கலிங்கத்துப்பரணி

அதிகாரங்கள்

1.கடவுள் வாழ்த்து

2.கடை திறப்பு

3.காடு பாடியது

4.கோயில் பாடியது

5.தேவியைப் பாடியது

6.பேய்களைப் பாடியது

7.இந்திர சாலம்
8.இராச பாரம்பரியம்

9.பேய் முறைப்பாடு

10.அவதாரம்

11.காளிக்குக் கூளி கூறியது

12.போர் பாடியது

13.களம் பாடியது

1. கடவுள் வாழ்த்து

*உமாபதி துதி
#1
புயல்வண்ணன் புனல் வார்க்க பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை
செயல் வண்ணம் நிலைநிறுத்த மலைமகளை புணர்ந்தவனை சிந்தை செய்வாம்

மேல்
2
அருமறையின் நெறி காட்ட அயன் பயந்த நிலமகளை அண்டம் காக்கும்
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே

மேல்

*திருமால் துதி
#3
ஒரு வயிற்றில் பிறவாது பிறந்தருளி உலகு ஒடுக்கும்
திரு வயிற்றிற்று ஒரு குழவி திரு நாமம் பரவுதுமே

மேல்
4
அ நெடு மால் உதரம் போல் அருள் அபயன் தனி கவிகை
இ நெடு மா நிலம் அனைத்தும் பொதிந்து இனிது வாழ்க என்றே

மேல்

*நான்முகன் துதி
#5
உகம் நான்கும் பொருள் நான்கும் உபநிடதம் ஒரு நான்கும்
முகம் நான்கும் படைத்து உடைய முதல்வனை யாம் பரவுதுமே

மேல்
6
நிலம் நான்கும் திசை நான்கும் நெடும் கடல்கள் ஒரு நான்கும்
குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே

மேல்

*சூரியன் துதி
#7
பேர் ஆழி உலகு அனைத்தும் பிறங்க வளர் இருள் நீங்க
ஓராழி-தனை நடத்தும் ஒண் சுடரை பரவுதுமே

மேல்
8
பனி ஆழி உலகு அனைத்தும் பரந்த கலி இருள் நீங்க
தனி ஆழி-தனை நடத்தும் சய_துங்கன் வாழ்க என்றே

மேல்

*கணபதி துதி
#9
காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு
ஆரணமாம் நாற்கூடத்து அணைந்து நிற்கும் ஐம் கரத்தது ஒரு களிற்றுக்கு அன்பு செய்வாம்

மேல்
10
தனித்தனியே திசையானை தறிகள் ஆக சயத்தம்பம் பல நாட்டி ஒரு கூடத்தே
அனைத்து உலகும் கவித்தது என கவித்து நிற்கும் அருள் கவிகை கலி பகைஞன் வாழ்க என்றே

மேல்

*முருகவேள் துதி
#11
பொன் இரண்டு வரை தோற்கும் பொரு அரிய நிறம் படைத்த புயமும் கண்ணும்
பன்னிரண்டும் ஆறிரண்டும் படைத்துடையான் அடித்தலங்கள் பணிதல் செய்வாம்

மேல்
12
ஓரிரண்டு திரு குலமும் நிலைபெற வந்து ஒரு குடை கீழ் கடலும் திக்கும்
ஈரிரண்டு படைத்து உடைய இரவி குலோத்தமன் அபயன் வாழ்க என்றே

மேல்

*நாமகள் துதி
#13
பூமாதும் சயமாதும் பொலிந்து வாழும் புயத்து இருப்ப மிக உயரத்து இருப்பள் என்று
நாமாதும் கலைமாதும் என்ன சென்னி நாவகத்துள் இருப்பாளை நவிலுவாமே

மேல்
14
எண்மடங்கு புகழ் மடந்தை நல்லன் எம் கோன் யான் அவன்-பால் இருப்பது நன்று என்பாள் போல
மண்மடந்தை தன் சீர்த்தி வெள்ளை சாத்தி மகிழ்ந்த பிரான் வளவர் பிரான் வாழ்க என்றே

மேல்

*உமையவள் துதி
#15
செய்ய திரு மேனி ஒரு பாதி கரிது ஆக தெய்வ முதல் நாயகனை எய்த சிலை மாரன்
கையின் மலர் பாத மலர் மீதும் அணுகா நம் கன்னி-தன் மலர் கழல்கள் சென்னி மிசை வைப்பாம்

மேல்
16
கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண்
பொறுத்த மலர் பாத மலர் மீது அணிய நல்கும் பூழியர் பிரான் அபயன் வாழ்க இனிது என்றே

மேல்

*சத்த மாதர்கள் துதி
#17
மேதி புள் அலகை தோகை ஏறு உவணம் வேழம் என்ற கொடி ஏழு உடை
சோதி மென் கொடிகள் ஏழின் ஏழிரு துணை பதம் தொழ நினைத்துமே

மேல்
18
கேழல் மேழி கலை யாளி வீணை சிலை கெண்டை என்று இனைய பல் கொடி
தாழ மேருவில் உயர்த்த செம்பியர் தனி புலிக்கொடி தழைக்கவே

மேல்

*வாழி
#19
விதி மறையவர் தொழில் விளைகவே விளைதலின் முகில் மழை பொழிகவே
நிதி தரு பயிர் வளம் நிறைகவே நிறைதலின் உயிர் நிலைபெறுகவே

மேல்
20
தலம் முதல் உள மனு வளர்கவே சயதரன் உயர் புலி வளர்கவே
நிலவு உமிழ் கவிகையும் வளர்கவே நிதி பொழி கவிகையும் வளர்கவே

மேல்

2. கடை திறப்பு

*உடல் அழகு
#21
சூதளவு அளவு எனும் இள முலை துடியளவு அளவு எனும் நுண் இடை
காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ

மேல்

*மார்பழகு
#22
புடைபட இள முலை வளர்-தொறும் பொறை அறிவுடையரும் நிலை தளர்ந்து
இடை படுவது பட அருளுவீர் இடு கதவு உயர் கடை திற-மினோ

மேல்

*நடை அழகு
#23
சுரி குழல் அசைவுற அசைவுற துயில் எழு மயில் என மயில் என
பரிபுரம் ஒலியெழ ஒலியெழ பனிமொழியவர் கடை திற-மினோ

மேல்

*ஊடிய மகளிர்
#24
கூடிய இன் கனவு-அதனிலே கொடை நர_துங்கனொடு அணைவுறாது
ஊடிய நெஞ்சினொடு ஊடுவீர் உமது நெடும் கடை திற-மினோ

மேல்

*விடுமின் பிடிமின்
#25
விடு-மின் எங்கள் துகில் விடு-மின் என்று முனி வெகுளி மென் குதலை துகிலினை
பிடி-மின் என்ற பொருள் விளைய நின்று அருள்செய் பெடை நலீர் கடைகள் திற-மினோ

மேல்

*கனவா நனவா
#26
எனது அடங்க இனி வளவர்_துங்கன் அருள் என மகிழ்ந்து இரவு கனவிடை
தன தடங்கள் மிசை நகம் நடந்த குறி தடவுவீர் கடைகள் திற-மினோ

மேல்

*ஊடலும் கூடலும்
#27
முனிபவர் ஒத்திலராய் முறுவல் கிளைத்தலுமே முகிழ் நகை பெற்றம் எனா மகிழ்நர் மணி துவர் வாய்
கனி பவளத்து அருகே வருதலும் முத்து உதிரும் கயல்கள் இரண்டு உடையீர் கடை திற-மின் திற-மின்

மேல்

*பொய்த் துயில்
#28
இ துயில் மெய் துயிலே என்று குறித்து இளைஞோர் இது புலவிக்கு மருந்து என மனம் வைத்து அடியில்
கைத்தலம் வைத்தலுமே பொய் துயில் கூர் நயன கடை திறவா மடவீர் கடை திற-மின் திற-மின்

மேல்

*கனவில் பெற முயல்தல்
#29
இகல் இழந்து அரசர் தொழ வரும் பவனி இரவு உகந்து அருளும் கனவினில்
பகல் இழந்த நிறை பெற முயன்று மொழி பதறுவீர் கடைகள் திற-மினோ

மேல்

*முத்துமாலையும் பவளமாலையும்
#30
முத்து வடம் சேர் முகிழ் முலை மேல் முயங்கும் கொழுநர் மணி செ வாய்
வைத்த பவள வடம் புனைவீர் மணி பொன் கபாடம் திற-மினோ

மேல்

*ஆத்திமாலையின் மேல் ஆசை
#31
தண் கொடை மானதன் மார்பு தோய் தாதகி மாலையின் மேல் விழும்
கண் கொடு போம் வழி தேடுவீர் கனக நெடும் கடை திற-மினோ

மேல்

*படைக்கும் கண்களுக்கும் ஒப்புமை
#32
அஞ்சியே கழல் கெட கூடலில் பொருது சென்று அணி கடை குழையிலே விழ அடர்த்து எறிதலால்
வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ

மேல்

*கூடலில் தோன்றும் நிகழ்ச்சிகள்
#33
அவசமுற்று உளம் நெக துயில் நெக பவள வாய் அணி சிவப்பு அற விழி கடை சிவப்பு உற நிறை
கவசம் அற்று இள நகை களிவர களிவரும் கணவரை புணருவீர் கடை திறந்திடு-மினோ

மேல்

*கலவி மயக்கம்
#34
கலவி களியின் மயக்கத்தால் கலை போய் அகல கலை மதியின்
நிலவை துகில் என்று எடுத்து உடுப்பீர் நீள் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*நனவும் கனவும்
#35
நனவினில் சயதரன் புணரவே பெறினும் நீர் நனவு என தெளிவுறாது அதனையும் பழைய அ
கனவு என கூறுவீர் தோழிமார் நகை முகம் கண்ட பின் தேறுவீர் கடை திறந்திடு-மினோ

மேல்

*மகளிர் உறங்காமை
#36
மெய்யே கொழுநர் பிழை நலிய வேட்கை நலிய விடியளவும்
பொய்யே உறங்கும் மட நல்லீர் புனை பொன் கபாடம் திற-மினோ

மேல்

*கொழுநர் மார்பில் துயில்
#37
போக அமளி களி மயக்கில் புலர்ந்தது அறியாதே கொழுநர்
ஆக அமளி மிசை துயில்வீர் அம் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*பிரிவாற்றாமை
#38
ஆளும் கொழுநர் வரவு பார்த்து அவர்-தம் வரவு காணாமல்
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ

மேல்

*ஒன்றில் இரண்டு
#39
உந்தி சுழியின் முளைத்து எழுந்த உரோம பசும் தாள் ஒன்றில் இரண்டு
அந்தி கமலம் கொடுவருவீர் அம் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*சிறைப்பட்ட மகளிர் நிலை
#40
மீனம் புகு கொடி மீனவர் விழி அம்பு உக ஓடி
கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின்

மேல்

*மகளிரை கப்பப்பொருளாக அளித்தல்
#41
அலை நாடிய புனல் நாடு உடை அபயர்க்கு இடு திறையா
மலைநாடியர் துளுநாடியர் மனையில் கடை திற-மின்

மேல்

*தோளைத் தழுவி விளையாடல்
#42
விலையிலாத வடம் முலையில் ஆட விழி குழையில் ஆட விழை கணவர் தோள்
மலையில் ஆடி வரும் மயில்கள் போல வரும் மட நலீர் கடைகள் திற-மினோ

மேல்

*கன்னடப் பெண்டிரின் பேச்சு
#43
மழலை திரு மொழியில் சில வடுகும் சில தமிழும்
குழறி தரு கருநாடியர் குறுகி கடை திற-மின்

மேல்

*தழுவிய கை நழுவல்
#44
தழுவும் கொழுநர் பிழை நலிய தழுவேல் என்ன தழுவிய கை
வழுவ உடனே மயங்கிடுவீர் மணி பொன் கபாடம் திற-மினோ

மேல்

*மகளிர் புன்னகை
#45
வேகம் விளைய வரும் கொழுநர் மேனி சிவந்த படி நோக்கி
போகம் விளைய நகைசெய்வீர் புனை பொன் கபாடம் திற-மினோ

மேல்

*உறக்கத்திலும் முகமலர்ச்சி
#46
சொருகு கொந்தளகம் ஒரு கை மேல் அலைய ஒரு கை கீழ் அலை செய் துகிலொடே
திரு அனந்தலினும் முகம் மலர்ந்து வரு தெரிவைமீர் கடைகள் திற-மினோ

மேல்

*நெஞ்சம் களிப்பீர்
#47
முலை மீது கொழுநர் கை நகம் மேவு குறியை முன் செல்வம் இல்லாதவவர் பெற்ற பொருள் போல்
கலை நீவி யாரேனும் இல்லா இடத்தே கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள் திற-மின்

மேல்

*மதர்விழி மாதர்
#48
கடலில் விடம் என அமுது என மதனவேள் கருதி வழிபடு படையொடு கருதுவார்
உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவும் மதர் விழி உடையவர் திற-மினோ

மேல்

*பிறைநிலவும் முழுநிலவும்
#49
முறுவல் மாலையொடு தரள மாலை முக மலரின் மீதும் முலை முகிழினும்
சிறு நிலாவும் அதின் மிகு நிலாவும் என வரு நலீர் கடைகள் திற-மினோ

மேல்

*திருகிச் செருகும் குழல் மாதர்
#50
முருகின் சிவந்த கழுநீரும் முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகி செருகும் குழல் மடவீர் செம்பொன் கபாடம் திற-மினோ

மேல்

*கொழுநரை நினைந்தழும் பெண்கள்
#51
மெய்யில் அணைத்து உருகி பைய அகன்றவர் தாம் மீள்வர் என கருதி கூடல் விளைத்து அறவே
கையில் அணைத்த மணல் கண்பனி சோர் புனலில் கரைய விழுந்து அழுவீர் கடை திற-மின் திற-மின்

மேல்

*ஊடன் மகளிர்
#52
செரு இள நீர் பட வெம் முலை செவ்விளநீர் படு சே அரி
கருவிள நீர் பட ஊடுவீர் கனக நெடும் கடை திற-மினோ

மேல்

*நடந்துவரும் அழகு
#53
அளக பாரம் மிசை அசைய மேகலைகள் அவிழ ஆபரணம் இவை எலாம்
இளக மா முலைகள் இணையறாமல் வரும் இயல் நலீர் கடைகள் திற-மினோ

மேல்

*இதழ் சுவைத்தல்
#54
மதுரமான மொழி பதற வாள் விழி சிவப்ப வாய் இதழ் வெளுப்பவே
அதர பானம் மதுபானம் ஆக அறிவு அழியும் மாதர் கடை திற-மினோ

மேல்

*வேதும் மருந்தும்
#55
தங்கு கண் வேல் செய்த புண்களை தட முலை வேது கொண்டு ஒற்றியும்
செம் கனி வாய் மருந்து ஊட்டுவீர் செம்பொன் நெடும் கடை திற-மினோ

மேல்

*வேதும் கட்டும்
#56
பொரும் கண் வேல் இளைஞர் மார்பின் ஊடுருவு புண்கள் தீர இரு கொங்கையின்
கரும் கண் வேதுபட ஒற்றி மென் கை கொடு கட்டு மாதர் கடை திற-மினோ

மேல்

*விழுதலும் எழுதலும்
#57
இடையின் நிலை அரிது இறும் இறும் என எழா எமது புகலிடம் இனி இலை என விழா
அடைய மதுகரம் எழுவது விழுவதாம் அளக வனிதையர் அணி கடை திற-மினோ

மேல்

*சிலம்புகள் முறையிடல்
#58
உபய தனம் அசையில் ஒடியும் இடை நடையை ஒழியும் ஒழியும் என ஒண் சிலம்பு
அபயம் அபயம் என அலற நடைபயிலும் அரிவைமீர் கடைகள் திற-மினோ

மேல்

*பெண்ணுக்கும் பொன்னிக்கும் ஒப்புமை
#59
பூ விரி மதுகரம் நுகரவும் பொரு கயல் இரு கரை புரளவும்
காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ

மேல்

*வண்டுகள் கூந்தலிற் பந்தலிடல்
#60
களப வண்டல் இடு கலச கொங்கைகளில் மதி எழுந்து கனல் சொரியும் என்று
அளக பந்தி மிசை அளிகள் பந்தர் இடும் அரிவைமீர் கடைகள் திற-மினோ

மேல்

*விழி சிவக்கும் உதடு வெளுக்கும்
#61
வாயின் சிவப்பை விழி வாங்க மலர் கண் வெளுப்பை வாய் வாங்க
தோய கலவி அமுது அளிப்பீர் துங்க கபாடம் திற-மினோ

மேல்

*கலவியில் நிகழ்வன
#62
கூடும் இளம்பிறையில் குறு வெயர் முத்து உருள கொங்கை வடம் புரள செங்கழுநீர் அளக
காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின்

மேல்

*காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்தது
#63
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கலவி மடவீர் கழல் சென்னி
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ

மேல்

*கருணாகரனின் போர்ச்சிறப்பு
#64
இலங்கை எறிந்த கருணாகரன்-தன் இகல் வெம் சிலையின் வலி கேட்பீர்
கலிங்கம் எறிந்த கருணாகரன்-தன் கள போர் பாட திற-மினோ

மேல்

*நினைவும் மறதியும்
#65
பேணும் கொழுநர் பிழைகள் எலாம் பிரிந்த பொழுது நினைந்து அவரை
காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ

மேல்

*உறவாடும் மாதர்
#66
வாசம் ஆர் முலைகள் மார்பில் ஆட மது மாலை தாழ் குழலின் வண்டு எழுந்து
ஊசலாட விழி பூசலாட உறவாடுவீர் கடைகள் திற-மினோ

மேல்

*வாய் புதைக்கும் மடநல்லீர்
#67
நேய கலவி மயக்கத்தே நிகழ்ந்த மொழியை கிளி உரைப்ப
வாயை புதைக்கு மட நல்லீர் மணி பொன் கபாடம் திற-மினோ

மேல்

*மதியொளிக்கு நடுங்குவீர்
#68
பொங்கும் மதிக்கே தினம் நடுங்கி புகுந்த அறையை நிலவறை என்று
அங்கும் இருக்க பயப்படுவீர் அம் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*தேயும் குடுமி
#69
வருவார் கொழுநர் என திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும் தேயும் கபாடம் திற-மினோ

மேல்

*புலவியும் கலவியும்
#70
ஊடுவீர் கொழுநர் தங்கள்-பால் முனிவு ஒழிந்து கூடுதலின் உங்களை
தேடுவீர் கடைகள் திற-மினோ இனிய தெரிவைமீர் கடைகள் திற-மினோ

மேல்

*கண்ணின் இயல்பு
#71
பண் படு கிளவியை அமுது என பரவிய கொழுநனை நெறிசெய
கண் கொடு கொலைசெய அருளுவீர் கனக நெடும் கடை திற-மினோ

மேல்

*தரையில் விரல் எழுதுவீர்
#72
பிழை நினைந்து உருகி அணைவுறா மகிழ்நர் பிரிதல் அஞ்சி விடு கண்கள் நீர்
மழை ததும்ப விரல் தரையிலே எழுதும் மட நலீர் கடைகள் திற-மினோ

மேல்

*குலோத்துங்கன் போன்றீர்
#73
ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு
அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*பூவும் உயிரும் செருகுவீர்
#74
செக்க சிவந்த கழுநீரும் செகத்தில் இளைஞர் ஆருயிரும்
ஒக்க செருகும் குழல் மடவீர் உம் பொன் கபாடம் திற-மினோ

மேல்

*3 காடு பாடியது
#75
கள போர் விளைந்த கலிங்கத்து கலிங்கர் நிண கூழ் கள பேயின்
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம்

மேல்

*மரம் செடி கொடிகள்
#76
பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய்
உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே

மேல்

#77
உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல்
பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே

மேல்

#78
வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல்
முற்றல் ஈகை முளிந்த விண்டு முரிந்த புன்கு நிரைந்தவே

மேல்

*பரிதியின் செயல்
#79
தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன்
சாயை புக்க வழி யாது என பரிதி தன் கரம் கொடு திளைக்குமே

மேல்

*நிழல் இல்லாமை
#80
ஆடுகின்ற சிறை வெம் பருந்தின் நிழல் அஞ்சி அ கடு வனத்தை விட்டு
ஓடுகின்ற நிழல் ஒக்கும் நிற்கும் நிழல் ஓரிடத்தும் உள அல்லவே

மேல்

*நிழலின் செயல்
#81
ஆதவம் பருகும் என்று நின்ற நிழல் அங்கு நின்று குடிபோனது அ
பாதவம் புனல் பெறாது உணங்குவன பருகும் நம்மை என வெருவியே

மேல்

*நெருப்பும் புகையும்
#82
செம் நெருப்பினை தகடு செய்து பார் செய்தது ஒக்கும் அ செம் தரை பரப்பு
அ நெருப்பினில் புகை திரண்டது ஒப்பு அல்லது ஒப்பு உறா அதனிடை புறா

மேல்

*நிலத்தில் நீரின்மை
#83
தீயின்-வாயின் நீர் பெறினும் உண்பதோர் சிந்தை கூர வாய் வெந்து வந்து செந்
நாயின் வாயின் நீர்-தன்னை நீர் எனா நவ்வி நாவினால் நக்கி விக்குமே

மேல்

*நிலத்தின் வெம்மை
#84
இ நிலத்துளோர் ஏகலாவதற்கு எளிய கானமோ அரிய வானுளோர்
அ நிலத்தின் மேல் வெம்மையை குறித்து அல்லவோ நிலத்து அடி இடாததே

மேல்

*இரவியும் இருபொழுதும்
#85
இரு பொழுதும் இரவி பசும் புரவி விசும்வு இயங்காதது இயம்ப கேள்-மின்
ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ

மேல்

*பனிநீரும் மழைநீரும் வியர்வை நீரே
#86
காடு இதனை கடத்தும் என கரு முகிலும் வெண் மதியும் கடக்க அப்பால்
ஓடி இளைத்து உடல் வியர்த்த வியர்வு அன்றோ உகு புனலும் பனியும் ஐயோ

மேல்

*தேவர் வாழ்க்கை
#87
விம்மு கடு விசை வனத்தின் வெம்மையினை குறித்து அன்றோ விண்ணோர் விண்ணின்
மை முகடு முகில் திரை இட்டு அமுத வட்ட ஆலவட்டம் எடுப்பது ஐயோ

மேல்

*பேயின் மூச்சும் மரத்தின் புகையும்
#88
நிலம் புடைபேர்ந்து ஓடாமே நெடு மோடி நிறுத்திய பேய்
புலம்பொடு நின்று உயிர்ப்பன போல் புகைந்து மரம் கரிந்து உளவால்

மேல்

*வறண்ட நாக்கும் முதிய பேயும்
#89
வற்றிய பேய் வாய் உலர்ந்து வறள் நாக்கை நீட்டுவ போல்
முற்றிய நீள் மர பொதும்பின் முது பாம்பு புறப்படுமே

மேல்

*சூறாவளியின் இயல்பு
#90
விழி சுழல வரு பேய்த்தேர் மிதந்து வரு நீர் அ நீர்
சுழி சுழல வருவது என சூறைவளி சுழன்றிடுமால்

மேல்

*நீறு பூத்த நெருப்பு
#91
சிதைந்த உடல் சுடு சுடலை பொடியை சூறை சீத்தடிப்ப சிதறிய அ பொடியால் செம்மை
புதைந்த மணி புகை போர்த்த தழலே போலும் போலாவேல் பொடி மூடு தணலே போலும்

மேல்

*முத்து சொரிதல் கண்ணீர் பொழிதல்
#92
மண் ஓடி அற வறந்து துறந்து அங்காந்த வாய் வழியே வேய் பொழியும் முத்தம் அ வேய்
கண்ணோடி சொரிகின்ற கண்ணீர் அன்றேல் கண்டு இரங்கி சொரிகின்ற கண்ணீர் போலும்

மேல்

*முத்துக்கள் கொப்புளங்கள்
#93
வெடித்த கழை விசை தெறிப்ப தரை மேல் முத்தம் வீழ்ந்தன அ தரை புழுங்கி அழன்று மேன்மேல்
பொடித்த வியர் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும்

மேல்

*காற்றின் தன்மை
#94
பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில்
செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ

மேல்

*வெந்தவனமே இந்தவனம்
#95
முள் ஆறும் கல் ஆறும் தென்னர் ஓட முன் ஒருநாள் வாள் அபயன் முனிந்த போரில்
வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும்

மேல்

*மணலின் தன்மை
#96
அணிகொண்ட குரங்கினங்கள் அலை கடலுக்கு அ பாலை
மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே

மேல்

4. கோயில் பாடியது

*பழையகோயிலும் புதியகோயிலும்
#97
ஓதி வந்த அ கொடிய கானகத்து உறை அணங்கினுக்கு அயன் வகுத்த இ
பூதலம் பழம் கோயில் என்னினும் புதிய கோயில் உண்டு அது விளம்புவாம்

மேல்

*புதிய கோயிலுக்குக் கடைக்கால்
#98
வட்ட வெண்குடை சென்னி மானதன் வாளின் வாயினான் மறலி வாயிடை
பட்ட மன்னர்-தம் பட்ட மங்கையர் பரு மணி கரு திரு இருத்தியே

மேல்

*கோயில் இயல்பு
#99
துவர் நிற களிற்று உதியர் ஏவலின் சுரிகை போர்முகத்து உருவி நேரெதிர்த்து
அவர் நிணத்தொடு அ குருதி நீர் குழைத்து அவர் கரும் தலை சுவர் அடுக்கியே

மேல்

*தூணும் உத்தரமும்
#100
அறிஞர் தம்பிரான் அபயன் வாரணம் அரசர் மண்டலத்து அரண் அற பறித்து
எறிதரும் பெரும் கணைமரங்கள் கொண்டு எழுது தூணொடு உத்திரம் இயற்றியே

மேல்

*கை மரமும் பரப்பு மரமும்
#101
கடிது அழிந்து போர் மிதிலையில் படும் கரி மருப்பினை திரள் துலாம் எனும்
படி பரப்பி அ பரும யானையின் பழு எலும்பினில் பா அடுக்கியே

மேல்

*மேல் முகடு
#102
மீளி மா உகைத்து அபயன் முன் ஒர் நாள் விருதராசரை பொருது கொண்ட போர்
ஆளி வாரணம் கேழல் சீயம் என்று அவை நிரைத்து நாசிகை இருத்தியே

மேல்

*வெற்றிடத்தை மூடுதல்
#103
துங்கபத்திரை செம் களத்திடை சோள சேகரன் வாள் எறிந்த போர்
வெம் கத களிற்றின் படத்தினால் வெளி அடங்கவே மிசை கவிக்கவே

மேல்

*கோபுரமும் நெடுமதிலும்
#104
கொள்ளிவாய்ப்பேய் காக்கும் கோபுரமும் நெடு மதிலும்
வெள்ளியால் சமைத்தது என வெள் எலும்பினால் சமைத்தே

மேல்

*கோயில் வாயிலில் மகரதோரணம்
#105
கார் இரும்பின் மகர தோரணம் ஆக கரும் பேய்கள்
ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே

மேல்

*மதில்களின் காட்சி
#106
மயில் கழுத்தும் கழுத்து அரிய மலர்ந்த முக தாமரையும் மருங்கு சூழ்ந்த
எயிற்கு அழுத்தும் நிண கொடியும் இளம் குழவி பசும் தலையும் எங்கும் தூக்கி

மேல்

*மதுரையின் மகரதோரணம்
#107
பணியாத வழுதியர்-தம் பாய் களிற்றின் செவி சுளகு பலவும் தூக்கி
மணி ஊசன் என மதுரை மகர தோரணம் பறித்து மறித்து நாட்டி

மேல்

*ஈம விளக்கு
#108
பரிவு இருத்தி அலகிட்டு பசும் குருதி நீர் தெளித்து நிண பூ சிந்தி
எரி விரித்த ஈமவிளக்கு எம்மருங்கும் ஏற்றியதோர் இயல்பிற்றாலோ

மேல்

*வீரர்களின் பேரொலி
#109
சலியாத தனி ஆண்மை தறுகண் வீரர் தருக வரம் வரத்தினுக்கு தக்கதாக
பலியாக உறுப்பு அரிந்து தருதும் என்று பரவும் ஒலி கடல் ஒலி போல் பரக்குமாலோ

மேல்

*வீர வழிபாடு
#110
சொல் அரிய ஓமத்தீ வளர்ப்பராலோ தொழுது இருந்து பழு எலும்பு தொடர வாங்கி
வல் எரியின் மிசை எரிய விடுவராலோ வழி குருதி நெய்யாக வார்ப்பராலோ

மேல்

*தலை துதிக்கும் முண்டம் வழிபடும்
#111
அடி கழுத்தின் நெடும் சிரத்தை அரிவராலோ அரிந்த சிரம் அணங்கின் கை கொடுப்பராலோ
கொடுத்த சிரம் கொற்றவையை பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்குமாலோ

மேல்

*அச்சுறுத்தும் தலைகள்
#112
நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த நெடும் குஞ்சி சிரத்தை தன் இனம் என்று எண்ணி
ஆண்டலைப்புள் அருகு அணைந்து பார்க்குமாலோ அணைதலும் அ சிரம் அச்சமுறுத்துமாலோ

மேல்

*அஞ்சி அலைந்தன
#113
கடன் அமைந்தது கரும் தலை அரிந்த பொழுதே கடவது ஒன்றும் இலை என்று விளையாடும் உடலே
உடல் விழுந்திடின் நுகர்ந்திட உவந்த சில பேய் உறு பெரும் பசி உடன்றிட உடன் திரியுமே

மேல்

*குரல் ஒலியும் வாத்திய ஒலியும்
#114
பகடு இடந்து கொள் பசும் குருதி இன்று தலைவீ பலிகொள் என்ற குரல் எண் திசை பிளந்து ம ¢சைவான்
முகடு இடந்து உரும் எறிந்து என முழங்க உடனே மொகுமொகென்று ஒலி மிகும் தமருகங்கள் பலவே

மேல்

*மெய்க் காப்பாளர்கள்
#115
தமருகங்கள் தருகின்ற சதியின்-கண் வருவார்
அமரி இன்புறும் அநாதி வரு சாதகர்களே

மேல்

*யோகினிப் பெண்கள்
#116
படை வலம் கொடு பசும் தலை இடம் கொடு அணைவார்
இடை மொழிந்து இடை நுடங்க வரு யோகினிகளே

மேல்

*பெருந்தலை கண்டு பேய் உறங்காமை
#117
வீங்கு தலை நெடும் கழையின் மிசை-தோறும் திசை-தோறும் விழித்து நின்று
தூங்கு தலை சிரிப்பன கண்டு உறங்குதலை மறந்திருக்கும் சுழல் கண் சூர் பேய்

மேல்

*காலன் இடும் தூண்டில்
#118
அரிந்த தலை உடன் அமர்ந்தே ஆடு கழை அலை குருதி புனலின் மூழ்கி
இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும்

மேல்

*கொள்ளிவாய்ப் பேயின் தன்மை
#119
கொல் வாய் ஓரி முழவாக கொள்ளிவாய்ப்பேய் குழவிக்கு
நல் வாய் செய்ய தசை தேடி நரி வாய் தசையை பறிக்குமால்

மேல்

*கோயிலைச் சுற்றியுள்ள சுடலை
#120
நிணமும் தசையும் பருந்து இசிப்ப நெருப்பும் பருத்தியும் பொன்று
பிணமும் பேயும் சுடுகாடும் பிணங்கு நரியும் உடைத்தரோ

மேல்

5. தேவியைப் பாடியது

*காளியின் வடிவழகு
#121
உவையுவை உள என்று எண்ணி உரைப்ப என் உரைக்க வந்த
அவையவை மகிழ்ந்த மோடி அவயவம் விளம்பல் செய்வாம்

மேல்

*பரிபுரம் விளங்கும் பாதம்
#122
ஒரு மலை மத்து வலித்து உலவு கயிற்றினும் மற்று உலகு பரித்த பணத்து உரக வடத்தினும் அ
பரு மணி முத்து நிரைத்து உடு மணி தைத்த இணை பரிபுரம் வைத்த தளிர் பத உகளத்தினளே

மேல்

*காளி தேவியின் குங்குமப்பொட்டு
#123
அருமறை ஒத்த குலத்து அருள் நெறி ஒத்த குணத்து அபயன் உதித்த குலத்து உபய குலத்து முதல்
திரு மதி ஒக்கும் என தினகரன் ஒக்கும் என திகழ் வதனத்தினிடை திலக வனப்பினளே

மேல்

*சதிகொள் நடனம்
#124
அரவொடு திக்கயம் அப்பொழுது பரித்த இடத்து அடியிட உள் குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில்
தரணி தரித்தது என பரணி பரித்த புகழ் சயதரனை பரவி சதி கொள் நடத்தினளே

மேல்

*பால் நிரம்பிய கிண்ணம்
#125
தணி தவள பிறையை சடை மிசை வைத்த விடை தலைவர் வனத்தினிடை தனி நுகர்தற்கு நினைத்து
அணி தவள பொடி இட்டு அடைய இலச்சினை இட்டு அமுதம் இருத்திய செப்பு அனைய தனத்தினளே

மேல்

*ஆடையும் இடைக்கச்சும்
#126
பரிவு அகல தழுவி புணர் கலவிக்கு உருகி படர் சடை முக்கண் உடை பரமர் கொடுத்த களிற்று
உரி மிசை அ கரியின் குடரொடு கட்செவி இட்டு ஒரு புரி இட்டு இறுக புனையும் உடுக்கையளே

மேல்

*தேவியின் பிள்ளைகள்
#127
கலை வளர் உத்தமனை கரு முகில் ஒப்பவனை கரட தட கடவுள் கனக நிறத்தவனை
சிலை வளைவுற்று அவுண தொகை செகவிட்ட பரி திறலவனை தரும் அ திரு உதரத்தினளே

மேல்

*தேவியின் அணிகள்
#128
கவள மத கரட கரி உரிவை கயிலை களிறு விருப்புறும் அ கனக முலை தரள
தவள வடத்திடையில் பவளமொடு ஒத்து எரிய தழல் உமிழ் உத்தரிய தனி உரகத்தினளே

மேல்

*காளியின் கைகள்
#129
அரியும் மிடற்று அலையிட்டு அலை குருதிக்கு எதிர்வைத்து அறவும் மடுத்த சிவப்பு-அதனை முழு திசைய ¢ன்
கரி கரட தொளையின் கலுழியிடை கழுவி கருமை படைத்த சுடர் கர கமலத்தினளே

மேல்

*தேவியின் உதடுகள்
#130
சிமைய வரை கனக திரள் உருக பரவை திரை சுவறி புகைய திசை சுடும் அ பொழுதத்து
இமையவரை தகைதற்கு இருளும் மிடற்று இறைவற்கு இனிய தரத்து அமுத கனி அதரத்தினளே

மேல்

*சிவனின் பகை தீர்த்தவள்
#131
உருகுதலுற்று உலகத்து உவமை அற சுழல்வுற்று உலவு விழிக்கடை பட்டு உடல் பகை அற்று ஒழிய
திருகுதலை கிளவி சிறு குதலை பவள சிறு முறுவல் தரள திரு வதனத்தினளே

மேல்

*காதணிகளும் மாலைகளும்
#132
அண்டம் உறு குல கிரிகள் அவள் ஒருகால் இரு காதில்
கொண்டு அணியின் குதம்பையுமாம் கோத்து அணியின் மணி வடமாம்

மேல்

*தேவியின் ஆற்றல்
#133
கை மலர் மேல் அம்மனையாம் கந்துகமாம் கழங்குமாம்
அ மலைகள் அவள் வேண்டின் ஆகாதது ஒன்று உண்டோ

மேல்

6. பேய்களைப் பாடியது

*காளியின் பெருமை
#134
எ அணங்கும் அடி வணங்க இ பெருமை படைத்து உடைய
அ அணங்கை அகலாத அலகைகளை இனி பகர்வாம்

மேல்

*பேய்களின் காலும் கையும்
#135
பெரு நெடும் பசி பெய் கலம் ஆவன பிற்றை நாளின் முன் நாளின் மெலிவன
கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன

மேல்

*வாய் வயிறு முழங்கால்கள்
#136
வன் பிலத்தொடு வாது செய் வாயின வாயினால் நிறையாத வயிற்றின
முன்பு இருக்கின் முகத்தினும் மேற்செல மு முழம் படும் அம் முழந்தாளின

மேல்

*பேய்களின் உடம்பு
#137
வெற்று எலும்பை நரம்பின் வலித்து மேல் வெந்திலா விறகு ஏய்ந்த உடம்பின
கொல் தலம் பெறு கூழ் இலம் எங்களை கொள்வதே பணி என்று குரைப்பன

மேல்

*கன்னங்களும் விழிகளும்
#138
உள் ஒடுங்கி இரண்டும் ஒன்றாகவே ஒட்டி ஒட்டு விடாத கொடிற்றின
கொள்ளி கொண்டு இரண்டே முழை உட்புகின் குன்று தோன்றுவ போல விழிப்பன

மேல்

*முதுகும் கொப்பூழும்
#139
வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தின் மறி புறம் ஒப்பன
ஒற்றை வான் தொளை புற்று என பாம்புடன் உடும்பும் உட்புக்கு உறங்கிடும் உந்திய

மேல்

*உடல் மயிர் மூக்கு காது
#140
பாந்தள் நால்வன போலும் உடல் மயிர் பாசி பட்ட பழம் தொளை மூக்கின
ஆந்தை பாந்தி இருப்ப துரிஞ்சில் புக்கு அங்குமிங்கும் உலாவு செவியின

மேல்

*பல் தாலி தலை உதடு
#141
கொட்டும் மேழியும் கோத்தன பல்லின கோம்பி பாம்பிடை கோத்து அணி தாலிய
தட்டி வானை தகர்க்கும் தலையின தாழ்ந்து மார்பிடை தட்டும் உதட்டின

மேல்

*தாய்ப்பேயும் பிள்ளைப்பேயும்
#142
அட்டம் இட்ட நெடும் கழை காணில் என் அன்னை அன்னை என்று ஆலும் குழவிய
ஒட்டல் ஒட்டகம் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்கும் என்று ஒக்கலை கொள்வன

மேல்

*ஆற்றாத பசி
#143
புயல் அளிப்பன மேலும் அளித்திடும் பொன் கரத்து அபயன் புலி பின் செல
கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும்

மேல்

*காளியைப் பிரியாத பேய்கள்
#144
துஞ்சலுக்கு அணித்தாம் என முன்னமே சொன்ன சொன்ன துறை-தொறும் பேய் எலாம்
அஞ்சலித்து ஒருகால் அகலாமல் அ அணங்கினுக்கு அருகாக இருக்கவே

மேல்

*நொண்டிப் பேய்
#145
ஆளை சீறு களிற்று அபயன் பொரூஉம் அ களத்தில் அரசர் சிரம் சொரி
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும்

மேல்

*கை ஒடிந்த பேய்
#146
அந்த நாள் அ களத்து அடு கூழினுக்கு ஆய்ந்த வெண் பல் அரிசி உரல் புக
உந்து போதினில் போதக கொம்பு எனும் உலக்கை பட்டு வல கை சொற்று ஆனவும்

மேல்

*குருட்டுப் பேய்
#147
விருதராச பயங்கரன் முன் ஒர் நாள் வென்ற சக்கர கோட்டத்திடை கொழும்
குருதியும் குடரும் கலந்து அட்ட வெம் கூழ் தெறித்து ஒரு கண் குருடு ஆனவும்

மேல்

*ஊமைப் பேய்
#148
வண்டல் பாய் பொன்னி நாடனை வாழ்த்தி மா மதுரை வெம் களத்தே மதுரிக்க அட்டு
உண்ட கூழொடு நாவும் சுருண்டு புக்கு உள் விழுந்து அற ஊமைகள் ஆனவும்

மேல்

*செவிட்டுப் பேய்
#149
ஆனை சாய அடு பரி ஒன்று உகைத்து ஐம்படை பருவத்து அபயன் பொரும்
சேனை வீரர் நின்று ஆர்த்திடும் ஆர்ப்பினில் திமிரி வெம் களத்தில் செவிடு ஆனவும்

மேல்

*குட்டைப் பேய்
#150
பண்டு தென்னவர் சாய அதற்கு முன் பணி செய் பூத கணங்கள் அனைத்தையும்
கொண்டு வந்த பேய் கூடிய போதில் அ குமரி மாதர் பெற குறள் ஆனவும்

மேல்

*கூன் பேய்
#151
பரக்கும் ஓத கடாரம் அழித்த நாள் பாய்ந்த செம்புனல் ஆடியும் நீந்தியும்
குரக்கு வாதம் பிடித்த விதத்தினில் குடி அடங்கலும் கூன் முதுகு ஆனவும்

மேல்

*கடல் விளையாட்டு
#152
சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும்

மேல்

7. இந்திர சாலம்

*தீபக்கால் கட்டில்
#153
இ வண்ணத்த இரு திறமும் தொழுது இருப்ப எலும்பின் மிசை குடர் மென் கச்சின்
செ வண்ண குருதி தோய் சிறு பூத தீபக்கால் கட்டில் இட்டே

மேல்

*பிண மெத்தை
#154
பிண மெத்தை அஞ்சு அடுக்கி பேய் அணையை முறித்திட்டு தூய வெள்ளை
நிண மெத்தை விரித்து உயர்ந்த நிலா திகழும் பஞ்சசயனத்தின் மேலே

மேல்

*கொலு வீற்றிருத்தல்
#155
கெடாதபடி கெடும் செழியர் கெடும் பொழுதின் இடும் பிண்டி பாலம் ஏந்தி
இடாகினிகள் இரு மருங்கும் ஈச்சோப்பி பணிமாற இருந்த போழ்தில்

மேல்

*கோயில் நாயகியை கும்பிடுதல்
#156
அடல் நாக எலும்பு எடுத்து நரம்பில் கட்டி அடி தடியும் பிடித்து அமரின் மடிந்த வீரர்
குடர் சூடி நிண சட்டை இட்டு நின்ற கோயில் நாயகி நெடும் பேய் கும்பிட்டு ஆங்கே

மேல்

*காளியிடம் நெடும்பேய் கூறல்
#157
சுர குருவின் தூதாகி யமன்-பால் செல்வோன் துணித்து வைத்த சிரம் அன்று தின்ற பேயை
சிரம் அரிய அதற்கு உறவாய் ஒளித்து போந்த சில பேயை திருவுள்ளத்து அறிதி அன்றே

மேல்

*முதுபேயின் வருகை கூறல்
#158
அ பேயின் ஒரு முது பேய் வந்து நின்று இங்கு அடியேனை விண்ணப்பம் செய்க என்றது
இ பேய் இங்கு ஒரு தீங்கும் செய்ததில்லை என்-கொலோ திருவுள்ளம் என்ன கேட்டே

மேல்

*முதுபேய் மன்னிப்பு கேட்டல்
#159
அழைக்க என்றலும் அழைக்க வந்து அணுகி அஞ்சி அஞ்சி உனது ஆணையின்
பிழைக்க வந்தனம் பொறுத்து எமக்கு அருள்செய் பெண் அணங்கு என வணங்கவே

மேல்

*காளியின் அருள்மொழி
#160
அருத்தியின் பிழை நினைத்த கூளியை அறுத்து அவன் தலை அவன் பெற
பொருத்தி அ பிழை பொறுத்தனம் பிழை பொறாதது இல்லை இனி என்னவே

மேல்

*முதுபேய் வேண்டல்
#161
உய்ந்து போயினம் உவந்து எமக்கு அருள ஒன்றொடு ஒப்பன ஒராயிரம்
இந்த்ரசாலம் உள கற்று வந்தனென் இருந்து காண் என இறைஞ்சியே

மேல்

*கண் கட்டு வித்தைகள்
#162
ஏற நின் இரு திரு கண் வைத்து அருள்செய் இ கையில் சில துதிக்கை பார்
மாறி இ கையில் அழைக்க மற்று அவை மத கரி தலைகள் ஆன பார்

மேல்

#163
இ கரி தலையின் வாயின்-நின்று உதிர நீர் குடித்து உரும் இடித்து என
கொக்கரித்து அலகை சுற்ற மற்று இவை குறைத்தலை பிணம் மிதப்ப பார்

மேல்

#164
அடக்கம் அன்று இது கிடக்க எம்முடைய அம்மை வாழ்க என எம்மை பார்
கடக்கம் அன்று அபயன் வென்று வென்றிகொள் கள பெரும் பரணி இன்று பார்

மேல்

#165
துஞ்சி வீழ் துரக ராசி பார் உடல் துணிந்து வீழ் குறை துடிப்ப பார்
அஞ்சி ஓடும் மத யானை பார் உதிர ஆறும் ஓடுவன நூறு பார்

மேல்

#166
அற்ற தோள் இவை அலைப்ப பார் உவை அறாத நீள் குடர் மிதப்ப பார்
இற்ற தாள் நரி இழுப்ப பார் அடி இழுக்கும் மூளையில் வழுக்கல் பார்

மேல்

#167
நிணங்கள் பார் நிண மணம் கனிந்தன நிலங்கள் பார் நிலம் அடங்கலும்
பிணங்கள் பார் இவை கிடக்க நம்முடை பேய் அலாத சில பேய்கள் பார்

மேல்

*வித்தை கண்ட பேய்களின் மயக்கம்
#168
என்ற போதில் இவை மெய் எனா உடனிருந்த பேய் பதறி ஒன்றன் மேல்
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல்

மேல்

#169
விழுந்து கொழும் குருதி புனல் என்று வெறுங்கை முகந்து முகந்து
எழுந்து விழும் தசை என்று நிலத்தை இருந்து துழாவிடுமே

மேல்

#170
சுற்ற நிண துகில் பெற்றனம் என்று சுலாவு வெறுங்கையவே
அற்ற குறைத்தலை என்று விசும்பை அதுக்கும் எயிற்றினவே

மேல்

#171
கயிற்று உறி ஒப்பதொர் பேய் வறிதே உடல் கௌவினது ஒக்க விரைந்து
எயிற்றை அதுக்கி நிலத்திடை பேய்கள் நிறைத்தன மேல் விழவே

மேல்

#172
முறம் பல போல நகங்கள் முறிந்து முகம் சிதறா முதுகும்
திறம்பல் இலா விறல் யோகினி மாதர் சிரித்து விலா இறவே

மேல்

*பேய்கள் வேண்டுதல்
#173
அ கணம் ஆளும் அணங்கினை வந்தனை செய்து கணங்கள் எலாம்
இ கணம் மாளும் இனி தவிர் விச்சை என கை விதிர்த்தலுமே

மேல்

*முதுபேயின் வேண்டுகோள்
#174
கொற்றவர் கோன் வாள் அபயன் அறிய வாழும் குவலயத்தோர் கலை அனைத்தும் கூற ஆங்கே
கற்று வந்தார் கற்ற அவன் காணுமாபோல் கடைபோக கண்டருள் என் கல்வி என்றே

மேல்

*தாயின்மேல் ஆணை
#175
வணங்குதலும் கணங்கள் எலாம் மாய பாவி மறித்து எம்மை மறு சூடு சுடுவையாகில்
அணங்கரசின் ஆணை என அணங்கும் இப்போது அவை தவிர் எங்கு இவை கற்றாய் என்ன ஆங்கே

மேல்

*முதுபேய் வரலாறு
#176
நின் முனிவும் சுரகுருவின் முனிவும் அஞ்சி நிலை அரிது என்று இமகிரி புக்கு இருந்தேற்கு ஔவை
தன் முனிவும் அவன் முனிவும் தவிர்க என்று சாதன மந்திர விச்சை பலவும் தந்தே

மேல்

#177
உன்னுடைய பழ அடியார் அடியாள் தெய்வ உருத்திரயோகினி என்பாள் உனக்கு நன்மை
இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில்

மேல்

8. இராச பாரம்பரியம்

*இமயத்தில் புலிக்கொடி
#178
செண்டு கொண்டு கரிகாலன் ஒருகாலின் இமய சிமய மால் வரை திரித்தருளி மீள அதனை
பண்டு நின்றபடி நிற்க இது என்று முதுகில் பாய் புலி குறி பொறித்து அது மறித்த பொழுதே

மேல்

*நாரதர் கூறல்
#179
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின்
போலும் மன்னர் உளர் அல்லர் என ஆசி புகலா புகல்வது ஒன்று உளது கேள் அரச என்று புகல்வான்

மேல்

*விநாயகர் பாரதம் எழுதினார்
#180
பண்டு பாரதம் எனும் கதை பராசரன் மகன் பகர வெம் கரிமுகன் பரு மருப்பை ஒரு கை
கொண்டு மேரு சிகரத்து ஒரு புறத்தில் எழுதி குவலயம் பெறு தவ பயன் உரைப்ப அரிதால்

மேல்

#181
பாரதத்தின் உளவாகிய பவித்ர கதை எம் பரமன் நல் சரிதை மெய் பழைய நான்மறைகளே
நேர் அதற்கு இதனை நான் மொழிய நீ எழுதி முன் நெடிய குன்றின் மிசையே இசைவதான கதை கேள்

மேல்

*இதுவும் வேதம் ஆகும்
#182
அதன் முதற்கண் வரும் ஆதி முதல் மாயன் இவனே அப்ரமேயம் எனும் மெய்ப்ரியமதாக உடனே
பதமும் இ பதம் வகுக்க வரு பாதம் அதுவும் பாதமான சிலர் பார் புகழ வந்த அவையும்

மேல்

#183
அந்தம் உட்பட இருக்கும் அ இருக்கின் வழியே ஆகிவந்த அ வருக்கமும் வருக்கம் முழுதும்
வந்த அட்டகமும் ஒட்டு அரிய சங்கிதைகளும் வாய்மை வேதியர்கள் தாம் விதி எனும் வகையுமே

மேல்

#184
கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால்
அமல வேதம் இது காணும் இதில் ஆரண நிலத்து அமலனே அபயன் ஆக அறிக என்று அருளியே

மேல்

*நாரதர் இருப்பிடம் செல்லல்
#185
அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட உருவாய் அரவணை துயிலும் ஆதி முதலாக அபயன்
தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே

மேல்

*நாரதர் கூறிய வரலாறு
#186
ஆதி மால் அமல நாபி கமலத்து அயன் உதித்து அயன் மரீசி எனும் அண்ணலை அளித்த பரிசும்
காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும்

மேல்

#187
அ அருக்கன் மகன் ஆகி மனு மேதினி புரந்து அரிய காதலனை ஆவினது கன்று நிகர் என்று
எ வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும் இக்குவாகு இவன் மைந்தன் என வந்த பரிசும்

மேல்

#188
இக்குவாகுவின் மகன் புதல்வன் ஆன உரவோன் இகலுவோன் இகல் உரம் செய்து புரந்தரன் எனும்
சக்கு ஆயிரம் உடை களிறு வாகனம் என தான் இருந்து பொரு தானவரை வென்ற சயமும்

மேல்

#189
ஒரு துறை புனல் சின புலியும் மானும் உடனே உண்ண வைத்த உரவோன் உலகில் வைத்த அருளும்
பொரு துறைத்தலை புகுந்து முசுகுந்தன் இமையோர் புரம் அடங்கலும் அரண் செய்து புரந்த புகழும்

மேல்

#190
கடல் கலக்க எழும் இன் அமுது-தன்னை ஒருவன் கடவுள் வானவர்கள் உண்ண அருள்செய்த கதையும்
உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன் ஒரு துலை புறவொடு ஒக்க நிறை புக்க புகழும்

மேல்

#191
சுராதிராசன் முதலாக வரு சோழன் முனம் நாள் சோழ மண்டலம் அமைத்த பிறகு ஏழுலகையும்
இராசகேசரி புரந்து பரகேசரிகள் ஆம் இருவர் ஆணை புலி ஆணை என நின்ற இதுவும்

மேல்

#192
காலனுக்கு இது வழக்கு என உரைத்த அவனும்
காவிரி புனல் கொணர்ந்த அவனும் புவனியின்
மேல் அனைத்து உயிரும் வீவது இலை ஆக நமன் மேல்
வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும்

மேல்

#193
புலி என கொடியில் இந்திரனை வைத்த அவனும் புணரி ஒன்றினிடை ஒன்று புகவிட்ட அவனும்
வலியினில் குருதி உண்க என அளித்த அவனும் வாதராசனை வலிந்து பணிகொண்ட அவனும்

மேல்

#194
தூங்கு மூன்று எயில் எறிந்த அவனும் திரள் மணி சுடர் விமானம்-அது வான் மிசை உயர்த்த அவனும்
தாங்கள் பாரதம் முடிப்பளவும் நின்று தருமன் தன் கடற்படை தனக்கு உதவி செய்த அவனும்

மேல்

#195
தளவு அழிக்கும் நகை வேல் விழி பிலத்தின் வழியே தனி நடந்து உரகர்-தம் கண்மணி கொண்ட அவனும்
களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும்

மேல்

*கரிகால் வளவன்
#196
என்று மற்று அவர்கள் தங்கள் சரிதங்கள் பலவும் எழுதி மீள இதன் மேல் வழுதி சேரன் மடிய
தன் தனி களிறு அணைந்தருளி வீரமகள் தன் தன தடங்களொடு தன் புயம் அணைந்த பரிசும்

மேல்

#197
தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் தொடர வந்திலா முகரியை படத்து
எழுதுக என்று கண்டு இது மிகை கண் என்று இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும்

மேல்

#198
தத்து நீர் வரால் குருமி வென்றதும் தழுவு செந்தமிழ் பரிசில் வாணர் பொன்
பத்தொடு ஆறுநூறாயிரம் பெற பண்டு பட்டினப்பாலை கொண்டதும்

மேல்

#199
ஒருவர் முன் ஒர் நாள் தந்து பின் செலா உதியர் மன்னரே மதுரை மன்னர் என்று
இருவர்-தம்மையும் கிழிகள் சுற்றுவித்து எரிவிளக்கு வைத்து இகல் விளைத்ததும்

மேல்

*முதலாம் பராந்தகன்
#200
வேழம் ஒன்று உகைத்து ஆலி விண்ணின்-வாய் விசை அடங்கவும் அசைய வென்றதும்
ஈழமும் தமிழ் கூடலும் சிதைத்து இகல் கடந்தது ஓர் இசை பரந்ததும்

மேல்

*முதலாம் இராசராச சோழன்
#201
சதய நாள் விழா உதியர் மண்டலம் தன்னில் வைத்தவன் தனி ஒர் மாவின் மேல்
உதயபானு ஒத்து உதகை வென்ற கோன் ஒரு கை வாரணம் பல கவர்ந்ததும்

மேல்

*முதலாம் இராசேந்திர சோழன்
#202
களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில் காய் சினத்தொடே கலவு செம்பியன்
குளிறு தெண் திரை குரை கடாரமும் கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்

மேல்

*முதலாம் இராசாதிராசன்
#203
கம்பிலி சயத்தம்பம் நட்டதும் கடி அரண் கொள் கல்யாணர் கட்டு அற
கிம்புரி பணை கிரி உகைத்தவன் கிரிகள் எட்டினும் புலி பொறித்ததும்

மேல்

*இராசேந்திர சோழன்
#204
ஒரு களிற்றின் மேல் வரு களிற்றை ஒத்து உலகு உயக்கொள பொருது கொப்பையில்
பொரு களத்திலே முடி கவித்தவன் புவி கவிப்பது ஓர் குடை கவித்ததும்

மேல்

*இராச மகேந்திரன்
#205
பனுவலுக்கு முதலாய வேதம் நான்கில் பண்டு உரைத்த நெறி புதுக்கி பழையர் தங்கள்
மனுவினுக்கு மும்மடி நான்மடி ஆம் சோழன் மதி குடை கீழ் அறம் தளிர்ப்ப வளர்ந்த ஆறும்

மேல்

*முதற் குலோத்துங்கன் தோற்றம்
#206
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை
இந்த நில குல பாவை இவன்-பால் சேர என்ன தவம் செய்திருந்தாள் என்ன தோன்றி

மேல்

*வெற்றிச் சிறப்பு
#207
எவ்வளவும் திரிபுவனம் உளவாய் தோன்றும் எவ்வளவும் குல மறைகள் உளவாய் நிற்கும்
அவ்வளவும் திகிரி வரை அளவும் செங்கோல் ஆணை செல்ல அபயன் காத்து அளிக்கும் ஆறும்

மேல்

*கரிகாலன் எழுதி முடித்தான்
#208
இப்புறத்து இமய மால் வரையின் மார்பின் அகலத்து எழுதினான் எழுதுதற்கு அரிய வேதம் எழுதி
ஒப்புற தனது தொல் மரபும் அ மரபின் மேல் உரைசெய் பல் புகழும் ஒன்றும் ஒழியாத பரிசே

மேல்

*காளி வியத்தல்
#209
எழுதி மற்று உரைசெய்தவரவர்கள் செய் பிழை எலாம் எமர் பொறுக்க என இப்படி முடித்த இதனை
தொழுது கற்றனம் என தொழுது சொல்லும் அளவில் சோழ வம்சம் இது சொன்ன அறிவு என்ன அழகோ

மேல்

*காளி மகிழ்தல்
#210
வையகமாம் குல மடந்தை மன் அபயன்-தன்னுடைய மரபு கேட்டே
ஐயனை யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுது ஒத்து இருந்தது இல்லை

மேல்

*காளி புகழ்தல்
#211
உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை சய_துங்கன் மரபு கீர்த்தி
அலகை எலாம் காக்கின்ற அம்மை பூதலம் காப்பான் அவனே என்ன

மேல்

9. பேய் முறைப்பாடு

*பேய்களாகப் பிறந்து கெட்டோம்
#212
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும்
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம்

மேல்

*எங்களை யார் காப்பார்
#213
ஆர் காப்பார் எங்களை நீ அறிந்தருளி காப்பது அல்லால் அடைய பாழாம்
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும்

மேல்

*பிழைக்க மாட்டோம்
#214
ஓய்கின்றேம் ஓய்வுக்கும் இனி ஆற்றேம் ஒருநாளைக்கொருநாள் நாங்கள்
தேய்கின்றபடி தேய்ந்து மிடுக்கு அற்றேம் செற்றாலும் உய்யமாட்டேம்

மேல்

*ஆசை போதும்
#215
வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம்
சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய்

மேல்

*பசிக்கு ஒன்றும் இல்லேம்
#216
சாவத்தான் பெறுதுமோ சதுமுகன்-தான் கீழ் நாங்கள் மேனாள் செய்த
பாவத்தால் எம் வயிற்றில் பசியை வைத்தான் பாவியேம் பசிக்கு ஒன்று இல்லேம்

மேல்

*மூளி வாய் ஆனோம்
#217
பதடிகளாய் காற்று அடிப்ப நிலை நிலாமல் பறக்கின்றேம் பசிக்கு அலைந்து பாதி நாக்கும்
உதடுகளில் பாதியும் தின்று ஒறுவாய் ஆனேம் உனக்கு அடிமை அடியேமை ஓட பாராய்

மேல்

*நெற்றாகி யுள்ளோம்
#218
அகளங்கன் நமக்கு இரங்கான் அரசர் இடும் திறைக்கு அருள்வான் அவன்-தன் யானை
நிகளம் பூண்டன அடியேம் நெடும் பசியால் அற உலர்ந்து நெற்றாய் அற்றேம்

மேல்

*நற்குறியால் பொறுத்துள்ளோம்
#219
மூக்கு அருகே வழு நாறி முடை நாறி உதடுகளும் துடிப்ப வாயை
ஈ கதுவும் குறியால் உய்ந்து இருக்கின்றேம் அன்றாகில் இன்றே சாதும்

மேல்

*முதுபேய் வருகை
#220
என்று பல கூளிகள் இரைத்து உரைசெய் போதத்து
அன்று இமய வெற்பினிடை நின்ற வரும் அ பேய்

மேல்

*முதுபேய் வணங்கிக் கூறல்
#221
கைதொழுது இறைஞ்சி அடியேன் வட கலிங்கத்து
எய்திய இடத்து உள நிமித்தம் இவை கேண்மோ

மேல்

*தீய சகுனங்கள்
#222
மத கரி மருப்பு இற மதம் புலருமாலோ மட பிடி மருப்பு எழ மதம் பொழியுமாலோ
கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ

மேல்

#223
வார் முரசு இருந்து வறிதே அதிருமாலோ வந்து இரவில் இந்திரவில் வானில் இடுமாலோ
ஊர் மனையில் ஊமன் எழ ஓரி அழுமாலோ ஓம எரி ஈம எரி போல் கமழுமாலோ

மேல்

#224
பூ விரியும் மாலைகள் புலால் கமழுமாலோ பொன் செய் மணி மாலை ஒளி போய் ஒழியுமாலோ
ஓவியம் எலாம் உடல் வியர்ப்ப வருமாலோ ஊறு புனல் செம் குருதி நாற வருமாலோ

மேல்

*விளைவு என்ன ஆகும்
#225
எனா உரை முடித்ததனை என்-கொல் விளைவு என்றே
வினா உரை-தனக்கு எதிர் விளம்பினள் அணங்கே

மேல்

*இரு குறிகள் நல்லன
#226
உங்கள் குறியும் வட கலிங்கத்து உள்ள குறியும் உமக்கு அழகே
நங்கள் கணித பேய் கூறும் நனவும் கனவும் சொல்லுவாம்

மேல்

*பரணிப் போர் உண்டு
#227
நிருபர் அணி வென்ற அகளங்கன் மத யானை நிகளங்களொடு நிற்பன அதற்கு
ஒரு பரணி உண்டு என உரைத்தன உரைப்படி உமக்கு இது கிடைக்கும் எனவே

மேல்

*களிப்பால் நடித்தன
#228
தடித்தனம் என தலை தடித்தனம் என பல தனி பனை குனிப்ப எனவே
நடித்தன நடிப்ப வலி அற்றன கொடிற்றையும் நனைத்தன உதட்டினுடனே

மேல்

*பசியை மறந்தன
#229
விலக்குக விலக்குக விளைத்தன என களி விளைத்தன இளைத்தன விலா
அலக்கு உக அலக்கு உக அடிக்கடி சிரித்தன அயர்த்தன பசித்த பசியே

மேல்

*வயிறு நிரம்பப் போதுமா
#230
ஆடி இரைத்து எழு கணங்கள் அணங்கே இ கலிங்க கூழ்
கூடி இரைத்து உண்டுழி எம் கூடு ஆர போதுமோ

மேல்

*ஒட்டிக்கு இரட்டி
#231
போதும் போதாது எனவே புடை படலம் இடவேண்டா
ஓதம் சூழ் இலங்கை போர்க்கு ஒட்டிரட்டி கலிங்க போர்

மேல்

10. அவதாரம்

*திருமாலே தோன்றினான்
#232
அன்று இலங்கை பொருது அழித்த அவனே அ பாரத போர் முடித்து பின்னை
வென்று இலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான் விளம்ப கேள்-மின்

மேல்

#233
தேவர் எலாம் குறை இரப்ப தேவகி-தன் திரு வயிற்றில் வசுதேவற்கு
மூவுலகும் தொழ நெடு மால் முன் ஒரு நாள் அவதாரம் செய்த பின்னை

மேல்

*கண்ணனே குலோத்துங்கனானான்
#234
இருள் முழுதும் அகற்றும் விதுகுலத்தோன் தேவி இகல் விளங்கு தபன குலத்து இராசராசன்
அருள் திருவின் திரு வயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தான் அவனே மீள

மேல்

*துந்துமி முழங்கிற்று
#235
வந்தருளி அவதாரம் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி முழங்கி எழுந்தது ஆங்கே

மேல்

*மலர்க்கையால் எடுத்தாள்
#236
அலர் மழை போல் மழை பொழிய அது கண்டு கங்கைகொண்டசோழன் தேவி
குலமகள்-தன் குலமகனை கோகனக மலர் கையால் எடுத்துக்கொண்டே

மேல்

*பாட்டியார் கருத்து
#237
அவனிபர்க்கு புரந்தரனாம் அடையாளம் அவயவத்தின் அடைவே நோக்கி
இவன் எமக்கு மகன் ஆகி இரவி குலம் பாரிக்க தகுவன் என்றே

மேல்

*இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்
#238
திங்களின் இளம் குழவி செம்மல் இவன் என்றும் செய்ய பரிதி குழவி ஐயன் இவன் என்றும்
தங்களின் மகிழ்ந்து இரு குலத்து அரசர்-தாமும் தனித்தனி உவப்பது ஒர் தவப்பயனும் ஒத்தே

மேல்

*நடை கற்றான்
#239
சின புலி வளர்ப்பது ஒர் சிறு புலியும் ஒத்தே திசைக்களிறு அணைப்பது ஒர் தனி களிறும் ஒத்தே
அனைத்து அறமும் ஒக்க அடி வைக்க அடி வைத்தே அறத்தொடு மற துறை நடக்க நடை கற்றே

மேல்

*ஐம்படைத் தாலி அணிந்தனன்
#240
பண்டு வசுதேவன் மகன் ஆகி நில மாதின் படர் களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்த
தண்டு தனு வாள் பணிலம் நேமி எனும் நாம தன் படைகள் ஆன திரு ஐம்படை தரித்தே

மேல்

*மழலை மொழிந்தான்
#241
தாயர் தரு பால் முலை சுரக்க வரு நாளே தானும் உலகத்தவர்-தமக்கு அருள் சுரந்தே
தூய மனுவும் சுருதியும் பொருள் விளங்கி சொற்கள் தெரிய தனது சொற்கள் தெரிவித்தே

மேல்

*பூணூல் அணிந்தான்
#242
திரு மார்பின் மலர்மடந்தை திரு கழுத்தின் மங்கலநாண் என்ன முந்நூல்
பெரு மார்பில் வந்து ஒளிர பிறப்பு இரண்டாவது பிறந்து சிறந்த பின்னர்

மேல்

*மறை கற்றான்
#243
போதம் கொள் மாண் உருவாய் புவி இரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்-பால் கேட்டருளி மீண்டும் கற்றே

மேல்

*வீர வாள் ஏந்தினான்
#244
நிறை வாழ்வை பெறல் நமக்கும் அணித்து என்று நில பாவை களிப்ப விந்தத்து
உறைவாளை புயத்து இருத்தி உடைவாளை திரு அரையில் ஒளிர வைத்தே

மேல்

*யானையேற்றம் கற்றான்
#245
ஈர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே இந்திரன் எதிர்ந்தவரை வென்று வருமே யான்
ஓர் இரு மருப்புடைய வாரணம் உகைத்தே ஒன்னலரை வெல்வன் என அன்னது பயின்றே

மேல்

*குதிரையேற்றம் பயின்றான்
#246
இற்றைவரையும் செல அருக்கன் ஒரு நாள் போல் ஏழ் பரி உகைத்து இருள் அகற்றி வருமே யான்
ஒற்றை வயமான் நடவி இ தரை வளாகத்து உற்ற இருள் தீர்ப்பன் என மற்றது பயின்றே

மேல்

*படைக்கலம் பயின்றான்
#247
சக்கரம் முதல் படை ஒர் ஐந்தும் முதல் நாளே தன்னுடைய ஆன அதனால் அவை நமக்கு
திக்குவிசயத்தின் வரும் என்று அவை பயிற்றி செம் கை மலர் நொந்தில சுமந்தில தனக்கே

மேல்

*பல்கலை தேர்ந்தான்
#248
உரைசெய் பல கல்விகளின் உரிமை பல சொல்லுவது என் உவமை உரைசெய்யின் உலகத்து
அரசர் உளர் அல்லர் என அவை புகழ மல்கு கலை அவையவைகள் வல்ல பிறகே

மேல்

*இளவரசன் ஆனான்
#249
இசையுடன் எடுத்த கொடி அபயன் அவனிக்கு இவனை இளவரசில் வைத்த பிறகே
திசை அரசருக்கு உரிய திருவினை முகப்பது ஒரு திருவுளம் மடுத்தருளியே

மேல்

*போர்மேல் சென்றான்
#250
வளர்வது ஒர் பதத்தினிடை மத கரி முகத்தினிடை வளை உகிர் மடுத்து விளையாடு
இள அரி என பகைஞர் எதிர்முனைகளை கிழிய எறி படை பிடித்தருளியே

மேல்

*வடவரசரை வென்றான்
#251
குட திசை புக கடவு குரகத ரதத்து இரவி குறுகலும் எறிக்கும் இருள் போல்
வட திசை முகத்து அரசர் வரு கதம் உக தனது குரகதம் உகைத்தருளியே

மேல்

*வயிராகரத்தை எறித்தான்
#252
புரம் எரி மடுத்த பொழுது அது இது என திகிரி புகை எரி குவிப்ப வயிரா
கரம் எரி மடுத்து அரசர் கரம் எதிர் குவிப்பது ஒரு கடவரை-தனை கடவியே

மேல்

*களம் கொண்டான்
#253
குளம் உதிரம் மெத்தியது ஒர் குரை கடல் கடுப்ப எதிர் குறுகலர்கள் விட்ட குதிரை
தளம் உதிர வெட்டி ஒரு செரு முதிர ஒட்டினர்கள் தலை மலை குவித்தருளியே

மேல்

*சக்கரக்கோட்டம் அழித்தான்
#254
மனு கோட்டம் அழித்த பிரான் வளவர் பிரான் திரு புருவ
தனு கோட்ட நமன் கோட்டம் பட்டது சகர கோட்டம்

மேல்

*சீதனம் பெற்றான்
#255
சரி களம்-தொறும் தங்கள் சயமகள்-தன்னை மன் அபயன் கைப்பிடித்தலும்
பரிகளும் களிறும் தனராகியும் பாரிபோகம் கொடுத்தனர் பார்த்திபர்

மேல்

*கைவேல் சிவந்தது
#256
பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன
விருதராசபயங்கரன் செம் கையில் வேல் சிவந்தது கீர்த்தி வெளுத்ததே

மேல்

*வீரராசேந்திரன் இறந்தான்
#257
மா உகைத்து ஒரு தனி அபயன் இப்படி வட திசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக்கு அரசனாய் விசும்பின் மேற்செல தென் திசைக்கு புகும் தன்மை செப்புவாம்

மேல்

*சோழ நாட்டில் நிகழ்ந்தவை
#258
மறையவர் வேள்வி குன்றி மனு நெறி அனைத்தும் மாறி
துறைகள் ஓர் ஆறும் மாறி சுருதியும் முழக்கம் ஓய்ந்தே

மேல்

#259
சாதிகள் ஒன்றோடொன்று தலை தடுமாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லாது ஒழுக்கமும் மறந்த போயே

மேல்

#260
ஒருவரை ஒருவர் கைம்மிக்கு உம்பர்-தம் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி அரண்களும் அழிய ஆங்கே

மேல்

*சோழநாடு அடைந்தான்
#261
கலி இருள் பரந்த காலை கலி இருள் கரக்க தோன்றும்
ஒலி கடல் அருக்கன் என்ன உலகு உய்ய வந்து தோன்றி

மேல்

*நீதியை நிலைநிறுத்தினான்
#262
காப்பு எலாம் உடைய தானே படைப்பதும் கடனா கொண்டு
கோப்பு எலாம் குலைந்தோர்-தம்மை குறியிலே நிறுத்தி வைத்தே

மேல்

*திரு முழுக்கு
#263
விரி புனல் வேலை நான்கும் வேதங்கள் நான்கும் ஆர்ப்ப
திரிபுவனங்கள் வாழ்த்த திரு அபிடேகம் செய்தே

மேல்

*முடி புனைதல்
#264
அறை கழல் அரசர் அப்பொழுது அடி மிசை அறுகு எடுத்திட
மறையவர் முடியெடுத்தனர் மனு நெறி தலையெடுக்கவே

மேல்

*அறம் முளைத்தன
#265
நிரை மணி பல குயிற்றிய நெடு முடி மிசை விதிப்படி
சொரி புனலிடை முளைத்தன துறைகளின் அறம் அனைத்துமே

மேல்

*புலிக்கொடி எடுத்தான்
#266
பொது அற உலகு கைக்கொடு புலி வளர் கொடி எடுத்தலும்
அது முதல் கொடி எடுத்தன அமரர்-தம் விழவு எடுக்கவே

மேல்

*நிலவு எறித்தது இருள் ஒளித்தது
#267
குவி கை கொடு அரசர் சுற்றிய குரை கழல் அபயன் முத்து அணி
கவிகையின் நிலவு எறித்தது கலி எனும் இருள் ஒளித்ததே

மேல்

*குடை நிழலின் செயல்
#268
அரன் உறையும்படி மலைகள் அடைய விளங்கின அனையோன்
ஒரு தனி வெண்குடை உலகில் ஒளி கொள் நலம் தரு நிழலில்

மேல்

*புகழ் மேம்பாடு
#269
அரி துயிலும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
ஒரு கரு வெம் கலி கழுவி உலவு பெரும் புகழ் நிழலில்

மேல்

#270
நிழலில் அடைந்தன திசைகள் நெறியில் அடைந்தன மறைகள்
கழலில் அடைந்தனர் உதியர் கடலில் அடைந்தனர் செழியர்

மேல்

#271
கருணையொடும் தனது உபய கரம் உதவும் பொருள் மழையின்
அரணிய மந்திர அனல்கள் அவை உதவும் பெரு மழையே

மேல்

#272
பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும்

மேல்

#273
விரித்த வாள் உகிர் விழி தழல் புலியை மீது வைக்க இமயத்தினை
திரித்த கோலில் வளைவு உண்டு நீதி புரி செய்ய கோலில் வளைவு இல்லையே

மேல்

#274
கதங்களில் பொருது இறைஞ்சிடா அரசர் கால்களில் தளையும் நூல்களின்
பதங்களின் தளையும் அன்றி வேறு ஒரு பதங்களில் தளைகள் இல்லையே

மேல்

#275
மென் கலாப மடவார்கள் சீறடி மிசை சிலம்பு ஒலி விளைப்பது ஓர்
இன் கலாம் விளைவது அன்றி எங்கும் ஓர் இகல் கலாம் விளைவது இல்லையே

மேல்

*பொழுது போக்கு
#276
வரு செரு ஒன்று இன்மையினால் மற்போரும் சொற்புலவோர் வாதப்போரும்
இரு சிறை வாரணப்போரும் இகல் மத வாரணப்போரும் இனைய கண்டே

மேல்

#277
கலையினொடும் கலைவாணர் கவியினொடும் இசையினொடும் காதல் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும் மறையினொடும் பொழுது போக்கி

மேல்

*பரிவேட்டையாட நினைத்தான்
#278
காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி
பாலாற்றங்கரை மருங்கு பரிவேட்டை ஆடுதற்கு பயணம் என்றே

மேல்

*படை திரண்டது
#279
முரசு அறைக என்று அருளுதலும் முழுது உலகும் ஒரு நகருள் புகுந்தது ஒப்ப
திரை செய் கடல் ஒலி அடங்க திசை நான்கின் படை நான்கும் திரண்ட ஆங்கே

மேல்

*வேட்டைக்குப் புறப்பட்டான்
#280
அழகின் மேல் அழகு பெற அணி அனைத்தும் அணிந்தருளி கணித நூலில்
பழகினார் தெரிந்து உரைத்த பழுது அறு நாள் பழுது அற்ற பொழுதத்து ஆங்கே

மேல்

*தானம் அளித்தான்
#281
அனக தானம் மறைவாணர் பலர் நின்று பெறவே அபய தானம் அபயம் புகுதும் மன்னர் பெறவே
கனக தானம் முறை நின்று கவிவாணர் பெறவே கரட தானம் மத வாரணமும் அன்று பெறவே

மேல்

*யானைமேல் ஏறினான்
#282
மற்ற வெம் கட களிற்றின் உதய கிரியின் மேல் மதி கவித்திட உதித்திடும் அருக்கன் எனவே
கொற்ற வெண்குடை கவிப்ப மிசை கொண்டு கவரி குல மதி புடை கவித்த நிலவு ஒத்துவரவே

மேல்

*பல்லியம் முழங்கின
#283
ஒரு வலம்புரி தழங்கு ஒலி முழங்கி எழவே உடன் முழங்கு பணிலம் பல முழங்கி எழவே
பருவம் வந்து பல கொண்டல்கள் முழங்கி எழவே பலவிதங்களொடு பல்லியம் முழங்கி எழவே

மேல்

*வேறு பல ஒலிகள் எழுந்தன
#284
மன்னர் சீர் சயம் மிகுத்து இடைவிடாத ஒலியும் மறைவலாளர் மறை நாள்-வயின் வழாத ஒலியும்
இன்ன மா கடல் முழங்கி எழுகின்ற ஒலி என்று இம்பர் உம்பர் அறியாத பரிசு எங்கும் மிகவே

மேல்

*ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்
#285
வாழி சோழ குல சேகரன் வகுத்த இசையின் மதுர வாரி எனலாகும் இசைமாது அரிது எனா
ஏழு பார் உலகொடு ஏழிசை வளர்க்க உரியாள் யானை மீது பிரியாது உடன் இருந்து வரவே

மேல்

*தியாகவல்லியும் சென்றாள்
#286
பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர
சென்னி ஆணையுடன் ஆணையை நடத்தும் உரிமை தியாகவல்லி நிறை செல்வி உடன் மல்கி வரவே

மேல்

*மகளிரும் மன்னரும் சூழ வருதல்
#287
பிடியின் மேல் வரு பிடி குலம் அநேகம் எனவே பெய் வளை கை மட மாதர் பிடி மீதின் வரவே
முடியின் மேல் முடி நிரைத்து வருகின்றது எனவே முறை செய் மன்னவர்கள் பொன் குடை கவித்து வரவே

மேல்

*அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்
#288
யானை மீது வரும் யானையும் அநேகம் எனவே அடு களிற்றின் மிசை கொண்டு அரச அநேகம் வரவே
சேனை மீதும் ஒரு சேனை வருகின்றது எனவே தெளி படைக்கலன் நிலா ஒளி படைத்து வரவே

மேல்

*முரசொலியும் கொடிநிரலும்
#289
முகிலின் மேல் முகில் முழங்கி வருகின்றது எனவே மூரி யானைகளின் மேல் முரசு அதிர்ந்து வரவே
துகிலின் மேல் வரு துகில் குலம் ஒக்கும் எனவே தோகை நீள் கொடிகள் மேல் முகில் தொடங்கி வரவே

மேல்

*புழுதி எழுந்தது
#290
தேரின் மீது வரு தேர்களும் அநேகம் எனவே செம்பொன் மேகலை நிதம்ப நிரை தேரின் வரவே
பாரின் மீதும் ஒரு பார் உளது போலும் எனவே படல தூளியும் எழுந்து இடையின் மூடி வரவே

மேல்

*படை செல்லும் காட்சி
#291
யானை மேல் இளம் பிடியின் மேல் நிரைத்து இடையறாது போம் எறி கடற்கு இணை
சேனை மா கடற்கு அபயன் இம்முறை சேது பந்தனம் செய்தது ஒக்கவே

மேல்

*பல்லக்கும் முத்துக் குடையும்
#292
நீல மா மணி சிவிகை வெள்ளமும் நித்தில குல கவிகை வெள்ளமும்
காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே

மேல்

*புலிக்கொடிச் சிறப்பு
#293
கெண்டை மாசுணம் உவணம் வாரணம் கேழல் ஆளி மா மேழி கோழி வில்
கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே குமுறு வெம் புலிக்கொடி குலாவவே

மேல்

*மகளிர் கூட்டம்
#294
தொடைகள் கந்தரம் புடை கொள் கொங்கை கண் சோதி வாள் முகம் கோதை ஓதி மென்
நடைகள் மென் சொல் என்று அடைய ஒப்பிலா நகை மணி கொடி தொகை பரக்கவே

மேல்

*மகளிர் தோற்றம்
#295
எங்கும் உள மென் கதலி எங்கும் உள தண் கமுகம் எங்கும் உள பொங்கும் இளநீர்
எங்கும் உள பைம் குமிழ்கள் எங்கும் உள செங்குமுதம் எங்கும் உள செங்கயல்களே

மேல்

#296
ஆறு அலை தரங்கம் உள அன்ன நடை தாமும் உள ஆலை கமழ் பாகும் உளவாய்
வேறும் ஒரு பொன்னி வள நாடு சய_துங்கன் முன் விதித்ததுவும் ஒக்கும் எனவே

மேல்

*மலைக் காட்சி
#297
வேழம் நிரை என்ற மலை எங்கும் மிடைகின்ற அயில் வென்றி அபயன்-தன் அருளால்
வாழ அபயம் புகுது சேரனொடு கூட மலைநாடு அடைய வந்தது எனவே

மேல்

#298
அக்கிரி குலங்கள் விடும் அங்குலியின் நுண் திவலை அ செழியர் அஞ்சி விடும் அ
திக்கில் உள நித்திலம் முகந்துகொடு வீசி ஒரு தென்றல் வருகின்றது எனவே

மேல்

*தில்லைக் கூத்தனை வணங்கினான்
#299
தென் திசையில்-நின்று வட திக்கின் முகம் வைத்தருளி முக்கண் உடை வெள்ளி மலையோன்
மன்றில் நடமாடி அருள்கொண்டு விடைகொண்டு அதிகை மா நகருள் விட்டருளியே

மேல்

*காஞ்சியை அடைந்தான்
#300
விட்ட அதிகை பதியில்-நின்று பயணம் பயணம் விட்டு விளையாடி அபயன்
வட்ட மதி ஒத்த குடை மன்னர் தொழ நண்ணினன் வளம் கெழுவு கச்சி நகரே

மேல்

*கலிங்கப்பேய் ஓடிவந்தது
#301
என்னும் இத நல் மொழி எடுத்து இறைவி சொல்லுவதன் முன்னம் இகல் கண்டது ஒரு பேய்
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே

மேல்

*கலிங்கப் பேயின் மொழிகள்
#302
கலிங்கர் குருதி குருதி கலிங்கம் அடைய அடைய
மெலிந்த உடல்கள் தடி-மின் மெலிந்த உடல்கள் தடி-மின்

மேல்

#303
உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக
கணங்கள் எழுக எழுக கணங்கள் எழுக எழுக

மேல்

#304
என் செய பாவிகாள் இங்கு இருப்பது அங்கு இருப்ப முன்னே
வன் சிறை கழுகும் பாறும் வயிறுகள் பீறி போன

மேல்

#305
வயிறுகள் என்னில் போதா வாய்களோ போதா பண்டை
எயிறுகள் என்னில் போதா என்னினும் ஈண்ட போதும்

மேல்

#306
சிர மலை விழுங்க செந்நீர் திரை கடல் பருகல் ஆக
பிரமனை வேண்டி பின்னும் பெரும் பசி பெறவும் வேண்டும்

மேல்

*பேய்களின் பேரின்பம்
#307
என்ற ஓசை தம் செவிக்கு இசைத்தலும் தசை பிணம்
தின்ற போல் பருத்து மெய் சிரித்து மேல் விழுந்துமே

மேல்

#308
ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்தம் உண்ணுமே
சாகை சொன்ன பேய்களை தகர்க்க பற்கள் என்னுமே

மேல்

#309
பிள்ளை வீழ வீழவும் பெரும் துணங்கை கொட்டுமே
வள்ளை பாடி ஆடி ஓடி வா எனா அழைக்குமே

மேல்

#310
எனா உரைத்த தேவி வாழி வாழி என்று வாழ்த்தியே
கனா உரைத்த பேயினை கழுத்தினில் கொடு ஆடுமே

மேல்

*காளி போர்நிலை கேட்டல்
#311
ஆடி வரு பேய்களின் அலந்தலை தவிர்த்து அடு பறந்தலை அறிந்து அதனின்-நின்று
ஓடி வரு பேயை இகல் உள்ளபடி சொல்க என உரைத்தனள் உரைத்தருளவே

மேல்

11.காளிக்குக் கூளி கூறியது

*நாவாயிரம் நாளாயிரம்
#312
மா ஆயிரமும் பட கலிங்கர் மடிந்த கள போர் உரைப்போர்க்கு
நா ஆயிரமும் கேட்போர்க்கு நாள் ஆயிரமும் வேண்டுமால்

மேல்

*சிறியேன் விண்ணப்பம்
#313
ஒருவர்க்கு ஒரு வாய் கொண்டு உரைக்க ஒண்ணாதேனும் உண்டாகும்
செருவை சிறியேன் விண்ணப்பம் செய்ய சிறிது கேட்டருளே

மேல்

*காஞ்சனம் பொழிகாஞ்சி
#314
பார் எலாம் உடையான் அபயன் கொடை பங்கய கரம் ஒப்பு என பண்டு ஒர் நாள்
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே

மேல்

*சித்திர மண்டபத்தில்
#315
அம் பொன் மேரு அது-கொல் இது-கொல் என்று ஆயிரம் கதிர் வெய்யவன் ஐயுறும்
செம்பொன் மாளிகை தென்குட திக்கினில் செய்த சித்திர மண்டபம் தன்னிலே

மேல்

*நித்திலப் பந்தரின்கீழ்
#316
மொய்த்து இலங்கிய தாரகை வானின் நீள் முகட்டு எழுந்த முழுமதிக்கு ஒப்பு என
நெய்த்து இலங்கிய நித்தில பந்தரின் நின்று வெண்குடை ஒன்று நிழற்றவே

மேல்

*குடையும் சாமரையும்
#317
மேல் கவித்த மதி குடையின் புடை வீசுகின்ற வெண் சாமரை தன் திரு
பாற்கடல் திரை ஓர் இரண்டு ஆங்கு இரு பாலும் வந்து பணி செய்வ போலுமே

மேல்

*சிங்க ஏறு
#318
அம் கண் ஞாலம் அனைத்தும் புயத்தில் வைத்து ஆடக கிரியில் புலி வைத்தவன்
சிங்காசனத்து ஏறி இருப்பது ஓர் சிங்க ஏறு என செவ்வி சிறக்கவே

மேல்

*இருந்த மாட்சி
#319
பணி பணத்து உறை பார்க்கு ஒரு நாயகன் பல் கலை துறை நாவில் இருந்தவன்
மணி பணி புயத்தே சிங்கவாகனி வந்து செம் திருமாதொடு இருக்கவே

மேல்

*தேவியர் சேவித்திருந்தனர்
#320
தரு மடங்க முகந்து தனம் பொழி தன் புயம் பிரியா சயப்பாவையும்
திருமடந்தையும் போல் பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்து இருக்கவே

மேல்

*ஏவற் பெண்டிர்
#321
நாடகாதி நிருத்தம் அனைத்தினும் நால் வகை பெரும் பண்ணினும் எண்ணிய
ஆடல் பாடல் அரம்பையர் ஒக்கும் அ அணுக்கிமாரும் அநேகர் இருக்கவே

மேல்

*புகழ் பாடுவோம்
#322
சூதர் மாகதர் ஆகிய மாந்தரும் துய்ய மங்கல பாடகர்-தாமும் நின்
பாதம் ஆதரர் ஆயவர்கட்கு எலாம் பைம்பொன் மௌலி என புகழ் பாடவே

மேல்

*இசை வல்லார் போற்றினர்
#323
வீணை யாழ் குழல் தண்ணுமை வல்லவர் வேறு வேறு இவை நூறு விதம் பட
காணலாம் வகை கண்டனம் நீ இனி காண்டல் வேண்டும் என கழல் போற்றவே

மேல்

*கல்வியில் பிழை
#324
தாளமும் செலவும் பிழையா வகை தான் வகுத்தன தன் எதிர் பாடியே
காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே

மேல்

*மன்னவர் பணிமாறினர்
#325
வெம் களிற்றில் இழிந்த பின் வந்து அடி வீழ்ந்த மன்னவர் வெந்நிடும் முன் இடு
தங்கள் பொன் குடை சாமரம் என்று இவை தாங்கள் தம் கரத்தால் பணி மாறவே

மேல்

*மன்னர் மனைவியர் சேடியர்
#326
தென்னர் ஆதி நராதிபர் ஆனவர் தேவிமார்கள் தன் சேடியர் ஆகவே
மன்னர் ஆதிபன் வானவர் ஆதிபன் வந்து இருந்தனன் என்ன இருக்கவே

மேல்

*அமைச்சர் முதலியோர்
#327
மண்டலீகரும் மாநில வேந்தரும் வந்து உணங்கு கடைத்தலை வண்டை மன்
தொண்டைமான் முதல் மந்திர பாரகர் சூழ்ந்து தன் கழல் சூடி இருக்கவே

மேல்

*கப்பம் செலுத்தச் சென்றனர்
#328
முறையிட திருமந்திர ஓலையாள் முன் வணங்கி முழுவதும் வேந்தர்-தம்
திறையிட புறம் நின்றனர் என்றலும் செய்கை நோக்கி வந்து எய்தி இருக்கவே

மேல்

*கூடியிருந்த அரசர்கள்
#329
தென்னவர் வில்லவர் கூபகர் சாவகர் சேதிபர் யாதவரே
கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே

மேல்

#330
கங்கர் கராளர் கவிந்தர் துமிந்தர் கடம்பர் துளும்பர்களே
வங்கர் இலாடர் மராடர் விராடர் மயிந்தர் சயிந்தர்களே

மேல்

#331
சிங்களர் வங்களர் சேகுணர் சேவணர் செய்யவர் ஐயணரே
கொங்கணர் கொங்கர் குலிங்கர் சவுந்தியர் குச்சரர் கச்சியரே

மேல்

#332
வத்தவர் மத்திரர் மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே
குத்தர் குணத்தர் வடக்கர் துருக்கர் குருக்கர் வியத்தர்களே

மேல்

#333
எ நகரங்களும் நாடும் எமக்கு அருள்செய்தனை எம்மை இட
சொன்ன தனங்கள் கொணர்ந்தனம் என்று அடி சூடு கரங்களொடே

மேல்

*திறைப் பொருள்கள்
#334
ஆரம் இவை இவை பொன் கலம் ஆனை இவை இவை ஒட்டகம்
ஆடல் அயம் இவை மற்று இவை ஆதி முடியொடு பெட்டகம்
ஈரம் உடையன நித்திலம் ஏறு நவமணி கட்டிய
ஏகவடம் இவை மற்று இவை யாதும் விலை இல் பதக்கமே

மேல்

#335
இவையும் இவையும் மணி திரள் இனைய இவை கனக குவை
இருளும் வெயிலும் எறித்திட இலகும் மணி மகர குழை
உவையும் உவையும் இலக்கணம் உடைய பிடி இவை உள் பகடு
உயர் செய் கொடி இவை மற்று இவை உரிமை அரிவையர் பட்டமே

மேல்

#336
ஏறி அருள அடுக்கும் இ நூறு களிறும் இவற்று எதிர்
ஏனை அரசர் ஒருத்தர் ஓர் ஆனை இடுவரெனில் புவி
மாறி அருள அவர்க்கு இடை யாமும் இசைவம் என பல
மான அரசர் தனித்தனி வாழ்வு கருதி உரைப்பரே

மேல்

*உளர் கொல்
#337
அரசர் அஞ்சல் என அடி இரண்டும் அவர் முடியின் வைத்தருளி அரசர் மற்று
உரைசெயும் திறைகள் ஒழிய நின்றவரும் உளர்-கொல் என்று அருளு பொழுதிலே

மேல்

*திருமந்திர ஓலையின் மறுமொழி
#338
கடகர் தம் திறை கொடு அடைய வந்து அரசர் கழல் வணங்கினர்கள் இவருடன்
வட கலிங்கர் பதி அவன் இரண்டு விசை வருகிலன் திறை கொடு எனலுமே

மேல்

*முறுவல் கொண்டான்
#339
உறுவது என்-கொல் என நிலைகுலைந்து அரசர் உயிர் நடுங்க ஒளிர் பவள வாய்
முறுவல் கொண்ட பொருள் அறிகிலம் சிறிதும் முனிவு கொண்டது இலை வதனமே

மேல்

*குலோத்துங்கனின் கட்டளை
#340
எளியன் என்றிடினும் வலிய குன்று அரணம் இடிய நம் படைஞர் கடிது சென்று
அளி அலம்பு மத மலைகள் கொண்டு அணை-மின் அவனையும் கொணர்-மின் எனலுமே

மேல்

*தொண்டைமான் எழுந்தான்
#341
இறை மொழிந்த அளவில் எழு கலிங்கம் அவை எறிவன் என்று கழல் தொழுதனன்
மறை மொழிந்தபடி மரபின் வந்த குல திலகன் வண்டை நகர் அரசனே

மேல்

*விடை அளித்தான்
#342
அடைய அ திசை பகை துகைப்பன் என்று ஆசை கொண்டு அடல் தொண்டைமான்
விடை எனக்கு என புலி உயர்த்தவன் விடைகொடுக்க அ பொழுதிலே

மேல்

*படைகள் திரண்டன
#343
கடல் கலக்கல்-கொல் மலை இடித்தல்-கொல் கடு விட பொறி பண பணி
பிடர் ஒடித்தல்-கொல் படை நினைப்பு என பிரளயத்தினில் திரளவே

மேல்

*திசை யானைகள் செவிடுபட்டன
#344
வளை கலிப்பவும் முரசு ஒலிப்பவும் மரம் இரட்டவும் வயிர மா
தொளை இசைப்பவும் திசையிப செவி தொளை அடைத்தலை தொடரவே

மேல்

*இருள் பரந்தது
#345
குடை நிரைத்தலின் தழை நெருக்கலின் கொடி விரித்தலின் குளிர் சதுக்கம் ஒத்து
இடை நிரைத்தலின் பகல் கரப்ப உய்த்து இருநில பரப்பு இருள் பரக்கவே

மேல்

*ஒளி பிறந்தது
#346
அலகு இல் கண் தழல் கனல் விரித்தலால் அரிய பொன் பணி கலன் எறித்தலால்
இலகு கைப்படை கனல் விரித்தலால் இருள் கரக்கவே ஒளி பரக்கவே

மேல்

*கண்டவர் வியப்பு
#347
அகில வெற்பும் இன்று ஆனை ஆனவோ அடைய மாருதம் புரவி ஆனவோ
முகில் அனைத்தும் அ தேர்கள் ஆனவோ மூரி வேலை போர்வீரர் ஆனவோ

மேல்

*படையின் பரப்பு
#348
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ படை பெருத்தலின் பார் சிறுத்ததோ
நேர் செறுத்தவர்க்கு அரிது நிற்பிடம் நெடு விசும்பு அலால் இடமும் இல்லையே

மேல்

*படை பொறுமை இழந்தது
#349
என எடுத்து உரைத்து அதிசயித்து நின்று இனைய மண்ணுளோர் அனைய விண்ணுளோர்
மன நடுக்குற பொறை மறத்தலால் மாதிரங்களில் சாதுரங்கமே

மேல்

*யானைகள் சென்றன
#350
கடல்களை சொரி மலை உள என இரு கட தடத்திடை பொழி மதம் உடையன
கனல் விளைப்பன முகில் உள என விழி கனல் சினத்தன கரியொடு பரிகளின்
உடல் பிளப்பன பிறை சில உள என உயர் மருப்பின உலகுகள் குலைதர
உரும் இடிப்பன வட அனல் உள என ஒலி முகில் கட கரிகளும் இடையவே

மேல்

*குதிரைகள் சென்றன
#351
முனைகள் ஒட்டினர் முடியினை இடறுவ முடியின் முத்தினை விளை புகழ் என நில
முதுகில் வித்துவ நிலமுறு துகள் அற முகில் மிதிப்பன முகில் விடு துளியொடு
கனை கடல் திரை நிரை என விரைவொடு கடல் இடத்தினை வலம் இடம் வருவன
கடலிடத்து இறும் இடி என அடி இடு கவனம் மிக்கன கதழ் பரி கடுகவே

மேல்

*தேர்கள் சென்றன
#352
இருநில திடர் உடைபடும் உருளன இரு புடை சிறகு உடையன முனை பெறின்
எதிர் பறப்பன விடு நுகமொடு கடிது இவுளி முற்படின் இது பரிபவம் எனும்
ஒரு நினைப்பினை உடையன வினையன உயர் செய் மொட்டொடு மலர் என நிறுவிய
ஒழிதர செரு உறு புனல் உமிழ்வன உலகு அளப்பன இரதமும் மருவியே

மேல்

*வீரர்கள் சென்றனர்
#353
அலகில் வெற்றியும் உரிமையும் இவை என அவயவத்தினில் எழுதிய அறிகுறி
அவை என பல வடு நிரை உடையவர் அடி புறக்கிடில் அமரர்-தம் உலகொடு இ
உலகு கைப்படுமெனினும் அது ஒழிபவர் உடல் நமக்கு ஒரு சுமை என முனிபவர்
உயிரை விற்று உறு புகழ் கொள உழல்பவர் ஒருவர் ஒப்பவர் படைஞர்கள் மிடையவே

மேல்

*வீரர் சிரிப்பொலி
#354
விழித்த விழி தனி விழித்த விருதர்கள் விடைத்து வெடுவெடு சிரித்த வாய்
தெழித்த பொழுது உடல் திமிர்க்க இமையவர் திசை-கண் மத கரி திகைக்கவே

மேல்

*குதிரைகளின் வாய்நுரை
#355
உகத்தின் முடிவினில் உகைத்த கனை கடல் உவட்டி என முகில் முகட்டின் மேல்
நகைத்த விடு பரி முக-கண் நுரை சுரநதி-கண் நுரை என மிதக்கவே

மேல்

*யானைகளின் பிளிறல் ஒலி
#356
கழப்பு இல் வெளியில் சுளி கதத்தில் இரு கவுள் கலித்த கடம் இடி பொறுத்த போர்க்கு
உழப்பி வரு முகில் முழக்கி அலை கடல் குளிக்கும் முகில்களும் இடக்கவே

மேல்

*தேர்ப்படைகளின் ஒலி
#357
கடுத்த விசை இருள் கொடுத்த உலகு ஒரு கணத்தில் வலம்வரு கணிப்பில் தேர்
எடுத்த கொடி திசையிபத்தின் மத மிசை இருக்கும் அளிகளை எழுப்பவே

மேல்

*எழுந்தது சேனை
#358
எழுந்தது சேனை எழலும் இரிந்தது பாரின் முதுகு
விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள்

மேல்

*அதிர்ந்தன திசைகள்
#359
அதிர்ந்தன நாலு திசைகள் அடங்கின ஏழு கடல்கள்
பிதிர்ந்தன மூரி மலைகள் பிறந்தது தூளி படலம்

மேல்

*புழுதியால் வறண்டன
#360
நிலம் தரு தூளி பருகி நிறைந்தது வானின் வயிறு
வலம்தரு மேக நிரைகள் வறந்தன நீர்கள் சுவறி

மேல்

*புழுதி தணிந்தது
#361
தயங்கு ஒளி ஓடை வரைகள் தரும் கடம் தாரை மழையின்
அயங்களின் வாயின் நுரையின் அடங்கின தூளி அடைய

மேல்

*இரவு தங்கிப் பகலில் சென்றன
#362
எழு தூளி அடங்க நடந்து உதயத்து ஏகும் திசை கண்டு அது மீள விழும்
பொழுது ஏகல் ஒழிந்து கடற்படை எப்பொழுதும் தவிராது வழிக்கொளவே

மேல்

*கருணாகரன் சென்றான்
#363
தண் ஆரின் மலர் திரள் தோள் அபயன் தான் ஏவிய சேனை தனக்கு அடைய
கண் ஆகிய சோழன் சக்கரம் ஆம் கருணாகரன் வாரண மேல் கொளவே

மேல்

*பல்லவ அரசன் சென்றான்
#364
தொண்டையர்க்கு அரசு முன்வரும் சுரவி துங்க வெள் விடை உயர்த்த கோன்
வண்டையர்க்கு அரசு பல்லவர்க்கு அரசு மால் களிற்றின் மிசை கொள்ளவே

மேல்

*அரையனும் சோழனும் சென்றனர்
#365
வாசி கொண்டு அரசர் வாரணம் கவர வாண கோவரையன் வாள் முக
தூசி கொண்டு முடி கொண்ட சோழன் ஒரு சூழி வேழம் மிசை கொள்ளவே

மேல்

*போர்மேற் செல்லல்
#366
மறித்து ஓடி எ அரசும் சரிய என்று
வரும் அனுக்கை பல்லவர் கோன் வண்டை வேந்தன்
எறித்து ஓடை இலங்கு நடை களிற்றின் மேல் கொண்டு
இரை வேட்ட பெரும் புலி போல் இகல் மேல் செல்ல

மேல்

*ஆறு பல கடந்தனர்
#367
பாலாறு குசைத்தலை பொன்முகரி பழவாறு படர்ந்து எழு கொல்லி எனும்
நால் ஆறும் அகன்று ஒரு பெண்ணை எனும் நதி ஆறு கடந்து நடந்து உடனே

மேல்

#368
வயல் ஆறு புகுந்து மணி புனல் வாய் மண்ணாறு வளம் கெழு குன்றி எனும்
பெயல் ஆறு பரந்து நிறைந்து வரும் பேராறும் இழிந்தது பிற்படவே

மேல்

#369
கோதாவரி நதி மேல் ஆறொடு குளிர் பம்பா நதியொடு சந்த பேர்
ஓதாவரு நதி ஒரு கோதமையுடன் ஒலி நீர் மலி துறை பிறகு ஆக

மேல்

*சூறையிடல்
#370
கடையில் புடைபெயர் கடல் ஒத்து அமரர் கலங்கும் பரிசு கலிங்கம் புக்கு
அடைய படர் எரி கொளுவி பதிகளை அழிய சூறை கொள் பொழுதத்தே

மேல்

*கலிங்கர் நடுக்கம்
#371
கங்கா நதி ஒரு புறம் ஆக படை கடல் போல் வந்தது கடல் வந்தால்
எங்கே புகலிடம் எங்கே இனி அரண் யாரே அதிபதி இங்கு என்றே

மேல்

#372
இடிகின்றன மதில் எரிகின்றன பதி எழுகின்றன புகை பொழில் எல்லாம்
மடிகின்றன குடி கெடுகின்றனம் இனி வளைகின்றன படை பகை என்றே

மேல்

*முறையீடு
#373
உலகுக்கு ஒருமுதல் அபயற்கு இடு திறை உரை தப்பியது எமது அரசே எம்
பல கற்பனைகளை நினைவுற்றிலை வரு படை மற்று அவன் விடு படை என்றே

மேல்

*கலிங்கர் நிலை
#374
உரையில் குழறியும் உடலில் பதறியும் ஒருவர்க்கொருவர் முன் முறையிட்டே
அரையில் துகில் விழ அடைய சனபதி அடியில் புக விழு பொழுதத்தே

மேல்

*அனந்தவன்மனின் செயல்
#375
அந்தரம் ஒன்று அறியாத வட கலிங்கர் குல வேந்தன் அனந்தபன்மன்
வெம் தறுகண் வெகுளியினால் வெய்து உயிர்த்து கை புடைத்து வியர்த்து நோக்கி

மேல்

*அனந்தவன்மன் கூற்று
#376
வண்டினுக்கும் திசையானை மதம் கொடுக்கும் மலர் கவிகை அபயற்கு அன்றி
தண்டினுக்கும் எளியனோ என வெகுண்டு தடம் புயங்கள் குலுங்க நக்கே

மேல்

*இகழ்ந்து பேசினான்
#377
கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி
தான் அரணம் உடைத்து என்று கருதாது வருவதும் அ தண்டு போலும்

மேல்

*எங்கராயன் அறிவுரை
#378
என்று கூறலும் எங்கராயன் நான்
ஒன்று கூறுவன் கேள் என்று உணர்த்துவான்

மேல்

#379
அரசர் சீறுவரேனும் அடியவர்
உரைசெயாது ஒழியார்கள் உறுதியே

மேல்

#380
ஏனை வேந்தை எறிய சயதரன்
தானை அல்லது தான் வரவேண்டுமோ

மேல்

#381
விட்ட தண்டினின் மீனவர் ஐவரும்
கெட்ட கேட்டினை கேட்டிலை போலும் நீ

மேல்

#382
போரின் மேல் தண்டு எடுக்க புறக்கிடும்
சேரர் வார்த்தை செவிப்பட்டது இல்லையோ

மேல்

#383
வேலை கொண்டு விழிஞம் அழித்ததும்
சாலை கொண்டதும் தண்டு கொண்டே அன்றோ

மேல்

#384
மாறுபட்டு எழு தண்டு எழ வத்தவர்
ஏறுபட்டதும் இம்முறையே அன்றோ

மேல்

#385
தளத்தொடும் பொரு தண்டு எழ பண்டு ஒர் நாள்
அளத்தி பட்டது அறிந்திலை ஐய நீ

மேல்

#386
தண்டநாயகர் காக்கும் நவிலையில்
கொண்டது ஆயிரம் குஞ்சரம் அல்லவோ

மேல்

#387
உழந்து தாம் உடை மண்டலம் தண்டினால்
இழந்த வேந்தர் எனையர் என்று எண்ணுகேன்

மேல்

#388
கண்டு காண் உன் புய வலி நீயும் அ
தண்டு கொண்டு அவன் சக்கரம் வந்ததே

மேல்

#389
இன்று சீறினும் நாளை அ சேனை முன்
நின்ற போழ்தினில் என்னை நினைத்தியால்

மேல்

*அனந்தவன்மனின் ஆத்திரப் பேச்சு
#390
என்று இவை உரைத்தலும் எனக்கு எதிர் உரைக்க இமையோர்களும் நடுங்குவர் புய
குன்று இவை செரு தொழில் பெறாது நெடு நாள் மெலிவு கொண்டபடி கண்டும் இலையோ

மேல்

#391
பிழைக்க உரைசெய்தனை பிழைத்தனை எனக்கு உறுதி பேசுவது வாசி கெடவோ
முழை-கண் இள வாள் அரி முகத்து எளிது என களிறு முட்டி எதிர் கிட்டி வருமோ

மேல்

#392
என்னுடைய தோள் வலியும் என்னுடைய வாள் வலியும் யாதும் அறியாது பிறர் போல்
நின்னுடைய பேதைமையினால் உரைசெய்தாய் இது நினைப்பளவில் வெல்ல அரிதோ

மேல்

*கலிங்கர்கோன் கட்டளை
#393
வேழம் இரதம் புரவி வெம் படைஞர் என்று இனைய நம் படை விரைந்து கடுக
சோழ குல_துங்கன் விட வந்துவிடு தண்டின் எதிர் சென்று அமர் தொடங்குக எனவே

மேல்

#394
பண்ணுக வய களிறு பண்ணுக வய புரவி பண்ணுக கணிப்பில் பல தேர்
நண்ணுக படை செருநர் நண்ணுக செரு களம் நமக்கு இகல் கிடைத்தது எனவே

மேல்

*கலிங்கர் படையொலி
#395
கலிங்கம் அவை ஏழினும் எழுந்தது ஒரு பேர் ஒலி கறங்கு கடல் ஏழும் உடனே
மலங்கி எழு பேர் ஒலி என திசை திகைப்புற வரும் தொனி எழுந்த பொழுதே

மேல்

*கரி பரிப் படைகள்
#396
தொளை முக மத மலை அதிர்வன தொடு கடல் பருகிய முகில் எனவே
வளை முக நுரை உக வரு பரி கடலிடை மறி திரை என எழவே

மேல்

*குடை சாமரை கொடி
#397
இடையிடை அரசர்கள் இடு குடை கவரிகள் இவை கடல் நுரை எனவே
மிடை கொடி பிறழ்வன மறி கடல் அடையவும் மிளிர்வன கயல் எனவே

மேல்

*படையின் புறப்பாடு
#398
அலகினொடு அலகுகள் கலகல எனும் ஒலி அலை திரை ஒலி எனவே
உலகுகள் பருகுவது ஒரு கடல் இது என உடலிய படை எழவே

மேல்

*தேர்களும் வீரர்களும்
#399
விசை பெற விடு பரி இரதமும் மறி கடல் மிசை விடு கலம் எனவே
இசை பெற உயிரையும் இகழ்தரும் இளையவர் எறி சுறவு இனம் எனவே

மேல்

*படை சென்றதன் விளைவு
#400
விடவிகள் மொடுமொடு விசைபட முறிபட எறிபட நெறிபடவே
அடவிகள் பொடிபட அருவிகள் அனல்பட அரு வரை துகள்படவே

மேல்

*சினத்தீயும் முரசொலியும்
#401
அறை கழல் இளையவர் முறுகிய சின அழல் அது வட அனல் எனவே
முறைமுறை முரசுகள் மொகுமொகு அதிர்வன முதிர் கடல் அதிர்வு எனவே

மேல்

*படைகளின் நெருக்கம்
#402
ஒருவர்-தம் உடலினில் ஒருவர்-தம் உடல் புக உறுவது ஒர் படி உகவே
வெருவர மிடை படை நடு ஒரு வெளி அற விழியிட அரிது எனவே

மேல்

*வீரர்கள் போருக்கெழுந்தனர்
#403
வெளி அரிது என எதிர் மிடை படை மனுபரன் விடு படை அதன் எதிரே
எளிது என இரை பெறு புலி என வலியினொடு எடும் எடும் எனவே

மேல்

12. போர் பாடியது

*போரின் பேரொலி
#404
எடும் எடும் எடும் என எடுத்தது ஓர் இகல் ஒலி கடல் ஒலி இகக்கவே
விடு விடு விடு பரி கரி குழாம் விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே

மேல்

#405
வெருவர வரி சிலை தெறித்த நாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை அவரவர் தெழித்தது ஓர் தெழி உலகுகள் செவிடு எடுக்கவே

மேல்

*இருபடைகளும் குதிரைகளும்
#406
எறி கடலொடு கடல் கிடைத்த போல் இரு படைகளும் எதிர் கிடைக்கவே
மறி திரையொடு திரை மலைத்த போல் வரு பரியொடு பரி மலைக்கவே

மேல்

*யானைப் படையும் குதிரைப் படையும்
#407
கன வரையொடு வரை முனைத்த போல் கட கரியொடு கரி முனைக்கவே
இன முகில் முகிலொடும் எதிர்த்த போல் இரதமொடு இரதமும் எதிர்க்கவே

மேல்

*வீரர்களும் அரசர்களும்
#408
பொரு புலி புலியொடு சிலைத்த போல் பொரு படரொடு படர் சிலைக்கவே
அரியினொடு அரி இனம் அடர்ப்ப போல் அரசரும் அரசரும் அடர்க்கவே

மேல்

*விற்போர்
#409
விளை கனல் விழிகளின் முளைக்கவே மினல் ஒளி கனலிடை எறிக்கவே
வளை சிலை உரும் என இடிக்கவே வடி கணை நெடு மழை படைக்கவே

மேல்

*குருதி ஆறு
#410
குருதியின் நதி வெளி பரக்கவே குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணிபடும் உடல் அடுக்கியே கரை என இரு புடை கிடக்கவே

மேல்

*யானைப் போர்
#411
மருப்பொடு மருப்பு எதிர் பொருப்பு இவை என பொரு மத கரி மருப்பினிடையே
நெருப்பொடு நெருப்பு எதிர் சுடர் பொறி தெறித்து எழ நிழல் கொடி தழல் கதுவவே

மேல்

#412
நிழல் கொடி தழல் கதுவலின் கடிது ஒளித்த அவை நினைப்பவர் நினைப்பதன் முனே
அழல்படு புகை கொடி எடுத்தன புது கொடி அனைத்தினும் நிரைத்தது எனவே

மேல்

#413
இடத்திடை வலத்திடை இருத்திய துணை கரம் நிகர்த்தன அடுத்த கரியின்
கடத்து எழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன அவற்றின் எயிறே

மேல்

#414
எயிறுகள் உடைய பொருப்பை வலித்து இடை எதிரெதிர் இரு பணை இட்டு முறுக்கிய
கயிறுகள் இவை என அ கரட கரி கரமொடு கரம் எதிர் தெற்றி வலிக்கவே

மேல்

*குதிரைகளின் தோற்றம்
#415
முடுகிய பவன பதத்தில் உகக்கடை முடிவினில் உலகம் உண சுடர்விட்டு எழு
கடுகிய வட அனலத்தினை வைத்தது களம் உறு துரக கணத்தின் முகத்திலே

மேல்

*வீரர்களின் பெருமிதம்
#416
களம் உறு துரக கணத்தின் முகத்து எதிர் கறுவிலர் சிலர் கலவி தலை நித்தில
இள முலை எதிர் பொரும் அப்பொழுது இப்பொழுது என எதிர் கரியின் மருப்பின் முன் நிற்பரே

மேல்

*வாள் வீரர்களின் சிறப்பு
#417
எதிர் பொரு கரியின் மருப்பை உரத்தினில் இற எறி படையின் இறுத்து மிறைத்து எழு
சதுரர்கள் மணி அகலத்து மருப்பு அவை சயமகள் களப முலை குறி ஒத்ததே

மேல்

*குதிரை வீரர்களின் சிறப்பு
#418
சயமகள் களப முலைக்கு அணியத்தகு தனி வடம் இவை என மத்தக முத்தினை
அயம் எதிர் கடவி மத கரி வெட்டினர் அலை படை நிரைகள் களத்து நிரைக்கவே

மேல்

*வில் வீரரின் சிறப்பு
#419
அலை படை நிரைகள் நிறைத்த செரு களம் அமர் புரி களம் என ஒப்பில விற்படை
தலை பொர எரிய நெருப்பினின் மற்றது தழல் படு கழை வனம் ஒக்கினும் ஒக்குமே

மேல்

#420
தழல் படு கழை வனம் எப்படி அப்படி சடசட தமரம் எழ பகழி படை
அழல் படு புகையொடு இழிச்சிய கை சிலை அடு சிலை பகழி தொடுத்து வலிப்பரே

மேல்

#421
அடு சிலை பகழி தொடுத்துவிட புகும் அளவினில் அயம் எதிர் விட்டவர் வெட்டின
உடல் சில இரு துணி பட்டன பட்ட பின் ஒரு துணி கருதும் இலக்கை அழிக்குமே

மேல்

#422
ஒரு துணி கருதும் இலக்கை அழித்தன உருவிய பிறை முக அ பகழி தலை
அரிது அரிது இதுவும் என பரி உய்ப்பவர் அடியொடு முடிகள் துணித்து விழுத்துமே

மேல்

*குதிரை வீரரின் சிறப்பு
#423
அடியொடு முடிகள் துணித்து விழ புகும் அளவு அரி தொடை சமரத்தொடு அணைத்தனர்
நெடியன சில சரம் அப்படி பெற்றவர் நிறை சரம் நிமிர விட துணி உற்றவே

மேல்

#424
நிறை சரம் நிமிர விட துணி உற்றவர் நெறியினை எறி ஒடிகிற்பவர் ஒத்து எதிர்
அறை கழல் விருதர் செருக்கு அற வெட்டலின் அவர் உடல் இரு வகிர் பட்டன முட்டவே

மேல்

*கலிங்க வீரர் தடுத்தனர்
#425
விடுத்த வீரர் ஆயுதங்கள் மேல் விழாமலே நிரைத்து
எடுத்த வேலி போல் கலிங்கர் வட்டணங்கள் இட்டவே

மேல்

*கேடகங்கள் துளைக்கப்பட்டன
#426
இட்ட வட்டணங்கள் மேல் எறிந்த வேல் திறந்த வாய்
வட்டம் இட்ட நீள் மதிற்கு வைத்த பூழை ஒக்குமே

மேல்

*வாளும் உலக்கையும்
#427
கலக்கம் அற்ற வீரர் வாள் கலந்த சூரர் கைத்தலத்து
உலக்கை உச்சி தைத்த போது உழும் கலப்பை ஒக்குமே

மேல்

*துதிக்கையும் சக்கரமும்
#428
மத்த யானையின் கரம் சுருண்டு வீழ வன் சரம்
தைத்த போழ்தின் அ கரங்கள் சக்கரங்கள் ஒக்குமே

மேல்

*வீழ்ந்த முத்துக்கள்
#429
வெம் களிற்றின் மத்தகத்தின் வீழும் முத்து வீர மா
மங்கையர்க்கு மங்கல பொரி சொரிந்தது ஒக்குமே

மேல்

*கேடகங்களுடன் வீரர்கள்
#430
மறிந்த கேடகம் கிடப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
பறிந்த தேரின் நேமியோடு பார் கிடப்பது ஒக்குமே

மேல்

*தண்டும் மழுவும்
#431
களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடை
குளித்த போழ்து கைப்பிடித்த கூர் மழுக்கள் ஒக்குமே

மேல்

*குறையுடல்களும் பேய்களும்
#432
கவந்தம் ஆட முன்பு தம் களிப்பொடு ஆடு பேய் இனம்
நிவந்த ஆடல் ஆட்டுவிக்கும் நித்தகாரர் ஒக்குமே

மேல்

*ஒட்டகம் யானை குதிரை
#433
ஒட்டகங்கள் யானை வால் உயர்த்த மா அழிந்த போர்
விட்டு அகன்று போகிலாது மீள்வ போலும் மீளுமே

மேல்

*யானைகள் மேகங்களை ஒத்தன
#434
பிறங்கு சோரி வாரியில் பிளிற்றி வீழ் களிற்று இனம்
கறங்கு வேலை நீர் உண கவிழ்ந்த மேகம் ஒக்குமே

மேல்

*வீரர் துருத்தியாளரை ஒத்தனர்
#435
வாளில் வெட்டி வாரண கை தோளில் இட்ட மைந்தர் தாம்
தோளில் இட்டு நீர் விடும் துருத்தியாளர் ஒப்பரே

மேல்

*வில் வீரர் செயல்
#436
நேர் முனையில் தொடுத்த பகழிகள் நேர் வளைவில் சுழற்றும் அளவினில்
மார்பிடையில் குளித்த பகழியை வார் சிலையில் தொடுத்து விடுவரே

மேல்

*குதிரை வீரர் செயல்
#437
அசைய உரத்து அழுத்தி இவுளியை அடு சவளத்து எடுத்தபொழுது அவை
விசையமகட்கு எடுத்த கொடி என விருதர் களத்து எடுத்து வருவரே

மேல்

*தொடை அறுந்த வீரர் செயல்
#438
இரு தொடை அற்று இருக்கும் மறவர்கள் எதிர் பொரு கை களிற்றின் வலி கெட
ஒரு தொடையை சுழற்றி எறிவர்கள் ஒரு தொடை இட்டு வைப்பர் எறியவே

மேல்

*வாள் வீரர் மடிந்தனர்
#439
இருவர் உரத்தின் உற்ற சுரிகையின் எதிரெதிர் புக்கு இழைக்கும் அளவினில்
ஒருவர் என கிடைத்த பொழுதினில் உபய பலத்து எடுத்தது அரவமே

மேல்

*யானை வீரரோடு பொருநர்
#440
பொருநர்கள் சிலர்-தம் உரத்தினில் கவிழ் புகர் முகம் மிசை அடியிட்டு அதின் பகை
விருதரை அரிவர் சிரத்தை அ சிரம் விழுபொழுது அறை எனும் அ களிற்றையே

மேல்

*படைக்கருவி இல்லாதவர் செயல்
#441
விடு படை பெறுகிலர் மற்று இனி சிலர் விரை பரி விழ எறிதற்கு முற்பட
அடு கரி நுதல் பட விட்ட கைப்படை அதனை ஒர் நொடி வரையில் பறிப்பரே

மேல்

*வீரர்கள் நாணினர்
#442
அமர் புரி தமது அகலத்து இடை கவிழ் அடு கரி நுதலில் அடிப்பர் இ களிறு
எமது என இரு கண் விழிக்க உட்கினர் என விடுகிலர் படைஞர்க்கு வெட்கியே

மேல்

*கருணாகரன் போரில் ஈடுபட்டான்
#443
அலகில் செரு முதிர் பொழுது வண்டையர் அரசன் அரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன் தனது ஒரு கை இரு பணை வேழம் உந்தவே

மேல்

*இருபடைகளும் வெற்றிகாண முற்படல்
#444
உபய பலமும் விடாது வெம் சமம் உடலு பொழுதினில் வாகை முன் கொள
அபயன் விடு படை ஏழ் கலிங்கமும் அடைய ஒரு முகம் ஆகி முந்தவே

மேல்

*இருபுறப் படைகளும் அழிந்தன
#445
அணிகள் ஒரு முகமாக உந்தின அமரர் அமர் அது காண முந்தினர்
துணிகள் பட மத மா முறிந்தன துரக நிரையொடு தேர் முறிந்தவே

மேல்

*காலாட் படையின் அழிவு
#446
விருதர் இரு துணி பார் நிறைந்தன விடர்கள் தலை மலையாய் நெளிந்தன
குருதி குரை கடல் போல் பரந்தன குடர்கள் குருதியின் மேல் மிதந்தவே

மேல்

*களத்தில் பேரொலி
#447
கரிகள் கருவிகளோடு சிந்தின கழுகு நரியொடு காகம் உண்டன
திரைகள் திசைமலையோடு அடர்ந்தன திமில குமிலம் எலாம் விளைந்தவே

மேல்

*அனந்தவன்மன் தோற்று ஓடினான்
#448
புரசை மத மலை ஆயிரம் கொடு பொருவம் என வரும் ஏழ் கலிங்கர்-தம்
அரசன் உரைசெய்த ஆண்மையும் கெட அமரில் எதிர் விழி யாது ஒதுங்கியே

மேல்

#449
அறியும் முழைகளிலோ பதுங்கியது அரிய பிலனிடையோ மறைந்தது
செறியும் அடவியிலோ கரந்தது தெரிய அரியது எனா அடங்கவே

மேல்

*கலிங்கர் நடுங்கினர்
#450
எது-கொல் இது இது மாயை ஒன்று-கொல் எரி-கொல் மறலி-கொல் ஊழியின் கடை
அது-கொல் என அலறா விழுந்தனர் அலதி குலதியொடு ஏழ் கலிங்கரே

மேல்

*கலிங்கர் சிதைந்தோடினர்
#451
வழிவர் சிலர் கடல் பாய்வர் வெம் கரி மறைவர் சிலர் வழி தேடி வன் பிலம்
இழிவர் சிலர் சிலர் தூறு மண்டுவர் இருவர் ஒரு வழி போகல் இன்றியே

மேல்

#452
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர் உடலின் நிழலினை ஓட அஞ்சினர்
அருவர் அருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் எனா நடுங்கியே

மேல்

*குகைகளில் நுழைந்தனர்
#453
மழைகள் அதிர்வன போல் உடன்றன வளவன் விடு படை வேழம் என்று இருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்று நம் முதுகு செயும் உபகாரம் என்பரே

மேல்

*கலிங்கம் இழந்த கலிங்கர்
#454
ஒரு கலிங்கம் ஒருவன் அழித்த நாள்
ஒரு கலிங்கம் ஒருவர் உடுத்ததே

மேல்

*சோழர் யானை குதிரைகளைக் கைப்பற்றினர்
#455
அப்படி கலிங்கர் ஓட அடர்த்து எறி சேனை வீரர்
கைப்படு களிறும் மாவும் கணித்து உரைப்பவர்கள் யாரே

மேல்

*களிறுகளின் தன்மை
#456
புண் தரு குருதி பாய பொழிதரு கடமும் பாய
வண்டொடும் பருந்தினோடும் வளைப்புண்ட களிறு அநேகம்

மேல்

#457
ஒட்டு அற பட்ட போரில் ஊர்பவர்-தம்மை வீசி
கட்டு அறுத்தவர் போல் நின்று கட்டுண்ட களிறு அநேகம்

மேல்

#458
வரை சில புலிகளோடு வந்து கட்டுண்டவே போல்
அரைசரும் தாமும் கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம்

மேல்

*சோழ வீரர்கள் கைப்பற்றியவை
#459
நடை வய பரி இரதம் ஒட்டகம் நவநிதி குலமகளிர் என்று
அடைவ அப்பொழுது அவர்கள் கைக்கொளும் அவை கணிப்பதும் அருமையே

மேல்

*கருணாகரன் கட்டளை இட்டான்
#460
இவை கவர்ந்த பின் எழு கலிங்கர்-தம் இறையையும் கொடு பெயர்தும் என்று
அவன் இருந்துழி அறிக என்றனன் அபயன் மந்திரி முதல்வனே

மேல்

*ஒற்றர்கள் தேடினர்
#461
உரைகள் பிற்படும் அளவில் ஒற்றர்கள் ஒலி கடற்படை கடிது போய்
வரைகளில் புடை தடவி அப்படி வனம் இலைப்புரை தடவியே

மேல்

*ஒற்றர்களின் பேச்சு
#462
சுவடு பெற்றிலம் அவனை மற்றொரு சுவடு பெற்றனம் ஒரு மலை
குவடு பற்றியது அவன் அடல் படை அது குணிப்பு அரிது எனலுமே

மேல்

*மலையை அடைந்தனர்
#463
எ குவடும் எ கடலும் எந்த காடும் இனி கலிங்கர்க்கு அரண் ஆவது இன்றே நாளும்
அ குவடும் அ கடலும் வளைந்து வெய்யோன் அத்தமன குவடு அணையும் அளவில் சென்றே

மேல்

*விடியளவும் வெற்பைக் காத்தனர்
#464
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே

மேல்

*மலை சிவந்தது
#465
செம் மலையாய் ஒளி படைத்தது யாதோ என்றும் செம் கதிரோன் உதயம் செய்து உதயம் என்னும்
அ மலையோ இ மலையும் என்ன தெவ்வர் அழி குருதி நதி பரக்க அறுக்கும் போழ்தில்

மேல்

*சிலர் திகம்பரரானார்
#466
வரை கலிங்கர்-தமை சேர மாசை ஏற்றி வன் தூறு பறித்த மயிர் குறையும் வாங்கி
அரை கலிங்கம் உரிப்புண்ட கலிங்கர் எல்லாம் அமணர் என பிழைத்தாரும் அநேகர் ஆங்கே

மேல்

*சிலர் வேதியரானார்
#467
வேடத்தால் குறையாது முந்நூல் ஆக வெம் சிலை நாண் மடித்து இட்டு விதியால் கங்கை
ஆட போந்து அகப்பட்டேம் கரந்தோம் என்றே அரி-தனை விட்டு உயிர் பிழைத்தார் அநேகர் ஆங்கே

மேல்

*சிலர் புத்தத் துறவியரானார்
#468
குறியாக குருதி கொடி ஆடை ஆக கொண்டு உடுத்து போர்த்து தம் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை உடை கண்டான் என் அப்புறம் என்று இயம்பிடுவர் அநேகர் ஆங்கே

மேல்

*சிலர் பாணர் ஆனார்
#469
சேனை மடி களம் கண்டேம் திகைத்து நின்றேம் தெலுங்கரேம் என்று சில கலிங்கர் தங்கள்
ஆனை மணியினை தாளம் பிடித்து கும்பிட்டு அடிப்பாணர் என பிழைத்தார் அநேகர் ஆங்கே

மேல்

*கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்
#470
இவர்கள் மேல் இனி ஒருவர் பிழைத்தாரில்லை எழு கலிங்கத்து ஓவியர்கள் எழுதிவைத்த
சுவர்கள் மேல் உடல் அன்றி உடல்கள் எங்கும் தொடர்ந்து பிடித்து அறுத்தார் முன் அடைய ஆங்கே

மேல்

*அடி சூடினான் தொண்டைமான்
#471
கடல் கலிங்கம் எறிந்து சயத்தம்பம் நாட்டி கட கரியும் குவி தனமும் கவர்ந்து தெய்வ
சுடர் படை வாள் அபயன் அடி அருளினோடும் சூடினான் வண்டையர் கோன் தொண்டைமானே

மேல்

13. களம் பாடியது

*களச் சிறப்பு
#472
தேவாசுர ராமாயண மாபாரதம் உள என்று
ஓவா உரை ஓயும்படி உளது அ பொரு களமே

மேல்

*பேய் வேண்டக் காளி அணுகல்
#473
கால களம் அது கண்டருள் இறைவீ கடிது எனவே
ஆல களம் உடையான் மகிழ் அமுது அ களம் அணுகி

மேல்

*காளி களங்கண்டு வியத்தல்
#474
என்னே ஒரு செரு வெம் களம் எனவே அதிசயமுற்று
அ நேர்_இழை அலகை கணம் அவை கண்டிட மொழியும்

மேல்

*யானையும் கப்பலும்
#475
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின்

மேல்

*குதிரையும் குதிரைத் தறியும்
#476
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின்

மேல்

*வீரர் முகமலர்ந்து கிடந்தமை
#477
விருந்தினரும் வறியவரு நெருங்கி உண்ண மேன்மேலும் முகம் மலரும் மேலோர் போல
பருந்து இனமும் கழுகு இனமும் தாமே உண்ண பதும முகம் மலர்ந்தாரை பார்-மின் பார்-மின்

மேல்

*வீரர்களும் கருமிகளும்
#478
சாம் அளவும் பிறர்க்கு உதவாதவரை நச்சி சாருநர் போல் வீரர் உடல் தரிக்கும் ஆவி
போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின்

மேல்

*வண்டும் விலைமாதரும்
#479
மா மழை போல் பொழிகின்ற தான வாரி மறித்து விழும் கட களிற்றை வெறுத்து வானோர்
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-ம ¢ன்

மேல்

*கொடியொடு கிடக்கும் யானைகள்
#480
சாய்ந்து விழும் கட களிற்றினுடனே சாய்ந்து தடம் குருதி மிசை படியும் கொடிகள் தங்கள்
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின்

மேல்

*கணவரைத் தேடும் மகளிர்
#481
தம் கணவருடன் தாமும் போக என்றே சாதகரை கேட்பாரே தடவி பார்ப்பார்
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின்

மேல்

*ஆவி சோரும் மனைவி
#482
வாய் மடித்து கிடந்த தலைமகனை நோக்கி மணி அதரத்து ஏதேனும் வடுவுண்டாயோ
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின்

மேல்

*கணவனைத் தழுவி உயிர்விடும் பெண்
#483
தரைமகள் தன் கொழுநன்-தன் உடலம்-தன்னை தாங்காமல் தன் உடலால் தாங்கி விண்நாட்டு
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின்

மேல்

*தலை பெற்ற மனைவி செயல்
#484
பொரு தட கை வாள் எங்கே மணி மார்பு எங்கே போர் முகத்தில் எவர் வரினும் புறங்கொடாத
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின்

மேல்

*கருமேகம் செம்மேகத்தை ஒத்திருத்தல்
#485
ஆடல் துரங்கம் பிடித்து ஆளை ஆளோடு அடித்து புடைத்து அ இரும் புண்ணின் நீர்
ஓடி தெறிக்க கரும் கொண்டல் செம் கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்-மின்களோ

மேல்

*கருங்காகம் வெண்காகத்தை ஒத்திருத்தல்
#486
நெருங்கு ஆகவ செம் களத்தே தயங்கும் நிண போர்வை மூடிக்கொள
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ

மேல்

*போர்க்களம் தாமரைக் குளத்தை ஒத்திருத்தல்
#487
மிடையுற்ற தேர் மொட்டு மொட்டு ஒக்க வெம் சோரி நீர் ஒக்க வீழ் தொங்கல் பா
சடை ஒக்க அடு செம் களம் பங்கய பொய்கை ஆமாறு காண்-மின்களோ

மேல்

*வீரர் மூங்கிலை ஒத்திருத்தல்
#488
வெயில் தாரை வேல் சூழவும் தைக்க மண் மேல் விழா வீரர் வேழம்பர் தம்
கயிற்றால் இழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்-மின்களோ

மேல்

*பருந்தும் கழுகும் துன்புறல்
#489
இருப்பு கவந்தத்தின் மீது ஏறலும் சூரர் எஃகம் புதைக்க இறகை
பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ

மேல்

*படைத்தலைவர் கடனாற்றல்
#490
வரும் சேனை தம் சேனை மேல் வந்து உறாமே வில் வாள் வீரர் வாழ்நாள் உக
கரும் சேவகம் செய்து செஞ்சோறு அற செய்த கைம்மாறு காண்-மின்களோ

மேல்

*எழுந்தாடும் வீரர் தலை
#491
யானை படை சூரர் நேர் ஆன போழ்து அற்று எழுந்து ஆடுகின்றார் தலை
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ

மேல்

*வானில் கண்ட காட்சி
#492
எதிர்கொளும் சுரர் விமானங்களில் சுரர்களாய் ஏறு மானவர்கள் தாம் எண்ணுதற்கு அருமையின்
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ

மேல்

*குருதிக் கடல்
#493
அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம்
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ

மேல்

*யானைகள் மலைகளை ஒத்தல்
#494
புவி புரந்து அருள்செயும் சயதரன் ஒருமுறை புணரி மேல் அணைபட பொருவில் வில் குனிதலின்
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ

மேல்

*வீரர் வியத்தல்
#495
உற்ற வாய் அம்பு தம் பரிசையும் கருவியும் உருவி மார்பு அகலமும் உருவி வீழ் செருநர் வில்
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ

மேல்

*வீரர்தம் உடலங்கள் தேவர்களை ஒத்தல்
#496
விண்ணின் மொய்த்து எழு விமானங்களில் சுரர்களாய் மீது போம் உயிர்களே அன்றியே இன்று தம்
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-ம ¢னோ

மேல்

*வெட்டுண்ட யானைத்தலைகள் சம்மட்டியை ஒத்தல்
#497
பிறை பெரும் பணை வேழம் முன்னொடு பின் துணிந்து தரை படும்
குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ

மேல்

*வேல் பறித்து சாயும் வீரர்
#498
வாயினில் புகு வேல்கள் பற்று வல கையோடு நிலத்திடை
சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ

மேல்

*வீரர் படகோட்டிகளை ஒத்தல்
#499
பட ஊன்று நெடும் குந்தம் மார்பின்-நின்றும் பறித்து அதனை நிலத்து ஊன்றி தேர் மேல் நிற்பார்
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின்

மேல்

*நிணமென அம்பு பற்றிய பருந்தின் நிலை
#500
வாய் அகல் அம்பு அரத்தமொடு நிணம் கொண்டு ஓட மற்று அதனை வள் உகிரின் பருந்து கோணல்
வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின்

மேல்

*பிணந்தின்ற பூதம் வரும் தோற்றம்
#501
சாதுரங்க தலைவனை போர் களத்தில் வந்த தழை வயிற்று பூதம்தான் அருந்தி மிக்க
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின்

மேல்

*விழுப்புண்பட்ட யானை வீரர்
#502
முது குவடு இப்படி இருக்கும் என்ன நிற்கும் முனை களிற்றோர் செரு களத்து முந்து தங்கள்
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின்

மேல்

*கூழ் அடுமாறு கூறல்
#503
களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு
குளம் மடை பட்டது போலும் குருதி ஆடி கூழ் அடு-மின் என்று அருள கும்பிட்டு ஆங்கே

மேல்

*பேய்கள் அழைத்தல்
#504
குறு மோடீ நெடு நிணமாலாய் குடை கலதீ கூரெயிறீ நீலி
மறிமாடீ குதிர்வயிறீ கூழ் அட வாரீர் கூழ் அட வாரீரே

மேல்

*பல் விளக்கல்
#505
பறிந்த மருப்பின் வெண் கோலால் பல்லை விளக்கிக்கொள்ளீரே
மறிந்த களிற்றின் பழு எலும்பை வாங்கி நாக்கை வழியீரே

மேல்

*நகம் நீக்கலும் எண்ணெய் தேய்த்தலும்
#506
வாய் அம்புகளாம் உகிர் கொள்ளி வாங்கி உகிரை வாங்கீரே
பாயும் களிற்றின் மத தயிலம் பாய பாய வாரீரே

மேல்

*இரத்தத்தில் குளித்தல்
#507
எண்ணெய் போக வெண் மூளை என்னும் களியால் மயிர் குழப்பி
பண்ணையாக குருதி மடு பாய்ந்து நீந்தி ஆடிரே

மேல்

*கரையிலிருந்தே குளிப்பீர்
#508
குருதி குட்டம் இத்தனையும் கோலும் வேலும் குந்தமுமே
கருவி கட்டு மாட்டாதீர் கரைக்கே இருந்து குளியீரே

மேல்

*ஆடை உடுத்தல்
#509
ஆழ்ந்த குருதி மடு நீந்தி அங்கே இனையாது இங்கு ஏறி
வீழ்ந்த கலிங்கர் நிண கலிங்கம் விரித்து விரித்து புனையீரே

மேல்

*கைவளையும் காலணியும்
#510
மதம் கொள் கரியின் கோளகையை மணி சூடகமா செறியீரே
பதம்கொள் புரவி படி தரளம் பொன் பாடகமா புனையீரே

மேல்

*காதணி
#511
ஈண்டும் செருவில் படு வீரர் எறியும் பாராவளை அடுக்கி
வேண்டும் அளவும் வாய் நெகிழ்த்து விடுகம்பிகளா புனையீரே

மேல்

*காப்பணியும் காதணியும்
#512
பணைத்த பனை வெம் கரி கரத்தால் பரிய கரு நாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே

மேல்

*தோளணியும் முத்து மாலையும்
#513
பட்ட புரவி கவி குரத்தால் பாகுவலயம் சாத்தீரே
இட்ட சுரி சங்கு எடுத்து கோத்து ஏகாவலியும் சாத்தீரே

மேல்

*வன்னசரம் அணிதல்
#514
பொரு சின வீரர்-தம் கண்மணியும் போதக மத்தக முத்தும் வாங்கி
வரிசை அறிந்து நரம்பில் கோத்து வன்ன சரங்கள் அணியீரே

மேல்

*உணவின் பொருட்டு எழுக
#515
கொள்ளும் எனை பல கோலம் மென்மேல் கொண்டிட வேளையும் மீதூர
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே

மேல்

*சமையலறை அமைத்தல்
#516
மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த
ஆகாய மேல்கட்டி அதன் கீழே அடுக்களை கொண்டு அடு-மின் அம்மா

மேல்

*மெழுகல் கோலமிடல் அடுப்பமைத்தல்
#517
பொழி மதத்தால் நிலம் மெழுகி பொடிந்து உதிர்ந்த பொடி தரள பிண்டி தீட்டி
அழி மதத்த மத்தகத்தை அடுப்பாக கடுப்பா கொண்டு அடு-மின் அம்மா

மேல்

*பானையை அடுப்பில் ஏற்றல்
#518
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும்
அற்று வீழ் ஆனை பானை அடுப்பினில் ஏற்றும் அம்மா

மேல்

*உண்பொருள் கொணர்தல்
#519
வெண் தயிரும் செம் தயிரும் விராய் கிடந்த கிழான் போல வீரர் மூளை
தண் தயிரும் மிடைவித்த புளிதமுமா தாழி-தொறும் தம்-மின் அம்மா

மேல்

*உலைநீர் ஊற்றல்
#520
கொலையினுள் படு கரி குழிசியுள் கூழினுக்கு
உலை என குதிரையின் உதிரமே சொரி-மினோ

மேல்

*உப்பும் காயமும் இடல்
#521
துள்ளி வெம் களனில் வீழ் துரக வெண் பல் எனும்
உள்ளியும் கிள்ளி இட்டு உகிரின் உப்பு இடு-மினோ

மேல்

*தீ மூட்டல்
#522
தனி விசும்பு அடையினும் படைஞர் கண் தவிர்கிலா
முனிவு எனும் கனலை நீர் மூள வைத்திடு-மினோ

மேல்

*விறகு கொண்டு எரித்தல்
#523
குந்தமும் பகழியும் கோல்களும் வேலுமாம்
இந்தனம் பல எடுத்து இடை மடுத்து எரி-மினோ

மேல்

*பல்லும் பழவரிசியும்
#524
கல்லை கறித்து பல் முறிந்து கவிழ்ந்து வீழ்ந்த கலிங்கர்-தம்
பல்லை தகர்த்து பழ அரிசி ஆக பண்ணிக்கொள்ளீரே

மேல்

*அரிசியும் குற்றும் உரலும்
#525
சுவைக்கும் முடிவில் கூழினுக்கு சொரியும் அரிசி வரி எயிறா
அவைக்கும் உரல்கள் என குரல்கள் அவிந்த முரசம் கொள்ளீரே

மேல்

*அரிசி குற்றல்
#526
இந்த உரல்-கண் இ அரிசி எல்லாம் பெய்து கொல் யானை
தந்த உலக்கை-தனை ஓச்சி சலுக்குமுலுக்கு என குற்றீரே

மேல்

*காளியைப் பாடி அரிசி குற்றல்
#527
தணந்த மெலிவு தான் தீர தடித்த உடல் வெம் பசி தீர
பிணம் தரு நாச்சியை பாடீரே பெரும் திருவாட்டியை பாடீரே

மேல்

*குலோத்துங்கனைப் பாடிக் குற்றல்
#528
கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள்
அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே

மேல்

*சேர பாண்டியரை வென்றலை கூறிக் குற்றல்
#529
மன்னர் புரந்தரன் வாள் அபயன் வாரணம் இங்கு மதம் படவே
தென்னர் உடைந்தமை பாடீரே சேரர் உடைந்தமை பாடீரே

மேல்

*சேர பாண்டியர் வணங்கியமை கூறிக் குற்றல்
#530
வணங்கிய சேரர் மணிமுடியும் வழுதியர்-தங்கள் மணிமுடியும்
பிணங்கிய சேவடி பாடீரே பெருமான் திருவடி பாடீரே

மேல்

*வடவேந்தரை வென்றமை கூறிக் குற்றல்
#531
ஒளிறு நெடும் படை வாள் அபயற்கு உத்தர பூமியர் இட்ட திறை
களிறு வரும்படி பாடீரே கட மதம் நாறுவ பாடீரே

மேல்

*பகைவர் பணிந்தமை கூறிக் குற்றல்
#532
பௌவம் அடங்க வளைந்த குடை பண்டித சோழன் மலர் கழலில்
தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலை ஆடிய வலி பாடீரே

மேல்

*உலகம் இன்புற ஆண்டமை கூறிக் குற்றல்
#533
எற்றை பகலினும் வெள்ளணி நாள் இருநில பாவை நிழலுற்ற
கொற்ற குடையினை பாடீரே குலோத்துங்க சோழனை பாடீரே

மேல்

*கருணாகரனைப் பாடிக் குற்றல்
#534
வண்டை வளம் பதி பாடீரே மல்லையும் கச்சியும் பாடீரே
பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலை பாடீரே

மேல்

*தொண்டையர் வேந்தனைப் பாடிக் குற்றல்
#535
காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல்
சூட்டிய தோன்றலை பாடீரே தொண்டையர் வேந்தனை பாடீரே

மேல்

*குலோத்துங்கன் புகழ் பாடிக் குற்றல்
#536
இடை பார்த்து திறை காட்டி இறைவி திரு புருவத்தின்
கடை பார்த்து தலை வணங்கும் கதிர் முடி நூறாயிரமே

மேல்

*பலவேந்தர் அடி வணங்கல் கூறி குற்றல்
#537
முடி சூடும் முடி ஒன்றே முதல் அபயன் எம் கோமான்
அடி சூடும் முடி எண்ணில் ஆயிரம் நூறாயிரமே

மேல்

*திறைதரா வேந்தர் அழிந்தமை கூறிக் குற்றல்
#538
முடியினால் வழிபட்டு மொழிந்த திறை இடா வேந்தர்
அடியினால் மிதிபட்ட அரு வரை நூறாயிரமே

மேல்

*பார்வேந்தர் படும் சிறுமை கூறிக் குற்றல்
#539
தார் வேய்ந்த புயத்து அபயன் தன் அமைச்சர் கடைத்தலையில்
பார் வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரமே

மேல்

*மறை ஓம்பியமை கூறிக் குற்றல்
#540
தாங்கு ஆர புயத்து அபயன் தண் அளியால் புயல் வளர்க்கும்
ஓங்கார மந்திரமும் ஒப்பு இல நூறாயிரமே

மேல்

*பாராண்ட புகழ்பாடிக் குற்றல்
#541
போர் தாங்கும் களிற்று அபயன் புயம் இரண்டும் எந்நாளும்
பார் தாங்க பரம் தீர்ந்த பணி பணம் நூறாயிரமே

மேல்

*திருமால் எனப் பாடிக் குற்றல்
#542
நாற்கடலை கவித்த குடை நர_துங்கன் அமுதம் எழ
பாற்கடலை கடைந்தருளும் பணை புயம் நூறாயிரமே

மேல்

*தோள் இரண்டால் துணித்தமை
#543
தாள் இரண்டால் நில வேந்தர் தலை தாங்கும் சய_துங்கன்
தோள் இரண்டால் வாணனை முன் துணித்த தோள் ஆயிரமே

மேல்

*தூது நடந்தான்
#544
சூழி முக களிற்று அபயன் தூது நடந்தருளிய நாள்
ஆழி முதல் படையெடுத்த அணி நெடும் தோள் ஆயிரமே

மேல்

*அரிசி புடைத்தல்
#545
பல் அரிசி யாவும் மிக பழ அரிசி தாம் ஆக
சல்லவட்டம் எனும் சுளகால் தவிடு பட புடையீரே

மேல்

*அரிசியை அளத்தல்
#546
பாணிகளால் நிலம் திருத்தி படை கலிங்கர் அணி பகழி
தூணிகளே நாழிகளா தூணி மா அளவீரே

மேல்

*உலையில் இடல்
#547
விரல் புட்டில் அவை சிறிய வில் கூடை பெரியன கொண்டு
உரல் பட்ட அரிசி முகந்து உலைகள்-தொறும் சொரியீரே

மேல்

*துடுப்பும் அகப்பையும்
#548
கள பரணி கூழ் பொங்கி வழியாமல் கை துடுப்பா
அளப்பரிய குளப்பு கால் அகப்பைகளாக கொள்ளீரே

மேல்

*கூழைச் சுவை பார்த்தல்
#549
வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும்
உப்பு பார்க்க ஒரு துள்ளி உள்ளங்கையில் கொள்ளீரே

மேல்

*கூழை நன்கு கிண்டுதல்
#550
அழலை கையில் கொள்ளாமே அடுப்பை அவித்து கை துடுப்பால்
சுழல சுழல புடை எங்கும் துழாவி துழாவி கொள்ளீரே

மேல்

*பதம் பார்த்துக் கூழ் இறக்கல்
#551
பற்றி பாரீர் இ கூழின் பதமும் சுவையும் பண்டு உண்ட
மற்றை கூழின் மிக நன்று வாரீர் இழிச்ச வாரீரே

மேல்

*பானைப் பிடித்து இறக்கல்
#552
எடுத்து கைகள் வேகாமே இவுளி துணியிட்டு இரு மருங்கும்
அடுத்து பிடித்து மெத்தெனவே அடுப்பின்-நின்றும் இழிச்சீரே

மேல்

*கூழின் மிகுதி
#553
ஒரு வாய் கொண்டே இது தொலைய உண்ண ஒண்ணாது என்று என்று
வெருவா நின்றீர் ஆயிரம் வாய் வேண்டுமோ இ கூழ் உணவே

மேல்

*நாத் தோய்க்கின் கூழ் சுவறும்
#554
வெந்த இரும்பில் புகும் புனல் போல் வெம் தீ பசியால் வெந்து எரியும்
இந்த விடம்பை நா தோய்க்கில் இ கூழ் எல்லாம் சுவறாதோ

மேல்

*உண்டு மிகுமோ
#555
பண்டு மிகுமோ பரணி கூழ் பாரகத்தில் அறியேமோ
உண்டு மிகுமோ நீர் சொன்ன உபாயம் இதுவும் செய்குவமே

மேல்

*உணவுக்குமுன் நீர் வைத்துக் கொள்ளல்
#556
வெம்பும் குருதி பேர் ஆற்றில் வேண்டும் தண்ணீர் வேழத்தின்
கும்பங்களிலே முகந்து எடுத்து குளிரவைத்து கொள்ளீரே

மேல்

*நிலத்தைத் தூய்மை செய்தல்
#557
சோரும் களிற்றின் வாலதியால் சுழல அலகிட்டு அலை குருதி
நீரும் தெளித்து கலம் வைக்க நிலமே சமைத்து கொள்ளீரே

மேல்

*உண்கலம் அமைத்தல்
#558
போர் மண்டலிகர் கேடகத்தின் புளக சின்னம் பரப்பீரே
பார் மண்டலிகர் தலை மண்டை பல மண்டைகளா கொள்ளீரே

மேல்

*பொன் வெள்ளிக் கலங்கள்
#559
அழிந்த கலிங்கர் பொன் பரிசை அவை பொன் கலமா கொள்ளீரே
விழுந்த தவள குடை மின்னும் வெள்ளி கலமா கொள்ளீரே

மேல்

*கூழ் பங்கிடக் கருவி கொள்ளல்
#560
நிலத்தை சமைத்து கொள்ளீரே நெடும் கை களிற்றின் இரு செவியாம்
கலத்தில் கொள்ள குறையாத கலங்கள் பெருக்கி கொள்ளீரே

மேல்

*பகல் விளக்கும் பா ஆடையும்
#561
கதம் பெற்று ஆர்க்கும் செறுநர் விழி கனலும் நிணமும் அணங்கின்-பால்
பதம் பெற்றார்க்கு பகல் விளக்கும் பா ஆடையுமா கொள்ளீரே

மேல்

*உணவுண்ண அழைத்தல்
#562
பரிசு படவே கலம் பரப்பி பந்தி பந்தி பட உங்கள்
வரிசையுடனே இருந்து உண்ண வாரீர் கூழை வாரீரே

மேல்

*தலைகளை அகப்பைகளாகக் கொள்ளல்
#563
கங்காபுரியின் மதில் புறத்து கருதார் சிரம் போய் மிக வீழ
இங்கே தலையின் வேல் பாய்ந்த இவை மூழைகளா கொள்ளீரே

மேல்

*மடைப்பேய்களுக்கு ஆணை
#564
கிடைக்க பொருது மணலூரில் கீழ்நாள் அட்ட பரணி கூழ்
படைத்து பயின்ற மடை பேய்கள் பந்தி-தோறும் வாரீரே

மேல்

*பார்ப்பனப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#565
அவதி இல்லா சுவை கூழ் கண்டு அங்காந்து அங்காந்து அடிக்கடியும்
பவதி பிட்சாந்தேகி எனும் பனவ பேய்க்கு வாரீரே

மேல்

*சமணப் பேய்களுக்குக் கூழ் வார்த்தல்
#566
உயிரை கொல்லா சமண் பேய்கள் ஒரு போழ்து உண்ணும் அவை உண்ண
மயிரை பார்த்து நிண துகிலால் வடித்து கூழை வாரீரே

மேல்

*புத்தப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#567
முழுத்தோல் போர்க்கும் புத்த பேய் மூளை கூழை நா குழற
கழுத்தே கிட்ட மணம் திரியா கஞ்சி ஆக வாரீரே

மேல்

*பார்வைப் பேய்க்குக் கூழை வார்த்தல்
#568
கொய்த இறைச்சி உறுப்பு அனைத்தும் கொள்ளும் கூழை வெள்ளாட்டின்
பைதல் இறைச்சி தின்று உலர்ந்த பார்வை பேய்க்கு வாரீரே

மேல்

*குருட்டுப் பேய்க்குக் கூழை வார்த்தல்
#569
ஊண் ஆதரிக்கும் கள்ள பேய் ஒளித்து கொண்ட கலம் தடவி
காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே

மேல்

*ஊமைப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#570
பையாப்போடு பசி காட்டி பதலை நிறைந்த கூழ் காட்டி
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே

மேல்

*கருவுற்ற பேய்க்குக் கூழ் வார்த்தல்
#571
அடைத்த செவிகள் திறந்தனவால் அடியேற்கு என்று கடைவாயை
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே

மேல்

*மூடப்பேய்க்குக் கூழ் வார்த்தல்
#572
பொல்லா ஓட்டை கலத்து கூழ் புறத்தே ஒழுக மறித்து பார்த்து
எல்லாம் கவிழ்த்து திகைத்திருக்கும் இழுதை பேய்க்கு வாரீரே

மேல்

*நோக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#573
துதிக்கை துணியை பல்லின் மேல் செவ்வே நிறுத்தி துதிக்கையின்
நுதிக்கே கூழை வார் என்னும் நோக்க பேய்க்கு வாரீரே

மேல்

*கூத்திப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#574
தடியால் மடுத்து கூழ் எல்லாம் தானே பருகி தன் கணவன்
குடியான் என்று தான் குடிக்கும் கூத்தி பேய்க்கு வாரீரே

மேல்

*விருந்துப் பேய்க்கும் ஊர்ப்பேய்க்கும் கூழ் வார்த்தல்
#575
வரு கூழ் பரணி களம் கண்டு வந்த பேயை முன் ஊட்டி
ஒரு கூழ் பரணி நாம் இருக்கும் ஊர்-கண் பேய்க்கு வாரீரே

மேல்

*கனாக்கண்டு உரைத்த பேய்க்குக் கூழ் வார்த்தல்
#576
இரவு கனவு கண்ட பேய்க்கு இற்றைக்கு அன்றி நாளைக்கும்
புரவி உரி தோல் பட்டைக்கே கூழை பொதிந்து வையீரே

மேல்

*கணக்கப் பேய்க்குக் கூழ் வார்த்தல்
#577
இணக்கம் இல்லா நமை எல்லாம் எண்ணி கண்டேம் என்று உரைக்கும்
கணக்க பேய்க்கும் அகம் களிக்க கையால் எடுத்து வாரீரே

மேல்

*பேய்கள் உண்ணல்
#578
மென் குடர் வெள்ளை குதட்டிரே மெல் விரல் இஞ்சி அதுக்கீரே
முன்கை எலும்பினை மெல்லீரே மூளையை வாரி விழுங்கீரே

மேல்

#579
அள்ளி அருகிருந்து உண்ணீரே அரிந்திடு தாமரை மொட்டு என்னும்
உள்ளி கறித்துக்கொண்டு உண்ணீரே ஊதி வரன்றிக்கொண்டு உண்ணீரே

மேல்

#580
தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் தாம் இனிதா படைத்துக்கொண்டு
நமக்கு ஒரு வாய் தந்த நான்முகனார் நாணும்படி களித்து உண்ணீரே

மேல்

#581
ஓடி உடல் வியர்த்து உண்ணீரே உந்தி பறந்து இளைத்து உண்ணீரே
ஆடி அசைந்து அசைந்து உண்ணீரே அற்றது அற அறிந்து உண்ணீரே

மேல்

*வாய் கழுவல்
#582
கொதித்த கரியின் கும்பத்து குளிர்ந்த தண்ணீர்-தனை மொண்டு
பொதுத்த தொளையால் புக மடுத்து புசித்த வாயை பூசீரே

மேல்

*வெற்றிலை போடுதல்
#583
பண்ணும் இவுளி செவி சுருளும் பரட்டின் பிளவும் படு கலிங்கர்
கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்து தின்னீரே

மேல்

*புரையேற்றம் நீங்குவதற்கு மருந்து
#584
பெருக்க தின்றீர் தாம்பூலம் பிழைக்க செய்தீர் பிழைப்பீரே
செருக்கும் பேய்காள் பூதத்தின் சிரத்தின் மயிரை மோவீரே

மேல்

*பேய்கள் களிப்பு மிகுதியால் கூத்தாடல்
#585
என்று களித்து குமண்டையிட்டே ஏப்பமிட்டு பருத்து நின்ற
குன்று குனிப்பன போல் களத்து கும்பிட்டே நடமிட்டனவே

மேல்

*பாடி நின்று ஆடின
#586
வாசி கிடக்க கலிங்கர் ஓட மானதன் ஏவிய சேனை வீரர்
தூசி எழுந்தமை பாடி நின்று தூசியும் இட்டு நின்று ஆடினவே

மேல்

*வென்றி பாடி ஆடின
#587
பொருகை தவிர்ந்து கலிங்கர் ஓட போக புரந்தரன் விட்ட தண்டின்
இரு கையும் வென்றது ஒர் வென்றி பாடி இரு கையும் வீசி நின்று ஆடினவே

மேல்

*பேய்கள் களிப்பு மிகுதியால் விளையாடல்
#588
வழுதியர் வரை முழை நுழை வடிவு இது என மத கரி வயிறுகள் புக நுழைவன சில
எழுதிய சிலையவர் செறி கடல் விழும் அவை இது என வழி குருதியின் விழுவன சில

மேல்

*உருள்வன சில மறிவன சில
#589
உருவிய சுரிகையொடு உயர் கணை விடு படை உருள் வடிவு இது என உருள்வன சிலசில
வெருவிய அடுநர் தம்முடை வடிவு இது என விரி தலை-அதனொடு மறிவன சிலசில

மேல்

*பேய்கள் குலோத்துங்கனை வாழ்த்துதல்
#590
உபயம் எனும் பிறப்பாளர் ஏத்த உரைத்த கலிங்கர்-தமை வென்ற
அபயன் அருளினை பாடினவே அணி செறி தோளினை வாழ்த்தினவே

மேல்

*வயப் புகழ் வாழ்த்தின
#591
திசையில் பல நரபாலர் முன்னே தெரிந்து உரைக்கும் சிசுபாலன் வைத
வசையில் வய புகழ் வாழ்த்தினவே மனு குல தீபனை வாழ்த்தினவே

மேல்

*பொன்னித் துறைவனை வாழ்த்தின
#592
பொன்னி துறைவனை வாழ்த்தினவே பொருநை கரையனை வாழ்த்தினவே
கன்னி கொழுநனை வாழ்த்தினவே கங்கை மணாளனை வாழ்த்தினவே

மேல்

*உலகுய்ய வந்தானை வாழ்த்தின
#593
ஆழிகள் ஏழும் ஒர் ஆழியின் கீழ் அடிப்பட வந்த அகலிடத்தை
ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே

மேல்

*கரிகாலனோடு ஒப்பிட்டு வாழ்த்தின
#594
பூ பதுமத்தன் படைத்து அமைத்த புவியை இரண்டாவதும் படைத்து
காப்பதும் என் கடன் என்று காத்த கரிகால சோழனை வாழ்த்தினவே

மேல்

*வாழ்த்து
#595
யாவரும் களி சிறக்கவே தருமம் எங்கும் என்றும் உளதாகவே
தேவர் இன் அருள் தழைக்கவே முனிவர் செய் தவம் பயன் விளைக்கவே

மேல்

#596
வேத நல் நெறி பரக்கவே அபயன் வென்ற வெம் கலி கரக்கவே
பூதலம் புகழ் பரக்கவே புவி நிலைக்கவே புயல் சுரக்கவே