மி – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மிக்க 23
மிக்கது 3
மிக்கன 1
மிக்கார் 1
மிக்கான் 2
மிக்கு 21
மிக்கு_உளான் 1
மிக்குற 1
மிக்குறு 1
மிக்கோய் 1
மிக்கோர் 1
மிக 27
மிகவும் 1
மிகவே 1
மிகு 22
மிகுத்த 1
மிகுத்ததாலே 1
மிகுத்தலின் 1
மிகுத்திடினும் 1
மிகுத்து 1
மிகுதி 1
மிகுதியாலே 1
மிகும் 5
மிகை 1
மிகைத்த 1
மிச்சில் 3
மிசை 37
மிசைகுதிர் 1
மிசையாராய் 1
மிசையே 1
மிசைவர் 1
மிடல் 1
மிடற்று 3
மிடறு 2
மிடி 5
மிடிப்படல் 1
மிடியன் 1
மிடுக்கர் 1
மிடுக்கினில் 1
மிடுக்கு 1
மிடுக்குறும் 1
மிடை 1
மிடைந்த 2
மிடையாத 1
மிடைவன 4
மிண்டர் 1
மிண்டருக்கு 1
மிண்டனுக்கு 1
மித்தியம் 1
மித்திர 5
மித்திர_பேதம் 2
மித்திரத்துவம் 2
மித்திரம் 1
மித்திரர் 1
மித்திரரை 1
மித்திரை 1
மித்துருத்துவம் 1
மித்தை 6
மித்தையின் 1
மித்தையை 2
மிதப்பவேயாம் 1
மிதி 1
மிதி_கொம்பும் 1
மிதித்து 3
மிதிப்பாய் 1
மிதிப்பாய்_அலை 1
மிதிபட்டு 1
மிதுன 1
மிருத்தாம் 1
மிருத்திகேயன் 1
மிருத்து 2
மிருத்துவா 1
மிருத்துவின் 1
மிருத்துவை 1
மிருத்தொடு 1
மிலேச்சர் 1
மிலை 1
மிலைச்சி 1
மிலைச்சுவல் 1
மிலைந்து 1
மிலைவல் 1
மிழற்ற 1
மிழற்றி 1
மிழற்று 1
மிளிர் 6
மிளிர்ந்த 2
மிளிர்ந்து 4
மிளிர்வ 2
மிளிர்வது 1
மிளிர்வன 6
மிளிர 2
மிளிரும் 3
மின் 16
மின்-கொலோ 1
மின்மினி 1
மின்மினிகளே 1
மின்மினியாம் 1
மின்மினியின் 1
மின்னல் 2
மின்னார் 2
மின்னி 3
மின்னிடும் 1
மின்னின் 1
மின்னையும் 2
மினுக்கியும் 1
மினுக்கு 2

மிக்க (23)

பாச வெவ் வினையின் மிக்க பாரத்தால் அழுந்தும் யாரே – ஆதி:2 48/2
கோபமும் பகையும் இல்லை குணதோஷம் இல்லை மிக்க
ஆவலும் இல்லை பூருவாச்சிர மத்தர்க்கு அம்மா – ஆதி:6 11/3,4
ஆவல் மிக்க தம் ஒரு சுதன் அரசவை அகன்று – ஆதி:9 12/1
மிக்க சம்பத்து ஒரு தலைவன் செழித்து ஓங்கு முந்திரிகை வியன் புலத்தை – ஆதி:9 93/1
நேயம் மிக்க சஹாயன் என்று உரைபெறும் நெடியோன் – ஆதி:11 28/4
செற்றம் மிக்க அ செறுநரை செறுத்திடார் தியங்கி – ஆதி:14 81/2
மிக்க நல் மணி திரட்டி நம் மேல் நிலைய சேர் – ஆதி:14 186/3
வெம்மை மிக்க பல் வேதனை விடயங்கள் எதுவும் – குமார:1 74/2
மிக்க அன்புடையராய் விளங்குவீர் எனில் – குமார:2 39/3
அனகனும் அன்பின் மிக்க அடியரும் ஆண்டு புக்கார் – குமார:2 99/4
ஒறுத்திடும் மதுகை மிக்க உரன்_உடையாளன் உள்ளம் – குமார:2 191/3
மிக்க சம்பத்து_உளான் யூத வேதியர் – குமார:2 402/1
மிக்க பேர்_அதிசயத்தொடு மேலுற நோக்கி – குமார:2 485/1
வஞ்சம் மிக்க மாயாபுரி மறுகை ஊடறுத்து – நிதான:6 20/2
வஞ்சம் மிக்க மாயாபுரி மரபு உரைக்க என்னா – நிதான:7 2/3
மிக்க சம்பத்து உரிமை மனை விரும்பும் மக்கள் கிளைஞர் உற – நிதான:9 66/1
பண்டு மிக்க சம்பத்து அபிராம் படைத்ததுவும் – ஆரணிய:2 49/1
பாழி அம் புவியின் மிக்க பாவியேன் புரந்த அன்பு என்று – ஆரணிய:8 64/3
மேதினியினூடு அலைதல் மிக்க நலம் அன்றோ – ஆரணிய:10 14/4
மிக்க பேர்_இன்ப வீட்டு உலகு எய்துவீர் – இரட்சணிய:1 83/4
காயமோடு நாற்றம் மிக்க கந்தையை களைந்து நல் – இரட்சணிய:3 21/1
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/2
மிக்க பேர்_இன்ப வீடும் நம் கிறிஸ்து யேசுவை விசுவாசிக்கில் – தேவாரம்:1 1/2
மேல்


மிக்கது (3)

கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது
மலைவுறு துன்ப நோய் மலிய பெற்றது – ஆதி:10 11/2,3
எஞ்சுறாத துர்_நாற்றம் மிக்கது புறம் எங்கும் – ஆதி:11 43/4
பாழி அம் குவடு ஒரு பத்து மிக்கது
தாழ் இரும் பொறை நனி சமழ்த்தலால் திரை – ஆதி:12 24/2,3
மேல்


மிக்கன (1)

நாயகத்துவங்களில் நாற்றம் மிக்கன
ஆய காமியம் அருவருக்கலாயின – நிதான:10 20/3,4
மேல்


மிக்கார் (1)

அன்பிற்கும் உண்டோ யாண்டும் அடைக்கும் தாழ் ஆர்வம் மிக்கார்
புன் கணீர் பொசிந்து போந்து பூசலை தரும் மற்று என்னா – இரட்சணிய:3 14/1,2
மேல்


மிக்கான் (2)

போனக ஞான பானம் துய்த்தனன் புலமை_மிக்கான் – நிதான:3 1/4
சொல்லாடல் இன்றி வறிது ஏகினன் சூழ்ச்சி_மிக்கான் – ஆரணிய:4 116/4
மேல்


மிக்கு (21)

பேய்கொண்டான் என்பர் ஏது பிறிது இலை பித்தம் மிக்கு
நோய்கொண்ட கோலம் என்பார் நுனித்திடும் மதி_அற்று இன்ன – ஆதி:2 43/2,3
உள் நிறை அன்பு மிக்கு ஒழுகிற்று என்னவே – ஆதி:3 2/3
ஆர்வம் மிக்கு நல் நெறிப்படுவோர் சுமக்க_அரிய – ஆதி:8 30/2
வெம் கொடும் பருக்கள் மிக்கு வேதனை உழக்கும் நீரான் – ஆதி:9 124/4
உரும் இனம் முழுக்க மிக்கு உரறும் கோட்பது – ஆதி:12 25/2
மிக்கு உரத்து இறை அருள் பராமரிப்பினை வியந்தான் – ஆதி:18 34/4
ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த – குமார:2 81/3
ஆர்வம் மிக்கு உடைய மெய் அடியர் மொய்ம்பினால் – குமார:2 409/1
வருமம் மிக்கு உரத்த பேயை வன் சிறை படுத்தி மீண்டும் – குமார:2 438/2
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன் – குமார:4 50/1
விடம் கவிழ் அரவு என சீற்றம் மிக்கு_உளான் – நிதான:2 7/4
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு
ஆடவர் உயிர் சுவை அறிந்த கூற்று அரோ – நிதான:4 16/3,4
மிக்கு உரத்து ஓர் அடி அடித்து வீழ்த்தினான் – நிதான:4 41/4
நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி – நிதான:5 2/3
பித்தம் மிக்கு அவித்தை மூடி பிரபஞ்சத்து உழலும் மாந்தர் – நிதான:5 12/2
ஓவு_இல் பல் பெரும் துன்பம் மிக்கு உடற்றினும் உருத்து – நிதான:6 29/1
வெவ் வாய் அரக்கன் வழும்பு ஊன் முடை மிக்கு நாறி – ஆரணிய:4 118/2
மிக்கு வழுக்கி இழுக்கியும் – ஆரணிய:6 43/2
இலகும் ஆத்தும நேசர்-பால் ஆசை மிக்கு ஏங்கி – இரட்சணிய:1 46/2
உத்தமம் திகழ் அன்பு மிக்கு உயிர்க்குயிர் ஆய – இரட்சணிய:1 48/1
மேல்


மிக்கு_உளான் (1)

விடம் கவிழ் அரவு என சீற்றம் மிக்கு_உளான் – நிதான:2 7/4
மேல்


மிக்குற (1)

காயம் மிக்குற நடுங்கியும் கலங்கியும் கவன்றும் – ஆரணிய:8 7/2
மேல்


மிக்குறு (1)

மிக்குறு பரமானந்த விம்மிதர் ஆகி ஏத்தி – இரட்சணிய:3 97/2
மேல்


மிக்கோய் (1)

புன்னகை கோட்டி என்-கொல் மருண்டனை புலமை மிக்கோய்
பன்னுவல் கேட்டி என்ன பகருவான் பனவன் மாதோ – நிதான:5 20/3,4
மேல்


மிக்கோர் (1)

பொறுத்திடும் பொறையை அன்றோ பொறை என்பர் புலமை மிக்கோர் – குமார:2 191/4
மேல்


மிக (27)

வெரிந் உறீஇ அமிழ்த்த ஆற்றேன் மிக மெலிந்து அயர்ந்தேன் மேலும் – ஆதி:2 9/2
செய் படு களை மிக தேம்பு சாலியை – ஆதி:9 29/3
மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான் – ஆதி:9 115/2
ஏறு சுமையால் மிக இளைத்தனன் எனக்கு ஓர் – ஆதி:13 53/2
மிக தெருட்டினை ஐய விள்ளுவது அறியேனே – ஆதி:14 209/4
வேத சாகையின் இறால் இழி மிக மதுரிக்கும் – ஆதி:18 33/2
வஞ்சம் இல் மறைவாணன் மனம் மிக மறுகுற்று – ஆதி:19 14/3
நிலவியல் உடையார் மிக பகைக்கின்றார் நெருங்கு பொல்லாங்கின்-நின்று என்றும் – குமார:2 58/3
விலகி மெய்ந்நெறியில் வழுவுறாது இவரை காத்து அருள் மிக தர வேண்டும் – குமார:2 58/4
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/2
வேண்டினேன் என இரந்து வேண்டினான் மிக விரும்பி – குமார:2 353/4
நிதி மிக படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து – நிதான:4 94/3
மேதக ஜெயம் கொண்டனிர் மிக மகிழ்சிறந்தேன் – நிதான:6 5/3
காணாது ஒழிய மரணம் மிக கடுகி வருதல் கண்டிருந்தும் – நிதான:9 77/2
செம் மன_கரி மிக சினவி நின்று உயிர் தெறும் – நிதான:11 13/3
மீண்டு பற்றல் மிக கடினம் என – ஆரணிய:4 98/3
வேதனை ஆற்றான் வேதியன் உள்ளம் மிக நொந்து – ஆரணிய:4 128/1
நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம் – ஆரணிய:4 149/3
மிக துதி பகர்ந்து போற்றி மெய் எலாம் புளகம் போர்ப்ப – ஆரணிய:4 165/3
மிக தெருண்ட மெய் உணர்ச்சியின் விதந்து உரையாடி – ஆரணிய:7 31/3
மிக தெருண்டு எழு முறைமையை விள்ளுவல் கேட்டி – ஆரணிய:8 24/4
நன்று மிக நன்று என நம்பிக்கையும் நடந்தான் – ஆரணிய:9 114/3
நேசம் ஆற்ற அரிதாய் மிக நெட்டுயிர்ப்பு எறிவாள் – இரட்சணிய:1 45/4
மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே – இரட்சணிய:2 18/2
கோது ஆர் குணக்கேடன் மிக கொடியன் கொடும் பாவி – தேவாரம்:10 8/1
விருப்பொடு அங்கு அவரை வாரிதி மணல் போல் மிக செய்யும் விந்தையாய் போற்றி – தேவாரம்:11 6/2
மேல்


மிகவும் (1)

மெய்ப்படு சுக நிலை மிகவும் சேய்த்து என – ஆதி:14 50/2
மேல்


மிகவே (1)

காதலொடு புகழ்வர் நனி களிப்பு மிகவே – நிதான:4 83/4
மேல்


மிகு (22)

குற்றம் மிகு சோகநிலம் அறிவீனற்கு கூறும் முறை நிலைகேடன் தருமக்ஷேத்ரம் – பாயிரம்:2 3/3
மெய்யறிவு மெய்ஞ்ஞானம் மிகு செல்வம் சொல்வன்மை மேம்பாடு ஆதி – ஆதி:9 103/1
சாலமே மிகு தருமாபுரிக்கு வந்து – ஆதி:12 52/1
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த – ஆதி:14 151/2
விஞ்சா நின்ற தூக்கம் விளைத்தான் மிகு சோம்பன் – ஆதி:16 19/4
வன்மை மிகு துன்பம் மனக்கவலை துக்கம் எனும் – ஆதி:19 5/3
பாச வெவ் வினை மிகு பாரம் ஆயிற்றால் – குமார:1 42/4
வரம் மிகு சாக்கிரமெந்தின் முன்னது ஞானஸ்நானம் மற்றொன்று இந்த – குமார:2 51/3
வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள – குமார:2 112/1
சால மிகு தீ அலகை தன் எணம் முடிக்கும் – குமார:2 147/2
சீலம் மிகு ஜீவபதி சேவடி பழிச்சி – குமார:3 21/3
ஞானம் மிகு தீர்க்க மொழி காட்டினள் ஓர் நாரி – குமார:4 12/4
வன்மை மிகு வெம் சமம் அலைத்திடுதல் போலாம் – நிதான:2 62/3
வேறு இனி காலம் தாழ்த்தல் மிகு பிழை என்று வல்லே – நிதான:3 70/3
நேயம் மிகு மெய் பத்தியுடன் நினைத்து வழுத்தும் ஜெகத்தீரே – நிதான:9 11/4
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
சஞ்சலம் மிகு சந்தேக துருக்கத்தை தணந்து போக – ஆரணிய:4 167/3
நாடு அகம் மிளிர்வன நனி மிகு தருமம் – ஆரணிய:5 17/1
பாரம் மிகு பாவ உணர்வு உண்டு பயம் உண்டு என்று – ஆரணிய:9 105/2
புகல்_அரும் கடவுள் வேந்தன் புகழ் மிகு புனித ஞான – இரட்சணிய:3 7/1
கதி மிகு சிறப்பு பெற்ற காவலர் பலர் எம் கர்த்தர் – இரட்சணிய:3 103/1
கொற்றமொடு இஸரேல் வளம் மிகு கானான் குடிபுக அருளினாய் போற்றி – தேவாரம்:11 8/4
மேல்


மிகுத்த (1)

மேதை_அற்ற விவேகம் மிகுத்த ஓர் – ஆதி:12 68/1
மேல்


மிகுத்ததாலே (1)

வெய்தாம் பசி தாகம் விரோதம் மிகுத்ததாலே
நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய் – ஆதி:12 6/3,4
மேல்


மிகுத்தலின் (1)

உள்ளம் வேம் உதராக்கினி மிகுத்தலின் ஓடி – ஆரணிய:4 36/3
மேல்


மிகுத்திடினும் (1)

விண் உடுவில் குணிப்பு_அரிய படைவீரர் மிகுத்திடினும்
எண்_இறந்த படைக்கலங்கள் ஏற்றமுறும் இழுக்காவால் – குமார:4 30/1,2
மேல்


மிகுத்து (1)

நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி – குமார:2 416/3
மேல்


மிகுதி (1)

கோபத்தின் மிகுதி இந்த குவலயத்து எவர்க்கும் நீங்கா – இரட்சணிய:2 14/2
மேல்


மிகுதியாலே (1)

கோபத்தின் மிகுதியாலே கூடிய குரூரமான – குமார:2 110/3
மேல்


மிகும் (5)

சொல்லாற்றல் மிகும் பரலோக துரந்தர் ஏசன் – ஆதி:5 2/4
துன்பம் மிகும் இருள் சிறையில் உய்க்க என்றான் உழையரை அ சோம்பி ஈந்த – ஆதி:9 102/2
வெப்பம் மிகும் அனல் அன்றோ இவ்வாறு விளைத்ததுவே – ஆதி:15 12/4
பெருமை அடைந்தால் மனாதிகளும் பேதித்து ஒழியா பிரமை மிகும்
பெருமை அடைந்தால் அடையாத பிறிது ஓர் பாவம் இல்லையதால் – நிதான:9 81/2,3
கள்ளம்_அறவே விதிவிலக்கை கருதி புரிந்து கருணை மிகும்
வள்ளற்கு உமையே கையளிக்க வாரும்வாரும் ஜெகத்தீரே – நிதான:9 92/3,4
மேல்


மிகை (1)

வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
மேல்


மிகைத்த (1)

மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான் – ஆதி:11 15/4
மேல்


மிச்சில் (3)

தங்கி நாள்நாளும் ஆங்கு தணந்து எறி மிச்சில் நச்சி – ஆதி:9 124/2
மிச்சில் மிசை லௌகிக விகாரம் உறு குக்கல் – ஆதி:13 46/1
மேய மனை-தோறும் எறி மிச்சில் விழை நாய்-கொல் – நிதான:2 42/3
மேல்


மிசை (37)

ஈண்டு என்று ஆண்டகை உரைத்தலின் மலை மிசை ஏறி – ஆதி:8 35/2
மிசை உற கவிழ்ந்திடும் குடுமி மேலது – ஆதி:12 28/4
மலை மிசை குவடு இடிந்து உருண்டு வல்லையே – ஆதி:12 33/1
தலை மிசை விழுந்திடும் தப்பி உய் வழி – ஆதி:12 33/2
அலை மிசை தரு துரும்பு அனைய நீர்மையான் – ஆதி:12 33/4
இ நிலம் மிசை குருதியே கரி இயம்பும் – ஆதி:13 44/4
மிச்சில் மிசை லௌகிக விகாரம் உறு குக்கல் – ஆதி:13 46/1
மிசை ஒருவனும் இலை விரிந்த கார் இருள் – ஆதி:14 22/3
பூதரம் மிசை ஏறி போயினன் வழி கூடி – ஆதி:19 22/4
மெய்யுறு பலத்தால் அ விலங்கலின் மிசை போனான் – ஆதி:19 26/4
பிறிது எதும் நினையாமல் பிறங்கலின் மிசை செல்லும் – ஆதி:19 27/3
சிலுவை மிசை ஏறிய மெய்ஞ்ஞான சூரியன் அடியை சிந்தை செய்வாம் – குமார:2 2/4
நிரப்பினர் பேதுரு நிலைக்க பூ மிசை
புரப்பது கருதி வந்து அணைந்த புண்ணியர் – குமார:2 44/3,4
இரவி-பால் ஒளி பெற்று இரு நிலம் மிசை எங்கும் – குமார:2 79/1
கிரி மிசை முன்னர் தம்மை கேழ் கிளர் மகிமையோடு – குமார:2 106/1
சாபத்தின் திரள்கள் எம்மான் தலை மிசை விழுந்த அன்றே – குமார:2 110/4
வெய்துற தலை மிசை அடித்து வேதனை – குமார:2 267/2
ஆரணம் சொல் உண்மை அவனி மிசை விளங்க – குமார:2 310/2
அம்மை உயிர் வாழா அவனி மிசை என்பார் – குமார:2 321/2
குற்றவாளிகளோடு நடு நின்றார் குருசு மிசை – குமார:2 341/4
என்று ஆகடியமான எழுத்து இட்டார் சிலுவை மிசை – குமார:2 345/4
படி மிசை வரவு எதிர்பார்த்திருப்பவன் – குமார:2 401/4
தானம் மிசை முற்றிமுறை சான்றுபடும் என்னா – குமார:4 12/3
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து – ஆரணிய:4 37/2
விழி நலம் திகழும் இந்த வியன் கிரி மிசை தொக்கு உள்ள – ஆரணிய:5 52/2
கிரி மிசை அனந்த கோடி சூரியர் கிளர்ந்தால் என்ன – ஆரணிய:5 82/2
தெள் அமுதை தீம் கனியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 1/4
கொடி சாய்த்த கொற்றவனை குருசின் மிசை கண்டேனே – தேவாரம்:4 2/4
சித்து இருக்கும் செழும் தவனை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 3/4
தீ_வினைக்கு ஓர் அரு மருந்தை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 4/4
தேவாதி தேவனை யான் சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 5/4
செம் நெறி காட்டிய குருவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 6/4
சிந்தி உயிர் அவஸ்தையுற சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 7/4
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
திறம் வளர்க்கும் செழும் கிரியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 9/4
சேய் ஒளி கொள் செம் மணியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 10/4
மேல்


மிசைகுதிர் (1)

விளிப்பர் தம்முடன் மிசைகுதிர் என விருந்தை – ஆரணிய:5 16/3
மேல்


மிசையாராய் (1)

வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய்
நைந்துறு காலை வேதியன் இன்ன நவிலுற்றான் – ஆரணிய:4 140/3,4
மேல்


மிசையே (1)

ஞாலம் மிசையே கருவியாக உமை நாடி – குமார:2 147/1
மேல்


மிசைவர் (1)

மேவு வேடத்தர் உலக போகங்களை மிசைவர்
நாவின் நக்கி இன்புறுத்து உயிர் உண்ணும் நச்சு ஆ போல் – ஆரணிய:2 72/2,3
மேல்


மிடல் (1)

மிடல் உடை பார்வோன்-தானும் சேனையும் விரைந்து கிட்டி – ஆதி:2 35/3
மேல்


மிடற்று (3)

எழும் மிடற்று இசையில் பாடி இதயம் நெக்குருகுவாரும் – ஆதி:4 15/4
எள்_அரு மகர யாழின் எழால் மிடற்று ஒலியோடு ஒன்றி – ஆதி:19 88/3
இன் நரம்பு உளர் இசை எழால் மிடற்று ஒலி – இரட்சணிய:3 60/2
மேல்


மிடறு (2)

அல் ஆர் சிறை மீட்டவர்க்கு ஓர் மிடறு ஆர உண் நீர் – குமார:2 374/2
வா என விளிப்பன் முழை வாய் மிடறு காறி – நிதான:2 59/1
மேல்


மிடி (5)

உய்த்திடு பேதை வன் மிடி வந்து ஒன்றுமேல் – ஆதி:14 46/3
துன்பு மிடி நிந்தை சுடுசொல் சுட விழுத்தி – குமார:2 160/2
ஒன்றி வருத்தும் வன் மிடி போல ஒளிர் செவ் வான் – குமார:2 417/3
மண்டு வன் மிடி கொழும் கனல் பிழம்பினை மறுகி – ஆரணிய:4 39/4
மிடி தொழும்பினையும் அகற்றிடாது என்னோ விநயம் ஏதும் பிறிது உளதோ – தேவாரம்:6 7/3
மேல்


மிடிப்படல் (1)

மெய் வழி மிடிப்படல் இது எத்தனை-கொல் வெட்கம் – நிதான:4 72/4
மேல்


மிடியன் (1)

மிடியன் வேந்த வேடம் தரித்து இரவில் மேம்படுவன் – ஆரணிய:2 71/1
மேல்


மிடுக்கர் (1)

பின் உறுவது ஓர்கிலர் பெரும் தன மிடுக்கர்
முன் உற இயற்றுவர் பல் தீங்கு முறை பேணார் – குமார:3 15/1,2
மேல்


மிடுக்கினில் (1)

மிடுக்கினில் பொருள் பெற்று பொன் பாதுகை மிலைவல் – ஆரணிய:2 44/3
மேல்


மிடுக்கு (1)

மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி – நிதான:3 51/1
மேல்


மிடுக்குறும் (1)

மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
மேல்


மிடை (1)

மிடை தரு வருத்தம் என்னும் வியன் கிரி அருகர் வந்தான் – ஆதி:17 41/4
மேல்


மிடைந்த (2)

பரவி ஏகினான் பகைப்புலம் மிடைந்த ஓர் படுகர் – ஆதி:8 25/4
வேங்கை சந்தனம் கார் அகில் தேக்கொடு மிடைந்த
கோங்கு சண்பகம் மா பலா அத்தி குங்குலிகம் – ஆதி:18 2/1,2
மேல்


மிடையாத (1)

நலிந்து அனற்கு மிடையாத நார் கயிற்று நாணியொடும் – குமார:4 23/2
மேல்


மிடைவன (4)

வடிவு அனம் மிடைவன மகளிரின் உலவி – ஆரணிய:5 13/1
கொடி வனம் மிடைவன துடி இடை குலவி – ஆரணிய:5 13/2
தடி வனம் மிடைவன எழில் ஒளி தழுவி – ஆரணிய:5 13/3
கடி வனம் மிடைவன சினை மலர் கஞலி – ஆரணிய:5 13/4
மேல்


மிண்டர் (1)

மிண்டர் செய்த தீ_வினைக்கு விளைந்த பயன் என்று உணர்கிலிரோ – நிதான:9 87/3
மேல்


மிண்டருக்கு (1)

மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/3
மேல்


மிண்டனுக்கு (1)

மிண்டனுக்கு உரைத்து மேலே துணையொடும் விரைந்து சென்றான் – ஆரணிய:3 13/4
மேல்


மித்தியம் (1)

குத்திரம் மித்தியம் ஆதி கொடும் படைகள் பல வீசி – குமார:4 24/1
மேல்


மித்திர (5)

மித்திர_பேதம் என்னும் வினை இடை முளைத்தது அந்தோ – ஆதி:7 1/4
மித்திர நலத்தை வீசி விதிவிலக்கு எறிந்து எமக்கு – ஆதி:7 15/1
அரிய மித்திர இங்கு இது நிற்க நின் அன்புக்கு – குமார:1 80/1
அடுக்க வரும் மித்திர அகத்து உளது என் ஈண்டு – குமார:2 134/1
மித்திர_பேதம் விளைத்த குத்திரனை கொலைசெய்ய – நிதான:11 65/1
மேல்


மித்திர_பேதம் (2)

மித்திர_பேதம் என்னும் வினை இடை முளைத்தது அந்தோ – ஆதி:7 1/4
மித்திர_பேதம் விளைத்த குத்திரனை கொலைசெய்ய – நிதான:11 65/1
மேல்


மித்திரத்துவம் (2)

மித்திரத்துவம் ஆகினராய் வெட்டவெளியின் – ஆதி:11 14/2
மித்திரத்துவம் பூணுவர் கொக்கு அன விரகால் – நிதான:7 50/4
மேல்


மித்திரம் (1)

மித்திரம் கலந்த சம்பாஷணையினில் வேறு ஒன்று உண்டோ – நிதான:5 4/4
மேல்


மித்திரர் (1)

மித்திரர் ஆகி தூய விதிவிலக்கு ஓம்பி பிள்ளை – ஆதி:6 9/3
மேல்


மித்திரரை (1)

மித்திரரை உறவினரை வேலை புரி மாக்களை தன் – நிதான:5 31/1
மேல்


மித்திரை (1)

மித்திரை வளர்த்த சிரத்தை மெய் பத்தி விளங்கு_இழை புகட்டிய மேலாம் – நிதான:1 1/2
மேல்


மித்துருத்துவம் (1)

மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது – குமார:2 74/3
மேல்


மித்தை (6)

மித்தை ஆய துன் முக படை விளிந்து நீறு ஆக – நிதான:2 88/1
மித்தை மித்தை என்று ஏய்ப்பது மெய்யுணர்வு_இலாரை – நிதான:2 93/3
மித்தை மித்தை என்று ஏய்ப்பது மெய்யுணர்வு_இலாரை – நிதான:2 93/3
மித்தை ஆய சிற்றின்ப விடயங்கள் – நிதான:8 34/2
மித்தை ஆய சம்பத்தினை கீர்த்தியை வேட்டு – ஆரணிய:2 68/1
மித்தை அங்குரித்து எழு பத்தி வேடமாம் எட்டி – ஆரணிய:2 75/1
மேல்


மித்தையின் (1)

மித்தையின் விட தரு வேரொடும் கெட – ஆரணிய:4 9/3
மேல்


மித்தையை (2)

மித்தையை வேரற வீசி மெய் பிடித்து – ஆதி:9 33/1
மித்தையை நம்பி அந்தோ வீண் அவபத்தி என்னும் – நிதான:5 12/1
மேல்


மிதப்பவேயாம் (1)

பொற்பு உற மிதப்பவேயாம் புற்புத சாலம் போன்றே – ஆதி:4 9/4
மேல்


மிதி (1)

மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/2
மேல்


மிதி_கொம்பும் (1)

மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும்
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/2,3
மேல்


மிதித்து (3)

தொக்க பேர்_இடர் மலை மிதித்து ஏறிய தோன்றால் – குமார:4 53/1
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
நன்று உற்ற பசும் புல் மிதித்து நடந்து உழக்கி – ஆரணிய:4 110/2
மேல்


மிதிப்பாய் (1)

காண்டி கால் மிதிப்பாய்_அலை கவின் கொள் கானானை – ஆதி:8 35/1
மேல்


மிதிப்பாய்_அலை (1)

காண்டி கால் மிதிப்பாய்_அலை கவின் கொள் கானானை – ஆதி:8 35/1
மேல்


மிதிபட்டு (1)

சாரம் ஏற்று-மின் அன்றெனில் தள்ளுண்டு மிதிபட்டு
ஆரும் வையகத்து அவமதிப்பு அடைவிர் ஈது அறி-மின் – ஆதி:9 51/3,4
மேல்


மிதுன (1)

பண் கவர் மிதுன கீத பாட்டு ஒலி செவிமடுப்பர் – ஆதி:6 18/2
மேல்


மிருத்தாம் (1)

வெம்பும் மிருத்தாம் ஆழி கிளம்பி விடுமா உள் – ஆதி:16 12/1
மேல்


மிருத்திகேயன் (1)

மன்னவன் மிருத்திகேயன் அத்தினி எனும் பூ மாதை – ஆதி:6 6/2
மேல்


மிருத்து (2)

மிருத்து எனும் நதியை தாண்டி வியன் திரு_நகர வாயில் – ஆதி:17 28/1
வினை திறம் புரியும் வெய்யர் போல்வது அ மிருத்து நீத்தம் – இரட்சணிய:2 10/4
மேல்


மிருத்துவா (1)

ஜெகம் மிருத்துவா நதியினை தீரமோடு உருவி – இரட்சணிய:2 48/3
மேல்


மிருத்துவின் (1)

மிருத்துவின் அந்தத்து உள்ள வியன் இரும் பிலத்துள் மேய் ஓர் – நிதான:3 73/1
மேல்


மிருத்துவை (1)

விலக_அரும் மிருத்துவை விலக்கற்பாலவோ – ஆரணிய:4 15/2
மேல்


மிருத்தொடு (1)

மிருத்தொடு இ உலக பந்தம் வீசிய மறையோர் இன்ன – இரட்சணிய:3 11/1
மேல்


மிலேச்சர் (1)

மெய்_உரைப்பவர் யாவரும் மடம் படு மிலேச்சர்
பொய்_உரைப்பவரே அதி புண்ணிய புருஷர் – நிதான:7 48/1,2
மேல்


மிலை (1)

பாலடை மலை மிலை பரிசு என விரசுவ பருவரல் ஒருவு உறைபனி – ஆரணிய:5 6/4
மேல்


மிலைச்சி (1)

வினையமாக மெய் விதண்டவாத தொடை மிலைச்சி
புனையும் ஓர் வயிராக தண்டம் கொடு புடைத்தான் – நிதான:2 94/3,4
மேல்


மிலைச்சுவல் (1)

குத்திர வாகை மிலைச்சுவல் என்று குறி கொண்டான் – நிதான:2 78/4
மேல்


மிலைந்து (1)

வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
மேல்


மிலைவல் (1)

மிடுக்கினில் பொருள் பெற்று பொன் பாதுகை மிலைவல்
விடுக்க_அரும் துணையாய் என்றும் பொருள் செல்வம் விளைப்பல் – ஆரணிய:2 44/3,4
மேல்


மிழற்ற (1)

இத்தகு வனப்பு வாய்ந்த இசை மொழி மிழற்ற வல்ல – நிதான:3 59/1
மேல்


மிழற்றி (1)

மன்றல் வாசகம் மிழற்றி வந்து வேதியரை ஏற்றார் – இரட்சணிய:3 13/3
மேல்


மிழற்று (1)

விதிமுறைப்படி சல்லாபம் மிழற்று இசை திகழ்த்தி பாடி – இரட்சணிய:3 103/3
மேல்


மிளிர் (6)

விலங்கை அறுக்க தக்கது இது என் கை மிளிர் கட்கம் – ஆதி:16 15/2
விண் கவர மிளிர் பத்தி வேதியன்-தன் முகம் நோக்கி – குமார:4 17/3
மெய் விரவி மிளிர் ஞான வியன் படைகள் வேந்தனவால் – குமார:4 39/3
இடர் சுடச்சுட இலங்கு பொன் என மிளிர் எழிலோய் – குமார:4 68/1
வித்தக கலை அரதநம் நாணயம் மிளிர் பூண் – ஆரணிய:6 4/3
பொன் திகழ்ந்து என மிளிர் புகர்_இல் நல் மதி – ஆரணிய:9 60/2
மேல்


மிளிர்ந்த (2)

வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில் – குமார:1 33/1
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய – ஆரணிய:5 33/2
மேல்


மிளிர்ந்து (4)

விண் நாடு அடையும் நெறியோடு மிளிர்ந்து தோன்றி – ஆதி:12 23/1
மின் என மிளிர்ந்து குன்றும் வீண் மகிமையிலே தோன்றி – ஆதி:17 4/2
விண் உற மிளிர்ந்து தோன்றும் வித்தக தெளிவு என்று ஓதும் – ஆரணிய:5 81/1
மேய பல் மணி குயின்று விண் உற மிளிர்ந்து எங்கும் – இரட்சணிய:1 22/3
மேல்


மிளிர்வ (2)

விடுத்த வெம் படை முகம்-தொறும் பேய் குறி மிளிர்வ
கடுத்து உறும் புழை விழி-தொறும் சின கனல் கஞல்வ – நிதான:2 80/1,2
வெம் கணாளர்-தம் மேனிலை மறுகு எங்கும் மிளிர்வ – நிதான:7 39/4
மேல்


மிளிர்வது (1)

மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/2
மேல்


மிளிர்வன (6)

விரவு முற்குறி வயின்-தொறும் மிளிர்வன கண்டு – ஆதி:8 25/2
கான் அளாவு தண் நறும் சுனை மிளிர்வன காணாய் – குமார:4 56/4
நாடு அகம் மிளிர்வன நனி மிகு தருமம் – ஆரணிய:5 17/1
நாடு அகம் மிளிர்வன நனி அருள் பொழில் வாய் – ஆரணிய:5 17/2
நாடகம் மிளிர்வன நனி தொகு மயில்கள் – ஆரணிய:5 17/3
நாள் தக மிளிர்வன நளிர் இள வனசம் – ஆரணிய:5 17/4
மேல்


மிளிர (2)

தெள்ளிய நறிய தூய செழும் சுதை மிளிர தீற்றி – ஆதி:19 88/1
வித்தக கலை ஞானமும் தீரமும் மிளிர
எத்திறத்தரும் விதந்து உரையாடினர் எங்கும் – ஆரணிய:1 1/3,4
மேல்


மிளிரும் (3)

மீது உற திகழ்ந்து இடை மிளிரும் தாரகை – குமார:1 9/4
இகல் ஒழித்து உதய எல் ஒளி தவழ்ந்து மிளிரும்
பகலில் ஆர்_உயிர் பதைக்க மரண படுகர் வந்து – நிதான:4 89/1,2
வெய்யவன்-தனை மின்மினி ஆக்கி விண் மிளிரும்
செய்ய பொன் நகர் அலங்கமும் திரு_கடை சிறப்பு – இரட்சணிய:2 35/1,2
மேல்


மின் (16)

இரு கூர் திகழ் பட்டயம் மின் விசித்திட்டது என்ன – ஆதி:5 10/2
பொரும் ஒளி மின் குழாம் பொலியும் பொற்பது – ஆதி:12 25/4
மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை – ஆதி:12 45/3
மின் குலாவிய படைக்கலம் வீண் எனப்படுமோ – ஆதி:14 89/2
நெருங்கு கார் இருந்தையூடு நிலவும் மின் நெருப்பை உய்த்து – ஆதி:14 138/1
உரும் ஏறு அஞ்ச பிளிறு ஒலிய ஒளிர் மின் ஓடை புகர் முகத்த – ஆதி:14 146/2
விரவி தடித்த மின் ஒளியை விசித்து சமைத்த விதமேயோ – ஆதி:14 148/2
வெருளும் இருளும் மின் ஒளியும் விரவி இருள் போய் விடிவு எய்த – ஆதி:14 149/3
மின் என மிளிர்ந்து குன்றும் வீண் மகிமையிலே தோன்றி – ஆதி:17 4/2
மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/2
மின் குலாவிய உடையினர் வெள்ளிடை கரப்ப – குமார:2 486/2
மின் ஆரும் படைக்கலம் போல் விளங்கும் நினது அருள் மொழியே – குமார:4 41/4
மின் என புகை என வீயும் தேகருக்கு – நிதான:1 12/1
மின் பிறங்கு மழை முகத்து குமரேசன் வியன் உலக – நிதான:5 35/1
உலையும் நெஞ்சினர் மின் ஒளி ஓங்கி இருள் – ஆரணிய:4 95/2
மின் ஒளி கதிர் வீசு முகத்தினர் – இரட்சணிய:1 79/3
மேல்


மின்-கொலோ (1)

மின்-கொலோ விளிதலின் என வெறுத்துளம் எனின் – நிதான:11 17/2
மேல்


மின்மினி (1)

வெய்யவன்-தனை மின்மினி ஆக்கி விண் மிளிரும் – இரட்சணிய:2 35/1
மேல்


மின்மினிகளே (1)

ஈனமாய புன் சமய மின்மினிகளே இயங்கும் – நிதான:7 5/4
மேல்


மின்மினியாம் (1)

ஈசுர படை ஆதித்தற்கு எதிரும் மின்மினியாம் – நிதான:2 90/4
மேல்


மின்மினியின் (1)

மெய்ப்படு தொண்டர் மின்மினியின் தோன்றலும் – ஆதி:9 29/1
மேல்


மின்னல் (2)

என்ன தடித்தது ஒரு மின்னல் இடித்த ஓசை எண் திசையும் – ஆதி:14 144/2
மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார் – குமார:2 277/1
மேல்


மின்னார் (2)

விலகாது மருட்டி மின்னார் வலையில் – ஆதி:9 139/2
தேசுற்ற மின்னார் மோக சிக்கு உளே சிக்கி சிந்தை – தேவாரம்:9 6/1
மேல்


மின்னி (3)

கொண்டல் மின்னி இடித்து குமுறியும் – ஆதி:9 76/2
மை கரு முகில் வாய் விண்டு வயங்கு ஒளி மருவ மின்னி
ஒக்க நின்று உரறும் காட்சி உம்பர் நாயகனை நீத்து – ஆதி:14 139/1,2
அந்தரத்து எழுந்து மூடி அவிர் ஒளி ஆர மின்னி
உந்திய இரைச்சல் மேய உரும் இடியேறு தாக்கி – நிதான:3 41/2,3
மேல்


மின்னிடும் (1)

படி திகழ்த்தி பகல்பட மின்னிடும்
கடிய கார் இருள் போர்க்கும் கணத்திடை – ஆரணிய:4 89/1,2
மேல்


மின்னின் (1)

ஆயிடை அருகர் நின்றும் அவிர் ஒளி மின்னின் ஆர்ந்த – குமார:2 449/1
மேல்


மின்னையும் (2)

மின்னையும் வெயிலையும் விரவி மேதகு – ஆதி:4 44/1
தூய பொன்னொடு மின்னையும் வெயிலையும் தொகுத்து – இரட்சணிய:1 22/2
மேல்


மினுக்கியும் (1)

நன்னர் மேனியை மினுக்கியும் நல் உடை புனைந்தும் – நிதான:7 60/2
மேல்


மினுக்கு (2)

ஈனமாய் ஒரு மினுக்கு வத்திரம் உடுத்து எழில் கூர் – குமார:2 229/3
சதித்த பொய் அணி தாங்கி மினுக்கு உடை – நிதான:8 16/3

மேல்