நை – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

நைந்ததும் (1)

நாயகன் புனிதாத்துமம் நைந்ததும்
மீ இரத்த வெயர் துளி வீழ்த்ததும் – குமார:1 110/1,2
மேல்


நைந்தனர் (1)

நலிவு கொண்டு உளம் நைந்தனர் போயினார் – நிதான:8 21/4
மேல்


நைந்தனன் (2)

நைந்தனன் மெழுகு போல உருகியே குடரின் நாப்பண் – குமார:2 112/3
ஆவி நைந்தனன் ஆயினும் அகத்துள் அங்குரித்து – ஆரணிய:8 21/2
மேல்


நைந்தான் (1)

மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான் – ஆதி:9 115/2
மேல்


நைந்து (9)

திருவுளத்து உணர்ந்து நெட்டுயிர்த்து சிந்தை நைந்து
இரு விழி புனல் கொள இரங்கி எந்தையார் – ஆதி:9 31/1,2
நல்குரவு வாரடியில் நைந்து உயிர் நடுங்க – ஆதி:13 43/2
சகல பொல்லாங்கும் உள்ளி சஞ்சலித்து அழுது உள் நைந்து
புகலிடமான யேசு புண்ணிய பலத்தை நாடி – ஆதி:17 23/2,3
நஞ்சு அட இனைவார் போல் நைந்து இவை நவில்கின்றான் – ஆதி:19 14/4
நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
அழுது நைந்து பேதுரு திரு_அருள் துணை அடைந்து – குமார:2 204/1
மன்னு திரு_மேனி முற்றும் வார் அடியால் கன்றி நைந்து
சின்னமுறல் ஆவதுவோ தெய்வமேயோ என்பார் – குமார:2 329/3,4
அஞ்சுறு காட்சி கண்டு அலமந்து ஆவி நைந்து
எஞ்சிய பாதகர் இயல் முறைப்படி – குமார:2 414/1,2
இன்னே சாவா குற்றுயிரொடு நைந்து இறும் மோசம் – ஆரணிய:4 129/4
மேல்


நைந்தும் (1)

முழுகியும் ஆவி நைந்தும் முறையிட்டும் ஆற்ற மாட்டாது – ஆரணிய:5 72/3
மேல்


நைந்துறு (1)

நைந்துறு காலை வேதியன் இன்ன நவிலுற்றான் – ஆரணிய:4 140/4
மேல்


நைந்தே (2)

நகர மாந்தர் செவி சுட கேட்டலும் நைந்தே
நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/2,3
வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
மேல்


நைய (2)

குற்றுயிரொடு நைய கண்டனன் ஒரு கோலம் – ஆதி:15 5/4
நண்ணலர் அடர்ந்து உயிர் நடுங்கி உடல் நைய
எண்_அரிய வாதைகள் இயற்றி அடு போழ்தும் – குமார:4 11/1,2
மேல்


நையல் (1)

நையல் என்று அருளில் கூட்டி சென்றனன் அகத்துள் நண்பால் – ஆதி:9 118/4
மேல்


நையாய் (1)

வழக்கிலே இழுக்கும் வீண் வாக்கு நையாய் இக – நிதான:11 6/3
மேல்


நையும் (2)

எந்தோ புகல் தீ_வினை தீ_வினை என்று நையும்
சிந்தாகுலம் நீங்குதியேல் சுமை தீரும் மாதோ – ஆதி:12 10/3,4
நையும் சீவனில் உம் மரணம் மிக நன்றாம் – ஆரணிய:4 149/3
மேல்


நையேல் (1)

நையேல் கை நெகிழேன் உனை நான் உண்டு அஞ்சல் என – தேவாரம்:5 5/3
மேல்


நைவரு (1)

நைவரு மரணோபாதி நனி தொகும் படுகர் வைப்பில் – நிதான:3 66/1
மேல்


நைவரும் (1)

நைவரும் அடியரை நாடும் நம் பிரான் – ஆதி:15 27/4
மேல்


நைவன் (1)

ஜீவனுக்கு இறுதி காட்டும் சிலேட்டுமம் தொடங்கி நைவன்
கோ இயல் அழித்த மற்று ஓர் கொடியவன் ஆற்றல் குன்றி – நிதான:3 75/2,3
மேல்


நைவாய் (1)

ஒவ்வாத கடும் சுமைதாங்கியை ஒப்ப நைவாய்
எ ஊர் செல எண்ணுதி நண்ப இயம்புக என்றான் – ஆதி:12 2/3,4
மேல்


நைவார் (1)

நாசம் நம் குலத்து உற்றது இன்றோடு என நைவார்
ஈசன் மைந்தனையோ கொலைசெய்வதும் என்பார் – குமார:2 276/1,2
மேல்


நைவீரேல் (1)

ஞானம் உறுமாறு எவன் என்ன நாடி கவன்று உள் நைவீரேல்
தீனதயாள சற்குருவை சேர வாரும் ஜெகத்தீரே – நிதான:9 62/3,4
மேல்


நைவு (1)

உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4

மேல்