வெ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வெஃகாமை 1
வெஃகி 2
வெகு 2
வெகுண்டார் 1
வெகுண்டு 8
வெகுண்டே 1
வெகுளி 5
வெகுளியில் 1
வெகுளியின் 1
வெங்கணவர் 1
வெங்கணார்க்கு 1
வெட்கத்தின் 1
வெட்கம் 9
வெட்கம்_இல்லீர் 1
வெட்கமும் 1
வெட்கி 1
வெட்டவெள்ளிடை 1
வெட்டவெளியின் 1
வெட்டுண்டு 1
வெடித்த 2
வெடித்தது 1
வெடித்தவே 1
வெடித்திட 1
வெடித்திலது 1
வெண் 24
வெண்_தலை 1
வெண்_நகையர் 1
வெண்ணெய் 2
வெண்ணெயை 1
வெதுப்ப 2
வெதுப்பிட 1
வெதுப்பிரும் 1
வெதுப்பு 1
வெதுப்பும் 1
வெதுப்புறீஇ 1
வெதுப்புறு 1
வெதும்ப 1
வெதும்பி 3
வெதும்பிற்று 1
வெதும்பின் 1
வெந் 1
வெந்த 1
வெந்து 10
வெந்தே 1
வெந்நிட்ட 1
வெந்நிட்டு 3
வெந்நிட 2
வெந்நிடலோ 1
வெந்நிடாது 1
வெந்நிடின் 1
வெந்நிடை 1
வெந்நீரால் 1
வெப்ப 1
வெப்பம் 1
வெப்பாலையை 1
வெப்பு 1
வெப்புறு 1
வெம் 151
வெம்பி 11
வெம்பு 6
வெம்புதல் 1
வெம்பும் 2
வெம்புறு 1
வெம்மை 1
வெம்மையால் 1
வெம்மையை 1
வெய்தாம் 1
வெய்தின் 1
வெய்தினில் 1
வெய்து 8
வெய்துயிர்த்தார் 1
வெய்துயிர்த்து 2
வெய்துயிர்ப்பாள் 1
வெய்துற 2
வெய்ய 25
வெய்யர் 1
வெய்யரில் 1
வெய்யவர் 1
வெய்யவரை 1
வெய்யவன் 1
வெய்யவன்-தனை 1
வெய்யன் 1
வெய்யோர் 1
வெய்யோன் 12
வெயர் 3
வெயர்வை 1
வெயில் 3
வெயிலால் 1
வெயிலிடை 2
வெயிலில் 1
வெயிலை 1
வெயிலையும் 2
வெயிற்கு 1
வெரிந் 5
வெரீஇ 6
வெரு 3
வெருக்கொள 1
வெருட்சி 3
வெருட்சியாம் 1
வெருட்டலில் 2
வெருட்டி 3
வெருட்டிடு 1
வெருட்டு 1
வெருட்டுபு 3
வெருட்டும் 1
வெருட்டுவன 1
வெருண்ட 2
வெருண்டதும் 2
வெருண்டனர் 2
வெருண்டு 14
வெருண்டேன் 1
வெருவரல் 1
வெருவரு 2
வெருவரும் 2
வெருவா 1
வெருவி 4
வெருவியோர் 2
வெருவுறாது 1
வெருள் 1
வெருளும் 1
வெருளுற்றார் 1
வெருளுறீஇ 1
வெருளுறும் 1
வெல் 1
வெல்குக 1
வெல்வதும் 1
வெவ் 36
வெவ்_வினை 5
வெவ்_வினைகள் 1
வெவ்விய 8
வெவ்வேறு 1
வெள் 12
வெள்_வீச்சுக்காரர் 1
வெள்ள 1
வெள்ளம் 9
வெள்ளமே 1
வெள்ளரி 1
வெள்ளாண்மை 1
வெள்ளி 5
வெள்ளிக்கு 1
வெள்ளிடை 1
வெள்ளிய 1
வெள்ளியங்கிரியில் 1
வெள்ளியில் 1
வெள்ளை 1
வெளி 8
வெளிக்கு 1
வெளிப்பட்டிடும் 1
வெளிப்பட்டு 2
வெளிப்பட 1
வெளிப்படுத்தி 1
வெளிப்படுத்தினர் 1
வெளிப்படுதற்கு 1
வெளிப்படுமால் 1
வெளிப்படை 1
வெளிப்படையாக்க 1
வெளிப்படையாக 1
வெளிப்படையாய 1
வெளிப்படையில் 1
வெளியா 1
வெளியினால் 1
வெளியே 1
வெளியை 1
வெளிவந்த 1
வெளிறுமால் 1
வெளுக்க 1
வெளுத்தது 2
வெளுத்து 2
வெற்பிடை 1
வெற்பு 3
வெற்றி 8
வெற்றிபெற்று 1
வெற்றிபெறுவாய் 1
வெற்றிபெறுவாய்_அலை 1
வெற்று 3
வெறி 2
வெறித்த 1
வெறியர் 1
வெறியா 1
வெறியாட்டின் 1
வெறுக்கும் 2
வெறுக்கையை 1
வெறுத்த 1
வெறுத்தவன் 1
வெறுத்தனர் 1
வெறுத்தனன் 1
வெறுத்திட்டு 2
வெறுத்திடாதீர் 1
வெறுத்து 12
வெறுத்துளம் 1
வெறுத்தேன் 1
வெறுப்பது 1
வெறுப்பான் 1
வெறுப்பு 2
வெறுப்புறு 1
வெறும் 7
வெறும்_சொலில் 1
வெறுமை 2
வெறுமையில் 1
வெறுமையை 1
வென்றது 1
வென்றார் 1
வென்றி 19
வென்றியே 1
வென்றியோடு 1
வென்று 6

வெஃகாமை (1)

வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை
நொந்தவருக்கு உதவும் திறன் மற்று இன நூல் ஓதும் – நிதான:2 69/2,3
மேல்


வெஃகி (2)

வெள்ளியில் படும் முப்பது காசு இதை வெஃகி – குமார:2 296/4
கைப்பொருள் வெஃகி பொய்த்த காதகர் கவிழ்ந்தார் முன்னம் – ஆரணிய:5 75/4
மேல்


வெகு (2)

விந்தை ஆரோப வித்தை வெகு வித விநோத வித்தை – நிதான:7 66/4
விண்டு உயிர் கேடு சூழும் வெகு ஜந துரோகி என்னும் – ஆரணிய:3 13/1
மேல்


வெகுண்டார் (1)

மெய் உயிரை வாதைபுரிவாம் என வெகுண்டார் – குமார:2 138/4
மேல்


வெகுண்டு (8)

மேயது என் என வினாவி அறிந்தனன் வெகுண்டு நின்றான் – ஆதி:9 120/2
அங்கு அவன் வெகுண்டு உனை அடர்த்து உயிர் அழித்து – ஆதி:13 24/2
மீண்டு வழி பற்று என வெகுண்டு மதி சொல்லி – ஆதி:13 31/1
வெய்ய வாக்கினை தீர்ப்பிடுக என்றனர் வெகுண்டு – குமார:2 214/4
மீ கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு
போக்கு இன்றாக நின்று ஒருவருக்கொருவர் முன் போந்து – குமார:2 222/2,3
விலங்கு இனம் வெகுண்டு பீறும் வேட்கையின் எதிர நாக – நிதான:3 36/2
மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி – நிதான:3 51/1
மெய் உணர்ச்சியை ஒருபுறத்து ஒதுக்கினும் வெகுண்டு
துய்ய நல் மன_சான்று எனை கடிந்திடும் சுடு_சொல் – ஆரணிய:8 27/1,2
மேல்


வெகுண்டே (1)

மெய்ப்படு நிதானி உரை கேட்டலும் வெகுண்டே
மைப்படு மன தருமவன்மி எனும் வஞ்சன் – நிதான:11 20/1,2
மேல்


வெகுளி (5)

வெய்யரில் வெய்யன் யான் வெகுளி தீ விழுந்து – ஆதி:3 5/2
புன்_மொழி பலவாறாக புகன்றனர் வெகுளி பொங்கி – குமார:2 182/4
வீரிய கனல் என வெகுளி மூண்டதால் – நிதான:4 44/4
வெண்ணெய் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய – நிதான:9 7/2
மெய் ஒளி திகழ்த்தவும் வெகுளி காற்று உரத்து – நிதான:10 2/3
மேல்


வெகுளியில் (1)

இறந்த ஓர் வெகுளியில் தீது என்று எள்ளுவர் – ஆதி:19 35/3
மேல்


வெகுளியின் (1)

வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர் – நிதான:10 23/3
மேல்


வெங்கணவர் (1)

வெங்கணவர் சூழ் வினை விளிந்து ஒழியுமா போல் – நிதான:2 66/4
மேல்


வெங்கணார்க்கு (1)

வெங்கணார்க்கு வெறுக்கையை வீசினார் – குமார:2 476/4
மேல்


வெட்கத்தின் (1)

மேவும் நல் நெறியால் வரு வெட்கத்தின் இடறி – ஆரணிய:10 19/1
மேல்


வெட்கம் (9)

வெட்கம் எதிர் வந்து எனை விடாப்பிடி பிடித்தே – நிதான:4 66/2
மெய் வழி மிடிப்படல் இது எத்தனை-கொல் வெட்கம் – நிதான:4 72/4
இன்னவாறு இகலி வெட்கம் எனும் ஈனன் எதிரில் – நிதான:4 76/1
மதி_இலா மூடர்க்கு என்றும் வாய்ப்பது வெட்கம் என்னா – நிதான:4 94/2
சதி புரி வெட்கம் துஞ்ச சமழ்ப்பதே தருமம் எம்பி – நிதான:4 94/4
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/3
மெய் ஆரணனார் நல் நெறியை வெறுத்து விலகி வெட்கம் என்பீர் – நிதான:9 76/2
உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
வெம் தழற்கு இரையாயினும் இ படு வெட்கம்
நம்-தமை தொடரா வகை நாடுதி நல்லோய் – ஆரணிய:4 158/3,4
மேல்


வெட்கம்_இல்லீர் (1)

உயிர் உற்றனிர் வெட்கம்_இல்லீர் கதி உள்ளுதற்கே – ஆரணிய:4 124/4
மேல்


வெட்கமும் (1)

இத்தகைய வெட்கமும் இகழ்ச்சியும் இழுக்கும் – நிதான:4 75/1
மேல்


வெட்கி (1)

நின்ற வெட்கி முகம் நோக்கி அட நீச_மதியோய் – நிதான:4 84/2
மேல்


வெட்டவெள்ளிடை (1)

வெட்டவெள்ளிடை ஆய ஓர் மெய் விடாய் ஆற்றி – ஆரணிய:2 80/3
மேல்


வெட்டவெளியின் (1)

மித்திரத்துவம் ஆகினராய் வெட்டவெளியின்
மத்தியில் செலும் போது ஒரு மருங்கு சேர் உளையில் – ஆதி:11 14/2,3
மேல்


வெட்டுண்டு (1)

சுன்னமிட்டின ஜனத்தொடு வெட்டுண்டு தொலைந்தது – ஆரணிய:2 65/3
மேல்


வெடித்த (2)

வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே – நிதான:2 52/4
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/3
மேல்


வெடித்தது (1)

வெய்ய பாதலம் விழிப்பட வெடித்தது புவி – ஆதி:14 197/4
மேல்


வெடித்தவே (1)

வீங்கு மெய் பிளந்து ஒக்க வெடித்தவே – ஆதி:14 161/4
மேல்


வெடித்திட (1)

வெடித்திட அசனி கூட்டம் வெய்துற இடித்தது அன்றே – ஆதி:14 137/4
மேல்


வெடித்திலது (1)

என்-கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார் – குமார:2 281/1
மேல்


வெண் (24)

குன்றாத கொற்றக்குடை வெண் மதி மேல் நிழற்ற – ஆதி:5 9/4
தோற்று வெண் தரளம் என தொடு நிலக்கரியில் – ஆதி:8 5/2
தோன்றிற்றால் ஒரு திருச்சபை துலங்கு வெண் பிறை போல் – ஆதி:8 6/4
விளம்பரத்தை வெறுத்தவன் வெண் மணல் – ஆதி:9 77/2
விழுத்தகும் கதிர் ஒளி திவள் வெண் துகில் புனைந்து – ஆதி:11 6/1
தூ நிலவு வெண் சுதை குயிற்றி ஒளி துன்னும் – ஆதி:14 72/2
வெண் துகில் புனைந்து உலவு வித்தகரை நோக்கா – ஆதி:14 73/4
கிட்டு_அரிய மா புனித வெண் துகில் கிடைக்கும் – ஆதி:14 75/2
விலை வரம்பு_இலா வெண் நிலை அங்கி மேல் இட்டார் – ஆதி:14 98/3
வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில் – ஆதி:15 29/1
வெண் துகில் கையில் ஈதோ விளங்கு சாஸனம் இ எல்லாம் – ஆதி:17 27/3
ஆசு_இல் வெண் மணல் குவால் பொரூஉ மலை புரள் கரைய – ஆதி:18 18/4
கர மலர் சென்னியில் கவின வெண் துகில் – ஆதி:19 33/3
வெண் நிலா உமிழ் சுதை மிளிர்ந்த பித்தியில் – குமார:1 33/1
விம்மு தண் சுடர் வீசி மேல் எழுந்த வெண் திங்கள் – குமார:2 77/4
விண்ணின் ஓங்கிய வெண் மதி வியன் கதி கூட்டும் – குமார:2 78/3
தழங்கு வெண் திரை-வாய் உற்று தளர்ந்து உழல் திரணம் போலும் – குமார:2 119/2
தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
விண்டு உகுத்த நித்திலம் புரை வெண் பனி திவலை – குமார:4 63/2
மன்னு வெண்_தலை புழை மலிந்த மாலையன் – நிதான:2 8/2
மேனி வந்து பல் கொடி விராய் வெண் சுதை மாடம் – நிதான:7 28/3
மதித்த நீதி வெண் வத்திரம் காண்கிலார் – நிதான:8 16/2
கறை இலாத வெண் துகில் உண்டு கவின் அணி உண்டு – இரட்சணிய:1 37/2
சுத்தம் ஆக்கி வெண் தூசு அணி நல்கி தம் – இரட்சணிய:1 60/1
மேல்


வெண்_தலை (1)

மன்னு வெண்_தலை புழை மலிந்த மாலையன் – நிதான:2 8/2
மேல்


வெண்_நகையர் (1)

தண் தரள வெண்_நகையர் தத்தமது அரங்கில் – குமார:3 13/3
மேல்


வெண்ணெய் (2)

வெண்ணெய் பாலம் சமைப்பார் போல் வேத நாதன் வெகுளி சுய – நிதான:9 7/2
வெண்ணெய் திருடி கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மி – நிதான:9 41/1
மேல்


வெண்ணெயை (1)

கையக வெண்ணெயை கருதிடாது போய் – நிதான:4 29/1
மேல்


வெதுப்ப (2)

வீற்றுவீற்று உகு கனல் வெதுப்ப மாழ்கினன் – ஆதி:12 34/2
விளம்பர தொனி செவி வெதுப்ப மெல்லென – நிதான:10 47/1
மேல்


வெதுப்பிட (1)

மீ கிளந்த சொல் இரு செவி வெதுப்பிட வெகுண்டு – குமார:2 222/2
மேல்


வெதுப்பிரும் (1)

வெம் கொடும் பஞ்சம் நேர்ந்து வெதுப்பிரும் பசிக்கு ஆற்றானாய் – ஆதி:9 113/3
மேல்


வெதுப்பு (1)

பனி தரும் குளிர்ச்சியோடு பாரிசுத்த அனல் வெதுப்பு
இனிது மல்கும் மகிமை ஆய விரவி அத்தம் இன்றியே – இரட்சணிய:3 24/2,3
மேல்


வெதுப்பும் (1)

வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால் – குமார:2 117/3
மேல்


வெதுப்புறீஇ (1)

முளைத்த காதலின் வெதுப்புறீஇ முனம் பலர் ஓடி – நிதான:6 8/1
மேல்


வெதுப்புறு (1)

வெள்ளம் தோய்ந்தும் வெதுப்புறு மேனியாள் – இரட்சணிய:1 61/4
மேல்


வெதும்ப (1)

வெண்ணெய் திருடி கட்டுண்டு வெதும்ப வடிக்க விம்மிவிம்மி – நிதான:9 41/1
மேல்


வெதும்பி (3)

வெயிலிடை படு கிருமியில் துடித்தனன் வெதும்பி – குமார:2 200/4
விழி புனல் சொரிதர வெதும்பி சேய்மையில் – குமார:2 394/3
வீங்கிய வெகுளியின் வெதும்பி வேதியர் – நிதான:10 23/3
மேல்


வெதும்பிற்று (1)

வெம்பு தீ விடம் போல் ஆக செவித்தொளை வெதும்பிற்று என்னில் – குமார:2 183/2
மேல்


வெதும்பின் (1)

திருவுளம் வெதும்பின் ஓர் கணத்தினிடை தீயும் – குமார:2 153/1
மேல்


வெந் (1)

வெந் நின்ற சுமடு நீத்த வேதியன் விளம்பலுற்றான் – ஆதி:17 12/4
மேல்


வெந்த (1)

வித்தகத்து எழில் நிதானியே வெந்த சாம்பரின் இன்று – ஆரணிய:2 14/2
மேல்


வெந்து (10)

விரி திரை உலகும் யாமும் வெந்து அழிந்து ஒழிவேம் அன்றோ – ஆதி:2 9/4
வெந்து ஈடு அழி நரகம் புக விடுகிற்கிலன் என்னா – ஆதி:9 21/2
வெந்து எரிய அ தழலில் வீசி எறி போதும் – ஆதி:13 39/3
வேதனை உழந்து சிந்தை வெந்து புண்பட்டார் அல்லால் – குமார:2 189/3
மீது எழும் சுவாலை தாக்க வெந்து உளம் கருகுவாரை – நிதான:3 23/4
அங்கம் வெந்து உக்க சாம்பல் குவைகளும் அகில லோகம் – நிதான:3 74/3
உரிய தன் மனை மக்களும் ஒக்கலும் வெந்து
கரிவரே என ஏங்கி உயிர்த்து அழு கண்ணீர் – ஆரணிய:1 28/2,3
மிசை கரிந்து உகும் நலம் தரு தாவரம் வெந்து
வசை தழைத்து இளிவரவு எனும் கள்ளியே வளரும் – ஆரணிய:4 37/2,3
மேவி வெந்து உகு வேளையில் வேந்து அருள் – ஆரணிய:4 77/2
மீதுமீது எரி தவழ்ந்து என வெந்து புண்படுவாள் – இரட்சணிய:1 50/4
மேல்


வெந்தே (1)

வெந்தே நீறு ஆதல் வேண்டும் விண்-நின்று விழு வெம் தீயில் – ஆதி:19 94/2
மேல்


வெந்நிட்ட (1)

கருகு சிந்தையர் உடைந்து வெந்நிட்ட அ கணமே – ஆதி:14 94/1
மேல்


வெந்நிட்டு (3)

விதம் கொண்ட பெரும் சேனை பெலிஸ்தியர் வெந்நிட்டு ஓட – குமார:4 37/2
வெருவியோர் வெந்நிட்டு ஏக வித்தகன் முன்னிட்டு ஏகி – நிதான:3 14/1
வெந்நிட்டு ஏகுவரோ முனைமுகத்து உற்ற வீரர் – ஆரணிய:4 45/4
மேல்


வெந்நிட (2)

மருளி மாக்கள் ஓர் ஐவரை வெந்நிட மடக்கி – ஆதி:8 26/2
வெந்நிட துரந்தான் திட மெய் விசுவாசி – நிதான:2 106/4
மேல்


வெந்நிடலோ (1)

விரவு துன்பிற்கு வெந்நிடலோ நம வீரம் – ஆரணிய:4 146/2
மேல்


வெந்நிடாது (1)

வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டு – ஆதி:8 36/3
மேல்


வெந்நிடின் (1)

வெய்ய பேய் கணத்துக்கு அஞ்சி வெந்நிடின் நோன்பு வீணாம் – நிதான:3 54/1
மேல்


வெந்நிடை (1)

வெந்நிடை சுடு சரம் துரந்து வீட்டுவன் – நிதான:2 12/3
மேல்


வெந்நீரால் (1)

அப்படும் பலன் தரு பயிர் அவியும் வெந்நீரால் – ஆரணிய:2 70/4
மேல்


வெப்ப (1)

நண்ணுவார்க்கு உறு வெப்ப நோய் தணிக்கும் அ நறும் கா – ஆதி:18 6/4
மேல்


வெப்பம் (1)

வெப்பம் மிகும் அனல் அன்றோ இவ்வாறு விளைத்ததுவே – ஆதி:15 12/4
மேல்


வெப்பாலையை (1)

வெப்பாலையை அஞ்சி மெய் நூல் நெறி விட்டு நீங்கி – ஆரணிய:4 102/2
மேல்


வெப்பு (1)

வெப்பு உறழ்ந்த நிரைய கிடங்கிடை வீழ்வான் – குமார:2 298/4
மேல்


வெப்புறு (1)

வெப்புறு பாவ விடத்தினை பருகி மெய் அறிவு இழந்து உனை மறந்தேன் – தேவாரம்:6 5/1
மேல்


வெம் (151)

கறையின் ஆக்கி வெம் மரணத்தின் கரை_அறு துன்ப – ஆதி:8 3/3
பாவம் மல்கிய நாச தேசத்து வெம் பரப்பில் – ஆதி:8 10/1
காயும் வெம் மணல் சுரத்திடை தவிப்பு_அற கடத்தி – ஆதி:8 32/3
வெம் சுரத்து வீழ்ந்து அழன்றும் வெந்நிடாது முன் இட்டு – ஆதி:8 36/3
பை ஆடு அரவின் சீறு வெம் படமும் சிதைவு எய்த – ஆதி:9 16/3
தீமுகன் உய்த்த வெம் சிறைக்குள்ளாய் அயர் – ஆதி:9 23/1
வெம் கொடும் பஞ்சம் நேர்ந்து வெதுப்பிரும் பசிக்கு ஆற்றானாய் – ஆதி:9 113/3
வெம் கொடும் பருக்கள் மிக்கு வேதனை உழக்கும் நீரான் – ஆதி:9 124/4
துன்ப ஆழியில் மூழ்கி வெம் துயர் எலாம் துடைத்து – ஆதி:11 5/1
சோகமுற்று உளம் கசந்து அழுது துக்க வெம்
சாகரத்து அழுந்தினான் தரிப்பு ஒன்று இன்றியே – ஆதி:12 47/3,4
துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம்
குன்றின்-நின்று எழுந்து உளம் குலையும் வேதியன்-தன் – ஆதி:12 64/2,3
சாப வெம் சிறையில் தளைவார்_அலர் – ஆதி:12 80/3
குன்று காலும் வெம் சாப கொழும் கனல் – ஆதி:13 2/1
சிங்கம் உறு வெம் குகை முடங்கினன் ஓர் தீர்க்கன் – ஆதி:13 38/4
முனிதரும் பொழுதினே முடுகுமேல் முடுகு வெம்
துனி தரும் கனல் சுட துடிதுடித்து அயர்வலோ – ஆதி:14 5/3,4
காட்டி வெம் கனல் குழி கவிழ்க்கும் அல்லது – ஆதி:14 31/3
வெம் சீயமாம் அலகை எத்தனை விதத்தில் – ஆதி:14 68/2
தீயர் ஓர்சிலர் வெம் கதம் திருகினர் செறிந்து – ஆதி:14 79/3
வினவு வாசகம் கேட்டலும் வெம் சிறை மறிந்த – ஆதி:14 108/1
சென்று சேற்றிடை புரள்வது போலும் வெம் தீய – ஆதி:14 111/2
அலகு_இல் வெம் சீற்ற செம் தீ அவிக்குமோ அளிய கீடம் – ஆதி:14 122/4
பதி பகை விஞ்சும் நிந்தை பலுகும் வெம் பழியும் சேரும் – ஆதி:14 126/2
எஞ்சுறா புனித நீதி இறைவன் வெம் சின தீ யாவும் – ஆதி:14 136/3
வரும் ஓர் ஊழி மாருதமாம் வய வெம் சீயம் வந்து உலவ – ஆதி:14 146/1
பேர் யாக்கை பிணம்தின்னி ஈம வெம்
சேரி வாயும் கிழிந்து திறந்தவால் – ஆதி:14 162/3,4
கோர வெம் கனல் தழைத்து எதிர் கொளுத்த அதனால் – ஆதி:14 185/1
ஊனகத்து உருவ நோக்கிய உருத்த முக வெம்
கானகத்து வயமாவின் இரு கண் பொறிகள் போல் – ஆதி:14 198/3,4
தீக்க வல்ல வெம் தீ_வினை – ஆதி:14 202/1
வெம் மாய வினை தொலைத்து உன் வீட்டு உலகம் கூட்டுகவே – ஆதி:15 19/4
விந்தையாய் புனைந்தனர் விசித்த வெம் கொடும் – ஆதி:15 23/3
விள்_அரும் தீ_வினை விளைத்த வெம் துயர் – ஆதி:16 1/1
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/4
வெம் தறுகண் பாம்பின் விடம் போல் மதி கெடுக்கும் – ஆதி:19 11/3
துட்ட வெம் சிறை வீட்டில் சோடச உபசாரம் – ஆதி:19 20/2
வெம் கொடும் பயங்கரம் விளைந்த மூலம் என் – ஆதி:19 45/2
வெந்தே நீறு ஆதல் வேண்டும் விண்-நின்று விழு வெம் தீயில் – ஆதி:19 94/2
ஆங்கு அவர் கண்டு சொற்ற அடும் திறல் வய வெம் சீயம் – ஆதி:19 101/1
கோர வெம் பகு வாய் ஆர விழுங்கிடும் கொள்கைத்து அம்மா – ஆதி:19 103/2
வாக்கு இது வய வெம் சீயம் மறிதல் கண்டு அஞ்சி இட்ட – ஆதி:19 107/2
வெம் சின மடங்கற்கு அஞ்சி விளித்தனை போலும் எம்பி – ஆதி:19 108/1
வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன – ஆதி:19 116/2
தையலாள் துக்க வெம் தழல் சுடச்சுட – குமார:1 1/2
பள்ள நீர் உலகு எலாம் படிந்த வெம் நிசி – குமார:1 5/1
நறுவிது எள்ளி வெம் கடு தழை நயக்குமா போலும் – குமார:1 85/4
கன்றி வெம் சினம் கதுவி அங்கு அவன்-தனை காயீன் – குமார:1 94/3
தேசு குன்றி வெம் குருதி நீர் பொழிதரு செய்ய மேனியும் எம்மான் – குமார:2 5/3
மீ கிளர் தேவ_நீதி வெம் தழல் குளிப்பது ஆனார் – குமார:2 107/4
வெம் துயர் என்னும் தாபம் மிகு கனல் மூளமூள – குமார:2 112/1
வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/2
வீங்கிய தேவ கோப வெம் கனல் வெதுப்பும் ஓர்பால் – குமார:2 117/3
பேச_அரிய பெரும் துன்ப பிரளய வெம் கனல் கொளுத்த பேதுற்று அந்தோ – குமார:2 130/1
வெம் தறுகணாளர் பலர் வல்லிதின் விரைந்து – குமார:2 132/3
தவறி பாவ வெம் சேற்றிடை வீழினும் தாங்கி – குமார:2 203/2
வெம் கொடும் கலகத்தினை விளைத்தனன் மெய்ம்மை – குமார:2 223/4
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ – குமார:2 244/2
வெம் கொலை நாவினால் விளம்புவான் விரைந்து – குமார:2 256/3
கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிட – குமார:2 265/3
விற்ற காசு எனும் வெம் தழல் உன் மடி மேவ – குமார:2 293/2
பாவ வெம் கோடையில் பாடுண்டு எஞ்சிய – குமார:2 399/1
வெம் கதிர் உட்கி குட கடலில் குப்புற வீழ்ந்தான் – குமார:2 415/4
வேண்டியவாறு பல் வீரரை வைத்தனர் வெம் காவல் – குமார:2 421/4
பன்னலாம் தரம் அன்று வெம் பாழ் மதி – குமார:2 478/3
துக்கமாய வெம் கோடையை திசைதிசை துரந்து – குமார:4 53/2
ஊழி வெம் தீ விழுந்து உடற்றும் என்ற சொற்கு – நிதான:2 29/3
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான் – நிதான:2 56/4
வன்மை மிகு வெம் சமம் அலைத்திடுதல் போலாம் – நிதான:2 62/3
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும் – நிதான:2 63/2
விஞ்ச விடுத்த நஞ்சு உகு வெம் கோல் விறல் இன்றி – நிதான:2 68/1
அஞ்சி ஒளிப்பாய் வெம் சமருக்கு ஈது அறமேயோ – நிதான:2 68/4
வெம் திறல் ஆண்மை நிராயுதனோடு அமர் வெஃகாமை – நிதான:2 69/2
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
பேணிய கார் முக வெம் சர மா மழை பெய்து ஆர்த்தான் – நிதான:2 72/3
செல் முக வெம் கணையில் சிதைவுற்றன தீந்து எல்லாம் – நிதான:2 76/4
விடுத்த வெம் படை முகம்-தொறும் பேய் குறி மிளிர்வ – நிதான:2 80/1
தீ திரள்படு செம்_கணான் பிடித்த வெம் சிலையில் – நிதான:2 96/3
கோலி வெம் சின கொடும் தழல் பகழி கோத்து எய்தான் – நிதான:2 97/3
சிந்தி அங்கு அவன் வெம் சின தீ தழல் சிதைத்த – நிதான:2 103/4
வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயை கண்டான் – நிதான:3 40/4
மருவி வெம் கானம் எங்கும் எதிரொலி மடுத்து மல்க – நிதான:3 49/2
கணிகையர் கால் அடி கவிழ்க்கும் காம வெம்
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய – நிதான:4 21/2,3
இழுத்து அருள் அளித்திடார் என்னில் வெம் சினம் – நிதான:4 46/2
வெம் தொழில் விழும நச்சி வேதியர் குழாத்துக்கு எல்லாம் – நிதான:5 93/3
விலகினீர்_அலீர் வெம் கொடு வினை பகை வெறுத்து – நிதான:6 9/2
பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/4
கன்று வெம் சினத்து அலகை தன் கவிகையை கவித்தான் – நிதான:7 3/3
பன்னி வன் மனம் செருக்கி வெம் படை தொழில் பயின்று – நிதான:7 36/2
வெம் கணாளர்-தம் மேனிலை மறுகு எங்கும் மிளிர்வ – நிதான:7 39/4
மண்டு காம வெம் பிணியினால் வரன் முறை மயங்கி – நிதான:7 53/3
முதுவரை புறக்கணித்தும் வெம் சூது போர் முயன்றும் – நிதான:7 61/3
வெம் குடிகேடு என்று ஆய விநாசத்தை விலைப்பால் ஈட்டி – நிதான:7 75/3
கோடிகோடி வெம் நோயில் குறைந்திடும் – நிதான:7 87/2
முந்து வெம் கொடும் துன்பம் முருக்கினும் – நிதான:8 10/3
ஆவிக்கு உள வெம் பவ நோயை அகற்றி அழியா பேர்_இன்ப – நிதான:9 37/2
துருசு_இல் மனத்தோடு உபதேசம் சொல்லி சுகிர்த பலியாய் வெம்
குருசில் மடிந்த குருசிலை கைகூப்ப வாரும் ஜெகத்தீரே – நிதான:9 55/3,4
விசுவாசத்தால் பெரும் சூளை வெம் தீ கிடங்கை மேற்கொண்டார் – நிதான:9 69/1
விசுவாசத்தால் வெம் சீய விரி வாய் அடைத்தார் விறல் கொண்டார் – நிதான:9 69/2
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறை – நிதான:10 49/3
கன்று வெம் சின முக கரி_அனான் கடுகி நீர் – நிதான:11 3/2
காரிய பொறை ஒருங்கு எமது என கறுவி வெம்
பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/2,3
துட்ட வெம் புற்கணம் தொகும் உழை புதரின் வாய் – நிதான:11 9/1
கோணை வெம் நெருப்பு சூளை குளித்திட எறிந்த கொற்றம் – நிதான:11 51/3
முடங்கு உளை வய வெம் சீய முழையிடை படுத்தது ஓர்-மின் – நிதான:11 52/4
தோயின் வெம் கனல் சொரிந்து இ ஊரும் சுடுகாடாய் – ஆரணிய:1 2/3
தேவ வெம் சினம் தணிப்பதோ செய்யும் நல் கருமம் – ஆரணிய:1 5/3
கருவில் செய்கையின் ஆய வெம் தீ_வினை கள்வன் – ஆரணிய:1 30/1
வீறு பெற்று மாயாபுரி வெம் கொடு வினையின் – ஆரணிய:2 4/2
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல் – ஆரணிய:2 44/2
வரைவு_இலாது பல் மலர்-தொறும் மருவி வெம் மதுவை – ஆரணிய:2 48/1
நித்திய நாசம் தொக்கு நிலவு வெம் குகையோ என்ன – ஆரணிய:3 2/3
பொருந்து வெம் பசிக்கு அமுது ஆய பொற்பு அது – ஆரணிய:4 13/3
பெரும் துயர் பிறவி வெம் பிணி மருந்து அது – ஆரணிய:4 13/4
ஆய வெம் சுரத்தூடு செல் அருள் நெறி அடைந்தார் – ஆரணிய:4 42/1
சிறுமை மல்கு வெம் தீ_வினை குடிபுகும் ஜெகத்தில் – ஆரணிய:4 55/3
மீட்டும் வெம் சிறைப்படுவதை தெரிகிலா விருத்தன் – ஆரணிய:4 60/4
சிங்க வெம் குகை போலும் தெரியினே – ஆரணிய:4 69/2
வெம் தாப விட கடு அன்ன விடாதகண்டன் – ஆரணிய:4 99/4
வெறியாட்டின் மயங்கி நிசாசர வெம் பசாசன் – ஆரணிய:4 103/3
வெம் சீயம் இரண்டிடை ஏகிய வீரமும் கண்டு – ஆரணிய:4 114/1
வெம் கால_தண்டில் கொடும் கோலை விடாதகண்டன் – ஆரணிய:4 121/2
வெம் சிறை இன்ன சஞ்சலம் ஆய விடம் ஏறி – ஆரணிய:4 127/2
வெம் துயர் அன்றி வேறு உணவு ஏதும் மிசையாராய் – ஆரணிய:4 140/3
வெம் சிறைக்கும் விலங்குக்கும் வெம் துயருக்கும் – ஆரணிய:4 154/2
வெம் சிறைக்கும் விலங்குக்கும் வெம் துயருக்கும் – ஆரணிய:4 154/2
வெம் தழற்கு இரையாயினும் இ படு வெட்கம் – ஆரணிய:4 158/3
வெம் கொடு மயலின்-நின்று மீட்டு எனை புரந்தது இன்னே – ஆரணிய:4 166/4
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
வண்ணமா மரித்தோர் சேரும் மயான வெம் சிறையின் உய்த்தான் – ஆரணிய:5 68/3
மான் உற்று உலவி விளையாடும் வய வெம் சீய வரை சாரல் – ஆரணிய:5 92/3
மூண்ட வெம் பகை யாவும் முருக்கிட – ஆரணிய:6 59/1
வெம் கடு நெஞ்சன் வேதியர்-தம்மை வினவும் கால் – ஆரணிய:7 5/4
வெம் தாபத்தால் சிந்தையில் நைந்தே மிகை ஓர்வார் – ஆரணிய:7 12/4
வெம் கனலின் சிவை ஆம் எனல் மேலவர் விதி அன்றோ – ஆரணிய:7 16/4
குத்திர குழு ஈண்டி வெம் கொலைக்களப்படுத்தி – ஆரணிய:8 19/1
துன்று வெம் சிறைப்படுத்தலே தொல் உலகு இயற்கை – ஆரணிய:8 33/4
வெருவரும் பாவ தோட வெம் சிறைப்படுத்திற்று அம்மான் – ஆரணிய:8 42/2
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
வெம் துன்_மார்க்கத்து கவிழ்த்தும் ஏதுக்களை விதந்தேன் – ஆரணிய:10 22/2
நன்று தெய்வத்தை மரணத்தை நரக வெம் சிறையை – ஆரணிய:10 24/3
ஆக்கை வெம் சிறை மீட்டு எனை அணைக்கிலர் என்னா – இரட்சணிய:1 52/3
பற்பல் வெம் பிணி தீரவும் பாலித்த – இரட்சணிய:1 64/3
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள் – இரட்சணிய:2 49/1
மருள் உறுத்து வெம் பிணி கரை உடலொடு மறியும் – இரட்சணிய:2 51/2
வெம் சின கனலுக்கு விலக்கியும் – இரட்சணிய:3 39/1
நிருத வெம் சிறை மறிந்து உளேம் நீசரேமுக்காய் – இரட்சணிய:3 77/1
வெம் தொழிலர் செய் வினையின் விளைவு அறியார் பொறுத்து அருளும் – தேவாரம்:4 8/2
திரை சேர் வெம் பவமாம் கடல் மூழ்கிய தீயர் எமை – தேவாரம்:5 7/1
விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி – தேவாரம்:8 8/2
கோர வெம் பிணி கூன் மூகை குருடு வன் செவிடு பங்கு – தேவாரம்:11 20/2
அண்டர் நாயகன் வெம் சீற்றத்து ஆர்_அழல் குளித்தாய் போற்றி – தேவாரம்:11 24/2
வெம் பரம்பு இறுத்தாய் போற்றி வினை தொடர் அறுத்தாய் போற்றி – தேவாரம்:11 27/4
வேதனை குணிக்கற்பாற்றோ வெம் குருசு அறைந்து கொல்லும் – தேவாரம்:11 28/1
மேல்


வெம்பி (11)

வெம்பி மானிட குழுக்களை நல் நெறி விலக்கி – ஆதி:11 41/3
காது அற எறிந்தனன் ஓர் காதகனை வெம்பி – குமார:2 141/4
வெம்பி யான் உனை கொல விடுக்க ஆயினும் – குமார:2 249/2
விரவிற்று உண்டு-கொலோ என்பர் ஓர் சிலர் வெம்பி – குமார:2 280/4
வீசி ஏகினன் பேய் பிடர் உந்திட வெம்பி – குமார:2 297/4
வெம்பி அறிவு மாண்டீர் அ விடம் தீர்த்து உய்க்கும் கிறிஸ்து எமது – நிதான:9 49/3
வெம்பி வீழ்ந்து இறக்கும் கோடி வேதனை உழக்கும் கோடி – ஆரணிய:3 8/4
வெயிலிடை பட்ட புழு என துடித்தனர் வெம்பி
அயில் எயிற்று அரா விடம் தலை கொண்டு என அயர்ந்தார் – ஆரணிய:4 43/1,2
வெம்பி ஈண்டு விடாதகண்ட பெயர் மேவி – ஆரணிய:4 141/3
வித்தக திறலோய் சிறியேனினும் வெம்பி
சித்தம் நொந்து உயிர் தீர்வல் என்பாய் இது என் சீர்மை – ஆரணிய:4 152/3,4
வெம்பி மாந்தரும் ஐம்பொறி வேட்கையுற்று – ஆரணிய:6 35/3
மேல்


வெம்பு (6)

வெம்பு தீ விட பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி – ஆதி:8 24/2
வெம்பு தீமைக்கு நன்மையே விருப்பொடு விளை-மின் – ஆதி:9 50/4
வெம்பு தீ விடம் போல் ஆக செவித்தொளை வெதும்பிற்று என்னில் – குமார:2 183/2
வெம்பு தீ என முருக்கினும் முன் நின்று விலக்கி – நிதான:6 21/3
வெம்பு தீ_வினைக்கு ஈட்டுதல் அலகை செய் வினையால் – ஆரணிய:2 16/4
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/2
மேல்


வெம்புதல் (1)

விழுதல் உள்ளுதல் விம்முதல் வெம்புதல்
அழுதல் ஏங்குதல் அஞ்சுதல் கெஞ்சுதல் – ஆரணிய:6 42/2,3
மேல்


வெம்பும் (2)

வெம்பும் மிருத்தாம் ஆழி கிளம்பி விடுமா உள் – ஆதி:16 12/1
வெம்பும் இ கொடு மரணத்துள் விடுத்தனர் என்றான் – இரட்சணிய:2 38/4
மேல்


வெம்புறு (1)

வெம்புறு கலகத்தை விளைத்தற்கு என்னினும் – நிதான:10 29/2
மேல்


வெம்மை (1)

வெம்மை மிக்க பல் வேதனை விடயங்கள் எதுவும் – குமார:1 74/2
மேல்


வெம்மையால் (1)

விருந்து வந்து ஆர் உணவு அளிப்பர் வெம்மையால்
வருந்துவர் உடன் மனம் மகிழ்வர் மெய் விடாய்த்து – ஆரணிய:4 5/2,3
மேல்


வெம்மையை (1)

வெம்மையை சிறிது ஆற்றுவல் என விரைந்து எழல் போல் – குமார:2 77/3
மேல்


வெய்தாம் (1)

வெய்தாம் பசி தாகம் விரோதம் மிகுத்ததாலே – ஆதி:12 6/3
மேல்


வெய்தின் (1)

வெய்தின் ஆய வினை திறம் உள்ளன வேட்டு – ஆரணிய:1 14/3
மேல்


வெய்தினில் (1)

வெய்தினில் காவலர் விரைந்து பற்றி ஈர்த்து – நிதான:10 49/1
மேல்


வெய்து (8)

நோவும் மல்கி வெய்து உயிர் துடித்து உயங்குவன் நோலேன் – ஆதி:9 146/2
வெய்து ஒர் சத்தம் பிறந்தது விண்ணிடை – ஆதி:14 159/4
உணங்கி வெய்து உயிர்த்தார் மாந்தர் உயிர்க்குயிர் ஆகி நின்றார் – குமார:2 120/4
வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
வெய்து துன்பம் விளைப்பினும் காக்க ஓர் – நிதான:8 28/1
வெய்து உற அடித்தனர் குருதி மேலிட – நிதான:10 11/1
வெய்து நிரையத்து எமை விழுத்துவது மெய்மை – நிதான:11 29/4
வெய்து துன்பம் மேலிடுதலின் விழு தகும் உளத்தில் – இரட்சணிய:2 33/2
மேல்


வெய்துயிர்த்தார் (1)

செப்பினர் உற்று நோக்கி திரும்பி வெய்துயிர்த்தார் செய்யோர் – ஆரணிய:5 65/4
மேல்


வெய்துயிர்த்து (2)

கலங்கி வெய்துயிர்த்து சென்னி கவிழ்த்து அந்தக்கரணம் யாவும் – ஆதி:14 131/2
வெய்துயிர்த்து இழி செம் சோரி மெய் எலாம் புதைப்ப யாங்கள் – தேவாரம்:11 25/3
மேல்


வெய்துயிர்ப்பாள் (1)

விண்ட மெய் திரு_வாக்கு எலாம் நினைத்து வெய்துயிர்ப்பாள் – இரட்சணிய:1 49/4
மேல்


வெய்துற (2)

வெடித்திட அசனி கூட்டம் வெய்துற இடித்தது அன்றே – ஆதி:14 137/4
வெய்துற தலை மிசை அடித்து வேதனை – குமார:2 267/2
மேல்


வெய்ய (25)

வெய்ய தீ_வினை முன் நின்று வெருட்டலில் வீழ்ந்தேன் – ஆதி:11 30/4
ஆய் என எதிர்ந்தனை என் ஐய இவண் வெய்ய
தீயன் வர ஒல்வது-கொல் யாது உனது சித்தம் – ஆதி:13 21/3,4
வெய்ய அலகைக்கு எனை விலக்கி உயிர் வீயாது – ஆதி:13 26/1
வெய்ய பாதலம் அலது ஒரு புகல் இலை மேலோய் – ஆதி:14 112/4
வெய்ய பாதலம் விழிப்பட வெடித்தது புவி – ஆதி:14 197/4
வெய்ய கோபாக்கினி சுலவு மேலைநாள் – ஆதி:16 4/2
மேவி வந்து தீ தொழில் புரி வெய்ய கோணாய்கள் – ஆதி:18 32/1
வெய்ய வாக்கினை தீர்ப்பிடுக என்றனர் வெகுண்டு – குமார:2 214/4
வேந்தன் ஆக்கினை கொடு வெய்ய மள்ளர்-தாம் – குமார:2 263/1
வெய்ய சிலுவை சுமந்து அலசி மெய் வருந்தி – குமார:2 314/2
வெய்ய வலைஞன் தோன்றான் விடி வலை வீசினானால் – குமார:2 431/4
வெய்ய ஆவி இது என்று வெருண்டனர் – குமார:2 469/4
வெய்ய உரும் ஏறு என வெடித்த நகை செய்தே – நிதான:2 52/4
மீ கிளர் சினத்து அவுணன் வெய்ய வசை என்னும் – நிதான:2 65/2
வெய்ய பேய் கணத்துக்கு அஞ்சி வெந்நிடின் நோன்பு வீணாம் – நிதான:3 54/1
வெய்ய தீ சிறை விலங்கு பல் விக்கினம் விரவி – நிதான:6 15/2
வெய்ய கானவர் வலைப்படு மான் என வெருண்டு – நிதான:6 16/3
வெய்ய மாய கடை வீதி வாய்ப்படு – நிதான:10 2/1
திருவ நீள் மாடம் வெய்ய சிறைப்புறம் செவ்வியோர்க்கே – நிதான:10 54/4
அடங்கிடா மத விரோத அழிம்பனை பிணித்து வெய்ய
முடங்கு உளை வய வெம் சீய முழையிடை படுத்தது ஓர்-மின் – நிதான:11 52/3,4
வெய்ய மும்மல சேட்டையின் விழும் நோய் துடைத்து ஈண்டு – ஆரணிய:2 7/3
வெய்ய தீ விடாய் தணிந்து மேல் விரைந்து சேறற்கு – ஆரணிய:4 54/2
வெய்ய நிர்ப்பந்தம் வேறு இலை இ துயர் மேவி – ஆரணிய:4 149/2
வெய்ய பாதகர் வரவு அறிந்து இரும் துயில் வீசி – ஆரணிய:6 6/1
வெய்ய துன்பினை மேற்கொள்ள வேண்டுமால் – இரட்சணிய:1 84/4
மேல்


வெய்யர் (1)

வினை திறம் புரியும் வெய்யர் போல்வது அ மிருத்து நீத்தம் – இரட்சணிய:2 10/4
மேல்


வெய்யரில் (1)

வெய்யரில் வெய்யன் யான் வெகுளி தீ விழுந்து – ஆதி:3 5/2
மேல்


வெய்யவர் (1)

வெய்யவர் எழுந்து அழல் விழிக்கடை சிவக்க – குமார:2 138/3
மேல்


வெய்யவரை (1)

வேடுவர் எனா உரறும் வெய்யவரை நோக்கி – குமார:2 135/1
மேல்


வெய்யவன் (1)

வெய்யவன் இறத்தலில் பரிந்து மேதினி – குமார:1 1/1
மேல்


வெய்யவன்-தனை (1)

வெய்யவன்-தனை மின்மினி ஆக்கி விண் மிளிரும் – இரட்சணிய:2 35/1
மேல்


வெய்யன் (1)

வெய்யரில் வெய்யன் யான் வெகுளி தீ விழுந்து – ஆதி:3 5/2
மேல்


வெய்யோர் (1)

பிணித்த விதமா நம பெருந்தகையை வெய்யோர்
அணித்துற வளைந்து ஒலிவ ஆரணியம் நீத்து – குமார:2 154/1,2
மேல்


வெய்யோன் (12)

வெய்யோன் ஒளியும் கரந்து ஆர் இருள் மேய ஆற்றால் – குமார:2 363/4
மகிமை ஒண் மௌலி போலும் திகழ்ந்தனன் வயங்கு வெய்யோன் – குமார:2 439/4
எஞ்சுதல் கண்டே நெஞ்சு அழிவுற்று அங்கு இகல் வெய்யோன்
பஞ்சை முன் நிற்காய் செம் சிலை பற்றாய் பரிசைக்குள் – நிதான:2 68/2,3
குப்புறீஇ விழுந்தான் வெய்யோன் குட திசை குன்றில் ஏறி – நிதான:3 5/4
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
ஓதுதிர் பேதியாது உம் உள் கருத்து என்றான் வெய்யோன் – நிதான:11 54/4
வினையன் நம்பிக்கை என பெயர் பெற்றிடு வெய்யோன் – ஆரணிய:1 4/4
துன் ஆர் ஒளி வீசி எழுந்தனன் ஜோதி வெய்யோன் – ஆரணிய:4 104/4
பின்றையும் வெய்யோன் உற்று உயிர் ஓம்பும் பிணம்_அன்னீர் – ஆரணிய:4 139/1
உலகு இருள் அகற்றி வெய்யோன் உதயத்து திகழா முன்னம் – ஆரணிய:4 164/1
பத்தர் கை அகன்றார் என்னா பரிந்து உளம் பதைத்தான் வெய்யோன் – ஆரணிய:4 170/4
என்னோ தேராது இன் உரை நச்சி இகல் வெய்யோன்
பின்னே சென்றார் என்னில் யாரே பிரபஞ்சத்து – ஆரணிய:7 8/2,3
மேல்


வெயர் (3)

ஊன் தோயும் திரு_மேனி உதிர வெயர் உகுத்ததும் போய் – ஆதி:15 16/3
மீ இரத்த வெயர் துளி வீழ்த்ததும் – குமார:1 110/2
மெலிவாய் ஆத்தும துயரம் மேவி இரத்த வெயர் ஒழுக – நிதான:9 56/2
மேல்


வெயர்வை (1)

விம்மா உள் உடையா நெட்டுயிர்ப்பு வீங்கி மெய் புழுங்கி வெம் குருதி வெயர்வை சிந்தி – தேவாரம்:8 8/2
மேல்


வெயில் (3)

வெயில் முனம் மஞ்சள் போல் வெளிறுமால் கால தண்டம் – ஆதி:17 15/3
வேடமான பொய் பத்தி வெயில் முன் மஞ்சள் பூச்சது போல் – நிதான:9 94/1
வெயில் உற்ற போது பனி பற்று_அற வீயுமா போல் – ஆரணிய:4 124/1
மேல்


வெயிலால் (1)

குறித்து கோன் நகர் வழிப்படில் குளிர் பனி வெயிலால்
மறித்த சண்டமாருதத்தினால் வலிய நீர் பெருக்கால் – ஆரணிய:2 34/1,2
மேல்


வெயிலிடை (2)

வெயிலிடை படு கிருமியில் துடித்தனன் வெதும்பி – குமார:2 200/4
வெயிலிடை பட்ட புழு என துடித்தனர் வெம்பி – ஆரணிய:4 43/1
மேல்


வெயிலில் (1)

கூர் வெயிலில் தீந்து கரிந்தன முள் தூறுக்கிடையில் குளித்த வித்து – ஆதி:9 81/2
மேல்


வெயிலை (1)

வெயிலை தவிர்க்கும் தண்டலையை விரித்து ஆங்காங்கு கடும் பசியின் – ஆரணிய:5 94/3
மேல்


வெயிலையும் (2)

மின்னையும் வெயிலையும் விரவி மேதகு – ஆதி:4 44/1
தூய பொன்னொடு மின்னையும் வெயிலையும் தொகுத்து – இரட்சணிய:1 22/2
மேல்


வெயிற்கு (1)

இரவில் அக்கினி தூணம் உண்டு எல் சுடு வெயிற்கு
பரவி நின்று மேகம் தரு நிழல் உண்டு பசிக்கில் – ஆதி:8 16/1,2
மேல்


வெரிந் (5)

வெரிந் உறீஇ அமிழ்த்த ஆற்றேன் மிக மெலிந்து அயர்ந்தேன் மேலும் – ஆதி:2 9/2
வேறு நினைவு இல்லை வெரிந் மீது அறவு மேன்மேல் – ஆதி:13 53/1
அக்கணம் வெரிந் மீது உற்று அடு வினை நனி தொக்க – ஆதி:15 6/1
வெரிந் உறு சும்மையை விழுத்தி வெண் துகில் – ஆதி:15 29/1
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
மேல்


வெரீஇ (6)

வெம்பு தீ விட பாந்தளை வெரீஇ இரிந்து ஓடி – ஆதி:8 24/2
வாக்கொடும் மனம் தடுமாறி வாய் வெரீஇ
மீ கிளர் உயிர்ப்பொடும் விளம்புவான் அரோ – ஆதி:12 65/3,4
விரும்பி உடன் வந்து நொதி வீழ்ந்து உளம் வெரீஇ பின் – ஆதி:13 29/2
பாரகம் குழுமு மன்பதை பதைத்து உளம் வெரீஇ
தூர நின்று பரிவுற்று உயிர் துடித்தனர் இனி – ஆதி:14 185/2,3
வல்லியம் வெரீஇ இரி மடங்கல் அரியேற்றை – குமார:2 150/1
அஞ்சி வாய் வெரீஇ மீ கிளர்ந்து அதோகதி அடைந்தான் – நிதான:2 104/4
மேல்


வெரு (3)

வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/4
வெரு கொளீஇ கலக்கமுற்று வேதியன் கவலலுற்றான் – ஆதி:19 90/4
வெரு கொள தடித்து எழு மெய்யன் வெவ்விய – நிதான:2 6/3
மேல்


வெருக்கொள (1)

வெருக்கொள வெருட்டி விசிகம் பல விடுத்தே – ஆதி:13 23/2
மேல்


வெருட்சி (3)

இறை என வெருட்சி நீங்கினான் – ஆதி:10 1/4
வெருவியோர் உரைத்த அ வெருட்சி வார்த்தை நெஞ்சு – ஆதி:19 55/1
வித்தகர்க்கு வெருட்சி விளைத்ததால் – ஆரணிய:4 65/4
மேல்


வெருட்சியாம் (1)

வெறித்த சிந்தையார் வீசினர் வெருட்சியாம் விசிகம் – ஆதி:14 87/4
மேல்


வெருட்டலில் (2)

வெய்ய தீ_வினை முன் நின்று வெருட்டலில் வீழ்ந்தேன் – ஆதி:11 30/4
வீங்கு கார்_இருள் போர்த்து வெருட்டலில்
தாங்க_அரும் பல துன்பம் சமழ்த்தலில் – ஆரணிய:4 97/1,2
மேல்


வெருட்டி (3)

வெருக்கொள வெருட்டி விசிகம் பல விடுத்தே – ஆதி:13 23/2
சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டி சார – நிதான:3 36/1
மீதுமீது உற்ற விபத்து எலாம் ஒருங்கு அற வெருட்டி
மேதக ஜெயம் கொண்டனிர் மிக மகிழ்சிறந்தேன் – நிதான:6 5/2,3
மேல்


வெருட்டிடு (1)

கொலை தீர்வை கொடும் கூற்றம் குறுகி வெருட்டிடு பொழுதும் – நிதான:11 73/1
மேல்


வெருட்டு (1)

வெருட்டு வெம் மடங்கல் வாயுள் புக்கு உடன் மீண்டான் என்ன – ஆதி:19 116/2
மேல்


வெருட்டுபு (3)

வீட்டு உலகம் இன்று என வெருட்டுபு சந்தேக – ஆதி:14 63/3
மிடுக்கு உறு பைசாசங்கள் வெருட்டுபு வெகுண்டு கிட்டி – நிதான:3 51/1
சொன்மையால் உற வெருட்டுபு துரந்தனன் அரோ – நிதான:4 87/4
மேல்


வெருட்டும் (1)

வீறுவீறுற கணம்-தொறும் கதித்து எனை வெருட்டும்
ஈறு_இல் ஜீவனுக்கு இரக்ஷை மற்று இனி இலை என்றான் – ஆதி:14 118/3,4
மேல்


வெருட்டுவன (1)

முன் அணைந்து உளம் வெருட்டுவன முற்றும் முரணி – ஆதி:14 193/2
மேல்


வெருண்ட (2)

வீடியல் நெறியை நாடும் விரும்பினன் வெருண்ட நெஞ்சன் – ஆதி:2 3/4
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
மேல்


வெருண்டதும் (2)

விளம்பர தொனி கேட்டு ஒல்லை வெருண்டதும் குரவன் வாய்மை – ஆரணிய:5 59/1
கண்டு கேட்டு உளம் கவன்றதும் வெருண்டதும் காண்டி – ஆரணிய:8 20/2
மேல்


வெருண்டனர் (2)

விலகு மார்க்கம் இன்று ஆகி வெருண்டனர் – ஆதி:14 180/4
வெய்ய ஆவி இது என்று வெருண்டனர் – குமார:2 469/4
மேல்


வெருண்டு (14)

மிகைத்த சிந்தையான் வேதியன் வெருண்டு உளம் மெலிந்தான் – ஆதி:11 15/4
விம்மினன் உயிர்த்தனன் வெருண்டு நின்றனன் – ஆதி:12 31/3
விளம்பரம் அடுத்ததும் வெருண்டு மனை மக்கட்கு – ஆதி:13 28/1
வேர்த்து விம்மி நெட்டுயிர்த்து உடல் விதிர்ப்புற வெருண்டு
பார்த்து இறங்கு சென்னியன் ஒரு பதிதனை வினவி – ஆதி:14 106/2,3
விதிர்விதிர்த்து அலறி உள் வெருண்டு மீ உற – ஆதி:19 44/3
இழுத்தலின் வெருண்டு யாங்கள் இப்பால் – ஆதி:19 51/3
வெருண்டு பின்னிடைவன் ஆகில் விடும்-கொலோ வேந்தன் கோபம் – ஆதி:19 93/2
மை வழி வெருண்டு பின்வாங்க எண்ணினை – நிதான:2 33/4
நாடுவன் வெருண்டு நின்று நலிகுவன் நம்பன் சீர்த்தி – நிதான:3 4/2
வெருண்டு அகம் தெருண்டது வெறுப்பு காட்டியே – நிதான:4 33/4
வெய்ய கானவர் வலைப்படு மான் என வெருண்டு
பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/3,4
வெள்ளம் மல்க வெருண்டு உயிர் மாழ்கினர் – ஆரணிய:4 94/1
மேலை நாள் நடுத்தீர்வையை நினைந்து உளம் வெருண்டு
காலை மாலையும் கவன்று உளம் நடுங்கலும் பிறவும் – ஆரணிய:8 26/1,2
மேய அ நதி பெருக்கினை கண்டு உளம் வெருண்டு
தூய அக்கரைப்படுதுமோ என நிலை துளங்கி – இரட்சணிய:2 22/2,3
மேல்


வெருண்டேன் (1)

வித்தக கலை ஞானத்தை கண்டு உளம் வெருண்டேன் – ஆரணிய:8 19/4
மேல்


வெருவரல் (1)

வெருவரல் இன்றி மேல் விரைந்து செல்வதே – ஆதி:10 31/3
மேல்


வெருவரு (2)

வெருவரு பேய் கோரணி சித்தப்பிரமை திமிர்வாத வியாதி ஆதி – ஆதி:9 160/3
வெருவரு மரண வாசனை விளைப்பது – ஆதி:14 33/3
மேல்


வெருவரும் (2)

வெருவரும் காட்சித்தாய வெற்பு இதன் மீது செல்லும் – ஆதி:17 38/1
வெருவரும் பாவ தோட வெம் சிறைப்படுத்திற்று அம்மான் – ஆரணிய:8 42/2
மேல்


வெருவா (1)

வெருவா நடுங்கி திசை-தொறும் கூவிளிக்கொண்டு ஓடி சிதறினவால் – ஆதி:14 146/4
மேல்


வெருவி (4)

மின் உரும் ஏற்றினை வெருவி புற்று உறை – ஆதி:12 45/3
வெருவி உள் உடைந்து சோர்ந்தார் விதி நிடேதத்தை வீசி – ஆதி:14 141/3
திரம்_இலேம் வெருவி ஓடி திருமினேம் சிந்தை மாழ்கி – நிதான:3 7/4
தேறுக ஐய இ தீ சுரம் வெருவி நேர் திரிந்து – ஆரணிய:4 52/2
மேல்


வெருவியோர் (2)

வெருவியோர் உரைத்த அ வெருட்சி வார்த்தை நெஞ்சு – ஆதி:19 55/1
வெருவியோர் வெந்நிட்டு ஏக வித்தகன் முன்னிட்டு ஏகி – நிதான:3 14/1
மேல்


வெருவுறாது (1)

வெருவுறாது எதிர் தருக்கிய ஒள்ளிய விறலும் – ஆரணிய:6 27/4
மேல்


வெருள் (1)

வெருள் உண்டு இகல் உண்டு பல் விக்கினம் உண்டு துட்ட – ஆதி:12 7/2
மேல்


வெருளும் (1)

வெருளும் இருளும் மின் ஒளியும் விரவி இருள் போய் விடிவு எய்த – ஆதி:14 149/3
மேல்


வெருளுற்றார் (1)

வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார் – ஆரணிய:7 11/4
மேல்


வெருளுறீஇ (1)

வெருளுறீஇ கலங்கி நின்றார் வெய்து உளம் திகைத்து மாதோ – குமார:2 448/4
மேல்


வெருளுறும் (1)

வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர் படுகர் முற்றும் – நிதான:3 69/3
மேல்


வெல் (1)

மேலை நாள் இளவரசு உயர்த்த வெல் கொடி – ஆதி:4 59/1
மேல்


வெல்குக (1)

வெல்குக மெய்மை என்றும் விளங்குக கல்வி செல்வம் – இரட்சணிய:3 109/3
மேல்


வெல்வதும் (1)

வெல்வதும் இருக்க ஓர் பக்கம் வேறு நீ – நிதான:2 23/2
மேல்


வெவ் (36)

பாச வெவ் வினையின் மிக்க பாரத்தால் அழுந்தும் யாரே – ஆதி:2 48/2
சால வெவ் விடாய் தணித்து மேன்மேலுற தழைத்து – ஆதி:8 7/3
பை ஆடு அரவ பணி வெவ் விடம் உண்டு – ஆதி:9 128/3
விஞ்சினால் என பரந்தது வெவ்_வினை திரள் போல் – ஆதி:11 43/2
யாண்டும் நீங்க அரிதாகி வெவ் இடர் உழந்து ஏங்கி – ஆதி:11 47/2
வெவ் ஊரிடை நின்று லௌகீகன் விரைந்து கிட்டி – ஆதி:12 2/2
குன்றி வெவ் வியன் துகள் குழுமும் மண்டபம் – ஆதி:14 23/4
வெவ் இயல் தீ_வினை விளைக்கும் மாத்திரன் – ஆதி:14 45/3
நினைவில் செய்கையில் ஈட்டிய நீச வெவ் வினைகள் – ஆதி:14 114/2
நீச வெவ் வினை உஞற்றினன் நிமல வீட்டு உய்க்கும் – ஆதி:14 116/2
ஜீவனுக்கு அழிவுசெய் தீய வெவ்_வினை – ஆதி:15 22/2
வெவ் இடர் உழத்தல் இன்றி வேறு அதர் பிடித்து உன்னோடும் – ஆதி:17 11/1
அஞ்சும் வெவ் இடர் துற்றி அலமரல் தரும் இந்த – ஆதி:19 14/1
வித்தக விருத்தியை கெடுக்கும் வெவ் விடம் – ஆதி:19 39/3
பாச வெவ் வினை தொழில் பயின்ற பாமர – குமார:1 12/2
பாச வெவ் வினை மிகு பாரம் ஆயிற்றால் – குமார:1 42/4
வெவ் அழல் புகை என உயிர்ப்பு வீங்கிட – குமார:2 231/2
காண்தகு சேவடியிலும் வெவ் இருப்பாணி கடாவினார் – குமார:2 340/3
சற்பனையின் வெவ் இடர் சதிக்க வருமேனும் – குமார:3 16/3
நீச வெவ்_வினை குடி நிலவிற்று ஆதலின் – நிதான:2 18/2
அடையும் வெவ் விட நாகத்தை ஆர்_உயிர் குடித்தாங்கு – நிதான:2 87/3
அருமை ஆய வெவ் அழிம்பனை ஆரண கிழவன் – நிதான:2 105/2
வெருளுறும் இரவில் தொக்க வெவ் இடர் படுகர் முற்றும் – நிதான:3 69/3
மெய் ஆரண வித்தகன் வெவ் இடர் சால் – நிதான:4 1/1
வெவ் இயல் படு மேனிலை திருத்தி வெள் ஒளி கால் – நிதான:7 31/3
வேறு சில் நாள் ஒரு பாங்கர் வெவ்_வினை – ஆரணிய:4 2/1
மேய செம் பொருள் செல்வத்தை விழுத்தி வெவ் இடர் சால் – ஆரணிய:4 42/3
வெவ் வாய் அரக்கன் வழும்பு ஊன் முடை மிக்கு நாறி – ஆரணிய:4 118/2
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/2
வெவ் அழல் நிரையம் எய்த விதித்தது இ குறுக்கு_பாதை – ஆரணிய:5 73/4
வந்து இ மாய வெவ் வலையிடை மறிந்தது என் வகுத்து – ஆரணிய:7 21/2
வெறுப்புறு புலையனேன் அசுத்த வெவ்_வினை – ஆரணிய:9 57/3
பாச வெவ்_வினைகள் வேர் பறியும் காண்டியால் – ஆரணிய:9 94/4
மீ கிளர்ந்து எழு காதலால் வெவ் இடர் பழுத்த – இரட்சணிய:1 52/1
விருண மேனியில் வெவ் இருப்பாணி செல் – இரட்சணிய:1 68/1
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை – இரட்சணிய:2 8/4
மேல்


வெவ்_வினை (5)

விஞ்சினால் என பரந்தது வெவ்_வினை திரள் போல் – ஆதி:11 43/2
ஜீவனுக்கு அழிவுசெய் தீய வெவ்_வினை
யாவையும் தொலைத்தனம் இடர்ப்படேல் எனா – ஆதி:15 22/2,3
நீச வெவ்_வினை குடி நிலவிற்று ஆதலின் – நிதான:2 18/2
வேறு சில் நாள் ஒரு பாங்கர் வெவ்_வினை
தூறு அடர் கானகம் துருவி தீ விலங்கு – ஆரணிய:4 2/1,2
வெறுப்புறு புலையனேன் அசுத்த வெவ்_வினை
பொறுப்பரோ புனிதர் என்று உள்ளம் பொங்குமால் – ஆரணிய:9 57/3,4
மேல்


வெவ்_வினைகள் (1)

பாச வெவ்_வினைகள் வேர் பறியும் காண்டியால் – ஆரணிய:9 94/4
மேல்


வெவ்விய (8)

வெவ்விய கரா வயிறு புக்கி உயிர் மீண்ட – ஆதி:13 48/1
வெவ்விய தெவ் முனை முருக்கி விறல் வாதை புனைந்திடுமால் – குமார:4 42/4
வெரு கொள தடித்து எழு மெய்யன் வெவ்விய
தருக்குறும் இரு சிறை தழைத்த சார்பினன் – நிதான:2 6/3,4
வெவ்விய கரத்து எனை விலக்கி போயினார் – நிதான:4 45/4
வெவ்விய நடையும் பேச்சும் விரோதமாம் அறிதி என்னா – நிதான:5 99/2
வெவ்விய மேனி தோன்றிட நின்றான் வெருளுற்றார் – ஆரணிய:7 11/4
வெவ்விய பிசாசு உளம் விளைத்தது என எண்ணி – ஆரணிய:9 112/3
மெய் விடுத்திடா வித்தக வெவ்விய மரணத்து – இரட்சணிய:2 40/1
மேல்


வெவ்வேறு (1)

ஆக்கையும் ஜீவனும் வெவ்வேறு ஆயினும் ஒத்திருப்பது போல் – நிதான:5 32/1
மேல்


வெள் (12)

கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை – ஆதி:15 23/2
பத்தர் ஓர்சிலர் வெள் உடை பரித்து உலவுவதும் – குமார:1 48/2
மின்னல் இன்றி விழுந்தது இ வெள் இடி என்பார் – குமார:2 277/1
கறங்கு வெள் அருவி திரள் பொலிவன காணாய் – குமார:4 54/4
தண்ட வெள் இடி வீழ்தலும் தலை மண்டை சிதறி – நிதான:2 95/1
விதி வழி பட்டனன் விசால வெள் இடை – நிதான:4 14/1
மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/3
வெவ் இயல் படு மேனிலை திருத்தி வெள் ஒளி கால் – நிதான:7 31/3
சுருள்படும் குல மலர்களும் துத்து வெள் அடையும் – நிதான:7 44/4
பேச்சுக்கு ஆயிரம் பொன் படும் பேசும் வெள்
வீச்சுக்கு ஆயிரம் பொன் படும் வீச்ச வாய் – நிதான:7 85/2,3
மேக்கு உயர்ந்து உரும் வெள் இடி வீழ்த்து என – ஆரணிய:4 68/1
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன் – ஆரணிய:9 66/2
மேல்


வெள்_வீச்சுக்காரர் (1)

மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர்
குணத்தினின் வேறதோ – நிதான:5 82/3,4
மேல்


வெள்ள (1)

வெள்ள வாரிதி மீ கிளர்ந்தால் என – ஆதி:14 166/1
மேல்


வெள்ளம் (9)

இரு-பால் அருள் வெள்ளம் எழுந்து உலகு எங்கும் மல்க – ஆதி:5 10/4
மண்டு வெள்ளம் மறிந்து உற மோதியும் – ஆதி:9 76/3
கருணை வெள்ளம் ஒத்து அலர்வன வயின்-தொறும் காணாய் – குமார:4 55/4
வந்துவந்து அடர்க்குமேனும் மகத்துவ கருணை வெள்ளம்
உந்தி மேலிடும் மற்று என்னா உள் உளே ஊக்கம் தோன்றி – நிதான:3 20/2,3
வெள்ளம் மல்க வெருண்டு உயிர் மாழ்கினர் – ஆரணிய:4 94/1
வெள்ளம் தோய்ந்தும் வெதுப்புறு மேனியாள் – இரட்சணிய:1 61/4
வேதனை உத்தி மொண்டு விழுத்த நீர் வெள்ளம் பொங்கி – இரட்சணிய:2 4/2
துன்றி மன் உவகை வெள்ளம் சொரிந்து என துரிசு_இல் தூதர் – இரட்சணிய:3 13/2
வெள்ளம் முகந்து அருள் பொழியும் விமல லோசன நிதியை – தேவாரம்:4 1/2
மேல்


வெள்ளமே (1)

மேல் நிமிர்ந்து பரந்தது வெள்ளமே – ஆரணிய:4 91/4
மேல்


வெள்ளரி (1)

விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்பு பூண் கட்டிடும் அவ்விதம் போல – நிதான:9 22/1
மேல்


வெள்ளாண்மை (1)

மன்பதைகாள் கிருஷிகன் வெள்ளாண்மை செய தகும் பருவம் வாய்த்தது என்னா – ஆதி:9 80/1
மேல்


வெள்ளி (5)

வெள்ளி ஒன்று உளது என்று அதை விரும்பினர் நாடி – ஆதி:9 4/2
விடிந்ததாம் என விடிந்தது நலம் தரு வெள்ளி – குமார:2 206/4
மோசமாய் அருள் மூர்த்தியை முப்பது வெள்ளி
காசை நச்சி ஒன்னார் கையில் காட்டிய கள்வன் – குமார:2 283/1,2
பாய் ஒளி மட்கி போயது வெள்ளி பகலேனும் – குமார:2 416/1
இலகு பொன் வெள்ளி இல்லம் மிசை தன தானியங்கள் – நிதான:7 64/2
மேல்


வெள்ளிக்கு (1)

மேவலாரை உவந்தனை முப்பது வெள்ளிக்கு
ஆவலாய் அருளாளனை விற்றனை அந்தோ – குமார:2 292/1,2
மேல்


வெள்ளிடை (1)

மின் குலாவிய உடையினர் வெள்ளிடை கரப்ப – குமார:2 486/2
மேல்


வெள்ளிய (1)

ஒருவன் வெள்ளிய செருப்பு அடியுண்டவன் உலவி – ஆரணிய:2 25/2
மேல்


வெள்ளியங்கிரியில் (1)

வெள்ளியங்கிரியில் தோன்றும் வியன் நிலை மாடம்-நின்றும் – ஆதி:19 88/2
மேல்


வெள்ளியில் (1)

வெள்ளியில் படும் முப்பது காசு இதை வெஃகி – குமார:2 296/4
மேல்


வெள்ளை (1)

சீர்மையுற்ற செம் கால் வெள்ளை அன்னங்கள் செவிய – ஆதி:18 31/1
மேல்


வெளி (8)

புறம் கிளர் வெளி உலாவி புத்தக சுருளை நாடி – ஆதி:2 47/2
இல்லாமையிலே வெளி வான் முகட்டு எண்_இறந்த – ஆதி:5 2/1
ஒளி தலை வான் கதி பெறு பக்குவம் அடைவர் உண்மை வெளி உய்த்ததாமால் – ஆதி:9 85/4
உரு வெளி திகழ்த்தி வெய்யோன் உதய மால் வரை வந்து உற்றான் – நிதான:3 65/4
முட்டும் என்று எழில் முத்தி மா நகர் வெளி முகட்டில் – நிதான:7 6/2
நீர் திரை முகந்து அகம் நிரைத்து மேல் வெளி
போர்த்து இடித்து உரறி மண் புழுதி போக்கி விண் – நிதான:10 3/2,3
விரிதரு பரமாகாய வெளி திகழ் பரம சீயோன் – ஆரணிய:5 82/1
மெய் வெளி வரு வகை யாது விள் எனா – ஆரணிய:9 89/4
மேல்


வெளிக்கு (1)

வருமே வெளிக்கு வரில் அதிக மானக்கேடே மறுமையினும் – நிதான:9 22/3
மேல்


வெளிப்பட்டிடும் (1)

வினையினால் வரவர வெளிப்பட்டிடும் விரகாய் – ஆரணிய:10 26/4
மேல்


வெளிப்பட்டு (2)

மீண்டு உயிர்பெற்று எழுந்து திரு_அடி தொழுதான் ஒரு தொண்டன் வெளிப்பட்டு ஐய – ஆதி:9 163/4
வெம் சிறை கதவின் வன் தாள் திறந்து யாம் வெளிப்பட்டு உய்வான் – ஆரணிய:4 167/2
மேல்


வெளிப்பட (1)

வஞ்சகம் வெளிப்பட வைரக்கல்லினும் – குமார:2 33/2
மேல்


வெளிப்படுத்தி (1)

தெள்ளிதுடன் வெளிப்படுத்தி சிந்தை உடைந்து உளம்திரும்பி – குமார:2 351/3
மேல்


வெளிப்படுத்தினர் (1)

எவ்வகை வெளிப்படுத்தினர் இவற்கு என – ஆரணிய:9 85/2
மேல்


வெளிப்படுதற்கு (1)

விண்டு இயற்று மறை வினைகள் வெளிப்படுதற்கு அஞ்சும் இவன் – நிதான:5 28/1
மேல்


வெளிப்படுமால் (1)

அகத்து ஊட்டும் அறிவானும் அருள் கிரியை வெளிப்படுமால் – நிதான:5 50/4
மேல்


வெளிப்படை (1)

தெய்விக வெளிப்படை தேற்றம் இன்று எனில் – ஆரணிய:9 89/1
மேல்


வெளிப்படையாக்க (1)

அத்தனே வெளிப்படையாக்க வேண்டுமால் – ஆரணிய:9 88/4
மேல்


வெளிப்படையாக (1)

தெய்வ மா குமரன் வெளிப்படையாக ஜெபித்தனர் சிந்தனை உருகி – குமார:2 62/4
மேல்


வெளிப்படையாய (1)

வெளிப்படையாய போதும் விசுவாசித்திடுவீர்_அல்லீர் – குமார:2 181/2
மேல்


வெளிப்படையில் (1)

பன்னுவேன் வெளிப்படையில் என்று ஊக்கினன் பகர்வான் – ஆதி:1 10/4
மேல்


வெளியா (1)

தப்பாதே வெளியா நடுநாள் எனை தாங்கிக்கொள்ள – தேவாரம்:5 4/2
மேல்


வெளியினால் (1)

ஆசை நாயகன் அருள் உரு வெளியினால் அயர்வாள் – இரட்சணிய:1 45/1
மேல்


வெளியே (1)

விதிமுறையே வரவு எதிர்ந்து உள் புகுந்தனர் மற்றையர் வெளியே விடுபட்டாரால் – ஆதி:9 98/4
மேல்


வெளியை (1)

வித்தக வெளியை கண்டார் விமல சந்நிதியில் உய்க்கும் – ஆரணிய:5 84/3
மேல்


வெளிவந்த (1)

போதமே போதம் கடந்த மெய்ப்பொருளே பொருள் புலப்பட வெளிவந்த
நாதமே யூத குல நராதிபனே நல் நெறி பிழைத்து உலகு உழலும் – தேவாரம்:6 12/2,3
மேல்


வெளிறுமால் (1)

வெயில் முனம் மஞ்சள் போல் வெளிறுமால் கால தண்டம் – ஆதி:17 15/3
மேல்


வெளுக்க (1)

மேவ நாச யோசனை சிலர் விளைத்ததும் வெளுக்க
சாவ நாசம் வந்து உற்றது என்று அணி நகர் சலித்த – குமார:2 212/3,4
மேல்


வெளுத்தது (2)

மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து – குமார:2 432/1
வெள் என வெளுத்தது உன் உரையின் மேயது உன் – ஆரணிய:9 66/2
மேல்


வெளுத்து (2)

சடைத்து மேல் வெளுத்து என நிலா தயங்கின எங்கும் – குமார:2 80/4
மெய் கண்ட இடத்து பொய்மை வெளுத்து என வெளுத்தது இந்து – குமார:2 432/1
மேல்


வெற்பிடை (1)

விள்_அரும் கருணையால் ஓர் வெற்பிடை விளங்கி தோன்றி – தேவாரம்:11 18/2
மேல்


வெற்பு (3)

வெருவரும் காட்சித்தாய வெற்பு இதன் மீது செல்லும் – ஆதி:17 38/1
வெரிந் உறு சும்மை வீழ்த்தி வெற்பு இடர் கடந்து இராவின் – நிதான:4 91/2
புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/4
மேல்


வெற்றி (8)

மேம்படு தலத்தின் மேய வேதியற்கு உற்ற வெற்றி
ஓம்படையாக காத்த உன்னதத்து ஒருவர் பாற்றே – ஆதி:19 117/3,4
பகவனாம் பரம தாதை பரிவுடன் தரித்த வெற்றி
மகிமை ஒண் மௌலி போலும் திகழ்ந்தனன் வயங்கு வெய்யோன் – குமார:2 439/3,4
சித்திரம் வெற்றி தரும் பரிசு அன்று அது சீர்கேடாம் – நிதான:2 78/2
வீரியம் பெறுவேன் வெற்றி எனது என விளித்து – நிதான:2 100/3
ஒருமையாய் பொருது ஓட்டினன் வெற்றி பெற்று உய்ந்தான் – நிதான:2 105/3
வெற்றி மாலையை புனைந்தனன் வேதியர் திலகன் – நிதான:2 108/4
வெற்றி கொள் விசுவாச பரிசை கை – ஆரணிய:6 56/1
வெற்றி அம் கிரி மீது உலகு எலாம் நடுங்க விளங்கிடும் விபுதனே போற்றி – தேவாரம்:11 8/2
மேல்


வெற்றிபெற்று (1)

வன் குலாமரோ வெற்றிபெற்று உய்வர் இவ் வண்ணம் – ஆதி:14 89/3
மேல்


வெற்றிபெறுவாய் (1)

வெற்றிபெறுவாய்_அலை விரைந்திடுதி என்றான் – நிதான:2 51/4
மேல்


வெற்றிபெறுவாய்_அலை (1)

வெற்றிபெறுவாய்_அலை விரைந்திடுதி என்றான் – நிதான:2 51/4
மேல்


வெற்று (3)

வெற்று நேர போக்காய் புகல் விநோதமும் அன்று – பாயிரம்:1 14/1
வெற்று உமி குத்துதல் விழுமிது_அன்று காண் – ஆதி:10 22/2
வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன் – ஆதி:19 115/4
மேல்


வெறி (2)

அல்லியன் மனத்தினர் அமார்க்க வெறி கொண்டு – ஆதி:13 40/1
கோடிகோடி குடி வெறி கொண்டிடும் – நிதான:7 88/2
மேல்


வெறித்த (1)

வெறித்த சிந்தையார் வீசினர் வெருட்சியாம் விசிகம் – ஆதி:14 87/4
மேல்


வெறியர் (1)

முகந்து கொள் பொருள்_ஆசையர் முழு குடி_வெறியர் – ஆரணிய:10 28/2
மேல்


வெறியா (1)

காம வெறியா ஈர்_எண்ணாயிரம் கோவியரை கற்பழித்த – நிதான:9 39/2
மேல்


வெறியாட்டின் (1)

வெறியாட்டின் மயங்கி நிசாசர வெம் பசாசன் – ஆரணிய:4 103/3
மேல்


வெறுக்கும் (2)

தனை வெறுக்கும் தனை கெடுக்கின்ற தீ_வினை – நிதான:5 72/1
வெறுக்கும் விசுவசித்து அன்பொடு – நிதான:5 72/2
மேல்


வெறுக்கையை (1)

வெங்கணார்க்கு வெறுக்கையை வீசினார் – குமார:2 476/4
மேல்


வெறுத்த (1)

வெறுத்த நாச படப்பை விரும்பி யான் – ஆதி:19 56/1
மேல்


வெறுத்தவன் (1)

விளம்பரத்தை வெறுத்தவன் வெண் மணல் – ஆதி:9 77/2
மேல்


வெறுத்தனர் (1)

மேதகையது_அன்று என வெறுத்தனர் நினை போல் – நிதான:4 70/3
மேல்


வெறுத்தனன் (1)

வெறுத்தனன் உலக வாழ்வு என ஓர் வீரியம் – ஆரணிய:9 41/1
மேல்


வெறுத்திட்டு (2)

விரும்பிய மனைவியை வெறுத்திட்டு ஏகுதல் – ஆதி:10 7/2
ஆம் அவை யாவும் சேர வெறுத்திட்டு அருளாளன் – ஆதி:16 13/2
மேல்


வெறுத்திடாதீர் (1)

வேண்டுமேல் தருவல் ராஜ விளம்பரம் வெறுத்திடாதீர் – ஆதி:2 37/4
மேல்


வெறுத்து (12)

மீ உறு ஞானத்தை வெறுத்து அகம்-தொறும் – ஆதி:9 30/3
வெறுத்து எனை புறக்கணித்தனர் ஆயினும் விமலன் – குமார:1 90/2
சேயை செல்வத்தை வெறுத்து உயர் ஜீவனை விரும்பி – குமார:1 96/2
வெறுமையில் திகழ்வராயில் வெறுத்து அவமதிக்கும் ஒல்லை – குமார:2 179/2
தனை வெறுத்து உரையிடற்கு_அரு மெய் மனத்தாபம் – குமார:2 201/2
வெறுத்து இராயனை பகைத்தவன் வேத நூல் விரோதி – குமார:2 226/3
பத்தியை வெறுத்து உலக கேளிர் நடை பற்றி – நிதான:4 75/3
விலகினீர்_அலீர் வெம் கொடு வினை பகை வெறுத்து
கலகமிட்டு உடல் குருதி நீர் கவிழ்தர கறுவி – நிதான:6 9/2,3
சிச்சீ என துர்_இச்சை எலாம் சேர வெறுத்து சீத்துவிட்டு – நிதான:9 16/3
சிங்கி எனவே வெறுத்து அழியா செல்வம் வழங்கும் கிறிஸ்து எனும் – நிதான:9 18/3
மெய் ஆரணனார் நல் நெறியை வெறுத்து விலகி வெட்கம் என்பீர் – நிதான:9 76/2
வெறுத்து முன் எதிரூன்றிடும் மெய் பத்தி வேண்டும் – ஆரணிய:2 34/4
மேல்


வெறுத்துளம் (1)

மின்-கொலோ விளிதலின் என வெறுத்துளம் எனின் – நிதான:11 17/2
மேல்


வெறுத்தேன் (1)

மேனி வார்ந்த செம் குருதியை மதித்திலன் வெறுத்தேன்
ஊனம்_இல் மன_சான்றையும் உள் உற புதைத்தேன் – ஆதி:14 115/3,4
மேல்


வெறுப்பது (1)

கலை_வலார் வெறுப்பது களங்கம் மிக்கது – ஆதி:10 11/2
மேல்


வெறுப்பான் (1)

சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ – ஆதி:2 43/1
மேல்


வெறுப்பு (2)

வெருண்டு அகம் தெருண்டது வெறுப்பு காட்டியே – நிதான:4 33/4
தேவ சிநேகம் பவ வெறுப்பு திடநம்பிக்கை இவை பரிசுத்தாவி – நிதான:9 64/3
மேல்


வெறுப்புறு (1)

வெறுப்புறு புலையனேன் அசுத்த வெவ்_வினை – ஆரணிய:9 57/3
மேல்


வெறும் (7)

வீற்றிருப்பது நொதிப்பது வெறும் மனஸ்தாபம் – ஆதி:11 42/4
வில்லிடும் பலவிதம்படு வெறும் திருட்டாந்த – நிதான:2 92/2
அன்பு உறழும் கிரியைக்கே அருள் கிடைக்கும் வெறும் பேச்சு – நிதான:5 35/3
விந்தையினை பனி துறையில் விரி பகன்றை வெறும் துணர் என்று – நிதான:5 53/3
விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில் – நிதான:5 86/3
பொல்லா உலக புரட்டர் வெறும் பொய்யை நிறைத்து கட்டிவைத்த – நிதான:9 52/1
மெய் பரிசு உணர்வீர் இந்த வெறும் குவட்டினுக்கு நாமம் – ஆரணிய:5 65/1
மேல்


வெறும்_சொலில் (1)

விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில்
கரவின் என் உளம் காணுதற்கு ஆரை நீ – நிதான:5 86/3,4
மேல்


வெறுமை (2)

வெறுமை கண்டு அவமதித்திடுதிர் வேதியர் – நிதான:10 43/3
வெறுமை ஆக்குமோ விழு தகு நோன்பு உளம் விளையில் – ஆரணிய:6 13/4
மேல்


வெறுமையில் (1)

வெறுமையில் திகழ்வராயில் வெறுத்து அவமதிக்கும் ஒல்லை – குமார:2 179/2
மேல்


வெறுமையை (1)

வெறுமையை நினைத்து துன்பம் விளைத்தனர் மேன்மேலாக – குமார:2 190/3
மேல்


வென்றது (1)

இமயம் முதல் தக்கணம் வரை வென்றது இது காண் என்று – நிதான:2 79/3
மேல்


வென்றார் (1)

விசுவாசத்தால் முப்பகையை வென்றார் முது வேதியர் அதனால் – நிதான:9 69/3
மேல்


வென்றி (19)

வென்றி சேர் அரசன் தந்த விதிவிலக்கு எவையும் மீறி – ஆதி:2 27/1
வென்றி ஆபிரகாமையும் விழிக்கு எதிர் கண்டான் – ஆதி:9 144/4
வென்றி கூர் அரசன் திரு விளம்பரம் விளம்பும் – ஆதி:9 154/2
வென்றி அரசன் பணி விதிப்படி பிதாக்கள் – ஆதி:13 50/2
வென்றி சேர் அரசன் உய்த்த விழு திரு_வாக்கு ஈது என்ன – ஆதி:19 111/3
வென்றி எவ்வகை விளைத்தனை விளம்புதி எனலும் – குமார:1 67/4
வென்றி சேர் அரசன்-கொலாம் நீ என வினவ – குமார:2 218/3
வென்றி புனை தரு மாண்பும் விரித்து உரைப்ப வியப்பினொடு – குமார:4 40/3
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
வென்றி வேந்து அருளினால் விலகி உய்ந்தனன் – நிதான:4 24/4
வென்றி தரு தாழ்மை நிலம் மேவி விலகாமே – நிதான:4 65/3
வென்றி தீது செய் வினைஞரை புரப்பதே வேட்கை – நிதான:7 59/2
வென்றி அன்பு விழு தவம் வித்தகம் – நிதான:8 13/2
வென்றி நடு புரி வீர இன்று இவனை கழுவேற்றி – நிதான:11 66/1
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/2
வென்றி அம் கிரியீர் ஏக விடை இனி தருக என்றார் – ஆரணிய:5 88/3
வென்றி அம் பகவனை விதேக முத்தியை – ஆரணிய:9 39/2
வென்றி புனை வேதியன் விளம்பிட வியந்து – ஆரணிய:9 114/2
வென்றி சேர் மைந்தனாக விமலாவியாக ஒன்றும் – இரட்சணிய:3 110/2
மேல்


வென்றியே (1)

மேவர உயிர்த்தெழுந்த வென்றியே இரக்ஷை என்றும் – ஆரணிய:8 76/4
மேல்


வென்றியோடு (1)

வென்றியோடு உயிர்த்தெழுந்த விந்தையை விசுவசித்து உள் – ஆரணிய:8 47/3
மேல்


வென்று (6)

வென்று ஆழி நடத்தி அறம்படு விண்ணும் மண்ணும் – ஆதி:5 9/1
இகலி முப்பகையை வென்று இங்கு இடை நிலாது ஓடல் வேண்டும் – ஆதி:17 23/4
சத்துரு புறக்கொடைதர சமரில் வென்று
பத்தர் சிலர் ராஜ்ய பரிபாலனம் நடத்தி – குமார:4 9/1,2
கெடுக்கும் முப்பகையை வென்று கேவலம் நாடி போகும் – நிதான:3 51/3
வைத்து முப்பகையை வென்று வளம்படுத்து அமலன் செங்கோல் – ஆரணிய:5 47/3
தொண்டர் வென்று துரந்து கடைப்பிடித்து – ஆரணிய:6 58/2

மேல்