ஊ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கத்தோடு 1
ஊக்கம் 3
ஊக்கமும் 1
ஊக்கமோடு 1
ஊக்கி 7
ஊக்கிய 1
ஊக்கினன் 2
ஊக்கினார் 1
ஊக்குவார் 1
ஊக்குவார்க்கு 1
ஊக்குவாள் 1
ஊகம் 1
ஊகமோடு 1
ஊகித்து 2
ஊங்கு 1
ஊசலாடவே 1
ஊசலாடு 5
ஊசலாடும் 1
ஊசலின் 1
ஊசி 2
ஊட்டமும் 1
ஊட்டல் 1
ஊட்டலே 1
ஊட்டவும் 1
ஊட்டி 10
ஊட்டிடும் 1
ஊட்டிய 4
ஊட்டியும் 1
ஊட்டினாய் 1
ஊட்டினான் 1
ஊட்டினை 2
ஊட்டு-மின் 1
ஊட்டுகிற்போன் 1
ஊட்டுங்கால் 1
ஊட்டுதற்கு 1
ஊட்டும் 4
ஊட்டுமால் 1
ஊட்டுவது 1
ஊட்டுவர் 2
ஊட்டுவன் 1
ஊடறுத்து 5
ஊடினர் 1
ஊடு 6
ஊடுரீஇ 1
ஊடுருவி 6
ஊடுற 2
ஊடுறீஇ 1
ஊடே 3
ஊண் 6
ஊதி 2
ஊதிய 2
ஊதியத்தை 1
ஊதியம் 13
ஊதியமாம் 1
ஊதை 2
ஊமை 1
ஊமையாய் 1
ஊர் 26
ஊர்க்குள் 1
ஊர்கோள் 1
ஊர்த்த 11
ஊர்த்தலோகத்தில் 1
ஊர்ந்து 1
ஊர்ப்பழக்கத்தை 1
ஊரவர் 1
ஊராம் 1
ஊரிடை 1
ஊரிலே 1
ஊரினும் 1
ஊரும் 1
ஊரூடு 1
ஊரையும் 1
ஊழ் 1
ஊழி 17
ஊழி-தோறு 1
ஊழி_தீ 1
ஊழி_நாயகன் 1
ஊழிக்கு 1
ஊழிய 1
ஊழியஞ்செய்திடல் 1
ஊழியத்தில் 1
ஊழியத்து 1
ஊழியத்துக்கு 1
ஊழியம் 6
ஊழியர் 1
ஊழியாக 1
ஊழியாய் 1
ஊழியான் 1
ஊழியும் 1
ஊழியூழி 7
ஊழியோடு 2
ஊழின் 2
ஊற்றம் 1
ஊற்றமாம் 1
ஊற்றி 1
ஊற்றிட 1
ஊற்றிருந்து 1
ஊற்று 6
ஊற 1
ஊறி 2
ஊறு 1
ஊறுசெய்திடும் 1
ஊறுபட்டு 1
ஊறும் 2
ஊன் 25
ஊன்ற 3
ஊன்றலால் 2
ஊன்றலும் 1
ஊன்றவூன்ற 1
ஊன்றா 1
ஊன்றி 33
ஊன்றிநிற்பர் 1
ஊன்றியது 1
ஊன்றினன் 1
ஊன்றினீர் 1
ஊன்று 2
ஊன்றும் 2
ஊன 1
ஊனகத்து 2
ஊனம் 4
ஊனம்_இல் 4
ஊனமும் 2
ஊனும் 1

ஊக்கத்தோடு (1)

உகைத்து எழும் ஊக்கத்தோடு உள்ளுணர்வு வந்து உவகை ஓங்கி – நிதான:3 57/3
மேல்


ஊக்கம் (3)

ஏர் விசுவாசம் ஆக எருது அவா ஊக்கம் ஆக – ஆதி:4 13/1
உண்டு எனக்கு உறுதி என்னா உள்ளி உள் ஊக்கம் தோன்றி – ஆதி:19 105/3
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி – நிதான:3 20/3
மேல்


ஊக்கமும் (1)

ஒருவு_அரும் விசுவாசமும் ஊக்கமும் பொறையின் – ஆரணிய:2 9/2
மேல்


ஊக்கமோடு (1)

உள் உண்டாய ஒரு ஊக்கமோடு ஏகினான் – ஆதி:13 1/4
மேல்


ஊக்கி (7)

ஊக்கி நின்று துன்பூட்டு போது உணர்ந்து உளம் திரும்பி – ஆதி:9 155/2
ஊக்கி முன் உறின் நித்திய ஜீவ நாட்டு உறுவேம் – ஆரணிய:4 44/2
ஒன்றி நின்று அங்கு உரத்தது மென்மெல ஊக்கி – ஆரணிய:4 159/4
உள் உணர் விசுவாசத்தால் ஊக்கி நொந்து உடைந்து என் பக்கல் – ஆரணிய:8 77/1
உண்டு எமக்கு உறுதி என்னா உள் உளே ஊக்கி தொண்டர் – இரட்சணிய:2 3/2
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கி
பாங்கரில் காளி கூளி பைசாச கணங்கள் புக்கு – இரட்சணிய:2 7/2,3
ஊக்கி அக்கரைப்படுவதே கருமம் என்று உரைத்தான் – இரட்சணிய:2 24/4
மேல்


ஊக்கிய (1)

ஊக்கிய மத அகங்காரத்து ஒல்லென – நிதான:10 4/1
மேல்


ஊக்கினன் (2)

ஊக்கினன் தமிழில் யானும் உசித மாண் பொருளை உள்ளி – பாயிரம்:1 12/4
பன்னுவேன் வெளிப்படையில் என்று ஊக்கினன் பகர்வான் – ஆதி:1 10/4
மேல்


ஊக்கினார் (1)

உத்தரம் தருக எனா ஊக்கினார் மூர்க்கமாய் – நிதான:11 2/4
மேல்


ஊக்குவார் (1)

அவிசுவாசிகள் ஆக்கம் என்று ஊக்குவார் – ஆரணிய:6 36/4
மேல்


ஊக்குவார்க்கு (1)

உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
மேல்


ஊக்குவாள் (1)

உயிர்த்தெழுந்தமை உள்ளி உள் ஊக்குவாள் – இரட்சணிய:1 70/4
மேல்


ஊகம் (1)

ஊகம் விடுத்து சாகும் மனித்தர் உலகூடே – ஆதி:16 23/4
மேல்


ஊகமோடு (1)

ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/4
மேல்


ஊகித்து (2)

ஒவ்வும் ஒவ்வாது என்று ஊகித்து உன் கருத்து உரைத்தி என்னா – நிதான:5 19/4
பேய் இனத்து அரசன் ஊகித்து இயற்றினன் பிறங்க மேனாள் – நிதான:7 63/3
மேல்


ஊங்கு (1)

ஊங்கு தரிக்க உற்று அறியும் கண்டு உணர்க என்னா – ஆதி:16 20/3
மேல்


ஊசலாடவே (1)

உள் நிலவு எனது உயிர் ஊசலாடவே – நிதான:4 42/4
மேல்


ஊசலாடு (5)

புறம் குரைத்திட ஊசலாடு உளத்தொடும் போனான் – ஆதி:11 25/2
ஊசலாடு உளத்தொடும் உலவி வந்தனம் – ஆதி:19 47/3
ஊசலாடு உயிர்ப்புற்று உளம் கைத்து அழும் – நிதான:5 65/4
ஊசலாடு உள்ளமும் உண்டு எனக்கு என்றுமே – ஆரணிய:9 37/4
உலவுகின்றனர் பாவத்தில் ஊசலாடு உளத்தர் – ஆரணிய:10 20/4
மேல்


ஊசலாடும் (1)

உண்டு-கொல் இனி மற்று இங்கே உறையுள் என்று ஊசலாடும்
எண் தகும் உயிரை தொண்டன் எதிர்ந்தனன் என்பது அல்லால் – நிதான:3 67/3,4
மேல்


ஊசலின் (1)

வந்துவந்து போம் விடுபட்ட ஊசலின் வடம் போல் – குமார:1 59/4
மேல்


ஊசி (2)

ஊசி நூல் என உடன் நிழல் என பிரிவு_இன்றி – குமார:2 76/1
ஊசி புகும் ஆறு செலும் நூலின் ஒருவாமே – ஆரணிய:10 1/1
மேல்


ஊட்டமும் (1)

காளி கோட்டமும் ஊட்டமும் ஆட்டமும் கதிக்கும் – நிதான:7 55/1
மேல்


ஊட்டல் (1)

ஊட்டல் என் அரசியல் முறை என்று ஓர்தியால் – நிதான:2 36/4
மேல்


ஊட்டலே (1)

மல்கு தந்தையார் நமக்கு அறிந்து ஊட்டலே மரபாம் – ஆதி:14 104/4
மேல்


ஊட்டவும் (1)

பொருவு_இல் பேர்_இன்ப போகத்தை ஊட்டவும்
பருவரல் கடல் நீந்திய பான்மை நெஞ்சு – இரட்சணிய:1 56/2,3
மேல்


ஊட்டி (10)

வித்தக விமல ஞான போனகம் விளைவித்து ஊட்டி
பித்தளை உலகை தூய்மை பிறங்கு பொன் உலகம் ஆக்கி – ஆதி:4 4/2,3
அருள் பழுத்த குமரேசன் திரு_முக மண்டல சேவை அமுதை ஊட்டி
தெருள் பழுத்து திகழ் நித்ய ஜீவ மணி மௌலியை நம் சென்னி சூட்டி – ஆதி:4 41/2,3
மாதாவின் நின்று எமை வளர்க்கும் மதி ஊட்டி
தாதாவின் நின்று சமரக்ஷணை சமைக்கும் – ஆதி:14 67/1,2
ஊட்டி நனி ஆதலின் உஞற்று பல தீமை – நிதான:2 48/3
ஆத்தும சுகத்தை பேணாது அனவரதமும் நன்று ஊட்டி
காத்து உடுத்து அணிந்து பேணி கதித்த பாழ் உடலை அந்தோ – நிதான:3 29/1,2
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே – நிதான:7 70/4
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/4
கதி வழி போக்கரை ஊட்டி காதலின் – ஆரணிய:4 25/3
மன்னே ரக்ஷணிய அமிர்து ஊட்டி மனு புரக்கும் – தேவாரம்:5 9/3
அறிதுயில் அமர்ந்தாய் போற்றி அலகு_இல் பல் உயிரை ஊட்டி
செறி தரு பசிக்கு ஆற்றாது தேம்பி நின்று அழுதாய் போற்றி – தேவாரம்:11 14/2,3
மேல்


ஊட்டிடும் (1)

ஆவி நீங்குவோர்க்கு ஊட்டிடும் அருமருந்து ஆய – இரட்சணிய:2 43/3
மேல்


ஊட்டிய (4)

ஒரு மக பலி ஊட்டிய உரிமையும் அரசின் – ஆரணிய:6 27/1
என்பு இரும் குவைக்கு இன் உயிர் ஊட்டிய
அன்பின் ஆய அருள் தொனியே அலால் – ஆரணிய:8 87/2,3
முத்தி தந்து இன்பம் ஊட்டிய காதலர் – இரட்சணிய:1 60/2
விண்டு நித்திய_ஜீவனை ஊட்டிய விதத்தில் – இரட்சணிய:2 42/3
மேல்


ஊட்டியும் (1)

இன் நறும் புகை ஊட்டியும் எழில் நலம் புகழ்ந்தும் – நிதான:7 60/3
மேல்


ஊட்டினாய் (1)

வருவர் மேஷியக்கு என்று அடியருக்கு இனிய வாக்கு அமுது ஊட்டினாய் போற்றி – தேவாரம்:11 11/2
மேல்


ஊட்டினான் (1)

ஊட்டினான் பசிக்கு ஒல்கி இன்னோர் துயர் – ஆரணிய:6 33/2
மேல்


ஊட்டினை (2)

உய்யும் நல் மதி ஒண் மருந்து ஊட்டினை உரவோய் – ஆரணிய:2 7/4
பேதையேற்கு எமரொடும் பிழைப்பை ஊட்டினை
ஆதியாய் நின் அடிக்கு அனந்த ஸ்தோத்திரம் – தேவாரம்:7 7/3,4
மேல்


ஊட்டு-மின் (1)

மொழி வழி போனகம் முறையின் ஊட்டு-மின்
அழிவுறா இருநிதி அளித்தும் யாண்டு நீர் – ஆதி:9 39/2,3
மேல்


ஊட்டுகிற்போன் (1)

உறவுற்று அலகைக்கு அழி துன்_மதி ஊட்டுகிற்போன் – ஆரணிய:4 100/4
மேல்


ஊட்டுங்கால் (1)

வரைவு இன்றி யாவருக்கும் மங்கள வத்திரம் நல்கி மகிழ்ந்து ஊட்டுங்கால்
நிரையூடு அங்கு ஒருவனுக்கு தான் அளித்த துகில் இல்லா நெறியை ஆய்ந்து – ஆதி:9 96/2,3
மேல்


ஊட்டுதற்கு (1)

ஓங்கிய பரமானந்தம் ஊட்டுதற்கு ஐயம் உண்டோ – நிதான:5 8/4
மேல்


ஊட்டும் (4)

பிழிந்து தீ விடத்தை ஊட்டும் பேய் என பிடித்து நிந்தை – நிதான:4 93/2
அகத்து ஊட்டும் அறிவானும் அருள் கிரியை வெளிப்படுமால் – நிதான:5 50/4
ஆவி சுருதி அமிழ்து ஊட்டும் அன்னை மெய் வேதியர் உறவோர் – நிதான:9 98/3
நீசம் கையாயின் வளர்த்து ஊட்டும் நிருதி மோச – ஆரணிய:4 101/1
மேல்


ஊட்டுமால் (1)

பன்_அரும் குணங்களை பாலித்து ஊட்டுமால் – ஆரணிய:9 79/4
மேல்


ஊட்டுவது (1)

உலக சிற்றின்ப போகத்தை ஊட்டுவது உணர்ந்தும் – நிதான:2 89/4
மேல்


ஊட்டுவர் (2)

மன்பதைக்கு ஊட்டுவர் மரபில் தாய் என – ஆதி:14 53/3
புகழ் விரும்பி அட்டு ஊட்டுவர் புரண்ட நூலவருக்கு – நிதான:7 49/1
மேல்


ஊட்டுவன் (1)

எப்போதும் வதைத்து உயிர் ஊட்டுவன் இல்லவட்கே – ஆரணிய:4 102/4
மேல்


ஊடறுத்து (5)

இருட்டை ஊடறுத்து முன் சென்று எதிர் உற அணைந்து சீறி – ஆதி:19 116/1
ஒப்ப_அரும் தாழ்மை வைப்பை ஊடறுத்து உருவி ஏகி – நிதான:3 5/2
இன்னல் ஊடறுத்து ஏகுவார்க்கு எய்தும் என்று இசைக்கும் – நிதான:6 14/4
வஞ்சம் மிக்க மாயாபுரி மறுகை ஊடறுத்து
செஞ்செவே செலும் பிறிது ஒரு வழி இலை ஜெகத்துக்கு – நிதான:6 20/2,3
வருத்தம் ஊடறுத்து ஏகி வரம்பு_இல் இன்பு – இரட்சணிய:1 85/3
மேல்


ஊடினர் (1)

ஓங்கு காதலர் ஊடினர் போலுமால் – இரட்சணிய:1 57/3
மேல்


ஊடு (6)

ஊடு அறிந்துஅறிந்து உம்பர் இன் இசை – ஆதி:4 29/2
தீ மலி கும்பி ஊடு புகுத்தி தெறு தீமை – ஆதி:16 13/1
அய்யன் மறுகு ஊடு வர கண்டார் அணி நகரார் – குமார:2 314/4
உன் முக ஞானி விடுத்த சின குறி ஊடு ஆடி – நிதான:2 76/3
கோலிய படுகர் ஊடு குப்புற வரும்-கொல் என்னா – நிதான:3 38/4
பத்தி மறுகு ஊடு திகழ் பாதை கொடு போந்தேன் – நிதான:4 54/4
மேல்


ஊடுரீஇ (1)

ஜீவ மா நகரத்தை செழிப்பித்து ஊடுரீஇ
ஜீவகோடிகளுளுய ஜெகத்தில் பல்குமால் – ஆதி:4 49/3,4
மேல்


ஊடுருவி (6)

பட்டயம் எழும்பி ஆவி பதைக்க ஊடுருவி போக – குமார:2 108/2
பாவி உளத்தை ஊடுருவி பாயும் இரு வாய் பட்டயம் நம் – நிதான:9 37/1
ஊன் மலி துன்பை ஊடுருவி புக்கு உயர் சீயோன் – ஆரணிய:4 134/2
நல் வள நாட்டை ஊடுருவி நம் பிரான் – இரட்சணிய:1 2/3
பாக்கியம் அணித்து உளது காண் படுகர் ஊடுருவி
ஊக்கி அக்கரைப்படுவதே கருமம் என்று உரைத்தான் – இரட்சணிய:2 24/3,4
ஓடி வந்து இளைத்து உறு மரணத்தை ஊடுருவி
தேடி வந்து கண்டு அடைந்துளேம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 76/3,4
மேல்


ஊடுற (2)

ஓது இம குடில் ஊடுற நாடுவார் – ஆரணிய:5 22/4
மோக மா மரண கங்கை ஊடுற முடுகும் காலை – இரட்சணிய:2 13/4
மேல்


ஊடுறீஇ (1)

உருக்கு செம்பு அலப்பன் செவி ஊடுறீஇ
கருக்கு சிந்தையனாய் அகம் காந்தலின் – நிதான:5 79/2,3
மேல்


ஊடே (3)

கண்டனன் உதய தோற்றம் என்பது என் ககனத்து ஊடே
செண்டு என சுழன்று நீங்கா தெருமரல் உழந்து தேய்வுற்று – நிதான:3 67/1,2
மனித ஜீவருக்கும் தேவ மகத்துவத்தினுக்கும் ஊடே
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு – ஆரணிய:8 45/1,2
மீ உயர் கதி வாயிற்கு மிக அணித்தாயும் ஊடே
பாயும் அ மரண ஆற்றின் படு கரை அடுத்து அங்கு உற்றார் – இரட்சணிய:2 18/2,3
மேல்


ஊண் (6)

நல் நலத்த ஊண் உடை தெரிந்து அளிப்பர் நாள்நாளும் – ஆதி:9 63/4
உரிய மாண் பரிசுத்த ஊண் குக்கல் முன் உய்த்து – ஆதி:9 67/3
ஊண் அது ஆக்குவோர்க்கு உறு பயன் உரைக்குமாறு அரிதே – ஆதி:18 25/4
அம் கண் மா நிலம் திருத்தி ஊண் விளைத்து அனவரதம் – நிதான:7 39/1
ஊண் உவக்கும் நிருதன் உறுத்திய – ஆரணிய:4 64/2
ஊண் உவட்டு பால் தேனொடு பெருக்கெடுத்து ஓடும் – இரட்சணிய:2 31/1
மேல்


ஊதி (2)

ஒல்லை வான் சுடர்களை ஊதி ஓட்டவும் – ஆதி:4 58/2
சேயவன் காதில் ஊதி தெருட்டிய செம் சொல் கேட்டேன் – நிதான:3 44/3
மேல்


ஊதிய (2)

ஊதிய நய நஷ்டங்கள் ஒருவர்க்கும் ஒன்றும் இல்லை – ஆதி:6 13/4
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/3
மேல்


ஊதியத்தை (1)

ஊதியத்தை ஒரீஇ உலவா பெரும் – ஆதி:12 68/3
மேல்


ஊதியம் (13)

இம்பர் ஊதியம் செய்யாமல் இரு நிலம் புதைத்து வைத்தேம் – ஆதி:2 25/2
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ – ஆதி:11 21/3
ஆன்ம ஊதியம் நாடிலன் ஆகி இ – ஆதி:19 73/1
ஊதியம் இகழ்ந்திடினும் உண்டு படுமேயோ – நிதான:4 63/3
சாவும் ஊதியம் என்று ஒருப்பட்டனம் தக்கோய் – நிதான:6 29/4
ஒன்றின் ஊதியம் ஒன்பதா கொண்டு விற்று ஓம்பி – நிதான:7 37/1
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி – நிதான:7 53/1
ஓர் ஈஷத்து உணர்வு அற்று ஆன்ம ஊதியம் இழப்பர் அந்தோ – நிதான:7 77/4
ஊதியம் இழந்தது எம் உலப்பு_இல் வர்த்தகம் – நிதான:10 19/4
பெருகு கேடே அலால் பெறுதுமோ ஊதியம் – நிதான:11 12/4
தீய கொண்டு விற்று ஊதியம் திரட்டும் நீ தெருண்டு – ஆரணிய:8 13/2
உற்றவிடை ஆத்தும நல் ஊதியம் இது என்னா – ஆரணிய:9 106/2
உலைவு என் சாவு நல் ஊதியம் எனக்கு என உரத்தான் – இரட்சணிய:2 23/3
மேல்


ஊதியமாம் (1)

சாவும் ஊதியமாம் என்ன சமைந்து உள விசுவாசத்தின் – நிதான:3 19/3
மேல்


ஊதை (2)

மருங்கு வந்து உலவும் ஊதை துருத்தியால் மலிய மூட்டி – ஆதி:14 138/2
ஊதை மாருதம் பொங்கி உடற்றலின் – ஆரணிய:4 90/1
மேல்


ஊமை (1)

ஒருவு_அரிய பிணி பிறவிக்குருடு செவிடு ஊமை முடம் உதிரப்பாடு – ஆதி:9 160/2
மேல்


ஊமையாய் (1)

ஆகிய நமக்கு எதிர் ஊமையாய் பதுங்கின் – ஆரணிய:2 79/2
மேல்


ஊர் (26)

புல்ல அக்கணத்து ஊர் உறவு உரிமையை போக்கி – ஆதி:8 23/2
எ ஊர் செல எண்ணுதி நண்ப இயம்புக என்றான் – ஆதி:12 2/4
சிறக்க தகும் ஊர் தருமாபுரி சேயது அன்றால் – ஆதி:12 12/4
எண்ணலை போலும் எம் ஊர் ஒழுக்கினுக்கு இசைய நின்ற – ஆதி:17 10/3
சிறுமை போகம் வேட்டு உழல்வர் எம் ஊர் வரு சிதடர் – குமார:1 86/4
மாண்ட நகர் ஊர் மனை மடங்கள் பொதுமன்றம் – குமார:2 145/1
புன்_தொழிலர்க்கு அஞ்சி நடு போற்றாது ஊர் பொங்கி அழ – குமார:2 323/1
ஊர் அவமதித்து நகைசெய்யும் இஃது உண்மை – நிதான:4 56/4
சேதம் இலை ஊர் அவமதிப்பில் ஒரு சிந்தை – நிதான:4 63/4
ஊர் எது சள்வாய்க்கோட்டம் உறுவது எங்கு உம்பர் நாட்டுக்கு – நிதான:5 3/2
ஊர் கதை கேட்டு தேராது ஒல்லை நீ நடுத்தீர்க்கின்றாய் – நிதான:5 96/2
ஓடியாடி திரட்டிய ஊர் நிதி – நிதான:7 88/4
வாழி ஆரணர் புக்கனர் வஞ்சர் ஊர் – நிதான:8 14/4
ஊர் இயல் நீதியாதிபனுக்கு உய்த்து நம் – நிதான:10 9/3
தங்கும் ஊர் யாது இவண் சார மூலம் என் – நிதான:10 25/1
இ இயல் அறிந்து அ ஊர் சூழ் வினை திறம் இயம்பலுற்றாம் – நிதான:11 1/4
வினை சிதைத்து ஊர் பிரிவினையும் உண்டாக்கினார் – நிதான:11 10/4
தேச நடை ஊர் நடை ஜெகத்து நடை எல்லாம் – நிதான:11 23/1
பழியும் பாவமும் மல்கும் இ ஊர் இனி பாழ்பட்டு – ஆரணிய:1 25/1
விடியின் ஊர் அவமதிக்குமால் வேடம் நீத்து உழல – ஆரணிய:2 71/2
பேயினால் பிடிபட்ட இ பதிதன் ஊர் பேசில் – ஆரணிய:6 2/2
அந்தி பட்டு இரவாக அங்கு அடுத்த ஊர் அருகில் – ஆரணிய:6 5/1
வள்ளல் ஊர் புகு மார்க்கத்து இடைக்கிடை – ஆரணிய:6 55/1
எந்த ஊர் எங்கு செல்குதிர் இருள் படு கானில் – ஆரணிய:7 21/1
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வர – ஆரணிய:9 4/3
வண்டர் ஊர் எரி வாய்மடுத்திட முனிந்த மாண்புறு நீதியாய் போற்றி – தேவாரம்:11 4/2
மேல்


ஊர்க்குள் (1)

ஊர்க்குள் ஓடினர் வேற்று ஒலி கேட்டலும் உடைந்தே – ஆரணிய:6 7/4
மேல்


ஊர்கோள் (1)

ஊழி கதிரை புடை சுற்றி ஊர்கோள் வளைந்த பரிசாக – ஆதி:14 150/1
மேல்


ஊர்த்த (11)

உச்சித பட்டணம் பதவி ஊர்த்த கதி பொன்னகரம் உம்பர் நாடு – ஆதி:4 33/1
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன் – ஆதி:9 60/3
அல்லாரே விளம்பரம் கேட்டு உளம் திரும்பி ஊர்த்த நெறி அடுப்பார் ஆனார் – ஆதி:9 92/2
உலக செல்வத்து மயங்கி மெய் ஊர்த்த நூல் நெறியை – ஆதி:9 158/1
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
கானகத்து எதிர்ந்த நீச கள்வனை புறங்கண்டு ஊர்த்த
வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி – நிதான:3 1/1,2
ஒன்று நினை-மின் நராத்துமங்கள் ஊர்த்த கதி சேர்ந்து உய வேண்டின் – நிதான:9 99/1
ஒன்றி என்னுடன் வம்-மின் என்று ஊர்த்த நூல் நெறியை – ஆரணிய:7 23/2
உளம்திரும்பி மெய் பத்தியோடு ஊர்த்த நூல் நெறியில் – ஆரணிய:7 27/1
ஊர் யாது இந்த ஊர்த்த நெறி வர – ஆரணிய:9 4/3
உம்பர் உலகு உவந்து தொழும் மஹா தெய்வத்தை ஒன்றான ஊர்த்த கதி வழியை காட்டி – தேவாரம்:8 1/3
மேல்


ஊர்த்தலோகத்தில் (1)

ஊர்த்தலோகத்தில் புகுத்தினர் உன்னதத்து அரசன் – ஆதி:8 29/4
மேல்


ஊர்ந்து (1)

ஓலம் ஆர் குருசு ஒண் மடல் ஊர்ந்து அருள் – இரட்சணிய:1 69/2
மேல்


ஊர்ப்பழக்கத்தை (1)

உலக வாழ்க்கையை உறவினை ஊர்ப்பழக்கத்தை
அலகை மார்க்கத்தை அழல் விட அரவு என அஞ்சி – குமார:1 84/1,2
மேல்


ஊரவர் (1)

ஊரவர் உரைக்க கேட்டது உண்டு யான் கண்டது இன்றால் – நிதான:3 17/4
மேல்


ஊராம் (1)

ஒன்றிய அமார்க்கபுரம் என்பது அவன் ஊராம்
முன் தனை உணர்ந்து பயமுற்று மனம் முட்டி – ஆரணிய:10 3/2,3
மேல்


ஊரிடை (1)

வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி – ஆதி:12 2/2
மேல்


ஊரிலே (1)

ஊரிலே மரியாதை உண்டு உவப்பன கிடைக்கும் – ஆரணிய:2 53/2
மேல்


ஊரினும் (1)

மேய ஊரினும் பிரிவினை உண்டாயது – நிதான:10 20/2
மேல்


ஊரும் (1)

தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
மேல்


ஊரூடு (1)

உத்தமரும் சாந்தமாய் ஊரூடு செல்கின்றார் – குமார:2 313/4
மேல்


ஊரையும் (1)

பருந்தினுக்கு விருந்தூட்டி எரி கொளுவி ஊரையும் பாழ்படுத்தான் சீறி – ஆதி:9 95/4
மேல்


ஊழ் (1)

ஊழ் முறை அலை எறிந்து ஒழிக்கல் ஆன்றது – ஆரணிய:4 12/2
மேல்


ஊழி (17)

மருள் ஊழி செறுத்து வருத்திடினும் – ஆதி:9 134/3
ஊழி இ உலகு இருந்து உறுகண் இன்றியே – ஆதி:10 13/2
ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ – ஆதி:10 17/4
ஒரு மகவு இன்றி ஊழி உடற்றும் நாள் உற்றது என்னா – ஆதி:14 135/2
இரும் கடை ஊழி என்னும் இகல் உறு கருமான் வேலை – ஆதி:14 138/3
வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ – ஆதி:14 146/1
ஊழி கதிரை புடை சுற்றி ஊர்கோள் வளைந்த பரிசாக – ஆதி:14 150/1
ஊழி கனல் சேய்த்துற எழும்பி உலவா கோட்டையாய் அமைந்தது – ஆதி:14 150/3
ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி – குமார:2 121/1
ஊழி நாயகன் உரைத்தமை உள் உளே உள்ளி – குமார:2 199/3
ஊழி கரு மாலை வளைந்து என ஒல்லை உம்பர் – குமார:2 359/3
ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு – நிதான:2 29/3
பூருவம் தொடங்கி ஊழி புடை பெயர் காலம்-காறும் – நிதான:3 17/1
பெற்றிட எத்தனை ஊழி பேருமோ – நிதான:4 31/4
ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி – ஆரணிய:6 23/4
உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி – ஆரணிய:10 30/4
அற்புத காட்சி சொல்ல அருகனோ ஊழி போதை – இரட்சணிய:3 10/3
மேல்


ஊழி-தோறு (1)

ஊழி-தோறு உலகம் எங்கும் உரை நிற்கும் என்பது அல்லால் – ஆரணிய:8 64/4
மேல்


ஊழி_தீ (1)

ஒரு சிறு பவத்தால் நித்ய ஊழி_தீ கடற்குள் மூழ்கி – குமார:2 121/1
மேல்


ஊழி_நாயகன் (1)

ஊழி_நாயகன் உரை கடக்க ஒண்ணுமோ – ஆதி:10 17/4
மேல்


ஊழிக்கு (1)

ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
மேல்


ஊழிய (1)

வாழி மெய் குரு பரம்பரை ஊழிய மாண்பே – இரட்சணிய:3 108/4
மேல்


ஊழியஞ்செய்திடல் (1)

உய்யும் நெறி உபயோகித்து ஊழியஞ்செய்திடல் கடமை உபேக்ஷிப்போரை – ஆதி:9 103/3
மேல்


ஊழியத்தில் (1)

உடம்படி வாங்கி ஊழியத்தில் உய்த்தனர் – ஆதி:9 38/4
மேல்


ஊழியத்து (1)

உய்யுமாறு அருளி நும்-பால் ஊழியத்து ஒருவன் ஆக்கி – ஆதி:9 118/2
மேல்


ஊழியத்துக்கு (1)

அரசர் பிரான் ஊழியத்துக்கு அனவரதாயத்தம் என – குமார:4 27/3
மேல்


ஊழியம் (6)

ஒருவன் ஊழியம் இரண்டு இயமாநருக்கு உஞற்றில் – ஆதி:9 60/1
ஒருவும் இன் உலகு ஊழியம் ஊர்த்த நாட்டு அரசன் – ஆதி:9 60/3
ஒருவர்க்கே இனிது ஊழியம் செய்-மின் உள் உவந்து – ஆதி:9 60/4
உள்ள நாள் முழுவதும் ஒழிவு_இன்று ஊழியம்
கொள்ளுவை நல்கு புன்_கூலி கொண்டு எவன் – நிதான:2 24/1,2
ஊழியம் செய மனம் ஒருப்பட்டாய் எனின் – நிதான:4 30/2
கோனிடம் படும் ஊழியம் கோது_அற – இரட்சணிய:3 43/3
மேல்


ஊழியர் (1)

உற்ற ஊழியர் அநேகர் உண்டு தேக்கெறிய யான் ஓர் – ஆதி:9 114/3
மேல்


ஊழியாக (1)

ஊழியாக திகைத்து உள் உடைந்தனள் – இரட்சணிய:1 71/3
மேல்


ஊழியாய் (1)

ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/3
மேல்


ஊழியான் (1)

ஊழியான் மரணத்துள் ஒடுங்கினார் அரோ – குமார:2 382/4
மேல்


ஊழியும் (1)

ஊழியும் உலவாது நின்று ஓங்குக – ஆரணிய:8 90/3
மேல்


ஊழியூழி (7)

உற்பவித்து ஊழியூழி உலவி நின்று ஒடுங்கி தோன்றும் – ஆதி:4 9/2
ஊழியூழி பாய்ந்து உறுவது ஜீவ நீர் உதகம் – ஆதி:18 15/4
ஊழியூழி நினைத்து அழுது ஒண் கணீர் – குமார:1 108/3
ஏக்கமுற்று ஊழியூழி இருள் சிறை துயரை எண்ணி – நிதான:3 34/3
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி – நிதான:6 30/3
ஊழியூழி அழுதாலும் உய்வு உண்டாமோ உளம்திரும்பி – நிதான:9 26/3
ஊழியூழி இராஜ்ஜியமும் உலவா கனமும் உள்ளபடி – நிதான:9 100/3
மேல்


ஊழியோடு (2)

ஒன்றி வாழ்குவன் உன்னதத்து ஊழியோடு ஊழி – ஆரணிய:6 23/4
உத்தியோகம் பெற்று உழல்வரால் ஊழியோடு ஊழி – ஆரணிய:10 30/4
மேல்


ஊழின் (2)

ஊழின் ஆம் என உரப்பியோர் மடமையின் ஓங்கி – நிதான:7 12/1
ஊழின் நோக்கி உயர் கடை வாய் ஒரீஇ – நிதான:8 14/3
மேல்


ஊற்றம் (1)

ஊற்றம் மிக்கு உயர் கிரி எலாம் வைரமே ஒத்த – குமார:2 81/3
மேல்


ஊற்றமாம் (1)

ஊற்றமாம் கடவுள் வேந்து ஒரு பெரும் கருணையே – ஆதி:14 10/4
மேல்


ஊற்றி (1)

தெய்விக அருளை ஊற்றி திவ்விய சுடரை ஏற்றி – ஆரணிய:8 62/3
மேல்


ஊற்றிட (1)

ஊற்றிட ஆவி நொந்து உலைந்து போற்றியே – நிதான:4 43/4
மேல்


ஊற்றிருந்து (1)

ஊற்றிருந்து ஒழுகலில் உலக சம்பத்து எலாம் – ஆரணிய:9 38/3
மேல்


ஊற்று (6)

ஊற்று இன் நீர் சுரந்து என அவண் தோன்றினர் உரவோர் – ஆதி:8 5/4
விழையும் ஜீவ ஊற்று இலது எனில் இலை உள் வேரூன்றி – ஆதி:18 22/2
உலர்ந்தது தாலுவும் கருணை ஊற்று இருந்து – குமார:2 268/3
திறந்தது செறுத்து உள ஜீவ ஊற்று அரோ – குமார:2 390/4
ஜீவ ஊற்று விசுவாச செம் கை ஆர முகந்து அருந்தில் – நிதான:9 54/3
ஜீவ ஊற்று நீர் வேட்டனம் திரு_கடை திற-மின் – இரட்சணிய:3 80/4
மேல்


ஊற (1)

தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


ஊறி (2)

செழும் முக மலர்ச்சி காட்ட தெரிந்து கோல் ஊறி நின்று – ஆரணிய:5 41/2
தாயரின் முகம் தைவந்து தணப்பு_இல் பேர்_அன்பு உள் ஊறி
வாய் மலர்ந்து ஒழுகல் போலும் மைந்த நீ கலங்கல் என்னா – ஆரணிய:8 36/2,3
மேல்


ஊறு (1)

ஊறு உற்றிடு கார் இருள் மூடி உடற்ற அஞ்சி – குமார:2 365/1
மேல்


ஊறுசெய்திடும் (1)

ஊறுசெய்திடும் என உளம் கலங்கியும் – ஆரணிய:4 2/3
மேல்


ஊறுபட்டு (1)

நொந்து உடைந்து ஊறுபட்டு நொறுங்குண்ட இதயத்தேனாய் – ஆரணிய:8 55/3
மேல்


ஊறும் (2)

கல் மனத்து ஊறும் நீர் கான் சுனைத்தது – நிதான:1 7/1
ஊறும் மெய் அன்பினாலே ஒருவரையொருவர் ஊன்றி – நிதான:10 57/3
மேல்


ஊன் (25)

ஊன் முயங்கிய உடல் உவந்து எடுத்து உலகு உறுவார் – ஆதி:9 11/4
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
ஊன் மனத்து இருள் ஓட துரந்திடும் – ஆதி:13 3/1
ஊன் பிறங்கு உடல் வளர்த்து உழலுவேன் உணர்வு_இலேன் – ஆதி:14 3/3
ஊன் முக நயனங்கள் உம்பர் நோக்குதல் – ஆதி:14 17/3
ஊன் மனத்து இருள் கெட ஒளிரும் ஒண் சுடர் – ஆதி:14 35/3
ஊன் ஆடும் உடல் எடுத்து இங்கு உயிர்ப்பலி நேர்ந்து உதவினை நீ – ஆதி:15 15/3
ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
கண் துயின்று ஊன் பொதி காயத்தை – ஆதி:19 68/2
ஊன் மலிந்த உடல் சுகம் நச்சிய – ஆதி:19 73/2
நாட்டை சேரும் நசை உளரேனும் ஊன்
கூட்டை பேண் இஸரேலின் குழாம் முனம் – ஆதி:19 74/1,2
ஊன் இவர் உடல் பொறை நிலத்து உற உருண்டார் – குமார:2 136/3
ஊன் அளாவு துர்_குணம் கடிந்து ஒதுக்கிய உரவோய் – குமார:4 56/1
செச்சை ஆள் அரி ஊன் இரை தேர்கில தெருண்டு – குமார:4 59/2
வருத்தி வேதியரை கொன்று ஊன் சுவை பெறும் மறவோர்-தம்மில் – நிதான:3 73/3
ஊன் உடல் வளர்த்து உயிர் சுமந்து உலகு உலாவி – நிதான:4 73/3
ஊன் பழுத்த பூ மாயம் ஒன்றானும் உள்ளுறாமே – நிதான:6 13/1
ஊன் முதிர்ந்து வீழ் உடல் சுக_போகத்தை உவர்த்து – ஆரணிய:2 24/1
வெவ் வாய் அரக்கன் வழும்பு ஊன் முடை மிக்கு நாறி – ஆரணிய:4 118/2
ஊன் ஆர எண்ணி சிறை உய்த்தனன் உற்றது என்றான் – ஆரணிய:4 119/4
ஊன் மலி துன்பை ஊடுருவி புக்கு உயர் சீயோன் – ஆரணிய:4 134/2
பேணாது ஆவி ஊன் உடல் பேணி பிழைபட்டேன் – ஆரணிய:4 136/1
ஊன் அளைந்த தன் உயிர் துடித்து உள்ளமும் குலைவாள் – இரட்சணிய:1 44/4
ஊன் அளைந்த உடல் துயில் வீசினான் – இரட்சணிய:1 74/3
ஊன் உடம்பொடு ஒருவினவால் இனி – இரட்சணிய:3 43/2
மேல்


ஊன்ற (3)

உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற
துளக்கு_அறு திடம் நல்க துணிவு வந்து அருள் நாதன் – ஆதி:19 25/2,3
பொய் வழி அலைந்து தீமை புரிந்த பேதமை வந்து ஊன்ற
செய் வழி வகை கிட்டாது தெருமரல் உழந்து தேம்பி – நிதான:3 25/2,3
குறி உடை இரவு நீங்க குண திசை சுடர் வந்து ஊன்ற
முறை அறி ஜீவன் முத்தர் முயங்கிய துயிலை வீசி – ஆரணிய:5 63/1,2
மேல்


ஊன்றலால் (2)

இனைய சிந்தனை எனது இதயத்து ஊன்றலால்
வனை பொலன் கழலினாய் வருந்துவேன் என – ஆதி:3 12/1,2
அழிவன் என்று ஓர் உணர்வு அகத்துள் ஊன்றலால்
கழிவினுக்கு இரங்கி நாள் கழிய இ வழி – குமார:1 43/2,3
மேல்


ஊன்றலும் (1)

இதயத்து உள்ளுற ஊன்றலும் இன்று எனல் ஆகி – குமார:2 284/1
மேல்


ஊன்றவூன்ற (1)

ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் – குமார:2 189/2,3
மேல்


ஊன்றா (1)

நில பொறை ஆகி நுண் நூல் நிண்ணயம் கருத்துள் ஊன்றா
அலப்பன் என்று ஒரு பேர் பெற்ற அசடன் அங்கு அவர் முன் சென்றான் – நிதான:5 1/3,4
மேல்


ஊன்றி (33)

வேத ராஜ்ஜிய தருமத்தை வியல் நிலத்து ஊன்றி
காதலித்து வான் அடைந்தனன் மரணத்தை கடந்து – ஆதி:8 22/3,4
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி – ஆதி:9 84/1
நுண்ணிய ஓர் கடுகு விதை நிலத்து ஊன்றி முளைத்து ஓங்கி நோன் தாள் ஊன்றி
விண் நிலவு புள் உறையும் தரு ஆகும் என்று நம்மான் விதந்ததாயில் – ஆதி:9 84/1,2
எண்_அரிய மனு குலங்கள் ஈடேறும் நெறித்து ஆகும் இதயத்து ஊன்றி – ஆதி:9 84/4
நாயகனை தரிசித்து நற்கதி மார்க்கத்து ஊன்றி நடைப்பட்டார் பல் – ஆதி:9 165/3
இட்ட கற்களில் ஊன்றி நின்று இக்கரை ஏறாது – ஆதி:11 29/3
இற்றிது ஈது என காட்டி ஆண்டு ஊன்றி நின்று என் கை – ஆதி:11 32/2
ஊன்றி நின்று ஒழுகி ஈண்டு உய்வல் யான் என – ஆதி:12 63/3
உந்தும் நல் உணர்வு முன் ஊன்றி நின்று ஈர்க்கவும் – ஆதி:14 1/2
கண்டு கேட்டு அறிந்த இந்த காட்சியை கருத்துள் ஊன்றி
கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/2,3
மண் தலத்து உற முடங்கு தாள் ஊன்றி வாய் மலர்ந்து – ஆதி:18 9/1
மை_அறு திரு_வாக்காம் வச்சிர தண்டு ஊன்றி
மெய்யுறு பலத்தால் அ விலங்கலின் மிசை போனான் – ஆதி:19 26/3,4
கச்சையை இறுக்கி கட்டி கால் நிலைத்து ஊன்றி கையில் – ஆதி:19 112/1
சந்ததம் முடங்கு தாள் தரைக்-கண் ஊன்றி நின்று – குமார:2 98/1
ஊன்றி நின்று உருத்து நோக்கி இவையிவை உரைப்பதானான் – குமார:2 174/4
பொறி வரி வைர தண்டு கொண்டு ஊன்றி போகவும் கூடும் என்று உரைத்தான் – நிதான:1 2/4
மிடுக்குறும் பரிய கோல் பிடித்து ஊன்றி மிதித்து நின்று உரத்து அடி பெயர்த்தும் – நிதான:1 3/1
உய் வழி ஒழுக்கம் விலகாது எதிரில் ஊன்றி
மை வரு நிசாசர மனக்கொள் இது என்னா – நிதான:2 40/2,3
முனைவன் இன் அருள் பலத்தினால் முனை முகத்து ஊன்றி
வினையமாக மெய் விதண்டவாத தொடை மிலைச்சி – நிதான:2 94/2,3
ஒளித்த பட்டயம் கரம் புக உணர்வு வந்து ஊன்றி
களித்த சிந்தையோடு எழுந்தனன் வேதியன் கடுகி – நிதான:2 101/3,4
உள் தெளிவொடு கால் ஊன்றி உரத்து அடி பெயர்த்து நின்று – நிதான:3 21/2
உத்தம வேர் அகத்து ஊன்றி உள் அன்பு கிளைத்து ஓங்கி – நிதான:5 34/2
சிக்கறுத்து நிலைத்து ஊன்றி ஜீவ ரக்ஷை விளைக்கும் எனின் – நிதான:5 48/3
ஒட்ப நூல் மதி உட்கொளீஇ ஒல்லையின் ஊன்றி
கொட்புறும் புல பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர் – நிதான:6 12/3,4
ஊறும் மெய் அன்பினாலே ஒருவரையொருவர் ஊன்றி
தேறுதல்புரிந்து சிந்தை தெருட்டுவர் திரு_வாக்கு ஊட்டி – நிதான:10 57/3,4
உற்ற நம்பிக்கை உரை அகத்து ஊன்றி நின்று உறுத்த – ஆரணிய:4 59/1
கரும் சிலை பொறித்து ஆண்டு ஊன்றி கதி வழி காட்டி உய்த்தார் – ஆரணிய:4 175/4
உற்று உணர்ந்து ஊன்றி நோக்கி ஊக்குவார்க்கு இடர் ஒன்று இன்றாம் – ஆரணிய:5 50/3
கண்ணடி வாங்கி உற்று நோக்கினர் கருத்து உள் ஊன்றி – ஆரணிய:5 81/4
ஊன்றி ஏகுவல் ஜீவனுக்கு என் மனத்து உண்மை – ஆரணிய:6 21/4
உய்யுமாறு உளத்து ஊன்றி நின்று ஓங்கியது உரவோய் – ஆரணிய:8 27/4
உம்பர் ஓர்சிலர் வந்து ஊன்றி உத்தம கிறிஸ்தவற்கும் – இரட்சணிய:3 99/2
தண் அளி அங்கு உரித்து எழும்பி அன்பு மூலம் தாரணிக்குள் ஊற ஊன்றி தயை மூடாகி – தேவாரம்:8 10/1
மேல்


ஊன்றிநிற்பர் (1)

நைந்து உருகி விசுவாசத்து ஊன்றிநிற்பர் நற்கருணை நயந்து உட்கொள்ளில் – குமார:2 52/4
மேல்


ஊன்றியது (1)

என் மனத்து உற ஊன்றியது அங்ஙனம் எம்மோய் – குமார:1 45/4
மேல்


ஊன்றினன் (1)

ஒருவன் ஓர் திராக்ஷத்தோட்டத்து ஊன்றினன் அத்தி ஒன்றை – ஆதி:9 109/1
மேல்


ஊன்றினீர் (1)

உத்தம குடியாக வந்து ஊன்றினீர்
நித்ய ஜீவ விருக்கம் நிலவுறும் – இரட்சணிய:3 34/2,3
மேல்


ஊன்று (2)

பண்படுத்து ஊன்று சத்ய பைம் கழை கரும்பு பல்கி – ஆதி:4 17/2
ஊன்று நம்பிக்கை உரு புனைந்து உருப்படுத்தியதும் – இரட்சணிய:2 52/3
மேல்


ஊன்றும் (2)

வள்ளல் அருள் செயற்கு இடைந்த அ அலகை பாசறை ஊன்றும் வைரி ஆய – ஆதி:9 166/3
மேல் அடி ஊன்றும் போது விமலனை துதிப்பன் மீண்டும் – நிதான:3 38/2
மேல்


ஊன (1)

ஊன கண் வழுக்கி கூசி ஒல்லை தம் இமையை மூடி – ஆரணிய:5 85/3
மேல்


ஊனகத்து (2)

ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம் – ஆதி:14 198/3
ஊனகத்து உடன்ற காயம் ஒருங்கு அற அகற்றி ஜீவ – நிதான:3 1/3
மேல்


ஊனம் (4)

ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/2
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/4
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/4
ஊனம்_இல் அருள் மறை ஒழுக்கின் மேலது – ஆரணிய:4 8/3
மேல்


ஊனம்_இல் (4)

ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/2
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/4
ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/4
ஊனம்_இல் அருள் மறை ஒழுக்கின் மேலது – ஆரணிய:4 8/3
மேல்


ஊனமும் (2)

ஊனமும் பாவமும் ஒழிய தோன்றிய – பாயிரம்:1 6/3
ஊனமும் பாவமும் ஒழிந்த நீரது – இரட்சணிய:1 4/4
மேல்


ஊனும் (1)

ஊனும் நல் உயிரும் என ஒன்றுபட்டு இன்று – ஆரணிய:2 21/1

மேல்