போ – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கி 1
போக 4
போகம் 1
போகல் 1
போகாத 1
போகிலாது 1
போதக 2
போதத்து 1
போதம் 1
போதா 3
போதாது 1
போதில் 2
போதினில் 1
போது 1
போதும் 3
போதுமோ 1
போந்த 1
போந்து 1
போம் 4
போய் 4
போயினம் 1
போயே 1
போர் 15
போர்க்கு 2
போர்க்கும் 1
போர்த்த 1
போர்த்து 1
போர்முகத்து 1
போர்வீரர் 1
போர்வை 1
போரில் 4
போரின் 1
போல் 30
போல்வன 1
போல 7
போலாவேல் 2
போலும் 14
போலுமா 1
போலுமே 1
போழ்தில் 2
போழ்தின் 1
போழ்தினில் 1
போழ்து 3
போற்றவே 1
போன்ற 1
போன்றமையும் 1
போன்று 1
போன 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


போக்கி (1)

முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி – கலிங்:277/2

மேல்


போக (4)

போக அமளி களி மயக்கில் புலர்ந்தது அறியாதே கொழுநர் – கலிங்:37/1
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார் – கலிங்:481/1
எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி – கலிங்:507/1
பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின் – கலிங்:587/1

மேல்


போகம் (1)

போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ – கலிங்:45/2

மேல்


போகல் (1)

இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே – கலிங்:451/2

மேல்


போகாத (1)

போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் – கலிங்:478/2

மேல்


போகிலாது (1)

விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே – கலிங்:433/2

மேல்


போதக (2)

உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் – கலிங்:146/2
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி – கலிங்:514/1

மேல்


போதத்து (1)

என்று பல கூளிகள் இரைத்து உரைசெய் போதத்து
அன்று இமய வெற்பினிடை நின்ற வரும் அ பேய் – கலிங்:220/1,2

மேல்


போதம் (1)

போதம் கொள் மாண் உருவாய் புவி இரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற – கலிங்:243/1

மேல்


போதா (3)

வயிறுகள் என்னில் போதா வாய்களோ போதா பண்டை – கலிங்:305/1
வயிறுகள் என்னில் போதா வாய்களோ போதா பண்டை – கலிங்:305/1
எயிறுகள் என்னில் போதா என்னினும் ஈண்ட போதும் – கலிங்:305/2

மேல்


போதாது (1)

போதும் போதாது எனவே புடை படலம் இடவேண்டா – கலிங்:231/1

மேல்


போதில் (2)

கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும் – கலிங்:150/2
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல் – கலிங்:168/1

மேல்


போதினில் (1)

உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும் – கலிங்:146/2

மேல்


போது (1)

உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே – கலிங்:427/2

மேல்


போதும் (3)

சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் – கலிங்:215/2
போதும் போதாது எனவே புடை படலம் இடவேண்டா – கலிங்:231/1
எயிறுகள் என்னில் போதா என்னினும் ஈண்ட போதும் – கலிங்:305/2

மேல்


போதுமோ (1)

கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ – கலிங்:230/2

மேல்


போந்த (1)

சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே – கலிங்:157/2

மேல்


போந்து (1)

ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே – கலிங்:467/2

மேல்


போம் (4)

கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:31/2
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை – கலிங்:291/1
போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் – கலிங்:478/2
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம் – கலிங்:496/1

மேல்


போய் (4)

கலவி களியின் மயக்கத்தால் கலை போய் அகல கலை மதியின் – கலிங்:34/1
பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ – கலிங்:224/1
உரைகள் பிற்படும் அளவில் ஒற்றர்கள் ஒலி கடற்படை கடிது போய்
வரைகளில் புடை தடவி அப்படி வனம் இலைப்புரை தடவியே – கலிங்:461/1,2
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ – கலிங்:563/1

மேல்


போயினம் (1)

உய்ந்து போயினம் உவந்து எமக்கு அருள ஒன்றொடு ஒப்பன ஒராயிரம் – கலிங்:161/1

மேல்


போயே (1)

ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே – கலிங்:259/2

மேல்


போர் (15)

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ – கலிங்:63/2
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ – கலிங்:64/2
கள போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிண கூழ் கள பேயின் – கலிங்:75/1
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் – கலிங்:75/2
கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும் – கலிங்:101/1
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர்
ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே – கலிங்:102/1,2
துங்கபத்திரை செம் களத்திடை சோள சேகரன் வாள் எறிந்த போர்
வெம் கத களிற்றின் படத்தினால் வெளி அடங்கவே மிசை கவிக்கவே – கலிங்:103/1,2
ஓதம் சூழ் இலங்கை போர்க்கு ஒட்டிரட்டி கலிங்க போர் – கலிங்:231/2
அன்று இலங்கை பொருது அழித்த அவனே அ பாரத போர் முடித்து பின்னை – கலிங்:232/1
மா ஆயிரமும் பட கலிங்கர் மடிந்த கள போர் உரைப்போர்க்கு – கலிங்:312/1
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர்
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே – கலிங்:433/1,2
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத – கலிங்:484/1
சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க – கலிங்:501/1
போர் தாங்கும் களிற்று அபயன் புயம் இரண்டும் எந்நாளும் – கலிங்:541/1
போர் மண்டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே – கலிங்:558/1

மேல்


போர்க்கு (2)

ஓதம் சூழ் இலங்கை போர்க்கு ஒட்டிரட்டி கலிங்க போர் – கலிங்:231/2
கழப்பு இல் வெளியில் சுளி கதத்தில் இரு கவுள் கலித்த கடம் இடி பொறுத்த போர்க்கு
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே – கலிங்:356/1,2

மேல்


போர்க்கும் (1)

முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற – கலிங்:567/1

மேல்


போர்த்த (1)

புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2

மேல்


போர்த்து (1)

குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து – கலிங்:468/1

மேல்


போர்முகத்து (1)

துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து – கலிங்:99/1

மேல்


போர்வீரர் (1)

முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ – கலிங்:347/2

மேல்


போர்வை (1)

நெருங்கு ஆகவ செம் களத்தே தயங்கும் நிண போர்வை மூடிக்கொள – கலிங்:486/1

மேல்


போரில் (4)

முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில்
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் – கலிங்:95/1,2
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன – கலிங்:256/1
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே – கலிங்:453/2
ஒட்டு அற பட்ட போரில் ஊர்பவர்-தம்மை வீசி – கலிங்:457/1

மேல்


போரின் (1)

போரின் மேல் தண்டு எடுக்க புறக்கிடும் – கலிங்:382/1

மேல்


போல் (30)

அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை – கலிங்:4/1
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல்
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின் – கலிங்:47/1,2
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால் – கலிங்:88/2
வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல்
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே – கலிங்:89/1,2
பலியாக உறுப்பு அரிந்து தருதும் என்று பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ – கலிங்:109/2
கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும் – கலிங்:143/2
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ – கலிங்:223/2
அலர் மழை போல் மழை பொழிய அது கண்டு கங்கைகொண்டசோழன் தேவி – கலிங்:236/1
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான் – கலிங்:246/1
குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல்
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே – கலிங்:251/1,2
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே – கலிங்:307/2
திருமடந்தையும் போல் பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்து இருக்கவே – கலிங்:320/2
இரை வேட்ட பெரும் புலி போல் இகல் மேல் செல்ல – கலிங்:366/4
கங்கா நதி ஒரு புறம் ஆக படை கடல் போல் வந்தது கடல் வந்தால் – கலிங்:371/1
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல்
நின்னுடைய பேதைமையினால் உரைசெய்தாய் இது நினைப்பளவில் வெல்ல அரிதோ – கலிங்:392/1,2
எறி கடலொடு கடல் கிடைத்த போல் இரு படைகளும் எதிர் கிடைக்கவே – கலிங்:406/1
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே – கலிங்:406/2
கன வரையொடு வரை முனைத்த போல் கட கரியொடு கரி முனைக்கவே – கலிங்:407/1
இன முகில் முகிலொடும் எதிர்த்த போல் இரதமொடு இரதமும் எதிர்க்கவே – கலிங்:407/2
பொரு புலி புலியொடு சிலைத்த போல் பொரு படரொடு படர் சிலைக்கவே – கலிங்:408/1
அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல் அரசரும் அரசரும் அடர்க்கவே – கலிங்:408/2
எடுத்த வேலி போல் கலிங்கர் வட்டணங்கள் இட்டவே – கலிங்:425/2
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே – கலிங்:446/2
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள் – கலிங்:453/1
கட்டு அறுத்தவர் போல் நின்று கட்டுண்ட களிறு அநேகம் – கலிங்:457/2
வரை சில புலிகளோடு வந்து கட்டுண்டவே போல்
அரைசரும் தாமும் கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம் – கலிங்:458/1,2
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி – கலிங்:478/1
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர் – கலிங்:479/1
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும் – கலிங்:554/1
குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே – கலிங்:585/2

மேல்


போல்வன (1)

கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன – கலிங்:135/2

மேல்


போல (7)

எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே – கலிங்:14/1,2
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ – கலிங்:42/2
கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன – கலிங்:138/2
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும் – கலிங்:172/1
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/1,2
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின் – கலிங்:477/1,2
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை – கலிங்:519/1

மேல்


போலாவேல் (2)

புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2

மேல்


போலும் (14)

புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2
புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும் – கலிங்:91/2
கண்ணோடி சொரிகின்ற கண்ணீர் அன்றேல் கண்டு இரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும் – கலிங்:92/2
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் – கலிங்:93/2
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின – கலிங்:140/1
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான் – கலிங்:179/2
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே – கலிங்:290/2
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும் – கலிங்:377/2
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ – கலிங்:381/2
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே – கலிங்:433/2
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே – கலிங்:503/2

மேல்


போலுமா (1)

கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/2

மேல்


போலுமே (1)

பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே – கலிங்:317/2

மேல்


போழ்தில் (2)

இடாகினிகள் இரு மருங்கும் ஈச்சோப்பி பணிமாற இருந்த போழ்தில் – கலிங்:155/2
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில் – கலிங்:465/2

மேல்


போழ்தின் (1)

தைத்த போழ்தின் அ கரங்கள் சக்கரங்கள் ஒக்குமே – கலிங்:428/2

மேல்


போழ்தினில் (1)

நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால் – கலிங்:389/2

மேல்


போழ்து (3)

குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே – கலிங்:431/2
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை – கலிங்:491/1
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண – கலிங்:566/1

மேல்


போற்றவே (1)

காணலாம் வகை கண்டனம் நீ இனி காண்டல் வேண்டும் என கழல் போற்றவே – கலிங்:323/2

மேல்


போன்ற (1)

படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2

மேல்


போன்றமையும் (1)

பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/2

மேல்


போன்று (1)

கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2

மேல்


போன (1)

வன் சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன – கலிங்:304/2

மேல்