ரா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

ராக்கதன் (1)

இ பாதக ராக்கதன் நாளும் எழுந்து உலாவி – ஆரணிய:4 102/1
மேல்


ராஜ்ஜிய (8)

நித்தியானந்த ராஜ்ஜிய நிருமல அரசன் – ஆதி:8 9/2
வேத ராஜ்ஜிய தருமத்தை வியல் நிலத்து ஊன்றி – ஆதி:8 22/3
நாச தேசத்து ராஜ்ஜிய பாரத்தை நச்சான் – ஆதி:8 31/1
நித்திய ராஜ்ஜிய நிருபன் நின்மல – ஆதி:9 26/2
தூய ராஜ்ஜிய பேர்_இன்பம் துய்ப்பவன் அறி-மின் – ஆதி:9 73/4
நித்தியானந்த ராஜ்ஜிய நெறி கடைப்பிடித்து – ஆதி:11 18/1
சொல்லை அலகைக்கு உரிய ராஜ்ஜிய துரோகி – நிதான:11 38/4
தண்டனை படுத்துவம் நம ராஜ்ஜிய தருமம் – ஆரணிய:7 25/4
மேல்


ராஜ்ஜியத்தர் (1)

மோன ராஜ்ஜியத்தர் ஆவர் முறை தெரிந்து உணர்ந்துகொள்-மின் – ஆதி:9 122/4
மேல்


ராஜ்ஜியத்தின் (3)

வித்துபவன் யான் புலமும் உலகு ஆகும் வித்து பர ராஜ்ஜியத்தின்
புத்திரராம் களை தேரில் பொல்லாங்கன் புதல்வர் அதை புலம்கொண்டு உய்த்த – ஆதி:9 83/1,2
மடி இலாது உஞல் வேதிய வான ராஜ்ஜியத்தின்
குடிகள் செய்கையில் கொற்றவன் அரும் பெரும் குணத்தில் – குமார:4 66/1,2
சிற்பரம ராஜ்ஜியத்தின் ஜேசு திரு_அடி நீழல் – நிதான:11 74/3
மேல்


ராஜ்ஜியத்து (1)

நித்திய ஜீவ ராஜ்ஜியத்து நேர் வழி – ஆதி:9 34/1
மேல்


ராஜ்ஜியத்தை (1)

முத்தி ராஜ்ஜியத்தை உற்ற முறைமையை மொழிதும் அன்றே – இரட்சணிய:2 1/4
மேல்


ராஜ்ஜியம் (5)

உத்தம ராஜ்ஜியம் விழைந்தோன் ஒல்லை வழிப்படுவன் உலகு ஒருங்கு உவர்த்தே – ஆதி:9 86/4
செல் நீர்மை வலை போலும் திவ்விய ராஜ்ஜியம் வலையில் சேர்த்து அவற்றுள் – ஆதி:9 87/2
ஓவல்_இல் பரலோக ராஜ்ஜியம் அஃது உற்றால் – ஆதி:11 4/2
மீது உறும் பரம ராஜ்ஜியம் விரும்பி முயல்வோர் – நிதான:4 83/1
பரம ராஜ்ஜியம் வந்து உற்ற பரிசினை பாராய் – இரட்சணிய:1 20/4
மேல்


ராஜ்ஜியம்-தான் (1)

பன்னுக என்றிரேல் அருள் மறை பரம ராஜ்ஜியம்-தான்
இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும் – நிதான:6 14/3,4
மேல்


ராஜ்ஜியமாம் (1)

அ தகு ராஜ்ஜியமாம் என்று ஆண்டகை – ஆதி:9 34/4
மேல்


ராஜ்ஜியமும் (1)

நண்ணு_அரிய பரலோக ராஜ்ஜியமும் ஒருவன் உளம் நண்ணி நிற்பின் – ஆதி:9 84/3
மேல்


ராஜ்ய (2)

பத்தர் சிலர் ராஜ்ய பரிபாலனம் நடத்தி – குமார:4 9/2
தொண்டரை நிறுவி ராஜ்ய துரைத்தனம் நடத்தாநிற்பர் – ஆரணிய:5 48/2
மேல்


ராஜ்யத்து (2)

இறை பரலோக ராஜ்யத்து எழில் நலம் எதிர்வோர்க்கு என்றும் – ஆதி:4 65/1
இ திறம் பரம ராஜ்யத்து இளவரசு ஆய எம்மான் – ஆரணிய:8 48/1
மேல்


ராஜ்யம் (3)

அழுக்காறு புறம் போக்கி வழிபடின் பிந்தினரும் முந்தி அமல ராஜ்யம்
இழுக்காது சென்று அடைவர் முந்தினர் பிந்தினர் ஆவர் இதயத்து ஓர்-மின் – ஆதி:9 90/3,4
ஒப்புரைக்கின்றீர் உணர்-மின் பரலோக ராஜ்யம் இனி உம்பால்-நின்றும் – ஆதி:9 94/2
வந்தது பரம ராஜ்யம் மனந்திரும்புங்கள் என்று – தேவாரம்:11 17/1
மேல்


ராஜ (12)

வேண்டுமேல் தருவல் ராஜ விளம்பரம் வெறுத்திடாதீர் – ஆதி:2 37/4
பொற்புறு ராஜ சேவை பொருந்துவர் புனிதர் ஆவார் – ஆதி:4 64/2
சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/2
திரு மலி ராஜ போகம் தெவிட்டு லாசருவை கண்டான் – ஆதி:9 127/3
கண்டிலிரோ என் நெற்றி கவினும் ஓர் ராஜ சின்னம் – ஆதி:17 27/1
மண்டல நியாய நெறி வல்ல துரை ராஜ
கண்டகன் நிதானி பல காலும் உரையாடி – நிதான:11 32/1,2
ஆதி-தொட்டு அலகை ராஜ பரம்பரை அவனிக்கு உய்த்த – நிதான:11 49/1
குத்திர கலகி ராஜ துரோகி இ கொடியன் காண்டிர் – நிதான:11 53/4
உத்தமர் இருவரும் சென்று உன்னத ராஜ வீதி – ஆரணிய:3 16/1
வினை எதும் இன்றாம் இந்த வித்தக ராஜ வீதி-தனை – ஆரணிய:5 1/2
புனித ராஜ சமுகம்-நின்று போந்து உலாவும் மா தயை – இரட்சணிய:3 24/1
மலிந்திடு ராஜ போகம் வரைந்து இனத்தோடு மோசே – தேவாரம்:11 35/3
மேல்


ராஜ_துரோகி (1)

சொல் தலைநின்று ராஜ_துரோகி ஆயினர் அ எல்லா – ஆதி:7 9/2
மேல்


ராஜத்ரோகம் (1)

புண்ணிய வேந்தியல் சிருஷ்டி ராஜத்ரோகம் பூர்வவழி சுவிசேஷ புனிதமார்க்கம் – பாயிரம்:2 1/3
மேல்


ராஜபோகம் (1)

திருவினன் ராஜபோகம் சிறிது என செருக்கும் போகி – ஆதி:9 123/2
மேல்


ராஜரீக (1)

நித்திய ராஜரீக நிலவு வானகத்தில் என்றும் – ஆதி:7 1/1
மேல்


ராஜவிராஜனுக்கே (1)

இனிது உற்று உலகு ஆட்சிசெய் ராஜவிராஜனுக்கே – ஆதி:5 6/4
மேல்


ராஜன் (7)

அம் பரலோக ராஜன் அணுகி நம் கணக்கை ஆயில் – ஆதி:2 25/3
பாவ நர ஜீவ திரள் நம் பரம ராஜன்
கோவ அனல் பற்றி எரியா வகை குறித்தே – நிதான:2 47/1,2
உள்ளின் ஆய உணர்ச்சி மற்று உன்னத ராஜன்
நள்ளி ரக்ஷணை நல்கிடும் நல் அடையாளம் – ஆரணிய:1 20/1,2
தன் நிகர் இல்லா தற்பர ராஜன் சமுகத்து – ஆரணிய:4 137/3
உன்னத பரம ராஜன் ஒரு திருவோலக்கத்து – ஆரணிய:8 56/1
அம் பரலோக ராஜன் அருள் திருமுன்பு நின்று இங்கு – இரட்சணிய:3 99/1
மீது உயர் கிரியின் சாரல் விழித்தனென் விமல ராஜன்
பாத பங்கயம் பராவி பவித்திர தரிசனத்தை – இரட்சணிய:3 106/2,3
மேல்


ராயன் (2)

வேதியர் அல்லீர் கள்ள உள்ளத்தீர் விபுத ராயன்
ஆதரம் பெற்றீர் என்றற்கு அடையாளம் யாதும் இல்லீர் – ஆதி:17 31/1,2
வள்ளல் குரு ராயன் மன் உயிர்க்காய் தன் உயிரை – குமார:2 309/1
மேல்


ராயனை (2)

வள்ளல் நம் குரு ராயனை சிலுவை மண்மேட்டில் – ஆதி:18 43/1
மேக்கு உயர் பரலோகத்து விபுத ராயனை விளித்த – ஆதி:19 107/1
மேல்


ராவின் (1)

அ தின ராவின் நிசத்தம்-அதாய அரும் காட்சி – குமார:2 419/4

மேல்