பூ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 33
பூ_உலகு 2
பூ_உலகுளே 1
பூக்குமால் 1
பூகம் 1
பூகம்-நின்று 1
பூங்கா 1
பூங்காவனங்களும் 1
பூங்காவில் 3
பூச்சது 1
பூச்சியும் 1
பூஷணம் 1
பூசலை 1
பூசனை 6
பூசா 1
பூஜிதை 2
பூஜியும்-மின் 1
பூசுண்டு 1
பூசை 2
பூஜை 2
பூஞை 1
பூட்டி 7
பூண் 5
பூண்ட 9
பூண்டாய் 1
பூண்டு 17
பூண்டுளேம் 1
பூண்டுளோர் 1
பூண்டேம் 1
பூணலை 1
பூணுவர் 2
பூத்த 18
பூத்தார் 1
பூத்தான் 2
பூத்திடின் 1
பூத்து 10
பூத்தேன் 1
பூத்தோய் 1
பூத 5
பூதத்தில் 1
பூதமும் 1
பூதர 1
பூதரங்களையும் 1
பூதரம் 2
பூதரமே 1
பூதல 5
பூதலத்தில் 2
பூதலத்து 7
பூதலத்துக்கு 2
பூதலத்தை 1
பூதலம் 8
பூதி 3
பூதியங்கள் 2
பூந்தோட்டத்து 1
பூப்ப 4
பூப்பது 1
பூப்பார் 1
பூபதி 3
பூம் 29
பூமான் 1
பூமி 12
பூமியில் 3
பூமியிலே 1
பூமியின் 3
பூமியும் 3
பூமியை 1
பூமியோடே 1
பூமுகம் 1
பூர்வ 2
பூர்வம் 1
பூர்வவழி 1
பூர்வோத்தர 1
பூரண 5
பூரணத்தையும் 1
பூரணமா 1
பூரணமாக 1
பூரணமாய் 1
பூரணானந்த 1
பூரித்தார் 1
பூரிதர் 1
பூரிப்பர் 1
பூரிய 2
பூரியர் 8
பூரியர்க்கு 1
பூரியன் 2
பூரியன்-தனை 1
பூரியனேன் 1
பூருவ 7
பூருவம் 1
பூருவாச்சிர 1
பூருவாச்சிரமத்து 1
பூவரும் 1
பூவலயத்திடை 1
பூவலயத்துக்கு 1
பூவலயத்தை 1
பூவலயம் 1
பூவில் 1
பூவினுக்கு 1
பூவுலகை 1
பூவை 3
பூவைத்-தான் 1
பூவையர்க்கு 1
பூவையர்கள் 1
பூழி 2
பூளை 1
பூளையில் 1

பூ (33)

பூ அலர் பொய்கை-தோறும் புது மது திவலை ஈட்டம் – ஆதி:4 20/3
மன்னவன் மிருத்திகேயன் அத்தினி எனும் பூ மாதை – ஆதி:6 6/2
பொங்கரில் புதுமையாக புனைந்த சித்திர பூ மன்றில் – ஆதி:6 16/3
கானம் மல்கு பூ மலர் குலம் கவின் பெறு காட்சி – ஆதி:9 62/1
பூ_உலகு உய வரு புனிதன் புத்துரை – ஆதி:14 34/4
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
சினை அலர்ந்த பூ நறு விரை அளைந்து உலாம் தென்றல் – ஆதி:18 41/2
பூ வண கொடி பின்னிய பொற்பு உறு – ஆதி:19 64/2
நிரப்பினர் பேதுரு நிலைக்க பூ மிசை – குமார:2 44/3
பூ வரு புண்ணிய பொருப்பின் ஓர் புடை – குமார:2 399/3
பூ சமாதிக்கு உறு புணர்ப்பு எலாம் புரிந்து – குமார:2 412/3
பூ அணையாக கண்படைகொள்ளும் புனிதற்கு ஓர் – குமார:2 418/1
கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர் – குமார:2 434/4
தண்டலை தாழ்த்தி மென் பூ தடம் சினை கரத்தால் நல்கி – குமார:2 441/2
பூ தொடை புனைந்து அமர்புரிந்திடுவது ஆனான் – நிதான:2 61/4
பூ வலயத்து நீச புலை அநுபோகம் துய்த்து – நிதான:3 22/1
உய் திறம் நாடுவார் போல் உவப்புரை பேசி ஒண் பூ
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/1,2
ஊன் பழுத்த பூ மாயம் ஒன்றானும் உள்ளுறாமே – நிதான:6 13/1
பொய் வகுத்த பூ மாயமும் புலைமையும் போக – நிதான:6 28/1
கங்கையின் குலத்து உதித்த பூ வைசியராம் கபட்டு – நிதான:7 39/3
பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ
காண நெஞ்சு இவரும் காட்சி கரு பொருள் பலவும் ஈட்டி – நிதான:7 71/2,3
மன் பூ உலகுக்கு அஞ்சல் என வழங்கும் அபய வரதாஸ்தம் – நிதான:9 96/3
மருவு பூ அடுக்கு மெத்தை மௌன நித்திரை வண் செல்வ – நிதான:10 54/3
புற்புத நீர் உடல் பொறையை பூ தூளியிடை விழுத்தி – நிதான:11 74/1
பூ அலர் கற்பக பொலன் பொதும்பரும் – ஆரணிய:4 19/1
பூ நலம் நோக்கிய புதுமை போலுமால் – ஆரணிய:4 21/4
நறிய முக்கனி நறை நறும் தண் பூ நறை – ஆரணிய:4 23/1
பூ வரு துறக்கமே போலும் ஈது எனா – ஆரணிய:4 28/4
பூ அலர் நறும் தொடை புசிப்பர் தீம் கனி – ஆரணிய:4 30/4
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
பூ சமாதி உற்று உயிர்த்தெழுந்து உன்னதம் புக்கோன் – ஆரணிய:6 20/2
பொன்றிய புனித மேனி பூ சமாதியினும் புக்கு – ஆரணிய:8 47/1
பாவம் மல்கு பூ_உலகுளே மற கொடும் பாவர் – இரட்சணிய:3 84/1
மேல்


பூ_உலகு (2)

பூ_உலகு உய வரு புனிதன் புத்துரை – ஆதி:14 34/4
பொருள் இலார்க்கு இல்லை இந்த பூ_உலகு அது போல் யாண்டும் – ஆதி:17 32/1
மேல்


பூ_உலகுளே (1)

பாவம் மல்கு பூ_உலகுளே மற கொடும் பாவர் – இரட்சணிய:3 84/1
மேல்


பூக்குமால் (1)

போதம் மல்கும் அருள் துணை பூக்குமால் – நிதான:8 7/4
மேல்


பூகம் (1)

புன்னை வாதுமை இருப்பை வான் தொடு மடல் பூகம்
தென்னை ஆமலகம் கடு தான்றி திந்திருணி – ஆதி:18 3/2,3
மேல்


பூகம்-நின்று (1)

பச்சை பூகம்-நின்று எழு குல குயில் மொழி பாவாய் – குமார:1 65/1
மேல்


பூங்கா (1)

கார் ஆர் பூங்கா அகத்தின் கண் ஆர் நிழல் சுகமும் – ஆதி:19 2/1
மேல்


பூங்காவனங்களும் (1)

காவலன் விரும்பு பூங்காவனங்களும்
ஜீவ நீர் பாய்தலில் செழிப்புற்று ஓங்குமே – ஆரணிய:4 19/3,4
மேல்


பூங்காவில் (3)

ஆவிக்கு ஆறுதல் நல்க என்று ஆக்கு பூங்காவில்
கண் துயின்று ஊன் பொதி காயத்தை – ஆதி:19 68/1,2
தீங்கு அகன்ற மெய் கிறிஸ்தவ செழித்த பூங்காவில்
மாம் குயில் குலத்து இன் இசை திசை-தொறும் மடுத்தல் – குமார:4 67/1,2
தம் ஆவி இனைந்து பெரும் துயரம் தாங்கி தண் நறும் பூங்காவில் ஒரு தனி யாமத்தில் – தேவாரம்:8 8/1
மேல்


பூச்சது (1)

வேடமான பொய் பத்தி வெயில் முன் மஞ்சள் பூச்சது போல் – நிதான:9 94/1
மேல்


பூச்சியும் (1)

துரிய பூமியில் தொகு-மினோ பூச்சியும் துருவும் – ஆதி:9 59/3
மேல்


பூஷணம் (1)

அரிய ஞான அணி மணி பூஷணம்
தெரியின் நித்திய ஜீவித நாட்டினுக்கு – ஆரணிய:6 39/1,2
மேல்


பூசலை (1)

புன் கணீர் பொசிந்து போந்து பூசலை தரும் மற்று என்னா – இரட்சணிய:3 14/2
மேல்


பூசனை (6)

விருந்து எதிர்கொண்டு போற்றி பூசனை விருப்பில் செய்வார் – ஆதி:6 17/4
சிறப்பொடு பூசனை செய்யும் செய்கையார் – குமார:1 26/4
பூசனை மொழி சில புகன்று என் அன்னைமீர் – குமார:1 39/3
மாக வேந்தற்கு மானத பூசனை
ஓகையோடு அளித்து ஒண் பொன் வள்ளத்து உறு – குமார:2 7/1,2
மாயம் இல்லது ஓர் மானத பூசனை வகுத்தான் – நிதான:2 84/2
அண்ணல் பூசனை ஆற்றும் முறை எலாம் – நிதான:8 17/3
மேல்


பூசா (1)

பூசா கைங்கிரிய போதன் அது போழ்துக்கு – குமார:2 155/2
மேல்


பூஜிதை (2)

ஈசன் உடற்கு பூஜிதை செய்வாம் என எண்ணி – குமார:2 425/3
பொன்புலத்து உறு புத்தேளிர் பூஜிதை புரிந்தார் அன்பில் – இரட்சணிய:3 14/4
மேல்


பூஜியும்-மின் (1)

பசைந்த மனமோடு ஏசு திரு_பதம் பூஜியும்-மின் ஜெகத்தீரே – நிதான:9 71/4
மேல்


பூசுண்டு (1)

புலர்ந்து செம் குருதியால் பூசுண்டு எஞ்சியது – குமார:2 268/2
மேல்


பூசை (2)

கௌவி அலை பூசை முறை காண்டி அது போலும் – ஆதி:13 48/3
பூசை புரி உபகரணம் பொலிந்து இலங்குவன பாராய் – குமார:4 29/4
மேல்


பூஜை (2)

புல்லை பூவை நறும் குழையை போட்டு பூஜை புரிவீர்காள் – நிதான:9 25/2
பண்ணும் பூஜை பயன்படுமோ பரவை கடக்க கல் புணை கொண்டு – நிதான:9 70/3
மேல்


பூஞை (1)

கிள்ளைக்கு நீதி பூஞை கிளந்திட கேட்டல் போலும் – நிதான:11 55/1
மேல்


பூட்டி (7)

உகவையின் வஸ்திராதி உடுத்து அரும் கலமும் பூட்டி
புகர்_அறு மகிழ்கொண்டாடி இருந்தனன் புதல்வனோடும் – ஆதி:9 119/3,4
பொன் திணி கடை தலை அடைத்து நனி பூட்டி
பின்றை இது கேள் என வியப்பினொடு பேசும் – ஆதி:13 22/3,4
விலக_அரும் தளையை பூட்டி விடுத்தனர் ஆதலாலே – ஆதி:14 122/2
அஞ்சிடேல் அஞ்சிடேல் நீ அரும் தளை காலில் பூட்டி
செஞ்செவே தொடரின் மாட்டி சிறையிடுவித்ததுண்டால் – ஆதி:19 108/2,3
பூட்டி மன வாதையினால் பொன்றினனாம் பொல்லாங்கு – குமார:2 326/2
மற்று இவனை தளை பூட்டி சிறைச்சாலை மடுத்திடுக – நிதான:11 71/2
பைம்பொனின் ஆடை சார்த்தி பல் மணி கலன்கள் பூட்டி – இரட்சணிய:3 99/4
மேல்


பூண் (5)

பூண் அணிகலம் கர்ப்பூர புது நறும் கலவை மென் பூ – நிதான:7 71/2
விரி வெள்ளரி அம் கனிக்கு இருப்பு பூண் கட்டிடும் அவ்விதம் போல – நிதான:9 22/1
வரும் அவமதிப்பு பொன் பூண் வசை_மொழி மதுர கீதம் – நிதான:10 54/2
வித்தக கலை அரதநம் நாணயம் மிளிர் பூண்
பத்திரத்தொடு முத்தி மார்க்கத்திடை படர்ந்தான் – ஆரணிய:6 4/3,4
புகர்_இலா மணி பூண் அணி பூண்டு உடன் – இரட்சணிய:3 46/3
மேல்


பூண்ட (9)

இ நிலம் வியந்திடும் எகிப்து இறைமை பூண்ட
மன் உரிமை யாவையும் மன கொள வரைந்து ஆண்டு – ஆதி:13 37/1,2
சேவடி தொழும்பு பூண்ட செவ்வியோய் தெரியின் நின்ற – ஆதி:14 130/2
கிழமை பூண்ட கிறிஸ்தவர் ஆயினார் – ஆதி:14 175/4
மாய சாலகனும் பூண்ட மாய வேடனும் என்று ஓது – ஆதி:17 1/3
தல பெருமையும் நீர் பூண்ட தவ பெருமையும் ஜந்மித்த – ஆதி:17 14/1
மறுமையும் இம்மை-தானும் நோக்கிலா மடமை பூண்ட
குறுமையோர் அமலன் தூய குணத்தை எள்துணை எண்ணாது – குமார:2 190/1,2
பூண்ட மெய் அன்பருக்கு புகலும் இ புதுமை என்னா – குமார:2 450/3
ஆயிடை நிசாசரன் அற கொடுமை பூண்ட
மாயம் உறு வெம் சிலை வளைத்து மறம் மல்கும் – நிதான:2 63/1,2
பூண்ட மெய் விசுவாசம் புலப்பட – நிதான:5 69/2
மேல்


பூண்டாய் (1)

பொற்பின் நன்றி புரிந்திலை பேய் அடி பூண்டாய் – ஆரணிய:1 13/4
மேல்


பூண்டு (17)

விண் இழி புதுமை காட்டி விதி வரம்பு ஒழுக்கம் பூண்டு
கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/2,3
ஊனம்_இல் ஆவிகட்கு உரிமை பூண்டு உயர் – ஆதி:4 47/2
புத்திரன் என விசுவாசம் பூண்டு மெய் – ஆதி:9 26/3
சக்கர ஈசுரன் மைந்தன் என விசுவாசம் பூண்டு சரணம் போற்றி – ஆதி:9 164/3
பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி – ஆதி:12 15/3
புற தவ வேடம் பூண்டு நடித்தலால் தோலை போர்த்து – ஆதி:17 17/3
அங்கு உரித்த புல் பூண்டு தண்டலை குலம் அனைத்தும் – ஆதி:18 5/2
அல்லாய் இருள் குழுமி துர்_குண முள் பூண்டு அளவி – ஆதி:19 6/3
பூண்டு நல் உணர்வோடு புரந்தர – ஆதி:19 81/3
மித்துருத்துவம் பூண்டு உள மேசியா தமது – குமார:2 74/3
சிதடர் வல் விலங்கு பூண்டு திகிலுறீஇ கலங்கி மாழ்கி – நிதான:3 9/2
மெய் வழி தெரிந்தார் போல விழு தவ வேடம் பூண்டு
பொய் வழி அலைந்து தீமை புரிந்த பேதமை வந்து ஊன்ற – நிதான:3 25/1,2
எத்தனையர் என்று உரைக்கேன் தவ வேடம் பூண்டு இவன் போல் – நிதான:5 36/3
அற நெறி பிடித்தும் சில்லோர் அறி மடம் பூண்டு ஆண்டு ஏகி – ஆரணிய:3 9/1
இக_பரம் இரண்டினுக்கும் இறைமை பூண்டு எம்மனோர்க்கு – ஆரணிய:8 73/1
புகர்_இலா மணி பூண் அணி பூண்டு உடன் – இரட்சணிய:3 46/3
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பி சீடருக்கு – தேவாரம்:8 5/2
மேல்


பூண்டுளேம் (1)

துரந்தரர் திரு_அடி தொழும்பு பூண்டுளேம்
வரம் தரு சுருதி மார்க்கத்து வந்தனம் – நிதான:10 27/2,3
மேல்


பூண்டுளோர் (1)

துன்ன_அரும் பொருளதும் தூய்மை பூண்டுளோர்
நன்னர் நெஞ்சத்திடை நடித்து நிற்பதும் – தேவாரம்:3 3/2,3
மேல்


பூண்டேம் (1)

மெல் நடை பயின்று மேலாம் விழு தவ வேடம் பூண்டேம்
தொல் நெறி விடாது பற்றி சுருதி மார்க்கத்து வந்தேம் – ஆதி:17 4/3,4
மேல்


பூணலை (1)

பூணலை புவிப்படு புகழ்ச்சி சிறிதேனும் – நிதான:4 69/4
மேல்


பூணுவர் (2)

மித்திரத்துவம் பூணுவர் கொக்கு அன விரகால் – நிதான:7 50/4
எண் தகா பழி பூணுவர் இக_பரம் இழந்தே – நிதான:7 53/4
மேல்


பூத்த (18)

பன்ன அரும் புனித நீதி பரம காருணியம் பூத்த
சன்னிதி மகிமை செல்வம் தழைப்பது திரு_நாடு என்றும் – ஆதி:4 1/3,4
புத்தகச்சுருள் விரித்து உலகு பூத்த எவரும் – ஆதி:14 183/1
புனித நீதியும் பரம காருணியமும் பூத்த
முனைவன் இன் அருள் வேண்டுவான் முழுது உணர் அகத்தில் – குமார:2 75/1,2
செழு மலர் சோலை ஓங்கு சினை-தொறும் நிறைய பூத்த
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/1,2
எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த
பங்கஜ விலோசனத்தால் பாங்குறும் சீடர் எண்மர்-தங்களை – குமார:2 105/1,2
அருள் மகோததியில் பூத்த அரவிந்தம் அமுத தாரை – குமார:2 114/1
கன்மமும் ஒழுக்கும் வல்லே கதித்தன கருணை பூத்த
நன்மையும் மெய்மை-தானும் நடம் நவின்று உலகம் எங்கும் – குமார:2 435/2,3
அலகு_இலா உயிர்கள் எல்லாம் அரும்_பெறல் மகிழ்ச்சி பூத்த
குலவு கோடு ஆதி ஆய கொழும் கடி மலர்கள் பூத்த – குமார:2 440/1,2
குலவு கோடு ஆதி ஆய கொழும் கடி மலர்கள் பூத்த
விலக_அரும் அவித்தை நீங்கி மெய் ஒளி உளம் திகழ்ந்தது – குமார:2 440/2,3
குணங்கள் பூத்த குருத்துவர் ஆர்_உயிர் – குமார:2 459/2
பூத்த உணர்வோடு உரிய பொற்புறு தவத்து – குமார:4 1/3
திருவுளத்து அருள் பூத்த திரித்துவ தெய்வம் – ஆரணிய:1 29/2
பொங்கு இரும் துரோகம் பூத்த பொருள் ஆசை குலத்தில் உள்ளோன் – ஆரணிய:3 10/2
புண்ணிய தடம் பூத்த பொன் தாமரை வதனம் – ஆரணிய:7 18/1
தணிவு_அரும் ஜோதி பூத்த தடம் கிரி சாரல் எங்கும் – இரட்சணிய:3 9/1
பொங்கு இரும் ஜோதி பூத்த பொன் நகர் பரப்பில் எங்கும் – இரட்சணிய:3 95/1
கோது_இலா குணங்கள் பூத்த குவலயத்து ஒளியே போற்றி – தேவாரம்:11 12/2
திரு தகு புவனம் பூத்த தெய்வமே போற்றி போற்றி – தேவாரம்:11 32/4
மேல்


பூத்தார் (1)

பொன்னெழுத்து உறு புதுமை கண்டு உளம் மகிழ் பூத்தார் – இரட்சணிய:3 74/4
மேல்


பூத்தான் (2)

போவதாகிய புதுமை கண்டு அதிசயம் பூத்தான் – ஆதி:18 32/4
வித்தக விமலன் காக்கும் விதம் இது என்று உவகை பூத்தான் – நிதான:3 59/4
மேல்


பூத்திடின் (1)

பொன் புரை மெய் விசுவாசம் பூத்திடின்
மன் பெரும் துர்_இச்சையின் வாயில் பெய்வது ஓர் – ஆரணிய:9 84/2,3
மேல்


பூத்து (10)

பொறுமையும் சகிப்பும் சிந்தை பூத்து இனிது அமைய அத்தை – ஆதி:9 126/2
பூத்து இனைய சொல் மதி புகட்டிடுவது ஆனான் – ஆதி:13 33/3
மெய் குரவன் வாழ் உறையுள் என்று உவகை பூத்து
அற்றம் என் என வினாய் அகம் நுழைந்து அவண் உறு – ஆதி:14 12/2,3
மாசு_அறு மெய் அன்பு_உடையர் என்று மகிழ் பூத்து
தேசுற மலர்ந்த முகமே நனி தெரிக்கும் – ஆதி:14 74/2,3
வன சரோருக மலர் பதம் இறைஞ்சி மகிழ் பூத்து
அனகன் ஏவு பணியை சிரம் அணிந்து உழையராம் – ஆதி:14 188/1,2
மேலும் நாலு பதவி உள விண்ணில் பூத்து விரிந்த மலர் – நிதான:9 35/3
கடு மனத்து எழும் மூவாசை கவடுவிட்டு அஞராய் பூத்து
கொடு வினை திரளை காய்த்து குலவிய பாவ தாரு – இரட்சணிய:2 15/2,3
பொங்கு நீர்நிலை எலாம் பூத்து அலர்ந்தன – இரட்சணிய:3 65/3
பொன் நகரத்து வாணர் யாவரும் மகிழ்ச்சி பூத்து
மன் நில உலகில்-நின்று இ மாந்தரை வழிநடாத்தி – இரட்சணிய:3 96/1,2
நண்ணும் இரு தத்துவ கோடு ஆர்ந்து தூய நல் உரையாம் தழை மல்கி நன்மை பூத்து
புண்ணியம் காய்த்து அருள் பழுத்து பரமானந்த புத்தமுதம் கனிந்து கதி பொருந்தி நிற்கும் – தேவாரம்:8 10/2,3
மேல்


பூத்தேன் (1)

புண்ணியர் பொறுத்து அருள் அளிக்க மகிழ் பூத்தேன் – நிதான:2 49/4
மேல்


பூத்தோய் (1)

புங்கவன் நம்பிக்கை முகம் நோக்கி மதி பூத்தோய்
கங்குல் இதயத்து நிலைகேடன் ஒரு கஞ்சன் – ஆரணிய:10 2/2,3
மேல்


பூத (5)

பூத பௌதிகங்கள் ஆய புவன கோசரங்கட்கு எல்லாம் – பாயிரம்:1 1/1
எங்கு தொகு பூத சராசரத்து ஈட்டம் ஆதி – ஆதி:5 12/1
ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன் – ஆதி:14 100/2
அடர் கடுவன தீமை அளவளவிய பூத
உடல் இது விழு-காறும் இடையிடை உறு துன்பம் – ஆதி:19 19/1,2
பாதகர் எனாது புரி பூத தயை பாராய் – குமார:2 148/4
மேல்


பூதத்தில் (1)

ஐ வகை பெரும் பூதத்தில் ஆய்த்து என – ஆதி:14 177/2
மேல்


பூதமும் (1)

பேயும் பூதமும் காளியும் கூளியும் பிளிறி – நிதான:7 15/3
மேல்


பூதர (1)

பொன் நகர் புகும் மார்க்கம் பூதர நடுவாக – ஆதி:19 16/1
மேல்


பூதரங்களையும் (1)

பெரிய பூதரங்களையும் பெயர்த்து எறியும் பித்து அளைந்து – குமார:4 28/1
மேல்


பூதரம் (2)

பூதரம் மிசை ஏறி போயினன் வழி கூடி – ஆதி:19 22/4
போய் அவண் துருவிக்கொடு பூதரம்
காயின் அல் படு முன் கடப்பேன் எனா – ஆதி:19 66/3,4
மேல்


பூதரமே (1)

பொல்லாத வல் இதயம் போன்று உளது அ பூதரமே – ஆதி:19 6/4
மேல்


பூதல (5)

பூதல பொருள்கள் எல்லாம் பொது அன்றி சொந்தம் இல்லை – ஆதி:6 13/1
தாழ்ந்த பூதல படுகரில் பாய்ந்ததும் தழைத்து – ஆதி:9 15/2
பூதல மாந்தர் என்னை நீர் விடுத்த புதுமையை புகர்_அற உணர்ந்து – குமார:2 60/2
பொங்கு அருள் நாதன் பூதல ரக்ஷை புரிவான் வந்து – குமார:2 415/1
பூதல பரப்பில் யார் இ புண்ணிய மூர்த்தி ஆய – ஆரணிய:8 44/1
மேல்


பூதலத்தில் (2)

பூதலத்தில் உயிர்த்தெழு புண்ணிய – குமார:2 473/3
பூதலத்தில் நம் கிறிஸ்துவின் புண்ணியம் பொலிய – குமார:2 493/3
மேல்


பூதலத்து (7)

பூதலத்து விடுபட்டு அயர் பொலாத குழுவை – ஆதி:14 190/1
பொறுமை கண்டு எள்ளல் இந்த பூதலத்து இயற்கை அன்றோ – குமார:2 190/4
பொருளின் செல்வமும் பூதலத்து உரிமையும் போக்கி – ஆரணிய:2 10/1
புனையும் பத்தி வேடத்தினை பூதலத்து எவரும் – ஆரணிய:2 54/1
பூதலத்து பொழிந்த பெரு மழை – ஆரணிய:4 90/4
பொருளும் பெண்டிரும் மக்களும் பூதலத்து உறவும் – இரட்சணிய:2 51/1
பூதலத்து இறந்தோர் உயிர்த்தெழுந்து எம்பிரான் நடுப்புரியும் நாள் – தேவாரம்:1 6/2
மேல்


பூதலத்துக்கு (2)

பூதலத்துக்கு இரக்ஷை புதுக்கிய – பாயிரம்:1 4/3
பூதலத்துக்கு ஒரு பாரம் புலையன் இவன் நிலை தேரின் – நிதான:5 29/4
மேல்


பூதலத்தை (1)

பூதலத்தை கெடுத்த பொல்லாங்கு உடை – இரட்சணிய:3 49/1
மேல்


பூதலம் (8)

பொறுத்து உமக்கு மன்னித்து அருள் புரிவர் பூதலம் முற்று – ஆதி:9 58/3
பூதலம் எலாம் எமது புத்துரையில் நிற்ப – நிதான:2 54/2
பூதலம் வெடித்த வாயில் பொதுளிய நிரைய செம் தீ – நிதான:3 23/3
பூதலம் அனைத்தும் ஓர் புணர்ப்பினால் தரும் – நிதான:4 32/1
பூதலம் எள்ளி சீயென வையும் புலையேனை – ஆரணிய:4 135/1
பூதலம் புரக்க வந்த புண்ணிய புனித மூர்த்தி – ஆரணிய:8 57/2
பூதலம் புரிந்த பாவ புயல் பரந்து இருண்ட நித்ய – இரட்சணிய:2 4/1
பூதலம் உய சமாதி பொருந்திய தேவே போற்றி – தேவாரம்:11 28/4
மேல்


பூதி (3)

பூதி சாதனம் கொண்டு முன் போல் உரு – ஆதி:14 164/3
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை – நிதான:4 82/3
பொருளின் ஆய ஒரு பூதி இழி பூதி இதனை – நிதான:4 82/3
மேல்


பூதியங்கள் (2)

பூதியங்கள் எரிந்து புகைந்தன – ஆதி:14 156/2
நிலை மாறிடினும் பூதியங்கள் நீறுநீறா கரிந்திடினும் – நிதான:9 38/2
மேல்


பூந்தோட்டத்து (1)

எங்கள் நாயகன் பூந்தோட்டத்து இறுத்த பின் கருணை பூத்த – குமார:2 105/1
மேல்


பூப்ப (4)

பொங்கும் ஆவலில் பருகினன் அன்பு உளம் பூப்ப
திங்களில் திகழ்ந்தது முகம் செழித்தது ஜீவன் – ஆதி:18 38/3,4
போவதாகிய செயல் அறிந்து உளம் மகிழ் பூப்ப
ஆவலாய் உபசரித்து வந்தனம் இனிது ஆற்றி – குமார:4 84/2,3
அருந்தினான் மறை_வாணன் அகத்து அருள் பூப்ப
வருந்தும் ஆவி தளிர்த்தது மாண் தழை மல்கி – ஆரணிய:4 160/3,4
சிறந்த செம் பொன் கபாடம் திறந்து என உவகை பூப்ப
மறம் திகழ் சிறை ஒரீஇ பின் மதில் தலைக்கடையை கிட்டி – ஆரணிய:4 169/3,4
மேல்


பூப்பது (1)

ஊனம்_இல் காட்சியது உவகை பூப்பது – ஆதி:19 29/4
மேல்


பூப்பார் (1)

பொன் நகர் தொனி செவிமடுத்து உள களி பூப்பார்
இன்னவாறு அவண் வைகல் ஓர்சில கழிந்திடும் கால் – இரட்சணிய:1 42/3,4
மேல்


பூபதி (3)

பொன் நாடு புரந்து அருளும் பூபதி புண்ணியத்து அமைந்த – குமார:4 41/3
சேண் நிலவு பூபதி திகழ்த்து நெறி சேர்வல் – நிதான:4 60/2
தேவ பூபதி மதித்து உளம் உவப்பர் தினமும் – நிதான:4 79/4
மேல்


பூம் (29)

பூம் குழல் மனை மகார்க்கு புகன்றிடாது உளத்து காத்தான் – ஆதி:2 6/4
தேறல் புக்கு அளைதலாலே தெளித்த சித்திர பூம் பண்ணை – ஆதி:4 18/3
மரு மலிந்த பூம் பொழிலின் மைந்தர்-தாம் – ஆதி:4 26/1
துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/2
மரு மலி துணர் பூம் சோலை மா நில கிழவர்-தம்மை – ஆதி:6 19/1
பூம் துணர் கரிந்து என பொலிவு இழந்து அகம் – ஆதி:14 40/3
பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு – ஆதி:18 2/4
பூம் குருந்து அசோகம் தமரத்தை பூம் கடம்பு – ஆதி:18 2/4
பூம் கொடி மடந்தையர் புகுந்து புங்கவ – குமார:1 28/3
குன்றுறாத பூம் கொம்பு_அனாள் வினவலும் குறித்த – குமார:1 44/3
நிரம்பலால் செவிக்கு இன்பம் நிறைக்கும் பூம் பொழில் – குமார:2 88/4
புளகு உற மெய் விடாய் தணிக்கும் பூம் பொழில் – குமார:2 89/4
வழி வரும் இயற்கை தானோ வாய்விடாது ஒழிந்த வண் பூம்
தழை எலாம் குழைந்து சாம்பி தருக்களும் சடைத்த மாதோ – குமார:2 103/3,4
பூம் தண் கருங்குவளை போது நீர் முத்து உகுப்ப – குமார:2 317/2
தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
விலைக்கு_அரும் பூம் துகில் விரித்து மூடியே – குமார:2 405/4
விண்ணுற நிவந்த நானா வியன் சினை பொதும்பர் மென் பூம்
சுண்ணமும் மலரும் தீம் தேன் தொகுதியும் வானம் தூய – குமார:2 428/1,2
சுத்த நினைவு எனும் நறும் பூம் துணர் மலிந்து உன்னதம் தோயும் – நிதான:5 34/3
நன்றி அறிந்த கிரியை எனும் நறும் பூம் கனி நீர் நல்கலிர் என்று – நிதான:9 78/2
நதி இரு மருங்கு உறும் நறும் தண் பூம் பொழில் – ஆரணிய:4 18/1
ஒன்றிய பூம் பொழில் ஒருவி சேய்மையில் – ஆரணிய:4 34/2
பூம் கழல் தொழுது வாழ்த்தி கண் துயில் பொருந்தினாரால் – ஆரணிய:5 62/4
கான் நனை விரி பூம் கொத்து காய்_கனி முதல போலும் – ஆரணிய:5 83/3
நாகம் ஆதி தாரும் நீழல் ஆர் நரந்தம் நாறு பூம்
சாகம் ஆர் இறால் கிழிந்து ஒழுக்கு நீர் தடம் குலாம் – ஆரணிய:5 97/2,3
சினை அலர்ந்த பூம் காவக செழும் பொழில் நடுவண் – இரட்சணிய:1 30/2
புனித நீர் படிந்து ஆடுவர் பூம் துகில் வனைவர் – இரட்சணிய:1 40/1
பயிர்த்த பூம் பணை பள்ளி நின்று ஆண்டகை – இரட்சணிய:1 70/3
ஏதென் என்று உரைக்க நின்ற எழில் நறும் துணர் பூம் காவின் – இரட்சணிய:2 5/1
புன்கணுக்கு இரங்கி ஓர் பூம் பொழிலிடை புனித மூர்த்தி – தேவாரம்:9 3/2
மேல்


பூமான் (1)

பூமான் நமக்கு உதவு புண்ணிய நலத்துக்கு – ஆதி:14 64/2
மேல்


பூமி (12)

சமர பூமி தணந்து இ நெறி படீஇ – ஆதி:9 74/3
நானிலம் காணி பூமி நன்கு உறு பயிராய் முற்றி – ஆதி:9 104/1
தொள்ளை பூமி முழுதும் துதைந்தவே – ஆதி:14 166/4
ஒப்பது ஓர் உயர் பூமி உளது என அதை நாடி – ஆதி:15 4/2
வானமொடு பூமி நிலை மாறுகினும் மாறா – குமார:4 12/1
பூமி பாரம் தீர்க்க வந்து பொல்லாங்கு இயற்றி பொய் பேசி – நிதான:9 39/1
மரண பூமி மறிந்த அ கங்குலுள் – ஆரணிய:4 75/1
எச்சரித்து உரைத்தும் முன்னே எதிர்ப்படும் சோக பூமி
நச்சு உறக்கத்தை நல்கும் நனவொடு கடத்திர் என்றும் – ஆரணிய:5 89/2,3
போக பூமி போலும் நீடு பொங்கரூடு போயினார் – ஆரணிய:5 97/4
வானம் பூமி எல்லா உலகங்களும் வகுத்த – ஆரணிய:6 18/1
போக பூமி நடுப்புரி போது நீர் – இரட்சணிய:3 47/3
கதிர் ஒளி மறைய பூமி கம்பிக்க சிமயம் கீறி – தேவாரம்:9 4/1
மேல்


பூமியில் (3)

துரிய பூமியில் தொகு-மினோ பூச்சியும் துருவும் – ஆதி:9 59/3
கரும பூமியில் கண்டு அருள் பெற்று உடன் – குமார:2 462/3
கரும பூமியில் பிரிந்து போய் கடும் துயர் அடைந்து – குமார:2 489/3
மேல்


பூமியிலே (1)

கரும பூமியிலே தம்மான் கழல் நிழல் கருதி வந்த – குமார:2 438/3
மேல்


பூமியின் (3)

போக பூமியின் நலம் பொருந்துவாய் என்றான் – ஆதி:10 26/4
போக பூமியின் நலம் பொருந்தும் புல்லிய – ஆரணிய:4 16/3
கரும பூமியின் கடைக்கண்ணது ஆயது – இரட்சணிய:1 9/1
மேல்


பூமியும் (3)

வானமும் பூமியும் மகிழ்கொண்டு ஓங்கிட – பாயிரம்:1 6/1
வானமும் பூமியும் இணைத்த மாண்பது – ஆரணிய:4 8/4
வானமும் பூமியும் இணைந்த மாண்பது – இரட்சணிய:1 4/1
மேல்


பூமியை (1)

துரிய பூமியை துருவி சுலவி வரும் அன்பினொடு – குமார:4 28/3
மேல்


பூமியோடே (1)

போயினார் சோகம் ஆர் பூமியோடே கதித்து – ஆரணிய:9 29/1
மேல்


பூமுகம் (1)

பூமுகம் என பெயர் பொலிந்ததாம் அரோ – ஆதி:9 23/4
மேல்


பூர்வ (2)

பூர்வ பாதையை துலக்கி வைதிக முறை புதுக்கி – ஆதி:8 30/1
பூர்வ பாதையை லௌகிக பெரும் புதர் புதைப்ப – ஆதி:9 2/1
மேல்


பூர்வம் (1)

பொருது மற்று இவன் கை அகன்று உய்ந்தனர் பூர்வம் – ஆரணிய:4 155/4
மேல்


பூர்வவழி (1)

புண்ணிய வேந்தியல் சிருஷ்டி ராஜத்ரோகம் பூர்வவழி சுவிசேஷ புனிதமார்க்கம் – பாயிரம்:2 1/3
மேல்


பூர்வோத்தர (1)

இன்னவாக பூர்வோத்தர சாதனம் எடுத்து – ஆரணிய:2 77/1
மேல்


பூரண (5)

பூரண நரை திரை கிழவன் போந்து பல்கு – நிதான:4 26/3
பொருள் எலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத்து ஆட்சி – நிதான:4 95/4
போதம் நல்குக பூரண வாஞ்சையாய் – நிதான:5 59/2
எங்கணும் தண் நிலவு எறிக்கும் பூரண
திங்களுக்கு அளவு_இலை எனினும் சிந்தையில் – இரட்சணிய:3 65/1,2
பொல்லை என புறக்கணியாது எனை ஆட்கொண்ட பூரண புண்ணிய நிலையை புகழ்ச்சி ஓங்கும் – தேவாரம்:8 2/3
மேல்


பூரணத்தையும் (1)

பூரணத்தையும் நித்திய ஜீவனில் பொருத்தி – ஆதி:18 37/3
மேல்


பூரணமா (1)

பூரணமா ரக்ஷணிய புண்ணியம் கைகூடுதற்கு – குமார:2 310/3
மேல்


பூரணமாக (1)

பூரணமாக தேர்ந்தேன் புரைபடு புன்மை சொல்லால் – நிதான:5 88/4
மேல்


பூரணமாய் (1)

நித்தியமாய் பூரணமாய் நின்மலமாய் ஆனந்த நிலையம் ஆகி – ஆதி:4 30/1
மேல்


பூரணானந்த (1)

பொற்பு உறு புனித வேந்தன் பூரணானந்த வாழ்வின் – இரட்சணிய:3 10/2
மேல்


பூரித்தார் (1)

பொறுமை வேந்து அருள் வந்து உய்ப்ப பூரித்தார் உள்ளம் தூயோர் – ஆரணிய:4 173/4
மேல்


பூரிதர் (1)

பொங்கி ஆரியர் பூரிதர் ஆகி உத்துங்க – இரட்சணிய:3 52/3
மேல்


பூரிப்பர் (1)

போலும் என்று உளம் பூரிப்பர் ஓர்சிலர் – ஆதி:14 173/4
மேல்


பூரிய (2)

பூரிய புலமை தேர் பொய் கரி திரள் குழீஇ – நிதான:11 7/3
பூரிய வாய் மொழி புலப்படுத்துமால் – ஆரணிய:9 76/3
மேல்


பூரியர் (8)

பூரியர் விழுந்து அழிபுணர்ப்ப நடுநின்ற – குமார:2 137/1
பூரியர் விலை கொண்டு புதைத்திடும் ஈம – குமார:2 303/3
பூரியர் யாவரும் புகப்பெறாதது – நிதான:1 5/4
மருளின் ஆய வழி பூரியர் மதித்து மகிழ்வர் – நிதான:4 82/4
பூரியர் உரையினை தேறி போந்து நீர் – நிதான:10 9/1
போயினார் அகம் செருக்கிய பூரியர் மாதோ – ஆரணிய:2 59/4
பன்னினான் மறை ஆரியன் பூரியர் பதுங்க – ஆரணிய:2 77/4
பூரியர் அ வழி புகப்பெறாதது – இரட்சணிய:1 5/2
மேல்


பூரியர்க்கு (1)

மருளும் பூரியர்க்கு உறுவது நித்திய வறுமை – ஆதி:9 157/4
மேல்


பூரியன் (2)

பூரியன் ஐய கேள் புனித யாத்திரை – ஆதி:19 46/2
பூரியன் கெடு புணர்ப்பினால் அருகுற போந்தான் – நிதான:2 100/4
மேல்


பூரியன்-தனை (1)

பூரியன்-தனை முக பொலிவொடு ஏற்று உபசரித்து – ஆரணிய:9 36/2
மேல்


பூரியனேன் (1)

பூரியனேன் உளம் புணர்த்த தீமையை – நிதான:4 44/1
மேல்


பூருவ (7)

புத்து இராஜ்ஜியத்தின் ஆதி பூருவ குடிகள் ஆய – ஆதி:6 9/1
புனித சேத்திரத்து அமர்ந்துள பூருவ குடிகள் – ஆதி:8 1/1
போவதாகிய பூருவ பாதையை புனைய – ஆதி:8 10/3
தூயரும் பண்டு பூருவ பாதையை துலக்கி – ஆதி:8 39/2
தெள்ளிது ஓர்ந்து எதிர்ந்து இருந்தனர் பூருவ திசையில் – ஆதி:9 4/4
மேய பூருவ இயல் கூறு வேந்து அருள் – நிதான:4 39/2
பூருவ தேசம் யாது பொரு_அரு நாச தேசம் – நிதான:5 3/1
மேல்


பூருவம் (1)

பூருவம் தொடங்கி ஊழி புடை பெயர் காலம்-காறும் – நிதான:3 17/1
மேல்


பூருவாச்சிர (1)

ஆவலும் இல்லை பூருவாச்சிர மத்தர்க்கு அம்மா – ஆதி:6 11/4
மேல்


பூருவாச்சிரமத்து (1)

உருத்தனன் பூருவாச்சிரமத்து உற்று அரோ – நிதான:4 51/4
மேல்


பூவரும் (1)

பூவரும் மெய் மறை துணிபின் பொற்பு உறழ் – பாயிரம்:1 9/1
மேல்


பூவலயத்திடை (1)

பூவலயத்திடை உனக்காய் பொன்றும் ஒரு சான்றாக – ஆதி:15 20/3
மேல்


பூவலயத்துக்கு (1)

பூவலயத்துக்கு இரக்ஷணியம் பொலிய வரு புண்ணிய பகலை – குமார:2 198/3
மேல்


பூவலயத்தை (1)

பூவலயத்தை ஆளும் புரவலன் புதல்வன் தூய – ஆதி:14 130/1
மேல்


பூவலயம் (1)

பூவலயம் உய்ய வரு புண்ணியமும் நித்ய – குமார:3 3/1
மேல்


பூவில் (1)

பூவில் போற்றிய புல்லியன் ஆகும் இ – ஆதி:19 68/3
மேல்


பூவினுக்கு (1)

பூவினுக்கு அநுபோகம் மாளிகை புலை புரக்கும் – நிதான:7 19/2
மேல்


பூவுலகை (1)

பூவுலகை இன்றொடு புதுக்கிடுவன் என்பான் – நிதான:2 59/4
மேல்


பூவை (3)

ஈர்த்து அங்கு அலகை இருள் கும்பியில் இட்ட பூவை
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல் – குமார:2 367/1,2
புல்லை பூவை நறும் குழையை போட்டு பூஜை புரிவீர்காள் – நிதான:9 25/2
கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை
கிள்ளைகள் கிளக்கும் மென் தீம் கிளவி புள் ஒலி மற்று எங்கும் – ஆரணிய:5 37/1,2
மேல்


பூவைத்-தான் (1)

பொன்னைத்-தான் மாதரைத்-தான் பூவைத்-தான் புறக்கணித்தால் – ஆதி:2 40/3
மேல்


பூவையர்க்கு (1)

பூவையர்க்கு எலாம் அஞ்சலி வரன் முறை புதுக்கி – குமார:4 83/2
மேல்


பூவையர்கள் (1)

பொற்புற விளக்கினர் பல் பூவையர்கள் மாதோ – குமார:4 14/4
மேல்


பூழி (2)

பூழி மானிடம் சமைத்த கோபுரம் என பொலிவ – நிதான:7 12/4
துஞ்சு இருள் பூழி நஞ்சு உகும் உண்ணி துரு_நாற்றம் – ஆரணிய:4 127/1
மேல்


பூளை (1)

காற்று எதிர்ப்பட்ட பூளை ஆயினன் கருணை வேந்தன் – ஆதி:19 102/2
மேல்


பூளையில் (1)

காற்றுக்கு ஓடு புன் பூளையில் கருவி கை போக்கி – ஆதி:14 91/1

மேல்