சே முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


சே (2)

செறுநர் நாண சே இழை அரிவை – புபொவெபாமா:13 8/1
சே இழை அரிவை செல்க என விடுத்தன்று – புபொவெபாமா:16 38/2

மேல்

சேக்கை (1)

பூ மலி சேக்கை புணை வேண்டி நீ மலிந்து – புபொவெபாமா:16 9/2

மேல்

சேண் (2)

செறு தொழிலின் சேண் நீங்கியான் – புபொவெபாமா:8 20/1
சேண் ஓங்கிய வரை அதரில் – புபொவெபாமா:9 55/1

மேல்

சேந்தனவால் (1)

தாழ் ஆரம் மார்பினான் தாமரை கண் சேந்தனவால்
பாழாய் பரிய விளிவது-கொல் யாழ் ஆய் – புபொவெபாமா:3 17/1,2

மேல்

சேர் (1)

தம் கணவன் தார் தம் முலை முகப்ப வெம் கணை சேர்
புண் உடை மார்பம் பொருகளத்து புல்லினார் – புபொவெபாமா:7 49/2,3

மேல்

சேர்த்தி (1)

உன்னம் சேர்த்தி உறு புகழ் மலிந்தன்று – புபொவெபாமா:10 8/2

மேல்

சேர்த்தினாள் (1)

முயங்கினாள் வாள் முகம் சேர்த்தினாள் ஆங்கே – புபொவெபாமா:4 27/3

மேல்

சேர்ந்த (1)

இரும் புலி சேர்ந்த இடம் – புபொவெபாமா:3 39/4

மேல்

சேர்ந்தோர் (1)

செய் கழல் மன்னன் மாய்ந்து என சேர்ந்தோர்
கையறவு உரைத்து கை சோர்ந்தன்று – புபொவெபாமா:11 28/1,2

மேல்

சேர்ப்பன் (1)

பூம் கானல் சேர்ப்பன் புலம்புகொள் மால் மாலை – புபொவெபாமா:16 7/3

மேல்

சேர (1)

திகழ் ஒளிய மா விசும்பு சேர இகழ்வார் முன் – புபொவெபாமா:11 27/2

மேல்

சேரன் (1)

நிலம் தரிய செல்லும் நிரை தண் தார் சேரன்
வலம் தரிய ஏந்திய வாள் – புபொவெபாமா:9 70/3,4

மேல்

சேரா (1)

தன் நிழலோர் எல்லோர்க்கும் தண் கதிராம் தன் சேரா
வெம் நிழலோர் எல்லோர்க்கும வெம் கதிராம் இன் நிழல் வேல் – புபொவெபாமா:9 68/1,2

மேல்

சேரார் (1)

சேரார் முனை நோக்கி கண் சிவப்ப போரார் – புபொவெபாமா:3 23/2

மேல்

சேரி (4)

எவ்வையர் சேரி இரவும் இமைபொருந்தா – புபொவெபாமா:16 21/3
வஞ்சம் தெரியா மருள் மாலை எம் சேரி
பண் இயல் யாழொடு பாணனார் வந்தாரால் – புபொவெபாமா:17 23/2,3
நிலவு உரைக்கும் பூணவர் சேரி செலவு உரைத்து – புபொவெபாமா:17 25/2
கலவ மயில் அன்ன காரிகையார் சேரி
வலவன் நெடும் தேர் வரும் – புபொவெபாமா:17 31/3,4

மேல்

சேரியில் (1)

மற்று அவர் சேரியில் மைந்தன் உறைந்தமை – புபொவெபாமா:17 32/1

மேல்

சேரியுள் (1)

தண் தார் அணி அவாம் தையலார் சேரியுள்
வண்டு ஆர் வயல் ஊரன் வைகினமை உண்டால் – புபொவெபாமா:17 33/1,2

மேல்

சேரும் (1)

இங்குலிகம் சேரும் வரை ஏய்க்கும் பைம் கண் – புபொவெபாமா:2 11/2

மேல்

சேவடி (2)

செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே – புபொவெபாமா:6 57/3
நல்கு எனின் நா_மிசையாள் நோம் என்னும் சேவடி மேல் – புபொவெபாமா:9 96/1

மேல்

சேவடியால் (1)

முன் வந்த மன்னர் முடி வணங்கும் சேவடியால்
பின் வந்தான் பேர்_அருளினான் – புபொவெபாமா:9 53/3,4

மேல்

சேவடியும் (1)

இரு நிலம் சேவடியும் தோயும் அரி பரந்த – புபொவெபாமா:14 7/2

மேல்

சேற்று (1)

அகழி பரந்து ஒழுகும் செம் குருதி சேற்று
பகழி வாய் வீழ்ந்தார் பலர் – புபொவெபாமா:6 35/3,4

மேல்

சேறல் (1)

காவலன் சேறல் கடன் – புபொவெபாமா:8 35/4

மேல்

சேறலும் (1)

ஆய்_இழை சேறலும் அ துறை ஆகும் – புபொவெபாமா:7 54/2

மேல்

சேறி (1)

தலைவ தவிராது சேறி சிலை குலாம் – புபொவெபாமா:9 58/2

மேல்

சேனை (1)

சேனை முகத்து ஆள் இரிய சீறும் முகத்து ஊறும் மதத்து – புபொவெபாமா:0 1/3

மேல்