சொ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சொரிகிற (1)

சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை – நள:128/2

TOP


சொரிந்ததே (1)

பூண் இலா மென் முலை மேல் போத சொரிந்ததே
நீள் நிலா என்னும் நெருப்பு – நள:109/3,4

TOP


சொரிய (1)

தந்தையை முன் காண்டலுமே தாமரை கண்ணீர் சொரிய
சிந்தை கலங்கி திகைத்து அலமந்து எந்தாய் யான் – நள:331/1,2

TOP


சொரியும் (2)

காரணம் தான் ஈது அன்றோ என்றான் கடாம் சொரியும்
வாரணம் தான் அன்னான் மதித்து – நள:373/3,4
மின் சொரியும் வேலாய் மிக விரும்பி என் சரிதம் – நள:410/2

TOP


சொரிவது (1)

சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன் – நள:117/2

TOP


சொல் (7)

அடு மாற்றம் இல்லா அரசன் சொல் கேட்டு – நள:35/3
கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால் – நள:51/1
என் நாடல் சொல் என்றாள் ஈங்கு – நள:52/4
உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/3
இன் துணை மேல் வைத்து உறங்கும் என்னும் சொல் இன்று – நள:124/2
சொல் கிள்ளை வாயாள் தொழுது – நள:259/4
சொல்லப்படுமோ இ சொல் – நள:372/4

TOP


சொல்லப்படுமோ (1)

சொல்லப்படுமோ இ சொல் – நள:372/4

TOP


சொல்லர் (1)

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடி குரலர் – நள:121/1

TOP


சொல்லாய் (1)

தேன் இருந்த சொல்லாய் இ சேய் – நள:150/4

TOP


சொல்லார் (1)

சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள் – நள:226/2

TOP


சொல்லால் (1)

நா வேய்ந்த சொல்லால் நளன் என்று போற்றி இசைக்கும் – நள:423/3

TOP


சொல்லாள் (1)

ஓசை போல் சொல்லாள் உயிர்த்து – நள:103/4

TOP


சொல்லி (3)

பொன் நாடர் ஏவலுடன் போந்தவா சொல்லி தன் – நள:93/3
தூது வந்த காதலனை சொல்லி செல விடுத்த – நள:101/1
மற்று அவனுக்கு என் வரவு சொல்லி மறு சூதுக்கு – நள:418/1

TOP


சொல்லினோம் (1)

சூது பொர இசைந்து சொல்லினோம் யாதும் – நள:221/2

TOP


சொல்லுவாள் (1)

பூ மகட்கு சொல்லுவாள் போல் – நள:191/4

TOP


சொல்வீர் (1)

என் நினைக்கும் சொல்வீர் எனக்கு – நள:355/4

TOP


சொன்ன (7)

கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில் – நள:37/2
இடை அன்னம் செம் கால் இள அன்னம் சொன்ன
நடை அன்னம்-தன்-பால் நயந்து – நள:48/3,4
சொன்ன கலையின் துறை அனைத்தும் தோய்ந்தாலும் – நள:247/1
இன் அமுதம் தேக்கி இருப்பரேல் சொன்ன
பெரும் பேடிகள் அலரேல் பித்தரே அன்றோ – நள:250/2,3
மான் பிடிக்க சொன்ன மயிலே போல் தான் பிடிக்க – நள:259/2
பல்_நாக_வேந்தன் பதைத்து உருகி சொன்ன
மொழி வழியே சென்றான் முரண் கலியின் வஞ்ச – நள:336/2,3
ஆங்கு அவர் சொன்ன உரை கேட்டு அழிவு எய்தி – நள:392/1

TOP


சொன்னவனை (1)

சொன்னவனை சூட்ட அருள் என்றாள் சூழ் விதியின் – நள:159/3

TOP


சொன்னான் (1)

நல் நாடும் சொன்னான் நளன் – நள:93/4

TOP