ஞா – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாயமுடன் 1
ஞாயிறு 1
ஞால 1
ஞாலத்தின் 1
ஞாலத்து 7
ஞாலத்தை 2
ஞாலம் 12
ஞான்றளவும் 1
ஞான்று 1
ஞான 56
ஞான_சூரியன் 1
ஞான_சூனிய 1
ஞானஸ்நானம் 2
ஞானசாரத்தினால் 1
ஞானத்தில் 1
ஞானத்து 3
ஞானத்தை 3
ஞானதேசிகன் 1
ஞானபாநுவின் 1
ஞானம் 19
ஞானமால் 1
ஞானமும் 6
ஞானமே 1
ஞானி 9
ஞானிகள் 1
ஞானியர் 7
ஞானியரது 1
ஞானோபாயம் 1

ஞாயமுடன் (1)

ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 13/4
மேல்


ஞாயிறு (1)

அன்று ஒரு சிமயத்து உச்சி அலர் கதிர் ஞாயிறு என்ன – குமார:2 113/1
மேல்


ஞால (1)

ஞால ரக்ஷகன் திரு_உருவை நாடி மெய் – ஆரணிய:4 20/1
மேல்


ஞாலத்தின் (1)

மழை இலாது இலை மா இரு ஞாலத்தின் மரபு – ஆதி:18 22/1
மேல்


ஞாலத்து (7)

வேலை ஞாலத்து விளக்கிய பாதையை விரிக்கில் – ஆதி:8 11/4
மா இரு ஞாலத்து மாந்தர் சீர்மையும் – ஆதி:9 28/2
திருகை ஞாலத்து புகழ் பெற செயும் தருமத்தில் – ஆதி:9 56/1
ஞாலத்து ஒரு சில் பகல் நன்று_இல் வினை – ஆதி:9 131/1
ஞாலத்து ஒரு நன்று இல் நடைப்பிணமாய் – ஆதி:9 143/1
மா இரு ஞாலத்து வளர்த்து மன்னர் கோன் – ஆதி:14 21/2
மா இரு ஞாலத்து உள்ள வரம்பு இறீ குணங்கள் எல்லாம் – நிதான:7 76/1
மேல்


ஞாலத்தை (2)

வேலை ஞாலத்தை போர்த்தது திருச்சபை விருக்கம் – ஆதி:8 7/4
ஞாலத்தை கெடுக்கும் பொல்லா நச்சு தீ அலகையே போல் – இரட்சணிய:2 12/3
மேல்


ஞாலம் (12)

கண் அகல் ஞாலம் உய்ய கனிந்து உயிர் அளித்து காத்து – ஆதி:4 6/3
ஞாலம் மீ திகழ்த்திய நலம் கொளும் ஜெய – ஆதி:4 59/3
ஞாலம் மீது இசை அலால் நாட்டம் ஒன்று இலான் – ஆதி:12 52/4
ஞாலம் காட்டிய பூத பௌதிகங்களும் நம்பன் – ஆதி:14 100/2
ஞாலம் மிசையே கருவியாக உமை நாடி – குமார:2 147/1
எறி திரை பரவை ஞாலம் ஏழைமை உடைத்து மாதோ – குமார:2 179/4
ஞாலம் மீது ஒரு மண்டலம் நாடியே – குமார:2 472/4
ஞாலம் மீ கதி வழி நாடி ஏகு நல் – ஆரணிய:4 1/1
ஞாலம் இசைக்கும் கார்வணன் என்பான் நவை_உள்ளான் – ஆரணிய:7 3/4
ஞாலம் முற்றும் தொகூஉ நன்கு அருந்தினும் – இரட்சணிய:1 8/3
ஞாலம் மேவுநர் ஆத்தும நாயகன் – இரட்சணிய:1 69/1
ஞாலம் மீது எவர்க்கும் என்று நம்பன் உத்தாரம் இன்றால் – இரட்சணிய:2 20/4
மேல்


ஞான்றளவும் (1)

இற்றை ஞான்றளவும் உமது நாமத்தில் காத்தனன் யான் பிரி தருணம் – குமார:2 57/3
மேல்


ஞான்று (1)

நண்ணி நல் அறம் நாட்டிய ஞான்று சொல் – ஆதி:12 82/3
மேல்


ஞான (56)

மாணுறு பரம ஞான மணி அணி குவை வரன்றி – ஆதி:4 3/3
வித்தக விமல ஞான போனகம் விளைவித்து ஊட்டி – ஆதி:4 4/2
ஞான ஜீவனை வளர்த்து நற்கதி பயன் தந்து உய்க்கும் – ஆதி:4 7/3
பன்னற்கு அரிதாய பவித்திர ஞான செல்வம் – ஆதி:5 1/1
முந்துற்று அறிந்து முறை செய்யும் வரம்பு_இல் ஞான
விந்தை பெருமான் விபுதாதிபன் வேந்தர்_வேந்தன் – ஆதி:5 5/3,4
ஞான முத்திரையும் நல்கி நனி தவ உயர்த்தி வைத்தார் – ஆதி:7 12/3
மறை ஆர்த்தது மறை ஓதிய வரம்பு ஆர்த்தது ஞான
துறை ஆர்த்தது சன்மார்க்க மெய் துணிபு ஆர்த்தது சுகிர்த – ஆதி:9 20/1,2
ஞான நாயகன் தொழில் அலால் நவில மற்று இல்லை – ஆதி:9 62/2
விண்ணில் ஆர்_அருள் ஞான_சூரியன் ஒளி வீச – ஆதி:11 48/2
ஞான தீபத்தை அணைத்தனன் நல் இளங்கோமான் – ஆதி:14 115/2
கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
திரு கிளர் ஞான செல்வம் திருத்தியோய் திகாந்தம்-காறும் – ஆதி:14 134/1
மறம் குலாம் மனத்தீர் இன்னே திரும்பு-மின் மரபின் ஞான
திறம் குலாம் அநுமானத்தின் திரவியம் கொள்-மின் போர்த்த – ஆதி:17 33/1,2
ஞான போனக நராத்தும ஜீவ சஞ்சீவி – ஆதி:18 20/3
பற்று அற்ற ஞான பரிபாகரும் தாம் பார்த்தவுடன் – ஆதி:19 12/3
மறம் எலாம் குடிகொள் நாச தேசத்தை மரு_இல் ஞான
திறம் எலாம் அழியும் சிந்தை செறிவு எலாம் நெகிழ்ந்து தேயும் – ஆதி:19 95/1,2
மேலும் விள்ளுவர் ஞான விரோசனன் – குமார:2 13/4
இரவி எனும் திருச்சபையில் நிலையாக வழங்கிவரும் இரண்டு ஞான
வரம் மிகு சாக்கிரமெந்தின் முன்னது ஞானஸ்நானம் மற்றொன்று இந்த – குமார:2 51/2,3
நள்ளி நர ஜீவ ரக்ஷை நல்க வரும் ஞான குரு – குமார:2 324/1
மெய் விரவி மிளிர் ஞான வியன் படைகள் வேந்தனவால் – குமார:4 39/3
ஞான நாயகன் திரு_அடிக்கு அன்புசெய் நண்ப – குமார:4 57/1
உத்தம கலை ஞான மெய்யுணர்வு நல் ஒழுக்கம் – குமார:4 71/1
போனக ஞான பானம் துய்த்தனன் புலமை_மிக்கான் – நிதான:3 1/4
கோபத்தின் மலிவோ ஞான நாசத்தின் குவிவோ மோச – நிதான:3 16/3
புறம் காட்டும் எனினும் யாம் பொது நீதி அருள் ஞான
திறம் காட்டி ஈடேற தெருட்டுதல் நம் கடன் அன்றோ – நிதான:5 44/3,4
மருள்படு மனத்தோய் ஞான வரம்பு இகவாது செல்ல – நிதான:5 89/1
ஞான பானுவின் கதிரொடு நல் கலை மதி தோய் – நிதான:7 5/2
மாயம் முற்றிய ஞான_சூனிய மதிள் மலிந்த – நிதான:7 15/1
புறம் எலாம் புலை நிரம்பின பொருவு_அரு ஞான
திறம் எலாம் நகைப்படுவன தீ_வினை கதிப்ப – நிதான:7 47/3,4
திகழும் ஞான நூல் செப்புவர் திருட்டு அளவாக – நிதான:7 49/3
உத்தம ஞான நன்மை உண்மை நல் உணர்ச்சி தேவ – நிதான:7 68/2
தாரணி தந்த ஞான தம்பிரான் பணிவார்_இல்லர் – நிதான:7 78/4
மைந்தன் ஆகி புனிதாவி வடிவாய் ஞான வரம் அருளி – நிதான:9 1/2
ஞான குருவின் புண்ணியத்தை நாட வாரும் ஜெகத்தீரே – நிதான:9 31/4
திரு கிளர் ஞான செல்வன் செப்பிய சிதைவு_இல் மாற்றம் – நிதான:11 47/1
ஆன்ம ஞான சம்பாஷணை அருந்தி ஏகுவரால் – ஆரணிய:2 24/4
மொழிவரால் அருள் ஞான நூல் முறை உணர் முதியோர் – ஆரணிய:2 73/4
பானமும் இன்றி நால் நாள் பசித்தலில் ஞான ஜீவ – ஆரணிய:5 2/1
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான
வித்தக கிரியின் மீது விசும்பு உற மிளிர்ந்த தூய – ஆரணிய:5 33/1,2
மேதகு பொருளும் செல்வ பெருக்கமும் விமல ஞான
போதகம் தரும் பல் காட்சி பொதும்பரும் பிறவும் எல்லாம் – ஆரணிய:5 43/2,3
ஞான கண்ணடியின் நாடி காணவும் நடுங்கி அஞ்சி – ஆரணிய:5 85/2
வாக்கினுக்கு அதீதம் எங்கள் மனத்துக்கும் அதீதம் ஞான
நோக்கினுக்கு அதீதம் நும்-பால் நுவலுதற்கு அதீதம் ஆக – ஆரணிய:5 86/1,2
ஞான ஆனந்த ஓங்கல் நாடிய அண்டர் மாதோ – ஆரணிய:5 90/4
அரிய ஞான அணி மணி பூஷணம் – ஆரணிய:6 39/1
ஈசன் நகர்க்கு போதும் இவற்றின் எது ஞான
தேசிக மார்க்கம் என்று உளம் நாடி திகைக்கின்றேம் – ஆரணிய:7 6/3,4
மெய்ப்படு ஞான வித்தகம் உற்றும் விழி மூடி – ஆரணிய:7 14/2
ஞான நூல் அனைத்தும் கற்று நல் கருமங்கள் ஆற்றி – ஆரணிய:8 38/1
மா தயா நிதியே ஞான வரோதய கிரியே நின் சீர் – ஆரணிய:8 57/3
மன்னு ஞான நல் வளம் தரு தருமசேத்திரத்தை – இரட்சணிய:1 11/2
ஞான நண்ப பொன் நகர் அணித்து எமக்கு இனி நவிற்றில் – இரட்சணிய:1 25/1
உத்தம கிருபை ஞான ஒளி அதி புனிதம் என்னும் – இரட்சணிய:3 2/3
புகல்_அரும் கடவுள் வேந்தன் புகழ் மிகு புனித ஞான
தகவினில் உயர்வுற்று ஓங்கி தண் அளி பெருக்கில் பல்கி – இரட்சணிய:3 7/1,2
பின்னர் விரத்துவம் பூண்டு ஞான தீக்ஷை பெற்று விதிவிலக்கு ஓம்பி சீடருக்கு – தேவாரம்:8 5/2
தேசிக ஞான தீக்ஷை செவ்விதின் அடைந்தாய் போற்றி – தேவாரம்:11 15/4
நள் இருள் பிழம்பு சீத்த ஞான சூரியனே போற்றி – தேவாரம்:11 18/4
செஞ்செவே உரைத்த ஞான தேசிக மூர்த்தி போற்றி – தேவாரம்:11 23/4
மேல்


ஞான_சூரியன் (1)

விண்ணில் ஆர்_அருள் ஞான_சூரியன் ஒளி வீச – ஆதி:11 48/2
மேல்


ஞான_சூனிய (1)

மாயம் முற்றிய ஞான_சூனிய மதிள் மலிந்த – நிதான:7 15/1
மேல்


ஞானஸ்நானம் (2)

வரம் மிகு சாக்கிரமெந்தின் முன்னது ஞானஸ்நானம் மற்றொன்று இந்த – குமார:2 51/3
முந்துற ஞானஸ்நானம் அடைவர் திருச்சபை புகுவோர் முறையில் நின்று – குமார:2 52/1
மேல்


ஞானசாரத்தினால் (1)

ஞானசாரத்தினால் நலம் பெறாது நம் – ஆதி:14 28/2
மேல்


ஞானத்தில் (1)

ஆழி நாயகன் ஞானத்தில் அருளில் தூய்மையினில் – ஆதி:18 15/1
மேல்


ஞானத்து (3)

ஆன்ம ஞானத்து அவிர் ஒளி நாடி அ – ஆதி:13 3/2
பொருள் எலாம் புரக்கும் பெம்மான் பூரண ஞானத்து ஆட்சி – நிதான:4 95/4
தூய ஞானத்து குழவியும் சொல்லும் மற்று இது போல் – ஆரணிய:2 62/1
மேல்


ஞானத்தை (3)

மீ உறு ஞானத்தை வெறுத்து அகம்-தொறும் – ஆதி:9 30/3
வித்தக கலை ஞானத்தை கண்டு உளம் வெருண்டேன் – ஆரணிய:8 19/4
சொற்ற வாய்மை கேட்டு உளத்து உண்மை ஞானத்தை தொகுத்து – ஆரணிய:10 32/1
மேல்


ஞானதேசிகன் (1)

ஞானதேசிகன் நவின்ற வாய்மை இஃது அன்றி வேறு வழி நாடுதல் – குமார:2 68/3
மேல்


ஞானபாநுவின் (1)

ஞானபாநுவின் சந்நிதி நாடிய – ஆதி:14 176/3
மேல்


ஞானம் (19)

சத்திய ஞானம் தருமம் தயை சாந்தம் பரிசுத்தம் சர்வ_சக்தி – ஆதி:4 30/2
பகுத்துணர்வு அறிவு ஞானம் பரிசுத்தம் அகத்து பாக்யம் – ஆதி:6 4/1
அல்கு சிந்தையேம் ஆதலின் அளவு_இலா ஞானம்
மல்கு தந்தையார் நமக்கு அறிந்து ஊட்டலே மரபாம் – ஆதி:14 104/3,4
ஜீவன் முத்தருக்கு நல்கும் திவ்விய சிந்தை ஞானம்
மேவரும் குணங்கள் தீர்க்க விசுவாசம் விரதம் சீலம் – ஆதி:17 25/1,2
ஞானம் உறு மாந்தர் நகைத்து எள்ளி மேற்போவர் – ஆதி:19 8/3
ஞானம் ஆகிய ஒரு நாதன் தாங்கிய – குமார:2 395/1
பரம் குலவு ஞானம் உறை பள்ளி அறை என்றான் – குமார:4 4/4
ஞானம் மிகு தீர்க்க மொழி காட்டினள் ஓர் நாரி – குமார:4 12/4
அற்புத விதங்கள் பரமாச்சரிய ஞானம்
பற்பல சுகிர்த்திய பலங்கள் இவை எல்லாம் – குமார:4 14/2,3
நன்மை பர ஞானம் ஒளி நல்_அறம் இவற்றை – நிதான:2 62/1
துதி பெறு ஞானம் உள்ளார் சுதந்தர மகிமை ஆகும் – நிதான:4 94/1
ஞானம் பெருக நல் அறங்கள் நாளும் ஓங்க நனி உயர்ந்த – நிதான:9 58/2
ஞானம் உறுமாறு எவன் என்ன நாடி கவன்று உள் நைவீரேல் – நிதான:9 62/3
தூய ஞானம் சுகிர்தம் சுசீலம் இவற்றால் – ஆரணிய:1 15/1
பிள்ளைகள் விமல ஞானம் பிறங்கு தீம் குரலினோடு – ஆரணிய:5 27/2
ஞானம் தம் மேனி ஆய நம் பிரான் தொழும்பர் நீவிர்-தான் – ஆரணிய:5 57/3
மேதக கலை ஞானம் விதந்து உலாய் – ஆரணிய:9 1/3
ஞானம் மல்கிய மெய் மறை நாவலன் – இரட்சணிய:1 74/4
விந்தையாய் பரம ஞானம் விளம்பிய குருவே போற்றி – தேவாரம்:11 17/4
மேல்


ஞானமால் (1)

நல்_நுதலே சுவிசேஷ ஞானமால் – ஆதி:14 30/4
மேல்


ஞானமும் (6)

ஞானமும் நன்மையும் நனி சிறந்திட – பாயிரம்:1 6/2
பிழை_இல் ஞானமும் மெய் விசுவாசமும் பேசில் – ஆதி:18 22/4
வித்தக கலை ஞானமும் தீரமும் மிளிர – ஆரணிய:1 1/3
தெள்ளு ஞானமும் உணர்ச்சியும் சேர்ந்தன அனையார் – ஆரணிய:2 23/3
ஞானமும் நன்மையும் நனி கதித்தது – இரட்சணிய:1 4/2
தருமமும் ஒழுக்கமும் தவமும் ஞானமும்
கருமமும் ஈது அலால் கருதில் யாதும் ஓர் – தேவாரம்:3 10/1,2
மேல்


ஞானமே (1)

ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை – ஆரணிய:6 18/3
மேல்


ஞானி (9)

மா இரும் புவி மயக்கு_அறு மாண்பு உடை ஞானி – ஆதி:1 8/4
என்னை போல் பரம ஞானி இல்லை என்று எமை இகழ்ந்த – ஆதி:2 40/1
உன் முக ஞானி விடுத்த சின குறி ஊடு ஆடி – நிதான:2 76/3
நிதி மிக படைத்த ஞானி நீதி வாக்கியத்தை ஓர்ந்து – நிதான:4 94/3
பண்டு ஒர் ஞானி பகர்ந்தனன் உண்மையே – நிதான:7 90/4
பல கலை ஞானி உள்ளம் பத்தியால் சொலித்தது அன்றே – ஆரணிய:4 164/4
ஆயிடை அறிஞன் மெய்யன் அநுபவ ஞானி அன்பன் – ஆரணிய:5 64/1
தன்னை ஞானி என்று எண்ணும் சழக்கனில் – ஆரணிய:9 24/3
மன்னவ ஞானி சொல் மதித்து கொண்டவர் – ஆரணிய:9 43/3
மேல்


ஞானிகள் (1)

உலக ஞானிகள் மாயசாலகர் கதி ஒழுக்கம் – ஆரணிய:2 64/2
மேல்


ஞானியர் (7)

கள்ள ஞானியர் இவர் கழறும் வார்த்தையில் – ஆதி:12 62/1
மா தகைய ஞானியர் வரம்பு_இலர் இ மார்க்கம் – நிதான:4 70/2
தெருளின் ஆய பர ஞானியர் தெரிந்து திகழ்வர் – நிதான:4 82/2
மேதை ஆய பர ஞானியர் எனா விபுதரே – நிதான:4 83/3
கலை உறு ஞானியர் பகர்ந்த கட்டுரை – நிதான:10 7/3
கைவரு வஞ்ச நெஞ்ச கள்ள ஞானியர் விரைந்து – ஆரணிய:5 73/3
நடை அறிந்த மெய் ஞானியர் நன்றியோடு ஏத்தி – ஆரணிய:7 28/3
மேல்


ஞானியரது (1)

கனை குரல் பில துவாரம் கள்ள ஞானியரது என்னா – ஆரணிய:5 76/1
மேல்


ஞானோபாயம் (1)

பல கலை ஞானோபாயம் பகட்டுரை பஞ்சதந்த்ரம் – நிதான:7 65/1

மேல்