3

TOP


பூசல் (2)

வளை பூசல் ஆட மடந்தையுடன் சேர்ந்தான் – நள:177/3
விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/4

TOP


பூசுரர்-தம் (1)

பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப – நள:132/1

TOP


பூட்டி (1)

கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2

TOP


பூட்டினார் (1)

பூட்டினார் மின் இமைக்கும் பூண் – நள:171/4

TOP


பூட்டினான் (1)

குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை – நள:375/3

TOP


பூட்டு (1)

பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய – நள:73/3

TOP


பூண் (9)

பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே – நள:109/3
அரும் கேழ் மணி பூண் அணங்கு – நள:136/4
சுணங்கு அவிழ்ந்த பூண் முலையாய் சூழ் அமரில் துன்னார் – நள:141/3
பூட்டினார் மின் இமைக்கும் பூண் – நள:171/4
கதிர் கொண்ட பூண் முலையாய் காண் – நள:182/4
விட்டு ஒளிர் வில் வீசி விளங்கு மணி பூண் ஆரம் – நள:223/1
பூண் ஏர் முலையாள் புலர்ந்து – நள:273/4
பூண் ஆரம் பூண்டாள் புலர்ந்து – நள:314/4
கேட்டாரை நீ அடையேல் என்றான் கிளர் மணி பூண்
வாள் தானை மன்னன் மதித்து – நள:410/3,4

TOP


பூண்ட (2)

கரியான் அனத்தான் கருது புகழ் பூண்ட
கரி ஆனனத்தான் கழல் – நள:1/3,4
விரை மலர் பூ மெல் அணையும் மெய் காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி அறையும் அரசே நான் – நள:273/1,2

TOP


பூண்டது (1)

தீண்டும் அளவில் திறந்ததே பூண்டது ஓர் – நள:89/2

TOP


பூண்டார் (1)

நினையாமை பூண்டார் நெறி – நள:217/4

TOP


பூண்டாள் (2)

பூண் ஆரம் பூண்டாள் புலர்ந்து – நள:314/4
பூண்டாள் என்று அந்தண நீ போய் உரைத்தால் நீண்ட – நள:369/2

TOP


பூண்டு (3)

புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு – நள:40/4
பூண்டு விரோதம் செய்யும் பொய் சூதை மிக்கோர்கள் – நள:218/3
போர்த்தான் பொரு கலியின் வஞ்சனையால் பூண்டு அளிக்கும் – நள:403/3

TOP


பூண்டேன் (1)

காவலனுக்கு ஏவல் கடன் பூண்டேன் மற்று அவன்-தன் – நள:375/1

TOP


பூணாள் (3)

பூணாள் திரு முகத்தை புண்டரிகம் என்று அயிர்த்து – நள:193/3
இருள் ஈரும் பூணாள் எடுத்து – நள:305/4
மின் இமைக்கும் பூணாள் அ வீங்கு இருள்-வாய் யாங்கு உணர்ந்தால் – நள:355/3

TOP


பூணுக்கு (1)

பூணுக்கு அழகு அளிக்கும் பொன் தொடியை கண்ட-கால் – நள:158/1

TOP


பூணும் (1)

மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில் – நள:227/2

TOP


பூத்த (2)

வாங்கு வளை கையார் வதன மதி பூத்த
பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை – நள:27/1,2
மன்னர் விழி தாமரை பூத்த மண்டபத்தே – நள:138/1

TOP


பூத்ததே (1)

பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு – நள:88/2

TOP


பூதலத்து (1)

போக்கினேன் என்று உரைத்தான் பூதலத்து மீதலத்து – நள:13/3

TOP


பூம் (25)

தாமரையாள் வைகும் தடம் தோளான் காமரு பூம்
தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம் – நள:24/2,3
பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை – நள:27/2
பொங்கு சுழி என்னும் பூம் தடத்தில் மங்கை நறும் – நள:51/2
பொருந்த அன்பால் ஓதி மலர் பூம் கணைகள் பாய – நள:58/3
பூம் தார் அம் மெல் ஓதி பொன் – நள:61/4
புள் உறையும் சோலைகளும் பூம் கமல வாவிகளும் – நள:66/1
பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு – நள:88/2
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3
பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின் – நள:141/1
புண்டரிகம் தீ எரிவ போல் விரிய பூம் புகை மேல் – நள:151/1
மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று – நள:157/3
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான் – நள:183/3
புன்னை நறு மலரின் பூம் தாது இடை ஒதுங்கும் – நள:213/1
பூம் போது அவிழ்க்கும் புனல் நாடன் பொன் மகளே – நள:230/3
பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே – நள:263/2
பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத – நள:278/1
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன் – நள:286/2
போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை – நள:317/1
பூம் கழலின் மீதே புரண்டு அழுதாள் தாங்கும் – நள:318/2
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/2
தீ கலியால் செற்ற திரு மனத்தான் பூம் கழலை – நள:343/2
வேத நெறி வழுவா வேந்தனையும் பூம் தடம் கண் – நள:412/1
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3
தூய நறு மலர் பூம் சோலை-வாய் ஆய – நள:419/2

TOP


பூமான் (1)

தூய்மையும் மற்று அவன் தோள் வலியும் பூமான்
நெடும் கற்பும் மற்றவற்கு நின்று உரைத்து போனான் – நள:168/2,3

TOP


பூமி (1)

புன்கண் கூர் யாமத்து பூமி மேல் தான் படுத்து – நள:275/1

TOP


பூவின் (3)

ஆவி உருகி அழிந்திட்டான் பூவின்
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன – நள:48/2,3
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின்
நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு – நள:84/3,4
பூவின் வாய் வாளி புகுந்த வழியே என் – நள:103/1

TOP


பூவையர் (1)

பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2

TOP


பூவையரை (2)

புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே – நள:188/3
பூவையரை தோற்றான் பொருது – நள:227/4

TOP