சோ – முதல் சொற்கள்- நந்திக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சோணாடன் (1)

தொண்டை வேந்தன் சோணாடன் தொல் நீர் அலங்கல் முந்நீரும் – நந்திக்-:2 5/1

மேல்

சோணாடா (1)

தண்டலையில் பூம் கமுகம் பாளை தாவி தமிழ் தென்றல் புகுந்து உலவும் தண் சோணாடா
விண் தொடு திண் கிரி அளவும் வீரம் செல்லும் விடேல் விடுகு நீ கடவும் வீதி-தோறும் – நந்திக்-:2 74/2,3

மேல்

சோதி (1)

சோதி வெளுக்கில் வெளு மருங்குல் துவளின் நீயும் துவள் கண்டாய் – நந்திக்-:2 10/2

மேல்

சோமன் (1)

காம வயிரி களங்கு அறுக்கும் சோமன்
வரு நந்தி யானத்து மானாரை விட்டு – நந்திக்-:2 94/2,3

மேல்

சோர் (2)

சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப – நந்திக்-:2 1/21
கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல் – நந்திக்-:2 10/1

மேல்

சோராமே (1)

தோளால் மெலியாமே ஆழ் கடலால் சோராமே
வாளா பெறலாமே வாயற்றீர் கேளாதார் – நந்திக்-:2 85/1,2

மேல்

சோரில் (1)

கோதை சோரில் சோர் கொங்கை விம்மில் விம்மு குறுமுறுவல் – நந்திக்-:2 10/1

மேல்

சோரும் (1)

துஞ்சா நயனத்தொடு சோரும் இவட்கு அருளாது ஒழிகின்றது தொண்டை-கொலோ – நந்திக்-:2 11/2

மேல்

சோலை (1)

கவரி செந்நெல் காடு அணி சோலை காவிரி வள நாடன் – நந்திக்-:2 28/1

மேல்

சோழர் (1)

தம் கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர் நின்ற நிலம் மேல் – நந்திக்-:2 42/3

மேல்

சோழரும் (1)

சேர சோழரும் தென்னரும் வடபுலத்து அரசரும் திறை தந்த – நந்திக்-:2 27/3

மேல்

சோனை (1)

சோர் மதத்த வார் குருதி சோனை நீர் என துளிப்ப – நந்திக்-:2 1/21

மேல்