சா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சாக்காடும் (1)

சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் – கலிங்:215/2

மேல்


சாக்கியரை (1)

அறியீரோ சாக்கியரை உடை கண்டான் என் அப்புறம் என்று இயம்பிடுவர் அநேகர் ஆங்கே – கலிங்:468/2

மேல்


சாகை (1)

சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே – கலிங்:308/2

மேல்


சாகைக்கு (1)

சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் – கலிங்:215/2

மேல்


சாத்தி (1)

மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/2

மேல்


சாத்தீரே (2)

பட்ட புரவி கவி குரத்தால் பாகுவலயம் சாத்தீரே
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே – கலிங்:513/1,2
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே – கலிங்:513/2

மேல்


சாத்தும் (1)

தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ – கலிங்:38/2

மேல்


சாதகர்களே (1)

அமரி இன்புறும் அநாதி வரு சாதகர்களே – கலிங்:115/2

மேல்


சாதகரை (1)

தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1

மேல்


சாதன (1)

தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே – கலிங்:176/2

மேல்


சாதிகள் (1)

சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும் – கலிங்:259/1

மேல்


சாதும் (1)

ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும் – கலிங்:219/2

மேல்


சாதுரங்க (1)

சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க – கலிங்:501/1

மேல்


சாதுரங்கம் (1)

சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2

மேல்


சாதுரங்கமே (1)

மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே – கலிங்:349/2

மேல்


சாம் (1)

சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1

மேல்


சாமரம் (1)

தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே – கலிங்:325/2

மேல்


சாமரை (1)

மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு – கலிங்:317/1

மேல்


சாய்ந்து (2)

சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் – கலிங்:480/1
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள் – கலிங்:480/1

மேல்


சாய (2)

ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து ஐம்படை பருவத்து அபயன் பொரும் – கலிங்:149/1
பண்டு தென்னவர் சாய அதற்கு முன் பணி செய் பூத கணங்கள் அனைத்தையும் – கலிங்:150/1

மேல்


சாயாது (1)

கயிற்றால் இழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:488/2

மேல்


சாயும் (1)

சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ – கலிங்:498/2

மேல்


சாயை (1)

சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே – கலிங்:79/2

மேல்


சாருநர் (1)

சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1

மேல்


சாலை (1)

சாலை கொண்டதும் தண்டு கொண்டே அன்றோ – கலிங்:383/2

மேல்


சாவகர் (1)

தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே – கலிங்:329/1

மேல்


சாவத்தான் (1)

சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த – கலிங்:216/1

மேல்