சு – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சுக்கு 1
சுக 13
சுக_போகங்கள் 1
சுக_போகத்தை 1
சுக_போகம் 2
சுகத்தினை 2
சுகத்துக்காய் 1
சுகத்தை 4
சுகந்தம் 1
சுகபோகம் 1
சுகம் 13
சுகமுண்டாகும் 1
சுகமும் 1
சுகாயுவும் 1
சுகானந்த 2
சுகானந்தம் 1
சுகிக்க 1
சுகிக்கும் 1
சுகித்தனை 1
சுகித்து 2
சுகிர்த்திய 1
சுகிர்த 4
சுகிர்தங்கள் 1
சுகிர்தத்தை 1
சுகிர்தம் 10
சுகிர்தமாம் 1
சுகிர்தமும் 2
சுகிர்தமே 1
சுகிர்தன் 2
சுகுணங்களும் 1
சுகுணமா 1
சுகுணமும் 1
சுசீல 2
சுசீலம் 1
சுஞ்ஞான 1
சுட்டி 1
சுட்டிட 2
சுட 5
சுடச்சுட 4
சுடப்பட்டது 1
சுடர் 52
சுடர்கள் 1
சுடர்களை 1
சுடர்விட்டு 1
சுடரால் 1
சுடரின் 1
சுடரும் 4
சுடரை 5
சுடலை 1
சுடு 17
சுடு_சொல் 4
சுடுகாடாய் 2
சுடுகாடு 1
சுடுசொல் 1
சுடும் 1
சுடுமுக 1
சுடுமுகன் 4
சுண்டி 1
சுண்ணமும் 1
சுத்த 18
சுத்த_மனத்தவன் 1
சுத்தம் 2
சுத்தம்_உள்ளவன் 1
சுத்தர் 1
சுத்தராய் 1
சுத்தரும் 1
சுத்தனாக 1
சுத்தனாய் 1
சுத்தனோ 1
சுத்தி 3
சுத்தியோ 1
சுதந்தர 3
சுதந்தரம் 4
சுதந்தரர் 1
சுதந்தரிக்க 1
சுதர் 1
சுதற்கு 1
சுதன் 18
சுதனாம் 1
சுதனை 3
சுதை 5
சுந்தர 3
சுந்தரன் 1
சுப்பிர 2
சுப்ர 1
சுப 1
சுபாவ 1
சுபாவத்தில் 1
சுபாவம் 1
சுபாவமாம் 1
சுபாவேச்சை 1
சும்மா 3
சும்மை 12
சும்மையும் 2
சும்மையை 2
சும்மையொடு 1
சுமக்க 1
சுமக்க_அரிய 1
சுமக்கும் 1
சுமங்கல 2
சுமடன் 1
சுமடு 2
சுமத்தி 1
சுமத்திடுவது 1
சுமதி 1
சுமந்த 1
சுமந்ததனால் 1
சுமந்தனர் 1
சுமந்து 18
சுமேதம் 1
சுமை 21
சுமைதாங்கி 1
சுமைதாங்கியை 1
சுமைநீங்கியபேறு 1
சுமையால் 3
சுமையினால் 1
சுமையினோடு 1
சுமையை 1
சுமையொடே 1
சுமையோடு 1
சுமையோடும் 1
சுய 4
சுய_நீதி 1
சுய_அறிவால் 1
சுயம்பிரபை 1
சுயம்பு 3
சுயாதீனத்து 1
சுர 5
சுரக்கும் 2
சுரங்கத்தின்-நின்று 1
சுரங்கத்தினை 1
சுரங்கம் 2
சுரத்தல் 1
சுரத்தி 2
சுரத்திடை 2
சுரத்தின் 1
சுரத்து 2
சுரத்தூடு 1
சுரந்து 3
சுரப்ப 2
சுரப்பது 2
சுரப்பதும் 1
சுரபி 1
சுரம் 7
சுரமண்டல 1
சுரமண்டலங்கள் 1
சுரமண்டலம் 2
சுரர் 2
சுரிகை 2
சுருக்க 1
சுருக்கம் 1
சுருக்கி 2
சுருங்கிய 1
சுருங்கு 1
சுருங்கை-தோறும் 1
சுருட்டுவாய் 1
சுருதி 67
சுருதிக்கும் 2
சுருதியாத்திரம் 1
சுருதியில் 2
சுருதியின் 1
சுருதியே 2
சுருதியை 1
சுருப்பு 1
சுரும்பு 2
சுருள் 1
சுருள்படும் 1
சுருளில் 1
சுருளை 1
சுரேந்திரன் 1
சுலவாது 1
சுலவி 6
சுலவு 3
சுலவுவதை 1
சுலா 1
சுலாம் 1
சுலாய் 1
சுவட்டிடை 1
சுவடு 2
சுவர் 4
சுவர்க்க 3
சுவர்க்கத்து 1
சுவர்க்கப்பேறு 1
சுவர்க்கவாசிகளும் 1
சுவரணை 1
சுவரை 1
சுவறாததும் 1
சுவறும் 1
சுவாலை 4
சுவாலைக்கு 1
சுவிசேஷ 17
சுவிசேஷகர் 1
சுவிசேஷகன் 3
சுவிசேஷத்தின் 2
சுவிசேஷத்தை 2
சுவிசேஷம் 2
சுவிசேஷன் 4
சுவிசேஷனாம் 1
சுவிசேஷனும் 1
சுவிசேடன் 4
சுவிசேடனுக்கு 1
சுவை 30
சுவைபடு 1
சுவைய 1
சுவையை 2
சுழல் 4
சுழல்வதே 1
சுழல்வன் 1
சுழல 2
சுழலில் 1
சுழலிலே 1
சுழலும் 2
சுழன்று 4
சுழி 1
சுழியுள் 1
சுளை 1
சுற்ற 1
சுற்றம் 2
சுற்றமும் 1
சுற்றி 5
சுற்றும் 2
சுறவத்தோடு 1
சுறுக்காய் 1
சுன்னமிட்டின 1
சுனை 3
சுனைத்தது 1
சுனையில் 1
சுனையின் 1
சுனையும் 2

சுக்கு (1)

சுக்கு நீர் அருந்தும் அ சூழ்ச்சி ஒக்குமால் – குமார:2 261/4
மேல்


சுக (13)

புற்புத உடல் சுக_போகம் நச்சியே – ஆதி:10 15/1
சிற்பர சுக நிலை அடைவர் செவ்வியோர் – ஆதி:10 15/4
மேவரும் பரமானந்த சுக நிலை மேவும் – ஆதி:11 4/3
காதலித்து நித்திய சுக வாழ்வினை கசந்தான் – ஆதி:11 21/2
மெய்ப்படு சுக நிலை மிகவும் சேய்த்து என – ஆதி:14 50/2
சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம் – ஆதி:19 19/4
மட்டு_அறு சுக_போகம் விழைவது மடமைத்தால் – ஆதி:19 20/4
செருக்கி வந்து அங்கு அவரவர் தீம் சுக
பெருக்கம் உள்ள நயம் உள பேச_அரும் – நிதான:8 36/1,2
வாளா பரமானந்த சுக வாழ்வை இழத்தல் மதியாமோ – நிதான:9 17/2
ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்து – ஆரணிய:2 24/1
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான – ஆரணிய:5 33/1
புந்தியாய் புசிப்பன் சுக_போகங்கள் – ஆரணிய:9 8/1
இன்பமும் சுக வாழ்வும் இயைந்து நீர் – இரட்சணிய:3 41/2
மேல்


சுக_போகங்கள் (1)

புந்தியாய் புசிப்பன் சுக_போகங்கள்
அந்தி_சந்தி ஜெபிப்பன் அறம் செய – ஆரணிய:9 8/1,2
மேல்


சுக_போகத்தை (1)

ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்து – ஆரணிய:2 24/1
மேல்


சுக_போகம் (2)

புற்புத உடல் சுக_போகம் நச்சியே – ஆதி:10 15/1
மட்டு_அறு சுக_போகம் விழைவது மடமைத்தால் – ஆதி:19 20/4
மேல்


சுகத்தினை (2)

நாச தேச சுகத்தினை நாடுவேன் – ஆதி:12 72/2
விஞ்சிய சுகத்தினை விளைக்குமால் அது – ஆதி:19 30/2
மேல்


சுகத்துக்காய் (1)

ஆன்ம சுகத்துக்காய் இக வாழ்வை அற வீசி – ஆரணிய:4 134/1
மேல்


சுகத்தை (4)

வாக்கு மனம் எட்ட_அரிய மா பர சுகத்தை
ஆக்கினர் அதன் அருமை யார் புகல வல்லார் – ஆதி:13 34/3,4
மாக தலத்து ஜீவ சுகத்தை மதியாமே – ஆதி:16 23/3
இணங்குவாய் எனில் இக சுகத்தை ஈகுவல் – நிதான:2 38/1
ஆத்தும சுகத்தை பேணாது அனவரதமும் நன்று ஊட்டி – நிதான:3 29/1
மேல்


சுகந்தம் (1)

மாண் உடை உணவு பான வருக்கம் அஞ்சனம் சுகந்தம்
பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ – நிதான:7 71/1,2
மேல்


சுகபோகம் (1)

அளவு_இல் சுகபோகம் அளித்து எனுடன் – ஆதி:9 140/1
மேல்


சுகம் (13)

சொல்_அரும் சுகம் என துணிந்து போதல் கண்டு – ஆதி:10 28/3
கைப்படு சுகம் அலால் கரை_இல் பேர்_இன்ப – ஆதி:14 50/1
பாவிக்கு எங்ஙனம் வாய்க்கும் பர சுகம் – ஆதி:19 68/4
ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய – ஆதி:19 73/2
சூழும் இ உடல் சுகம் துய்க்க நச்சிலை – நிதான:2 29/2
மாயம் உறும் இன்ப நலம் வாழ்வு சுகம் ஆதி – நிதான:2 42/1
இலகு புகழ் மேன்மை உலகு இன்ப சுகம் எல்லாம் – நிதான:4 59/1
எக்காலத்தும் உடன் இருந்து இ இகத்தும் பரத்தும் சுகம் வழங்க – நிதான:9 66/3
மெய்யாம் பரம சுகம் அடைய விரைந்து வாரும் ஜெகத்தீரே – நிதான:9 75/4
பரித்த பாழ் உடல் ஓம்பி பர சுகம்
இரித்துவிட்டது இங்கு எத்தனை புன்_மதி – ஆரணிய:4 73/3,4
ஈடு காட்டி இழி சுகம் கொள்ளுதல் – ஆரணிய:6 40/2
ஆரியன் சுகம் வினாய் அண்டர் நாயகனொடு உன் – ஆரணிய:9 36/3
தூலத்தை உவந்து உண்டு சுகித்து சுகம் பேணி – தேவாரம்:10 2/1
மேல்


சுகமுண்டாகும் (1)

முன்னரே சுகமுண்டாகும் என்று இனம் மொழிந்து போனார் – ஆதி:2 12/4
மேல்


சுகமும் (1)

கார் ஆர் பூங்கா அகத்தின் கண் ஆர் நிழல் சுகமும்
சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/1,2
மேல்


சுகாயுவும் (1)

துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/2
மேல்


சுகானந்த (2)

வாக்கு மனம் எட்டாத பரம சுகானந்த பத மகத்துவத்தின் – ஆதி:4 31/1
நித்திய மங்கள நிகழ் சுகானந்த
முத்தி மா நகர் செல முடுகுகின்றனன் – நிதான:2 20/1,2
மேல்


சுகானந்தம் (1)

ஏயும் நல் சுகானந்தம் என் இயம்புதி என்றான் – ஆதி:11 2/4
மேல்


சுகிக்க (1)

ஆயுள் நீடித்து இ உலகில் அமர்ந்து சுகிக்க உனது தந்தை – நிதான:9 13/1
மேல்


சுகிக்கும் (1)

நின்று சுகிக்கும் ஆத்தும வாழ்வை நினைகில்லீர் – ஆதி:16 11/1
மேல்


சுகித்தனை (1)

ஆண்டு உண்டு சுகித்தனை அன்பு உளை போல் – ஆதி:9 136/1
மேல்


சுகித்து (2)

உண்டு சுகித்து உறங்குதலுக்கு உளம் கவல்வான் பாவி என – நிதான:5 28/3
தூலத்தை உவந்து உண்டு சுகித்து சுகம் பேணி – தேவாரம்:10 2/1
மேல்


சுகிர்த்திய (1)

பற்பல சுகிர்த்திய பலங்கள் இவை எல்லாம் – குமார:4 14/3
மேல்


சுகிர்த (4)

துறை ஆர்த்தது சன்மார்க்க மெய் துணிபு ஆர்த்தது சுகிர்த
நிறை ஆர்த்தது நலம் ஆர்த்தது நிலையாய ரக்ஷணிய – ஆதி:9 20/2,3
தூய நல் உரையும் தேவ தோற்றமும் சுகிர்த மாண்பும் – குமார:2 177/1
பிறந்தது சுகிர்த போதம் பிறங்கியது அவனி எங்கும் – குமார:2 436/4
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம் – நிதான:9 55/3
மேல்


சுகிர்தங்கள் (1)

சுத்த மன ரம்மிய சுசீல சுகிர்தங்கள்
வித்தக விவேகம் இன மேவி அருள் வேத – ஆரணிய:9 110/2,3
மேல்


சுகிர்தத்தை (1)

துனி தவிர்ப்பது சுகிர்தத்தை விளைப்பது துய்க்கும் – ஆதி:18 17/2
மேல்


சுகிர்தம் (10)

மெய்யதாகிய சுகிர்தம் உண்டு உனக்கு என விண்டான் – ஆதி:9 147/4
தூயவன் சுகிர்தம் யான் சொலும் தரத்தவோ – ஆதி:14 21/4
தூய தேவ கிருபை சுகிர்தம் என்று – நிதான:5 73/3
தோடம் அலது துகளளவும் சுகிர்தம் இலையால் இருதயத்துள் – நிதான:9 94/3
தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால் – ஆரணிய:1 15/1
தூ நலம் பயப்பது சுகிர்தம் உள்ளது – ஆரணிய:4 8/1
நிதி நலம் அருளுவ நிறை தரு சுகிர்தம்
கதி நலம் அருளுவ கடி கமழ் சைலம் – ஆரணிய:5 12/3,4
சொற்ற இத்துணை-கொலோ சுகிர்தம் யாவுக்கும் – ஆரணிய:9 82/1
அற்புத சுகிர்தம் முற்றி அளவு_இல் புண்ணியம் பழுத்து – இரட்சணிய:3 4/2
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர் – தேவாரம்:7 10/2
மேல்


சுகிர்தமாம் (1)

துனி தவிர்ந்திடும் பாவ சங்கடம் தொலையும் நும் நடை சுகிர்தமாம்
புனித நல் மனம் பொருந்தும் அன்பு உளம் பொங்கி மேலிடும் உலகுளீர் – தேவாரம்:1 7/2,3
மேல்


சுகிர்தமும் (2)

தூய நன்மையும் சுகிர்தமும் ஒருங்கு அற துடைத்து – நிதான:7 4/1
தொக்க பாவமன்னிப்பு நித்திய_ஜீவ நன்மையும் சுகிர்தமும்
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/1,2
மேல்


சுகிர்தமே (1)

தோத்திரம் ஆக செய்கை சுகிர்தமே ஆக தூய – ஆதி:6 7/2
மேல்


சுகிர்தன் (2)

தூய ஜீவிய நடை கடைப்பிடித்த ஓர் சுகிர்தன்
மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/3,4
தூயன் உச்சாகன் தீரன் சுகிர்தன் என்று இவர் வந்து ஈண்டி – ஆரணிய:5 64/2
மேல்


சுகுணங்களும் (1)

சொல் பயில்வும் எல்லா சுகுணங்களும் இவரே – குமார:2 312/2
மேல்


சுகுணமா (1)

சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு – ஆதி:14 80/1
மேல்


சுகுணமும் (1)

சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல் – ஆரணிய:1 1/2
மேல்


சுசீல (2)

துங்க உலகாதிபரும் நின்றனர் சுசீல – குமார:2 157/4
சுத்த மன ரம்மிய சுசீல சுகிர்தங்கள் – ஆரணிய:9 110/2
மேல்


சுசீலம் (1)

தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால் – ஆரணிய:1 15/1
மேல்


சுஞ்ஞான (1)

சுஞ்ஞான நிலை காக்கும் தூயாவி நலம் வாழி – நிதான:11 75/4
மேல்


சுட்டி (1)

வீற்றுவீற்றாகி சென்று விளைத்த தீ_வினையை சுட்டி
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை – நிதான:3 24/2,3
மேல்


சுட்டிட (2)

சுட்டிட தூய உள்ளம் துடிதுடித்தது துண்ணென்றே – குமார:2 108/4
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட
அடு சின களிறு_அனாய் அகிலத்தே பெயப்படு – நிதான:10 26/1,2
மேல்


சுட (5)

துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/4
துன்பு எனும் தீ சுட சுழன்று சோர்வுறும் – ஆதி:14 37/1
துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி – குமார:2 160/2
நகர மாந்தர் செவி சுட கேட்டலும் நைந்தே – குமார:2 275/2
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
மேல்


சுடச்சுட (4)

தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட
மெய் எலாம் கருகிய விதத்தை மானுமால் – குமார:1 1/2,3
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய் – குமார:4 68/1
கொண்ட மான தீ சுடச்சுட உளம் கொதிகொதிக்கும் – ஆரணிய:4 38/3
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும் – இரட்சணிய:1 44/1
மேல்


சுடப்பட்டது (1)

அப்பம் எப்படி சுடப்பட்டது அதற்குள் தித்திப்பை – ஆரணிய:6 15/1
மேல்


சுடர் (52)

வித்தக சுடர் வீசி விளங்கிடும் – பாயிரம்:1 8/2
திமிரம்_அற வரும் இரவி ஒளி மழுங்க சுடர் எறிக்கும் செம்பொன் இஞ்சி – ஆதி:4 38/1
எல்லையும் வான் சுடர் இயங்குகிற்கில – ஆதி:4 48/2
மல்லல் கூர் தம்பிரான் மகிமையின் சுடர்
புல்லி நின்று அவிர் ஒளி பிரபை போர்க்குமால் – ஆதி:4 48/3,4
திணி சுடர் இரவியின் திகழும் வாள் முகம் – ஆதி:4 53/4
இருள் அறுத்து ஒளிர் சுடர் என இகல் கடந்து அபிராம் – ஆதி:8 26/3
மெய் ஆரண சுடர் மானிட விதயாம்பரம் விளங்க – ஆதி:9 16/4
அள்ளி கதிர் வீசும் சுடர் அருணோதயம் இது என – ஆதி:9 18/4
வானோ மகி தலமோ சுடர் மதியோ வயங்கு ஒளிர் வான் – ஆதி:9 19/1
தூய தம் சபை சுடர் தூண்டிடாது ஒளி – ஆதி:9 30/1
இலகு வான் மதி இரும் சுடர் அகம் திகழ்த்திடுவாம் – ஆதி:9 158/4
ஓங்கு இரும் சுடர் ஒளி ஒன்று காண்டி மற்று – ஆதி:9 171/3
மண்ணக இருள் கெட வயங்கு மா சுடர்
நண்ணிடம் அறிந்து உளம் மகிழ்ந்து நாட்டம் வைத்து – ஆதி:10 2/2,3
இணை_அறு சுடர் அருகு இடுக்க வாயிலை – ஆதி:10 30/2
திணி சுடர் குறி கொடு செல்லவேண்டுமால் – ஆதி:10 30/4
தோற்றும் இ சுடர் வாயிலை துன்னி யான் உய்ய – ஆதி:11 27/3
பற்றி எரியும் சுடர் விழும் பல பதங்கம் – ஆதி:13 45/4
துன்னிய சுடர் விரி மௌலி தோன்றுதல் – ஆதி:14 20/2
ஊன் மனத்து இருள் கெட ஒளிரும் ஒண் சுடர்
வானவர் கோமகன் மதுர வாய்மொழி – ஆதி:14 35/3,4
அருளும் பொருளும் நனி தெரிக்கும் ஆன்ம போத சுடர் தழைப்ப – ஆதி:14 149/1
சேண் தயங்கிய செம் சுடர் போன்ம் என – ஆதி:14 155/3
இருள் அடைந்த இரு சுடர் எங்கணும் – ஆதி:14 158/1
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி – ஆதி:14 209/1
எல்லோன் சுடர் விளக்கம் இன்று ஆகி எப்புறமும் – ஆதி:19 6/2
ஒற்றை சுடர் திகிரி ஓச்சி உலகு ஆண்ட முடி – ஆதி:19 12/1
சுடர் உலகு உறின் அன்றோ வருவது சுக நித்யம் – ஆதி:19 19/4
செம் சுடர் அவிர் ஒளி பிழம்பை தீக்கும் ஓர் – குமார:1 2/1
அம் சுடர் அவித்து வந்து அகிலம் யாவையும் – குமார:1 3/1
விம்மு தண் சுடர் வீசி மேல் எழுந்த வெண் திங்கள் – குமார:2 77/4
தோற்றிரும் கலை நிரம்பிய மதி சுடர் தோய்ந்தே – குமார:2 81/4
துன்று ஒளி விரித்த ஜோதி சுடர் திரு_முகம் குறாவி – குமார:2 113/2
சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில் – குமார:2 301/1
எஞ்சிய இரும் சுடர் எழுந்தது குணக்கில் – குமார:3 18/2
வித்தக சுடர் விரித்து இனிது அமர்ந்த மெய் வேத – நிதான:2 88/3
மாய இருளோடு சுடர் வான் பரிதி காலும் – நிதான:4 62/1
தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது – நிதான:7 5/3
தொகுத்த பல் மணி முத்தம் பொன் சுடர் விரி வைரம் ஆதி – நிதான:7 73/2
தூய ஜீவியத்தை நல்கி சுடர் விழு பதங்கமே போல் – நிதான:7 76/4
விண் உடு சுடர் விக்கிரகம் களிமண் – நிதான:8 17/1
தூயன் தூய செம் குருதியின் கூக்குரல் சுடர் வான் – ஆரணிய:1 2/2
சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூ சுடர்
நிருத வைப்பின் மறைந்திடும் நீர்மை போல் – ஆரணிய:4 62/1,2
கெடுத்தேன் தயங்கும் சுடர்
மன்னு விட்டில் அ மாண் ஒளி மாய்த்து தன் – ஆரணிய:4 71/2,3
திணி சுடர் தழுவுவ திகழ்தரும் இதயம் – ஆரணிய:5 11/4
குறி உடை இரவு நீங்க குண திசை சுடர் வந்து ஊன்ற – ஆரணிய:5 63/1
மொய்த்து எழும் அகண்டாகார முழு சுடர் பிழம்பின் முந்து – ஆரணிய:5 84/1
பாய் இரும் சுடர் பரப்பு மண்டப நிலை பாராய் – இரட்சணிய:1 22/4
திரு_முக சுடர் உள்ளி தியங்குவாள் – இரட்சணிய:1 59/4
பகல் ஒளி சுடர் திகழ்ந்தது பார் அடிப்படுத்தி – இரட்சணிய:2 48/2
கிழக்கு எழும் சுடர் போல சத்தியம் கிளர கண்டினும் கேதம் ஆர் – தேவாரம்:1 8/1
தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/3
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர்
மகிதலம் எங்கணும் மலிய நல்குவாய் – தேவாரம்:7 10/2,3
எள்ள_அரும் சுவிசேஷத்தின் இரும் சுடர் விரித்து அஞ்ஞான – தேவாரம்:11 18/3
மேல்


சுடர்கள் (1)

தலைகீழாக உலகு அடுக்கு தடுமாறிடினும் வான் சுடர்கள்
நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறா கரிந்திடினும் – நிதான:9 38/1,2
மேல்


சுடர்களை (1)

ஒல்லை வான் சுடர்களை ஊதி ஓட்டவும் – ஆதி:4 58/2
மேல்


சுடர்விட்டு (1)

ஒரு-பால் சுடர்விட்டு ஒளிர் அ கிருபாசனத்தின் – ஆதி:5 10/3
மேல்


சுடரால் (1)

அலகறும் சுடரால் பயன் பிறிது உளவாம்-கொல் – ஆதி:9 52/4
மேல்


சுடரின் (1)

மலையுற்று ஓங்கு சுடரின் இ வையகத்து – ஆதி:1 3/1
மேல்


சுடரும் (4)

சூரியர்கள் ஒரு கோடி தொக்கு உதித்த பரிசு என்ன சுடரும் செம்பொன் – ஆதி:4 40/1
கண் நாடு கவின் சுடரும் கருதாது போக்கி – ஆதி:12 23/2
இரு நிலத்து சுடரும் இரவி போல் – இரட்சணிய:1 59/2
இரவியில் சுடரும் தூய இலங்கு எழில் முகத்தர் ஆகி – இரட்சணிய:3 98/3
மேல்


சுடரை (5)

மெய்வண்ண அற்புதமாம் திரு_விளக்கில் விசுவாச சுடரை ஏற்றி – ஆதி:9 159/2
சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய் – ஆதி:15 10/2
விதிவிலக்கு_இல் சுடரை விசும்பு தோய் – குமார:2 12/1
தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி – ஆரணிய:8 62/3
காய் ஒளியில் கதிர் பரப்பும் களங்கு_அறு நீதியின் சுடரை
பாய் ஒளி கொள் பசும்பொன்னை பணிக்க_அரும் சிந்தாமணியை – தேவாரம்:4 10/1,2
மேல்


சுடலை (1)

நடலையை நச்சி சுடலை புகாதீர் நமரங்காள் – ஆதி:16 6/4
மேல்


சுடு (17)

இரவில் அக்கினி தூணம் உண்டு எல் சுடு வெயிற்கு – ஆதி:8 16/1
துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
துன்னி நின்று சுடு வாதை புகலும் துணையதோ – ஆதி:14 193/4
தண் நிழல் புக புறம் சுடு தாபிதம் தணியும் – ஆதி:18 24/1
சொல்_அரு மரணோபாதி சுடு கனல் சுவாலை மீக்கொள் – குமார:2 124/1
சுடு கனல் சுடர் நச்சு பதங்கமும் தூண்டில் – குமார:2 301/1
வெந்நிடை சுடு சரம் துரந்து வீட்டுவன் – நிதான:2 12/3
தொக்கு மேனியில் சிற்சில சுடு கணை துதைந்த – நிதான:2 98/4
கொள்ளி ஆர் அழல் சுடு கணை யாக்கையில் குளிப்ப – நிதான:2 99/1
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல் – நிதான:4 76/2
துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/3
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
கொடிதினில் கொடிது ஆய இ கொடும் சுடு பாலை – ஆரணிய:4 35/1
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/2
துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/3
பாவமாம் சுடு பாலையில் பகல் எலாம் உழன்று – இரட்சணிய:3 80/1
மேல்


சுடு_சொல் (4)

துன்பம் படு துயர் நிந்தனை சுடு_சொல் வசை ஆதி – ஆதி:9 22/1
துன்னி நின்று என் இதயம் சுட உரைத்த சுடு_சொல்
மன்னு ஜீவ வசனத்தினொடு மாறு கொளவும் – நிதான:4 76/2,3
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல்
ஐய தாங்க_அரிது ஆதலின் மெய் மனஸ்தாபம் – ஆரணிய:8 27/2,3
மேல்


சுடுகாடாய் (2)

கன்னல் ஒன்றில் இ தொல் நகரம் சுடுகாடாய்
மன்னும் என்பர் சிலர் சிலர் வான் இருள் மல்கி – குமார:2 277/2,3
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய்
தீயும் என் செய்தேம் என்று அகம் கலங்கினர் திகைத்து – ஆரணிய:1 2/3,4
மேல்


சுடுகாடு (1)

சோதோமை சுடுகாடு ஆக்கி தொலைத்தமை தோன்றாது என்னே – ஆதி:2 34/4
மேல்


சுடுசொல் (1)

துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி – குமார:2 160/2
மேல்


சுடும் (1)

தீண்டிடாதும் சுடும் கொடும் தீயவர் – ஆரணிய:6 50/3
மேல்


சுடுமுக (1)

சுடுமுக துணைவனும் துன்முக கபடனும் – நிதான:11 5/1
மேல்


சுடுமுகன் (4)

இ வியல் சுடுமுகன் இயல்பு என் என்றியேல் – ஆதி:14 45/1
ஆங்கு அவர் உரை சுடுமுகன் என்று ஆசனத்து – நிதான:10 23/1
சுடு சின சுடுமுகன் சுடு_சொல் சுட்டிட – நிதான:10 26/1
கன்றிய சுடுமுகன் கடும் சினத்தனாய் – நிதான:10 31/2
மேல்


சுண்டி (1)

அல் புணரி சுண்டி அகிலம் திகழும் வண்ணம் – குமார:3 16/1
மேல்


சுண்ணமும் (1)

சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய – குமார:2 428/2
மேல்


சுத்த (18)

சுத்த சத்தியம் உமக்கு சொல்லி வற்புறுத்தும் என்னை – ஆதி:2 32/3
சுத்த மெய் சுவிசேஷ உத்துங்கரே – ஆதி:9 78/4
சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு – ஆதி:14 80/1
சுத்த வீரன் ஓர் தூயவன் வாயிலில் துன்னி – குமார:1 48/3
சுத்த மெய் விசுவாசத்தில் தோம்_இலார் – குமார:2 474/4
சுத்த சூனிய கதியிடை கவிழ்ப்பது அத்துவைதம் – நிதான:2 93/4
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான் – நிதான:5 49/1
சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தை – நிதான:9 47/3
சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல் – ஆரணிய:1 1/2
சுத்த அக்கிரம கடு காய் பலன் தொகுத்து – ஆரணிய:2 75/3
துங்க வாவி நீர் படிந்து சுத்த வத்திரம் தரித்து – ஆரணிய:5 98/1
சுத்த சத்திய மெய் விசுவாசத்தின் தொகுதி – ஆரணிய:6 24/2
கரண சுத்த சற்கருமத்தில் கருத்தினை திருத்தும் – ஆரணிய:6 25/3
மாசு_அறு சுத்த வைதிகர்-தாமும் மதி_வல்லோய் – ஆரணிய:7 6/1
சுத்த மன ரம்மிய சுசீல சுகிர்தங்கள் – ஆரணிய:9 110/2
மக்களும் சுத்த நெறியூடும் மறிவாரால் – ஆரணிய:10 15/4
சுத்த மெய் விசுவாசத்தை துரிசு_அற விளக்கி தூய – தேவாரம்:11 34/1
மேல்


சுத்த_மனத்தவன் (1)

சுத்த_மனத்தவன் உரைக்க துரு மலிந்த கரு_மனத்தான் – நிதான:5 49/1
மேல்


சுத்தம் (2)

சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கி தம் – இரட்சணிய:1 60/1
மேல்


சுத்தம்_உள்ளவன் (1)

சித்த சுத்தம்_உள்ளவன் எவன் யான் சொலும் ஜீவ – குமார:2 220/3
மேல்


சுத்தர் (1)

அதி பரிசுத்தர் சுத்தர் அதி பரிசுத்தர் என்னா – இரட்சணிய:3 103/2
மேல்


சுத்தராய் (1)

துன்னுவரால் திரிகரண சுத்தராய் – ஆரணிய:4 27/4
மேல்


சுத்தரும் (1)

தேவினை கை தொழுது ஏத்தும் திரிகரண சுத்தரும் தம் – தேவாரம்:4 4/2
மேல்


சுத்தனாக (1)

தா வரும் பழியை சாட்டி தனை சுத்தனாக காட்டும் – ஆதி:2 42/2
மேல்


சுத்தனாய் (1)

பத்தனாய் பாடேன் சுத்தனாய் ஒழுகேன் பகல் எலாம் பாவமே பழகி – தேவாரம்:6 2/1
மேல்


சுத்தனோ (1)

சுத்தனோ அல்லன் நன்மை சொல்ல எள்துணையும் இல்லேன் – தேவாரம்:9 9/1
மேல்


சுத்தி (3)

சித்த சுத்தி மெய் பத்தி என்று இத்தகு சீல – ஆதி:1 5/2
அருள்வசத்தால் மனம் மொழி மெய் ஆன்ம_சுத்தி அடைந்து அன்றி – நிதான:5 37/1
சித்த சுத்தி விரும்பி சில தினம் – ஆரணிய:9 9/3
மேல்


சுத்தியோ (1)

சித்த சுத்தியோ சற்கருமத்தின் ஓர் திறனோ – இரட்சணிய:2 50/2
மேல்


சுதந்தர (3)

தன் சுதந்தர உயிர் விடுத்த தன்மையை – குமார:2 391/2
துதி பெறு ஞானம் உள்ளார் சுதந்தர மகிமை ஆகும் – நிதான:4 94/1
சேட்ட_பாக சுதந்தர செவ்வி விற்று – ஆரணிய:6 33/1
மேல்


சுதந்தரம் (4)

நல் சுதந்தரம் நமக்கு அருள நாயகன் – குமார:2 391/1
கல் சுதந்தரம் உறு கடின நெஞ்சுடை – குமார:2 391/3
முன் தனக்கு உள சுதந்தரம் விற்று உண்ட முறை போல் – ஆரணிய:6 14/3
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன் – தேவாரம்:5 2/3
மேல்


சுதந்தரர் (1)

அல் சுதந்தரர் அறிந்து அகம் கலங்கினார் – குமார:2 391/4
மேல்


சுதந்தரிக்க (1)

துன்னி நித்திய ஜீவ தாருவை சுதந்தரிக்க
பன்னு நல் நடை பற்றியோர் பாக்கியர் என்னா – இரட்சணிய:3 74/2,3
மேல்


சுதர் (1)

துரிசு_அற மற்று உம் பொருட்டும் சுதர் பொருட்டும் கலுழ்ந்திடு-மின் – குமார:2 332/2
மேல்


சுதற்கு (1)

தொழும்புபட்ட அன்றே பரமன் சுதற்கு
ஒழுங்குபட்டன ஒப்படையாகவே – நிதான:8 9/3,4
மேல்


சுதன் (18)

ஆவல் மிக்க தம் ஒரு சுதன் அரசவை அகன்று – ஆதி:9 12/1
உன்னதாதிபன் ஒரு சுதன் உவரி நீர் உலக – ஆதி:9 14/1
ஆனா நெறி அமைத்து ஆக்கிய அகிலாண்டவ சுதன் ஓர் – ஆதி:9 19/3
மன் ஒரு சுதன் அலால் மநுக்கள் யாரையும் – ஆதி:12 29/3
எண்ண_அரும் குணத்து எம்பெருமான் சுதன்
புண்ணியம் திகழ் யாக்கை பொறுத்து இவண் – ஆதி:12 82/1,2
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய – ஆதி:14 153/1
பாழி அம் புவி உய்ய பரன் சுதன்
வாழி மேனி வதைப்புண்ட நீர்மையை – குமார:1 108/1,2
தாதையார் திருமுனம் பணிந்து சுதன் இன்னவாறு பல தண் நறும் – குமார:2 63/1
சோலை வாய் அணைந்து தேவ_சுதன் தமது ஆத்துமத்தில் – குமார:2 100/2
இகழ்ந்திடற்பாலரோ ஈசன் ஓர் சுதன்
புகழ்ந்து போற்றிட தகும் புனிதராம் என்றார் – குமார:2 392/3,4
கொற்றவன் சுதன் திரு_அடி கோகனகத்தில் – நிதான:2 108/3
வந்த பரம சுதன் பாதம் வணங்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 24/4
பாவ உணர்ச்சி மனந்திரும்பல் பச்சாத்தாபம் பரம சுதன்
ஜீவ அவஸ்தை-தனை நினையும் சிந்தை கனிவு விசுவாசம் – நிதான:9 64/1,2
உன்னதாதிபன் ஒரு சுதன் உலவிய மேனாள் – ஆரணிய:4 40/1
தந்தை ஆகிய தற்பரற்கு ஒரு சுதன் அருளால் – ஆரணிய:6 19/1
பாவிகட்கா நம் பரமன் ஓர் சுதன்
ஆவிவிட்டனர் அவற்கு அடங்கி கீழ்ப்படும் – ஆரணிய:9 61/1,2
பத்தையும் தழுவினர் பரமன் ஓர் சுதன் – ஆரணிய:9 72/4
தற்பரன் சுதன் பிராட்டியோடு உலவுவான் சமைத்த – இரட்சணிய:1 21/2
மேல்


சுதனாம் (1)

ஆதி மூல பரம்பொருளின் அருமை சுதனாம் கிறிஸ்து யேசு – ஆதி:14 154/1
மேல்


சுதனை (3)

பாடு அணவி வருந்தும் நம பரம சுதனை பழித்து – குமார:2 346/3
மன் ஒரு சுதனை யாம் மனத்துள் உய்ப்பதற்கு – ஆரணிய:9 92/2
உம்பர்-நின்று தம் சுதனை தந்து உன்னத அன்பால் – இரட்சணிய:3 82/2
மேல்


சுதை (5)

தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும் – ஆதி:14 72/2
தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிர தீற்றி – ஆதி:19 88/1
வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில் – குமார:1 33/1
மேனி வந்து பல் கொடி விராய் வெண் சுதை மாடம் – நிதான:7 28/3
திங்களை கரிது ஆக்குவ செழும் சுதை பித்தி – நிதான:7 43/1
மேல்


சுந்தர (3)

சுந்தர குமரன் ஆவி துடித்து உளம் உடைந்து சோர்ந்து – குமார:2 112/2
சுந்தர திரு_மேனியில் துலங்கும் ஐங்காயம் – குமார:2 491/2
சுந்தர குமாரனை துதித்து இறைஞ்சி வாழ்த்துவார் – இரட்சணிய:3 20/4
மேல்


சுந்தரன் (1)

சுந்தரன் துய்ய மேனி துவண்டதோ அறிகிலேமால் – குமார:2 116/4
மேல்


சுப்பிர (2)

சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு – ஆதி:14 80/1
துதி பெறும் திரியேக நும் சுப்பிர
விதி நிடேத விளக்கை அலர்த்தி என் – நிதான:5 58/1,2
மேல்


சுப்ர (1)

துங்க வாவியின் துறை-தொறும் வலம்புரி சுப்ர
சங்க மா தொனி முழங்கலின் செவித்தொளை தாக்கி – ஆதி:18 35/1,2
மேல்


சுப (1)

தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆக கொண்டேம் – ஆரணிய:5 51/2
மேல்


சுபாவ (1)

சுபாவ இச்சையை கெடுத்து வேரெடுத்து அற துடைக்கும் – குமார:1 69/1
மேல்


சுபாவத்தில் (1)

நர சுபாவத்தில் பாடு நயந்து அனுபவிக்கலுற்றார் – குமார:2 106/4
மேல்


சுபாவம் (1)

வரு திறத்த மா மகிமையை மதிப்பதும் சுபாவம்
தரு துர்_இச்சையை களையும் மெய் சாதன சதுஷ்கம் – குமார:1 70/3,4
மேல்


சுபாவமாம் (1)

நாண் இலாது ஒழுகுதல் நர சுபாவமாம் – ஆரணிய:9 51/4
மேல்


சுபாவேச்சை (1)

என்ற மாத்திரத்து ஐய உன் இயல் சுபாவேச்சை
துன்றும் நல் மனோதத்துவ விரோதமாய் துளங்கி – குமார:1 67/1,2
மேல்


சும்மா (3)

சும்மா விடும்-கொல் நர துர்_பல துரும்பை – ஆதி:14 65/4
சும்மா போமோ பெருமானை துதிக்க வாரும் ஜெகத்தீரே – நிதான:9 65/4
சும்மா ரக்ஷணை செய் சொல் சுதந்தரம் யாதும் இலேன் – தேவாரம்:5 2/3
மேல்


சும்மை (12)

கூடிய சும்மை தாங்கி கூனுறு முதுகன் பல் கால் – ஆதி:2 3/3
விள்_அரும் ஜீவ சாக்ஷி விளைத்திடும் உபாதி சும்மை
தள்_அரும் நீர்மைத்தாக சமழ்த்தலால் பரிந்து இல்லாளை – ஆதி:2 8/1,2
பரிபவம் ஒருங்கு கூடி திரண்ட ஓர் பார சும்மை
வெரிந் உறீஇ அமிழ்த்த ஆற்றேன் மிக மெலிந்து அயர்ந்தேன் மேலும் – ஆதி:2 9/1,2
தீட்டாகிய தீ_வினை சும்மை சிதைக்க ஆற்றமாட்டாது – ஆதி:12 11/3
ஆதலின் அரும் துணைவ ஆற்று_அரிய சும்மை
சோதனை அலக்கண் இடர் துற்றி அடு போதும் – ஆதி:13 49/1,2
விஞ்சிய கொடும் சும்மை விழுதலும் மறைவாணன் – ஆதி:15 7/1
கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/3,4
சொற்றது ஓர்ந்திலர் வடித்த கண்ணீரொடு சும்மை
உற்று அடைந்த மெய் வருத்தமும் விடுத்த நெட்டுயிர்ப்பும் – குமார:1 89/1,2
மா கயத்தின் சும்மை மலிந்த பாவம் திரட்டி – குமார:2 308/2
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
சும்மை விழுத்தி சிலுவை திகழ்த்தி துரிசு_இல்லா – ஆரணிய:4 131/1
எம் பவ சும்மை தானோ ஹீனமாம் குருசும் தாங்கி – தேவாரம்:11 27/1
மேல்


சும்மையும் (2)

மும்மடங்கு ஆயது முதுகின் சும்மையும் – ஆதி:12 31/4
தீ_வினை சும்மையும் தெறித்து வீழ்ந்ததால் – நிதான:2 19/4
மேல்


சும்மையை (2)

வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில் – ஆதி:15 29/1
இடியின் சும்மையை செவிமடாது இ நகர் என்றும் – நிதான:7 25/4
மேல்


சும்மையொடு (1)

நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே – ஆதி:12 1/4
மேல்


சுமக்க (1)

ஆர்வம் மிக்கு நல் நெறிப்படுவோர் சுமக்க_அரிய – ஆதி:8 30/2
மேல்


சுமக்க_அரிய (1)

ஆர்வம் மிக்கு நல் நெறிப்படுவோர் சுமக்க_அரிய
தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன் – ஆதி:8 30/2,3
மேல்


சுமக்கும் (1)

வருந்தி பாரம் சுமக்கும் மக்காள் மனம் – ஆதி:12 83/1
மேல்


சுமங்கல (2)

சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு – ஆதி:14 80/1
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு – குமார:2 454/1
மேல்


சுமடன் (1)

சுமடன் கேட்டவை தன் உளம் தூக்குற – ஆரணிய:9 25/2
மேல்


சுமடு (2)

மா தலம் அடுக்கின் உன வன் சுமடு வல்லே – ஆதி:13 54/3
வெந் நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்பலுற்றான் – ஆதி:17 12/4
மேல்


சுமத்தி (1)

தெவ்வர் குழுமி சிலுவை-தனை சுமத்தி
கவ்வை நகர் கலுழ கட்டிக்கொடு போனார் – குமார:2 307/3,4
மேல்


சுமத்திடுவது (1)

ஏய வன் பெரும் சுமை சுமத்திடுவது அங்கு இளைக்கின் – ஆதி:8 14/3
மேல்


சுமதி (1)

துன்று இரும் குழல் சுமதி என்று உரை பெறும் தோகை – குமார:1 64/2
மேல்


சுமந்த (1)

மண்டலம் புரி பவம் சுமந்த மாட்சியால் – குமார:2 85/1
மேல்


சுமந்ததனால் (1)

சோலை வாய் விளைந்த பாவ சுமை சுமந்ததனால் இந்த – குமார:2 100/1
மேல்


சுமந்தனர் (1)

நிகர்_இலா பழி சுமந்தனர் இ நகர் நீசர் – ஆரணிய:1 3/2
மேல்


சுமந்து (18)

வினை சுமந்து அலறி உள்ளம் மெலியும் ஆத்துமவிசாரி – ஆதி:2 14/2
துனி சுமந்து உயிர் விடுத்து வான் கதி பெற்ற சூரர் – ஆதி:11 7/3
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/2
விதிவிலக்கு இகந்து ஈட்டு வினை சுமை சுமந்து ஒல்கி – ஆதி:15 1/1
சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய – ஆதி:15 30/2
வெய்ய சிலுவை சுமந்து அலசி மெய் வருந்தி – குமார:2 314/2
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/3
துங்க யாத்திரை வேடம் சுமந்து அலை – நிதான:8 24/3
பாவ பாரம் சுமந்து பிரபஞ்சாரணியத்து அலைந்து ஆத்ம – நிதான:9 54/1
பாரமான பவம் சுமந்து படருற்று இரங்கும் பாவிகாள் – நிதான:9 74/1
சிலுவை சுமந்து என் பின்தொடரின் ஜீவன் அடைவர் திண்ணம் என்ற – நிதான:9 79/3
துற்று இளநீர் குலை சுமந்து முற்றும்-மட்டு – ஆரணிய:4 22/1
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
அத்தனையும் சுமந்து அரிய பாடுகள் – ஆரணிய:9 72/2
புன் புலால் உடல் பொறை சுமந்து எத்தனை பொழுது – இரட்சணிய:1 54/2
படி சாய்த்த பெரும் பாவ பரம் சுமந்து பரமர் திரு – தேவாரம்:4 2/1
புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து
தன் உயிரை பரிந்து அளித்த மேசியாவை சர்வ பரி தியாகனை மெய் தரும வாழ்வை – தேவாரம்:8 4/2,3
மேல்


சுமேதம் (1)

வித்தக புனித ஆவி விழுத்தகு சுமேதம் தூய – ஆதி:4 66/2
மேல்


சுமை (21)

சூழ்ச்சி_அற்று இருக்கும் மாந்தர் சுமை அன்றோ நிலத்துக்கு அம்மா – ஆதி:2 30/4
ஏய வன் பெரும் சுமை சுமத்திடுவது அங்கு இளைக்கின் – ஆதி:8 14/3
தீர்வு_அரும் சுமை ஏற்றிய திரு_விதி கிழவன் – ஆதி:8 30/3
ஆகாமியன் நான் என் அரும் சுமை ஆற்றுகில்லேன் – ஆதி:12 3/2
சிந்தாகுலம் நீங்குதியேல் சுமை தீரும் மாதோ – ஆதி:12 10/4
சொல் மாண்பினின் நின் சுமை ஒல்லை தொலைப்பன் அன்றே – ஆதி:12 13/4
ஈண்டே கடிது ஏகி இரும் சுமை இன்னல் போக்கி – ஆதி:12 15/1
அழுக்குற்ற மன துயர சுமை ஆற்றுகிற்பான் – ஆதி:12 19/3
ஒல்லுமோ பவ சுமை உனக்கு ஒழிக்கவே – ஆதி:12 59/4
பொருந்தும் நும் சுமை போக்கி விடாய் அகன்று – ஆதி:12 83/3
துன்னும் நல் உணர்வொடே சுமை சுமந்து அலசியும் – ஆதி:14 11/2
விட்டு ஒழியும் இ சுமை விடாய் எவையும் மேவா – ஆதி:14 75/4
விதிவிலக்கு இகந்து ஈட்டு வினை சுமை சுமந்து ஒல்கி – ஆதி:15 1/1
சித்த சஞ்சல சுமை சுமந்து தேம்பிய – ஆதி:15 30/2
உலகு எலாம் உய கொண்டவர் வினை சுமை ஒழித்தோர் – குமார:1 73/2
சோலை வாய் விளைந்த பாவ சுமை சுமந்ததனால் இந்த – குமார:2 100/1
விள்_அரிய பாதக வினை சுமை விழுத்த – நிதான:2 44/1
சுமை உறு பொய்மை தூணியுள் மண்டி தொகுமாறு – நிதான:2 79/1
துற்று பாவத்தின் சுமை அணுத்துணையும் தோன்றாமை – ஆரணிய:8 23/3
இரங்குக பாவ பார இரும் சுமை ஆற்றகில்லேன் – ஆரணிய:8 60/1
சீசி இ உடல் சுமை என்று தீர்வல் என்று இனைவாள் – இரட்சணிய:1 45/3
மேல்


சுமைதாங்கி (1)

தா_இல் நல் அற சாலை மண்டபம் சுமைதாங்கி
பாவ நாச சங்கேதங்கள் அமைத்தனன் பனவன் – ஆதி:8 34/3,4
மேல்


சுமைதாங்கியை (1)

ஒவ்வாத கடும் சுமைதாங்கியை ஒப்ப நைவாய் – ஆதி:12 2/3
மேல்


சுமைநீங்கியபேறு (1)

அரும் சுமைநீங்கியபேறு துயிலுணர்த்தல் அமார்க்கவியல் புஷ்கரிணி உபாதிஓங்கல் – பாயிரம்:2 2/1
மேல்


சுமையால் (3)

கண் இருண்டு உளம் கலங்கலால் கதித்திடும் சுமையால்
அண்ணல் வாக்கினில் அமைந்த அம் சிலை தெரியாமல் – ஆதி:11 31/1,2
ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர் – ஆதி:13 53/2
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/2
மேல்


சுமையினால் (1)

நான் பிறந்ததும் உயிர் சுமையினால் நலியவோ – ஆதி:14 3/1
மேல்


சுமையினோடு (1)

ஆற்று_அரும் சுமையினோடு அல்லல் பல் விக்கினம் – ஆதி:14 10/1
மேல்


சுமையை (1)

சுமையை போக்கிய தூயவ ஆனந்தம் துதைந்த – குமார:4 74/1
மேல்


சுமையொடே (1)

பெரும் சுமையொடே வழி பிடித்ததும் மென்னெஞ்சன் – ஆதி:13 29/1
மேல்


சுமையோடு (1)

அன்று என்னில் வினை சுமையோடு இடர் ஆழி நீந்தி – ஆதி:12 17/2
மேல்


சுமையோடும் (1)

உன்ன_அரும் சுமையோடும் ஓர் ஓசனை – ஆதி:12 77/1
மேல்


சுய (4)

நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதி போலி – நிதான:5 9/4
சொந்த மதி சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து – நிதான:5 53/1
வெண்ணெய் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய
புண்ணியத்தால் தீரும் என புலம்ப வேண்டாம் புரை தீர்ந்த – நிதான:9 7/2,3
உறக்கமே சுய முயற்சியை ஒருங்கு அற துடைக்கும் – ஆரணிய:8 10/2
மேல்


சுய_நீதி (1)

நம்மை ஈடேற்றொணா தானம் சுய_நீதி போலி – நிதான:5 9/4
மேல்


சுய_அறிவால் (1)

சொந்த மதி சூழ்ச்சியினால் சுய_அறிவால் புறம் பொதிந்து – நிதான:5 53/1
மேல்


சுயம்பிரபை (1)

தூய திரு_மந்திர சுயம்பிரபை தோய்ந்த – குமார:4 16/3
மேல்


சுயம்பு (3)

இல்லாத அநாதி சுயம்பு உலகு எங்கும் உள்ளான் – ஆதி:5 7/4
சுத்த சுப்பிர சுமங்கல சுகுணமா சுயம்பு
நித்த நின்மல நிரஞ்சன நிராமய நிருபர் – ஆதி:14 80/1,2
நீதி கருணை பரிசுத்த நேசம் சுயம்பு சாமர்த்தியம் – நிதான:9 2/1
மேல்


சுயாதீனத்து (1)

ஏதின் மதியும் ஈந்து சுயாதீனத்து இரு என்று இனிது உவந்த – நிதான:9 3/3
மேல்


சுர (5)

தொழத்தகும் சுர கணங்களோடு அடி_இணை தொழுவாம் – ஆதி:11 6/4
பன்னும் சுர துந்துமியோடு பல வாச்சிய கம்பலை பம்ப – ஆதி:14 152/4
சோகம் நீங்கிய சுர கணம் தொழுது வாழ்த்து எடுப்ப – குமார:2 488/3
திசை நடுங்கும் அ தீ சுர கொடும் பெயர் செப்பின் – ஆரணிய:4 37/4
மன்னு சுர கணங்கள் ஜெயஜெய என்று ஏத்தி வாழ்த்து எடுப்ப வீற்றிருந்த மகிமை தேவை – தேவாரம்:8 4/1
மேல்


சுரக்கும் (2)

தண் அளி சுரக்கும் ஜீவ தாரகமாம் ரக்ஷண்ய – குமார:2 111/3
நன்னர் நெஞ்சே நலம் சுரக்கும் நல் நடை – ஆரணிய:9 53/3
மேல்


சுரங்கத்தின்-நின்று (1)

ஈண்டிய நாச_மோச இருள் சுரங்கத்தின்-நின்று
மீண்டு இனிது உய்யுமாறு விலக்கி ஆதரித்தது எந்தாய் – ஆரணிய:3 19/2,3
மேல்


சுரங்கத்தினை (1)

பொன் உயிர்க்கும் பொலன் சுரங்கத்தினை – ஆதி:19 78/4
மேல்


சுரங்கம் (2)

சொன்ன இ பிலத்தையே பொன் சுரங்கம் என்று உலகம் சொல்லும் – ஆரணிய:3 3/1
அத்தகு சுரங்கம் நல் இதயம் ஆகுமால் – ஆரணிய:9 46/2
மேல்


சுரத்தல் (1)

வள்ளலுக்கு இருநிதி வளம் சுரத்தல் போல் – குமார:2 92/2
மேல்


சுரத்தி (2)

துய்ய லாசரு இவண் தர விடுத்து அருள் சுரத்தி
மெய்யதாகிய சுகிர்தம் உண்டு உனக்கு என விண்டான் – ஆதி:9 147/3,4
இன் அருள் சுரத்தி என்று இனிதின் ஏத்தினான் – ஆதி:12 39/4
மேல்


சுரத்திடை (2)

காயும் வெம் மணல் சுரத்திடை தவிப்பு_அற கடத்தி – ஆதி:8 32/3
பொரி பரல் படு சுரத்திடை போயினர் போம் கால் – ஆரணிய:4 49/2
மேல்


சுரத்தின் (1)

எண்திசாமுகத்து இரிந்தன இ கொடும் சுரத்தின்
மண்டு வன் மிடி கொழும் கனல் பிழம்பினை மறுகி – ஆரணிய:4 39/3,4
மேல்


சுரத்து (2)

வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டு – ஆதி:8 36/3
எஞ்சாத சுரத்து எரியின் கொடிது என் சின தீ – ஆரணிய:4 107/2
மேல்


சுரத்தூடு (1)

ஆய வெம் சுரத்தூடு செல் அருள் நெறி அடைந்தார் – ஆரணிய:4 42/1
மேல்


சுரந்து (3)

ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர் – ஆதி:8 5/4
ஆர்ந்த நல் நீர் சுரந்து அளித்தவாறு போல் – குமார:2 400/2
சாவீர் ஈதோ ரக்ஷணிய சைலம் சுரந்து பெருகி வரும் – நிதான:9 30/3
மேல்


சுரப்ப (2)

பாழி அம் புவி ஆத்தும பயிர் வளம் சுரப்ப
ஊழியூழி பாய்ந்து உறுவது ஜீவ நீர் உதகம் – ஆதி:18 15/3,4
பக்கம் எங்கணும் நல் அற பயிர் வளம் சுரப்ப
கக்கு தண் அருள் மழை முகில் கஞலுவ காணாய் – குமார:4 53/3,4
மேல்


சுரப்பது (2)

இனிதின் எங்கணும் சுரப்பது நாடுவோர் எவர்க்கும் – ஆதி:18 17/4
ஓவு_இலாதது சுரப்பது அ தூய நீரூற்றாம் – ஆதி:18 19/2
மேல்


சுரப்பதும் (1)

ஆதி ஆயதும் அரும் பொருள் சுரப்பதும் அங்கங்கு – நிதான:7 32/3
மேல்


சுரபி (1)

அரு மறை சுரபி நின்று அளிக்கும் தூய பால் – ஆரணிய:4 26/2
மேல்


சுரம் (7)

முன்றில் நின்று முடுகி சுரம் செலீஇ – ஆதி:13 2/2
கன்றிய கடும் சுரம் கனலும் கானிடை – ஆரணிய:4 34/3
கொள்ளி ஆர் அழல் பரந்தன கொடும் சுரம் குறுகில் – ஆரணிய:4 36/1
தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில் – ஆரணிய:4 44/3
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
தரித்திர சுரம் சார்ந்த மெய் நூல் வழி – ஆரணிய:4 73/1
அரும் சுரம் அஞ்சி நேருக்கு அயல் வழிப்படில் சந்தேக – ஆரணிய:4 175/1
மேல்


சுரமண்டல (1)

மன்னிய பெரும் சுரமண்டல தொனி – இரட்சணிய:3 60/3
மேல்


சுரமண்டலங்கள் (1)

துதி பகர்ந்து இசை-மின் என்ன சுரமண்டலங்கள் ஈந்து – இரட்சணிய:3 100/2
மேல்


சுரமண்டலம் (2)

முரசம் கறங்க சுரமண்டலம் முந்து கீத – ஆதி:5 13/1
கின்னரம் தம்புரு வீணை கிளரும் சுரமண்டலம் ஆதி – ஆதி:14 152/1
மேல்


சுரர் (2)

வீவு_இலா பதத்து எய்தினன் சுரர் கணம் வியக்க – ஆதி:8 37/4
தோற்றும் மண்டபம் இது சுரர் குலாதிபன் – ஆதி:14 27/1
மேல்


சுரிகை (2)

சுரிகை ஓங்கலும் துணித்திடாய் உன் விசுவாசம் – ஆதி:8 28/3
ஓங்கு சுரிகை தொழில் உவப்பின் அதனாலே – குமார:2 142/3
மேல்


சுருக்க (1)

சுருக்க நாடி வந்தேன் இதில் தோடம் என் – ஆரணிய:9 22/4
மேல்


சுருக்கம் (1)

சுருக்கம் இ குறுக்கு மார்க்கம் என்பது துணிந்து வந்தேம் – ஆதி:17 6/3
மேல்


சுருக்கி (2)

ஏயவை சுருக்கி நன்கு இயம்பினான் அரோ – குமார:1 22/4
அ தகைமை சுருக்கி இனிது அறைகுவன் நல் அருள் பேற்றால் – நிதான:5 49/3
மேல்


சுருங்கிய (1)

துன்னிய புதரினூடே சுருங்கிய நெறியின் பாங்கர் – ஆதி:19 100/2
மேல்


சுருங்கு (1)

சுருங்கு நூல் வழியை பற்றி தூயவன் முன் செல் காலை – நிதான:3 71/1
மேல்


சுருங்கை-தோறும் (1)

கார் இருள் மலிந்த அந்த கடி பொழில் சுருங்கை-தோறும்
தாரகாபதியின் கற்றை தவழ்ந்து ஒளி தயங்க ஆங்கே – குமார:2 101/1,2
மேல்


சுருட்டுவாய் (1)

சுருட்டுவாய் ககனத்தை சூழ் சுடரை நிறுத்துவாய் – ஆதி:15 10/2
மேல்


சுருதி (67)

சுருதி ஒளி அகம் திகழ்த்தி அஞ்ஞான திமிரம் அற துரந்து எஞ்ஞான்றும் – பாயிரம்:1 7/1
ஏயும் இ சுருதி நூல் இயம்புகின்றதை – ஆதி:3 6/3
திரு உடைத்து ஆதலால் இ தீர்த்திகை சுருதி போலும் – ஆதி:4 5/4
கருவற சுருதி என்னும் கட்கம் கொண்டு எறிந்து போக்கி – ஆதி:4 12/2
மழ களிறு அனைய மள்ளர் வரன் முறை சுருதி கூட்டி – ஆதி:4 15/2
முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/4
அருமந்த மெய் சுருதி தொனி அவனித்-தலை சிறப்ப – ஆதி:9 17/2
தொண்டர் இடு முறைப்பாட்டின் அறிதுயில்-நின்று எழுந்து அருள் ஓர் சுருதி சொல்லின் – ஆதி:9 161/1
ஓதும் மெய் சுருதி நூல் உரைக்கும் நீதியும் – ஆதி:10 20/1
சுருதி நூல் படித்து இவ்வணம் கிறிஸ்தவன் சொல்ல – ஆதி:11 12/1
தூய மெய் ஒளி திகழ் சுருதி நூல் நெறி – ஆதி:12 35/3
கல்லேன் சுருதி நலம் புரிய கருதேன் பாவம் கசந்திடேன் – ஆதி:13 12/1
தவ பயன் என சுருதி தந்த முனி வந்தே – ஆதி:13 30/4
இ பெரும் சுருதி தந்து இறை மறந்திடுவரோ – ஆதி:14 9/4
தீன ரக்ஷகன் தரு சுருதி தெய்வத – ஆதி:14 28/1
சுருதி நாயகன் திருவுளம் கூட்டு நாள் தோழ – ஆதி:14 105/1
தொண்டரை தெருட்டும் தூய சுருதி நூல் வலவன் ஈண்டு – ஆதி:14 125/1
சுருதி கூறியவாறு ஆக துயிலில் ஓர் கனவு கண்டு – ஆதி:14 133/3
தொல் நெறி விடாது பற்றி சுருதி மார்க்கத்து வந்தேம் – ஆதி:17 4/4
கேட்டுளீர் சுருதி உண்மை கிளப்பினும் உணரீர் நன்மை – ஆதி:17 18/3
புனையும் வாசகம் அன்று இது புராதன சுருதி – ஆதி:18 14/4
தெய்விக சுருதி நன்கு உணர்ந்த செவ்வியர் – குமார:1 18/2
புராதன சுருதி நன்கு உணர்ந்த புந்தியோய் – குமார:1 38/2
சுருதி நூல்_வலாய் தோன்றினர் மூவர் அ சூழல் – குமார:1 51/4
சுருதி நூலை உய்த்து உணர்வதும் துகிலை உன்னுவதும் – குமார:1 70/2
சொரி தர நித்ய_ஜீவ சுருதி தேன் துளித்த தெய்வ – குமார:2 114/2
மெய்ப்படு தவ சுருதி வித்தக கிறிஸ்து – குமார:2 151/1
மனித ஜீவனுக்கு ஈடேற்றம் வழங்கும் மெய் சுருதி வாய்மை – குமார:2 165/2
தொழுதவாறு இது சுருதி மா முதல்வனை துணிந்து – குமார:2 204/2
சொற்ற மறை திரு_வசனம் துலக்கமுற சுருதி முதல் – குமார:2 341/3
சொற்றார் சுருதி மொழி முன் உற சொற்றவாறே – குமார:2 371/4
சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன – குமார:2 429/3
துன்ன_அரும் பரிசுத்த சேத்திரம் எனும் சுருதி
பொன் நிலத்து இளவரசனே சதோதயம் புரப்பர் – குமார:4 72/3,4
மெய் வரு தவ சுருதி வித்தகன் விரிப்பான் – நிதான:2 40/4
சூடுவன் துணிந்து செல்வன் சுருதி நூல் நெறி விடாதே – நிதான:3 4/4
புண்ணியன் உத்தர சுருதி பொருளை விரித்து உரைக்க வரும் – நிதான:5 55/1
குன்றுறா நலம் குலவு மெய் சுருதி தேர் குரவன் – நிதான:6 25/4
தொண்டர் அஞ்சலித்து ஏகினர் சுருதி மார்க்கத்தில் – நிதான:6 31/4
திகழும் மெய் சுருதி தொனி திசைதிசை முழங்கின் – நிதான:7 18/2
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
மேவு சுருதி நெறி ஒழுகி விசுவாசத்தால் திரியேக – நிதான:9 67/3
ஆவி சுருதி அமிழ்து ஊட்டும் அன்னை மெய் வேதியர் உறவோர் – நிதான:9 98/3
வரம் தரு சுருதி மார்க்கத்து வந்தனம் – நிதான:10 27/3
சுருதி நூல் துறை_வலான் சொல் பயன்படுவதோ – நிதான:11 19/4
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு – நிதான:11 72/1
முன் செலும் பரதேசிகள் சுருதி நூல் மொழியை – ஆரணிய:2 41/1
சுருதி நீதியர் உலக நீதியர்-தமை துணிவுற்று – ஆரணிய:2 42/2
சுருதி மார்க்கம் திகழ்த்திடு தூ சுடர் – ஆரணிய:4 62/1
சுருதி உத்தி அநுபவம் தூய சன்மார்க்கம் – ஆரணிய:4 147/1
மதி நலம் அருளுவ மறு_அறு சுருதி
துதி நலம் அருளுவ அடியவர் தொகுதி – ஆரணிய:5 12/1,2
கலை எலாம் சுருதி பேச்சு கனிவு எலாம் தேவ பாஷை – ஆரணிய:5 25/3
பாதவ புரைகள்-தோறும் சுருதி தேர் பனவர் ஈட்டம் – ஆரணிய:5 26/2
என்னா சுருதி முறையிடுவது ஈண்டே அறிந்தாம் யாத்திரிகர் – ஆரணிய:5 96/2
உம்பர் நாயகன் சுருதி அ உண்மையை நம்பி – ஆரணிய:6 16/3
இ தகை படும் மெய் சுருதி தொடர் இதுவே – ஆரணிய:6 24/1
சோகபூமி சென்று அடைந்தனர் சுருதி நூல் வலவர் – ஆரணிய:8 1/4
சாது மார்க்கரை காண்டலும் தகைப்படு சுருதி
ஓது கீதை வந்து உறு செவிமடுத்தலும் ஒடுங்கா – ஆரணிய:8 25/1,2
பன்னிய சுருதி வாக்கு ஒன்று உளத்து உற பதிந்தது அ நாள் – ஆரணிய:8 70/4
சுருதி தேர் பனவ பொல்லாத துர்_குணர் – ஆரணிய:9 44/2
சொல் மதி இவ் எலாம் சுருதி கூறும் மெய் – ஆரணிய:9 96/1
துன்னி நிலைபெற்றிடும் எனில் சுருதி கூறும் – ஆரணிய:9 107/2
சுருதி மார்க்கத்து தொழும்புபட்டு உளம் அவர் துணை தாள் – இரட்சணிய:3 77/3
வாழி மன் உயிர்க்கு இரக்ஷணை வழங்கு வண் சுருதி
வாழி மெய் அடியார் குழூஉம் திருச்சபை மரபு – இரட்சணிய:3 108/2,3
மூவாத முதலவனை முது சுருதி மொழி பொருளை – தேவாரம்:4 5/1
ஓதியே சுருதி தினம்தினம் படித்தும் உணர்வு_இலாது உலகு ஒழுக்கு உவந்து – தேவாரம்:6 1/1
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர் – தேவாரம்:7 10/2
வழிவழி சுருதி முறைமுறையாக வகுத்த வேதாந்தனே போற்றி – தேவாரம்:11 3/2
மேல்


சுருதிக்கும் (2)

வித்தக சுருதிக்கும் மெய் வேதிய – நிதான:5 61/3
நாயகன் தரு சுருதிக்கும் யுத்திக்கும் நமக்கே – ஆரணிய:2 56/2
மேல்


சுருதியாத்திரம் (1)

தொண்டன் வில் தொடை ஆக்கிய சுருதியாத்திரம் இ – நிதான:2 85/1
மேல்


சுருதியில் (2)

திண்ணிய சுருதியில் தெளிந்த நீர்மைய – குமார:1 33/2
சுருதியை சுருதியில் தோன்றும் மார்க்கத்தை – ஆரணிய:9 81/1
மேல்


சுருதியின் (1)

அதிர் இடி முழவு எழ வரி முரல் சுருதியின் அகவும் மகளிரின மயில் – ஆரணிய:5 5/3
மேல்


சுருதியே (2)

முனைவன் ஈந்து அருள் சுருதியே முத்தி சாதனமாம் – ஆதி:1 7/2
நன்று நின் வினா உத்தரம் சுருதியே நவிலும் – ஆதி:11 3/1
மேல்


சுருதியை (1)

சுருதியை சுருதியில் தோன்றும் மார்க்கத்தை – ஆரணிய:9 81/1
மேல்


சுருப்பு (1)

சுருப்பு இசை சுருதி காட்ட புள் ஒலி இசையில் துன்ன – குமார:2 429/3
மேல்


சுரும்பு (2)

சுரும்பு இனம் முரலும் இன் இசையும் துன்னரும் – குமார:2 88/2
தும்பி மீன் அசுணம் பதங்கம் சுரும்பு
ஐம்புலம் புசித்து ஆர்_உயிர் மாய்தல் போல் – ஆரணிய:6 35/1,2
மேல்


சுருள் (1)

இலக்கண திரு_வாக்கின் எழில் சுருள்
புல கணை தெளிவிக்கும் புதுமைத்தால் – ஆதி:19 59/3,4
மேல்


சுருள்படும் (1)

சுருள்படும் குல மலர்களும் துத்து வெள் அடையும் – நிதான:7 44/4
மேல்


சுருளில் (1)

புரை இலா மனத்தவர் பெயர் புத்தக சுருளில்
வரையுமாறு ஒரு துரைமகன் வாயிலின் மருங்கே – ஆதி:14 78/2,3
மேல்


சுருளை (1)

புறம் கிளர் வெளி உலாவி புத்தக சுருளை நாடி – ஆதி:2 47/2
மேல்


சுரேந்திரன் (1)

நீங்குமாறு சுரேந்திரன் அருளிய நெறியும் – ஆதி:11 34/2
மேல்


சுலவாது (1)

தூ நலம் திகழ் சுடர் ஒளி அகத்து உற சுலவாது
ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும் – நிதான:7 5/3,4
மேல்


சுலவி (6)

தொழுது நின்றவர் எலாரையும் விசும்பு சுலவி
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/2,3
துரிய பூமியை துருவி சுலவி வரும் அன்பினொடு – குமார:4 28/3
சுலவி வானர தொகுதிகள் சோலையில் துவன்றி – குமார:4 65/2
துய்யர் ஓர்சிலர் நம்-தமை கூட்டுவான் சுலவி
கையது ஆகிய காட்சியும் காண்டி ஈண்டு என்றான் – இரட்சணிய:2 35/3,4
துரிசு_அற இமைக்கும் தாரா கணம் என சுலவி தோன்றி – இரட்சணிய:3 8/3
தூயரை எதிர்கொள சுலவி விண்ணிடை – இரட்சணிய:3 55/3
மேல்


சுலவு (3)

வெய்ய கோபாக்கினி சுலவு மேலைநாள் – ஆதி:16 4/2
சுலவு மாய இன்பங்களை துய்த்து அகம் துலக்கி – ஆரணிய:10 18/3
சுலவு பாவமும் பயங்கர தொகுதியும் சூழ்ந்து – ஆரணிய:10 20/1
மேல்


சுலவுவதை (1)

சுலவுவதை போன்று இதை உணர்வு அற்று துயில்கின்றீர் – ஆதி:16 17/3
மேல்


சுலா (1)

எரி சுலா நரகத்து-நின்று ஏறினும் ஏறார் – நிதான:7 9/3
மேல்


சுலாம் (1)

எரி சுலாம் அநியாயம் செய் கோட்டியும் ஈன – நிதான:7 23/3
மேல்


சுலாய் (1)

புவி சுலாய் அழி போகம் புசித்தலே – ஆரணிய:6 36/3
மேல்


சுவட்டிடை (1)

தூம்பு உறழ் பகு வாய் சீய சுவட்டிடை மறிந்து போந்து – ஆதி:19 117/2
மேல்


சுவடு (2)

வள்ளல் எம் இளங்கோமான் செம் மலர்_அடி சுவடு தோய்ந்த – ஆதி:17 16/3
உத்தம சுவடு நன்கு ஒளிரப்பெற்றது – நிதான:1 9/4
மேல்


சுவர் (4)

குப்புறாது இரு சுவர் குயிற்ற உன்னியே – ஆதி:9 36/4
சித்திர மாளிகை அகத்து திண் சுவர்
பத்தி அம் கனல் பிடித்து எரியும் பான்மையும் – ஆதி:14 55/1,2
சோர மார்க்கத்து வந்து சுவர் ஏறி குதித்தீர் நீவிர் – ஆதி:17 30/2
அவ்வியத்தின் ஆணவ சுவர் அமைத்து அகம் கெழீஇய – நிதான:7 31/1
மேல்


சுவர்க்க (3)

சொந்தமாம் விசுவசித்தோர் சுவர்க்க பேர்_இன்பம் துய்ப்பர் – குமார:2 444/3
சொற்றி என்ன வீண்நம்பிக்கை மற்று இது சுவர்க்க
கொற்றவன் திரு_நகரத்து கூட்டுவது என்றான் – ஆரணிய:4 59/3,4
துய்ய ஆய அக்கரை படில் சுவர்க்க பேர்_இன்பம் – இரட்சணிய:1 34/3
மேல்


சுவர்க்கத்து (1)

உரையிடற்கு எளிதோ சுவர்க்கத்து உரவோர்க்கும் – ஆதி:18 29/4
மேல்


சுவர்க்கப்பேறு (1)

முற்றும் இகபரசந்தி சுவர்க்கப்பேறு முறை வைப்பான் நிகழ் படலம் நாற்பத்தேழே – பாயிரம்:2 3/4
மேல்


சுவர்க்கவாசிகளும் (1)

துன்ன சுவர்க்கவாசிகளும் துணுக்குற்று இரிய தொலையாத – ஆதி:14 144/3
மேல்


சுவரணை (1)

சோர்ந்து வீழ சுவரணை இன்றி ஓர் – ஆதி:19 70/2
மேல்


சுவரை (1)

துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/2
மேல்


சுவறாததும் (1)

என்-கொல் வாரிதி நீர் சுவறாததும் என்பார் – குமார:2 281/3
மேல்


சுவறும் (1)

துள்ளி ஆர்_உயிர் துடிக்கும் வாய் நீர் அற சுவறும்
உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடி – ஆரணிய:4 36/2,3
மேல்


சுவாலை (4)

துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/2
சொல்_அரு மரணோபாதி சுடு கனல் சுவாலை மீக்கொள் – குமார:2 124/1
மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை – நிதான:3 23/4
ஆண்டு தேவ நீதாசனத்து அருகு அழல் சுவாலை
மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான் – ஆரணிய:2 79/3,4
மேல்


சுவாலைக்கு (1)

துறக்க நாட்டு அரசன் சீற்ற சுடு தழல் சுவாலைக்கு அஞ்சி – ஆரணிய:8 58/3
மேல்


சுவிசேஷ (17)

புண்ணிய வேந்தியல் சிருஷ்டி ராஜத்ரோகம் பூர்வவழி சுவிசேஷ புனிதமார்க்கம் – பாயிரம்:2 1/3
நண்ணினன் இரும் சுவிசேஷ நாமத்தன் – ஆதி:3 3/4
மாசு_இல் சீர் மாண் சுவிசேஷ மார்க்கத்தை – ஆதி:9 44/1
எள்ளு-மின் சுவிசேஷ மார்க்கத்து இயல்பு இதுவே – ஆதி:9 55/4
சுத்த மெய் சுவிசேஷ உத்துங்கரே – ஆதி:9 78/4
ஈனராம் குமரர் ஆவர் இரும் சுவிசேஷ மார்க்கர் – ஆதி:9 122/2
காண்தகைய சுவிசேஷ கதி மார்க்கம் நலம் கவின கருணை வாக்கின் – ஆதி:9 163/3
தொல் நெறி விளக்கு சுவிசேஷ நெறி தூய – ஆதி:13 47/3
நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/4
நிருமலன் தரு சுவிசேஷ நீர்மை காண் – ஆதி:14 33/4
பரசமய இருள் அகல சுவிசேஷ விரி கிரணம் பரப்பி நின்ற – குமார:2 51/1
விரசு-மினோ சுவிசேஷ விபுலத்து என்று ஓலிடும் ஓர் – குமார:4 27/2
வித்தக மெய் சுவிசேஷ விசுவாசி இவை எல்லாம் – குமார:4 31/1
மகத்துவ மெய் சுவிசேஷ மறைபொருளை வகுத்து உரைக்க – நிதான:5 50/3
விழி-மின் சுவிசேஷ கிரணம் வீசி எழுந்தான் நீதி ரவி – நிதான:9 91/2
புண்ணிய சுவிசேஷ மான்மிய மழை பொழி கால் – ஆரணிய:2 8/3
தூய சுவிசேஷ ஒளி தோற்ற_அரியது ஆக – ஆரணிய:9 104/1
மேல்


சுவிசேஷகர் (1)

சுத்த சுவிசேஷகர் நால்வர் சொன்ன பரம சத்தியத்தை – நிதான:9 47/3
மேல்


சுவிசேஷகன் (3)

ஐய கேள் சுவிசேஷகன் ஆர்_உயிர்க்கு அரணாம் – ஆதி:11 30/1
மன்னு சுவிசேஷகன் மறுத்து எதிர் வரானேல் – ஆதி:13 32/2
மொழி சுவிசேஷகன் முடுக்கினான் என்றான் – குமார:1 43/4
மேல்


சுவிசேஷத்தின் (2)

விள்ளு-மின் சுவிசேஷத்தின் மெய்ம்மையை – குமார:2 15/2
எள்ள_அரும் சுவிசேஷத்தின் இரும் சுடர் விரித்து அஞ்ஞான – தேவாரம்:11 18/3
மேல்


சுவிசேஷத்தை (2)

எண் பெறும் சுவிசேஷத்தை இயம்பு-மின் இதய – குமார:2 481/2
துப்பு உறழ் சுவிசேஷத்தை தூஷணம் செய்த பாவி – ஆரணிய:5 75/3
மேல்


சுவிசேஷம் (2)

எண்படும் அருள் சுவிசேஷம் ஏய்ந்து நம் – ஆதி:14 32/1
நேசம் ஆர் சுவிசேஷம் நிகழ்த்திடின் – நிதான:8 6/2
மேல்


சுவிசேஷன் (4)

அம் சுவிசேஷன் நீ அறைந்த யாவையும் – ஆதி:3 9/1
துன்னும் இன்னல் என்று அஞ்சினராய் சுவிசேஷன்
சொன்ன சொற்குறி கடைப்பிடித்து ஏகினர் துணிந்து – ஆதி:11 1/3,4
தற்புத்தியும் போய் சுவிசேஷன் முன் சாற்றும் உண்மை – ஆதி:12 21/1
தளம்பியதும் ஆங்கு சுவிசேஷன் உரை தந்து – ஆதி:13 28/3
மேல்


சுவிசேஷனாம் (1)

ஆயிடை சுவிசேஷனாம் அருள் மறை குரவன் – நிதான:6 2/1
மேல்


சுவிசேஷனும் (1)

நினை சுவிசேஷனும் நிகழ்த்துவான் அரோ – ஆதி:3 12/4
மேல்


சுவிசேடன் (4)

வாகாய செழும் சுவிசேடன் மெய் வாக்கை நம்பி – ஆதி:12 3/3
மெய்-தான் எனினும் சுவிசேடன் விளம்பும் மார்க்கத்து – ஆதி:12 6/1
நேயம் ஆர்தரு சுவிசேடன் நேர்ந்து நீ – ஆதி:12 35/2
விள்ளலும் சுவிசேடன் விருப்பொடும் – ஆதி:12 78/3
மேல்


சுவிசேடனுக்கு (1)

ஓதினான் சுவிசேடனுக்கு உள் உவந்து – ஆதி:12 86/2
மேல்


சுவை (30)

வண்ணவான் மொழி சுவை அமிர்து வார்ந்து உக – ஆதி:3 2/4
கண் படைத்து ஓங்கி உய்த்த நறும் சுவை கனிந்த பாகின் – ஆதி:4 17/3
உறை கலந்து தீம் சுவை பால் ஒருங்கு_அற கெடல் போல் – ஆதி:8 3/1
முறையின் நீங்கிய கனி சுவை உலகு எலாம் முயங்கி – ஆதி:8 3/2
அரு விலை பெறு பல் பண்டத்து அறு_சுவை அமைந்த உண்டி – ஆதி:9 123/3
ஜீவ தாருவின் செழும் கனி தீம் சுவை அமிர்த – ஆதி:11 8/1
துற்றும் ஓர் நறும் கனி என சுவை விழைந்தே – ஆதி:13 45/3
நாவினுக்கு அமுத சுவை நினைவிற்கு நறும் தேன் – ஆதி:18 16/2
தீன ரக்ஷணை அருள்வது ஓர் செழும் சுவை தீம் பால் – ஆதி:18 20/4
எட்டி மல்கிடு காடோ இன் சுவை கனி ஈயும் – ஆதி:19 20/1
என்று அவன் இசைத்த வார்த்தை எனும் சுவை அமுதத்தோடு – ஆதி:19 111/1
அடரும் இன் சுவை தருவ ஆரோக்கியம் அமைவ – குமார:4 68/2
விரவு தீம் சுவை விழு தகு கனி வருக்கங்கள் – குமார:4 69/3
கரைசெயற்கு அரிய என் காமிய சுவை
திரை செய் தெள் கடல் புவிக்கு அருத்து தெய்வமும் – நிதான:2 22/1,2
காமிய சுவை நலம் காட்டுமே-கொலாம் – நிதான:2 25/2
வருத்தி வேதியரை கொன்று ஊன் சுவை பெறும் மறவோர்-தம்மில் – நிதான:3 73/3
ஆடவர் உயிர் சுவை அறிந்த கூற்று அரோ – நிதான:4 16/4
நுண் அறிவு பகுத்து உணர்த்தல் நுவலுகின்ற சொல் சுவை மெய் – நிதான:5 39/1
காமிய சுவை பகுத்திடும் முழவு ஒலி கறங்கும் – நிதான:7 24/2
துன்று காமியமா சுவை துய்க்கிலீர் – நிதான:8 39/2
பருவரல் சுவை பால் உண்டி படர் கணீர் பருகும் பானம் – நிதான:10 54/1
இட்ட காமிய சுவை எலாம் எவ்வணம் விடுப்பல் – ஆரணிய:1 7/2
மலம் நுகர்ந்து உழல் சூகரம் வான் சுவை கரும்பின் – ஆரணிய:2 37/1
நண்ணும் அன்பினில் சுவை நயம் பயப்பது – ஆரணிய:4 11/3
முதிர் சுவை முக்கனி முதல தீம் கனி – ஆரணிய:4 25/1
கரும வான் சுவை கரும்பு ஈன்ற கட்டியோடு – ஆரணிய:4 26/3
வண் தமிழ் சுவை தேன் மண மாலிகை சூட்டி – ஆரணிய:4 162/2
எண்_அரும் சுவை தெள் அமுது எழில் திரு_வசனம் – ஆரணிய:7 18/3
சொற்ற வாய்மை சுவை மதுரம் திகழ் – ஆரணிய:8 88/2
துன்பு உறழ்ந்துறழ்ந்து அலசி வைகலும் சுவை மணம் பெறுகிற்கிலா – தேவாரம்:2 7/1
மேல்


சுவைபடு (1)

மண்டு காமிய சுவைபடு மாய மா சரக்கு – நிதான:7 38/2
மேல்


சுவைய (1)

தேனினும் இனிய தீம் சுவைய தெள் அமிர்து – ஆதி:14 35/2
மேல்


சுவையை (2)

கன்றிய மனத்தர் ஆகி காமிய சுவையை நாடி – ஆதி:2 27/2
தரு ஒன்று உதவு கனிகள் பல சுவையை தருதல் சகஜம் அதோ – நிதான:9 84/1
மேல்


சுழல் (4)

கால சுழல் சக்கரம் ஈர்ந்திடு பாதால – ஆதி:9 131/3
மருங்கு எலாம் கண்ணி மாய வலை சுழல் பொறிகள் மல்கி – நிதான:3 71/2
மரண சுழல் கொண்டு உய்க்கா முன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்கு – நிதான:9 33/2
பரிபவ சுழல் பட்ட பஞ்சு என நெடும் தூரம் – ஆரணிய:4 49/1
மேல்


சுழல்வதே (1)

நெருக்குறும் வாயில் சுற்றி சுழல்வதே நீர்மைத்து அன்றால் – ஆதி:17 6/4
மேல்


சுழல்வன் (1)

சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும் – ஆதி:2 5/3
மேல்


சுழல (2)

புடவி மயக்கில் சுழல விடுக்கும் புலை மார்க்க – ஆதி:16 6/3
கறங்கு போல் சுழல கரைவான் அரோ – ஆதி:19 67/4
மேல்


சுழலில் (1)

ஆசாபாச கொடும் சுழலில் அகப்பட்டு உலைந்தேன் அருள் அணுக – ஆதி:13 10/1
மேல்


சுழலிலே (1)

மருள் மனோவாஞ்சை சுழலிலே உழலும் வறிய புன் திரணம் என் ஆவி – தேவாரம்:6 11/1
மேல்


சுழலும் (2)

கறங்கு என சுழலும் நெஞ்சன் கவன்றனன் கலக்கமுற்றான் – ஆதி:2 47/4
பித்து ஏறி சுழலும் ஜெக பேய் பிடித்து பவத்தே – தேவாரம்:5 3/1
மேல்


சுழன்று (4)

துன்பு எனும் தீ சுட சுழன்று சோர்வுறும் – ஆதி:14 37/1
செண்டு என சுழன்று நீங்கா தெருமரல் உழந்து தேய்வுற்று – நிதான:3 67/2
சோகமாம் பொறி புலன்கள் சுழன்று அந்தக்கரணம் மாயும் – இரட்சணிய:2 13/2
கறங்கு போல் சுழன்று அக நிலை கலங்கி உள் உடைந்து – இரட்சணிய:2 26/3
மேல்


சுழி (1)

சுழி படும் அலை வாய்ப்பட்ட துரும்பு என துறைக்குள் மூழ்கி – இரட்சணிய:2 17/2
மேல்


சுழியுள் (1)

துக்க சாகரத்து அலறிய எறி திரை சுழியுள்
புக்கு நீந்தி இ ஆனந்த பொருப்பினை குறிக்கொண்டு – குமார:4 77/2,3
மேல்


சுளை (1)

குலவு முள் புற கொழும் கனி சுளை உண்டு குதட்டி – குமார:4 65/3
மேல்


சுற்ற (1)

காய் எரி தழுவி சுற்ற கதழ்ந்து பேய் கணங்கள் தொக்கு – நிதான:3 50/2
மேல்


சுற்றம் (2)

மூழ்ந்த சுற்றம் கல்வி செல்வம் முயற்சி முதல் காரணமாக – நிதான:9 80/1
சுற்றம் நட்பு உரிமை திறம் யாவும் நின் சூழ்ந்து – ஆரணிய:1 19/2
மேல்


சுற்றமும் (1)

சுற்றமும் காதலும் துனியில் மூழ்க நீ – ஆதி:10 22/3
மேல்


சுற்றி (5)

ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றி கொற்றி – ஆதி:9 110/1
ஊழி கதிரை புடை சுற்றி ஊர்கோள் வளைந்த பரிசாக – ஆதி:14 150/1
நெருக்குறும் வாயில் சுற்றி சுழல்வதே நீர்மைத்து அன்றால் – ஆதி:17 6/4
அவனி சுற்றி அழி மதிக்கு ஆத்தும – ஆதி:19 69/3
காட்டை சுற்றி திரிந்து கழிந்த அ – ஆதி:19 74/3
மேல்


சுற்றும் (2)

அகழி சுற்றும் இ வாழ் நிலைகுலையும் நம்மவர்-தம் – நிதான:7 18/3
முன்னவன்-தானும் நீயே முற்றும் நீ சுற்றும் நீ என்று – ஆரணிய:8 61/3
மேல்


சுறவத்தோடு (1)

துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு
மை_அற விளங்கும் வான மீன் ஒளி மழுங்கி மாய – குமார:2 431/2,3
மேல்


சுறுக்காய் (1)

தூய பரிசுத்தாவி அருள் சுறுக்காய் தேடும் ஜெகத்தீரே – நிதான:9 61/4
மேல்


சுன்னமிட்டின (1)

சுன்னமிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்தது – ஆரணிய:2 65/3
மேல்


சுனை (3)

திருந்துவர் சுனை கான்யாறு சிந்து நீர் வாவி ஆடி – ஆதி:6 17/2
கான் அளாவு தண் நறும் சுனை மிளிர்வன காணாய் – குமார:4 56/4
கல் அளை சுனை நீர் உண்டு வருவன காணாய் – குமார:4 61/4
மேல்


சுனைத்தது (1)

கல் மனத்து ஊறும் நீர் கான் சுனைத்தது
பொன் முக மரை மலர் பொலியும் பொற்பது – நிதான:1 7/1,2
மேல்


சுனையில் (1)

பழகிப்பழகி பனி தூவி தெள் நீர் சுனையில் படிந்து வரும் – ஆரணிய:5 93/2
மேல்


சுனையின் (1)

சீர் ஆர் நறும் சுனையின் தேம் படு தெள் நீர் பயனும் – ஆதி:19 2/2
மேல்


சுனையும் (2)

சிந்து நீர் சுனையும் காவும் புள் ஒலி சிறந்த மாதோ – குமார:2 427/4
புண்ணிய ஜீவ கங்கை பொங்கு நீர் சுனையும் கண்டார் – ஆரணிய:5 36/2

மேல்