மொ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மொண்டு 3
மொத்துண்டு 1
மொய் 1
மொய்த்த 2
மொய்த்தார் 2
மொய்த்து 6
மொய்ப்படு 1
மொய்ம்பது 2
மொய்ம்பதும் 1
மொய்ம்பிற்கு 1
மொய்ம்பின் 1
மொய்ம்பினார் 1
மொய்ம்பினால் 1
மொய்ம்பினாற்கும் 1
மொய்ம்பினை 1
மொய்ம்பினொடு 1
மொய்ம்பினோய் 1
மொய்ம்பு 4
மொய்ம்பு_இலது 1
மொய்ம்பு_உளான் 1
மொய்ம்பு_உளீர் 1
மொய்ம்பும் 2
மொய்ம்புற 1
மொய்ம்பொடே 1
மொழி 86
மொழிக்கு 1
மொழிக்கும் 1
மொழிகள் 1
மொழிகளால் 2
மொழிகளை 1
மொழிகிற்றியால் 1
மொழிகுவார் 1
மொழிச்சியர் 1
மொழிதும் 2
மொழிந்த 2
மொழிந்தவாறு 1
மொழிந்தனன் 1
மொழிந்தான் 2
மொழிந்திடு 1
மொழிந்து 4
மொழிந்தே 1
மொழிபடுவன 1
மொழிய 2
மொழியாம் 1
மொழியார் 1
மொழியால் 3
மொழியாளன் 1
மொழியின் 2
மொழியினால் 1
மொழியினை 1
மொழியும் 4
மொழியே 1
மொழியை 7
மொழிவது 1
மொழிவர் 1
மொழிவரால் 1
மொழிவாம் 1
மொழிவான் 1

மொண்டு (3)

அருள் முகில் கிளம்பி அன்பின் ஆர்கலி அமுதம் மொண்டு
திரு மலி தரு ரக்ஷண்ய திவ்விய சிகரி போர்த்து – ஆதி:4 2/1,2
மொண்டு கற்பனை கவி பொழி முகில் குலம் சிதறி – ஆரணிய:4 39/2
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கி – இரட்சணிய:2 4/2
மேல்


மொத்துண்டு (1)

மொத்துண்டு ஏங்கி கை_கால் முறிபட்டு உயிர் – ஆரணிய:4 65/2
மேல்


மொய் (1)

மொய் ஆர் அளி இன் இசை முற்றிய ஓர் – நிதான:4 1/3
மேல்


மொய்த்த (2)

மொய்த்த யந்திரசாலையும் முறை நெறி பிறழ – நிதான:7 41/2
மொய்த்த பாபாந்தகாரம் முற்றிலும் விடியும் அன்றே – ஆரணிய:8 48/4
மேல்


மொய்த்தார் (2)

வீதி இரு மருங்கும் மொய்த்தார் வாய்விட்டு அழுது – குமார:2 316/4
வைத்த மா நிதி கண்டார் போல் வரன்முறை குழுமி மொய்த்தார்
உத்தம தொழும்பர் அன்றோ உயிர் துணை உலகுக்கு அம்மா – ஆரணிய:5 40/3,4
மேல்


மொய்த்து (6)

மூசி மற்று அதன் எழில் முருக்கி மொய்த்து எழு – ஆதி:14 29/1
ஈயல் போல் மொய்த்து இரைத்து எழுந்தார் அரோ – ஆதி:14 167/4
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/3
மன்று அலர்ந்து அளி மொய்த்து மது சொரிந்து – நிதான:7 83/2
சிறை அளி முரன்று மொய்த்து அருந்தி தேக்குறல் – ஆரணிய:4 23/2
மொய்த்து எழும் அகண்டாகார முழு சுடர் பிழம்பின் முந்து – ஆரணிய:5 84/1
மேல்


மொய்ப்படு (1)

மொய்ப்படு நும் முனம் முறையில் தேர்ந்தனன் – குமார:2 235/2
மேல்


மொய்ம்பது (2)

முன் உறும் இருள் சிறை படுக்கும் மொய்ம்பது
மன் உறு வழி கடைப்பிடித்த மாந்தர்க்கும் – ஆதி:12 27/2,3
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/4
மேல்


மொய்ம்பதும் (1)

முதிரும் மெய் விசுவாசத்தின் மொய்ம்பதும் – குமார:2 12/4
மேல்


மொய்ம்பிற்கு (1)

மூள் அனல் என சினம் முதிர்ந்து இறைவன் மொய்ம்பிற்கு
ஏளனம் உற பதிதர் என் சொலினர் என்னா – நிதான:11 31/2,3
மேல்


மொய்ம்பின் (1)

முத்தி அரசற்கும் அவர் மொய்ம்பின் மகிமைக்கும் – நிதான:2 53/1
மேல்


மொய்ம்பினார் (1)

நல் முறை வளர்த்தினார் நலம் கொள் மொய்ம்பினார் – குமார:2 408/4
மேல்


மொய்ம்பினால் (1)

ஆர்வம் மிக்கு உடைய மெய் அடியர் மொய்ம்பினால்
வார் விழி புனல் உக வாரி பெய்தனர் – குமார:2 409/1,2
மேல்


மொய்ம்பினாற்கும் (1)

நம்பிக்கை என்னும் நாம நலம் திகழ் மொய்ம்பினாற்கும்
பைம்பொனின் ஆடை சார்த்தி பல் மணி கலன்கள் பூட்டி – இரட்சணிய:3 99/3,4
மேல்


மொய்ம்பினை (1)

மூண்டு எழும் கிருபை செயல் மொய்ம்பினை
காண்டல் செய்வர் அங்கை படு நெல்லியில் – நிதான:5 63/1,2
மேல்


மொய்ம்பினொடு (1)

முருக்கும் அலகைக்கு இறைவன் மொய்ம்பினொடு தங்கும் – ஆதி:13 23/3
மேல்


மொய்ம்பினோய் (1)

முனைவன் நாடடை மொய்ம்பினோய் – ஆதி:14 206/4
மேல்


மொய்ம்பு (4)

முடங்கு உளை அரியின் மும்மடங்கு மொய்ம்பு_உளான் – நிதான:2 7/1
மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி – நிதான:2 50/4
முன் முன் உற சென்றனர் ஆர்_அருள் மொய்ம்பு குன்றி – ஆரணிய:4 113/4
முனைவனை பராய் விதேக முத்தியுற்ற மொய்ம்பு_உளீர் – இரட்சணிய:3 27/3
மேல்


மொய்ம்பு_இலது (1)

மும்மை உலகுக்கு எனினும் மொய்ம்பு_இலது காண்டி – நிதான:2 50/4
மேல்


மொய்ம்பு_உளான் (1)

முடங்கு உளை அரியின் மும்மடங்கு மொய்ம்பு_உளான்
கடம் கலுழ் கறையடி காலன் காழ்படும் – நிதான:2 7/1,2
மேல்


மொய்ம்பு_உளீர் (1)

முனைவனை பராய் விதேக முத்தியுற்ற மொய்ம்பு_உளீர்
நினை-மின் ஈண்டு யாம் சொல் வாசகம் எனா நிகழ்த்துவார் – இரட்சணிய:3 27/3,4
மேல்


மொய்ம்பும் (2)

முத்தி கூடிய அரும் தவன் பத்தியின் மொய்ம்பும்
சுத்த மெய் விசுவாசமும் சுகுணமும் துகள்_இல் – ஆரணிய:1 1/1,2
எஞ்சா மரணத்து இருள் சூழல் புக்கு ஈண்டு மொய்ம்பும்
விஞ்சு ஆரணனை விலகி தனி விட்ட மாதோ – ஆரணிய:4 114/3,4
மேல்


மொய்ம்புற (1)

முடிந்தது குவலயத்து இரக்ஷை மொய்ம்புற
முடிந்தது ஜீவியம் முழுதும் என்பவே – குமார:2 385/3,4
மேல்


மொய்ம்பொடே (1)

முற்றும் நாடி முன் செல்வர் இ மொய்ம்பொடே – ஆரணிய:6 56/4
மேல்


மொழி (86)

வண்ணவான் மொழி சுவை அமிர்து வார்ந்து உக – ஆதி:3 2/4
கூர் நுதி கொழு எம் பெம்மான் திரு_மொழி கூறது ஆக – ஆதி:4 13/3
செல் என்று ஆண்டகை திகழ்த்திய செம் மொழி செவியில் – ஆதி:8 23/1
மொழி வழி போனகம் முறையின் ஊட்டு-மின் – ஆதி:9 39/2
நிறை மொழி குரவனை நிருமித்தார் அரோ – ஆதி:9 41/4
பழுது_இலா மொழி இது பார்த்தியோ என – ஆதி:9 170/2
புனையும் நல் மொழி புகன்று எனை தெருட்டிய புலவோய் – ஆதி:11 16/2
முதிய சீனாய் என மொழி பெயர்த்தது – ஆதி:12 30/4
புரவலன் அருள் மொழி புகட்ட வல்ல ஓர் – ஆதி:12 38/1
உற்ற இ மொழி வழி உயிர் வந்துற்று என – ஆதி:12 49/1
எள்ளளவும் பயன் இலை மற்று என் மொழி
உள்ளவாறு என்பதற்கு உயர்ந்த வானமும் – ஆதி:12 62/2,3
நீதி ஆதிபர் நிண்ணயர் தம் மொழி
பேதியார் நம் பிரான் என பேசியும் – ஆதி:12 81/1,2
கல்லெறி கடும் சிறை கசப்பு மொழி கட்கம் – ஆதி:13 43/1
சோகம் அற நல் மொழி தொகுத்து இனைய கூறி – ஆதி:13 56/1
அகத்து இருள் இரிந்து ஓட அருள் மொழி சுடர் ஏற்றி – ஆதி:14 209/1
மார்க்கம் இங்கு எதுவானாலும் மனம் மொழி மெய்களாலே – ஆதி:17 8/1
மறப்ப_அரும் நல் மொழி வழங்கி வாழ்த்தினார் – குமார:1 26/3
பூசனை மொழி சில புகன்று என் அன்னைமீர் – குமார:1 39/3
மொழி சுவிசேஷகன் முடுக்கினான் என்றான் – குமார:1 43/4
பச்சை பூகம்-நின்று எழு குல குயில் மொழி பாவாய் – குமார:1 65/1
கூவா அகந்தை மொழி சிற்சில குரைத்து – குமார:2 139/3
காண்தகைய வேத மொழி மெய்ம்மை கவினும்-கொல் – குமார:2 143/4
புன்_மொழி பலவாறாக புகன்றனர் வெகுளி பொங்கி – குமார:2 182/4
இத்தகு திரு_மொழி எம்மை ஆளுடை – குமார:2 251/1
நிந்தனை மொழி திரு_செவி நிறைந்தன – குமார:2 269/1
நோதக ஒரு மொழி நுவலுவார்_அலர் – குமார:2 271/2
சொல்லாத நிந்தை மொழி சொல்லி துணிந்து இயற்றும் – குமார:2 305/3
மாண்டுபடும் போது இவர்க்கு மன்னியும் என்று உரைத்த மொழி
ஈண்டு இவரே உலகினுக்கு ஓர் இரக்ஷகர் என்று எடுத்துரைக்கும் – குமார:2 344/2,3
குணம் காணா கொடு மனத்தர் கூறிய தீ மொழி ஒன்றோ – குமார:2 347/2
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
வாயில் சிறந்த மொழி காட்டும் இ மாண்பை ஓர்தி – குமார:2 357/4
சொற்றார் சுருதி மொழி முன் உற சொற்றவாறே – குமார:2 371/4
செம் மொழி பகர்ந்து மறையோய் சிறிது போழ்து – குமார:4 2/3
ஞானம் மிகு தீர்க்க மொழி காட்டினள் ஓர் நாரி – குமார:4 12/4
இ திறமது அங்கி அரி அம்பு மொழி கேட்டும் – குமார:4 15/1
உத்தம மொழி திறமும் உணந்து மறைவாணன் – குமார:4 15/2
பண் கவரும் மொழி மாதர் பலர் குழுமி பணிந்து ஏவ – குமார:4 17/2
நன் மொழி நறை கமழ் நந்தனத்தது – நிதான:1 7/3
தெருண்டிலர் என் மொழி செகுக்கப்பட்டனர் – நிதான:2 32/2
மடுத்த வாய்-தொறும் புலைப்படு மொழி புகை மலிவ – நிதான:2 80/3
இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல – நிதான:3 59/1
இச்சக மொழி இனிது இசைக்கும் ஏந்து_இழை – நிதான:4 15/3
அணி கிளர் திரு_மொழி அது மற்று என்பவே – நிதான:4 21/4
ஓர் அணி படு மொழி கூறல் மேயினான் – நிதான:4 26/4
திருட்டு வாய் பழக்க மொழி திறம் கண்டு திகைத்தனை நீ – நிதான:5 21/3
இன் இசை வாய் மொழி மதுரம் இதயம் எட்டிக்கனி ஆமால் – நிதான:5 22/4
வஞ்ச மொழி குகை வாயில் வதிந்திருக்கும் மறை வசனம் – நிதான:5 30/1
அருள்வசத்தால் மனம் மொழி மெய் ஆன்ம_சுத்தி அடைந்து அன்றி – நிதான:5 37/1
செய்யும் வினை ஒன்றாக செப்பும் மொழி பிறிது ஒன்றா – நிதான:5 38/1
விரத மா தவத்தோய் நின் விழு தகு சீர் மொழி ஆய – நிதான:5 40/1
செப்பு மொழி திறம் அன்றி செய்கை நலம் படையாத – நிதான:5 41/1
பசப்பிய வீண் அலப்பு மொழி பாரித்த மதுரம் எலாம் – நிதான:5 42/3
செய்ய வாய் மொழி போல நின் செய்கையும் – நிதான:5 77/3
கத்து வாய் மொழி மட்டில் கனிந்ததோ – நிதான:5 78/2
மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/3
ஆரண பயன் உள் கொள்ளாது அருள் மொழி அலப்பி கூறி – நிதான:5 88/2
மை_அறு தேவ பத்தி வாய்_மொழி வகுக்கும் போதே – நிதான:5 90/2
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார் – நிதான:6 3/2
அந்தணாளனும் இனிது கேட்டு அருள் மொழி வகுப்பான் – நிதான:6 4/4
கோடிகோடி தொகுப்பன கோள்_மொழி – நிதான:7 86/2
பொய் துறு வசை மொழி புகன்று போர்த்தனர் – நிதான:10 11/2
மறந்து ஒரு கொடு_மொழி வழுத்துவார்_அலர் – நிதான:10 42/3
வரும் அவமதிப்பு பொன் பூண் வசை_மொழி மதுர கீதம் – நிதான:10 54/2
சொன்ன துஷ்கிருதன் வாய் மொழி செவித்தொளை புக – நிதான:11 15/1
மறை மொழி உணவு மன்றாட்டு உறக்கமா – ஆரணிய:4 6/3
மொழி தடுத்தனன் பற்றினன் மோசமும் – ஆரணிய:4 70/3
திருந்து நம்பிக்கை செம் மொழி தேனொடு சேர்ந்த – ஆரணிய:4 160/1
மகத்துவ தெய்வ வேந்தை மனம் மொழி ஆர வாழ்த்தி – ஆரணிய:4 165/2
கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில் – ஆரணிய:5 8/2
நிறை மொழி தெருண்டு செய்யும் நித்திய கருமம் முற்றி – ஆரணிய:5 63/3
பேதியாது அருள் மொழி மொழி பெற்றியும் பிறவும் – ஆரணிய:6 31/2
பேதியாது அருள் மொழி மொழி பெற்றியும் பிறவும் – ஆரணிய:6 31/2
இங்கித வாய் மொழி சந்தன சீதளம் இணையேனும் – ஆரணிய:7 16/2
மாய இச்சக வாய் மொழி மதித்த பேதைமையும் – ஆரணிய:7 29/2
கை திகழ்ந்த மெய் திரு_மொழி அகத்து உளே கவின – ஆரணிய:8 29/3
முன்னிலைப்பட்டது என் நா மொழி திறன் அறியேன் ஆகி – ஆரணிய:8 75/2
புரை_அறு புண்ணிய புனித தே மொழி
கரை_அறு கபட்டு இருதயத்தின் கள்ளத்தை – ஆரணிய:9 52/1,2
பூரிய வாய் மொழி புலப்படுத்துமால் – ஆரணிய:9 76/3
மனம் மொழி மெய்களின் வணங்கி வாழ்த்தியும் – ஆரணிய:9 80/3
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான் – ஆரணிய:10 8/4
புனிதர் வாய் மலர் பொழிதரு புது மொழி தேன் போல் – இரட்சணிய:1 18/2
நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/3
முகம்கொடார் ஆகி தம் மான் மொழி வழி முறையில் பற்றி – இரட்சணிய:3 92/3
மூவாத முதலவனை முது சுருதி மொழி பொருளை – தேவாரம்:4 5/1
சுகிர்தம் ஆர்தரு மொழி சுருதி வான் சுடர் – தேவாரம்:7 10/2
தெருள் பழுத்த ஜீவ_மொழி கனி வாயானை ஜென்ம விடாய் தணித்து அருள் சீர் பாதத்தானை – தேவாரம்:8 3/2
மேல்


மொழிக்கு (1)

தென்புலம் திகழ்த்தி நிற்கும் செந்தமிழ் மொழிக்கு சான்றா – இரட்சணிய:3 14/3
மேல்


மொழிக்கும் (1)

மொழிக்கும் நாணலை முன்பின் உற்று ஆய்ந்திலை முற்றும் – குமார:2 288/2
மேல்


மொழிகள் (1)

நல் நய மொழிகள் பேசி நடப்பது எத்தனைக்கு நன்று என்று – நிதான:3 61/3
மேல்


மொழிகளால் (2)

நன்னய மொழிகளால் திருத்த நாடினான் – குமார:2 239/2
மெய் திகழ்ந்த முன் மொழிகளால் விளங்கிட அறிந்தேன் – இரட்சணிய:2 33/4
மேல்


மொழிகளை (1)

துறை-தொறும் புகழ் நச்சி வீண்_மொழிகளை தொகுத்து – ஆதி:9 57/1
மேல்


மொழிகிற்றியால் (1)

முற்று அறிந்தனை போல் மொழிகிற்றியால் – நிதான:5 80/4
மேல்


மொழிகுவார் (1)

முன் உற இருந்து இவை மொழிகுவார் அரோ – குமார:1 36/4
மேல்


மொழிச்சியர் (1)

பண் ஆடு மொழிச்சியர் தாம் வேதாந்த பளிங்கு நிலைக்கண்ணாடி – குமார:4 47/1
மேல்


மொழிதும் (2)

முன் துன்னும் மலைக்காட்சி முறை நாளை மொழிதும் எனா – குமார:4 45/2
முத்தி ராஜ்ஜியத்தை உற்ற முறைமையை மொழிதும் அன்றே – இரட்சணிய:2 1/4
மேல்


மொழிந்த (2)

முத்திநகரத்து இறை மொழிந்த திரு_வாக்குத்தத்த – குமார:4 9/3
பனவன் வாய் மொழிந்த செம் சொல் பாகினை பருகி ஆயர் – ஆரணிய:5 61/1
மேல்


மொழிந்தவாறு (1)

முன்னவை மொழிந்தவாறு எனக்கு மூள்வன – குமார:2 29/3
மேல்


மொழிந்தனன் (1)

முற்று அறி கடவுள் சொல்லே மொழிந்தனன் முனிவாய்_அல்லை – நிதான:5 95/2
மேல்


மொழிந்தான் (2)

முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில் – ஆதி:9 82/4
மூண்ட போது இவர் நிலைமை என்னாம் என மொழிந்தான் – ஆரணிய:2 79/4
மேல்


மொழிந்திடு (1)

சான்று என மொழிந்திடு தருணம் தம்பிரான் – ஆதி:12 63/1
மேல்


மொழிந்து (4)

முன்னரே சுகமுண்டாகும் என்று இனம் மொழிந்து போனார் – ஆதி:2 12/4
நல் இயல் மொழிந்து உயிர் விடுத்தனன் ஓர் நம்பன் – ஆதி:13 40/4
நன்று மொழிந்து அடர் சுமையால் நலிவு எய்தி தளர்ந்து ஏக – குமார:2 334/2
மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை – நிதான:4 93/3
மேல்


மொழிந்தே (1)

அடுக்குந எலாம் அறியும் ஆண்டகை மொழிந்தே – குமார:2 134/4
மேல்


மொழிபடுவன (1)

மொழிபடுவன இ பாங்கர் உத்தேச முறைமைத்து ஆமால் – இரட்சணிய:2 17/4
மேல்


மொழிய (2)

முருந்து உறழ் மூரலாள் மொழிய முற்று உளம் – குமார:1 41/1
இன்னணம் நடுவர் பன்னிருவரும் மொழிய
என் ஒரு துணிபு மற்று இது என நுவலா – நிதான:11 69/1,2
மேல்


மொழியாம் (1)

காலை துதியோடு எழுந்திருந்து கடவுள் மொழியாம் களங்கம்_அற்ற – நிதான:9 72/1
மேல்


மொழியார் (1)

மாம் தண்டலை குயிலின் மென்_மொழியார் மாழ்கினார் – குமார:2 317/4
மேல்


மொழியால் (3)

பேதம்_அற்று ஒன்றாய் நாம் இருத்தலை போல் பேசும் இ தொண்டர் வாய் மொழியால்
பூதல மாந்தர் என்னை நீர் விடுத்த புதுமையை புகர்_அற உணர்ந்து – குமார:2 60/1,2
பொருள் உணரா வறு_மொழியால் புநர்_உலகில் பெறல்_அரிய – நிதான:5 37/2
புனையும் நல் மொழியால் பிழை பொறுக்க என புகன்று ஈண்டு – ஆரணிய:1 8/3
மேல்


மொழியாளன் (1)

விஞ்ச விளைக்கும் வாய் மொழியாளன் வினை பொல்லான் – ஆரணிய:7 4/2
மேல்


மொழியின் (2)

வள்ளல் நின் மொழியின் நான்மறை புலப்படும் வழி – ஆதி:14 13/2
மொழியின் யான் அலது இன்று இதை முன்னு-மின் – குமார:2 18/4
மேல்


மொழியினால் (1)

வஞ்சம் மல்கு வாய் மொழியினால் புதைபட மறைப்பார் – நிதான:7 51/4
மேல்


மொழியினை (1)

கரவு_இலாத அ மொழியினை கழறுவல் கேள் நீ – ஆரணிய:6 17/4
மேல்


மொழியும் (4)

முத்திநகர் என திகழ்த்தி முதிய திரு_அருள் சுருதி மொழியும் அன்றே – ஆதி:4 30/4
மொழியும் பல் வகை மோசங்கள் முன் உள – ஆதி:19 57/1
துன்னும் இடருக்கு அலசாமே உண்மை மொழியும் துணிவு உள்ளார் – குமார:2 196/4
பேசிய மொழியும் நெஞ்சில் பிறங்கிட தீட்டி வைத்தார் – ஆரணிய:5 91/3
மேல்


மொழியே (1)

மின் ஆரும் படைக்கலம் போல் விளங்கும் நினது அருள் மொழியே – குமார:4 41/4
மேல்


மொழியை (7)

வம்பு மொழியை புரி உபாதியை மதிக்காது – ஆதி:13 42/2
அனவரதமும் திரு_மொழியை அன்பினால் – குமார:2 96/1
ஏந்து_இழை இச்சக மொழியை என் மனம் – நிதான:4 20/3
செம்மை மொழியை கருத்து இருத்தி தெய்வ பதரை சீத்துவிட்டு – நிதான:9 9/3
சொல்லால் பொருளால் பழுது_இல்லா சுருதி மொழியை கருத்து இருத்தி – நிதான:9 52/3
முன் செலும் பரதேசிகள் சுருதி நூல் மொழியை
பொன் சொலாம் என போற்றுவர் பிற உரை போற்றார் – ஆரணிய:2 41/1,2
இச்சக மொழியை நம்பாதிரும் என வற்புறுத்தி – ஆரணிய:5 89/1
மேல்


மொழிவது (1)

முகத்து எழில் குலவி நம்பி கேள் என மொழிவது ஆனான் – ஆரணிய:4 165/4
மேல்


மொழிவர் (1)

முன்னர் தோன்றி மொழிவர் முறைமையால் – இரட்சணிய:1 79/4
மேல்


மொழிவரால் (1)

மொழிவரால் அருள் ஞான நூல் முறை உணர் முதியோர் – ஆரணிய:2 73/4
மேல்


மொழிவாம் (1)

முன் பிரார்த்தனை செய்த பின் நிகழ்ந்ததை மொழிவாம் – குமார:2 73/4
மேல்


மொழிவான் (1)

என் உளத்து உணர்வு எழுந்தது என எண்ணி மொழிவான் – நிதான:4 90/4

மேல்