ஊ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்கமோடு 1
ஊக்கி 2
ஊகம் 1
ஊங்கு 2
ஊசல்-தன் 1
ஊசி 1
ஊட்டப்பட்ட 1
ஊட்டவே 1
ஊட்டி 8
ஊட்டிய 2
ஊட்டினார் 3
ஊட்டு 4
ஊட்டுதல் 1
ஊட்டுதற்கு 1
ஊட்டுதும் 1
ஊட்டும் 7
ஊடகம் 1
ஊடல் 3
ஊடலுற்று 1
ஊடலொடு 1
ஊடலோடு 1
ஊடிய 1
ஊடினர் 1
ஊடினாய் 1
ஊடு 16
ஊடுதான் 1
ஊடுபோய் 1
ஊண் 4
ஊணின 1
ஊணினை 1
ஊத்தையோடு 1
ஊத 4
ஊதி 1
ஊதிய 1
ஊதியம் 2
ஊதியமே 1
ஊதியூதி 1
ஊது 4
ஊதுகின்ற 1
ஊதும் 1
ஊதுலை 1
ஊதுவன 1
ஊதை 1
ஊமும் 1
ஊமை 1
ஊமையும் 1
ஊர் 14
ஊர்-தோறும் 1
ஊர்க்கு 3
ஊர்களே 1
ஊர்தர 1
ஊர்தியும் 1
ஊர்ந்தனர் 1
ஊர்ந்து 8
ஊர்ந்தும் 1
ஊர்மச்சி 1
ஊர்முகம் 1
ஊர்வதே 1
ஊர்வன 1
ஊர்வனவும் 1
ஊர 2
ஊரது 2
ஊரல் 1
ஊரில் 1
ஊரின் 2
ஊருணி 1
ஊரும் 3
ஊழ் 10
ஊழ்_வினை 1
ஊழ்த்தன 1
ஊழாம் 1
ஊழி 22
ஊழி-தொறு 1
ஊழி_தீ 4
ஊழி_தீயும் 1
ஊழிகள் 1
ஊழியார் 1
ஊழியால் 1
ஊழியான் 1
ஊழின் 1
ஊற்றினை 1
ஊற்று 4
ஊற்றை 1
ஊற 3
ஊறல் 1
ஊறி 2
ஊறிய 1
ஊறு 9
ஊறுசெய்து 1
ஊறுபடுத்தவள் 1
ஊறும் 4
ஊறுமே 4
ஊறே 2
ஊன் 34
ஊன்களும் 1
ஊன்ற 5
ஊன்றல் 1
ஊன்றலால் 1
ஊன்றலும் 1
ஊன்றவே 1
ஊன்றி 10
ஊன்றிய 3
ஊன்றியும் 1
ஊன்றின 1
ஊன்றினான் 1
ஊன்றுகின்றவே 1
ஊன்றும் 1
ஊன்றுமால் 1
ஊன 2
ஊனகத்தவர் 1
ஊனத்தை 2
ஊனம் 9
ஊனம்_இல் 3
ஊனமர் 1
ஊனமாம் 1
ஊனமாய் 1
ஊனவர் 2
ஊனாய் 1
ஊனுக்கே 1
ஊனுடம்போ 1
ஊனை 1
ஊனொடு 1
ஊனோர் 1

ஊக்கமோடு (1)

உம்மை உலகத்து ஒளிபடும் ஊக்கமோடு
இம்மை இகந்தார்க்கு இசையும் அதுவே – சூளாமணி:11 2003/3,4
மேல்


ஊக்கி (2)

ஊக்கி யாம் உரைக்கின்றது இங்கு என்-கொலோ – சூளாமணி:4 129/4
உளர்ந்தனன் உணர்வின் ஊக்கி உரைக்கிய எடுத்து கூறும் – சூளாமணி:6 530/4
மேல்


ஊகம் (1)

நினைவு மீட்டுணர்வு ஊகம் நேர்தரு – நீலகேசி:1 119/1
மேல்


ஊங்கு (2)

உழை உடைந்து உகுகின்றன ஊங்கு எலாம் – சூளாமணி:7 779/4
ஓடு இணர் சுடர் பொன் உக்க தானம் ஒக்கும் ஊங்கு எலாம் – சூளாமணி:7 794/4
மேல்


ஊசல்-தன் (1)

போது அலர் பொதும்பில் தாழ்ந்த பொன் எழில் ஊசல்-தன் மேல் – சூளாமணி:10 1639/3
மேல்


ஊசி (1)

உள்ளம்கொண்டு இழவு ஊசி உரைப்பதே – நீலகேசி:4 324/4
மேல்


ஊட்டப்பட்ட (1)

பஞ்சி நன்று ஊட்டப்பட்ட மாதுளம் பருவ வித்தும் – சூளாமணி:5 275/1
மேல்


ஊட்டவே (1)

ஊட்டவே கணை உன்னத மாரனே – உதயணகுமார:5 265/4
மேல்


ஊட்டி (8)

ஆர ஊட்டி அதன் வயிறு ஈர்ந்து அவர் – யசோதர:3 211/2
தீம் கரும்பு அமிழ்தம் ஊட்டி தேன் அளாய் பிழிந்த போலும் – சூளாமணி:2 63/1
அடிகள் முன் அடித்தியாரால் அங்கை நீர் குளிர ஊட்டி
வடிவு கொள் தளிர்கள் முற்றி மகன் என வளர்க்கப்பட்ட – சூளாமணி:10 1563/1,2
முன்னவன் ஆர ஊட்டி முறுவலோடு அமர்ந்த பின்னை – சூளாமணி:10 1621/2
புகை நனி கமழ ஊட்டி புறம்செயப்பட்ட மேனி – சூளாமணி:11 1849/2
அணங்கும் அற அமிர்து ஊட்டி அடிகள் – சூளாமணி:11 1916/3
உறுப்புறுப்பாக அரிந்தரிந்து ஊட்டி
ஒறுப்பர் சிலரை அவரும் ஒரு பால் – சூளாமணி:11 1935/3,4
பொன் அம் செய் பத்து அங்க புகை ஊட்டி கைசெய்து – நீலகேசி:4 270/2
மேல்


ஊட்டிய (2)

நல தகை சிலம்பு அடி நவில ஊட்டிய
அலத்தக குழம்பு தோய்ந்து அரச வீதிகள் – சூளாமணி:2 47/2,3
காவி அம் கரும்_கணார் கமழ ஊட்டிய
ஆவி அம் கொழும் புகை தழுவி ஆய் மலர் – சூளாமணி:7 817/1,2
மேல்


ஊட்டினார் (3)

அரு மணி கொம்பு_அனார் அலர ஊட்டினார் – சூளாமணி:5 371/4
ஊட்டினார் அவன் அமரருள் ஒருவன் ஒத்து ஒளிர்ந்தான் – சூளாமணி:6 471/4
ஆவியால் ஈர்ம் குழல் ஆவி ஊட்டினார் – சூளாமணி:10 1688/4
மேல்


ஊட்டு (4)

அன்னம் பால் நெய்யின் அன்புடன் ஊட்டு எனும் – உதயணகுமார:6 340/4
கவளம் நாள்-தொறும் ஊட்டு எனும் காவலன் – உதயணகுமார:6 341/1
ஊட்டு அரக்கு உண்ட கோலர் ஒண் கோலத்தர் – சூளாமணி:7 650/1
ஊட்டு இலங்கு உருவ கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம் – சூளாமணி:7 693/3
மேல்


ஊட்டுதல் (1)

பலியும் ஊட்டுதல் பாவம் ஈது என பலர்க்கு உரைத்து – நீலகேசி:1 45/2
மேல்


ஊட்டுதற்கு (1)

ஓதும் நோய் மருந்து என ஊட்டுதற்கு உரைப்பவும் – நீலகேசி:1 105/3
மேல்


ஊட்டுதும் (1)

ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால் – நீலகேசி:9 838/1
மேல்


ஊட்டும் (7)

கரும்பு இடு கவளம் ஊட்டும் கம்பலை கலந்த காவின் – சூளாமணி:2 39/2
நல்_வினை இனிதின் ஊட்டும் நல்_வினை முதல்-கண் மாறி – சூளாமணி:11 1851/3
தாய் தன் முலையில் அமுது ஊட்டும் தகையன் அறவோன்-தான் என்று – நீலகேசி:1 134/2
ஒழிக்கும் ஆறும் அஃது ஊட்டும் அவைகளும் – நீலகேசி:3 238/2
ஊட்டும் பொழுதொடு தான் புல் உண்ணும் போழ்தின் கால் – நீலகேசி:6 699/2
ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின் – நீலகேசி:6 723/2
ஊட்டும் முலையும் உதடும் புருவமும் – நீலகேசி:7 757/2
மேல்


ஊடகம் (1)

ஊடகம் கசிந்து ஒசிந்து நின்று சென்று வந்து உலாய் – சூளாமணி:6 485/3
மேல்


ஊடல் (3)

நங்கை-தன் மனம் கலங்கா நலம் புகழ்ந்து ஊடல் நீக்கி – உதயணகுமார:4 203/1
ஊடல் அங்கு இனிய மின்னின் ஒல்கிய மகளிர் ஆடும் – யசோதர:2 88/3
ஊடல் உணர்த்தும் தொழிலது ஒன்று உண்டே – சூளாமணி:5 287/4
மேல்


ஊடலுற்று (1)

ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள் – சூளாமணி:7 621/4
மேல்


ஊடலொடு (1)

ஊடலொடு கூடல் உணர்வார்கள் புணர்வாராய் – நீலகேசி:1 17/3
மேல்


ஊடலோடு (1)

ஒட்டிய வடிவில் தம்மை ஊடலோடு இருப்ப கீறி – சூளாமணி:10 1637/2
மேல்


ஊடிய (1)

ஊடிய தேவி தன்னை உணர்வினும் ஒளியினாலும் – உதயணகுமார:4 202/3
மேல்


ஊடினர் (1)

ஊடினர் சிந்திய ஒண் சுடர் மாலையும் – சூளாமணி:7 655/2
மேல்


ஊடினாய் (1)

ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம் – நீலகேசி:1 131/3
மேல்


ஊடு (16)

ஊடு கொண்ட பொதும்பரொடு உள் விராய் – சூளாமணி:1 31/2
உரை அமர் காவல் பூண் கடையின் ஊடு போய் – சூளாமணி:3 90/2
உக்க சோதிகள் சோலையின் ஊடு எலாம் – சூளாமணி:4 121/3
துளரும் சந்தன சோலைகள் ஊடு எலாம் – சூளாமணி:4 123/3
கூடு தும்பி ஊடு தோய் குழல் தொகை துணர் துதைந்து – சூளாமணி:6 478/1
ஊடு செலற்கு அரிதாய் இடருற்றார் – சூளாமணி:7 655/4
ஊடு அகம் ஓடி எரிந்து ஒளி முந்துறும் – சூளாமணி:7 663/1
வற்றல் அம் சினை ஊடு வலித்து அரோ – சூளாமணி:7 782/2
ஏர் கலந்து பாசிலை பரப்பின் ஊடு இரைத்து அரோ – சூளாமணி:7 795/2
ஒதுக்கமும் வெறி அயர் களனும் ஊடு உலாய் – சூளாமணி:8 1060/2
ஊடு அகம் மடுத்து ஒருவன் உந்தி நனி வந்தான் – சூளாமணி:9 1282/4
ஊடு அகம் ஒளிர் மணி நாகம் கவ்விய – சூளாமணி:9 1406/1
ஊடு போக்கு அரியது ஆக ஒளி நகர் உழையர் சூழ்ந்தார் – சூளாமணி:9 1543/4
ஊடு போவன் என்று உரைத்துரைத்து உள்ளம் செய்து ஒழியும் – நீலகேசி:1 54/4
பெடை ஊடு சாயல் பிணை அன்ன நோக்கி – நீலகேசி:1 110/1
ஊடு புக்கு உயிர் அடும் துயரம்-தான் ஒழிக்கின்றான் – நீலகேசி:2 188/1
மேல்


ஊடுதான் (1)

ஊடுதான் வியல் இடம் உள்ளது இல்லையே – சூளாமணி:11 1887/4
மேல்


ஊடுபோய் (1)

நம்பு நீரணி நாடு உளது ஊடுபோய்
வம்பு வார் பொழில் மா முகில் சூடுவது – யசோதர:1 5/2,3
மேல்


ஊண் (4)

முற்ற ஊண் தொழில் முடிந்த பெற்றியும் – சூளாமணி:7 584/4
அப்பாலது அத்திதியாம் அதனில் அமைந்தால் ஊண் இன்று – சூளாமணி:11 2066/1
ஒழுக்கிற்கும் உரித்து அன்று ஊண் ஓர் இடையூறு உடன் கொடுக்கும் – நீலகேசி:4 277/3
ஆதி அறியில் அவை தீ_வினை ஊண் அதனால் – நீலகேசி:6 724/2
மேல்


ஊணின (1)

ஊணின வாழ்ந்தும் உண்ணாவிடின் சாதலை – நீலகேசி:4 374/2
மேல்


ஊணினை (1)

தீங்கு ஒன்றும் உரையன்-மின் தேவர் தம் ஊணினை சேண் நின்று தாம் – நீலகேசி:9 844/3
மேல்


ஊத்தையோடு (1)

கழுகு உண் ஊத்தையோடு ஏனவும் கவ்வு-மின் – நீலகேசி:5 561/2
மேல்


ஊத (4)

தளை சிறை மன்னன் கேட்ப தான் மகிழ் குழலின் ஊத
உளத்து இயல் பாட்டை கேட்டு யூகியாம் என மகிழ்ந்து – உதயணகுமார:1 81/2,3
நின்று தேன் நிரந்து ஊத விரிந்து அரோ – சூளாமணி:1 18/3
வரி அணிந்து வண்டு ஊத வளர்கின்ற இளவேனில் – சூளாமணி:4 174/3
ஒலி விழா வண்டு இனம் ஊத ஊறு தேன் – சூளாமணி:5 365/1
மேல்


ஊதி (1)

ஊதி மாலையவாய் உறையும் குழல் – சூளாமணி:5 344/3
மேல்


ஊதிய (1)

ஊதிய வயிற்றது என்று உருவம் ஓதினான் – சூளாமணி:10 1598/4
மேல்


ஊதியம் (2)

ஊதியம் இல்லை ஒழி என்று உரைத்தாள் – நீலகேசி:7 767/4
ஏத ஊதியம் இல் என எண்ணித்-தான் – நீலகேசி:10 854/4
மேல்


ஊதியமே (1)

ஊதியமே உணர்ந்தவன் உறு தருமமே உரைத்தான் – நீலகேசி:2 176/2
மேல்


ஊதியூதி (1)

ஊதியூதி வயிறு உள் அளவு எல்லாம் – சூளாமணி:10 1569/3
மேல்


ஊது (4)

ஊது வண்டு உண ஊழ் அடி ஊன்றிய – சூளாமணி:4 127/2
ஊது தேன் இறகு ஊன்றி இருத்-தொறும் – சூளாமணி:4 153/2
உள்ளும் தாது கொண்டு ஊது வண்டு அறாதன ஒளி சேர் – சூளாமணி:7 729/3
ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி – சூளாமணி:9 1538/2
மேல்


ஊதுகின்ற (1)

கோவை வண்டு ஊதுகின்ற குரவு எனும் குரை கொள் மாதர் – சூளாமணி:4 167/1
மேல்


ஊதும் (1)

ஊதும் குழலினன் உலரிய உடுக்கையன் – உதயணகுமார:1 76/3
மேல்


ஊதுலை (1)

ஊதுலை மெழுகின் நின்று உருகினார் அவர் – சூளாமணி:12 2102/3
மேல்


ஊதுவன (1)

காவி என ஊதுவன கைத்தலம் விலங்க – சூளாமணி:6 455/3
மேல்


ஊதை (1)

உளர்வன போதரும் ஊதை உளதே – சூளாமணி:5 291/4
மேல்


ஊமும் (1)

ஒன்றிய செவிடும் ஊமும் ஒருவனால் பெறுதல் உண்டோ – யசோதர:4 246/3
மேல்


ஊமை (1)

ஊமை கூகையும் ஓரியும் உறழ் உறழ் கதிக்கும் – நீலகேசி:1 29/2
மேல்


ஊமையும் (1)

ஓரும்_இல்லாள் உயிரிலி ஊமையும்
தாரமா கொஃடிர் என்றல் சலமதோ – நீலகேசி:3 249/3,4
மேல்


ஊர் (14)

மாவலன் மனம் மகிழ்ந்து வந்து ஊர் புக்கு இருக்கும் நாளில் – உதயணகுமார:1 25/2
உவளகத்து இறங்கி சென்றே ஊர் நிலத்து அருகு செல்ல – உதயணகுமார:1 115/1
உவமை_இல் வயந்தகன் தன் ஊர் வந்து உடன் போந்ததும் – உதயணகுமார:2 128/2
மீண்டவன் வந்து ஊர் புக்கு வேந்தனை வணங்கி நிற்ப – உதயணகுமார:4 195/1
ஊர் அணி புகழினான யூகியும் மற்றுள்ளாரும் – உதயணகுமார:4 196/2
வயந்தகன்-தனக்கு வாய்ந்த பதினெட்டு ஊர் கொடுத்தான் அன்றே – உதயணகுமார:4 207/4
இந்திரன்-தன் ஊர் இயல்பின் ஏகினான் – உதயணகுமார:5 301/4
கடகம் என்பது ஊர் காதல் பிராமணன் – உதயணகுமார:6 337/1
உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி – நாககுமார:2 58/2
ஊர் அணி கொடிகள் ஓங்கும் உத்தரமதுரை-தன்னில் – நாககுமார:3 75/2
நந்திய வியாளன்-தன் ஊர் மதுரையில் புக்கு இருந்து – நாககுமார:3 86/3
தங்கள் ஊர் நாமமும் தந்தை_தாய் பேர் உரைத்து – நாககுமார:3 88/3
உலைதல்_இல் உறு_வலீயான் ஊர் சயந்தகிரி அடைந்தான் – நாககுமார:4 116/4
ஊர் இது காடு இது-தான் எனல் என்னை ஒருங்கு உளவேல் – நீலகேசி:5 502/1
மேல்


ஊர்-தோறும் (1)

ஊரின் ஊர்-தோறும் ஒவ்வா ஒளியிற்றே ஞாயிறு என்றும் – நீலகேசி:4 437/2
மேல்


ஊர்க்கு (3)

போவதே பொருள் ஊர்க்கு என்று புரவலன் உரைப்ப போந்தான் – உதயணகுமார:1 116/4
சுகந்தி ஊர்க்கு இறை சொல் புகழ் மா தவன் – உதயணகுமார:6 344/1
என் தமரோடும் கூட எங்கள் ஊர்க்கு ஏற சென்றோம் – நாககுமார:3 89/4
மேல்


ஊர்களே (1)

ஓங்கு இரும் சிலம்பினால் சிலம்பும் ஊர்களே – சூளாமணி:1 9/4
மேல்


ஊர்தர (1)

அந்தில் ஊர்தர வேர்த்து உருள குடர் – யசோதர:3 177/3
மேல்


ஊர்தியும் (1)

நிரை செலல் கொடுஞ்சி நல் நேமி ஊர்தியும்
அரசு உடை பெரும் கடை நெருங்கும் ஆர்கலி – நீலகேசி:1 25/2,3
மேல்


ஊர்ந்தனர் (1)

நெறி கண்டு ஊர்ந்தனர் நீலமலை என – உதயணகுமார:1 40/4
மேல்


ஊர்ந்து (8)

ஊர்ந்து காட்டினான் உற்ற அமைச்சருள் – உதயணகுமார:1 41/3
உறு மனத்துடன் ஊர்ந்து முன்னே வர – உதயணகுமார:1 49/2
உற்ற நல் வீதி-தோறும் ஊர்ந்து நல் சாரிவட்டம் – உதயணகுமார:1 99/3
வரை நிகர் யானை ஊர்ந்து மாவுடன் தேரில் ஏறி – உதயணகுமார:1 104/3
உற்ற ஊர் வீதி-தோறும் ஊர்ந்து தீக்கு ஓடி ஆட்டி – நாககுமார:2 58/2
படு மத களிறும் தேர் மா புகழ்பெற ஊர்ந்து மூன்றாம் – நாககுமார:2 59/3
ஒக்க மிக்க களிறுடனே ஊர்ந்து தினம் சென்றான் – நாககுமார:5 160/4
பா இதழ் பரப்பின் மேல் அரத்த கோபம் ஊர்ந்து அயல் – சூளாமணி:7 793/3
மேல்


ஊர்ந்தும் (1)

ஊர்ந்தும் உழுதும் உறு பாரம் ஏந்தியும் – சூளாமணி:11 1961/1
மேல்


ஊர்மச்சி (1)

ஊரும் சங்கினோடு ஊர்மச்சி மூக்கு இல – நீலகேசி:10 877/2
மேல்


ஊர்முகம் (1)

தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன் – உதயணகுமார:3 183/3
மேல்


ஊர்வதே (1)

தோட்டியிட்டு ஊர்வதே போல் சூரிய சோமன்-தானும் – நீலகேசி:3 265/2
மேல்


ஊர்வன (1)

பறப்ப நடப்ப தவழ்வன ஊர்வன பற்பலவா – நீலகேசி:1 80/2
மேல்


ஊர்வனவும் (1)

ஊர்வனவும் போலாது உவசமத்தின் உய்ப்பனவும் – நீலகேசி:1 113/2
மேல்


ஊர (2)

அரு முடி அரசர் தாழ்ந்த அடி மிசை அரவம் ஊர
கரு வடி நெடும் கண் நல்லார் கலந்த தோள் வல்லி புல்ல – சூளாமணி:6 556/1,2
உண்ட வான் கழல்கள் சூழ்ந்த திரு_அடி அரவம் ஊர
கண்டவாறு இங்கணார்க்கும் கருதுவது அரிது கண்டாய் – சூளாமணி:6 557/3,4
மேல்


ஊரது (2)

பேம் கொள் பேரது அ ஊரது பிணம் படு பெருங்காடு – நீலகேசி:1 27/2
ஊரது நடுவண் ஒரு உறையுளில் மலம்பெய்திட்டு ஒளித்து ஒழியின் – நீலகேசி:9 829/2
மேல்


ஊரல் (1)

ஊரல் ஓவாது அனன்று உயிரை உண்டிடுதலால் – சூளாமணி:7 736/3
மேல்


ஊரில் (1)

உன்னிய யூகி மிக்க ஊரில் தீயிடுவித்தானே – உதயணகுமார:1 110/4
மேல்


ஊரின் (2)

காமம் ஊரின் கணிகையரோடு அன்ன – நீலகேசி:3 244/1
ஊரின் ஊர்-தோறும் ஒவ்வா ஒளியிற்றே ஞாயிறு என்றும் – நீலகேசி:4 437/2
மேல்


ஊருணி (1)

ஊருணி நீர் நிறைவு உண்டோ உறு புனல் – நீலகேசி:5 615/3
மேல்


ஊரும் (3)

ஊரும் வேதனையரே – நீலகேசி:1 92/4
ஓடி ஊரும் ஆதலால் – நீலகேசி:1 96/2
ஊரும் சங்கினோடு ஊர்மச்சி மூக்கு இல – நீலகேசி:10 877/2
மேல்


ஊழ் (10)

உள் நிலா எழுதரு காம ஊழ் எரி – சூளாமணி:3 83/2
ஊது வண்டு உண ஊழ் அடி ஊன்றிய – சூளாமணி:4 127/2
உற்று அடு பிணியும் மூப்பும் ஊழ் உறு துயரும் நீக்கி – சூளாமணி:4 202/1
ஊழ் வரவு அன்னதேனும் ஒரு வகை கருமம் எல்லாம் – சூளாமணி:5 249/1
உரிதினின் ஒருவன் செய்த ஊழ்_வினை உதயம் செய்து – சூளாமணி:5 274/1
ஒன்று நாம் கருதி சூழின் ஊழ் அது விளைவு தானே – சூளாமணி:5 358/1
ஊழ் புரிந்து உறுதி கூறும் உயர் குலம் மலர நின்றான் – சூளாமணி:5 359/2
உருவமும் புகழும் என்று ஆங்கு அவற்றின் ஊழ் காத்து வந்து – சூளாமணி:7 776/2
ஒண்_தொடி தாதையொடு ஊழ் உயிர் வௌவி – சூளாமணி:9 1226/2
ஓதநீர்_வண்ணன் பாடி நூழில் ஊழ் இயங்குவாரும் – சூளாமணி:10 1639/4
மேல்


ஊழ்_வினை (1)

உரிதினின் ஒருவன் செய்த ஊழ்_வினை உதயம் செய்து – சூளாமணி:5 274/1
மேல்


ஊழ்த்தன (1)

வள் இதழ் குருதியின் வடிவில் ஊழ்த்தன
கள் அவிழ் கண்ணியாய் விரியும் நாள் என – சூளாமணி:10 1590/2,3
மேல்


ஊழாம் (1)

ஊழாம் பிறப்பும் உவ்வாதம்_அல்லார் உரு ஒப்பினரே – நீலகேசி:1 76/4
மேல்


ஊழி (22)

ஊழி காலம் ஓடின என்னும் உரையாலும் – சூளாமணி:5 314/2
ஊழி_தீ என்று வேந்தர் உட்குவது உருவ தாரோய் – சூளாமணி:5 321/4
முற்றிய ஊழி மூன்று ஏறி மீள் வழி – சூளாமணி:5 392/3
பிற்றகை ஊழி இவண் பிரமர் தோன்றினார் – சூளாமணி:5 392/4
ஊழி மூன்றாவது ஓய்ந்து இறுதி மன் உயிர் – சூளாமணி:5 394/1
உலன் நலன் அடு திண் தோள் ஊழி வேல் ஓடை யானை – சூளாமணி:6 572/1
ஊழி நீர் உலகம் காக்கும் முழவு தோள் உருவ தாரான் – சூளாமணி:8 933/4
ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் – சூளாமணி:9 1167/2
ஊழி பேர் எரியுள் நெய் சொரிந்தது ஒப்பவே – சூளாமணி:9 1257/4
ஒன்று போர் உலகினை ஊழி ஒத்ததே – சூளாமணி:9 1271/4
ஊழி நாள் எரியும் கூற்றமும் உருமும் ஒப்பவன் கை படை நவின்றான் – சூளாமணி:9 1317/3
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
ஒருவன் ஓர் நாஞ்சிலால் ஊழி_தீ புரை – சூளாமணி:9 1416/1
ஒழுக நெடுமால் முனிவு என்னும் ஊழி_தீயும் அவிந்ததே – சூளாமணி:9 1482/4
ஒலி கல ஒலிகளும் விரவி ஊழி நீர் – சூளாமணி:10 1713/2
ஊழி காண்பு அரிய தோன்றல் உக்கிர குலத்து வேந்தன் – சூளாமணி:10 1787/1
ஊழி தேர் அரசு இறைஞ்ச உலகு எலாம் ஒரு குடை கீழ் உறங்க காத்த – சூளாமணி:10 1804/3
ஒளியானை ஊழி முதல்_ஆனானை ஓங்கி உலகு அளவும் ஆகி உயிர்-தமக்கு உறுகண் செய்யா – சூளாமணி:11 1906/2
ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய் – சூளாமணி:11 2020/4
ஒப்பாரும் பிறிது இவண் இன்று ஊழி நாள் பெயர்ந்து இழிவு இன்று – சூளாமணி:11 2066/2
ஒருவாமை வேட்டு எய்தி ஊழி பெயர்ந்தாலும் – சூளாமணி:12 2123/3
மேல்


ஊழி-தொறு (1)

ஊழி-தொறு ஊழி உலப்பு_இல கண்டாய் – சூளாமணி:11 2020/4
மேல்


ஊழி_தீ (4)

ஊழி_தீ என்று வேந்தர் உட்குவது உருவ தாரோய் – சூளாமணி:5 321/4
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்கோ – சூளாமணி:9 1318/2
உலை மடுத்து உலகம் பதலையா ஊழி_தீ மடுத்து உயிர்கள் அட்டு உண்பாய் – சூளாமணி:9 1320/2
ஒருவன் ஓர் நாஞ்சிலால் ஊழி_தீ புரை – சூளாமணி:9 1416/1
மேல்


ஊழி_தீயும் (1)

ஒழுக நெடுமால் முனிவு என்னும் ஊழி_தீயும் அவிந்ததே – சூளாமணி:9 1482/4
மேல்


ஊழிகள் (1)

ஊழிகள் பெயர்க்கலுற்று இ உலகினை பிறிது ஒன்று ஆக்கி – சூளாமணி:9 1154/1
மேல்


ஊழியார் (1)

ஊழியார் உரையும் ஒத்து உள கண்டாய் – சூளாமணி:5 333/4
மேல்


ஊழியால் (1)

மாற்று_அறு மண்டிலம்-அதனுள் ஊழியால்
ஏற்று_இழிபு உடையன இரண்டு கண்டமாம் – சூளாமணி:5 391/1,2
மேல்


ஊழியான் (1)

ஊழியான் ஒளி மலர் உருவ சேவடி – சூளாமணி:5 398/3
மேல்


ஊழின் (1)

ஒட்டிய ஊழின் அன்றி உயிர் கொளல் ஒழிக என்று – சூளாமணி:8 916/1
மேல்


ஊற்றினை (1)

ஊற்றினை செறித்திடும் உறு தவனுடை சாரணை – நாககுமார:4 144/1
மேல்


ஊற்று (4)

பத்து வகை ஊற்று அடைத்து பயின்ற அங்கம் பத்தொன்றும் – உதயணகுமார:6 364/2
அவ்வளவு அவருக்கு ஊற்று செறித்து உடன் உதிர்ப்பை ஆக்கும் – யசோதர:1 70/2
கள் உறைத்-தொறும் கழுமி ஊற்று அறா – சூளாமணி:7 579/3
ஊற்று செறித்த ஒரு பெயர் மா தவன் – சூளாமணி:11 1915/2
மேல்


ஊற்றை (1)

ஊடினாய் ஆக ஒழுக்கு ஊற்றை பல் பண்டம் – நீலகேசி:1 131/3
மேல்


ஊற (3)

ஆயிடை அத்தி கூடத்து அயல் எழுந்து அமிர்தம் ஊற
சேயிடை சென்று ஓர் கீதம் செவி புக விடுத்தலோடும – யசோதர:2 94/1,2
நெறியினில் அறிவது ஊற நின்றனர் விலகி நிற்பர் – யசோதர:5 308/2
மண்டிமண்டி வர வாய் எயிறு ஊற
கொண்டுகொண்டு குவியா இவை காணாய் – சூளாமணி:10 1576/2,3
மேல்


ஊறல் (1)

பாடலின் அமிர்த ஊறல் பருகினன் மகிழ்ந்து இருந்தான் – யசோதர:4 228/4
மேல்


ஊறி (2)

ஊறி வந்து ஒழுகும் ஒருபால் எலாம் – சூளாமணி:1 19/4
ஆம்பல் நாணும் செம் துவர்_வாயார் அமிர்து ஊறி
ஆம்பல் நாணும் தேம் மொழி நல்லார் அலர் தூவி – சூளாமணி:9 1525/1,2
மேல்


ஊறிய (1)

தெங்கு அம் தீம் குலை ஊறிய தேறலும் – சூளாமணி:1 32/2
மேல்


ஊறு (9)

ஊனோர் உட்கும் ஒண் சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய் – சூளாமணி:5 316/4
ஒலி விழா வண்டு இனம் ஊத ஊறு தேன் – சூளாமணி:5 365/1
ஊறு பல செய்து உயிர்கட்கு இடர்செய்யும் – சூளாமணி:11 1998/1
ஊறு அங்கி உரு உரு செய்தாலும் உவந்து ஒழிபவால் – நீலகேசி:1 38/2
ஊறு யாவதும் உணராய் உறல் வகை இது என உரைத்தி – நீலகேசி:2 158/1
ஓதல்_இல் உணர்வும் இன்றேல் ஊறு அவற்கு உண்டும் ஆகும் – நீலகேசி:4 442/1
நலம் ஆகிய நாற்றமொடு ஊறு இவை-தாம் – நீலகேசி:5 486/2
தோற்றமும் நாற்றமும் சுவையுடன் ஊறு இவற்றால் தொடங்கி – நீலகேசி:9 830/1
வண்ணம் நாற்றம் சுவையினொடு ஊறு ஒலி – நீலகேசி:10 857/3
மேல்


ஊறுசெய்து (1)

ஊறுசெய்து உலகினின் உவப்பது இல்லையே – சூளாமணி:2 54/2
மேல்


ஊறுபடுத்தவள் (1)

ஒற்றை_நின்றாள் துணை ஊறுபடுத்தவள்
குற்றம் அன்றோ சென்று கூடுவது ஏடா – நீலகேசி:4 332/3,4
மேல்


ஊறும் (4)

ஊறும் தீவினை வாய்-தன்னை உற்று உடன் செறியப்பண்ணும் – உதயணகுமார:1 4/1
தாம் துணர் துணையோடு ஆடி சாறு கொண்டு ஊறும் ஏர் ஆர் – சூளாமணி:4 162/3
உரிய தானம் பெறா உறங்கி ஊறும் கொளா – சூளாமணி:7 737/3
ஒழுகிய முடையும் நீரும் முதல கையிகப்ப ஊறும்
அழுகல் இ அள்ளல் யாக்கை அகம் புறம் ஆயிற்று ஆயில் – சூளாமணி:11 1850/1,2
மேல்


ஊறுமே (4)

ஊறுமே எயிறு ஊறுமே – சூளாமணி:10 1619/1
ஊறுமே எயிறு ஊறுமே
வீறு சேர் விரி கோதையாய் – சூளாமணி:10 1619/1,2
ஊறுமே எயிறு ஊறுமே – சூளாமணி:10 1619/4
ஊறுமே எயிறு ஊறுமே – சூளாமணி:10 1619/4
மேல்


ஊறே (2)

உரும் இடியும் எல்லாம் உயிர்_அல்ல ஊறே – நீலகேசி:1 111/4
ஒக்க இவை மூன்றும் உயிர் உடைய ஊறே – நீலகேசி:1 112/4
மேல்


ஊன் (34)

ஊன் உமிழ்ந்து இலங்கும் வேலான் உன்னத முகில் எழுந்து – உதயணகுமார:1 10/1
ஊன் உமிழ் கதிர் வேல் மன்னன் உருமண்ணுவாவு-தன்னை – உதயணகுமார:4 206/2
ஊன் உயிர் இன்பம் எண்ணி எண்ணம் மற்று ஒன்றும் இன்றி – யசோதர:2 140/3
ஈட்டிய ஊன் செய் யாக்கை எம்-உழை இன்னவாறு – சூளாமணி:6 526/1
ஒருவனது இரண்டு யாக்கை ஊன் பயில் நரம்பின் யாத்த – சூளாமணி:7 776/1
ஊன் இவர் அலங்கல் வேலோய் உய்த்து உணர்ந்து அருளுக என்றாள் – சூளாமணி:8 1017/4
ஊன் ஆர் வேலான் உள்ளம் இழந்தான் உழையாரை – சூளாமணி:8 1124/2
ஊன் அமர் குழம்பு பொங்க உழுதிட்டு வென்றி வித்தி – சூளாமணி:9 1199/3
ஊன் உடம்பு இதன்பொருட்டு உடையல் வேண்டுமோ – சூளாமணி:9 1383/4
ஊன் ஆரும் மற ஆழி ஓடை மால் யானை உடையான்-தன் ஒளி முடியின் மேல் உரையோம் நிற்க – சூளாமணி:11 1908/2
ஊன் நெய் உருகும் உழக்கும் ஒரு பால் – சூளாமணி:11 1960/4
காதலரில் பிழையாராய் கள் ஊன் தேன் கடிந்து அகற்றி – சூளாமணி:11 2047/1
ஊன் இலா உறுப்பு அமையா ஒளிய மா உலகு எல்லாம் – சூளாமணி:11 2065/1
ஊன் இவர் வேலினீர் உங்கள்பாலதால் – சூளாமணி:12 2092/2
ஊன் கொண்ட காட்சி முதலாக உடைத்து அது எல்லாம் – நீலகேசி:0 9/3
ஊன் உடம்பு என்னில் உதிரமாம் உயிர் என்னின் – நீலகேசி:1 37/3
கொன்ற பாவம் என்றும் ஊன்
தின்ற பாவம் என்று தீ – நீலகேசி:1 97/1,2
ஊன் தின்றல் இழுக்கு என்னான் உயிரினையும் உளது என்னான் – நீலகேசி:2 163/1
ஊன் கொடுமை உரைத்தான் அஃது உணர்ந்திலனே ஆகாதோ – நீலகேசி:2 181/2
மொள்ளும் ஆறும் முதுகு நெளித்து உண்டு ஊன்
அள்ளுமாறும் அணல் எடுத்திட்டவை – நீலகேசி:3 237/2,3
உரைப்ப பேர்_அருள் உண்பன மீனொடு ஊன்
திரைப்ப மெல் அணை செய்வ விழு தவம் – நீலகேசி:3 251/1,2
உடைக்கு இயைந்த ஒலி அற்றால் ஊன் தருவார்க்கு உணர்த்துமால் – நீலகேசி:4 273/2
ஊன் அடுவார் இடுவாரை ஒளித்தலில் – நீலகேசி:4 335/2
ஊன் மெய் கொண்டு உண்பவன் உன் அலது என்றாள் – நீலகேசி:4 342/4
ஓ எனும் ஊன் விலை வாணிகர் என்று இனர் – நீலகேசி:4 344/3
மாயத்தின் ஊன் உண்ண மன்னும் அருமையின் – நீலகேசி:4 349/2
வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன்
பயிறல்_இல் பட்டினிகள் விட்டும் இன்ன கட்டமாய் – நீலகேசி:4 350/1,2
உடம்பின் உள்ள பல் உயிர் சாவ ஊன் உண் மானுக்கு – நீலகேசி:4 360/1
அங்காடி பண்ட ஊன் தின்ன அறம்_உரைத்தார்க்கு – நீலகேசி:5 470/1
விலை படைத்தார் ஊன் வேண்ட அ விலை-தான் வேண்டி – நீலகேசி:5 471/1
ஒன்றானும் வேண்டான் பிறர்க்கே உழந்தான் ஊன்
தின்றானும் தீ_வினையை சேரும் என சொன்னால் – நீலகேசி:5 472/2,3
ஊன் உளதாய உயிர் பிரதேசம் உணர்வு-அது போல் – நீலகேசி:6 714/2
ஓர்ப்பவன் சொல் அவன் ஊன் அவன் தீன் அவன் – நீலகேசி:7 773/1
ஒன்றுவியேன்_அலனோ வினை ஊன் தின்பவர்க்கு ஒப்ப என்றாள் – நீலகேசி:9 841/4
மேல்


ஊன்களும் (1)

கொல்ல வந்த ஊன்களும் குற்றம் என்றவாறு-கொல் – நீலகேசி:4 361/4
மேல்


ஊன்ற (5)

வெய் எரி கண்டது உண்டோ விறகொடு விறகை ஊன்ற
ஐயென அங்கி தோன்றி அதனையும் எரிக்கலுற்றது – யசோதர:4 236/2,3
ஏறி வண்டு இனம் ஊன்ற இழிந்த தேன் – சூளாமணி:1 19/3
வாழைத்தண்டினுள் ஊன்ற மழுங்குமோ – சூளாமணி:7 636/2
தொடு கடா வயிர தோட்டி உடையன தொடர்கள் ஊன்ற
விடு கொடா வியாளம் நிற்ப மெல்ல வன் பணிகள் செய்யும் – சூளாமணி:8 912/2,3
விழு மலர் துகள் வந்து ஊன்ற மெல் அடி மெலிந்த என்பார் – சூளாமணி:10 1642/2
மேல்


ஊன்றல் (1)

வழி முள் ஊன்றல் மனை சுடல் மாந்தரை – நீலகேசி:5 540/1
மேல்


ஊன்றலால் (1)

மா துணர் பொதும்பர் வந்து வைக மற்று அது ஊன்றலால்
தேம் துணர் சுமந்து ஒசிந்து அசைந்த தேவதாரமே – சூளாமணி:4 135/3,4
மேல்


ஊன்றலும் (1)

சேண் உயர் திகிரியான் கதிர் சென்று ஊன்றலும்
பாணியால் கரந்த முன் பரந்த சோதியே – சூளாமணி:8 1066/3,4
மேல்


ஊன்றவே (1)

உள் மிசை ஒழி படை ஆகி ஊன்றவே – சூளாமணி:9 1258/4
மேல்


ஊன்றி (10)

கால்களின் விரலின் நெற்றி கனக்க நன்கு ஊன்றி நின்று – உதயணகுமார:1 101/2
அம் சுடர் எயிற்ற ஆளி அணி முகம் மலர ஊன்றி
செம் சுடர் அணி பொன் சிங்காசனம் மிசை சேர்ந்த செல்வன் – சூளாமணி:3 95/2,3
ஊது தேன் இறகு ஊன்றி இருத்-தொறும் – சூளாமணி:4 153/2
கண் இயல் விலங்கல் நெற்றி கதிர் என்னும் கையின் ஊன்றி
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/2,3
அருவி இலங்கும் மத யானை அனல ஊன்றி அணை போழ்தில் – சூளாமணி:9 1339/1
எரி மணி கடக கை இரண்டும் ஊன்றி அ – சூளாமணி:9 1512/1
ஒன்று தன் செறி குறங்கு ஊன்றி கைத்தலம் – சூளாமணி:9 1517/1
உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி
புள் எழு தடமும் போர் மான் தொழுதியும் மிதுனம் ஆய – சூளாமணி:10 1640/2,3
உரை தரு காரிகையார் ஊன்றி மிதித்து – சூளாமணி:10 1652/2
தேன் அருளி மந்தார செம் தாமம் தாழ்ந்து திரள் அரைய செம்பவளம் வம்பாக ஊன்றி
வான் அருளி மாணிக்க செம் கதிர்கள் வீசி மதி மருட்டும் வெண் குடை ஓர் மூன்று உடைய வாமன் – சூளாமணி:11 1909/1,2
மேல்


ஊன்றிய (3)

ஊது வண்டு உண ஊழ் அடி ஊன்றிய
பாதராகம் பதித்த பளிக்கு அறை – சூளாமணி:4 127/2,3
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
தெள்ளு வண் பவழ திரள் ஊன்றிய
வெள்ளி மண்டபமும் விரை நாறுப – சூளாமணி:8 896/1,2
மேல்


ஊன்றியும் (1)

வெம் செம் முள்ளினை வீறிட ஊன்றியும்
மிஞ்சி கால் விலங்கில் சிறைசெய்தனன் – உதயணகுமார:6 350/2,3
மேல்


ஊன்றின (1)

ஊன்றின கீழ்க்கீழ் உயர்ந்தன வாழ்நாள் – சூளாமணி:11 1948/4
மேல்


ஊன்றினான் (1)

ஆளி ஏறு_அனையவன் அழுந்த ஊன்றினான் – சூளாமணி:9 1417/4
மேல்


ஊன்றுகின்றவே (1)

உந்தி ஒன்று ஒன்றினை ஊன்றுகின்றவே – சூளாமணி:11 1885/4
மேல்


ஊன்றும் (1)

செம் சுடர் கடவுள் திண் தேர் இவுளி கால் திவள ஊன்றும்
மஞ்சு உடை மதர்வை நெற்றி வான் உழு வாயில் மாடத்து – சூளாமணி:2 38/1,2
மேல்


ஊன்றுமால் (1)

இறுமால் இ மின் மருங்குல் என் பாவம் என்பார் இளம் முலை மேல் ஏர் வடம் வந்து ஊன்றுமால் என்பார் – சூளாமணி:10 1756/2
மேல்


ஊன (2)

ஊன மாற்றர் மேல் யூகி போர்போனதும் – உதயணகுமார:1 38/1
ஊன மனம் இன்றி உயிர்கட்கு உறுதி உள்ளி – யசோதர:5 277/3
மேல்


ஊனகத்தவர் (1)

ஊனகத்தவர் போகம் உவந்து அரோ – சூளாமணி:4 125/3
மேல்


ஊனத்தை (2)

ஊனத்தை இன்றி உயிர் ஆதிய உள் பொருள்கள் – நீலகேசி:1 117/3
ஊனத்தை இன்றி வழங்கா உழல்கின்ற போழ்தும் – நீலகேசி:4 417/1
மேல்


ஊனம் (9)

ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணு பிரிதல் இன்றி – உதயணகுமார:3 163/3
ஊனம் கண்டேன் ஒட்டினும் ஒட்டேன் உரைசெய்கேன் – சூளாமணி:5 309/4
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள் – சூளாமணி:9 1193/2
ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் உள்ளிடை – சூளாமணி:9 1224/3
நிலையின செல்வக்கு ஊனம் நிகழ்வன உரை-மின் என்றான் – சூளாமணி:11 1853/3
ஊனம் உயிர்களுக்கு எல்லாம் உணர்வது – சூளாமணி:11 1996/2
உடன் இல்லை ஆயினும் ஊனம் இங்கு எவன் என்பாய் – நீலகேசி:4 295/2
ஊனம் தோன்றில் உரைத்தனன் என்றியேல் – நீலகேசி:4 325/2
ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும் – நீலகேசி:4 354/2
மேல்


ஊனம்_இல் (3)

ஊனம்_இல் விச்சை-தன்னால் உருமண்ணு பிரிதல் இன்றி – உதயணகுமார:3 163/3
ஊனம்_இல் அகலம் மூழ்கி உள்ளுற சிவந்த ஒள் வாள் – சூளாமணி:9 1193/2
ஊனம்_இல் தியானமே உணர்ச்சியோடு உபாயமும் – நீலகேசி:4 354/2
மேல்


ஊனமர் (1)

ஊனமர் உலகம் ஆளும் ஊழி ஒன்று இது அன்று ஆயில் – சூளாமணி:9 1167/2
மேல்


ஊனமாம் (1)

ஊனமாம் என ஓடுவீர் – சூளாமணி:9 1357/2
மேல்


ஊனமாய் (1)

ஊனமாய் இருள் பிழம்பு உறங்குகின்றது ஒக்குமே – சூளாமணி:7 792/4
மேல்


ஊனவர் (2)

ஊனவர் மனித்தர் ஏக உவனுக்கு ஓர் துகளும் ஆகார் – சூளாமணி:9 1155/2
ஊனவர் தம்முள் நீயே உயிர் எனக்கு இழக்கலுற்றாய் – சூளாமணி:9 1445/4
மேல்


ஊனாய் (1)

இங்கு ஆடி வாழ்வனவும் ஊனாய் வந்து ஈண்டியவால் – நீலகேசி:5 470/2
மேல்


ஊனுக்கே (1)

கையத்தின் ஊனுக்கே கன்றி கலாய்த்தனவும் – நீலகேசி:3 257/3
மேல்


ஊனுடம்போ (1)

ஊனுடம்போ உயிரோ உறு குழவி ஆதல் – நீலகேசி:1 37/1
மேல்


ஊனை (1)

மயித்திரம் பாவித்து மற்று அவற்று ஊனை
அசிப்பனவே போல் அமர்ந்து இருந்து உண்ணும் – நீலகேசி:3 254/1,2
மேல்


ஊனொடு (1)

உயா பிழைத்தாய் மெழுகு ஊனொடு பட்ட – நீலகேசி:4 364/3
மேல்


ஊனோர் (1)

ஊனோர் உட்கும் ஒண் சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய் – சூளாமணி:5 316/4

மேல்