சு – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுடர் 5
சுடர்விட்டு 1
சுடரை 1
சுடலை 1
சுடு 1
சுடுகாடும் 1
சுடும் 1
சுடுவையாகில் 1
சுண்ணாம்பும் 1
சுமந்தமை 1
சுமந்தன 4
சுமந்தில 1
சுமை 1
சுர 1
சுரக்க 1
சுரக்கவே 1
சுரகுருவின் 1
சுரந்தே 1
சுரநதி-கண் 1
சுரம் 1
சுரர் 1
சுரர்களாய் 2
சுரவி 1
சுராதிராசன் 1
சுரி 2
சுரிகை 1
சுரிகையின் 1
சுரிகையொடு 1
சுருண்டு 2
சுருதியும் 2
சுருளும் 1
சுலாவு 1
சுவடு 2
சுவர் 1
சுவர்கள் 1
சுவறாதோ 1
சுவறி 2
சுவை 2
சுவைக்கும் 1
சுவையும் 1
சுழல் 1
சுழல்வுற்று 1
சுழல 5
சுழற்றி 1
சுழற்றும் 1
சுழன்றிடுமால் 1
சுழன்று 1
சுழி 1
சுழியின் 1
சுளகால் 1
சுளகு 1
சுளி 1
சுற்ற 2
சுற்றிய 1
சுற்றுவித்து 1
சுறவு 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சுடர் (5)

கரி கரட தொளையின் கலுழியிடை கழுவி கருமை படைத்த சுடர் கர கமலத்தினளே – கலிங்:129/2
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும் – கலிங்:194/1
கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ – கலிங்:222/2
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே – கலிங்:411/2
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே – கலிங்:471/2

மேல்


சுடர்விட்டு (1)

முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு – கலிங்:415/1

மேல்


சுடரை (1)

ஓராழி-தனை நடத்தும் ஒண் சுடரை பரவுதுமே – கலிங்:7/2

மேல்


சுடலை (1)

சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை – கலிங்:91/1

மேல்


சுடு (1)

சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை – கலிங்:91/1

மேல்


சுடுகாடும் (1)

பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ – கலிங்:120/2

மேல்


சுடும் (1)

சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1

மேல்


சுடுவையாகில் (1)

வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில்
அணங்கரசின் ஆணை என அணங்கும் இப்போது அவை தவிர் எங்கு இவை கற்றாய் என்ன ஆங்கே – கலிங்:175/1,2

மேல்


சுண்ணாம்பும் (1)

கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்து தின்னீரே – கலிங்:583/2

மேல்


சுமந்தமை (1)

அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே – கலிங்:528/2

மேல்


சுமந்தன (4)

பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள் – கலிங்:272/1
பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள் – கலிங்:272/1
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும் – கலிங்:272/2
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும் – கலிங்:272/2

மேல்


சுமந்தில (1)

திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே – கலிங்:247/2

மேல்


சுமை (1)

உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர் – கலிங்:353/3

மேல்


சுர (1)

சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை – கலிங்:157/1

மேல்


சுரக்க (1)

தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே – கலிங்:241/1

மேல்


சுரக்கவே (1)

மேல்


சுரகுருவின் (1)

நின் முனிவும் சுரகுருவின் முனிவும் அஞ்சி நிலை அரிது என்று இமகிரி புக்கு இருந்தேற்கு ஔவை – கலிங்:176/1

மேல்


சுரந்தே (1)

தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/1,2

மேல்


சுரநதி-கண் (1)

நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே – கலிங்:355/2

மேல்


சுரம் (1)

கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும் – கலிங்:143/2

மேல்


சுரர் (1)

எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் – கலிங்:492/1

மேல்


சுரர்களாய் (2)

எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின் – கலிங்:492/1
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் – கலிங்:496/1

மேல்


சுரவி (1)

தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன் – கலிங்:364/1

மேல்


சுராதிராசன் (1)

சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும் – கலிங்:191/1

மேல்


சுரி (2)

சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என – கலிங்:23/1
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே – கலிங்:513/2

மேல்


சுரிகை (1)

துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து – கலிங்:99/1

மேல்


சுரிகையின் (1)

இருவர் உரத்தின் உற்ற சுரிகையின் எதிரெதிர் புக்கு இழைக்கும் அளவினில் – கலிங்:439/1

மேல்


சுரிகையொடு (1)

உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில – கலிங்:589/1

மேல்


சுருண்டு (2)

உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும் – கலிங்:148/2
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம் – கலிங்:428/1

மேல்


சுருதியும் (2)

தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே – கலிங்:241/2
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே – கலிங்:258/2

மேல்


சுருளும் (1)

பண்ணும் இவுளி செவி சுருளும் பரட்டின் பிளவும் படு கலிங்கர் – கலிங்:583/1

மேல்


சுலாவு (1)

சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே – கலிங்:170/1

மேல்


சுவடு (2)

சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை – கலிங்:462/1
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை – கலிங்:462/1

மேல்


சுவர் (1)

அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே – கலிங்:99/2

மேல்


சுவர்கள் (1)

சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே – கலிங்:470/2

மேல்


சுவறாதோ (1)

இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ – கலிங்:554/2

மேல்


சுவறி (2)

சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து – கலிங்:130/1
வலம்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி – கலிங்:360/2

மேல்


சுவை (2)

அவதி இல்லா சுவை கூழ் கண்டு அங்காந்து அங்காந்து அடிக்கடியும் – கலிங்:565/1
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே – கலிங்:571/2

மேல்


சுவைக்கும் (1)

சுவைக்கும் முடிவில் கூழினுக்கு சொரியும் அரிசி வரி எயிறா – கலிங்:525/1

மேல்


சுவையும் (1)

பற்றி பாரீர் இ கூழின் பதமும் சுவையும் பண்டு உண்ட – கலிங்:551/1

மேல்


சுழல் (1)

தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய் – கலிங்:117/2

மேல்


சுழல்வுற்று (1)

உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய – கலிங்:131/1

மேல்


சுழல (5)

விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர் அ நீர் – கலிங்:90/1
சுழி சுழல வருவது என சூறைவளி சுழன்றிடுமால் – கலிங்:90/2
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே – கலிங்:550/2
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே – கலிங்:550/2
சோரும் களிற்றின் வாலதியால் சுழல அலகிட்டு அலை குருதி – கலிங்:557/1

மேல்


சுழற்றி (1)

ஒரு தொடையை சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே – கலிங்:438/2

மேல்


சுழற்றும் (1)

நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில் – கலிங்:436/1

மேல்


சுழன்றிடுமால் (1)

சுழி சுழல வருவது என சூறைவளி சுழன்றிடுமால் – கலிங்:90/2

மேல்


சுழன்று (1)

பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ – கலிங்:489/2

மேல்


சுழி (1)

சுழி சுழல வருவது என சூறைவளி சுழன்றிடுமால் – கலிங்:90/2

மேல்


சுழியின் (1)

உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு – கலிங்:39/1

மேல்


சுளகால் (1)

சல்லவட்டம் எனும் சுளகால் தவிடு பட புடையீரே – கலிங்:545/2

மேல்


சுளகு (1)

பணியாத வழுதியர்-தம் பாய் களிற்றின் செவி சுளகு பலவும் தூக்கி – கலிங்:107/1

மேல்


சுளி (1)

கழப்பு இல் வெளியில் சுளி கதத்தில் இரு கவுள் கலித்த கடம் இடி பொறுத்த போர்க்கு – கலிங்:356/1

மேல்


சுற்ற (2)

கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார் – கலிங்:163/2
சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே – கலிங்:170/1

மேல்


சுற்றிய (1)

குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி – கலிங்:267/1

மேல்


சுற்றுவித்து (1)

இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும் – கலிங்:199/2

மேல்


சுறவு (1)

இசை பெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறி சுறவு இனம் எனவே – கலிங்:399/2

மேல்