நெ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நெகிழ்வன (1)

விறல் அரசர்கள் மனம் நெகிழ்வன விரை மலர் களி முலை பொருவன – நந்திக்-:2 7/2

மேல்

நெஞ்சத்து (1)

அமரில் தெள்ளாற்று அஞ்சிய நெஞ்சத்து அரசர்கள் திரள் போகும் – நந்திக்-:2 28/3

மேல்

நெஞ்சு (2)

நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரிய – நந்திக்-:2 11/1
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே – நந்திக்-:2 96/4

மேல்

நெஞ்சே (2)

மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே – நந்திக்-:2 10/4
குயில் கண்டால் குயிலுக்கே குழைதி ஆகின் கொடும் சுரம் போக்கு ஒழி நெஞ்சே கூடா மன்னர் – நந்திக்-:2 25/2

மேல்

நெடிதாய் (1)

நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு – நந்திக்-:2 20/1

மேல்

நெடிய (1)

நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்

நெடு (4)

காது நெடு வேல் படை நந்திகண்டன் கச்சி வள நாட்டு – நந்திக்-:2 10/3
நிறைவிடு-மின் நந்தி கழல் புகு-மின் உங்கள் நெடு முடிகள் வந்து நிகழ – நந்திக்-:2 68/3
அரி பயில் நெடு நாட்டத்து அஞ்சனம் முழுது ஊட்டி – நந்திக்-:2 69/1
கொம்பு அன்றோ நம் குடிலில் குறும் காலும் நெடு வளையும் குனிந்து பாரே – நந்திக்-:2 78/4

மேல்

நெடுந்தகை (1)

நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை மிடைந்த நீள் கடை நெடுந்தகை
வில் கொள் நல் நுதல் மடந்தைமார் மிக முயங்கு தோள் அவனி நாரணன் – நந்திக்-:2 22/1,2

மேல்

நெடும் (8)

அதிர் குரல மணி நெடும் தேர் அவனி நாரணன் களிற்றின் – நந்திக்-:2 14/1
பாழி மன் நெடும் தோள் வடு கண்டிலம் பல்லவ பகர்வாயே – நந்திக்-:2 37/4
பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் – நந்திக்-:2 38/1
மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை – நந்திக்-:2 38/2
பெருக ஓடு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேர் அணி நீள் முடி மேல் – நந்திக்-:2 44/3
பெடை ஏறு நெடும் கழி சூழ் மயிலை பெருமானது பேரருள் நீள் முடி மேல் – நந்திக்-:2 55/3
திரு வரு நெடும் கண் சிவக்குமாகின் – நந்திக்-:2 61/5
பட்ட வேந்தர்-தம் பூணொடும் பாவைமார் நாண் நெடும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 75/1

மேல்

நெரித்தே (1)

நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சு உலர்ந்தே – நந்திக்-:2 96/4

மேல்

நெருநல் (1)

நெருநல் துணி அரை சுற்றி – நந்திக்-:2 23/5

மேல்

நெருப்பு (2)

நெருப்பு உருவம் வெளி ஆக நீறு அணிந்த வரை_மார்ப – நந்திக்-:1 2/2
நெருப்பு வட்டமான நிலா – நந்திக்-:2 111/4

மேல்

நெல் (1)

பதி-தொறு புயல் பொழி தரு மணி பணை தரு பரு மணி பகரா நெல்
கதிர் தொகு வரு புனல் கரை பொருது இழிதரு காவிரி வள நாடா – நந்திக்-:2 17/1,2

மேல்

நெறிந்து (1)

நெறிந்து உளதே கரும் குழல் அம் குவளை கண்கள் நெடிய வேய் தொடிய தோள் நேர்ந்து வெம்மை – நந்திக்-:2 60/3

மேல்