நே – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 4
நேசத்தாலே 1
நேசத்தை 3
நேசம் 11
நேசமும் 1
நேசமொடு 1
நேசமோடு 3
நேசர்-பால் 2
நேசரை 3
நேசன் 1
நேசித்து 2
நேடி 4
நேடிடும் 1
நேடுவது 1
நேடுவார் 1
நேடுவாள் 1
நேத்திரங்களும் 2
நேத்திரமும் 1
நேபுகாத்நேச்சர் 1
நேமித்த 1
நேமியாம் 1
நேமியின் 1
நேய 1
நேயம் 12
நேயமும் 1
நேயமொடு 2
நேயன் 1
நேயனொடு 1
நேர் 32
நேர்_இழை 1
நேர்கிலார் 1
நேர்தல் 1
நேர்ந்த 9
நேர்ந்ததால் 1
நேர்ந்தது 5
நேர்ந்ததும் 1
நேர்ந்ததோ 1
நேர்ந்தவர்க்கு 1
நேர்ந்தன 1
நேர்ந்தனம் 1
நேர்ந்தனன் 2
நேர்ந்து 11
நேர்ப்படு 1
நேர்மை 2
நேர்மையாக 1
நேர்மையுற்றமை 1
நேர 1
நேரத்தில் 1
நேரம் 2
நேரவும் 1
நேராய் 2
நேரிய 1
நேரில் 1
நேரிலே 1
நேரின் 3
நேரினும் 3
நேருக்கு 1
நேரும் 10
நேருமாம் 1
நேருமோ 1
நேருற 1
நேரே 4
நேற்றை 1


நேச (4)

நேச ஒரு மகவு என்றும் கருதாது தகித்த பரன் நீதி கண்டும் – குமார:2 130/3
நேச யோசேப்பு என நிக்கதேமு என – குமார:2 412/1
ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான் – நிதான:2 75/4
விலகு_இல் நேச பாசத்தினால் இறுகுற விசிப்புண்டு – இரட்சணிய:1 46/3
மேல்


நேசத்தாலே (1)

நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/3
மேல்


நேசத்தை (3)

மீது நான் நேசத்தை விளைத்தவாறு போல் – குமார:2 40/3
நீட்டுவன் சாவிலும் என தன் நேசத்தை
காட்டினன் வருவது கருதுவார் எவர் – குமார:2 45/3,4
உச்சித தனி நேசத்தை உன்னுவாள் – இரட்சணிய:1 66/4
மேல்


நேசம் (11)

ஈச நேசம் ஓர் எள்துணையும் இலேன் – ஆதி:12 72/1
ஈச நேசம் இயைந்த மெய் – ஆதி:14 208/1
நேசம் எனும் வல்லியதை நீக்க வசம் இன்றி – குமார:2 162/3
நேசம் வடிக்கும் கண்ணொடு இருந்தார் நிசி முற்றும் – குமார:2 425/4
நேசம் ஆர் சுவிசேஷம் நிகழ்த்திடின் – நிதான:8 6/2
ஈசன் நேசம் ஈடேற்றம் அளிக்குமால் – நிதான:8 6/4
நீதி கருணை பரிசுத்த நேசம் சுயம்பு சாமர்த்தியம் – நிதான:9 2/1
நெஞ்சு துணிவாய் பொய் பேசி நேசம் ஒருவி அந்நியரை – நிதான:9 21/1
என் மனக்கு இனியாய் சருவேசுர நேசம்
நன்மை நல் குண நல் நடை நல் மன_சான்று – இரட்சணிய:1 27/1,2
நேசம் ஆற்ற அரிதாய் மிக நெட்டுயிர்ப்பு எறிவாள் – இரட்சணிய:1 45/4
வித்தக விமல நேசம் மேதக்க தத்துவங்கள் – இரட்சணிய:3 94/3
மேல்


நேசமும் (1)

நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல் – இரட்சணிய:3 78/2
மேல்


நேசமொடு (1)

நேசமொடு உணர்த்தினை என் நெஞ்சிடை அழுந்த – குமார:3 2/4
மேல்


நேசமோடு (3)

நேசமோடு அழைத்து இவை நிகழ்த்தல் மேயினார் – ஆதி:9 44/4
நேசமோடு அமைய வேண்டும் நிலை பிசகிடுவர் ஆயின் – ஆதி:17 40/3
நேசமோடு பேதுரு மனம் கசந்து அழ நோக்கிய நெடும் கண்ணும் – குமார:2 5/2
மேல்


நேசர்-பால் (2)

இலகும் ஆத்தும நேசர்-பால் ஆசை மிக்கு ஏங்கி – இரட்சணிய:1 46/2
ஏது செய்குதிர் என் ஒரு நேசர்-பால் எனக்கு ஆம் – இரட்சணிய:1 50/1
மேல்


நேசரை (3)

நிந்தனை பெருக்கி ஆன்ம நேசரை அகத்து நீத்தி – நிதான:5 93/4
எம் பிராண நேசரை தலைக்கூடும் நாள் எது என்று – இரட்சணிய:1 43/3
முன் இங்கு உம்மின் முயங்கிய நேசரை
சந்நிதானத்து கண்டு தளிர்ப்பிரால் – இரட்சணிய:3 45/1,2
மேல்


நேசன் (1)

நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த – ஆதி:13 25/1
மேல்


நேசித்து (2)

ஜாதி இரண்டே அந்நியரை தனை போல் நேசித்து ஆத்மார்த்த – நிதான:9 85/1
மஞ்சனாம் எனை நேசித்து வரன்முறை விசுவாசித்து – ஆரணிய:8 74/2
மேல்


நேடி (4)

நெருக்குறு இ வாயில் புக நேடி வருவோரை – ஆதி:13 23/1
நிலை விழைந்திடாது ஏகினன் தனி துணை நேடி – ஆரணிய:2 37/4
நில்லா மழைக்கு ஒல்கி நல் நூல் நெறி நேடி ஏக – ஆரணிய:4 109/3
நின் நிகர் ஆய தஞ்சம் பிறிது இலை என்ன நேடி
பொன் அடி நீழல் வந்து புகுந்தனன் போதுகில்லேன் – ஆரணிய:8 59/3,4
மேல்


நேடிடும் (1)

நீசனேற்கு உய்வு யாது என நேடிடும்
ஈசன் கோபம் எரிக்கும் என்று ஏங்கி உள் – நிதான:5 65/2,3
மேல்


நேடுவது (1)

நீயிர் இ சேம_வைப்பில் நேடுவது எவன்-கொல் ஜீவ – குமார:2 449/3
மேல்


நேடுவார் (1)

நெய் அகம்-தொறும் வினாய் நேடுவார் இனே – நிதான:4 29/2
மேல்


நேடுவாள் (1)

நீங்கும் ஆறு இனி என் என நேடுவாள் – இரட்சணிய:1 57/4
மேல்


நேத்திரங்களும் (2)

அலர்ந்த நேத்திரங்களும் குழிபட்டு ஆழ்ந்தவே – குமார:2 268/4
நேசமும் கருணையும் பொழி நேத்திரங்களும் நல் – இரட்சணிய:3 78/2
மேல்


நேத்திரமும் (1)

ஆனன கதிர் அலர்ந்த இரு நேத்திரமும் என் – ஆதி:14 198/2
மேல்


நேபுகாத்நேச்சர் (1)

நீள் நிலத்து அரசுசெய்த நேபுகாத்நேச்சர் காலத்து – நிதான:11 51/1
மேல்


நேமித்த (1)

நேமித்த நெறியை பற்றி நித்திய ஜீவ நாட்டை – ஆதி:7 14/3
மேல்


நேமியாம் (1)

நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம்
சருவ லோக சரணியனை நம்பி வரு தமியன் யான் கதவு திற-மினோ – ஆதி:13 18/1,2
மேல்


நேமியின் (1)

உருண்ட நேமியின் அரசு உய்க்கும் ஆண்டகை – நிதான:2 32/3
மேல்


நேய (1)

நேய நல் மொழி நிகழ்த்தி நும் நெறிக்கிடை நிகழ்ந்த – இரட்சணிய:1 32/3
மேல்


நேயம் (12)

நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/3
நேயம் மிக்க சஹாயன் என்று உரைபெறும் நெடியோன் – ஆதி:11 28/4
நேயம் ஆர்தரு சுவிசேடன் நேர்ந்து நீ – ஆதி:12 35/2
நேயம் மிகு வானவர் சேனை நெருங்கி இறைஞ்சி தொழுது ஏத்த – ஆதி:14 151/2
நேயம் கண்ட நிரஞ்சன மேனி ஐங்காயம் – ஆதி:14 171/3
தாயினும் சத மடங்கு நேயம் உறு தற்பரன் சரணம் அன்றி என் – குமார:2 72/3
நேயம் மிகுத்து ஓர் காயம் உகுத்த நிறை சோரி – குமார:2 416/3
நேயம் ஆர் விசுவாசம் நிலைப்பட – நிதான:5 66/3
நேயம் மிகு மெய் பத்தியுடன் நினைத்து வழுத்தும் ஜெகத்தீரே – நிதான:9 11/4
நேயம் மிகு ரக்ஷகன் சரண நிழலை அடை-மின் ஜெகத்தீரே – நிதான:9 15/4
நேயம் வைத்து உரைக்க என்னா நிகழ்த்தலும் ஆண்டு தொக்க – ஆரணிய:5 45/2
தூய பைம்பொன் ஆடை நல்கி நேயம் மிக்க தூதரை – இரட்சணிய:3 21/2
மேல்


நேயமும் (1)

நேயமும் எதிரில் நின்று நிகழ்த்து சான்று அமையாது என்ன – குமார:2 177/3
மேல்


நேயமொடு (2)

நேயன் வதனம் திகழ நேயமொடு நோக்கி – ஆதி:13 21/2
நேயமொடு உய்த்த நல் உரை உள்ளேம் நெறி தப்பி – ஆரணிய:7 13/3
மேல்


நேயன் (1)

நேயன் வதனம் திகழ நேயமொடு நோக்கி – ஆதி:13 21/2
மேல்


நேயனொடு (1)

நெக்குருகு நேயனொடு வேதியன் நிகழ்த்தும் – ஆதி:13 52/2
மேல்


நேர் (32)

மாகம் மீது நேர் கருணை_மாரி பெய் – ஆதி:4 22/1
சால நேர் பிடித்து இறை திருவுளப்படி சமைத்து – ஆதி:8 11/3
அற்ற நேர் வழி அயல் அடி பிசகுறின் அந்தோ – ஆதி:8 12/3
நித்திய ஜீவ ராஜ்ஜியத்து நேர் வழி – ஆதி:9 34/1
ஒப்புரவாக்கி நூல் ஒழுங்கின் நேர் உற – ஆதி:9 36/1
வழி விடாது நேர் ஓடு-மின் மற்றவை எல்லாம் – ஆதி:9 64/3
நேர் வளர்ந்து நெருக்குண்டு பயன்படாது ஒழிய நன்செய் நிலத்த ஓங்கி – ஆதி:9 81/3
நேர் வழி நெருக்க வழி நின்மல நகர்க்கு – ஆதி:13 51/1
நேர் உதவிடு கைம்மாறு உளது-கொல் நினக்கு என்னா – ஆதி:14 210/2
நெஞ்சார புல்லி வழி கூடினான் நேர் கருதி – ஆதி:19 1/4
நேர் உற துணிந்து செல்லின் நினைப்பதன் முன்னம் பீறி – ஆதி:19 103/1
நெஞ்சகம் கடினமாய் நிறுவ நேர் பழிக்கு – குமார:2 33/3
அழிக்கும் நீச பசாசுக்கு அடி தொழும்பாய் நேர்
வழிக்கு வாரல்_இன்று ஆயினையால் மதி மாண்டோய் – குமார:2 288/3,4
மீண்டு எழுந்து அருள் வித்தகன்-தன்னை நேர்
காண்டல் செய்து உடன் உண்டு களித்தனம் – குமார:2 465/2,3
நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
மெய்ப்படு கிறிஸ்தவன் விழிக்கு நேர் எதிர் – நிதான:2 11/2
நேர் ஆறு பிடித்து நிதானி எனும் – நிதான:4 3/1
நேர் இயல் வரன் முறை நிகழ்த்த நெய் சொரி – நிதான:4 44/3
நீள் நிரையம் உய்க்கும் நெறி நேர் அடிபெயர்க்கேன் – நிதான:4 60/4
நேர் உறு நல் நெறி ஒழுகி தனை காக்கும் நிலை சீயோன் – நிதான:5 33/2
நேர் ஈசல் குழுவின் மொய்த்து நில உலகத்து மாந்தர் – நிதான:7 77/3
வாக்கு நேர் செல் வழி விலகாமையும் – நிதான:8 23/2
தத்து மேலிடில் நேர் வழி விலகி பின் சார்வல் – ஆரணிய:2 31/4
ஆய நேர் அனுபவத்துக்கும் ஒத்து உள அதனால் – ஆரணிய:2 56/3
கண்ணும் காதும்_இலார் தமின் நேர் வழி காட்டி – ஆரணிய:2 58/1
குறி அணு பிசகாது நேர் வழி நடை கூடி – ஆரணிய:4 46/2
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
மீது மார்க்கத்தின் அருகு செல் நேர் வழி விரைந்தார் – ஆரணிய:4 57/2
இன்று நேர் விக்கினங்கள் எமக்கு எலாம் – ஆரணிய:4 81/3
நெறி தப்பி வரும் பிரயாணரை நேர் அடர்த்து – ஆரணிய:4 100/1
நீச நெஞ்சர் நிட்டூரிகள் நேர் விசுவாச – ஆரணிய:6 51/1
என் நேர் பாவியர்-தான் உலகத்து இலை என்னினும் உன் – தேவாரம்:5 9/1
மேல்


நேர்_இழை (1)

நிகர்_இல் பத்தியாம் நேர்_இழை நிகழ்த்துவது ஆனாள் – குமார:4 48/4
மேல்


நேர்கிலார் (1)

நேர்கிலார் நமரோடு நிகழ்த்தலும் – நிதான:8 35/2
மேல்


நேர்தல் (1)

கோறலுக்கு இலக்காய் நேர்தல் குறிக்கொண்டு விசுவாசத்தின் – நிதான:10 57/1
மேல்


நேர்ந்த (9)

நேசன் உரை கேட்டு உளம் நடுங்கி இவண் நேர்ந்த
மோசம் அகல துணைபுரிந்த செயல் முன்னி – ஆதி:13 25/1,2
நிவப்புறு கிரி தலை நெருங்கியதும் நேர்ந்த
தவ பயன் என சுருதி தந்த முனி வந்தே – ஆதி:13 30/3,4
பண்ணிய வினைக்கு நேர்ந்த பயன் என பதைக்கின்றாரை – நிதான:3 30/4
பாதக வினைக்கு நேர்ந்த படு கனல் மழையை உள்ளி – ஆரணிய:3 23/3
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த
பழங்கணும் மோச_நாச பரிபவ சிறையும் எல்லாம் – ஆரணிய:5 59/2,3
மானிட ஆக்கை பெற்றும் மறை நெறி புக்கும் நேர்ந்த
ஈனதை நிந்தை துன்பம் இனையன சகித்தும் தேவ – ஆரணிய:5 78/1,2
சிந்தை யாத்திரையில் நேர்ந்த திவ்விய சரிதம் மற்று இ – இரட்சணிய:3 107/1
நெறி திகழ் அறவோர் ஆயர் நேர்ந்த நின்மலனே போற்றி – தேவாரம்:11 14/4
பார் இடம் வியக்க தீய பாரிடம் துரந்து நேர்ந்த
கோர வெம் பிணி கூன் மூகை குருடு வன் செவிடு பங்கு – தேவாரம்:11 20/1,2
மேல்


நேர்ந்ததால் (1)

நேர்ந்ததால் பல சமயங்கள் நிருவிசாரத்தை – குமார:1 61/1
மேல்


நேர்ந்தது (5)

நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
காதலுனுக்கோ இ கதி நேர்ந்தது என்று மன – குமார:2 316/2
நஞ்சு அனைய நமக்கு ஈது நேர்ந்தது மெய் நடுநிலைமை – குமார:2 349/3
நன்றே இவண் நேர்ந்தது நான் உனையே – நிதான:4 7/4
அவ்வயின் உரைத்தேன் நேர்ந்தது அறிந்தனை ஐய ஒன்றை – நிதான:5 99/3
மேல்


நேர்ந்ததும் (1)

தீங்கு நேர்ந்ததும் செஞ்சுடர் முன் பனி சிதறி – ஆதி:11 34/1
மேல்


நேர்ந்ததோ (1)

உன்ன_அரும் பைத்தியம் உனக்கும் நேர்ந்ததோ
சொன்ன அ திரு_நகர் துன்னினார் எவர் – ஆதி:10 23/2,3
மேல்


நேர்ந்தவர்க்கு (1)

உற்று நேர்ந்தவர்க்கு உயிர் அளித்தாயினும் உதவி – ஆதி:11 37/2
மேல்


நேர்ந்தன (1)

காரிய கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன
ஆர் எனினும் நமக்கு ஆவது என்-கொலாம் – நிதான:10 32/3,4
மேல்


நேர்ந்தனம் (1)

ஆக நேர்ந்தனம் ஈண்டு என உரைத்தனன் அறிஞன் – ஆரணிய:2 12/4
மேல்


நேர்ந்தனன் (2)

ஒப்படையாய் தொழும்பு உஞற்ற நேர்ந்தனன்
எ பெரும் இடர் எனக்கு இறுதி சூழினும் – நிதான:2 26/2,3
ஆம் இதே கருமம் என்று அவனும் நேர்ந்தனன்
மீ மகீபதி திரு_அருளை வேண்டினார் – ஆரணிய:9 100/1,2
மேல்


நேர்ந்து (11)

பொற்புறு குமரன் நேர்ந்து நடுவராய் புகலலுற்றார் – ஆதி:7 8/4
வெம் கொடும் பஞ்சம் நேர்ந்து வெதுப்பிரும் பசிக்கு ஆற்றானாய் – ஆதி:9 113/3
நேயம் ஆர் தந்தை நேர்ந்து நின் ஒரு கனிட்டன் மாண்டு – ஆதி:9 120/3
இன்னோரன பாடுகள் நேர்ந்து உனை ஏய்ந்த போதில் – ஆதி:12 9/1
நேயம் ஆர்தரு சுவிசேடன் நேர்ந்து நீ – ஆதி:12 35/2
நிருபன் நீதியின் நிலத்து இழிந்து பலி நேர்ந்து இரக்ஷை அருள் நேமியாம் – ஆதி:13 18/1
நிரந்தரம் அருள் குரிசில் நேர்ந்து அலகை உட்க – ஆதி:14 60/2
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
நீசரொடு தாழ் படுகர் நேர்ந்து நடை கொள்ளல் – நிதான:4 68/2
நீச பாழ் நிதி கிடங்கை நேர்ந்து உயிர் மடிவார் என்றற்கு – ஆரணிய:3 12/2
வருந்துவோர்க்கு உடையை தாங்கும் வண் கையின் உதவி நேர்ந்து
திருந்து நல் மதிகள் சொல்லி தெருட்டுவார் தம்மில் பல்லோர் – ஆரணிய:5 28/3,4
மேல்


நேர்ப்படு (1)

நீதமும் அன்று உலகருக்கு நேர்ப்படு
போதமும் அன்று என புரிவில் கூறி மேல் – குமார:2 237/3,4
மேல்


நேர்மை (2)

நேர்மை உற்ற சிநேகி மற்று இன்னன நிகழ்த்தும் – குமார:1 77/4
நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும் – நிதான:5 5/2
மேல்


நேர்மையாக (1)

நிருவிகற்பாக பங்கிட்டு உதவினன் நேர்மையாக – ஆதி:9 111/4
மேல்


நேர்மையுற்றமை (1)

நேர்மையுற்றமை கண்டுகண்டு உவந்தனன் நிவிர்த்தன் – ஆதி:18 31/4
மேல்


நேர (1)

வெற்று நேர போக்காய் புகல் விநோதமும் அன்று – பாயிரம்:1 14/1
மேல்


நேரத்தில் (1)

சற்று நேரத்தில் சாடுதிர் ஈது நீர் – ஆரணிய:9 19/3
மேல்


நேரம் (2)

அன்னை உண்டு சில் நேரம் அமுது உணற்கு – குமார:1 100/1
தந்தையே நேரம் வந்தது நீர் நும் தனையனுக்கு அளித்தவர் எவரும் – குமார:2 55/1
மேல்


நேரவும் (1)

குன்றுகுன்று என நேரவும் குன்றிலை கொற்றம் – ஆரணிய:4 153/4
மேல்


நேராய் (2)

நேராய் உளத்தில் பொறித்து நெறி கூடினான் – ஆதி:19 2/4
நிற்றி மோச படுகரில் நூல் நெறி நேராய் – ஆரணிய:1 19/4
மேல்


நேரிய (1)

நெறி செலச்செல்ல நெருக்கமும் வழுக்கும் நேரிய இறக்கமும் நெறியின் – நிதான:1 2/1
மேல்


நேரில் (1)

தன் நேரில் நின்று ஏங்கி அழும் தனி தாயை அன்பின் – குமார:2 356/1
மேல்


நேரிலே (1)

நேரிலே உபதேசம் நிகழ்த்தி மேல் – ஆதி:9 79/2
மேல்


நேரின் (3)

மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/2
தெரிதரும் செரு நேரின் அ செவ்வி வாய் – ஆரணிய:6 48/4
மாரண துறை நேரின் நித்திய மங்கள கரை வாய்க்குமோ – தேவாரம்:2 6/3
மேல்


நேரினும் (3)

இம்பர் நேரினும் பகை திறம் எதிரினும் எல்லாம் – நிதான:2 107/2
மோசம் நேரினும் முன் எனக்கு ஆக என்று – ஆரணிய:4 85/1
எத்திற பகை நேரினும் என் ஒரு – ஆரணிய:8 85/1
மேல்


நேருக்கு (1)

அரும் சுரம் அஞ்சி நேருக்கு அயல் வழிப்படில் சந்தேக – ஆரணிய:4 175/1
மேல்


நேரும் (10)

மிண்டருக்கு இரங்கி நேரும் மெய்ம்மையை தெரித்தல் நன்று என்று – ஆதி:2 15/3
பழுது நேரும் ஈது அறிகிலார் பலபட பிதற்றி – ஆதி:14 88/2
நினைவில் நேரும் நெறி செலீஇ – ஆதி:14 206/3
நீதியால் மனு நாசம் நேரும் என பிணை நின்று – ஆதி:15 13/1
நேருமோ ஒன்றி தேகம் நேரும் என்று உரைப்பதானான் – நிதான:5 3/4
நிலைபெயர்ந்திடின் நேரும் அபாயம் என்று – ஆரணிய:4 95/1
மோசம் நேரும் என்று அஞ்சி முன்னிட்டிடார் – ஆரணிய:4 96/2
நேரும் ஆள் அரவம் என நீத்து அகல் – ஆரணிய:6 46/1
நேரும் கள்ள நிசாசரரை தெறும் – ஆரணிய:6 54/1
பொன் நேரும் கழற்கே புகலாக வந்து அடைந்தேன் – தேவாரம்:5 9/2
மேல்


நேருமாம் (1)

நித்திய_ஜீவ நல் நிலையும் நேருமாம் – நிதான:10 18/4
மேல்


நேருமோ (1)

நேருமோ ஒன்றி தேகம் நேரும் என்று உரைப்பதானான் – நிதான:5 3/4
மேல்


நேருற (1)

நெஞ்சு_உளார் என நேருற கண்டனம் – நிதான:8 42/4
மேல்


நேரே (4)

நின் முகம் கண்டும் நேரே வினவிய நேர்மை ஓர்ந்தும் – நிதான:5 5/2
நெருக்கி ஒல்லை விடுத்து இறவு எய்தலும் நேரே
ஒருக்கு சாவும் உவப்பு எனக்கு உண்மை இது ஓர்தி – ஆரணிய:4 144/3,4
பத்தியில் தமக்கு நேரே பவித்திர பரமாகாய – ஆரணிய:5 84/2
நீதியும் இலன் பாவ தண்டனைக்கு எதிர் நேரே
போதுகின்றனன் புகலிடம் பிறிது எங்கும் இல்லேன் – ஆரணிய:8 34/2,3
மேல்


நேற்றை (1)

செல் ஆறு இழுக்கி மருண்டு இ நெறி சேர்ந்து நேற்றை
அல் ஆர் பொழுதில் புயல் வானம் அடர்ந்து பெய்த – ஆரணிய:4 109/1,2

மேல்