தே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 4
தேக்கி 4
தேக்கியும் 1
தேக்கினர் 1
தேக்குகிற்பரால் 1
தேக்கும் 2
தேக்குவர் 2
தேக்குவல் 1
தேக்குறல் 1
தேக்கெறிந்து 2
தேக்கெறிபவர் 1
தேக்கெறிய 1
தேக்கெறிவர் 1
தேக்கொடு 1
தேக 4
தேகத்தில் 1
தேகத்தை 2
தேகந்தான் 1
தேகபந்தம் 1
தேகம் 8
தேகமும் 1
தேகருக்கு 1
தேங்கிய 1
தேங்குவ 1
தேச 10
தேசக்கு 1
தேசங்கள் 1
தேசத்தவர் 1
தேசத்தன் 1
தேசத்தனாம் 1
தேசத்தில் 3
தேசத்தின் 1
தேசத்து 14
தேசத்து_உளாரும் 1
தேசத்தும் 1
தேசத்தை 9
தேசம் 14
தேசம்-நின்று 1
தேசமும் 1
தேசமே 1
தேசன் 1
தேசாந்தத்தில் 1
தேசிக 6
தேசிகர் 1
தேசிகரிடத்து 1
தேசிகன் 5
தேசிகன்-வயின் 1
தேசிகனும் 1
தேசு 11
தேசுற்ற 1
தேசுற 1
தேசொடு 1
தேட்டம் 1
தேடலிர் 1
தேடலீர் 1
தேடி 5
தேடிய 1
தேடியும் 2
தேடினர் 1
தேடினன் 1
தேடு 1
தேடும் 2
தேடுவது 1
தேடுவன் 1
தேடுவீர் 1
தேண்டி 1
தேண்டு 1
தேண்டுதி 1
தேம் 6
தேம்பி 9
தேம்பிய 1
தேம்பியே 2
தேம்பினன் 1
தேம்பினார் 1
தேம்பு 1
தேம்புவார் 1
தேம்புவாள் 1
தேமாசு 1
தேய் 1
தேய்க்கவும் 1
தேய்க்கும் 1
தேய்த்திடு 1
தேய்த்து 2
தேய்தல் 1
தேய்ந்தது 1
தேய்வார் 1
தேய்வுற்று 1
தேய 4
தேயத்தில் 1
தேயத்து 2
தேயத்தை 1
தேயும் 2
தேயுமால் 1
தேயுறு 1
தேர் 7
தேர்-மின் 2
தேர்-மினோ 1
தேர்க 2
தேர்கில்லேன் 1
தேர்கில 1
தேர்கிலார் 2
தேர்கிலேன் 2
தேர்கிலை 3
தேர்குவாம் 1
தேர்கொடும் 1
தேர்தி 4
தேர்தியால் 1
தேர்ந்த 1
தேர்ந்ததால் 1
தேர்ந்தனம் 1
தேர்ந்தனன் 2
தேர்ந்து 5
தேர்ந்தும் 1
தேர்ந்தேன் 1
தேர்வல் 1
தேர்வாம் 1
தேர்வான் 2
தேர்வுழி 1
தேரா 2
தேராது 4
தேரார் 4
தேரான் 2
தேரில் 10
தேரின் 6
தேரினும் 1
தேரும் 3
தேரும்கால் 1
தேருமாறு 2
தேரை 1
தேரையில் 1
தேரையின் 1
தேரையை 1
தேவ 109
தேவ_கணங்கள் 1
தேவ_குமாரன் 1
தேவ_சுதன் 1
தேவ_தூஷணம் 3
தேவ_தூதர் 2
தேவ_தூதரும் 1
தேவ_தேவ 4
தேவ_தேவனை 1
தேவ_நீதி 1
தேவ_மைந்தன் 4
தேவ_மைந்தனார் 1
தேவ_ஆவியின் 2
தேவர் 5
தேவர்_கோன் 1
தேவர்களை 1
தேவரீரே 1
தேவருக்கு 1
தேவரும் 1
தேவன் 5
தேவனே 1
தேவனை 3
தேவாதி 1
தேவாதிபன்-தனை 1
தேவாரத்தை 1
தேவாரம் 3
தேவாராதனை 1
தேவாலயம் 3
தேவாவி 1
தேவாவிக்கும் 1
தேவின் 1
தேவினை 1
தேவு 1
தேவே 4
தேவை 9
தேள் 1
தேளின் 1
தேற்றம் 1
தேற்றரவும் 1
தேற்றினன் 1
தேற்று 1
தேறல் 3
தேறற்பாற்றோ 1
தேறி 6
தேறியும் 2
தேறினர் 1
தேறினன் 2
தேறினை 1
தேறுக 2
தேறுகில்லேம் 1
தேறுகிற்கிலன் 1
தேறுதல் 1
தேறுதல்புரிந்து 1
தேறும் 1
தேறுவன் 1
தேறுற்றான் 1
தேறுற்றிலவாய் 1
தேன் 23
தேனில் 1
தேனினும் 1
தேனீ 1
தேனும் 1
தேனை 1
தேனொடு 2

தே (4)

தே மலர் தொடை நரபதி ஒருவன் முன் தியங்கி – ஆதி:11 46/1
தே என நினைக்க ஒரு ஜெந்தும் இல என்னா – நிதான:2 59/3
தூய நாள்_மலர் தே துளி துய்த்திடும் – ஆரணிய:6 45/2
புரை_அறு புண்ணிய புனித தே மொழி – ஆரணிய:9 52/1
மேல்


தேக்கி (4)

தேவ போனகம் ஆர உண்டு ஆனந்தம் தேக்கி
ஓவு_இல் அன்பொடு துதி பகர்ந்து உவந்து இனிது இருப்பாம் – ஆதி:11 8/2,3
பொங்கு ஜீவபுஷ்கரிணியின் புது புனல் தேக்கி
அங்கு உரித்த புல் பூண்டு தண்டலை குலம் அனைத்தும் – ஆதி:18 5/1,2
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கி
கான வேழமும் சிங்கமும் களிப்பன காணாய் – குமார:4 57/3,4
உண்டு தேக்கி உள களியுற்று நீ – ஆரணிய:8 89/1
மேல்


தேக்கியும் (1)

ஜீவனுக்கு அமுதாய் உண்டு தேக்கியும் – ஆரணிய:6 41/4
மேல்


தேக்கினர் (1)

ஆர உண்டு அகம் தேக்கினர் ஆனந்த பதவி – இரட்சணிய:2 25/2
மேல்


தேக்குகிற்பரால் (1)

செறி பரமானந்தம் தேக்குகிற்பரால் – ஆரணிய:4 32/4
மேல்


தேக்கும் (2)

தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/4
திரு மலிந்த இ சீவபுஷ்கரிணி நீர் தேக்கும் – ஆதி:18 21/4
மேல்


தேக்குவர் (2)

நீதியை பசித்தவர் நிறைய தேக்குவர்
ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/1,2
முந்திரிப்பழ நறை உண்டு தேக்குவர் முறையால் – இரட்சணிய:1 41/4
மேல்


தேக்குவல் (1)

பிணங்குவாய் எனில் உயிர் பிழிந்து தேக்குவல்
உணங்கியோ எது துணிபு உரைத்தி என்றனன் – நிதான:2 38/2,3
மேல்


தேக்குறல் (1)

சிறை அளி முரன்று மொய்த்து அருந்தி தேக்குறல்
மறையவர் குழீஇ துதி பகர்ந்து இம்மாநுவேல் – ஆரணிய:4 23/2,3
மேல்


தேக்கெறிந்து (2)

தின்று தேக்கெறிந்து உழல்வது போலும் என் சீர்மை – ஆதி:14 111/4
உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி – நிதான:7 53/2
மேல்


தேக்கெறிபவர் (1)

அன்ன சத்திரத்து உண்டு தேக்கெறிபவர் அனந்தம் – நிதான:7 54/1
மேல்


தேக்கெறிய (1)

உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/3
மேல்


தேக்கெறிவர் (1)

இருமையும் நுகர்ந்து தேக்கெறிவர் எங்குமே – ஆரணிய:4 26/4
மேல்


தேக்கொடு (1)

வேங்கை சந்தனம் கார் அகில் தேக்கொடு மிடைந்த – ஆதி:18 2/1
மேல்


தேக (4)

ஜீவ ரக்ஷை உளம் பதித்து தேக இச்சை-தனை முனிந்து – நிதான:9 67/1
ஜீவன் எமக்கு கிறிஸ்து யேசு தேக பந்தம் தீர்க்க வரு – நிதான:9 95/1
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும் – இரட்சணிய:2 13/1
மேல்


தேகத்தில் (1)

மனித தேகத்தில் வருவர் மெய் மனம் திருப்புக என்று – ஆதி:9 7/3
மேல்


தேகத்தை (2)

அநித்த தேகத்தை வீழ்த்தினன் ஆர்_உயிர் அந்தோ – குமார:2 299/3
மானவ தேகத்தை வரைந்திட்டு ஆவியை – குமார:2 395/2
மேல்


தேகந்தான் (1)

சேய்மையின் விளங்க கண்ட தேகந்தான் கிட்டக்கிட்ட – நிதான:5 2/1
மேல்


தேகபந்தம் (1)

ஜீவன் ஆம் தேகபந்தம் தீர்ப்பதற்கு இயல்வதாய – நிதான:3 19/2
மேல்


தேகம் (8)

தேசு மல்கு எழில் தேகம் கூடுவார் – ஆதி:4 27/4
பாத்திரம் ஆக தேகம் படு பயன் தமதே ஆக – ஆதி:6 7/3
தேகம் எடுத்து என் ஆயுள் படைத்து என் திகழ் செல்வ – ஆதி:16 23/1
நேருமோ ஒன்றி தேகம் நேரும் என்று உரைப்பதானான் – நிதான:5 3/4
தேகம் வன் பொறை உற தெருமரல் உறுகினும் – ஆரணிய:9 33/2
தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்கும தனு – இரட்சணிய:3 18/1
வருந்தும் மானிட தேகம் மடிந்ததால் – இரட்சணிய:3 37/2
திமிரம் நீங்கும் முன் தேகம் நீங்கி என் ஜீவன் அம்மையில் சேரினும் – தேவாரம்:2 10/1
மேல்


தேகமும் (1)

தேகமும் புனிதம் ஆம் ஜீவ நீரினே – ஆரணிய:4 16/4
மேல்


தேகருக்கு (1)

மின் என புகை என வீயும் தேகருக்கு
என் ஒரு பெருமை என்று எறியும் நீரது – நிதான:1 12/1,2
மேல்


தேங்கிய (1)

ஜீவ மாளிகை திரு_முன்றில் தேங்கிய
ஜீவ நீர்நிலை பெருக்கெடுத்து திவ்விய – ஆதி:4 49/1,2
மேல்


தேங்குவ (1)

எரிவ காந்துவ ஏங்குவ தேங்குவ
இரிவ சோருவ ஏகுவ மீளுவ – ஆதி:14 157/2,3
மேல்


தேச (10)

தேச நாசத்தை எண்ணி திகில்படும் பிணித்து நின்ற – ஆதி:2 48/1
தேச நாசத்துக்கு அகறலே நலன் என தெரிந்தான் – ஆதி:8 31/3
செயல் ஒழிந்து யான் திருமினும் தேச நாசத்தில் – ஆதி:11 26/3
நாச தேச சுகத்தினை நாடுவேன் – ஆதி:12 72/2
தீமையில் திருந்தும் உன் தேச வாழ்க்கையின் – நிதான:2 25/1
எல்லையை கடந்து ஓர் கானத்து இறுத்தனன் நாச தேச
அல்லலை கடந்து வந்த ஆரண கிழவன் அம்மா – நிதான:3 77/3,4
நாச தேச மாது அமங்கல கழுத்திடும் நாண் போல் – நிதான:7 62/4
நாச தேச நகரியின் நண்பொடு – நிதான:8 6/1
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
நல்ல தேச முறைப்படி நாடுவல் – ஆரணிய:9 20/2
மேல்


தேசக்கு (1)

நச்சி இங்கு உழலும் நாய் போல் நலம்_இலா நாச தேசக்கு
உச்சித வாழ்வை நச்சிக்கொண்டு அலைகின்றேம் யாமே – ஆதி:2 26/3,4
மேல்


தேசங்கள் (1)

மேதினி படு தேசங்கள் வியன் மறுகு ஆக – நிதான:7 27/1
மேல்


தேசத்தவர் (1)

நாச தேசத்தவர் எவரும் நாள்-தொறும் – நிதான:4 13/1
மேல்


தேசத்தன் (1)

ஐய கேள் நாச தேசத்தன் ஆங்கு அமர் – ஆதி:3 5/1
மேல்


தேசத்தனாம் (1)

அம்ம கேள் நாச தேசத்தனாம் இவன் – குமார:1 20/1
மேல்


தேசத்தில் (3)

நனி திரிந்தனர் விலங்கு என நாச தேசத்தில் – ஆதி:8 1/4
நன்று நன்று உன் உரை நாச தேசத்தில்
நின்று உயிர் அழிந்து எரி நிரையம் சேரவோ – ஆதி:10 9/2,3
நாச தேசத்து உளேன் நாச தேசத்தில்
நீச வெவ்_வினை குடி நிலவிற்று ஆதலின் – நிதான:2 18/1,2
மேல்


தேசத்தின் (1)

சீலமும் ஒழுக்கமும் திறம்பு தேசத்தின்
சாலமும் மாயமும் தழுவி இன்னும் என் – ஆதி:10 10/1,2
மேல்


தேசத்து (14)

நாமும் நாம் வசிக்கும் இந்த நாச தேசத்து_உளாரும் – ஆதி:2 22/1
நன்றுநன்று உன் நிலை நாச தேசத்து
நின்றுநின்று இத்துணை தாழ்த்தல் நீதியோ – ஆதி:3 13/1,2
பாவம் மல்கிய நாச தேசத்து வெம் பரப்பில் – ஆதி:8 10/1
நாச தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான் – ஆதி:8 31/1
நாழி ஒன்றாயினும் நாச தேசத்து
தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/2,3
நல் முறை அறிகிலான் நாச தேசத்து
செல் முறை துணிந்தனன் ஜீவன் மல்கிய – ஆதி:10 27/2,3
நாச தேசத்து உளேம் நாங்கள் நல் வழி – ஆதி:19 47/1
நஞ்சு இது என்னவும் நாச தேசத்து
பஞ்ச_பாதக திரள் படர்ந்தது என்னவும் – குமார:1 2/2,3
நாச தேசத்து உளேன் நயந்து நாள்-தொறும் – குமார:1 12/1
நாச தேசத்து உளேன் நாச தேசத்தில் – நிதான:2 18/1
பொற்பு உறு நாச தேசத்து போந்து நீ – நிதான:2 37/1
நன்னர் அறிகுவன் வாழ்க்கை நாச தேசத்து ஒருசார் – நிதான:5 22/2
அங்கிலோ தேசத்து உள்ள அரும் புருஷார்த்தம் கொள்ளார் – நிதான:7 75/1
கேடு மல்கிய நாச தேசத்து உளேம் கிருபை – இரட்சணிய:3 76/1
மேல்


தேசத்து_உளாரும் (1)

நாமும் நாம் வசிக்கும் இந்த நாச தேசத்து_உளாரும்
கோ_முறை வழுவா தூய கொற்றவன்-தனை போற்றாமல் – ஆதி:2 22/1,2
மேல்


தேசத்தும் (1)

பல் வளம் கெழுமும் நானா தேசத்தும் பயின்று அங்கு உள்ள – நிதான:7 74/1
மேல்


தேசத்தை (9)

நாச தேசத்தை விட்டு நடப்பதே கருமம் அன்றேல் – ஆதி:2 11/2
தீ வரவிருந்த நாச தேசத்தை ஒருவி இன்னே – ஆதி:2 38/2
ஒக்கலை உரிமையை உவக்கும் தேசத்தை
இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில் – ஆதி:9 169/2,3
நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால் – ஆதி:11 20/4
நாத்திக புலையன் அந்தோ நாச தேசத்தை நச்சி – ஆதி:14 132/3
மறம் எலாம் குடிகொள் நாச தேசத்தை மரு_இல் ஞான – ஆதி:19 95/1
நாச தேசத்தை என்று எழுந்த நல்லுரை – குமார:1 42/2
அழிவு_இலாத சீயோன் மலை தேசத்தை ஆக்கும் – ஆரணிய:1 25/3
மோக இச்சக தேசத்தை முற்றும் விட்டு ஒருவித்து – ஆரணிய:8 1/2
மேல்


தேசம் (14)

நெருங்கிய அரசன் சீற்ற நெருப்பினால் நாச தேசம்
ஒருங்கு அவிந்து ஒழியும் காலம் உற்றதை உணரேம் ஆகி – ஆதி:2 28/2,3
சத்துரு ஆகினீர் நும் தரிப்பு இனி நாச தேசம்
நித்திய ஜீவ நாட்டின் நெறி கடைப்பிடியீராயில் – ஆதி:7 15/2,3
திங்கள் ஓர் இரண்டு மூன்று செல்ல அ தேசம் எங்கும் – ஆதி:9 113/2
நாச தேசம் துறந்ததும் நன் மனை – ஆதி:12 67/2
நாச தேசம் துறந்து வந்தேன் நாயேன் கபாடம் திற-மினோ – ஆதி:13 10/2
தேசம் எமக்கு இறைவன் பாரிடம் – குமார:1 41/4
நீசனேன் நாச தேசம் நீறுபட்டிடும் என்று அஞ்சி – நிதான:3 52/1
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம் – நிதான:5 3/1
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம்
ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு – நிதான:5 3/1,2
நாச தேசம் என்று இசை பெறும் நானில கிழத்தி – நிதான:7 22/1
இ பெரிய தேசம் முழுதும் இசை பரப்பி – நிதான:11 36/1
ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம் – ஆரணிய:2 27/2
நாசம் விளைக்கும் தேசம் விடுத்து இ நடை கூடி – ஆரணிய:7 6/2
துன்ப நாச தேசம் ஆர் தொடர்ச்சி நின்று இழுத்து மீ – இரட்சணிய:3 19/1
மேல்


தேசம்-நின்று (1)

திரு குலாவிய தேசம்-நின்று இ வழி – ஆரணிய:9 22/3
மேல்


தேசமும் (1)

நன்று நன்று உன் நிலை நாச தேசமும்
துன்றிய குடிகளும் சொந்தமாம் எனக்கு – நிதான:2 21/1,2
மேல்


தேசமே (1)

ஈட்டும் இச்சக தேசமே என் ஜெந்ம_தேசம் – ஆரணிய:2 27/2
மேல்


தேசன் (1)

உன்ன தேசன் ஒரு திருவோலக்க – நிதான:8 12/2
மேல்


தேசாந்தத்தில் (1)

பகல் ஒளி சதா நின்று ஓங்கும் பவித்திர தேசாந்தத்தில்
இகபரசந்தி என்னும் இடர் இருள் பிழம்பு தொக்கு அங்கு – இரட்சணிய:2 2/1,2
மேல்


தேசிக (6)

தெருளும் சின்மய தேசிக மூர்த்தத்தை – குமார:2 455/3
திரு_அருள் எனக்கு தந்த தேசிக என்னை யானே – ஆரணிய:3 18/1
தேசிக மார்க்கம் என்று உளம் நாடி திகைக்கின்றேம் – ஆரணிய:7 6/4
தேசிக குரவ கேள் ஜீவ ரக்ஷணை எனக்கு – ஆரணிய:9 37/1
தேசிக ஞான தீக்ஷை செவ்விதின் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 15/4
செஞ்செவே உரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி – தேவாரம்:11 23/4
மேல்


தேசிகர் (1)

செம்பொருள் தெரித்த குரு தேசிகர் ஜெகத்தில் – ஆதி:13 42/4
மேல்


தேசிகரிடத்து (1)

ஆதி தேசிகரிடத்து அனல் வடிவமாய் அமர்ந்து – குமார:2 493/2
மேல்


தேசிகன் (5)

சித்தமே சித்தம் என்று உவக்கும் தேசிகன்
உத்தம சாயல் என்று உணர்ந்து கோடியால் – ஆதி:14 16/3,4
தேசிகன் நறும் புனல் தெளி நங்காய் என – ஆதி:14 24/4
தேசிகன் இவை செப்பியே – ஆதி:14 208/2
சித்திக்கு ஒரு நல் குரு தேசிகன் வான் – நிதான:4 9/3
சித்திர மா மதி மருட்டி தேசிகன் போல் தனை காட்டும் – நிதான:5 31/3
மேல்


தேசிகன்-வயின் (1)

தேசிகன்-வயின் எ பிழை கண்டு இது செய்தார் – குமார:2 276/3
மேல்


தேசிகனும் (1)

ஜீவ வழி செல் பொழுது தேசிகனும் ஏழை – ஆரணிய:9 101/1
மேல்


தேசு (11)

தேசு மல்கு எழில் தேகம் கூடுவார் – ஆதி:4 27/4
தேசு உலாம் முழுமதி கதிர் ஒருவழி திரண்டு – ஆதி:18 18/2
தேசு மல்கிய சிற்குணாலய திரியேகர் – குமார:1 98/1
தேசு குன்றி வெம் குருதி நீர் பொழிதரு செய்ய மேனியும் எம்மான் – குமார:2 5/3
செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
சிந்தாகுலம் பொதிந்து தேசு இழந்துவிட்டது என்பார் – குமார:2 328/4
தேசு மல்கிய திரு_உரு காண்கிலார் சீடர் – குமார:2 484/3
தேய் மதி போல குன்றி தேசு அழிந்து உரு வேறாக – நிதான:5 2/2
தேசு மல்கிய அழிவு_இலா ஜீவ கிரீடம் – நிதான:6 7/2
தேசு உலாவிய திரு_முகத்து ஒளி அகம் திளைப்பாள் – இரட்சணிய:1 45/2
தேசு உலாம் திரு_மேனியும் செம்மலர் பதமும் – இரட்சணிய:3 78/3
மேல்


தேசுற்ற (1)

தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


தேசுற (1)

தேசுற மலர்ந்த முகமே நனி தெரிக்கும் – ஆதி:14 74/3
மேல்


தேசொடு (1)

திவ்வியாத்திரம் தேசொடு செறுத்து எதிர் வர கண்டு – நிதான:2 86/1
மேல்


தேட்டம் (1)

ஜீவ மா நதியின் நீர் அருந்த அதி தேட்டம் உண்டு கடை திற-மினோ – ஆதி:13 14/2
மேல்


தேடலிர் (1)

தேடலிர் வேறு ஆரும் அலன் என்று இறை தெரித்தார் – குமார:2 135/4
மேல்


தேடலீர் (1)

தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா – ஆதி:17 32/3
மேல்


தேடி (5)

ஆயது சமயம் தேடி அரிவையை மதி மருட்டி – ஆதி:7 5/2
எத்தனையர் தகும் காலம் இடம் தேடி திரிகின்றார் – நிதான:5 54/4
தேடி வைகலும் சேமித்த தீ நிதி – நிதான:7 87/4
அரணத்தை தேடி தம்மை அடைக்கலப்படுத்தி அந்தக்கரண – இரட்சணிய:2 16/2
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/4
மேல்


தேடிய (1)

ஆவலித்து எனை தேடிய அன்பு_உளார் – இரட்சணிய:1 62/2
மேல்


தேடியும் (2)

கேட்டும் தேடியும் தட்டியும் சிந்தனை கிடைப்பர் – ஆதி:9 68/1
கேட்டும் தேடியும் தட்டியும் முயன்றிடில் கிடையா – ஆதி:9 68/3
மேல்


தேடினர் (1)

சென்று அகத்து உற தேடினர் காண்கிலர் – குமார:2 461/3
மேல்


தேடினன் (1)

சென்று இறுத்து அவண் தேடினன் செவ்வியோன் – ஆதி:19 76/4
மேல்


தேடு (1)

சேயரும் தமரும் சிநேகரும் தேடு பல் பொருள் செல்வமும் – தேவாரம்:1 9/1
மேல்


தேடும் (2)

செய்யில் விதையாது அறுக்க தேடும் யஜமாநன் என தெரிந்து தந்த – ஆதி:9 101/3
தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய் தேடும் ஜெகத்தீரே – நிதான:9 61/4
மேல்


தேடுவது (1)

தேடுவது யாரை எனலோடு நெறி தீயர் – குமார:2 135/2
மேல்


தேடுவன் (1)

தண்டல்_இல் பெரும் காதலில் தேடுவன் தமியேன் – ஆதி:9 145/4
மேல்


தேடுவீர் (1)

கனிவொடும் பின் எனை கருதி தேடுவீர் – குமார:2 38/4
மேல்


தேண்டி (1)

தேண்டி ரக்ஷணை புரி திரு_குமாரன் என்று – ஆதி:9 25/3
மேல்


தேண்டு (1)

தேண்டு காரிய பக்தி என் தெய்விக பக்தி – ஆரணிய:2 45/2
மேல்


தேண்டுதி (1)

தேண்டுதி மெய் அன்போடு திகழ் விசுவாசம் உன்னில் – ஆரணிய:8 49/2
மேல்


தேம் (6)

செம் சொல் மலர் பாமாலை தேம் தொடையலை சேர்த்தி – ஆதி:19 1/2
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/2
தேம் கமழ் சோலை-வாயில் சேசுவோடு இருந்தாய் அன்னோன் – குமார:2 194/2
தேம் தளவு தொக்க நறும் சேதாம்பலை அலர்த்தி – குமார:2 317/3
தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை – நிதான:4 20/2
தேம் தளவு அணி நறு முகை இணர் செறிவ – ஆரணிய:5 10/2
மேல்


தேம்பி (9)

சேய நல் மருந்து எதிர்ந்து என தேம்பி நின்று அழு சேய்க்கு – ஆதி:11 28/2
தேம்பி நின்று அழுதனன் தெருமந்தான் மலைப்பாம்பின் – ஆதி:12 32/3
தேம்பி நல் நிலை கலங்கினர் சிலர் செயல் அழிந்தே – ஆதி:14 83/4
பழங்கணுக்கு உடைந்து தேம்பி பரிவுறீஇ பாருக்கு இன்பம் – குமார:2 119/3
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி
மும்முறை பிதாவை கிட்டி ஜெபித்தனர் முனிவு ஒன்று இன்றி – குமார:2 127/2,3
தீ அடைந்த வல்லி என தேம்பி செயல் அழிந்தும் – குமார:2 318/1
செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி
உய் வழி இனி இன்று என்னா உயிர்ப்பெறிந்து உயங்குவாரை – நிதான:3 25/3,4
இன்னவாறு அகத்து தேம்பி எழில் மறை_வாணன் தேவ – ஆரணிய:4 163/1
செறி தரு பசிக்கு ஆற்றாது தேம்பி நின்று அழுதாய் போற்றி – தேவாரம்:11 14/3
மேல்


தேம்பிய (1)

சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய
அத்தனை துயரமும் அகன்றதே அஃது – ஆதி:15 30/2,3
மேல்


தேம்பியே (2)

சிக்கு_அற தெரிந்து நெட்டுயிர்த்து தேம்பியே
துக்கமுற்று அழுது உளம் துளங்கி ஏகினார் – குமார:2 393/3,4
சித்த சஞ்சலத்தொடு கலுழ்ந்து தேம்பியே
தத்தமது உறையுள் போய் சடைத்து இருந்தனர் – குமார:2 413/3,4
மேல்


தேம்பினன் (1)

செய்த பாவங்கள் நினைந்து உளம் தேம்பினன் எனவும் – இரட்சணிய:2 33/1
மேல்


தேம்பினார் (1)

செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
மேல்


தேம்பு (1)

செய் படு களை மிக தேம்பு சாலியை – ஆதி:9 29/3
மேல்


தேம்புவார் (1)

தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
மேல்


தேம்புவாள் (1)

கோலம் உள்ளி குழைந்து உளம் தேம்புவாள் – இரட்சணிய:1 69/4
மேல்


தேமாசு (1)

பாதகம் புரியும் இந்த படு குண_தோஷி தேமாசு
ஈது எலாம் உணரான்-கொல்லோ எச்சரிப்பு அடையாது என்னே – ஆரணிய:3 21/2,3
மேல்


தேய் (1)

தேய் மதி போல குன்றி தேசு அழிந்து உரு வேறாக – நிதான:5 2/2
மேல்


தேய்க்கவும் (1)

தீது உறும் பவ வினை எலாம் தேய்க்கவும் ஜெகத்தை – குமார:2 82/3
மேல்


தேய்க்கும் (1)

அவ்வியம் இரும்பை தேய்க்கும் அரம் என அரிதில் பெற்ற – ஆதி:17 11/3
மேல்


தேய்த்திடு (1)

தீ_வினை தொடர் தேய்த்திடு கழலையும் சேர்த்தி – ஆதி:14 85/4
மேல்


தேய்த்து (2)

சென்றனம் கடிந்து கூறும் ஜீவ சாக்ஷியையும் தேய்த்து
கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/3,4
திறத்தையே விளைக்கின்ற பயிரை தேய்த்து இகல் – குமார:2 255/2
மேல்


தேய்தல் (1)

மைப்படும் இருள் ஒளி மருவ தேய்தல் போல் – குமார:2 235/4
மேல்


தேய்ந்தது (1)

மாய வர்த்தகத்து உள மகிமை தேய்ந்தது
மேய ஊரினும் பிரிவினை உண்டாயது – நிதான:10 20/1,2
மேல்


தேய்வார் (1)

சீரடையும் மார்க்கம்_இலராய் உணர்வு தேய்வார் – ஆரணிய:9 105/4
மேல்


தேய்வுற்று (1)

செண்டு என சுழன்று நீங்கா தெருமரல் உழந்து தேய்வுற்று
உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும் – நிதான:3 67/2,3
மேல்


தேய (4)

வன்மமும் பகையும் தேய வளர்ந்தன மருவி மாதோ – குமார:2 435/4
தேய வேண்டில் புனித மனம் சிறக்க வேண்டில் திகையாமல் – நிதான:9 61/3
தேய முறையை தழுவு சீர்மை சிறிது இல்லான் – நிதான:11 25/2
துனி தவிர்த்து அரும் துணை புரி தோழ இ தேய
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழி தேன் போல் – இரட்சணிய:1 18/1,2
மேல்


தேயத்தில் (1)

இக்கணம் விடுத்து யான் இயம்பு தேயத்தில்
புக்கு வாழ்ந்து இருத்தி நீ போதியால் எனா – ஆதி:9 169/3,4
மேல்


தேயத்து (2)

சாவது துணிந்தீர் ஆயின் தங்கும் இ தேயத்து என்றான் – ஆதி:2 38/4
ஜீவ நன்மையே கதிக்கும் அ தேயத்து செய்யோய் – குமார:4 73/4
மேல்


தேயத்தை (1)

தேயத்தை நோக்கி சென்று ஜீவ மா நதியின் புண்ய – ஆதி:17 34/3
மேல்


தேயும் (2)

செக்கர் வான் ஒளி தேயும் முன் தீவிரித்து – ஆதி:19 85/3
திறம் எலாம் அழியும் சிந்தை செறிவு எலாம் நெகிழ்ந்து தேயும்
அறம் எலாம் சிதையும் தீரா அனர்த்தமே விளையும் அன்றி – ஆதி:19 95/2,3
மேல்


தேயுமால் (1)

தெண்டனிட்டு குன்றி தியங்கி உயிர் தேயுமால் – ஆதி:19 10/4
மேல்


தேயுறு (1)

தேயுறு சீர்மையும் தீமை மல்கலும் – ஆதி:9 30/2
மேல்


தேர் (7)

வன விலங்கு என தரிப்பு_இலாது உழல்பவன் மறை தேர்
பனவ யான் ஒரு கிறிஸ்தவன் பண்டு எனை பலரும் – ஆதி:14 108/2,3
புத்தேள் மறை தேர் புங்கவ இ புதுமை நிகழும் போழ்தத்தே – ஆதி:14 142/1
வன விழி துணை நீர் முத்தம் உகுத்திட மறை தேர்
பனவன் உள் உடைந்து உருகி மற்று இ உரை பகர்வான் – குமார:1 81/3,4
குன்றுறா நலம் குலவு மெய் சுருதி தேர் குரவன் – நிதான:6 25/4
பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/3
பாதவ புரைகள்-தோறும் சுருதி தேர் பனவர் ஈட்டம் – ஆரணிய:5 26/2
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர் – ஆரணிய:9 44/2
மேல்


தேர்-மின் (2)

தீ கொடும் தொழில் தேர்-மின் என்பார் சிலர் – நிதான:8 29/4
வையகம் உய்யக்கொண்ட மாநுவேல் உரிமை தேர்-மின் – ஆரணிய:5 46/4
மேல்


தேர்-மினோ (1)

ஜீவ ரக்ஷணிய யாத்திரிகம் தேர்-மினோ – பாயிரம்:1 15/4
மேல்


தேர்க (2)

செய்யலாமையினும் கெடும் தேர்க எனா – நிதான:8 45/2
விதி தரு தண்டனை விதித்தும் தேர்க எனா – நிதான:10 46/3
மேல்


தேர்கில்லேன் (1)

தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/4
மேல்


தேர்கில (1)

செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு – குமார:4 59/2
மேல்


தேர்கிலார் (2)

தீங்கினை நினைத்தனன் என்ன தேர்கிலார்
தாங்க_அரும் துக்கமும் திகிலும் தம்முளே – குமார:2 26/2,3
தெய்விகம் திகழ் மேனியை தேர்கிலார்
வெய்ய ஆவி இது என்று வெருண்டனர் – குமார:2 469/3,4
மேல்


தேர்கிலேன் (2)

எ வழி அ வழி இன்னும் தேர்கிலேன் – ஆதி:3 14/4
எத்தனையோ விபத்து இரவில் தேர்கிலேன்
அத்தனையும் துரந்து அருள் விழிக்கடை – தேவாரம்:7 3/1,2
மேல்


தேர்கிலை (3)

சிச்சி என ஓடும் அது தேர்கிலை திகைத்திட்டு – ஆதி:13 46/2
ஈதலின் மரபையும் இன்னும் தேர்கிலை – ஆரணிய:9 77/4
எ தகுவன என யாதும் தேர்கிலை – ஆரணிய:9 78/4
மேல்


தேர்குவாம் (1)

தேர்குவாம் வம் என திரண்டார் அரோ – நிதான:8 35/4
மேல்


தேர்கொடும் (1)

கங்குலூடு இரை தேர்கொடும் கான் விலங்கு – ஆதி:19 83/1
மேல்


தேர்தி (4)

சென்று அ நகர் துன்ன_அரிதால் அது தேர்தி என்றான் – ஆதி:12 17/3
தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ – குமார:2 273/4
செம் நெறிக்கு உதவாது என்ன செப்பியது உண்மை தேர்தி – நிதான:11 41/4
எம்பி தேர்தி யான் உத்தம ஜீவியன் என்னில் – இரட்சணிய:2 38/1
மேல்


தேர்தியால் (1)

தெற்றென தெரிவன் அது தேர்தியால் – ஆரணிய:9 7/4
மேல்


தேர்ந்த (1)

அங்கண் ஒரு சூழலை அடுத்து மறை தேர்ந்த
புங்கவன் நம்பிக்கை முகம் நோக்கி மதி பூத்தோய் – ஆரணிய:10 2/1,2
மேல்


தேர்ந்ததால் (1)

யாவரே தெரிப்பர் உன் இதயம் தேர்ந்ததால்
கேவலர் தம்மில் அ கிள்ளிக்கீரையா – ஆதி:19 49/2,3
மேல்


தேர்ந்தனம் (1)

நங்களில் ஒருசிலர் நவிற்சி தேர்ந்தனம் – நிதான:10 13/4
மேல்


தேர்ந்தனன் (2)

மொய்ப்படு நும் முனம் முறையில் தேர்ந்தனன்
மெய்ப்படுகிற்கில விரித்த குற்றங்கள் – குமார:2 235/2,3
இகக்குனை என்பதும் எளிதில் தேர்ந்தனன் – நிதான:4 27/4
மேல்


தேர்ந்து (5)

வருந்த அடித்து உயிர் கொலையும் வகுத்தனர் மன்னவன் தேர்ந்து அ மறவர்-தம்மை – ஆதி:9 95/3
திகில் உடை மன்னவன் தீர தேர்ந்து பின் – குமார:2 403/1
செற்றம் மல்கின முறைப்பாடு எலாம் தேர்ந்து முன் – நிதான:11 14/3
கொடிது எனப்படும் யாவிலும் கொடிது என தேர்ந்து
கொடிதினுக்கு அந்தம் குணித்தது மூதுரை கூற்றேல் – ஆரணிய:4 35/2,3
ஒன்னாரை தேர்ந்து ஒல்லை ஒரூஉம் மெய் உரவோரே – ஆரணிய:7 8/4
மேல்


தேர்ந்தும் (1)

வித்தரித்து உரைக்க வல்லார் அல்லர் இ மெய்மை தேர்ந்தும்
பித்தரில் பிதற்றுகின்றேன் பேதை பேர்_ஆசை கொண்டே – குமார:2 104/3,4
மேல்


தேர்ந்தேன் (1)

பூரணமாக தேர்ந்தேன் புரைபடு புன்மை சொல்லால் – நிதான:5 88/4
மேல்


தேர்வல் (1)

எம்பி நீ மருளேல் அந்த இரும் பிலத்து இயற்கை தேர்வல்
பம்பிய நாச_மோச படுகர் என்று அறிதி யாண்டும் – ஆரணிய:3 8/1,2
மேல்


தேர்வாம் (1)

நின்று அங்கு இனையும் இரு வேதியர் நீர்மை தேர்வாம் – ஆரணிய:4 125/4
மேல்


தேர்வான் (2)

தன் நிலை கலங்கி நெஞ்சம் துணுக்குறீஇ தமியன் தேர்வான் – ஆதி:19 100/4
ஆய் மதி நிதானி ஒல்லை அலப்பனை உசாவி தேர்வான் – நிதான:5 2/4
மேல்


தேர்வுழி (1)

படி மீது நடந்து இரை தேர்வுழி ஆங்கு ஒர் பாங்கர் – ஆரணிய:4 105/3
மேல்


தேரா (2)

நுண்ணறிவு உடைய நீரார் நூலொடு பழகி தேரா
பெண் அறிவு என்பது எல்லாம் பேதைமை உடைத்தாம் அன்றே – ஆதி:2 44/3,4
முத்து அருமை பன்றி அறியும்-கொல் முறை தேரா
பித்தர் அது போல் அறியகிற்கிலர் பிரான் அங்கு – குமார:2 149/1,2
மேல்


தேராது (4)

என்னுறு வருத்தம் தேராது இகழ்ந்து உரையாடுகின்ற – ஆதி:2 13/1
பாபத்தின் கூலி நித்ய பயங்கரம் என தேராது
மா பத்து விதியை மாந்தர் வரைந்திட எழுந்த தேவ – குமார:2 110/1,2
ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய் – நிதான:5 96/2
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன் – ஆரணிய:7 8/2
மேல்


தேரார் (4)

கண்டனர் உண்மை தேரார் கவல்கின்றார்_அல்லர் வேரி – ஆதி:2 15/1
கல்_மனத்தவரும் ஐயன் கழறிய செம் சொல் தேரார்
துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/2,3
மேய இ உண்மை தேரார் விழி மருண்டு எளிதில் துய்ப்பர் – நிதான:7 76/3
தப்பு வழிப்பட்டு ஆரணர் சென்றார் சதி தேரார் – ஆரணிய:7 9/4
மேல்


தேரான் (2)

வரும் முறை தேரான் முக்கால் மறுத்தனன் மருண்டு மன்னோ – குமார:2 195/4
நெறி நீத்து இரு வேதியர் உற்றிடும் நீர்மை தேரான்
பொறி யாத்தவரை அடித்து ஆர்_உயிர் போக்கி உண்டு – ஆரணிய:4 103/1,2
மேல்


தேரில் (10)

தேரில் இதே நமர் குழுமி நித்திய ஜீவானந்தம் தேக்கும் மன்றம் – ஆதி:4 40/4
முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில் – ஆதி:9 82/4
புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதை புலம்கொண்டு உய்த்த – ஆதி:9 83/2
தின்மை வித்தியோர் தீப்பயன் நுகர்வதும் தேரில்
தன்ம வித்தக தைவிக சருவ லோகேசன் – ஆதி:9 149/2,3
ஒரு மா நகரை உரைப்பார் எவர் உண்மை தேரில் – ஆதி:12 16/4
தேரில் ஜீவரை கொன்று தினம்-தொறும் – ஆதி:14 162/1
எத்தனையோ கொடிது எத்தனையோ பெரிது இது தேரில்
நித்திய நாசம் அடுத்தது மேல் இனி நினைவு என்னே – ஆரணிய:4 132/3,4
கற்பனைகளுக்கு மேலா கதித்த புண்ணியமாம் தேரில் – ஆரணிய:8 40/4
தேரில் நும்மவர் சேர் உறு மார்க்கமே – ஆரணிய:9 23/1
அகம் புகும் பேறுபெற்ற அருமறையவர் சீர் தேரில்
ஜெகம் படு செல்வம் ஆதி சிற்றின்ப நுகர்ச்சிக்கு எல்லாம் – இரட்சணிய:3 92/1,2
மேல்


தேரின் (6)

படிவன பல துன்பம் எனின் உறு பயன் தேரின்
முடிவினில் நலமேயா முறைமுறை அனல் மூழ்க – ஆதி:19 21/2,3
ஒன்று இதை ஒருவுவோருக்கு உய்வு_இலை உண்மை தேரின்
இன்றொடு முடிவதாய இடரினுக்கு அலசி ஓடி – நிதான:3 12/2,3
செவ்விய நிதானி பேச்சு திறம்_உளான் இவனை தேரின்
இ வழி பிடித்த நங்கட்கு ஏற்ற ஓர் துணைமை போலும் – நிதான:5 19/2,3
பூதலத்துக்கு ஒரு பாரம் புலையன் இவன் நிலை தேரின் – நிதான:5 29/4
திருவை எய்துதல் நன்று அலால் தீது அன்று தேரின் – ஆரணிய:2 60/4
தேரின் எம்பி மற்று இ எலாம் தீர்க்க விஸ்வாசத்து – ஆரணிய:6 29/1
மேல்


தேரினும் (1)

செப்ப_அரும் கலை தேரினும் எம்மனோர்க்கு – நிதான:5 81/3
மேல்


தேரும் (3)

சிந்தை தேரும் திரு தகு தெய்விக – குமார:2 470/1
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/4
உள்ளம் தேரும் நம் உன்னத தெய்வமும் – நிதான:5 76/1
மேல்


தேரும்கால் (1)

செவ்வே மட்டிட்டு அளவு செப்ப_அரிது தேரும்கால் – ஆதி:19 4/4
மேல்


தேருமாறு (2)

தேருமாறு தெரிக்கலுற்றார் அரோ – ஆதி:9 79/4
தேருமாறு தெருட்டினர் சிந்தனை – குமார:2 471/4
மேல்


தேரை (1)

பாம்பின் வாய் தேரை மீண்ட பரிசு என படருள் மூழ்கி – ஆதி:19 117/1
மேல்


தேரையில் (1)

வாய் தேரையில் பரியும் பான்மையான் – ஆதி:12 32/4
மேல்


தேரையின் (1)

பாம்பின் வாய் படு தேரையின் பரிவுறீஇ பதைத்து – ஆதி:14 83/2
மேல்


தேரையை (1)

அரவு கௌவிய தேரையை மீட்டு என அகாதத்து – ஆதி:11 35/1
மேல்


தேவ (109)

நித்திய ஜீவ மார்க்க நிண்ணயம் பிடித்த தேவ
பத்தனாம் பனியன் மேனாள் பாவனா_சரிதம் ஆக – பாயிரம்:1 11/2,3
சென்னி தேவ_குமாரன் திருச்சபைக்கு – ஆதி:1 4/1
எரிதரு தேவ கோப இரும் கனல் மாரி பெய்து – ஆதி:2 9/3
தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர் – ஆதி:4 57/1
செகுத்திடாது இரு-மின் என்னா ஜீவ வாக்கு அருளி தேவ
மகத்துவ அரசன் வைத்தார் மாந்தரை புதிய வைப்பில் – ஆதி:6 4/3,4
சேத்திரம் புனிதம் ஆக சிந்தையும் வாக்கும் தேவ
தோத்திரம் ஆக செய்கை சுகிர்தமே ஆக தூய – ஆதி:6 7/1,2
பாபமே இல்லை பாவ பயங்கரம் இல்லை தேவ
சாபமும் இல்லை சாவும் சஞ்சல தொடர்பும் இல்லை – ஆதி:6 11/1,2
தேவ புத்திரர் ஆயினர் சிலர் அருள் செயலால் – ஆதி:8 4/4
தேவ உத்தரம் பெற்றனர் திருச்சபை குரவர் – ஆதி:8 10/4
தேவ நீதியின் புனிதத்தை யாவரே தெரிப்பார் – ஆதி:9 12/4
செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன் – ஆதி:9 94/4
தேவ போனகம் ஆர உண்டு ஆனந்தம் தேக்கி – ஆதி:11 8/2
தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள் – ஆதி:14 34/3
தேவ நீதியின் வரும் திகிலை மாற்றிடும்ம் – ஆதி:14 36/2
தேவ ஆவியும் முனிந்து எனை விடுத்தனர் சிதையா – ஆதி:14 117/2
தீ தொழில் மறவன் தேவ செயல் எலாம் இகழ்ந்து பேசும் – ஆதி:14 132/2
தொடுத்து இடையறாது தேவ துந்துமி முழக்கல் போலும் – ஆதி:14 140/4
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
தேவ நல் ஆவி உள்ளம் திகழ்தர ஜெபித்தல் வேண்டும் – ஆதி:17 25/4
தேவ போகங்கள் எல்லாம் சிறக்க முன் உண்டு பின்னே – ஆதி:19 97/3
தேவ_தேவனை துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன் – குமார:1 56/4
தேவ_மைந்தனார் சகித்த வேதனையும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 4/4
தேவ_ஆவியின் புனித மா செயலும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 6/4
எவன் தனக்கு வரு தேவ கோப அழல் அஞ்சி ஓட வகை எண்ணுவான் – குமார:2 71/2
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/4
முட்டிய தேவ கோப முழங்கு அனல் முடுகி பொங்கி – குமார:2 108/3
மா பத்து விதியை மாந்தர் வரைந்திட எழுந்த தேவ
கோபத்தின் மிகுதியாலே கூடிய குரூரமான – குமார:2 110/2,3
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால் – குமார:2 117/3
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
தேவ_ஆவியின் அருள் செயல் சிறக்கின்ற செய்ய – குமார:2 202/1
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம் – குமார:2 245/2
செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
செம்மை திறம்பா தூய தேவ சினம் திருகி – குமார:2 321/3
எல்லா உலகத்தவர் பாவமும் ஏற்ற தேவ
நல் ஆடு உயர் வேதிகை மேவலும் நம்பன் நீதி – குமார:2 360/1,2
பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள் – குமார:2 367/3
ஜீவாதிபதி ஏக திரித்துவத்தில் ஒன்றான தேவ_மைந்தன் – குமார:2 376/1
உன்னத தேவ_மைந்தன் உயிர்த்தெழுந்து அருளி போந்தார் – குமார:2 433/4
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
உத்தம தேவ பத்தி என்று இனைய உசித நல்_குணங்களே துணையா – நிதான:1 1/3
பாபத்தின் திரளோ அந்தகாரத்தின் பரப்போ தேவ
சாபத்தின் செறிவோ மாய சாலத்தின் சமைவோ நித்ய – நிதான:3 16/1,2
அக்கிரமத்தை உள்ளி ஆர்_உயிர் பதைப்ப தேவ
உக்கிர கோப தீயின் ஒள் அழல் கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 26/2,3
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
படிவமோ வேறு ஓர் தேவ பத்தியின் உருவு வாய்ந்த – நிதான:3 62/2
உய்த்து உணர்கிலாது மனம் உட்கி உழல் தேவ
பத்தி நடை என்பது பயித்தியம் அலால் ஓர் – நிதான:4 67/2,3
செத்து அனைய துன்பமும் உழக்க வரு தேவ
பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றி – நிதான:4 75/2,3
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும் – நிதான:4 79/4
தேவ ஆசி அருள் மல்கு வகை யாது தெரியேன் – நிதான:4 86/4
உத்தம தேவ பக்தி ஒளிரும் நன்கு இதயத்து ஓங்கி – நிதான:5 10/4
கோட்டம்_இல் தேவ பத்தர் கூட்டுறவு அடைந்து செய்யும் – நிதான:5 14/1
மேரு நகராதிபதி விருப்புறு மெய் தேவ பத்தி – நிதான:5 33/3
போய் அலப்பன்-தனை கிட்டி புரை_அறு மெய் தேவ பத்தி – நிதான:5 46/1
மல்கு தேவ வரப்பிரசாதமே – நிதான:5 56/1
தெரியகிற்றிலை தேவ கிருபையின் – நிதான:5 62/2
தேவ வாக்கின் நலம் பெறு சிந்தையின் – நிதான:5 67/3
தூய தேவ கிருபை சுகிர்தம் என்று – நிதான:5 73/3
மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே – நிதான:5 90/2
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ
பத்தி உள் அன்பு சாந்தம் பவித்திரம் தயை கண்ணோட்டம் – நிதான:7 68/2,3
தேவ சேனையர் கோன் அருள் செவ்வியே – நிதான:8 2/3
தேவ ஆவி திரு_அருள் பெற்றியை – நிதான:8 5/3
தேவ சிநேகம்-தனை நினைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 4/4
எந்தவிதத்தும் தேவ சினம் எரிக்கும் முன்னம் எமை புரக்க – நிதான:9 24/3
தேவ வசனம் இதை உணர்ந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 37/4
தேவ மைந்தன் தொழும்பு செய்ய சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 40/4
இருவர் கூடி காரி வந்தான் என்பீர் இதுவோ தேவ முறை – நிதான:9 46/3
நலிவாய் தேவ சினத்தாலே நணுகும் வாதை அனைத்தும் அன்பின் – நிதான:9 56/3
தேவ சிநேகம் பவ வெறுப்பு திடநம்பிக்கை இவை பரிசுத்தாவி – நிதான:9 64/3
தேவ குடும்பம் இதை விரைந்து சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 98/4
செப்பம்_உடையாய் உனையும் தேவ பயம் இல்லா – நிதான:11 36/3
உத்தம தேவ பத்திக்கு உயிர் விசுவாசம் ஆகும் – நிதான:11 42/1
அருவருப்பு ஆகும் தேவ சித்தத்துக்கு ஆதலாலே – நிதான:11 43/3
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/3
தேவ பத்தியும் சற்குண சீலமும் தெளிவும் – ஆரணிய:2 13/2
ஆண்டு தேவ நீதாசனத்து அருகு அழல் சுவாலை – ஆரணிய:2 79/3
உத்தம தேவ சித்தம் உவப்பொடு தெரிந்துகொள்ளா – ஆரணிய:3 25/1
தேவ கோன் நகர் கிட்டியது என்று செருக்கி – ஆரணிய:4 142/1
இன்னவாறு அகத்து தேம்பி எழில் மறை_வாணன் தேவ
சந்நிதி அடைந்து போற்றி சனி இரா விடி-மட்டாக – ஆரணிய:4 163/1,2
போனகம் திருத்தி உண்டு புத்துயிர் அடைந்து தேவ
ஆனக முழக்கம் கேட்கும் ஆனந்த சைலம் நாடி – ஆரணிய:5 2/2,3
கலை எலாம் சுருதி பேச்சு கனிவு எலாம் தேவ பாஷை – ஆரணிய:5 25/3
நல் நிலைநிறுப்பான் உய்த்த நர தேவ விஞ்சை நாடோ – ஆரணிய:5 42/3
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ
கோன் அருள் பெற்று ஆனந்த குவடு கண்டு அடைந்தும் அந்தோ – ஆரணிய:5 78/2,3
தெருளின் அற்பவிஸ்வாசிக்கு திரித்துவ தேவ
அருளுற்று உய்த்தது ஜீவனை அதிசயமாக – ஆரணிய:6 12/3,4
தேவ தொண்டுக்கு சிந்தை திருந்தியும் – ஆரணிய:6 41/2
மனித ஜீவருக்கும் தேவ மகத்துவத்தினுக்கும் ஊடே – ஆரணிய:8 45/1
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/2
நன்மை சால் தேவ மைந்தன் நடுநின்று நரருக்கேயாய் – ஆரணிய:8 50/1
இரங்குக தேவ கோப எரி விழுந்து அழிக்கா முன்னம் – ஆரணிய:8 60/3
சிருட்டிகர் ஆகிய தேவ தந்தை தம் – ஆரணிய:9 91/1
தேவ கோபாக்கினை திகிலும் நீங்கிடும் – ஆரணிய:9 95/2
தேவ பயம் உள்ளுறும் எனில் திகழ் மெய்ஞ்ஞானம் – ஆரணிய:9 108/3
செப்ப_அரிய தேவ பயம் மற்று இது தெளிந்தோர் – ஆரணிய:9 111/2
தேவ பத்தியின் நலத்தை உற்று ஆய்கிலா சிதடர் – ஆரணிய:10 19/4
தேவ மைந்தன் ஓர் சீர்த்தியை சேத்திர மடந்தை – இரட்சணிய:1 29/2
பாபத்தை விளைத்தோர்க்கு உற்ற பயிரிடும் கூலி தேவ
கோபத்தின் மிகுதி இந்த குவலயத்து எவர்க்கும் நீங்கா – இரட்சணிய:2 14/1,2
தேவ மைந்தனாம் கிறிஸ்துவின் திரு_பெயர் ஒன்றே – இரட்சணிய:2 43/2
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை – இரட்சணிய:2 53/3
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை – இரட்சணிய:2 53/3
தேவ தொண்டுக்கு அமைந்த திரு_குழாம் – இரட்சணிய:3 31/3
தேவ மைந்தனார் சிலுவையின் உகுத்த செம் சோரி – இரட்சணிய:3 84/2
திருந்து வேதியரும் தேவ சங்கமும் சிந்தையார – இரட்சணிய:3 104/1
பெருந்தகை ஆய தேவ பிதாவுக்கும் குமரனார்க்கும் – இரட்சணிய:3 104/2
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம் – தேவாரம்:2 1/1
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம் – தேவாரம்:2 1/1
மேல்


தேவ_கணங்கள் (1)

பார்த்து உம்பரூடு பல தேவ_கணங்கள் பையுள் – குமார:2 367/3
மேல்


தேவ_குமாரன் (1)

சென்னி தேவ_குமாரன் திருச்சபைக்கு – ஆதி:1 4/1
மேல்


தேவ_சுதன் (1)

சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
மேல்


தேவ_தூஷணம் (3)

துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம்
பன்னியோன் இவனை நீ பாரமார்த்திகன் – குமார:2 245/2,3
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
மேல்


தேவ_தூதர் (2)

உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
மேல்


தேவ_தூதரும் (1)

தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள் – ஆதி:14 34/3
மேல்


தேவ_தேவ (4)

தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை – இரட்சணிய:2 53/3
தேவ_தேவ த்ரியேக தெய்விக ஜேசுவின் திரு_நாமமே – தேவாரம்:1 2/1
தேவ_தேவ த்ரியேக தோத்திரம் ஜேசு நாயக தோத்திரம் – தேவாரம்:2 1/1
மேல்


தேவ_தேவனை (1)

தேவ_தேவனை துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன் – குமார:1 56/4
மேல்


தேவ_நீதி (1)

மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/4
மேல்


தேவ_மைந்தன் (4)

செப்பு_அரிய திரியேக சர்வேசன் தர வந்த தேவ_மைந்தன் – ஆதி:9 94/4
செற்றம்_இலா தேவ_மைந்தன் தேசு இழந்து தேம்பினார் – குமார:2 306/4
ஜீவாதிபதி ஏக திரித்துவத்தில் ஒன்றான தேவ_மைந்தன்
தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி – குமார:2 376/1,2
உன்னத தேவ_மைந்தன் உயிர்த்தெழுந்து அருளி போந்தார் – குமார:2 433/4
மேல்


தேவ_மைந்தனார் (1)

தேவ_மைந்தனார் சகித்த வேதனையும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 4/4
மேல்


தேவ_ஆவியின் (2)

தேவ_ஆவியின் புனித மா செயலும் என் சிந்தை விட்டு அகலாவே – குமார:2 6/4
தேவ_ஆவியின் அருள் செயல் சிறக்கின்ற செய்ய – குமார:2 202/1
மேல்


தேவர் (5)

சிந்தனாதித தேவர் கோன் திரு_நகர் அடைந்தார் – ஆதி:8 19/4
திட்டி வைத்தனர் தேவர் பிரான் என – ஆதி:13 8/1
செவ் அங்கியை களைந்து தேவர் பிரான் முன் தரித்த – குமார:2 307/1
தெரிகுவர் என் சிந்தையை நம் தேவர் பிரான் முறைதவறி – நிதான:5 24/2
ஜீவ ரக்ஷை திருத்திய தேவர்_கோன் – ஆரணிய:4 74/1
மேல்


தேவர்_கோன் (1)

ஜீவ ரக்ஷை திருத்திய தேவர்_கோன்
ஆவலித்து அணைக்கும் கை அகற்றி இ – ஆரணிய:4 74/1,2
மேல்


தேவர்களை (1)

நம்மை படைத்து காத்துவரும் நாதன் இதர தேவர்களை
நம்மை போல வணங்காதீர் நாமே கருத்தர் என நவின்ற – நிதான:9 9/1,2
மேல்


தேவரீரே (1)

என்னொடும் தேவரீரே இருக்கின்றீர் எதற்கும் நாயேன் – நிதான:3 58/3
மேல்


தேவருக்கு (1)

அலகு_இலாத பொய் தேவருக்கு ஆலயம் அழிம்பற்கு – நிதான:7 21/3
மேல்


தேவரும் (1)

மெய்ப்படு நம்-தம் விக்கிரக தேவரும்
மைப்படு சமய நூல் மரபும் மார்க்கமும் – நிதான:10 15/2,3
மேல்


தேவன் (5)

ஒரு நர தேவன் ஈட்டும் புண்ணியம் உலகுக்கு அந்த – குமார:2 446/2
ஆதி தேவன் அடி நிழல் துன்னி யாம் – நிதான:8 7/2
ஆதி தேவன் சரண நிழல் அடைய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 2/4
குன்றிடா கருணை மல்கும் கோ இளங்குமார தேவன்
என்று எனக்கு இரங்குவார்-கொல் என்று உளம் கவல சென்ற – ஆரணிய:8 67/3,4
தேவன் ஓர் மைந்தன் என்றும் சிந்து செம் குருதி ஒன்றே – ஆரணிய:8 76/2
மேல்


தேவனே (1)

எற்றோ கைவிடுத்தனிர் என்னை என் தேவனே என்று – குமார:2 369/3
மேல்


தேவனை (3)

தேவ_தேவனை துதிப்பல் என்று இசைத்தனன் செய்யோன் – குமார:1 56/4
செவ்வியர் தேவனை சிநேகித்து ஆங்கு அவர் – இரட்சணிய:3 56/2
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
மேல்


தேவாதி (1)

தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
மேல்


தேவாதிபன்-தனை (1)

தேவாதிபன்-தனை நெருக்கினர் செருக்கி – குமார:2 139/4
மேல்


தேவாரத்தை (1)

ஒன்றியாய் செல்லும் காலை ஒரு திரு தேவாரத்தை
நன்றியோடு உள்ளி பண்ணோடு இசை பெற நவின்று போனான் – ஆதி:19 99/3,4
மேல்


தேவாரம் (3)

அள்ளி அன்பு அலர் தொடுத்து இனிது அமைத்த தேவாரம்
பிள்ளை நீர்மையில் புனைந்தனன் திரு_அடி பிறங்க – ஆதி:18 43/3,4
சூடுவர் அன்பில் கட்டி தொடுத்த பைம் துணர் தேவாரம் – நிதான:10 58/4
எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில் – இரட்சணிய:2 3/4
&6 தேவாரம் – தேவாரம்:3 110/5
மேல்


தேவாராதனை (1)

ஆர்த்தியில் குழுமி தேவாராதனை புரியும் செவ்வி – ஆரணிய:5 38/2
மேல்


தேவாலயம் (3)

சத்யமன்றம் புனிதமன்றம் தேவாலயம் பரம சந்நிதானம் – ஆதி:4 32/4
கோது_இலா தவம் புரிந்து தேவாலயம் குழீஇய – குமார:2 493/1
சாலமோன் தேவாலயம் உவந்து அருளி தரித்திடும் தற்பரா போற்றி – தேவாரம்:11 10/3
மேல்


தேவாவி (1)

தீங்கு என்று ஒன்றை அறிந்தவுடன் செய்யேன் என்று தேவாவி
ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி – நிதான:9 93/1,2
மேல்


தேவாவிக்கும் (1)

பொருந்திய தேவாவிக்கும் புரை அறு மகிமை ஆற்றல் – இரட்சணிய:3 104/3
மேல்


தேவின் (1)

நெஞ்சகம் மகிழ்ந்து யாக்கை நிமிர்ந்து நின்மல தேவின்
மஞ்சன் இங்கு உதித்து ஈட்டும் வரம்பு_இல் புண்ணியத்தாலே – ஆதி:15 7/2,3
மேல்


தேவினை (1)

தேவினை கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம் – தேவாரம்:4 4/2
மேல்


தேவு (1)

தேவு இவை சகிப்பது என் சிந்தை தேர்தி நீ – குமார:2 273/4
மேல்


தேவே (4)

ஜீவன் பிழைக்க மகவு அளித்த தேவே தந்தை தியாகேசன் – நிதான:9 98/1
இரங்குக ஜீவ ரக்ஷைக்கு என்று உருவெடுத்த தேவே – ஆரணிய:8 60/4
வாழிய வதன சேவை வழங்கிய தேவே போற்றி – தேவாரம்:11 22/2
பூதலம் உய சமாதி பொருந்திய தேவே போற்றி – தேவாரம்:11 28/4
மேல்


தேவை (9)

ஒடுங்கல்_இல் கருணை தேவை நன்றியோடு உள்ளியுள்ளி – ஆதி:19 119/4
தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை
நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/3,4
செல்லிய என புடை செருக்கி நர தேவை
புல்லியர் இகழ்ந்து பல பேசி நெறி போனார் – குமார:2 150/3,4
சிந்தை கனிந்து மன்றாடும் தேவை பரவும் ஜெகத்தீரே – நிதான:9 59/4
தேவை பரவி கதிகூட சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 67/4
தேவ_தேவ பராபர திரித்துவ தேவை
ஆவலில் துதித்து அன்பொடு போற்றுவான் அமைந்தார் – இரட்சணிய:2 53/3,4
அணியணியாக நின்று அங்கு அருள் திரியேக தேவை
பணிகுவர் பரமானந்த பரவசர் ஆகி போற்றி – இரட்சணிய:3 9/3,4
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/1,2
மேல்


தேள் (1)

செற்றமோடு அகம் கருகு தேள் அனைய கோளன் – நிதான:11 37/2
மேல்


தேளின் (1)

தேளின் ஈட்டிய விடம் என செவிக்கு இடர் செருகும் – நிதான:7 55/4
மேல்


தேற்றம் (1)

தெய்விக வெளிப்படை தேற்றம் இன்று எனில் – ஆரணிய:9 89/1
மேல்


தேற்றரவும் (1)

ஏர் ஆரும் தூய இளம் காலின் தேற்றரவும்
நேராய் உளத்தில் பொறித்து நெறி கூடினான் – ஆதி:19 2/3,4
மேல்


தேற்றினன் (1)

சித்த சஞ்சலத்தை ஆற்றி தேற்றினன் சென்றானாக – குமார:2 128/2
மேல்


தேற்று (1)

தேற்று எதிர்ப்பட்டதால் ஓர் தீங்கு இன்றி வந்தேன் ஈண்டு இ – ஆதி:19 102/3
மேல்


தேறல் (3)

தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திர பூம் பண்ணை – ஆதி:4 18/3
அருப்பு நாள்_மலர் வாய் கிண்டி அழி பசும் தேறல் மாந்தி – குமார:2 429/2
பொழி தண் தேறல் மகரந்தப்பொடி நாள்_மலரின் விரை அளவி – ஆரணிய:5 93/1
மேல்


தேறற்பாற்றோ (1)

சின கனலை அவித்து எழுந்த ஜீவகாருணிய நிலை தேறற்பாற்றோ – குமார:2 378/4
மேல்


தேறி (6)

சென்று நின்று உழலும் ஜீவன் செவி வழி புகுத தேறி
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/2,3
ஜீவன் முத்தரே திறம்பிய பிழையினை தேறி
தாவமுற்று உளம் திரும்பி வைதிகம் தலைப்படுவர் – குமார:2 202/2,3
செற்றம் நல்கிய திரு_அருள் செயலினை தேறி
கொற்றவன் சுதன் திரு_அடி கோகனகத்தில் – நிதான:2 108/2,3
வடிவமோ முன்னர் செல்வது யாது என மருண்டு தேறி
நொடி வரை நிற்றி வந்தேன் யான் என நுவன்றான் கூவி – நிதான:3 62/3,4
பூரியர் உரையினை தேறி போந்து நீர் – நிதான:10 9/1
வழி நடந்து இளைத்தீர் சில் நாள் வதிந்து இளைப்பாறி தேறி
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/1,2
மேல்


தேறியும் (2)

ஆறியும் தேறியும் அருளின் ஏகுவார் – ஆரணிய:4 2/4
தீன ரக்ஷகன் சீர் கண்டு தேறியும் – ஆரணிய:6 43/4
மேல்


தேறினர் (1)

கிட்டி ஆர்_உணவு அருந்தினர் தேறினர் கிளர்ந்தார் – ஆரணிய:2 80/4
மேல்


தேறினன் (2)

தேறினன் உயிர் தந்து உய்த்த திருவுள செயலை சிந்தித்து – நிதான:3 70/1
அருள்வர் அங்கு அவர்க்கும் என தேறினன் ஆறி – ஆரணிய:1 29/4
மேல்


தேறினை (1)

சிந்தையின் நீதிமானாக தேறினை
அந்தர தாமரை அலர்த்தி காட்டிய – ஆரணிய:9 67/2,3
மேல்


தேறுக (2)

தேறுக ஐய எனா இ திறத்தன – நிதான:8 11/3
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
மேல்


தேறுகில்லேம் (1)

யாது என தேறுகில்லேம் எம்மனோர் கருத்துக்கு எட்டா – ஆரணிய:5 43/1
மேல்


தேறுகிற்கிலன் (1)

தேறுகிற்கிலன் யாதும் ஓர் திறத்தினும் தெரியின் – குமார:2 230/2
மேல்


தேறுதல் (1)

தேறுதல் செய்வாரும் எதிர்வார்-கொல் தெரியேனால் – ஆதி:13 53/4
மேல்


தேறுதல்புரிந்து (1)

தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
மேல்


தேறும் (1)

தேறும் மந்திரம் ஜெபத்தினுக்கு செவ்விதின் – தேவாரம்:3 9/2
மேல்


தேறுவன் (1)

தெண்டனிட்டு இறைஞ்சி நிற்பன் தேறுவன் தெளிவு தோன்ற – நிதான:3 37/4
மேல்


தேறுற்றான் (1)

மகன் என பரிவர் அல்லால் மறுத்திடார் என தேறுற்றான் – ஆதி:9 115/4
மேல்


தேறுற்றிலவாய் (1)

தேறுற்றிலவாய் செயலற்ற ஜெகத்து உலாம் பல் – குமார:2 365/3
மேல்


தேன் (23)

புதிய தேன் நுகர் அளி என புனிதர் யாத்திரிகம் – பாயிரம்:1 16/3
தேன் தோயும் மலர் பொழில் வாய் திரு_உள்ளம் துயர் மேவி – ஆதி:15 16/2
நாவினுக்கு அமுத சுவை நினைவிற்கு நறும் தேன்
தீ_வினைக்கு ஒரு மருந்து வண் சிறை அளி முரல் பைம் – ஆதி:18 16/2,3
படிக்கு இரக்ஷணை நல்கும் பரன் இயற்றிய செம் தேன்
வடிக்கும் ஒண் மலர் நந்தவனத்தினில் இனிது உற்றான் – ஆதி:19 28/3,4
வஞ்சம்_இல் மலர் முகம் காட்டி வாய்த்த தேன்
செஞ்செவே தரும் அன்பர் செவ்வி போன்றது – ஆதி:19 30/3,4
இனிய தேன் அமுதம் உண்டு இசைக்க கற்பக – குமார:2 95/2
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/2
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய – குமார:2 428/2
தேன் அளாவிய கொழு மலர் செழும் பயன் செருமி – குமார:4 56/2
தேன் இறால் இழி மதுவொடும் பழ நறை தேக்கி – குமார:4 57/3
தேன் உலா நறு மலர் குவை மயில் இனல் செறிந்து – நிதான:7 28/2
தேன் முகந்து உணும் வண்டு என சிந்தனைக்கு இனிய – ஆரணிய:2 24/2
திருந்தும் நல் உள களி செறிக்கும் தேன் அது – ஆரணிய:4 13/2
சீவகங்கையை அடுத்து இனிய தேன் சொரி – ஆரணிய:4 28/2
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி – ஆரணிய:4 162/2
தேன் நந்தும் நறும் தண் சோலை செறி தடம் காவு சூழ்ந்த – ஆரணிய:5 57/1
தேன் உற்று அருவி குதி பாயும் சிகரி தலை-நின்று இழிந்து கலை – ஆரணிய:5 92/2
இயலை தவிர்க்கும் நறும் கனி_காய் இன் தேன் உதவி எதிர் சாரல் – ஆரணிய:5 94/4
பாலொடு தேன் கலந்து ஓடும் பாலது – இரட்சணிய:1 8/2
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழி தேன் போல் – இரட்சணிய:1 18/2
தேன் உண்டு ஆர்ந்தனள் ஆத்தும செல்வியும் – இரட்சணிய:1 74/2
தெருள் உடை அமுதை உள்ளம் தித்திக்கும் செழும் தேன் வைப்பை – தேவாரம்:9 7/2
மேல்


தேனில் (1)

கண்ணிய நறும் தேனில் கன்னலில் மதுரிக்கும் – ஆதி:15 3/1
மேல்


தேனினும் (1)

தேனினும் இனிய தீம் சுவைய தெள் அமிர்து – ஆதி:14 35/2
மேல்


தேனீ (1)

விரைவின் ஈட்டு தேனீ என விதிவிலக்கு இகந்தும் – ஆரணிய:2 48/2
மேல்


தேனும் (1)

தேனும் பாலும் ஒன்று ஆய செம் சொல் மறை_வாணன் – ஆரணிய:2 21/4
மேல்


தேனை (1)

உள்ளம் உவப்புறு தேனை உயிர்க்குயிரை உலவாத – தேவாரம்:4 1/3
மேல்


தேனொடு (2)

திருந்து நம்பிக்கை செம் மொழி தேனொடு சேர்ந்த – ஆரணிய:4 160/1
ஊண் உவட்டு பால் தேனொடு பெருக்கெடுத்து ஓடும் – இரட்சணிய:2 31/1

மேல்