தூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 20
தூக்கம் 3
தூக்கி 1
தூக்குவாம் 1
தூக்குற 1
தூங்க 1
தூங்கி 1
தூங்கிய 1
தூங்கினார் 1
தூங்கினான் 1
தூங்கும் 7
தூங்குவ 1
தூங்குவல் 1
தூஷண 1
தூஷணம் 6
தூஷணமாம்-கொல்லோ 1
தூஷணி 1
தூசி 2
தூஷியம் 1
தூசு 1
தூசும் 1
தூடணங்கள் 1
தூடணம் 2
தூண்டாத 1
தூண்டாய் 1
தூண்டி 6
தூண்டிடாது 1
தூண்டில் 1
தூண்டிவிட்ட 1
தூண்டினன் 1
தூண்டும் 1
தூணம் 1
தூணி 1
தூணியுள் 1
தூத 1
தூதர் 15
தூதர்-தம் 1
தூதருக்கும் 1
தூதரும் 2
தூதரை 3
தூதன் 2
தூதனை 1
தூது 3
தூதுவர் 1
தூம்பு 2
தூமம் 1
தூய் 3
தூய்தாய் 1
தூய்மை 3
தூய்மையாய் 1
தூய்மையார் 1
தூய்மையின் 1
தூய்மையினில் 1
தூய்மையோய் 1
தூய 114
தூயர் 6
தூயரில் 1
தூயரின் 1
தூயரும் 2
தூயரை 3
தூயவ 2
தூயவர் 2
தூயவன் 5
தூயன் 3
தூயாவி 1
தூயோய் 2
தூயோர் 3
தூயோன் 3
தூர்க்க 1
தூர்த்த 1
தூர்த்தராம் 1
தூர்த்தரிலும் 1
தூர்த்தன் 2
தூர்த்தன 1
தூர்த்தனாய் 1
தூர்த்தனே 1
தூர்த்தனை 1
தூர்வது 1
தூர 3
தூரதிட்டிக்கண்ணடி 1
தூரம் 11
தூரமாம் 1
தூரமால் 1
தூல 1
தூலத்தை 2
தூவி 4
தூவிய 1
தூளி 1
தூளி-நின்று 1
தூளியிடை 1
தூற்ற 1
தூற்றி 1
தூற்றும் 1
தூறு 9
தூறுக்கிடையில் 1
தூறும் 1

தூ (20)

தூ நறு மலர் சரண் தொழுது தைவிக – ஆதி:4 51/3
தொண்டன் மெய்ப்பொருள் உணர்ந்து தூ பலி முறை தூவி – ஆதி:8 20/2
தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும் – ஆதி:14 72/2
தூ நறும் புனல் துருவி ஓர் வாவியில் துன்ன – ஆதி:14 82/2
விண்டு தூ மலர் கள் துளி வடித்து மெய் அரும்பி – ஆதி:18 9/2
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி – குமார:2 16/1
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
தூ நலம் திகழ் மேனியில் தோன்றி நம் – குமார:2 467/2
தூ நறிய சிற்சுவைய பான நறை துய்த்தார் – குமார:3 8/4
தூ என உமிழ்ந்து பழிதூற்றி இகழ்வன் மெய் – நிதான:2 59/2
மேய தூ வரி வில் தொடை ஆக்கினன் விட்டான் – நிதான:2 84/4
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/3
அனர்த்தம் வரும் காண் தூ மனமா அமலன் பரவும் ஜெகத்தீரே – நிதான:9 12/4
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியை தூ மனமாய் – நிதான:9 15/2
தூ நலம் பயப்பது சுகிர்தம் உள்ளது – ஆரணிய:4 8/1
சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூ சுடர் – ஆரணிய:4 62/1
தூ நலம் திகழ் வஸ்து உண்டு என்பது என் துணிபு – ஆரணிய:6 18/4
துறக்கம் கிட்டியதாம் என தூ நெறி நடந்து – ஆரணிய:8 12/3
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும் – இரட்சணிய:1 44/1
துஷ்ட வல் வினை எலாம் தொலைக்கும் தூ மன – தேவாரம்:3 11/3
மேல்


தூக்கம் (3)

தூக்கம் நீங்கியவாம் என தூளி-நின்று – ஆதி:14 169/1
விஞ்சா நின்ற தூக்கம் விளைத்தான் மிகு சோம்பன் – ஆதி:16 19/4
தூக்கம் விட்டு எழுந்தனன் துணுக்குற்று ஓடினான் – ஆதி:19 41/4
மேல்


தூக்கி (1)

சந்தாபத்தால் என் பயன் உண்டாம் தலை தூக்கி
நந்தா இன்ப நல் நெறி சேர்-மின் நமரங்காள் – ஆதி:16 5/3,4
மேல்


தூக்குவாம் (1)

துன்னுறும் குண_தோடத்தை தூக்குவாம் – ஆரணிய:6 37/4
மேல்


தூக்குற (1)

சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குற
சமயம் நல்கி பின் சார்பு அறிந்து ஒண் மதி – ஆரணிய:9 25/2,3
மேல்


தூங்க (1)

சதி முறை தழுவி தூங்க தகைபெறு நடனம் செய்தார் – இரட்சணிய:3 103/4
மேல்


தூங்கி (1)

புந்தி_அற்று அயர்ந்து தூங்கி பொழுது வீண் போக்கடித்து – ஆதி:19 91/1
மேல்


தூங்கிய (1)

தூங்கிய வேதியன் துயில் உணர்ந்திலன் – ஆதி:19 36/1
மேல்


தூங்கினார் (1)

தூங்கினார் அவர் துஞ்சினராம் என – ஆரணிய:4 97/4
மேல்


தூங்கினான் (1)

அறம் தவா விப்பிரன் அயர்ந்து தூங்கினான்
இறந்த ஓர் வெகுளியில் தீது என்று எள்ளுவர் – ஆதி:19 35/2,3
மேல்


தூங்கும் (7)

மருங்கு எரி கதுவ தூங்கும் மாசுணம் உணராது ஆங்கு – ஆதி:2 28/1
பருவரல் பழுத்து தூங்கும் மாரண படுகர் வைப்பை – நிதான:3 14/4
அம் தாபதர் ஓர் இருவோரும் அயர்ந்து தூங்கும்
கொந்து ஆர்_இருள் துற்று புழைக்கு அருகாய குன்றில் – ஆரணிய:4 99/1,2
கோட்டு_மா கிளை தூங்கும் கொழும் பொழில் – ஆரணிய:5 20/1
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி – ஆரணிய:5 20/2
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் புயல் – ஆரணிய:5 20/3
கோட்டு மால் வரை தூங்கும் குளிர் மது – ஆரணிய:5 20/4
மேல்


தூங்குவ (1)

தூங்குவ அல்ல நின்று துயல்வருகின்ற யாண்டும் – ஆதி:19 101/3
மேல்


தூங்குவல் (1)

அஞ்சேல் செல் நீ தூங்குவல் சற்று இங்கு அயர்ந்து என்னா – ஆதி:16 19/3
மேல்


தூஷண (1)

விண்ட பல தூஷண விதங்கள் விவரிக்கின் – நிதான:11 32/3
மேல்


தூஷணம் (6)

துன்_மதியாக தேவ_தூஷணம் சொன்னாய் என்னா – குமார:2 182/3
நீயிரே இவன் வாய் சொற்ற நிமல தூஷணம் கேட்டீரால் – குமார:2 184/4
சொன்னவன் சொல்_அரும் தேவ_தூஷணம் – குமார:2 245/2
தொக்கனர் பலர் பல தூஷணம் சொலி – குமார:2 264/3
பித்தர் என்று இகழ்ந்து தேவ_தூஷணம் பிதற்றி வேத – நிதான:3 32/2
துப்பு உறழ் சுவிசேஷத்தை தூஷணம் செய்த பாவி – ஆரணிய:5 75/3
மேல்


தூஷணமாம்-கொல்லோ (1)

வித்தரித்து உரைத்தேன் இந்த மெய்மை தூஷணமாம்-கொல்லோ
இத்தகும் உபநியாசத்து ஏதொரு தவறு உண்டு என்னின் – நிதான:11 45/2,3
மேல்


தூஷணி (1)

பொல்லை மத தூஷணி எம் அர்ச்சை முறை போற்றாது – நிதான:11 38/2
மேல்


தூசி (2)

ஏர் ஆற்றும் அகிலாண்ட கோடி எலாம் தூசி என இயங்கல் ஆற்றும் – ஆதி:4 37/3
தூசி உற்பவ வினை தொகுதி மற்று இதே – ஆதி:14 29/2
மேல்


தூஷியம் (1)

சென்றசென்ற திசை-தொறும் தூஷியம்
மன்றம் எங்கும் வசைப்படு வாய்மதம் – நிதான:8 19/1,2
மேல்


தூசு (1)

சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கி தம் – இரட்சணிய:1 60/1
மேல்


தூசும் (1)

உண்ண புசிப்பும் உடை தூசும் உதவி இரவு_பகலாக – நிதான:9 82/2
மேல்


தூடணங்கள் (1)

தூடணங்கள் பல பேசி துணிந்து புறக்கணித்து இகழ்ந்தார் – குமார:2 346/4
மேல்


தூடணம் (2)

கிழிந்தது தூடணம் கிளந்த வாய் எலாம் – குமார:2 387/4
இம்பர் நிந்தை தூடணம் அணி என புனைந்திடுவார் – ஆரணிய:2 43/3
மேல்


தூண்டாத (1)

தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/3
மேல்


தூண்டாய் (1)

தூண்டாய் என்னில் அந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடும் காண் – தேவாரம்:5 10/2
மேல்


தூண்டி (6)

தூண்டி இனி மற்று அவை துலங்க ஒளி துன்னும் – ஆதி:13 31/2
அமையச்சே தீபம் தூண்டி அலர்த்துவார் போல் ஓர் வாக்கு – நிதான:3 46/1
தூண்டி என் ஜீவ_சாக்ஷி துடிக்கின்றது இன்னும் காண்டி – ஆரணிய:3 19/4
மங்கு ஒளி விளக்கை தூண்டி வளர்த்திய வண்ணம் நின் வாய் – ஆரணிய:4 166/2
தூண்டி நீர் சேய்மைத்து ஆக துணை விழி இழந்து சில்லோர் – ஆரணிய:5 66/2
விலகி உயிர் உடலை விடும் அமையத்து எம்மை விலகாது விசுவாச விளக்கை தூண்டி
இலகு திரு_அடி நீழல் இருத்துவானை என்று-கொலோ கண் குளிர காணும் நாளே – தேவாரம்:8 7/3,4
மேல்


தூண்டிடாது (1)

தூய தம் சபை சுடர் தூண்டிடாது ஒளி – ஆதி:9 30/1
மேல்


தூண்டில் (1)

சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில்
இடும் இறைச்சி நுகர்ந்திடும் மீனமும் என்னா – குமார:2 301/1,2
மேல்


தூண்டிவிட்ட (1)

சொல்புத்தியும் போய் இலௌகீகன் மன் தூண்டிவிட்ட
துற்புத்தியின் நீர்மையை வேதியன் சூழ்ச்சி அற்று – ஆதி:12 21/2,3
மேல்


தூண்டினன் (1)

தூண்டினன் பேதுரு சமிக்கை தோன்றுற – குமார:2 27/3
மேல்


தூண்டும் (1)

களவினால் பொருளை கவர்வான் நசை தூண்டும்
அளவில் உன்னை அதட்டினன் ஆவது கொள்ளாய் – குமார:2 286/1,2
மேல்


தூணம் (1)

இரவில் அக்கினி தூணம் உண்டு எல் சுடு வெயிற்கு – ஆதி:8 16/1
மேல்


தூணி (1)

உத்தமாத்திரம் வேதியன் தூணி புக்கு ஒடுங்கி – நிதான:2 88/2
மேல்


தூணியுள் (1)

சுமை உறு பொய்மை தூணியுள் மண்டி தொகுமாறு – நிதான:2 79/1
மேல்


தூத (1)

சூத்திரத்தினும் தூத வேடத்தினும் தூய – ஆரணிய:7 22/3
மேல்


தூதர் (15)

சத்துருவும் பைசாசம் அறுப்பு உலக முடிவு அரிவோர் தா_இல் தூதர்
உத்தமர் மேனிலை சேர்வர் களை போல்வார் எரியுண்பர் உண்மை ஓர்-மின் – ஆதி:9 83/3,4
துன் நீரர்-தமை எரியிட்டு அறவோரை துரிய நிலை தொகுப்பார் தூதர் – ஆதி:9 87/4
நனி திரு_பணிவிடை புரி தூதர் நம்பனுக்காய் – ஆதி:11 7/2
போய் எ உலகும் திரிந்து வரு புனித தூதர் போற்றி இசைப்ப – ஆதி:14 151/3
தூதர் தூவிய மலர் தொகுதி போலுமால் – குமார:1 9/3
ஈண்டு ஒரு கணத்தில் ஓர் இலக்கமுறு தூதர்
வேண்டுகிலன் யான் அது விழைந்து இயலுவேனேல் – குமார:2 143/2,3
உம்பர்-நின்று இழிந்த தேவ_தூதர் ஓர் இருவர் ஒல்லை – குமார:2 447/3
தூ உடை பரித்த தேவ_தூதர் ஓர் இருவர் தோன்றி – குமார:2 449/2
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு – குமார:2 454/1
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர்
புக்கு இ ஆண்டகை ஏகிய புதுமையே போல – குமார:2 485/2,3
விண் நிலவு தூதர் கணம் எங்கணும் விராய – குமார:3 14/4
அவ்வயின் ஒளி கொள் தூதர் ஆரணர்-தம்மை நோக்கி – இரட்சணிய:2 19/1
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர்
மன்றல் வாசகம் மிழற்றி வந்து வேதியரை ஏற்றார் – இரட்சணிய:3 13/2,3
ஏதம்_இல் வான தூதர் இருவரும் இதனை சொன்னார் – இரட்சணிய:3 15/4
வினைய வேதியர்க்கு வந்த விபுத தூதர் இருவரும் – இரட்சணிய:3 27/2
மேல்


தூதர்-தம் (1)

சிறை உடை தூதர்-தம் சேனையின் குழாம் – ஆதி:4 56/1
மேல்


தூதருக்கும் (1)

தூதருக்கும் அமார்க்க தொகுதிக்கும் – இரட்சணிய:3 49/2
மேல்


தூதரும் (2)

தேவ_தூதரும் வியந்து ஏத்து செம்பொருள் – ஆதி:14 34/3
ஆங்கு அடுத்து இரு தூதரும் ஐயன்மீர் அணிகொண்டு – இரட்சணிய:3 75/1
மேல்


தூதரை (3)

தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆக கொண்டேம் – ஆரணிய:5 51/2
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை
சேய் உயர்ந்த கதி வழி சகாயரா செய் திவ்விய – இரட்சணிய:3 21/2,3
ஆதியான் தூதரை அடுத்து இ வண்ணமா – இரட்சணிய:3 54/1
மேல்


தூதன் (2)

இனிது கூவினன் தீர்க்கர் சொல் எடுத்து ஒரு தூதன் – ஆதி:9 7/4
அத்தனை கருதி கூவும் அளவையில் அடுத்து ஓர் தூதன்
சித்த சஞ்சலத்தை ஆற்றி தேற்றினன் சென்றானாக – குமார:2 128/1,2
மேல்


தூதனை (1)

தூறு அடர்ந்த கானகம் துரீஇ தூதனை அடுத்து – ஆதி:9 8/2
மேல்


தூது (3)

செழும் குடம் பரம நாயகன் திருமுனம் செல் தூது செய் பவங்களால் – குமார:2 67/3
இல்லவள் விடுத்த தூது எதிர்ந்து வைகறை – குமார:2 241/1
தெருண்டு என் நாயகன் வர விடு தூது ஒன்று சேரின் – இரட்சணிய:1 53/3
மேல்


தூதுவர் (1)

வல்ல தூதுவர் வந்து அணைகின்றனர் வாய்மை – இரட்சணிய:2 36/2
மேல்


தூம்பு (2)

தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/2
தூம்பு உறழ்ந்த புற்று அரவொடும் தொகு கடுவிரியன் – குமார:4 60/3
மேல்


தூமம் (1)

காலம் விரைந்து தூமம் நிகர்ப்ப கடிது ஓடும் – ஆதி:16 16/1
மேல்


தூய் (3)

துன்பம் யாதும் இன்றாக தூய் தவர் – ஆதி:4 60/1
தூய் நடை பயின்ற போதும் ஜென்மத்தே தொடுத்து நின்ற – ஆரணிய:8 38/2
தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/3
மேல்


தூய்தாய் (1)

ஒரு நெறித்து ஆகி தூய்தாய் உள்ளுற தெளிந்து பாவ – ஆதி:4 5/1
மேல்


தூய்மை (3)

செம்மை சேர் ஓய்வு நாளை சிந்தையால் தூய்மை செய்-மின் – ஆதி:2 17/4
பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/3
துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர் – தேவாரம்:3 3/2
மேல்


தூய்மையாய் (1)

தோன்றி ஜீவரை தூய்மையாய் பக்குவப்படுத்தும் – ஆரணிய:6 21/2
மேல்


தூய்மையார் (1)

துள்ளி ஆவி துடித்தனர் தூய்மையார் – ஆரணிய:4 94/4
மேல்


தூய்மையின் (1)

வண்ண வான் தூய்மையின் தெளிந்த மாண்பது – ஆரணிய:4 11/2
மேல்


தூய்மையினில் (1)

ஆழி நாயகன் ஞானத்தில் அருளில் தூய்மையினில்
வாழி அன்பினில் ஆழ்ந்து நீர் நிறைந்து நிர்மலமாய் – ஆதி:18 15/1,2
மேல்


தூய்மையோய் (1)

தொழுத்தை ஆக்குவன் சிறைப்படுத்தி தூய்மையோய் – நிதான:4 46/4
மேல்


தூய (114)

ஜோதியாய் விளங்கி நிற்கும் தூய சைதந்ய வாழ்வை – பாயிரம்:1 1/3
நின்று உலகு அனைத்தும் தூய நினைவு மாத்திரையில் தந்து – பாயிரம்:1 2/2
தொக்கதாய மெய் தூய திருச்சபை – ஆதி:1 2/4
தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன் – ஆதி:1 8/3
கோ_முறை வழுவா தூய கொற்றவன்-தனை போற்றாமல் – ஆதி:2 22/2
பொரு_அரும் பிழைகள் எல்லாம் பொறுத்து அருள் புரியும் தூய
திருவுளம் இரங்கி என்று ஜெபித்தனன் சிந்தை ஒன்றி – ஆதி:2 46/3,4
மானிட ஜீவ தோட மலினத்தை கழுவி தூய
போனகம் ஆகி தாகம் போக்கு பானமுமாய் என்றும் – ஆதி:4 7/1,2
நிறை வளம் படுக்கும் தூய நித்திய ஜீவ கங்கை – ஆதி:4 10/1
வித்தக புனித ஆவி விழுத்தகு சுமேதம் தூய
முத்திவீட்டு அறவோர் நட்பு முறை வழா தோத்ர கீதம் – ஆதி:4 66/2,3
தோத்திரம் ஆக செய்கை சுகிர்தமே ஆக தூய
பாத்திரம் ஆக தேகம் படு பயன் தமதே ஆக – ஆதி:6 7/2,3
மித்திரர் ஆகி தூய விதிவிலக்கு ஓம்பி பிள்ளை – ஆதி:6 9/3
தூய தம் சபை சுடர் தூண்டிடாது ஒளி – ஆதி:9 30/1
சோரவிட்டிடாது உலகரை தூய நல் ஒழுக்கால் – ஆதி:9 51/2
தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின் – ஆதி:9 73/4
தூய சேத்திரத்தில் எங்கும் இத்தகைய அற்புதத்தின் தொனி போய் முட்ட – ஆதி:9 165/1
தூய வேதிய நாம் செல துணிந்த காரியம் என் – ஆதி:11 2/2
தூய மெய் ஒளி திகழ் சுருதி நூல் நெறி – ஆதி:12 35/3
தூய பெருமான் திரு_அடிக்கு தொழும்பன் கபாடம் திற-மினோ – ஆதி:13 9/2
தொல் நெறி விளக்கு சுவிசேஷ நெறி தூய
இ நெறி விடுத்தவர் ஈடேறும் வகை இன்றால் – ஆதி:13 47/3,4
தூய ஓவிய புறம் துதைந்த வல் இருள் – ஆதி:14 19/1
அம் கலுழ் மேனி ஓர் அணங்கு தூய நீர் – ஆதி:14 25/3
தூய சிந்தையன் நெறி தவறாது செல் சூரன் – ஆதி:14 84/2
தொண்டரை தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு – ஆதி:14 125/1
பற்று அறுத்து யோகு செய்யும் பவித்திரான்மிகளே தூய
கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார் – ஆதி:14 128/2,3
பூவலயத்தை ஆளும் புரவலன் புதல்வன் தூய
சேவடி தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற – ஆதி:14 130/1,2
வரு குமரேசன் தூய மலர் அடிக்கு அன்புசெய்த – ஆதி:14 141/1
தூய நீதி அழல் காலும் மணி துற்று அரியணை – ஆதி:14 182/2
அகில காரணராம் தூய ஆண்டகைக்கு அடங்காது ஈட்டு – ஆதி:17 23/1
விளிக்கும் நாளளவும் தூய விதிவிலக்கு ஓம்பல் வேண்டும் – ஆதி:17 24/4
பண்டைய கந்தை நீக்கி பரிவின் நல்கிய இ தூய
வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம் – ஆதி:17 27/2,3
மாயத்தை உதறி தூய வளம் மலி பரம கானான் – ஆதி:17 34/2
ஓவு_இலாதது சுரப்பது அ தூய நீரூற்றாம் – ஆதி:18 19/2
ஏர் ஆரும் தூய இளம் காலின் தேற்றரவும் – ஆதி:19 2/3
தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிர தீற்றி – ஆதி:19 88/1
பனி என படுமால் தூய பார்த்திவன் அருள் உண்டாயின் – ஆதி:19 98/2
துறை-தொறும் ஆரண துழனி தூய நாட்டு – குமார:1 32/1
தூய ஆவியின் அருள் துன்னுமாறு போல் – குமார:1 34/2
துனி தரு வினை முனி தூய சிந்தனை – குமார:2 3/1
சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/4
செம் முறை திறம்பா தூய சிந்தை உள் உடைந்து தேம்பி – குமார:2 127/2
தீங்கு அணுகாத தூய திரு படிவத்து நோவு – குமார:2 168/3
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
குறுமையோர் அமலன் தூய குணத்தை எள்துணை எண்ணாது – குமார:2 190/2
விடியும்-மட்டு இறைவன் தூய மேனி நொந்து அலசி உள்ளம் – குமார:2 193/1
குரு முறை நிறுத்த தூய குமரனை அறியேன் என்னா – குமார:2 195/3
செம்மை திறம்பா தூய தேவ சினம் திருகி – குமார:2 321/3
எவ்வாறு தூய திரு_மேனி இனைந்ததேயோ – குமார:2 370/2
தொல் முறை விதிப்படி தூய யாக்கையை – குமார:2 408/2
தூய சின தீ மாய அடர்த்து தொகல் போலும் – குமார:2 416/4
சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய
ஒள் நிற பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல் – குமார:2 428/2,3
சீத நீர் பொய்கை எங்கும் செழும் கடி கமழும் தூய
மாதர் மென் கமல போது வள்ளவாய் மலர்ந்த மாதோ – குமார:2 430/3,4
தோன்றல் வேண்டலில் தாதையார் தூய நல் ஆவி – குமார:2 492/2
தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த – குமார:4 16/3
தூய வேதியன் நெஞ்சினுக்கு எதிர் செல துளங்கான் – நிதான:2 83/2
தூய சரீரி-தானோ பிறிது ஒன்றோ சொல தேர்கில்லேன் – நிதான:3 44/4
வையகம் நகைக்கும் தூய மன_கரி வதைக்கும் கேடு – நிதான:3 54/2
துன்ன_அரும் முத்தி வேட்ட தூய யாத்திரிகர் கிட்டி – நிதான:3 61/1
நுங்கியோர் உகுத்த சோரி நொதிப்படு கிடங்கும் தூய
அங்கம் வெந்து உக்க சாம்பல் குவைகளும் அகில லோகம் – நிதான:3 74/2,3
பன்_அரும் தூய நீதி பகர் விதி நிடேதத்தாலே – நிதான:5 16/2
மற்று இதே போலும் தூய மறைமொழி அநேகம் தீர – நிதான:5 17/1
தூய சற்கருமங்கள் துணியுமால் – நிதான:5 66/4
தூய தேவ கிருபை சுகிர்தம் என்று – நிதான:5 73/3
தொன்று தொல் அறம் துதைந்து எழில் குலவிய தூய
மன்று தொக்க பல் வளன் எலாம் கரவினால் வௌவி – நிதான:7 3/1,2
தூய நன்மையும் சுகிர்தமும் ஒருங்கு அற துடைத்து – நிதான:7 4/1
தூய ஜீவியத்தை நல்கி சுடர் விழு பதங்கமே போல் – நிதான:7 76/4
தூய வேதியன் சொற்றனன் என்பவே – நிதான:7 93/4
தூய மா தருமம் துதையாத இ – நிதான:8 22/1
தூய சத்தியமே துருவி கொள்வேம் – நிதான:8 38/2
தூய நினைவால் அன்றி நம் பேர் சொல்லி வழங்கும் துர்_ஜநரை – நிதான:9 11/1
தூய விதியை நல் நெறியின் துணிபு என்று உன்னி பெற்றோர்க்கு – நிதான:9 13/3
தூய கடவுள் வரைந்து தந்த துகள் தீர் விதியை தூ மனமாய் – நிதான:9 15/2
தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய் தேடும் ஜெகத்தீரே – நிதான:9 61/4
தூய யாத்திரை செலும் துணிவும் ஓர்ந்தோர் சிலர் – நிதான:11 16/2
தூயன் தூய செம் குருதியின் கூக்குரல் சுடர் வான் – ஆரணிய:1 2/2
தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால் – ஆரணிய:1 15/1
சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
தூய ஆவி துணை கொடு நல் நெறி துன்னு என்று – ஆரணிய:1 23/3
சொந்தம் நிற்கு என பகர்ந்தனன் தூய நம்பிக்கை – ஆரணிய:2 22/4
தூய வேதியர் எம்மிலும் நியாய சூக்குமர்-கொல் – ஆரணிய:2 59/2
தூய ஞானத்து குழவியும் சொல்லும் மற்று இது போல் – ஆரணிய:2 62/1
கைக்குநர் ஆகி தூய கதி வழி துருவி சென்று – ஆரணிய:3 1/2
அரு மறை சுரபி நின்று அளிக்கும் தூய பால் – ஆரணிய:4 26/2
தூய வேதியர் இருவரும் திகைத்து உளம் துடித்தார் – ஆரணிய:4 42/2
சுருதி உத்தி அநுபவம் தூய சன்மார்க்கம் – ஆரணிய:4 147/1
பொருந்தும் மெய் அன்பில் தூய போனகம் அளிப்பர் பல்லோர் – ஆரணிய:5 28/2
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய
சத்திய நெறியை நாடி தணப்பு_இல் பேர்_உவகையோடும் – ஆரணிய:5 33/2,3
தூய யாத்திரிகம் கேட்க விருப்பு உளேம் சொல்க என்றார் – ஆரணிய:5 55/4
தூய நாட்டம் அற்றால் இருள் மூடிடும் துணிபே – ஆரணிய:6 2/4
தூய ஆயுதம் பெற்றிலன் தோள் பலம் இல்லன் – ஆரணிய:6 3/1
தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம் – ஆரணிய:6 22/1
தூய நாள்_மலர் தே துளி துய்த்திடும் – ஆரணிய:6 45/2
ஆயர் அளித்த தூய படம் கொண்டு அறிகில்லேம் – ஆரணிய:7 13/2
சூத்திரத்தினும் தூத வேடத்தினும் தூய
பாத்திரன் என மருண்டனிர் இது பரமார்த்தம் – ஆரணிய:7 22/3,4
தூய பாதையை விலகிய துணிகர செயலும் – ஆரணிய:7 29/3
தூய நம்பிக்கை சொற்ற சொல் அயில் உளம் தொளைப்ப – ஆரணிய:8 7/1
தூய யாத்திரை செய மனம் துணிந்து ஒருப்படற்கு – ஆரணிய:8 13/3
தூய ரக்ஷணிய போதம் தொகுத்து உரையாடலுற்றான் – ஆரணிய:8 36/4
வனிதை-பால் தோன்றி தூய வரன்முறை விதியை ஓம்பி – ஆரணிய:8 45/3
தூய சுவிசேஷ ஒளி தோற்ற_அரியது ஆக – ஆரணிய:9 104/1
தூய சேத்திரம் அடைந்தனமால் என தொழுது – இரட்சணிய:1 13/2
தூய பொன்னொடு மின்னையும் வெயிலையும் தொகுத்து – இரட்சணிய:1 22/2
தூய யாத்திரை குறியினால் அவர் நிலை துணிந்து – இரட்சணிய:1 32/2
தூய அக்கரைப்படுதுமோ என நிலை துளங்கி – இரட்சணிய:2 22/3
பரிசனர் ஆய தூய பவித்திர வான சேனை – இரட்சணிய:3 8/2
தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்கும தனு – இரட்சணிய:3 18/1
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/2
தூய சின்னங்கள் யாதும் இலன் என துணிந்து அவ் ஒல்லை – இரட்சணிய:3 90/2
இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகி – இரட்சணிய:3 98/3
கடி மணக்கோலத்தோடு இ ககன மண்டபத்துள் தூய
வடிவு உடை எமரீர் வம்மோ வம் என்ற வாக்கும் கேட்டேன் – இரட்சணிய:3 101/3,4
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து – தேவாரம்:8 10/2
ஜோதியாய் அகண்டாகாரமாய் விளங்கும் தூய சைதந்யமே போற்றி – தேவாரம்:11 1/2
கைதவர் சினந்து தூய கமல வாள் முகத்து உமிழ்ந்து – தேவாரம்:11 25/1
இறை வழி படுத்தும் தூய எம்பெருமானே போற்றி – தேவாரம்:11 33/2
சுத்த மெய் விசுவாசத்தை துரிசு_அற விளக்கி தூய
பத்தனாம் ஆபிராமை பாதுகாத்து அளித்தாய் போற்றி – தேவாரம்:11 34/1,2
மேல்


தூயர் (6)

ஏதம்_இல் தூயர் கண்டு அடைவர் ஈசனை – ஆதி:9 48/2
துர்_நெறி ஒழுகியோர் தூயர் ஆவரோ – ஆதி:12 61/2
அற திறம் பயின்று தூயர் ஆதல் விட்டு அகத்தை மூடி – ஆதி:17 17/2
தூயர் போல் இரு துறவிகள் துணிந்து முன் செல்வார் – ஆரணிய:2 40/2
நளினம் ஒத்து அலர்ந்து செவ்வி நகை முகம் திகழ தூயர்
களி மகிழ் சிறப்ப சென்று கனக மால் வரை கண்ணுற்றார் – ஆரணிய:5 4/3,4
தூயர் ஆகி தொழும்புபட்டார்க்கு எலாம் – இரட்சணிய:3 28/2
மேல்


தூயரில் (1)

தூயரில் ஒருவன் கிட்டி தொல்லையே அகத்துள் அன்பு – ஆரணிய:5 45/3
மேல்


தூயரின் (1)

தூய ஓர் பொது திருச்சபை தூயரின் ஐக்கியம் – ஆரணிய:6 22/1
மேல்


தூயரும் (2)

தூயரும் பண்டு பூருவ பாதையை துலக்கி – ஆதி:8 39/2
தொக்கு இருந்தனர் பன்னொரு தூயரும் – குமார:2 466/4
மேல்


தூயரை (3)

தூயரை கெடுப்பான் எண்ணி துணிந்து பேயேல்செபூலாம் – நிதான:7 63/2
இன்னவாறு இங்கு இனி வரு தூயரை
நன்னர் ஏற்று நயந்து மகிழுவீர் – இரட்சணிய:3 45/3,4
தூயரை எதிர்கொள சுலவி விண்ணிடை – இரட்சணிய:3 55/3
மேல்


தூயவ (2)

சுமையை போக்கிய தூயவ ஆனந்தம் துதைந்த – குமார:4 74/1
சொற்றது ஓர்ந்து அறிவீனனும் தூயவ
முற்று அறிந்த முழுமுதல் சித்தம் யான் – ஆரணிய:9 7/2,3
மேல்


தூயவர் (2)

மற்றொரு தூயவர் மகிழ்ந்து வேதியன் – ஆதி:15 24/1
திறந்தது தூயவர் சேம வைப்பிடம் – குமார:2 390/1
மேல்


தூயவன் (5)

தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/4
தூயவன் தன் வரலாறு தொன்று-தொட்டு – குமார:1 22/3
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி – குமார:1 48/3
தூயவன் நெஞ்சகம் துணுக்குற்று ஏங்கிட – நிதான:2 2/2
சுருங்கு நூல் வழியை பற்றி தூயவன் முன் செல் காலை – நிதான:3 71/1
மேல்


தூயன் (3)

தூயன் மூழ்கு துயர்_கடல் நீத்து உய – குமார:2 463/3
தூயன் தூய செம் குருதியின் கூக்குரல் சுடர் வான் – ஆரணிய:1 2/2
தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி – ஆரணிய:5 64/2
மேல்


தூயாவி (1)

சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி – நிதான:11 75/4
மேல்


தூயோய் (2)

துஞ்சலுக்கும் துளக்கம்_இல்லா மன தூயோய்
அஞ்சுகிற்றி-கொலாம் இ அரக்கனுக்கு ஐய – ஆரணிய:4 154/3,4
தொந்தமாய் புடை வளைந்து சூழ்ந்தன இங்கு தூயோய் – இரட்சணிய:2 30/4
மேல்


தூயோர் (3)

பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்ப பூரித்தார் உள்ளம் தூயோர் – ஆரணிய:4 173/4
துன்னு மாத்திரத்து ஆரண கிழவராம் தூயோர்
பன்_அரும் பரமானந்த பரவசர் ஆனார் – இரட்சணிய:1 11/3,4
தொக்க விண்ணவர்க்கும் செய்தார் அஞ்சலி முறையில் தூயோர் – இரட்சணிய:3 97/4
மேல்


தூயோன் (3)

தொலைவு_இலா நலம் துய்த்து இனிது இருந்தனன் தூயோன் – ஆதி:14 98/4
துச்சாரிகள் பங்கு அடைவன் என்ற தூயோன் அருளை துணைக்கொண்டு – நிதான:9 16/2
துன்று சோகபூமியினொடும் என்றனன் தூயோன் – ஆரணிய:10 31/4
மேல்


தூர்க்க (1)

தூர்க்க முயல்வாரின் வறிது யோசனை துணிந்தார் – குமார:2 156/4
மேல்


தூர்த்த (1)

துன்றி நின்றனை தொல் நெறி தூர்த்தனை தூர்த்த
பொன்றினும் வசை போவது இன்றால் புவி மீதே – குமார:2 291/2,3
மேல்


தூர்த்தராம் (1)

துன்_நெறி ஒழுகிய தூர்த்தராம் இனி – நிதான:10 17/3
மேல்


தூர்த்தரிலும் (1)

துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய் – தேவாரம்:4 6/1
மேல்


தூர்த்தன் (2)

தொன்று-தொட்டு அற துடைத்திட முயல்கின்ற தூர்த்தன்
ஒன்றி மூவரும் குதுகலித்து ஓடிவந்து உற்றார் – ஆதி:11 19/3,4
துன்று இருளடைந்த மனை-தோறும் உழல் தூர்த்தன் – நிதான:11 30/4
மேல்


தூர்த்தன (1)

தூர்த்தன வசை மழை சொரிந்தது எங்குமே – நிதான:10 3/4
மேல்


தூர்த்தனாய் (1)

துன்_நெறி புக்கு உழல்கின்ற தூர்த்தரிலும் தூர்த்தனாய்
பல் நெறி கொள் பரசமய படுகுழி வீழ்ந்து அழிவேற்கு – தேவாரம்:4 6/1,2
மேல்


தூர்த்தனே (1)

சொற்றனன் துஷ்கிருத பெயர் தூர்த்தனே – நிதான:11 14/4
மேல்


தூர்த்தனை (1)

துன்றி நின்றனை தொல் நெறி தூர்த்தனை தூர்த்த – குமார:2 291/2
மேல்


தூர்வது (1)

தூர்வது என்று கண்டு ஆரணர் உளம் துளக்குற்றார் – ஆதி:9 2/4
மேல்


தூர (3)

தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி – ஆதி:14 185/3
எவ்வகை நெடும் தூர ஏற்றம் இங்கு இதை ஏறி – ஆதி:19 15/3
தூர யாத்திரை செல துணிந்துளார் இவர் – நிதான:10 32/2
மேல்


தூரதிட்டிக்கண்ணடி (1)

விண் நிலவு பொருள் விளக்கும் மேதினிக்கு தூரதிட்டிக்கண்ணடி
தன் அக பொருளின் நிலை தேரும் கருத்து உளதோ – நிதான:5 55/3,4
மேல்


தூரம் (11)

இன்பு எலாம் தூரம் ஆக இரங்கலும் தவிப்பும் நீங்கா – ஆதி:9 125/1
எதிரெதிராக செல்லும் இடை நெடும் தூரம் உள்ள – ஆதி:17 21/1
நெறியது பிசகாமல் சென்றனன் நெடும் தூரம் – ஆதி:19 27/4
காதலாய் நெடும் தூரம் மெய் பத்தி அங்கனையே – குமார:4 85/1
இருண்ட கானகத்து முன்னிட்டு ஏகினான் சிறிது தூரம் – நிதான:3 45/4
பரிபவ சுழல் பட்ட பஞ்சு என நெடும் தூரம்
பொரி பரல் படு சுரத்திடை போயினர் போம் கால் – ஆரணிய:4 49/1,2
கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு – ஆரணிய:5 44/2
கொற்றவன் நகர்க்கு இ மேலே குறிப்பிடு தூரம் கூறில் – ஆரணிய:5 50/1
பற்று_உளார்-தமக்கு தூரம் பற்று_இலார்க்கு அண்மை என்றும் – ஆரணிய:5 50/2
துருவி ஏகினர் தூரம் ஓர் சிறிது கண் துஞ்ச – ஆரணிய:8 6/1
கையுற அடுத்தனம் இதோ கடிகை தூரம் – ஆரணிய:9 113/4
மேல்


தூரமாம் (1)

துங்க நூல் நெறிக்கும் அதி தூரமாம்
பொங்கு கார் இருள் கங்குலும் போர்த்ததால் – ஆரணிய:4 69/3,4
மேல்


தூரமால் (1)

துள்ளுதிர் நடையிலும் எனக்கு தூரமால்
மெள்ளமெள்ள தனி வருவல் விட்டு முன் – ஆரணிய:9 97/2,3
மேல்


தூல (1)

தூல தேகம் விட்டு அடைந்த தூய சூக்கும தனு – இரட்சணிய:3 18/1
மேல்


தூலத்தை (2)

படுக்குநர்க்கும் பருமித்த தூலத்தை
ஒடுக்குநர்க்கும் அலால் என உள்ளினான் – ஆதி:13 4/3,4
தூலத்தை உவந்து உண்டு சுகித்து சுகம் பேணி – தேவாரம்:10 2/1
மேல்


தூவி (4)

தொண்டன் மெய்ப்பொருள் உணர்ந்து தூ பலி முறை தூவி
எண்தகும் குருதி_கரியாய் உயிர் இனிது ஈந்து – ஆதி:8 20/2,3
மண்ணி அன்பு அலர் தூவி ஏகினன் வழிபட்டே – ஆதி:15 3/4
மண்ணை மணலை சிவலிங்க வடிவாய் சமைத்து மலர் தூவி
எண்ணம் இன்றி மந்திரம் சற்று இயம்பி பழம் பாட்டுகள் பாடி – நிதான:9 70/1,2
பழகிப்பழகி பனி தூவி தெள் நீர் சுனையில் படிந்து வரும் – ஆரணிய:5 93/2
மேல்


தூவிய (1)

தூதர் தூவிய மலர் தொகுதி போலுமால் – குமார:1 9/3
மேல்


தூளி (1)

பார் திடர் பிதிர்ந்தன பரந்த படு தூளி
போர்த்தன விசும்பு இரவி பொங்கு கதிர் நுங்கி – நிதான:2 57/3,4
மேல்


தூளி-நின்று (1)

தூக்கம் நீங்கியவாம் என தூளி-நின்று
ஆக்கை பெற்று உயிர் பெற்றவர் அந்தரம் – ஆதி:14 169/1,2
மேல்


தூளியிடை (1)

புற்புத நீர் உடல் பொறையை பூ தூளியிடை விழுத்தி – நிதான:11 74/1
மேல்


தூற்ற (1)

நாள் ஆரம்பத்து அயல் தூற்ற நாணம் அழிந்து நகைக்கிடமா – நிதான:9 17/3
மேல்


தூற்றி (1)

பத்திசெய் மார்க்கத்து உள்ள பழுது எலாம் பரக்க தூற்றி
வித்தக நினைவால் வாக்கால் கிரியையால் விரோதம்செய்யும் – நிதான:11 53/2,3
மேல்


தூற்றும் (1)

பழிக்கு பாவத்துக்கு அஞ்சலை பல்லவர் தூற்றும்
மொழிக்கும் நாணலை முன்பின் உற்று ஆய்ந்திலை முற்றும் – குமார:2 288/1,2
மேல்


தூறு (9)

இரு வகை பவ தூறு ஓங்கி இருண்ட பேர்_அடவி முற்றும் – ஆதி:4 12/1
தூறு அடர்ந்த கானகம் துரீஇ தூதனை அடுத்து – ஆதி:9 8/2
இம்பர் நூல் நெறி புதைய தூறு அடர்ந்து எழும் இயல்பும் – ஆதி:9 9/2
பாமர தூறு அடர் படுகர் வைப்பு இது – ஆதி:9 23/2
நன் புலத்து வித்திடுங்கால் வழி அருகும் பார் நிலத்தும் நவை தூறு எஞ்சா – ஆதி:9 80/2
தூறு அடர் மரண வைப்பின் சூழலை துருவி போனான் – நிதான:3 70/4
தூறு அடர்ந்த மாய சிறை துயர்_கடல் ஒருவி – ஆரணிய:2 4/3
தூறு அடர் கானகம் துருவி தீ விலங்கு – ஆரணிய:4 2/2
பேய் உழல் பாப தூறு அடர் கானில் பிரபஞ்ச – ஆரணிய:7 10/3
மேல்


தூறுக்கிடையில் (1)

கூர் வெயிலில் தீந்து கரிந்தன முள் தூறுக்கிடையில் குளித்த வித்து – ஆதி:9 81/2
மேல்


தூறும் (1)

அவ்வியன் என்று தூறும் அவமதி அழகிற்று அம்மா – ஆதி:17 26/4

மேல்