வை முதல் சொற்கள் – புறப்பொருள் வெண்பாமாலை தொடரடைவு

கட்டுருபன்கள்


வை (2)

வயிர் மேல் வளை ஞரல வை வேலும் வாளும் – புபொவெபாமா:7 9/1
வரவு எதிரின் வை வேல் வாய் வீழ்வாய் கரவினால் – புபொவெபாமா:11 5/2

மேல்

வைக (3)

ஊறு இன்றி உவகையுள் வைக உயிர் ஓம்பி – புபொவெபாமா:8 51/1
புனல் ஆடையாளும் புனை குடை கீழ் வைக
கனலா துயில் ஏற்ற கண் – புபொவெபாமா:8 59/3,4
நனவிடை தமியேன் வைக
கனவிடை தோன்றி கரத்தல் கொடிதே – புபொவெபாமா:15 19/3,4

மேல்

வைகல் (1)

இன்று நாம் வைகல் இழிவு ஆகும் வென்று ஒளிரும் – புபொவெபாமா:6 25/2

மேல்

வைகலும் (4)

வான் காவல் கொண்டான் வழிநின்று வைகலும்
தான் காவல் கொண்டல் தகும் – புபொவெபாமா:8 51/3,4
குய் கொள் அடிசில் பிறர் நுகர்க வைகலும்
அம் குழை கீரை அடகு மிசையினும் – புபொவெபாமா:13 17/2,3
அழுதழுது வைகலும் ஆற்றேன் தொழுது இரப்பல் – புபொவெபாமா:16 3/2
வானத்து இயலும் மதி-அகத்து வைகலும்
கானத்து இயலும் முயல் காணும் தானத்தின் – புபொவெபாமா:17 19/1,2

மேல்

வைகாது (2)

மெய் ஐந்தும் மீது ஊர வைகாது மேல் வந்த – புபொவெபாமா:8 67/3
இருளொடு வைகாது இடம் படு ஞாலத்து – புபொவெபாமா:12 7/3

மேல்

வைகி (5)

சிலையும் செரு முனையுள் வைகி இலை புனைந்த – புபொவெபாமா:1 15/2
வருவான்-கொல் வந்து என் வன முலை மேல் வைகி
தருவான்-கொல் மார்பு அணிந்த தார் – புபொவெபாமா:9 90/3,4
புனை இழை இழந்த பின் புலம்பொடு வைகி
மனையகத்து உறையும் மைந்தன் நிலை உரைத்தன்று – புபொவெபாமா:11 6/1,2
அருளொடு வைகி அகல் – புபொவெபாமா:12 7/4
வறு மனை வைகி தற்காத்தன்று – புபொவெபாமா:13 8/2

மேல்

வைகிய (3)

தாமரை மேல் வைகிய தையல்-கொல் தாழ் தளிரின் – புபொவெபாமா:14 5/1
வைகிய கங்குல் தலைவரின் – புபொவெபாமா:15 21/3
துயரொடு வைகிய சூழ் வளை தோளி – புபொவெபாமா:16 32/1

மேல்

வைகிற்று (1)

இடும்பையுள் வைகிற்று இருந்த கடும்பொடு – புபொவெபாமா:10 27/2

மேல்

வைகின்று (4)

மண்ணகமோ வைகின்று மாலை நெடும் குடை கீழ் – புபொவெபாமா:4 11/3
சுழல் அழலுள் வைகின்று சோ – புபொவெபாமா:9 80/4
புணரா இரக்கமொடு புலம்புதர வைகின்று – புபொவெபாமா:14 16/2
மென் தோள் அரிவை மெலிவொடு வைகின்று – புபொவெபாமா:15 8/2

மேல்

வைகின்றே (1)

வகைத்தாய் வளனொடும் வைகின்றே வென் வேல் – புபொவெபாமா:9 35/3

மேல்

வைகின (2)

ஓடு எரியுள் வைகின ஊர் – புபொவெபாமா:3 29/4
வரை மார்பில் வைகின வாள் – புபொவெபாமா:6 29/4

மேல்

வைகினமை (1)

வண்டு ஆர் வயல் ஊரன் வைகினமை உண்டால் – புபொவெபாமா:17 33/2

மேல்

வைகினவே (1)

செய் சுடர் பூண் மன்னவன் சேவடி கீழ் வைகினவே
மொய் சுடர் பூண் மன்னர் முடி – புபொவெபாமா:6 57/3,4

மேல்

வைகினும் (1)

ஆழ விடுமோ அலரொடு வைகினும்
தாழ் குரல் ஏனல் தலைக்கொண்ட நூழில் – புபொவெபாமா:16 33/1,2

மேல்

வைகும் (4)

புற மதில் வைகும் புலம்பே தருமே – புபொவெபாமா:6 59/3
பண்பு அடா வைகும் பயன் ஞால நீள் வலை – புபொவெபாமா:8 69/3
நிறை காப்ப வைகும் நிறை – புபொவெபாமா:13 19/4
புலம்பொடு வைகும் பூம்_குழை கங்குல் – புபொவெபாமா:15 16/1

மேல்

வைகுவேன் (1)

வாளொடு வைகுவேன் யான் ஆக நாளும் – புபொவெபாமா:2 23/2

மேல்

வைத்த (2)

வைத்த எயிற்றியர் வாள் கண் இடனாட – புபொவெபாமா:1 27/3
எய்த்தல் அறியாது இடையின்றி வைத்த
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும் – புபொவெபாமா:13 13/2,3

மேல்

வைத்தாள் (1)

கார் அடகின் மேல் வைத்தாள் கை – புபொவெபாமா:11 9/4

மேல்

வைய (1)

வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார் – புபொவெபாமா:9 7/1

மேல்

வையகத்தார் (1)

வைய மகளை அடிப்படுத்தாய் வையகத்தார்
உய்ய உருவம் வெளிப்படுத்தாய் வெய்ய – புபொவெபாமா:9 7/1,2

மேல்

வையகத்து (6)

அழுங்கல் நீர் வையகத்து ஆர்_உயிரை கூற்றம் – புபொவெபாமா:2 3/1
கொய் உளை_மா கொல் களிறு பண் விடுக வையகத்து
முற்ற கடி அரணம் எல்லாம் முரண் அவிந்த – புபொவெபாமா:6 5/2,3
வையகத்து விழைவு அறுத்து – புபொவெபாமா:8 66/1
ஒலி கடல் வையகத்து
நலிவு கண்டு நயப்பு அவிந்தன்று – புபொவெபாமா:8 68/1,2
மையாந்து ஒடுங்கி மறைந்தாங்கு வையகத்து
கூத்து அவை ஏத்தும் கொடி தேரான் கூடிய பின் – புபொவெபாமா:9 27/2,3
புகழ் ஒழிய வையகத்து பூம் கழல் காளை – புபொவெபாமா:11 27/1

மேல்

வையகத்துள் (1)

ஆழ் கடல் சூழ் வையகத்துள் ஐந்து வென்று ஆறு அகற்றி – புபொவெபாமா:9 74/3

மேல்

வையகம் (2)

வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் கை அகல – புபொவெபாமா:2 29/2
வையகம் வணங்க வாள் ஓச்சினன் என – புபொவெபாமா:3 14/1

மேல்

வையத்து (1)

ஆழி சூழ் வையத்து அகம் மலிய வாழி – புபொவெபாமா:13 21/2

மேல்

வையாது (1)

வையாது வழக்கு உரைத்தன்று – புபொவெபாமா:1 38/2

மேல்