கா – முதல் சொற்கள், கலிங்கத்துப்பரணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

காக்க 2
காக்கின்ற 1
காக்கும் 4
காகம் 2
காகமாய் 1
காசிபன் 1
காஞ்சனம் 1
காஞ்சி 3
காஞ்சிக்கும் 1
காட்ட 2
காட்டி 3
காட்டிய 1
காட்டுதற்கு 1
காடவர் 1
காடு 4
காடும் 1
காண் 3
காண்-மின் 21
காண்-மின்களோ 7
காண்-மினோ 12
காண்டல் 1
காண 1
காணலாம் 1
காணாத 1
காணாது 1
காணாமல் 2
காணில் 2
காணும் 4
காணுமாபோல் 1
காணேம் 1
காத்த 2
காத்தளிக்கும் 1
காத்து 4
காதல் 2
காதலனை 1
காதளவு 1
காதில் 1
காந்தருடன் 1
காந்து 1
காப்பது 1
காப்பதும் 1
காப்பார் 2
காப்பான் 1
காப்பு 1
காம்பிட்டு 1
காய் 1
காய 1
காயம் 1
கார் 3
கார்முகம் 1
காரண 1
காரிபர் 1
காரியங்களின் 1
காரை 1
கால் 7
கால்-வழி 1
கால்கள் 1
கால்களில் 1
கால 3
காலம் 2
காலன் 1
காலனுக்கு 1
காலால் 1
காலிங்கர்-தம் 1
காலினால் 1
காலும் 2
காலை 1
காலையே 1
காவலர்கள் 1
காவலளவும் 1
காவலன் 1
காவன் 1
காவிரி 3
காவிரியின் 1
காளம் 1
காளமும் 1
காளையம் 1
காற்று 2
காற்றும் 1
கான் 1
கானக 1
கானகத்து 1
கானகத்தே 1
கானம் 1
கானமோ 1
கானில் 1
கானும் 1

தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

காக்க (2)

செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/2
ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் – கலிங்:213/2

மேல்

காக்கின்ற (1)

அலகை எலாம் காக்கின்ற அம்மை பூதலம் காப்பான் அவனே என்ன – கலிங்:211/2

மேல்

காக்கும் (4)

அருமறையின் நெறி காட்ட அயன் பயந்த நிலமகளை அண்டம் காக்கும்
உரிமையினில் கைப்பிடித்த உபயகுலோத்தமன் அபயன் வாழ்க என்றே – கலிங்:2/1,2
கொள்ளிவாய்ப்பேய் காக்கும் கோபுரமும் நெடு மதிலும் – கலிங்:104/1
ஆறு உடைய திரு முடியான் அருள் உடைய பெருந்தேவி அபயன் காக்கும்
பேறு உடைய பூதமா பிறவாமல் பேய்களா பிறந்து கெட்டேம் – கலிங்:212/1,2
தண்டநாயகர் காக்கும் நவிலையில் – கலிங்:386/1

மேல்

காகம் (2)

கரிகள் கருவிகளோடு சிந்தின கழுகு நரியொடு காகம் உண்டன – கலிங்:447/1
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ – கலிங்:486/2

மேல்

காகமாய் (1)

கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ – கலிங்:486/2

மேல்

காசிபன் (1)

காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் – கலிங்:186/2

மேல்

காஞ்சனம் (1)

கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/2

மேல்

காஞ்சி (3)

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கலவி மடவீர் கழல் சென்னி – கலிங்:63/1
காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த கள போர் பாட திற-மினோ – கலிங்:63/2
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/2

மேல்

காஞ்சிக்கும் (1)

ந காஞ்சிக்கும் வடமலைக்கும் நடுவில் வெளிக்கே வேடனை விட்டு – கலிங்:73/1

மேல்

காட்ட (2)

புயல்வண்ணன் புனல் வார்க்க பூமிசையோன் தொழில் காட்ட புவன வாழ்க்கை – கலிங்:1/1
அருமறையின் நெறி காட்ட அயன் பயந்த நிலமகளை அண்டம் காக்கும் – கலிங்:2/1

மேல்

காட்டி (3)

இடை பார்த்து திறை காட்டி இறைவி திரு புருவத்தின் – கலிங்:536/1
பையாப்போடு பசி காட்டி பதலை நிறைந்த கூழ் காட்டி – கலிங்:570/1
பையாப்போடு பசி காட்டி பதலை நிறைந்த கூழ் காட்டி
கையால் உரைக்கும் ஊமை பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:570/1,2

மேல்

காட்டிய (1)

காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல் – கலிங்:535/1

மேல்

காட்டுதற்கு (1)

களம் அடைய காட்டுதற்கு முடிவது அன்று கவிழும் மத கரி சொரிய குமிழி விட்டு – கலிங்:503/1

மேல்

காடவர் (1)

கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே – கலிங்:329/2

மேல்

காடு (4)

காடு குலைந்து அலைய கைவளை பூசலிட கலவி விடா மடவீர் கடை திற-மின் திற-மின் – கலிங்:62/2
உள் அ போர் இரண்டு நிறைவித்தாள் உறையும் காடு பாடுவாம் – கலிங்:75/2
ஒரு பொழுதும் தரித்தன்றி ஊடுபோக்கு அரிது அணங்கின் காடு என்று அன்றோ – கலிங்:85/2
காடு இதனை கடத்தும் என கரு முகிலும் வெண் மதியும் கடக்க அப்பால் – கலிங்:86/1

மேல்

காடும் (1)

எ குவடும் எ கடலும் எந்த காடும் இனி கலிங்கர்க்கு அரண் ஆவது இன்றே நாளும் – கலிங்:463/1

மேல்

காண் (3)

இந்த்ரசாலம் உள கற்று வந்தனென் இருந்து காண் என இறைஞ்சியே – கலிங்:161/2
கண்டு காண் உன் புய வலி நீயும் அ – கலிங்:388/1
உள்ளும் புறம்பும் வெதும்பும் காண் உண்பதனுக்கு ஒருப்படுவீரே – கலிங்:515/2

மேல்

காண்-மின் (21)

காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே – கலிங்:292/2
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2
கடலின் மேல் கலம் தொடர பின்னே செல்லும் கலம் போன்று தோன்றுவன காண்-மின் காண்-மின் – கலிங்:475/2
படும் குருதி கடும் புனலை அடைக்க பாய்ந்த பல குதிரை தறி போன்ற பரிசு காண்-மின் – கலிங்:476/2
போம் அளவும் அவர் அருகே இருந்துவிட்டு போகாத நரி குலத்தின் புணர்ச்சி காண்-மின் – கலிங்:478/2
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/2
பூ மழை மேல் பாய்ந்து எழுந்து நிரந்த வண்டு பொருள்பெண்டிர் போன்றமையும் காண்-மின் காண்-மின் – கலிங்:479/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2
காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் – கலிங்:481/2
எம் கணவர் கிடந்த இடம் எங்கே என்று என்று இடாகினியை கேட்பாரை காண்-மின் காண்-மின் – கலிங்:481/2
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் – கலிங்:482/2
நீ மடித்து கிடந்தது என புலவி கூர்ந்து நின்று ஆவி சோர்வாளை காண்-மின் காண்-மின் – கலிங்:482/2
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/2
அரமகளிர் அ உயிரை புணரா முன்னம் ஆவி ஒக்க விடுவாளை காண்-மின் காண்-மின் – கலிங்:483/2
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் – கலிங்:484/2
பரு வயிர தோள் எங்கே எங்கே என்று பயிரவியை கேட்பாளை காண்-மின் காண்-மின் – கலிங்:484/2
படவு ஊன்றி விடும் தொழிலோர் என்ன முன்னம் பசும் குருதி நீர் தோன்றும் பரிசு காண்-மின் – கலிங்:499/2
வாய் அகல் அம்பரத்தினிடை கௌவி வல் வாய் வகிர்ப்பட்டு நிலம் பட்ட வண்ணம் காண்-மின் – கலிங்:500/2
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2
முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை இன்னம் காண்-மின் – கலிங்:502/2

மேல்

காண்-மின்களோ (7)

ஓடி தெறிக்க கரும் கொண்டல் செம் கொண்டல் ஒக்கின்ற இவ்வாறு காண்-மின்களோ – கலிங்:485/2
கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ – கலிங்:486/2
ஒக்க அடு செம் களம் பங்கய பொய்கை ஆமாறு காண்-மின்களோ – கலிங்:487/2
கயிற்றால் இழுப்புண்டு சாயாது நிற்கும் கழாய் ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:488/2
பரப்பி சுழன்று இங்கு ஒர் பாறு ஆட ஈது ஓர் பருந்து ஆடல் காண்-மின்களோ – கலிங்:489/2
கரும் சேவகம் செய்து செஞ்சோறு அற செய்த கைம்மாறு காண்-மின்களோ – கலிங்:490/2
மான சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை வட்டு ஒத்தல் காண்-மின்களோ – கலிங்:491/2

மேல்

காண்-மினோ (12)

கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2
கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/2
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2
கவி குலம் கடலிடை சொரி பெரும் கிரி என கரிகளின் பிணம் இதில் காண்-மினோ காண்-மினோ – கலிங்:494/2
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
கற்றவா ஒருவன் வில் கற்றவா என்று தம் கை மறித்தவரையும் காண்-மினோ காண்-மினோ – கலிங்:495/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/2
கண் இமைப்பு ஒழியவே முகம் மலர்ந்து உடல்களும் கடவுளோர் போலுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:496/2
குறைத்தலை துணி கொல்லன் எஃகு எறி கூடம் ஒத்தமை காண்-மினோ – கலிங்:497/2
சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ – கலிங்:498/2

மேல்

காண்டல் (1)

காணலாம் வகை கண்டனம் நீ இனி காண்டல் வேண்டும் என கழல் போற்றவே – கலிங்:323/2

மேல்

காண (1)

அணிகள் ஒரு முகமாக உந்தின அமரர் அமர் அது காண முந்தினர் – கலிங்:445/1

மேல்

காணலாம் (1)

காணலாம் வகை கண்டனம் நீ இனி காண்டல் வேண்டும் என கழல் போற்றவே – கலிங்:323/2

மேல்

காணாத (1)

கரும் காகம் வெண் காகமாய் நின்றவா முன்பு காணாத காண்-மின்களோ – கலிங்:486/2

மேல்

காணாது (1)

காணாது அரற்றும் குருட்டு பேய் கைக்கே கூழை வாரீரே – கலிங்:569/2

மேல்

காணாமல் (2)

ஆளும் கொழுநர் வரவு பார்த்து அவர்-தம் வரவு காணாமல்
தாளும் மனமும் புறம்பாக சாத்தும் கபாடம் திற-மினோ – கலிங்:38/1,2
மணல் ஒன்று காணாமல் வரை எடுத்து மயங்கினவே – கலிங்:96/2

மேல்

காணில் (2)

அட்டம் இட்ட நெடும் கழை காணில் என் அன்னை அன்னை என்று ஆலும் குழவிய – கலிங்:142/1
ஒட்டல் ஒட்டகம் காணில் என் பிள்ளையை ஒக்கும் ஒக்கும் என்று ஒக்கலை கொள்வன – கலிங்:142/2

மேல்

காணும் (4)

காணும் பொழுது மறந்திருப்பீர் கன பொன் கபாடம் திற-மினோ – கலிங்:65/2
அமல வேதம் இது காணும் இதில் ஆரண நிலத்து அமலனே அபயன் ஆக அறிக என்று அருளியே – கலிங்:184/2
வைப்பு காணும் நமக்கு இன்று வாரீர் கூழை எல்லீரும் – கலிங்:549/1
துடைத்து நக்கி சுவை காணும் சூல் பேய்க்கு இன்னும் சொரியீரே – கலிங்:571/2

மேல்

காணுமாபோல் (1)

கற்று வந்தார் கற்ற அவன் காணுமாபோல் கடைபோக கண்டருள் என் கல்வி என்றே – கலிங்:174/2

மேல்

காணேம் (1)

வேகைக்கு விறகு ஆனேம் மெலியா நின்றேம் மெலிந்த உடல் தடிப்பதற்கு விரகும் காணேம்
சாகைக்கு இத்தனை ஆசை போதும் பாழின் சாக்காடும் அரிதாக தந்து வைத்தாய் – கலிங்:215/1,2

மேல்

காத்த (2)

ஊர் காக்க மதில் வேண்டா உயிர் காத்த உடம்பினை விட்டு ஓடிப்போதும் – கலிங்:213/2
காப்பதும் என் கடன் என்று காத்த கரிகால சோழனை வாழ்த்தினவே – கலிங்:594/2

மேல்

காத்தளிக்கும் (1)

ஊழி-தொறு ஊழியும் காத்தளிக்கும் உலகு உய்ய வந்தானை வாழ்த்தினவே – கலிங்:593/2

மேல்

காத்து (4)

குல நான்கும் காத்து அளிக்கும் குலதீபன் வாழ்க என்றே – கலிங்:6/2
குந்தளரை கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன் குவலயம் காத்து அளித்த பின்னை – கலிங்:206/1
அவ்வளவும் திகிரி வரை அளவும் செங்கோல் ஆணை செல்ல அபயன் காத்து அளிக்கும் ஆறும் – கலிங்:207/2
வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பு-அதனை விடியளவும் காத்து நின்றே – கலிங்:464/2

மேல்

காதல் (2)

காதல் கூர்தரு மரீசி மகன் ஆகி வளரும் காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் – கலிங்:186/2
கலையினொடும் கலைவாணர் கவியினொடும் இசையினொடும் காதல் மாதர் – கலிங்:277/1

மேல்

காதலனை (1)

அ அருக்கன் மகன் ஆகி மனு மேதினி புரந்து அரிய காதலனை ஆவினது கன்று நிகர் என்று – கலிங்:187/1

மேல்

காதளவு (1)

காதளவு அளவு எனும் மதர் விழி கடல் அமுது அனையவர் திற-மினோ – கலிங்:21/2

மேல்

காதில் (1)

அண்டம் உறு குல கிரிகள் அவள் ஒருகால் இரு காதில்
கொண்டு அணியின் குதம்பையுமாம் கோத்து அணியின் மணி வடமாம் – கலிங்:132/1,2

மேல்

காந்தருடன் (1)

காந்தருடன் கனல் அமளி-அதன் மேல் வைகும் கற்பு உடை மாதரை ஒத்தல் காண்-மின் காண்-மின் – கலிங்:480/2

மேல்

காந்து (1)

கயல் ஒளித்த கடும் சுரம் போல் அகம் காந்து வெம் பசியில் புறம் தீந்தவும் – கலிங்:143/2

மேல்

காப்பது (1)

ஆர் காப்பார் எங்களை நீ அறிந்தருளி காப்பது அல்லால் அடைய பாழாம் – கலிங்:213/1

மேல்

காப்பதும் (1)

காப்பதும் என் கடன் என்று காத்த கரிகால சோழனை வாழ்த்தினவே – கலிங்:594/2

மேல்

காப்பார் (2)

ஆர் காப்பார் எங்களை நீ அறிந்தருளி காப்பது அல்லால் அடைய பாழாம் – கலிங்:213/1
தோலாத களிற்று அபயன் வேட்டை பன்றி தொழு அடைத்து தொழு-அதனை காப்பார் போல – கலிங்:464/1

மேல்

காப்பான் (1)

அலகை எலாம் காக்கின்ற அம்மை பூதலம் காப்பான் அவனே என்ன – கலிங்:211/2

மேல்

காப்பு (1)

காப்பு எலாம் உடைய தானே படைப்பதும் கடனா கொண்டு – கலிங்:262/1

மேல்

காம்பிட்டு (1)

இணைத்த முரசம் வாள் காம்பிட்டு இரட்டை வாளி ஏற்றீரே – கலிங்:512/2

மேல்

காய் (1)

களிறு கங்கை நீர் உண்ண மண்ணையில் காய் சினத்தொடே கலவு செம்பியன் – கலிங்:202/1

மேல்

காய (1)

மா காய மத மலையின் பிண மலை மேல் வன் கழுகின் சிறகால் செய்த – கலிங்:516/1

மேல்

காயம் (1)

உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை – கலிங்:475/1

மேல்

கார் (3)

கார் இரும்பின் மகர தோரணம் ஆக கரும் பேய்கள் – கலிங்:105/1
கார் எலாம் எழுந்து ஏழரை நாழிகை காஞ்சனம் பொழி காஞ்சி அதன்-கணே – கலிங்:314/2
சாதுரங்கம் தலைசுமந்து கமம் சூல் கொண்டு தனிப்படும் கார் என வரும் அ தன்மை காண்-மின் – கலிங்:501/2

மேல்

கார்முகம் (1)

கறுத்த செழியன் கழல் சிவப்ப வரை ஏற கார்முகம் வளைத்து உதியர் கோமகன் முடி-கண் – கலிங்:16/1

மேல்

காரண (1)

காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு – கலிங்:9/1

மேல்

காரிபர் (1)

கன்னடர் பல்லவர் கைதவர் காடவர் காரிபர் கோசலரே – கலிங்:329/2

மேல்

காரியங்களின் (1)

காரண காரியங்களின் கட்டு அறுப்போர் யோக கருத்து என்னும் தனி தறியில் கட்ட கட்டுண்டு – கலிங்:9/1

மேல்

காரை (1)

பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேய் – கலிங்:76/1

மேல்

கால் (7)

ஓரிரண்டு கால் நாட்டி ஓர் இரும்பை மிசை வளைத்தே – கலிங்:105/2
மூளை சேற்றில் வழுக்கி விழுந்திட மொழி பெயர்ந்து ஒரு கால் முடம் ஆனவும் – கலிங்:145/2
ஒன்று கால் முறிய மேல் விழுந்து அடிசில் உண்ண எண்ணி வெறும் மண்ணின் மேல் – கலிங்:168/2
தன்னுடைய கால் தனது பிற்பட மனத்து வகை தள்ளிவர ஓடி வரவே – கலிங்:301/2
உடலின் மேல் பல காயம் சொரிந்து பின் கால் உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை – கலிங்:475/1
நெடும் குதிரை மிசை கலணை சரிய பாய்ந்து நிண சேற்றில் கால் குளிப்ப நிரையே நின்று – கலிங்:476/1
அளப்பரிய குளப்பு கால் அகப்பைகளாக கொள்ளீரே – கலிங்:548/2

மேல்

கால்-வழி (1)

களவழி கவிதை பொய்கை உரைசெய்ய உதியன் கால்-வழி தளையை வெட்டி அரசு இட்ட அவனும் – கலிங்:195/2

மேல்

கால்கள் (1)

பொரு நராதிபர் கண்கள் சிவந்தில போரில் ஓடிய கால்கள் சிவந்தன – கலிங்:256/1

மேல்

கால்களில் (1)

கதங்களில் பொருது இறைஞ்சிடா அரசர் கால்களில் தளையும் நூல்களின் – கலிங்:274/1

மேல்

கால (3)

கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ – கலிங்:222/2
கதிர் சுடர் விளக்கு ஒளி கறுத்து எரியுமாலோ கால முகில் செம் குருதி கால வருமாலோ – கலிங்:222/2
கால களம் அது கண்டருள் இறைவீ கடிது எனவே – கலிங்:473/1

மேல்

காலம் (2)

இன்னும் உள கிடைப்பன இங்கு இருக்க என்ன யான் இருந்தேன் சில காலம் இருந்த நாளில் – கலிங்:177/2
காலம் மும்மையும் உணர்ந்தருளும் நாரதன் எனும் கடவுள் வேதமுனி வந்து கடல் சூழ் புவியில் நின் – கலிங்:179/1

மேல்

காலன் (1)

இருந்த உடல் கொள காலன் இடுகின்ற நெடும் தூண்டில் என்ன தோன்றும் – கலிங்:118/2

மேல்

காலனுக்கு (1)

காலனுக்கு இது வழக்கு என உரைத்த அவனும் – கலிங்:192/1

மேல்

காலால் (1)

காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி – கலிங்:278/1

மேல்

காலிங்கர்-தம் (1)

அவர் இபம் சொரி மதம் கழி என புக மடுத்து அவர் பரித்திரை அலைத்து அமர் செய் காலிங்கர்-தம்
கவரி வெண் நுரை நிரைத்து அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:493/1,2

மேல்

காலினால் (1)

காலினால் வரும் யமுனை வெள்ளமும் கங்கை வெள்ளமும் காண்-மின் என்னவே – கலிங்:292/2

மேல்

காலும் (2)

கரு நெடும் பனங்காடு முழுமையும் காலும் கையும் உடையன போல்வன – கலிங்:135/2
கொற்ற வாள் மறவர் ஓச்ச குடரொடு தலையும் காலும்
அற்று வீழ் ஆனை பானை அடுப்பினில் ஏற்றும் அம்மா – கலிங்:518/1,2

மேல்

காலை (1)

கலி இருள் பரந்த காலை கலி இருள் கரக்க தோன்றும் – கலிங்:261/1

மேல்

காலையே (1)

சிங்களத்தொடு தென் மதுராபுரி செற்ற கொற்றவன் வெற்றி கொள் காலையே
வெம் களத்தில் அடு மடை பேய் குலம் வேலை புக்கு விரல்கள் திறந்தவும் – கலிங்:152/1,2

மேல்

காவலர்கள் (1)

பொன்னின் மாலை மலர் மாலை பணி மாறி உடனே புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ் பிடி வர – கலிங்:286/1

மேல்

காவலளவும் (1)

தரணி காவலளவும் செல மொழிந்து முனிவன் தான் எழுந்தருள மா முனி மொழிந்த படியே – கலிங்:185/2

மேல்

காவலன் (1)

காட்டிய வேழ அணி வாரி கலிங்க பரணி நம் காவலன் மேல் – கலிங்:535/1

மேல்

காவன் (1)

கமல யோனி முதலாக வரும் உங்கள் மரபில் காவன் மன்னவர்கள் ஆகி வருகின்ற முறையால் – கலிங்:184/1

மேல்

காவிரி (3)

காவிரி என வரும் மட நலீர் கனக நெடும் கடை திற-மினோ – கலிங்:59/2
காவிரி புனல் கொணர்ந்த அவனும் புவனியின் – கலிங்:192/2
கவன நெடும் பரி வீர தரன் காவிரி நாடுடையான் இரு தோள் – கலிங்:528/1

மேல்

காவிரியின் (1)

காலால் தண்டலை உழக்கும் காவிரியின் கரை மருங்கு வேட்டையாடி – கலிங்:278/1

மேல்

காளம் (1)

சாயும் மற்று அவர் காளம் ஊதிகள் தம்மை ஒத்தமை காண்-மினோ – கலிங்:498/2

மேல்

காளமும் (1)

காளமும் களிறும் பெறும் பாணர் தம் கல்வியில் பிழை கண்டனன் கேட்கவே – கலிங்:324/2

மேல்

காளையம் (1)

கதிர் விசும்பு-அதனிலே இதனிலும் பெரியது ஓர் காளையம் விளையுமா காண்-மினோ காண்-மினோ – கலிங்:492/2

மேல்

காற்று (2)

செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/2
பதடிகளாய் காற்று அடிப்ப நிலை நிலாமல் பறக்கின்றேம் பசிக்கு அலைந்து பாதி நாக்கும் – கலிங்:217/1

மேல்

காற்றும் (1)

செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/2

மேல்

கான் (1)

கான் அரணும் மலை அரணும் கடல் அரணும் சூழ் கிடந்த கலிங்கர் பூமி – கலிங்:377/1

மேல்

கானக (1)

தீய அ கொடிய கானக தரை திறந்த வாய்-தொறும் நுழைந்து தன் – கலிங்:79/1

மேல்

கானகத்து (1)

ஓதி வந்த அ கொடிய கானகத்து உறை அணங்கினுக்கு அயன் வகுத்த இ – கலிங்:97/1

மேல்

கானகத்தே (1)

அ கானகத்தே உயிர் பறிப்பீர் அம் பொன் கபாடம் திற-மினோ – கலிங்:73/2

மேல்

கானம் (1)

கானம் புக வேளம் புகு மடவீர் கடை திற-மின் – கலிங்:40/2

மேல்

கானமோ (1)

இ நிலத்துளோர் ஏகலாவதற்கு எளிய கானமோ அரிய வானுளோர் – கலிங்:84/1

மேல்

கானில் (1)

பல்கால் திண் திரை கரங்கள் கரையின் மேன்மேல் பாய் கடல்கள் நூக்குமது அ படர் வெம் கானில்
செல் காற்று வாராமல் காக்க அன்றோ திசைக்கரியின் செவி காற்றும் அதற்கே அன்றோ – கலிங்:94/1,2

மேல்

கானும் (1)

விழுந்தன கானும் மலையும் வெறுந்தரை ஆன திசைகள் – கலிங்:358/2

மேல்