எ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எங்கள் 6
எங்கும் 3
எங்கையர்-தம் 1
எங்கையர்க்கே 2
எங்ஙன் 1
எட்டு 1
எடுத்தான் 2
எண்ணம் 1
எண்ணும் 1
எதிர் 2
எதிர்ந்தார்-தம் 1
எதிர்வந்த 1
எதிர்வந்து 1
எதிரெதிரே 1
எந்தை 1
எப்புவிக்கும் 1
எம் 6
எய்த 1
எயில் 1
எரி 2
எரிதரு 1
எரியாய் 1
எரியும் 1
எரியே 1
எருத்தம் 1
எல் 1
எல்லாம் 12
எலாம் 4
எவ்வாறு 1
எவ்விடம் 2
எவ்வுயிர்க்கும் 1
எவ்வூர்-கொல் 1
எழ 1
எழில் 3
எழில்_நகை 1
எழு 1
எழுதவும் 1
எழுந்த 2
எழுந்து 1
எறி 1
எறிந்த 1
எறிய 1
என் 15
என்-கொல் 1
என்கின்றீர் 1
என்பது 1
என்பதும் 3
என்பர் 3
என்பரே 1
என்பவன் 1
என்ற 1
என்றார் 1
என்றால் 3
என்றாள் 2
என்று 9
என்றும் 3
என்றேன் 1
என்றோ 1
என்ன 2
என்னதே 1
என்னாதே 1
என்னாம் 1
என்னில் 1
என்னும் 3
என்னே 1
என்னை 5
என்னை-கொல் 1
என்னையும் 1
என 3
எனக்கு 2
எனதே 1
எனவே 1
எனும் 3

எங்கள் (6)

ஞான்ற வெள் அருவி இருவி எங்கள் பொன் – நந்திக்-:2 36/1
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே – நந்திக்-:2 39/4
கோவே மாலை உள்ளும் எங்கள் கோவே கம்பர் ஆனாரே – நந்திக்-:2 50/4
நாகு இடறு கானல் வள மயிலை ஆளி நயபரனும் எங்கள் அளவேயே – நந்திக்-:2 51/3
புரவலன் நந்தி எங்கள் பொன்னி நல் நாட்டு மன்னன் – நந்திக்-:2 58/1
பிடி விளக்கும் எங்கள் ஊரார் விளக்கும் பெரும் புகழால் – நந்திக்-:2 93/2

மேல்

எங்கும் (3)

இரவு அலர் மலர்கள் எங்கும் இல்லையோ நல்குவேனே – நந்திக்-:2 58/4
அறை விடு-மின் இந்த அவனி-தனில் எங்கும் அவனுடைய தொண்டை அரசே – நந்திக்-:2 68/2
நீண்டதாம் கங்குல் எங்கும் நிறைந்ததாம் வாடை பொங்கி – நந்திக்-:2 80/1

மேல்

எங்கையர்-தம் (1)

ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்-தம்
வீட்டு இருந்து பாட விடிவளவும் காட்டில் அழும் – நந்திக்-:2 102/1,2

மேல்

எங்கையர்க்கே (2)

எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் – நந்திக்-:2 53/2
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் – நந்திக்-:2 86/1

மேல்

எங்ஙன் (1)

இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே – நந்திக்-:2 20/4

மேல்

எட்டு (1)

பண்ணும் புகழ் எட்டு திசை ஏகம்பலவாணா பாப திறலோ நந்தி-தன் மறவோர்களிடத்தே – நந்திக்-:2 113/3

மேல்

எடுத்தான் (2)

காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான் – நந்திக்-:2 77/1
காவி அனந்தம் எடுத்தான் மதன் கை கரும்பு எடுத்தான்
மேவி அனந்த வனம் புகுந்தான் இனி வேட்டம் செய்வான் – நந்திக்-:2 77/1,2

மேல்

எண்ணம் (1)

தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் – நந்திக்-:2 82/2

மேல்

எண்ணும் (1)

வேண்டார் எண்ணும் வேந்தர் பிராற்கே மெய் அன்பு – நந்திக்-:2 71/1

மேல்

எதிர் (2)

உதிரம் மன்னும் நின் எதிர் மலைந்தோர்க்கே – நந்திக்-:2 61/15
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் – நந்திக்-:2 105/2

மேல்

எதிர்ந்தார்-தம் (1)

இருளான மத கரியும் பாய்மாவும் இரதமும் கொண்டு எதிர்ந்தார்-தம் முன் – நந்திக்-:2 86/3

மேல்

எதிர்வந்த (1)

கொம்பு உயர்வாம் மை நாகம் எதிர்வந்த நந்தி குல வீரர் ஆகம் அழிய – நந்திக்-:2 82/1

மேல்

எதிர்வந்து (1)

செம்பியர் தென்னர் சேரர் எதிர்வந்து மாய செரு வென்ற பாரி முடி மேல் – நந்திக்-:2 82/3

மேல்

எதிரெதிரே (1)

எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் – நந்திக்-:2 14/4

மேல்

எந்தை (1)

யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8

மேல்

எப்புவிக்கும் (1)

என்னை யானே புகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும்
மன்னர் கோன் நந்தி வரதுங்கன் பொன் முடியின் – நந்திக்-:2 90/1,2

மேல்

எம் (6)

செம்மை முளரி மலர் தாள் எம் சென்னி மிசையில் புனைவாமே – நந்திக்-:1 1/4
ஒரு பெரும் கடவுள் நின் பரவுதும் எம் கோன் – நந்திக்-:2 1/38
விண்ட வேந்தர் தம் நாடும் வீர திருவும் எம் கோனை – நந்திக்-:2 5/3
அடுதிர்-கொல்லோ திறல் நந்தி எம் கோன் அயிராவதத்தில் – நந்திக்-:2 12/3
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் – நந்திக்-:2 86/1
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம் – நந்திக்-:2 93/3

மேல்

எய்த (1)

பண்டை மராமரம் எய்த பல்லவனே – நந்திக்-:2 84/3

மேல்

எயில் (1)

எயில் கொண்டான் மல்லை அம் கோன் நந்தி வேந்தன் இகல்கொண்டார் இரும் கடம்பூர் விசும்புக்கு ஏற்றி – நந்திக்-:2 25/3

மேல்

எரி (2)

இடுதிர்-கொல்லோ பண்டு இறுக்கும் திறை எரி கானத்து உம்மை – நந்திக்-:2 12/2
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1

மேல்

எரிதரு (1)

எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை – நந்திக்-:2 1/14

மேல்

எரியாய் (1)

நெஞ்சு ஆகுலமுற்று இங்ஙனே மெலிய நிலவின் கதிர் நீள் எரியாய் விரிய – நந்திக்-:2 11/1

மேல்

எரியும் (1)

என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4

மேல்

எரியே (1)

என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ – நந்திக்-:2 20/2

மேல்

எருத்தம் (1)

இளம் களி யானை எருத்தம் மிசையன்னே – நந்திக்-:2 23/11

மேல்

எல் (1)

இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை – நந்திக்-:2 19/2

மேல்

எல்லாம் (12)

சென்று அஞ்சப்பட்டது எல்லாம் படும் மாற்றலர் திண் பதியே – நந்திக்-:2 16/4
இரவாத பரிசு எல்லாம் இரந்து ஏற்றும் பாவைமீர் எல் ஈர் வாடை – நந்திக்-:2 19/2
நங்கள் கோ தொண்டை வேந்தன் நாம வேல் மன்னர்க்கு எல்லாம்
தங்கள் கோன் அங்கநாடன் சந்திர குல பிரகாசன் – நந்திக்-:2 39/1,2
சிலர்க்கு எல்லாம் செழும் தென்றல் அமுது அளிக்கும் காலம் தீவினையேற்கு அ தென்றல் தீ வீசும் காலம் – நந்திக்-:2 56/2
பலர்க்கு எல்லாம் கோன் நந்தி பன் மாட கச்சி பனி கண்ணார் பரு முத்தம் பார்த்து ஆடும் காலம் – நந்திக்-:2 56/3
அலர்க்கு எல்லாம் ஐங்கணைவேள் அலர் தூற்றும் காலம் அகன்றுபோனவர் நம்மை அயர்த்துவிட்ட காலம் – நந்திக்-:2 56/4
வடக்கு உடையான் நந்தி மானோதயன் இந்த வையம் எல்லாம்
பட குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பார் அறிய – நந்திக்-:2 65/2,3
தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீர துவசன் – நந்திக்-:2 82/2
ஏறுபாய விளைவித்தது எல்லாம் வார் குங்கும கொங்கை – நந்திக்-:2 87/1
இந்த புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம்
அந்த குமுதமே அல்லவோ நந்தி – நந்திக்-:2 92/1,2
படி விளக்கும் நந்தி எம் கோன் பெரும் படைவீட்டுக்கு எல்லாம்
விடிவிளக்கும் இதுவே நாங்கள் பூண்பதும் வெண் முத்தமே – நந்திக்-:2 93/3,4
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம்
அதிர் ஆக்கி தூசும் அழுக்கு ஆக்கி அங்கம் அங்காடிக்கு இட்ட – நந்திக்-:2 105/2,3

மேல்

எலாம் (4)

பாய் புலியின் உரி அசைத்த பல புள்ளி படிவம் எலாம்
ஆயிர வாய் கரும் கச்சை அழல் உமிழ அசைத்தனையே – நந்திக்-:2 1/19,20
விரவாத மன்னர் எலாம் விண் ஏற வெள்ளாற்று வெகுண்டோன் தொண்டைக்கு – நந்திக்-:2 19/1
மதியம் எரி சொரியும் மாலை அ மாலை மறந்தும் புலராது கங்குல் எலாம் கங்குல் – நந்திக்-:2 45/1
மண் எலாம் உய்ய மழை போல் வழங்கு கர – நந்திக்-:2 107/1

மேல்

எவ்வாறு (1)

இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய – நந்திக்-:2 52/2

மேல்

எவ்விடம் (2)

நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8

மேல்

எவ்வுயிர்க்கும் (1)

எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ – நந்திக்-:2 1/32

மேல்

எவ்வூர்-கொல் (1)

எதிரெதிரே கெட நின்றது எவ்வூர்-கொல் அறியோமால் – நந்திக்-:2 14/4

மேல்

எழ (1)

அரு வரை அடி எழ முடுகிய அவுணனது – நந்திக்-:2 1/15

மேல்

எழில் (3)

எழில் உடல் பொடிபட எரிதரு நுதலினை – நந்திக்-:2 1/14
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/4
செம் கோல் வளை கை இவளும் துவண்டு செறி மாமை வாட எழில் ஆர் – நந்திக்-:2 42/1

மேல்

எழில்_நகை (1)

இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/4

மேல்

எழு (1)

காலை பொழுதின் எழு கன்னியர்-தம் கண்ணின் படி காட்டிடு கச்சியின் வாய் – நந்திக்-:2 81/2

மேல்

எழுதவும் (1)

இட்ட பொட்டினோடு இள முலை போகமும் எழுதவும் ஆகாதே – நந்திக்-:2 75/4

மேல்

எழுந்த (2)

குருகு உதிர் முன்பனிக்கு ஒதுங்கி கூசும் கங்குல் குளிர் திவலை தோய்ந்து எழுந்த நறும் தண் வாடை – நந்திக்-:2 4/1
புனத்து நின்ற வேங்கை மேல் புகைந்து எழுந்த ஆனையின் – நந்திக்-:2 34/1

மேல்

எழுந்து (1)

பருவ முகில் எழுந்து மழை பொழியும் காலம் பண்டு உறவாக்கிய தெய்வம் பகையாக்கும் காலம் – நந்திக்-:2 114/1

மேல்

எறி (1)

குல மயில் பாவையும் எறி கடல் வடிவமும் – நந்திக்-:2 83/3

மேல்

எறிந்த (1)

மால தெள்ளாறு எறிந்த மானோதயன் குடை கீழ் – நந்திக்-:2 81/3

மேல்

எறிய (1)

பகரம் கொள் நெடும் திவலை பனி விசும்பில் பறித்து எறிய பண்டு முந்நீர் – நந்திக்-:2 38/1

மேல்

என் (15)

ஆடல் ஓதம் ஆர்க்குமால் என் ஆவி காக்க வல்லனோ – நந்திக்-:2 9/2
மாதர் இவரோடு உறுகின்றாய் வாழி மற்று என் மட நெஞ்சே – நந்திக்-:2 10/4
இன்று என் உயிர் அன்னவள் கொங்கையை விட்டு எங்ஙன் துயில்கின்றன ஏழையனே – நந்திக்-:2 20/4
ஒற்கம் என் மகள் உரைசெய்தோ உலகு அளிப்பன் இ திறன் உரைத்திடே – நந்திக்-:2 22/4
இவ் அரி கானத்து ஏகிய ஆறு என் எழில்_நகை இவனோடே – நந்திக்-:2 28/4
வீசல் மறந்தாலும் மெல்லியல் என் பேதை – நந்திக்-:2 30/2
தனக்கு உரிய என் கொங்கை தான் பயந்த மழ களிற்றுக்கு ஆக்கி தன்-பால் – நந்திக்-:2 53/1
ஓராதே என் மகளை சொன்னீரே தொண்டை மேல் – நந்திக்-:2 62/1
மீண்டான் நந்திக்கு என் மகள் தோற்கும் வெண் சங்கே – நந்திக்-:2 71/4
மேல் வருடும் தொண்டை விரை நாறும் இன்னமும் என்
கால் வருடும் சேடியர்-தம் கை – நந்திக்-:2 90/3,4
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை – நந்திக்-:2 96/3
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் – நந்திக்-:2 105/2
நானும் என் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நம் தயாபரனே – நந்திக்-:2 109/4
யானும் என் கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே எந்தை பிரானே – நந்திக்-:2 109/8
என் கலியை தீர்ப்பானிலன் – நந்திக்-:2 115/4

மேல்

என்-கொல் (1)

நாறாது இவள் திரு மேனியும் நாம் என்-கொல் நாணுவதே – நந்திக்-:2 40/4

மேல்

என்கின்றீர் (1)

வீறுபாய கொடுக்கின்ற விடலை யார் கோ என்கின்றீர்
மாறுபாய படை மன்னர் மாவும் தேரும் தெள்ளாற்றில் – நந்திக்-:2 87/2,3

மேல்

என்பது (1)

இந்த புவியில் இரவலர் உண்டு என்பது எல்லாம் – நந்திக்-:2 92/1

மேல்

என்பதும் (3)

கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1
கண் என்பதும் இலையே மொழி வாய் என்பதும் இலையே காது என்பதும் இலையே இது காலம்-தனின் அடைவோ – நந்திக்-:2 113/1

மேல்

என்பர் (3)

மகரம் கொள் நெடும் கூல வரை திரித்த மால் என்பர் மன்னர் யானை – நந்திக்-:2 38/2
திங்கள் போல் குடையின் நீழல் செய்ய கோல் செலுத்தும் என்பர்
எங்கள் கோல் வளைகள் நில்லா விபரிதம் இருந்தவாறே – நந்திக்-:2 39/3,4
தேரும் உடைத்து என்பர் சீறாத நாள் நந்தி சீறிய பின்பு – நந்திக்-:2 95/2

மேல்

என்பரே (1)

தேரும் உடைத்து என்பரே தெவ்வர் வாழும் செழும் பதியே – நந்திக்-:2 95/4

மேல்

என்பவன் (1)

பெண் என்பவன் வாயை கிழி தூதன் செவி அறடா பெண்ணும் கிடையாது இங்கு ஒரு மண்ணும் கிடையாதே – நந்திக்-:2 113/4

மேல்

என்ற (1)

போகாத சங்கும் அருளார் என்ற போது வண்டோ – நந்திக்-:2 76/2

மேல்

என்றார் (1)

பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி – நந்திக்-:2 102/3

மேல்

என்றால் (3)

ஐய சாலவும் அவிர் இழை அல்குல் அம் மது மலர் குழல் என்றால்
வெய்ய வெப்பு அவியாத குஞ்சர நந்தி வீரவன் இவன் ஐ போய் – நந்திக்-:2 47/2,3
ஏர் வட்ட தனி மதி வெள்ளி குடை கொடிது என்றால் அது பழுது அன்றோ – நந்திக்-:2 54/2
பூண்டாள் நங்காய் அன்று இவள் என்றால் பொல்லாதோ – நந்திக்-:2 71/2

மேல்

என்றாள் (2)

பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி – நந்திக்-:2 102/3
நாய் என்றாள் நீ என்றேன் நான் – நந்திக்-:2 102/4

மேல்

என்று (9)

தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/2
அருகு பனி சிதற வர அஞ்சுவாளை அஞ்சல் அஞ்சல் என்று உரைத்தால் அழிவு அது உண்டோ – நந்திக்-:2 4/2
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ – நந்திக்-:2 20/2
மயக்குவித்தான் நந்தி மானோதயன் என்று வட்டிப்பனே – நந்திக்-:2 63/4
அருளானது எங்கையர்க்கே அன்னாய் என்று இயம்பிடும் எம் கன்னி செம் சொல் – நந்திக்-:2 86/1
பரி தேரும் பாகும் அங்கு என் பட்டவோ என்று பங்கய கை – நந்திக்-:2 96/3
சந்தனம் என்று ஆரோ தடவினார் பைந்தமிழை – நந்திக்-:2 104/2
கூடு வருகுது என்று கூறுங்கள் நாடியே – நந்திக்-:2 106/2
வருவர் வருவர் என்று வழி பார்க்கும் காலம் வல்வினையேன் தனி இருந்து வாடும் ஒரு காலம் – நந்திக்-:2 114/2

மேல்

என்றும் (3)

பொழுது கண்டு ஆய் அதிர்கின்றது போக நம் பொய்யற்கு என்றும்
தொழுதுகொண்டேன் என்று சொல்லு கண்டாய் தொல்லை நூல் வரம்பு – நந்திக்-:2 3/1,2
வர வாதையுற்று இருந்து வருந்துவார் பலர் என்றும் வாழி வாழி – நந்திக்-:2 19/3
விழியாள் என்றும் மேனி வெளுத்து உற மெலிவாளே – நந்திக்-:2 43/2

மேல்

என்றேன் (1)

நாய் என்றாள் நீ என்றேன் நான் – நந்திக்-:2 102/4

மேல்

என்றோ (1)

அம்பு ஒன்று வில் ஒடிதல் நாண் அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ
வம்பு ஒன்று குழலாளை மணம்பேசி வர விடுத்தார் மன்னர் தூதா – நந்திக்-:2 78/1,2

மேல்

என்ன (2)

அம் கோல் வளை கை இளையார் இழப்ப அரசாள்வது என்ன வகையோ – நந்திக்-:2 42/2
வம்பு உயர் தொண்டை காணும் மட மாதர் தம் கை வளை கொண்டது என்ன வலமே – நந்திக்-:2 82/4

மேல்

என்னதே (1)

எனதே கலை வளையும் என்னதே மன்னர் – நந்திக்-:2 2/1

மேல்

என்னாதே (1)

என்னை யானே புகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும் – நந்திக்-:2 90/1

மேல்

என்னாம் (1)

படுதிர்-கொல்லோ படை மன்னீர் என்னாம் உங்கள் பாவனையே – நந்திக்-:2 12/4

மேல்

என்னில் (1)

உளமே கொடி மருங்கு உண்டு இல்லை என்னில்
இள முலைகள் எவ்வாறு இருக்கும் கிளர் ஒளிய – நந்திக்-:2 52/1,2

மேல்

என்னும் (3)

ஒண் சுடராய் ஒளி என்னும் ஓர் உருவம் மூன்று உருவு – நந்திக்-:2 1/2
கண்ட வேந்தர் கொண்-மின்கள் என்னும் கன்னி கடுவாயே – நந்திக்-:2 5/4
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ – நந்திக்-:2 20/2

மேல்

என்னே (1)

பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே
மா இயல் கானம் போந்தது அறிகிலேன் மதியிலேனே – நந்திக்-:2 79/3,4

மேல்

என்னை (5)

ஆட்டாதே வைத்து என்னை ஆயிரமும் செய்தீரே – நந்திக்-:2 46/4
பூவையும் பந்தும் தந்து புல்லினாள் என்னை என்னே – நந்திக்-:2 79/3
என்னை யானே புகழ்ந்தேன் என்னாதே எப்புவிக்கும் – நந்திக்-:2 90/1
என்னை அவர் அற மறந்து போனாரே தோழி இளந்தலை கண்டே நிலவு பிளந்து எரியும் காலம் – நந்திக்-:2 101/4
எதிர் ஆக்கி என்னை இளந்தலை ஆக்கி என் அங்கம் எல்லாம் – நந்திக்-:2 105/2

மேல்

என்னை-கொல் (1)

ஏயும் மாங்குயிற்கு என்னை-கொல் ஆவதே – நந்திக்-:2 88/2

மேல்

என்னையும் (1)

பதர் ஆக்கி என்னையும் பற்றாமல் ஆக்கிய பாலகனே – நந்திக்-:2 105/4

மேல்

என (3)

அம்மை தருக முத்தம் என அழைப்ப ஆங்கே சிறிது அகன்று – நந்திக்-:1 1/2
சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப – நந்திக்-:2 1/21
என ஆங்கு – நந்திக்-:2 1/37

மேல்

எனக்கு (2)

நன்றும் நெடிதாய் அவிர்கின்றது இரா நலிகின்றது மாருதசாலம் எனக்கு
என்று இன் நிலவு என்னும் இளம்பிறையும் எரியே சொரிகின்றது யாது செய்கோ – நந்திக்-:2 20/1,2
எனக்கு உரிய வரை மார்பம் எங்கையர்க்கே ஆக்கினான் இகல் வேல் மன்னர் – நந்திக்-:2 53/2

மேல்

எனதே (1)

எனதே கலை வளையும் என்னதே மன்னர் – நந்திக்-:2 2/1

மேல்

எனவே (1)

அரசு வீற்றிருக்க அருளுக எனவே – நந்திக்-:2 1/44

மேல்

எனும் (3)

நரபதி எனும் நந்தி நல் மயிலாபுரியில் – நந்திக்-:2 69/3
செம் கை முகில் அனைய கொடை செம்பொன் பெய் ஏக தியாகி எனும் நந்தி அருள் சேராத காலம் – நந்திக்-:2 100/3
செந்நெல் வயல் குருகினம் சூழ் கச்சி வள நாடன் தியாகி எனும் நந்தி தடம் தோள் சேரா காலம் – நந்திக்-:2 101/3

மேல்