நோ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 2
நோக்க_அரும் 1
நோக்கம் 3
நோக்கலர் 1
நோக்கலும் 1
நோக்கா 2
நோக்காது 1
நோக்காமலே 1
நோக்காய் 8
நோக்கால் 1
நோக்கி 77
நோக்கிடில் 1
நோக்கிடுவன் 1
நோக்கிடுவோன் 1
நோக்கிநோக்கி 1
நோக்கிய 11
நோக்கியே 4
நோக்கில் 3
நோக்கிலா 1
நோக்கினர் 4
நோக்கினன் 7
நோக்கினார் 6
நோக்கினான் 3
நோக்கினுக்கு 1
நோக்கினை 1
நோக்கு 4
நோக்குக 1
நோக்குகில்லாய் 1
நோக்குகிலன் 1
நோக்குதல் 1
நோக்குதி 1
நோக்குபு 1
நோக்கும் 4
நோக்குழி 1
நோக்குறா 1
நோக்குறின் 1
நோக 1
நோதக்க 1
நோதக 4
நோம்பு 1
நோய் 20
நோய்க்கு 1
நோய்கொண்ட 1
நோய்மை 1
நோயில் 1
நோயை 1
நோலேன் 1
நோவ 2
நோவாவை 1
நோவாவோடு 1
நோவினுக்கு 1
நோவு 3
நோவும் 1
நோவுற்று 1
நோவுறு 1
நோவை 1
நோவையும் 1
நோற்கும் 1
நோற்பின் 1
நோற்றலே 1
நோற்று 1
நோன் 2
நோன்பால் 1
நோன்பு 6
நோன்பு_இலேம் 1
நோன்மை 3
நோன்மையிலி 1

நோக்க (2)

பகரும் நூல் நெறி பற்றிய பவித்திரன் நோக்க
புகர்_இல் ஆனந்த மால் வரை இயல்பு எலாம் பொருந்த – குமார:4 48/2,3
நோக்க_அரும் அவநம்பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 34/1
மேல்


நோக்க_அரும் (1)

நோக்க_அரும் அவநம்பிக்கை நொதிப்படு கிடங்கர் வீழ்ந்து – நிதான:3 34/1
மேல்


நோக்கம் (3)

கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம்
தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/3,4
விண் புலத்து அரசுரிமையை விழைந்த மெய் நோக்கம்
திட்பம் ஆகுக சிந்தனை மயல்_அற தெருண்டு – நிதான:6 10/1,2
அழுது உளம் கசக்கச்செய்யும் அருள் நோக்கம் உடையாய் போற்றி – தேவாரம்:11 26/2
மேல்


நோக்கலர் (1)

சற்றும் நோக்கலர் இகழ்ந்தனர் ஆதலின் தமியேன் – குமார:1 89/3
மேல்


நோக்கலும் (1)

கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை – குமார:1 51/3
மேல்


நோக்கா (2)

வெண் துகில் புனைந்து உலவு வித்தகரை நோக்கா – ஆதி:14 73/4
பொற்புறும் இவற்றை நோக்கா புந்தியே புதுமைத்து அன்றோ – ஆரணிய:3 20/4
மேல்


நோக்காது (1)

இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி – ஆரணிய:3 17/2
மேல்


நோக்காமலே (1)

கிரியை நோக்காமலே கிறிஸ்து ரக்ஷகர் – ஆரணிய:9 75/1
மேல்


நோக்காய் (8)

துணைவ நோக்காய் இடை தோன்றுகின்ற ஓர் – ஆதி:10 30/1
சீர் ஆழி படை ஈண்டு திகழ்கின்ற திறம் நோக்காய் – குமார:4 18/4
இரு கூர் பட்டயங்கள் இவை எம் துணைவ எதிர் நோக்காய் – குமார:4 21/4
சத்தியமாம் அரைக்கச்சை தயங்குவன தனி நோக்காய் – குமார:4 24/4
உரை செறியும் பாதரக்ஷை உலப்பு_இல மற்று இவை நோக்காய் – குமார:4 27/4
கிரியை செயும் விசுவாச கேடகங்கள் இவை நோக்காய் – குமார:4 28/4
புண்ணியம் போல் பொருது விறல் புனைவன மற்று இவை நோக்காய் – குமார:4 30/4
எண் திசையும் புகழ் படைத்த எக்காளம் இது நோக்காய் – குமார:4 33/4
மேல்


நோக்கால் (1)

திரு_நோக்கால் திரு_வாக்கால் திரு_கரத்தால் திரு_அருளால் தீண்டி கிட்டி – ஆதி:9 160/1
மேல்


நோக்கி (77)

கையுறு புத்தகத்தை கருத்துற விரித்து நோக்கி
மெய்யுற நடுங்கி விம்மி வேதனை பொறுக்கல் ஆற்றாது – ஆதி:2 4/1,2
உருகி மெய் விசாரியை உற்று நோக்கி நின்று – ஆதி:3 4/1
முன்னவன் ஆதாம் என்ற முதல் மனு_மகனை நோக்கி
இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ் – ஆதி:6 5/1,2
இடம்-தொறும் சென்று நோக்கி இ பெரும் போகம் துய்ப்பான் – ஆதி:7 4/1
உற்று நோக்கி உன் கண் உறும் உத்திரம் ஒழித்த – ஆதி:9 65/1
பெரு மரம் ஆன போதும் கனி கொடா பெற்றி நோக்கி
திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/2,3
சென்று இரங்கி போன உயிர் திரும்பி உய அருள் புரிந்த செயலை நோக்கி
நின்றவரும் கேட்டவரும் வான் நாட்டு நெறி பிடித்து நிகழ்வதானார் – ஆதி:9 162/3,4
உழுவல் அன்பொடு மனம் உவந்து நோக்கி ஈண்டு – ஆதி:9 170/3
திகழ்ந்த அவ்வயின் சஹாயனை நோக்கி யான் திருமி – ஆதி:11 39/2
போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி
நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே – ஆதி:12 1/3,4
உற்று நோக்கி ஒளிர் கடை வாயிலை – ஆதி:12 85/2
நேயன் வதனம் திகழ நேயமொடு நோக்கி
ஆய் என எதிர்ந்தனை என் ஐய இவண் வெய்ய – ஆதி:13 21/2,3
மாடு அணுகி நின்ற மறைவாணன் முகம் நோக்கி
பீடு பெறு மேல் நிலை பிறங்கு அரமியத்தை – ஆதி:14 76/2,3
வன் துயர் குறி மல்கிய வறு முகம் நோக்கி
கன்று சிந்தையாய் யாரை நீ கவலுமாறு எவன் ஈண்டு – ஆதி:14 107/2,3
இலங்கு எழில் முகத்தை நோக்கி இனையன பகரலுற்றான் – ஆதி:14 131/4
மடுக்கும் கடிகை வந்தது இனி என்னே என்று வான் நோக்கி
நடுக்குற்று உலைந்தேன் திகில் காட்சி நனி விஞ்சியது கணம்-தோறும் – ஆதி:14 143/3,4
நோக்கி வானவர் போற்றிய நோன் கழல் – ஆதி:14 169/3
பக்கம் நின்றவரை நோக்கி முதிர் கோதுமை பயன் – ஆதி:14 186/2
அன்பு உததியை நோக்கி ஆவியின் அனல் துற்றி – ஆதி:15 8/2
தேயத்தை நோக்கி சென்று ஜீவ மா நதியின் புண்ய – ஆதி:17 34/3
பாடுவன் மேல் நோக்கி பார்த்து உளம் பதைத்து ஏங்கி – ஆதி:19 23/2
ஆகுலத்துடன் வான் நோக்கி அழுது மன்றாடி கூவும் – ஆதி:19 106/1
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி
நிச்சய நுண் நூல் மார்க்க நெறி கடைப்பிடித்து நின்றே – ஆதி:19 112/3,4
சேய் உயர் மதி முகம் நோக்கி செவ்விய – குமார:1 22/2
பேசி அன்பினால் பிறங்கும் மெய் பத்தியை நோக்கி
ஆசு_இலா மனத்து அணங்கு_அனாள் அஞ்சலித்து உரைப்பாள் – குமார:1 98/3,4
மறி உணும் அடியரின் வதனம் நோக்கி ஈண்டு – குமார:2 25/2
நோக்கி யான் போய் தனி ஜெபம் புரிந்து மீள்வல் – குமார:2 105/3
விஞ்சிய துரோகி முகம் நோக்கி இது விள்ளும் – குமார:2 133/4
வேடுவர் எனா உரறும் வெய்யவரை நோக்கி
தேடுவது யாரை எனலோடு நெறி தீயர் – குமார:2 135/1,2
ஆங்கு அதை அறிந்து தமது அன்பன் முகம் நோக்கி
ஈங்கு இது-கொலோ அற இயற்கை எவரேனும் – குமார:2 142/1,2
கண்_இலான் கருதி நோக்கி கனன்று இது கழறுகின்றான் – குமார:2 163/4
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/4
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
மன்றுளே ஒரு தனி சிறை வரதனை நோக்கி
வென்றி சேர் அரசன்-கொலாம் நீ என வினவ – குமார:2 218/2,3
ஈசன் சினம் நோக்கி ஈன நரரை பிணித்த – குமார:2 311/1
பாச வினை நோக்கி பரிந்து நடுநின்று வரும் – குமார:2 311/2
பேச_அரிய துன்ப பிரளயத்தை நோக்கி இந்த – குமார:2 311/3
முன்னாக அழுங்கு ஒரு சீடனை முற்று நோக்கி
அன்னாய் இவன் உன் மகன் மற்று உனக்கு அன்னை நண்ப – குமார:2 356/2,3
உற்றார் அருள் தாதையை நோக்கி ஓர் ஓலமிட்டார் – குமார:2 369/4
வையகம் புதைத்த கங்குல் வாருணி அற்றம் நோக்கி
துய்ய தண் மதியம் என்னும் துயல்வரு சுறவத்தோடு – குமார:2 431/1,2
மருள்_அற சமாதி வாயில் திறவுண்ட மரபை நோக்கி
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/3,4
மிக்க பேர்_அதிசயத்தொடு மேலுற நோக்கி
தொக்கு நின்ற வேதியர் மருங்கு ஓர் இரு தூதர் – குமார:2 485/1,2
என்-கொல் வானுற நோக்கி நீர் நிற்பது இங்கு என்னா – குமார:2 486/1
பத்தி முகம் நோக்கி விநயத்தொடு இவை பன்னும் – குமார:3 1/4
விண் கவர மிளிர் பத்தி வேதியன்-தன் முகம் நோக்கி
எண் கவரும் படைக்கலங்கள் இயல் முறைமை எடுத்துரைப்பாள் – குமார:4 17/3,4
உங்கரித்து அழிம்பன் வந்து உருத்து நோக்கி நின்று – நிதான:2 16/1
முன் உற கருதி நோக்கி முடுகுவன் நெறியை பற்றி – நிதான:3 3/1
பின்னுற திருமி நோக்கி பேருயிர்ப்பெறிவன் பேதுற்று – நிதான:3 3/2
உற்றுழி அடுத்தான் ஆக உள் உளே கவன்று நோக்கி
மற்று இதே போலும் கேட்ட மாரண படுகர் என்று – நிதான:3 15/2,3
சாதக திரளை நோக்கி தற்பரனாம் ஏகோவா – நிதான:3 55/2
ஓங்கிய காதல் ஈர்க்க விரைந்தனன் உற்று நோக்கி – நிதான:3 60/4
தெருள் உறீஇ தான் வந்து உற்ற திடர் நின்று திருமி நோக்கி
வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர் படுகர் முற்றும் – நிதான:3 69/2,3
நின்ற வெட்கி முகம் நோக்கி அட நீச_மதியோய் – நிதான:4 84/2
நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி
ஆய் மதி நிதானி ஒல்லை அலப்பனை உசாவி தேர்வான் – நிதான:5 2/3,4
மறம் கடைப்பிடித்து நின்ற வன்கணார் மறுமை நோக்கி
அறம் கடைப்பிடியார் என்னோ அழி_மதி படைத்து மாயம் – நிதான:7 79/1,2
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/3
நோக்கி அங்கங்கு மாயம் நுனித்து உணர் – நிதான:8 23/3
உள்ளு உவந்து ஏத்தி போற்றி ஜெபிப்பர் உன்னதத்தை நோக்கி – நிதான:10 55/4
உற்று நோக்கி நல் நெறி பிசகாது ஒருமித்து – ஆரணிய:2 20/3
நூல் முகந்து எடுத்து அநுபவ முதிர்ச்சியை நோக்கி
ஆன்ம ஞான சம்பாஷணை அருந்தி ஏகுவரால் – ஆரணிய:2 24/3,4
சென்று யாம் அடுத்து நோக்கி திருமுதல் சீர்மைத்தாம்-கொல் – ஆரணிய:3 7/3
உற வரும் நாசத்து உற்றார் உன்னதம் நோக்கி செல்லும் – ஆரணிய:3 9/2
இ புறம் திரும்பி நோக்காது ஏகு என திரும்பி நோக்கி
உப்புத்தூண் ஆன லோத்தின் மனைவியை உள்ளுக என்னா – ஆரணிய:3 17/2,3
நன்று என இதயத்து உள்ளி நம்பிக்கை வதனம் நோக்கி
ஒன்று நீ கேட்டி என்னா மறை_வலான் உரைக்கலுற்றான் – ஆரணிய:3 22/3,4
வன் திண் புய வல் அரக்கன் மனை மாடு நோக்கி
அன்று இன்னல் அடைந்து உயிர் கைத்து அழுது ஆக்கை நொந்து – ஆரணிய:4 125/2,3
கானம் தன் அவையா செய்ய கமல கண் களித்து நோக்கி
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/2,3
விழுமிய குணத்தோன் ஆய வேதியன் விரும்பி நோக்கி
உழுவல் அன்போடு மற்று ஈது உசாவுவான் விநயமாக – ஆரணிய:5 41/3,4
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
செப்பினர் உற்று நோக்கி திரும்பி வெய்துயிர்த்தார் செய்யோர் – ஆரணிய:5 65/4
தானக்-கண் விழுந்து இறைஞ்சி திசை நோக்கி தாழ்ந்து சொன்னார் – ஆரணிய:5 85/4
அற்றம் நோக்கி அருள் துணையின் பலம் – ஆரணிய:6 56/3
முன் நம்பிக்கையை நோக்கி முறைமையோய் – ஆரணிய:9 24/2
ஆரியன் தோழனை நோக்கி ஐய வீண் – ஆரணிய:9 99/1
புங்கவன் நம்பிக்கை முகம் நோக்கி மதி பூத்தோய் – ஆரணிய:10 2/2
மங்களம் செறி மா நகர் நோக்கி மன் – இரட்சணிய:1 78/1
அவ்வயின் ஒளி கொள் தூதர் ஆரணர்-தம்மை நோக்கி
இ வரை காண்-மின் சொற்ற இகபரசந்தி ஆய – இரட்சணிய:2 19/1,2
மேல்


நோக்கிடில் (1)

சிமையத்தே நின்று தென் திசை நோக்கிடில் சீயோன் – குமார:4 74/2
மேல்


நோக்கிடுவன் (1)

கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ – ஆதி:2 5/4
மேல்


நோக்கிடுவோன் (1)

இச்சையோடு அந்நிய மாதர் எழிலை கருதி நோக்கிடுவோன்
துச்சாரிகள் பங்கு அடைவன் என்ற தூயோன் அருளை துணைக்கொண்டு – நிதான:9 16/1,2
மேல்


நோக்கிநோக்கி (1)

அந்தரம் நோக்கிநோக்கி அகம் குலைந்து அயர்கின்றாரை – நிதான:3 33/4
மேல்


நோக்கிய (11)

உம்பர் நோக்கிய மெய் திரு_தொண்டர் உள் உவப்பும் – ஆதி:9 9/1
வான் முகம் நோக்கிய பயிரின் மன்னும் நம் – ஆதி:14 17/1
ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம் – ஆதி:14 198/3
மூன்று நல்கும்-மன் நோக்கிய முயன்று அடுப்பவர்க்கே – ஆதி:18 23/4
நேசமோடு பேதுரு மனம் கசந்து அழ நோக்கிய நெடும் கண்ணும் – குமார:2 5/2
உம்பர் நோக்கிய சிந்தையர் ஒருங்கு தொக்கு இருந்தார் – குமார:2 487/4
மேல் நனி நோக்கிய வியன் தரு பயன் – ஆரணிய:4 21/1
மா நிலம் நோக்கிய மரபின் காட்சி-தான் – ஆரணிய:4 21/2
வான் உற நோக்கிய அடியர் மாண் நடை – ஆரணிய:4 21/3
பூ நலம் நோக்கிய புதுமை போலுமால் – ஆரணிய:4 21/4
நம்மை நோக்கிய தண்டனைக்கு ஒரு நடுவராய் நின்று தாங்கியும் – தேவாரம்:1 10/1
மேல்


நோக்கியே (4)

அந்தரம் நோக்கியே அலர் கண்ணீர் சொரி – குமார:2 98/2
மருள் ஒன்று இன்றி மடந்தையர் நோக்கியே – குமார:2 455/4
சீயென துரந்தனன் செலவை நோக்கியே – நிதான:4 23/4
குச்சிதன் முகம் குறி கொண்டு நோக்கியே – நிதான:4 35/4
மேல்


நோக்கில் (3)

நோக்கில் ஓர் பதினாயிரம் கோடி பொன் நொடியில் – குமார:1 68/3
கொலைப்படுத்துக என்று இட்ட கூக்குரல் குறித்து நோக்கில்
அலப்பு நீர் உடுத்த வையத்து அழிம்பினுக்கு அவதி உண்டோ – குமார:2 187/3,4
நோக்கில் அணு ஒவ்வொன்றும் நூறாயிரம் கோடி – குமார:2 308/1
மேல்


நோக்கிலா (1)

மறுமையும் இம்மை-தானும் நோக்கிலா மடமை பூண்ட – குமார:2 190/1
மேல்


நோக்கினர் (4)

புத்திரன் வருகைக்கு எதிர் நோக்கினர் புரத்தில் – ஆதி:9 5/4
புனை மலர் தடம் சோலையை நோக்கினர் போனார் – குமார:2 75/4
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
பொன் குல தலம் நோக்கினர் போயினார் – ஆரணிய:9 28/4
மேல்


நோக்கினன் (7)

முன் துனும் கடை வாயிலை நோக்கினன் முடுகி – ஆதி:11 38/3
கண்ணுற நோக்கினன் கருதி வேதியன் – ஆதி:14 41/1
தொழுது நோக்கினன் முற்படு தொல் நெறி – ஆதி:19 86/4
செவ்விதின் நோக்கினன் திகைத்து உள் உன்னுவான் – குமார:1 30/4
கருதி நோக்கினன் நோக்கலும் கழிந்தது சும்மை – குமார:1 51/3
நூல் நாடிய வேதியன் நோக்கினன் முன் – நிதான:4 2/4
நிற்றி என நோக்கினன் நிதானியை நிகழ்த்தும் – நிதான:11 37/4
மேல்


நோக்கினார் (6)

நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல் – ஆதி:14 192/2
காக்கை கடனாக கல்வாரி நோக்கினார் – குமார:2 308/4
கள்ளர் இருவரொடும் கல்வாரி நோக்கினார் – குமார:2 309/4
காரணமாம் செய்கை முற்ற கல்வாரி நோக்கினார் – குமார:2 310/4
காசினியை நோக்கினார் கல்வாரி நோக்கினார் – குமார:2 311/4
காசினியை நோக்கினார் கல்வாரி நோக்கினார் – குமார:2 311/4
மேல்


நோக்கினான் (3)

கைம்மிகு துயில்கொள கருதி நோக்கினான் – ஆதி:16 3/4
நோக்கினான் தலை திருமி நுவல்_அரும் புண்ணிய பொலிவை – குமார:2 352/4
நோக்கினான் விசுவாசியின் அக நிலை நுதலி – இரட்சணிய:2 24/1
மேல்


நோக்கினுக்கு (1)

நோக்கினுக்கு அதீதம் நும்-பால் நுவலுதற்கு அதீதம் ஆக – ஆரணிய:5 86/2
மேல்


நோக்கினை (1)

மாம் தளிர் மேனியை மருட்டும் நோக்கினை
தேம் தள அரும்பினில் திகழ் புன் மூரலை – நிதான:4 20/1,2
மேல்


நோக்கு (4)

நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல் – ஆதி:14 192/2
பைம் புயல் திரள் நோக்கு வான் பயிர் என குரவர் – குமார:2 487/3
நும் குலத்தவர் யார் எங்கு சேறி உன் நோக்கு என் – ஆரணிய:2 26/3
உம்பர் நோக்கு சன்மார்க்கம் ஆதி உணர்த்து சற்குரு உலகுளீர் – தேவாரம்:1 3/3
மேல்


நோக்குக (1)

உள் நாடும் கருத்து ஒன்றி நோக்குக என்று இனிது உரைத்தார் – குமார:4 47/4
மேல்


நோக்குகில்லாய் (1)

நொய்தாக நினைந்து துணிந்தனை நோக்குகில்லாய் – ஆதி:12 6/4
மேல்


நோக்குகிலன் (1)

நோன்மையிலி மன் உரிமை நோக்குகிலன் என்றான் – நிதான:11 27/4
மேல்


நோக்குதல் (1)

ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல்
நூன் முகம் மதி_வலாய் நுணித்து காண்டியால் – ஆதி:14 17/3,4
மேல்


நோக்குதி (1)

கூர்த்து நோக்குதி இரும்பினால் இயன்ற அ கூட்டுள் – ஆதி:14 106/1
மேல்


நோக்குபு (1)

சீயோன் மலை நோக்குபு வந்தனம் செம் நெறிக்கே – ஆரணிய:4 108/4
மேல்


நோக்கும் (4)

முற்பட நோக்கும் காலை முறைப்படு நெறியின் பாங்கர் – ஆதி:19 87/1
நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய – நிதான:9 54/2
முந்துறு படுகர் வாயில் முற்றி உள் நோக்கும் காலை – ஆரணிய:5 70/4
விழி களிப்பு உற நோக்கும் கால் விரி கதிர் அனந்தம் தொக்கு – இரட்சணிய:3 105/3
மேல்


நோக்குழி (1)

திருமி நோக்குழி அறிவீனனை சேய்மை கண்டு – ஆரணிய:9 35/2
மேல்


நோக்குறா (1)

முடிவன யாவையும் முடிய நோக்குறா
நெடிதுயிர்த்து இரங்கி உள் அழிந்து நின்ற ஓர் – குமார:2 401/1,2
மேல்


நோக்குறின் (1)

பேர்_இயல் படுகரின் பெற்றி நோக்குறின்
ஆரியர் ஆய மெய் அறிஞரே அலால் – நிதான:1 5/2,3
மேல்


நோக (1)

சென்று அங்கு அவர் நோக அடித்தி சினந்து தாமே – ஆரணிய:4 120/2
மேல்


நோதக்க (1)

நோதக்க சும்மையொடு போயினன் சிந்தை நொந்தே – ஆதி:12 1/4
மேல்


நோதக (4)

நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/3
நோதக சினந்து ஓர் மாற்றம் நுவன்றிலர் கருமம் நோக்கி – குமார:2 189/4
நோதக ஒரு மொழி நுவலுவார்_அலர் – குமார:2 271/2
நோதக விட்டு போயினன் யான் இ நுகர் துன்பம் – ஆரணிய:4 128/3
மேல்


நோம்பு (1)

நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/4
மேல்


நோய் (20)

மலைவுறு துன்ப நோய் மலிய பெற்றது – ஆதி:10 11/3
இல்லை நோய் பசி தாகம் ஆதிய துயர் என்றும் – ஆதி:11 9/1
ஆன்ம நோய் அகற்று சஞ்சீவி அன்பர்க்கு – ஆதி:14 35/1
நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
விந்தையாய் நர ஜீவர்க்கு விழும நோய் துடைக்கும் – ஆதி:18 7/3
ஆவி வேட்டு வந்து அருந்துவோர்க்கு ஆன்ம நோய் அகலும் – ஆதி:18 19/3
நடுக்குறு நோய் பல நலியுமேனும் கை – குமார:1 6/2
முடிந்தது வறுமை நோய் முடிந்த சிந்தனை – குமார:2 384/2
தொலைக்க_அரும் பாவ நோய் தொலைத்த யாக்கையை – குமார:2 405/2
வம்பர் நிந்தனை வசைமொழி வறுமை நோய் இடுக்கண் – நிதான:2 107/1
துக்க நோய் பகையே ஆதி சோதனைக்கு இடையாது உள்ளம் – நிதான:5 11/3
உண்ணில் ஆத்தும தாபித நோய் ஒருங்கு ஓடும் – ஆரணிய:1 21/2
வெய்ய மும்மல சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு – ஆரணிய:2 7/3
பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெட – ஆரணிய:4 10/3
பாவ நோய் ஒருங்கு அற படிவர் பத்தியோடு – ஆரணிய:4 30/2
வாதை நோய் கண்டு கலங்கலும் மலங்கலும் கடுகி – ஆரணிய:8 25/3
தேக நோய் கண்டு உளம் தேம்புவார் சில பகல் – ஆரணிய:9 30/3
தூ நலம் திகழ் காதல் நோய் சுடச்சுட துய்க்கும் – இரட்சணிய:1 44/1
அருமை நாயகன் மூட்டிய ஆசை நோய் தணியாது – இரட்சணிய:1 47/1
வந்து அணைந்தனர் எம் உறு நோய் எலாம் மாய்த்து – இரட்சணிய:2 41/2
மேல்


நோய்க்கு (1)

காதல் நோய்க்கு ஒரு மருந்தும் உண்டோ அவர் கனி வாய் – இரட்சணிய:1 50/2
மேல்


நோய்கொண்ட (1)

நோய்கொண்ட கோலம் என்பார் நுனித்திடும் மதி_அற்று இன்ன – ஆதி:2 43/3
மேல்


நோய்மை (1)

நோய்மை மிக்கு உடையான்-கொல்லோ இவன் என நுனித்து நோக்கி – நிதான:5 2/3
மேல்


நோயில் (1)

கோடிகோடி வெம் நோயில் குறைந்திடும் – நிதான:7 87/2
மேல்


நோயை (1)

ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியா பேர்_இன்ப – நிதான:9 37/2
மேல்


நோலேன் (1)

நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன்
வீவு_இன்றாகிய உயர் பதம் பெறு தவம் விளைத்தோய் – ஆதி:9 146/2,3
மேல்


நோவ (2)

அங்கம் நோவ குருசறைந்து கொல்க என – குமார:2 256/2
சேவடி துணை நோவ திசைதிசை – இரட்சணிய:1 62/1
மேல்


நோவாவை (1)

சிறை வழி பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவை கொண்டு – தேவாரம்:11 33/3
மேல்


நோவாவோடு (1)

மன்னு நோவாவோடு எண்மரை புரந்த மா பெரும் கருணையாய் போற்றி – தேவாரம்:11 2/4
மேல்


நோவினுக்கு (1)

சித்த நோவினுக்கு ஒரு செவிலித்தாய் அரோ – ஆதி:19 39/4
மேல்


நோவு (3)

சால நோவு அடைந்து தீர்த்தல் தகுதி என்று அடைந்தார் போலும் – குமார:2 100/4
தீங்கு அணுகாத தூய திரு படிவத்து நோவு
தாங்கி நின்று அருளி நோக்கி சமித்து மற்று இதனை சாற்றும் – குமார:2 168/3,4
தினை அனைத்து நோவு இன்றி உள் அதிசயம் சிறப்ப – இரட்சணிய:1 14/2
மேல்


நோவும் (1)

நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/2
மேல்


நோவுற்று (1)

நோவுற்று இளைத்தீர் தாகித்தீர் நோக்கும் இது-தான் இரக்ஷணிய – நிதான:9 54/2
மேல்


நோவுறு (1)

நோவுறு சிறை துயர் நுனிக்கல்பாலரோ – நிதான:10 52/4
மேல்


நோவை (1)

வரையில் யாவர் அ நோவை வகுப்பரே – குமார:1 105/4
மேல்


நோவையும் (1)

பண்டு நோவையும் குடும்பமும் கலம் புக பரவை – ஆதி:1 6/1
மேல்


நோற்கும் (1)

மருள் எலாம் ஒழித்து நோற்கும் மலை பிரதேசத்தோர்க்கே – ஆரணிய:5 29/4
மேல்


நோற்பின் (1)

தீது எலாம் அகல நோற்பின் சிந்தனை பிறிது ஒன்று இல்லை – ஆதி:9 107/2
மேல்


நோற்றலே (1)

இம்பர் நோற்றலே மெய் விசுவாசத்தின் இயற்கை – ஆரணிய:6 16/4
மேல்


நோற்று (1)

பொறி புலன் ஒருங்க நோற்று புதுமை செய் புலவரேனும் – குமார:2 179/1
மேல்


நோன் (2)

நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
நோக்கி வானவர் போற்றிய நோன் கழல் – ஆதி:14 169/3
மேல்


நோன்பால் (1)

நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால்
வான் புவி படும் வல்லமை யாவும் நும் வசத்தாம் – நிதான:6 13/2,3
மேல்


நோன்பு (6)

நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/3
வெய்ய பேய் கணத்துக்கு அஞ்சி வெந்நிடின் நோன்பு வீணாம் – நிதான:3 54/1
நோன்பு பற்றி முப்பகை திறம் இருக்கும் இ நோன்பால் – நிதான:6 13/2
வெறுமை ஆக்குமோ விழு தகு நோன்பு உளம் விளையில் – ஆரணிய:6 13/4
விரத நோன்பு பிடித்திடும் வித்தக – இரட்சணிய:1 58/3
விந்தையை கருத்தில் உய்த்து விழுத்தகு நோன்பு பற்றி – இரட்சணிய:3 107/2
மேல்


நோன்பு_இலேம் (1)

நோதக அறைந்தான் அந்தோ நோன்பு_இலேம் இழைத்த பொல்லா – குமார:2 167/3
மேல்


நோன்மை (3)

நூல் முறை தெரிந்தவர் நுவலும் நோன்மை சால் – ஆதி:14 49/3
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/2
நோன்மை மிக்கு உயர் வேதிய நுவல்_அரும் அரசன் – குமார:4 50/1
மேல்


நோன்மையிலி (1)

நோன்மையிலி மன் உரிமை நோக்குகிலன் என்றான் – நிதான:11 27/4

மேல்