கொ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரிக்கும் 1
கொக்கரித்தனர் 2
கொக்கரித்து 4
கொக்கு 1
கொக்கோ 1
கொங்கு 2
கொச்சை 5
கொட்டி 3
கொட்புறும் 1
கொடா 1
கொடாதேல் 1
கொடாமே 1
கொடாமையால் 1
கொடி 14
கொடிகள் 1
கொடிதினில் 1
கொடிதினுக்கு 1
கொடிது 9
கொடிபடும் 1
கொடிய 23
கொடியது 1
கொடியர் 1
கொடியரில் 1
கொடியரோ 1
கொடியவன் 2
கொடியன் 2
கொடியன 1
கொடியாய் 1
கொடியார் 2
கொடியால் 1
கொடியிராம் 1
கொடியே 1
கொடியேமுக்கு 1
கொடியோடு 1
கொடியோய் 1
கொடியோர் 2
கொடியோன் 1
கொடு 88
கொடு_மொழி 1
கொடு_வினையர் 1
கொடுக்கவும் 1
கொடுக்கும் 1
கொடுங்கணாளனே 1
கொடுங்கோல் 1
கொடுங்கோலும் 1
கொடுங்கோற்கு 1
கொடுங்கோன்மை 2
கொடுசென்று 1
கொடுத்த 6
கொடுத்தவோ 1
கொடுத்தனன் 1
கொடுத்தான் 1
கொடுத்திட 1
கொடுத்து 6
கொடுப்பது 3
கொடுப்பல் 1
கொடுப்பவர் 1
கொடுப்பன் 1
கொடுப்பார் 1
கொடுபோய் 1
கொடும் 70
கொடுமுடி 1
கொடுமை 3
கொடுமையில் 1
கொடுமையின் 1
கொடுமையினும் 1
கொடுமையும் 1
கொடுமொழியால் 1
கொடே 4
கொண்ட 30
கொண்டது 1
கொண்டல் 5
கொண்டலின் 2
கொண்டலே 1
கொண்டலை 1
கொண்டவர் 2
கொண்டனம் 1
கொண்டனன் 1
கொண்டனிர் 1
கொண்டனை 1
கொண்டாட்டம் 1
கொண்டாட 1
கொண்டாடவே 1
கொண்டாடி 1
கொண்டாடுவார் 1
கொண்டார் 6
கொண்டான் 4
கொண்டிடும் 1
கொண்டு 118
கொண்டும் 1
கொண்டே 3
கொண்டேம் 2
கொண்மூ 5
கொணர்க 1
கொணர்ந்தனம் 1
கொணர்ந்து 1
கொணர்ந்தே 1
கொணர்வம் 1
கொத்து 1
கொத்துவான் 1
கொதி 3
கொதிக்கின் 1
கொதிக்குமால் 1
கொதிகொதிக்கும் 1
கொதிகொள்ளும் 1
கொதித்தார் 2
கொதித்து 3
கொதித்தே 1
கொதிப்புடன் 1
கொதிப்பே 1
கொதியுற்று 1
கொந்தளித்த 1
கொந்தளிப்பும் 1
கொந்து 6
கொப்பத்தில் 1
கொப்பத்து 2
கொப்பம் 2
கொம்பரால் 1
கொம்பரின் 1
கொம்பில் 1
கொம்பு 3
கொம்பு_அனாள் 1
கொம்பும் 2
கொமரா 1
கொய் 2
கொய்து 1
கொய்ய 1
கொல் 9
கொல்க 2
கொல்கதாவில் 1
கொல்லவும் 1
கொல்லாது 3
கொல்லிய 2
கொல்லும் 4
கொல்வதும் 1
கொல்வம் 1
கொல 1
கொலு-வயின் 1
கொலும் 1
கொலை 19
கொலை_பாதக 1
கொலைக்களத்தில் 1
கொலைக்களத்து 2
கொலைக்களப்படுத்த 1
கொலைக்களப்படுத்தி 1
கொலைக்களம் 1
கொலைக்கு 1
கொலைசெய்தார் 1
கொலைசெய்ய 1
கொலைசெய்வதும் 1
கொலைஞர் 3
கொலைப்படு 1
கொலைப்படுத்துக 1
கொலைபாதகன் 1
கொலையின் 1
கொலையும் 2
கொலையுமாம் 1
கொலையோடு 1
கொழு 11
கொழுகொம்பு 1
கொழுத்து 1
கொழுந்துவீசி 1
கொழும் 18
கொள் 74
கொள்-மின் 5
கொள்க 4
கொள்கிலர் 1
கொள்கிலான் 1
கொள்கிலேம் 1
கொள்கை 11
கொள்கைத்த 1
கொள்கைத்தாய 1
கொள்கைத்தால் 1
கொள்கைத்து 1
கொள்கையர் 1
கொள்கையும் 4
கொள்கையோ 1
கொள்கையோர் 1
கொள்வது 1
கொள்வதும் 1
கொள்வர் 1
கொள்வரால் 1
கொள்வல் 1
கொள்வன் 1
கொள்வாம் 1
கொள்வாய் 1
கொள்வார் 3
கொள்வான் 1
கொள்வீர் 1
கொள்வேம் 1
கொள்ள 9
கொள்ள_அரும் 1
கொள்ளல் 1
கொள்ளலர் 2
கொள்ளலை 1
கொள்ளா 3
கொள்ளாது 3
கொள்ளாய் 3
கொள்ளார் 3
கொள்ளான் 1
கொள்ளி 4
கொள்ளில் 1
கொள்ளினும் 2
கொள்ளு 1
கொள்ளுக 1
கொள்ளுதல் 1
கொள்ளுதிர் 2
கொள்ளும் 11
கொள்ளுமால் 1
கொள்ளுமோ 1
கொள்ளுவல் 1
கொள்ளுவன் 1
கொள்ளுவார் 1
கொள்ளுவிர் 1
கொள்ளுவை 1
கொள்ளேன் 1
கொள்ளை 8
கொள்ளைகொள் 2
கொள்ளைகொள்ளும் 1
கொள்ளைபோம் 1
கொள்ளையாடு 1
கொள்ளையாடும் 1
கொள்ளையிட 1
கொள்ளையில் 1
கொள்ளையே 1
கொள 13
கொளப்பட்டவர் 1
கொளவும் 1
கொளா 2
கொளின் 1
கொளீஇ 4
கொளு 1
கொளுத்த 4
கொளுத்தி 2
கொளுத்திடவும் 1
கொளுத்திடாது 1
கொளுத்தினாலும் 1
கொளுத்தும் 3
கொளும் 9
கொளுவி 10
கொளேன் 1
கொற்ற 3
கொற்றக்குடை 1
கொற்றம் 5
கொற்றமொடு 1
கொற்றவரும் 1
கொற்றவன் 22
கொற்றவன்-தனை 1
கொற்றவனும் 1
கொற்றவனும்_அலை 1
கொற்றவனை 1
கொற்றவா 3
கொற்றி 2
கொன் 4
கொன்ற 1
கொன்றனை 1
கொன்றிட 1
கொன்று 17
கொன்றுகொளில் 1
கொன்றும் 1
கொன்றை 2
கொன்னுரை 1
கொன்னே 3

கொக்கரிக்கும் (1)

கோளின் ஈட்டத்து மனை-தொறும் சண்டை கொக்கரிக்கும்
தேளின் ஈட்டிய விடம் என செவிக்கு இடர் செருகும் – நிதான:7 55/3,4
மேல்


கொக்கரித்தனர் (2)

கூடினர் குமுறினர் கொக்கரித்தனர்
ஓடினர் உறுமினர் உருட்டி பார்த்தனர் – நிதான:10 5/1,2
கூயினர் குதித்தனர் கொக்கரித்தனர்
சீயென புறக்கணித்து இகழ்ச்சி செய்தனர் – நிதான:10 38/2,3
மேல்


கொக்கரித்து (4)

கொக்கோ என்ன கொக்கரித்து கூவிற்று அமலன் கூறிய போல் – குமார:2 197/4
கொக்கரித்து இகழ்ந்தனர் குழுமியோர் எலாம் – குமார:2 264/4
கொக்கரித்து அலறி ஏங்கி கூக்குரல் எழுப்புவாரை – நிதான:3 26/4
கொக்கரித்து உரும் என குமுறி அண்மி ஓர் – நிதான:4 41/2
மேல்


கொக்கு (1)

மித்திரத்துவம் பூணுவர் கொக்கு அன விரகால் – நிதான:7 50/4
மேல்


கொக்கோ (1)

கொக்கோ என்ன கொக்கரித்து கூவிற்று அமலன் கூறிய போல் – குமார:2 197/4
மேல்


கொங்கு (2)

கொங்கு உயிர்த்து வான் மீன் என பன் மலர் குழுமும் – ஆதி:18 1/3
கொங்கு உலாய் வரும் வசந்தம் மென் கால் படும் கோட்பால் – ஆதி:18 5/3
மேல்


கொச்சை (5)

கொச்சை துன்_மதியே கொடும் கூற்று அன்றோ – ஆதி:12 71/4
கொச்சை பாமர குடிமையில் பழகிய கொடிய – குமார:1 65/2
கொச்சை ஆட்டொடும் கோ குல திரளொடும் குழுமி – குமார:4 59/3
கொச்சை வன் சிறைப்படுத்து உயிரை கொள்ளுவன் – நிதான:4 35/2
கொச்சை மதியை அகற்றி எம்மான் குணம் சார்ந்து ஒழுகும் ஜெகத்தீரே – நிதான:9 16/4
மேல்


கொட்டி (3)

குன்று என நிமிர்ந்த திரள் தோள் முருடு கொட்டி
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான் – நிதான:2 56/3,4
ஆவலம் கொட்டி வாய்விட்டு அழுதழுது அவலிப்பாரை – நிதான:3 22/4
பெரு வலி திரள் தோள் கொட்டி ஆர்த்தன பிலத்து போந்து – நிதான:3 49/4
மேல்


கொட்புறும் (1)

கொட்புறும் புல பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர் – நிதான:6 12/4
மேல்


கொடா (1)

பெரு மரம் ஆன போதும் கனி கொடா பெற்றி நோக்கி – ஆதி:9 109/2
மேல்


கொடாதேல் (1)

காண்தகு கனி கொடாதேல் கட்டளையிட்டவாறு – ஆதி:9 110/3
மேல்


கொடாமே (1)

கொள்ளும் நல் மருந்தை எல்லாம் கூட்டுண்டு குணம் கொடாமே
உள்ளுற பரவி ஒல்லை உயிர் வதைத்து ஒருங்கு கொல்லும் – இரட்சணிய:2 8/2,3
மேல்


கொடாமையால் (1)

உம்பர் நாயகன் எதிருரை கொடாமையால்
வெம்பி யான் உனை கொல விடுக்க ஆயினும் – குமார:2 249/1,2
மேல்


கொடி (14)

மேலை நாள் இளவரசு உயர்த்த வெல் கொடி
கோலின்-நின்று உலகர்க்கு குருதி சான்றுரை – ஆதி:4 59/1,2
பித்தரோ தன_கொடி பிறங்க வாழுவார் – ஆதி:10 8/4
நல் நறும் தழை கொடி படர்த்தி நாட்டிய – ஆதி:19 31/3
பூ வண கொடி பின்னிய பொற்பு உறு – ஆதி:19 64/2
பூம் கொடி மடந்தையர் புகுந்து புங்கவ – குமார:1 28/3
படரும் முந்திரி செழும் கொடி தாறுகள் பாராய் – குமார:4 68/4
வாகை நீள் கொடி குலங்கள் விண் துயல்வரும் மரபு – நிதான:7 16/2
தீமை மல்கிய ஜெய_கொடி வான் உற திகழும் – நிதான:7 24/1
மேனி வந்து பல் கொடி விராய் வெண் சுதை மாடம் – நிதான:7 28/3
கொடி இடையவர் மொழி இசை வழி பழகுவ குலவிய கிளியொடு குயில் – ஆரணிய:5 8/2
கொடி வனம் மிடைவன துடி இடை குலவி – ஆரணிய:5 13/2
வம்-மினோ வம்-மின் என்னா மங்கல கொடி கை காட்டி – ஆரணிய:5 34/3
ஓங்கு தீ_வினைகள் ஆய படர் கொடி உறழ்வது ஊக்கி – இரட்சணிய:2 7/2
கொடி சாய்த்த கொற்றவனை குருசின் மிசை கண்டேனே – தேவாரம்:4 2/4
மேல்


கொடிகள் (1)

செம்பொன் இஞ்சி மீது உயரிய செழு மணி கொடிகள்
உம்பர் ஓங்கு பைம் கழை அரவு உரி படாம் உறழ்ந்து – குமார:4 70/2,3
மேல்


கொடிதினில் (1)

கொடிதினில் கொடிது ஆய இ கொடும் சுடு பாலை – ஆரணிய:4 35/1
மேல்


கொடிதினுக்கு (1)

கொடிதினுக்கு அந்தம் குணித்தது மூதுரை கூற்றேல் – ஆரணிய:4 35/3
மேல்


கொடிது (9)

அன்பு இதில் அற கொடிது யாது பிறிது அம்மா – குமார:2 160/4
கொடிதினில் கொடிது ஆய இ கொடும் சுடு பாலை – ஆரணிய:4 35/1
கொடிது எனப்படும் யாவிலும் கொடிது என தேர்ந்து – ஆரணிய:4 35/2
கொடிது எனப்படும் யாவிலும் கொடிது என தேர்ந்து – ஆரணிய:4 35/2
கொடிது மற்று இதில் பிறிது எது குவலய பரப்பில் – ஆரணிய:4 35/4
இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது – ஆரணிய:4 56/1
எஞ்சாத சுரத்து எரியின் கொடிது என் சின தீ – ஆரணிய:4 107/2
எத்தனையோ கொடிது எத்தனையோ பெரிது இது தேரில் – ஆரணிய:4 132/3
உழுவல் அன்பினில் கொடிது யாது உவரி சூழ் உலகில் – இரட்சணிய:1 51/4
மேல்


கொடிபடும் (1)

கொடிபடும் பொருகள பறை வயின்-தொறும் குளிற – நிதான:7 25/2
மேல்


கொடிய (23)

குற்றம் உள்ளுற புதைத்திடல் கொடிய மா மாயம் – ஆதி:9 65/4
ஆறா கொடிய பசி தாகம் அடங்க தணிய அருள் அளிக்கும் – ஆதி:13 13/1
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
கொடியரில் கொடிய புலையரில் புலையன் ஆயினும் குமர நாயகன் – ஆதி:13 17/1
இந்தனம் அடுக்கிய இரும் கொடிய சூளை – ஆதி:13 39/1
எனும் மா கொடிய கூறு_அரிய சாவின் – ஆதி:13 41/3
வீசும் கொடிய பிரளய கால் வீங்கிற்று அண்டம் விதிர்ப்புற்ற – ஆதி:14 145/4
தேவ_தேவ திரியேக தேவ சுதன் வந்தார் கொடிய
பாவ உலகை நடுத்தீர்க்கும் பரமன் வந்தார் பரலோக – ஆதி:14 153/1,2
தீயினும் கொடிய கோடி துன்பங்கள் செறினும் ஆவி – ஆதி:19 110/1
கொச்சை பாமர குடிமையில் பழகிய கொடிய
இச்சை பாடுகள் சிற்சில என்னொடும் இசைந்தே – குமார:1 65/2,3
எவன் தனை கொடிய பாவி என்று உளம் மிக கசந்து துயர் எய்துவான் – குமார:2 71/1
பொய்ப்படு மன கொடிய புல்லியர் பிணிப்பில் – குமார:2 151/2
நஞ்சினும் கொடிய நெஞ்சு உடைய நாஸ்திகர் – குமார:2 247/4
வாய்க்கும் கொடிய வைணவர்-தம் மனை வாய் எச்சில் வாரி உண்ட – நிதான:9 50/1
குருசில் அறையுண்டு உரைக்கு_அடங்கா கொடிய துன்பம் சகிக்கையில் அ – நிதான:9 57/1
குத்திர புரி உலாம் கொடிய வர்த்தக குழாம் – நிதான:11 2/1
நொடி இனிது என்றான் கொடிய குரோதி – நிதான:11 59/2
கொடிய நித்திய தரித்திரை தனி பெரும் கோட்டம் – ஆரணிய:4 41/4
கொடிய மா திகிலும் பல் குழப்பமும் – ஆரணிய:4 87/1
கொடியன மலை அலது இலை புரி கொடிய
கடியன மலர் அலது இலை உரை கடிய – ஆரணிய:5 15/1,2
கும்பிக்கே இரையை நாடும் கொடிய மாயாபுரிக்-கண் – ஆரணிய:5 60/1
பொருந்து வெம் கொடிய பாவ பொறை சுமந்து இளைத்து சிந்தை – ஆரணிய:8 52/1
மருளுறும் உலகோடு அலகையும் கொடிய மாயமாம் வலையிடை படுத்தும் – தேவாரம்:6 8/2
மேல்


கொடியது (1)

இன்மையில் கொடிது யாது எனின் இன்மையில் கொடியது
இன்மையே எனும் இயற்றமிழ் முதுமொழி இன்னும் – ஆரணிய:4 56/1,2
மேல்


கொடியர் (1)

கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
மேல்


கொடியரில் (1)

கொடியரில் கொடிய புலையரில் புலையன் ஆயினும் குமர நாயகன் – ஆதி:13 17/1
மேல்


கொடியரோ (1)

கோரணிப்படுத்தும் அ கொடியரோ அலர் – குமார:2 272/2
மேல்


கொடியவன் (2)

நஞ்சு என கொடியவன் உளத்து நாடிய – குமார:2 33/1
கோ இயல் அழித்த மற்று ஓர் கொடியவன் ஆற்றல் குன்றி – நிதான:3 75/3
மேல்


கொடியன் (2)

குத்திர கலகி ராஜ துரோகி இ கொடியன் காண்டிர் – நிதான:11 53/4
கோது ஆர் குணக்கேடன் மிக கொடியன் கொடும் பாவி – தேவாரம்:10 8/1
மேல்


கொடியன (1)

கொடியன மலை அலது இலை புரி கொடிய – ஆரணிய:5 15/1
மேல்


கொடியாய் (1)

கோணா நெறி கூடலையே கொடியாய்
நாள்நாளும் விதைத்தனை நச்சு வினை – ஆதி:9 142/2,3
மேல்


கொடியார் (2)

குரவரே கொடியார் என்பர் ஓர் சிலர் கூறில் – குமார:2 280/2
குறு மன கொடியார் செய் குரூரமும் – இரட்சணிய:1 67/1
மேல்


கொடியால் (1)

துங்க மண் சுவரை ஆக்கி துணர்த்த பூம் கொடியால் வேய்ந்து – ஆதி:6 16/2
மேல்


கொடியிராம் (1)

கொன்று உழல் விலங்கினும் கொடியிராம் அன்றோ – நிதான:10 44/4
மேல்


கொடியே (1)

தழல் இடு பூம் கொடியே போல் சாம்பி உயிர் தளர்ந்து ஏக – குமார:2 337/4
மேல்


கொடியேமுக்கு (1)

குற்றவாளிகளாம் கொடியேமுக்கு இங்கு – இரட்சணிய:3 53/1
மேல்


கொடியோடு (1)

பூண்டு ஆதரம் உற்ற பொலன் கொடியோடு வாழ்தி – ஆதி:12 15/3
மேல்


கொடியோய் (1)

குத்திர கொடு வினையுமாம் குறித்திடில் கொடியோய்
எத்திறத்தினும் கேடு காண் இக_பரத்து எவர்க்கும் – ஆரணிய:2 33/3,4
மேல்


கொடியோர் (2)

கூறலைத்தவன் முன்றிலின் நிறுத்துவர் கொடியோர் – நிதான:6 17/4
குலவு நல் உணர்வு அனைத்தையும் புதைப்பர் இ கொடியோர் – ஆரணிய:10 18/4
மேல்


கொடியோன் (1)

கொடியோன் உரிமை பழன கொடு வேலி சூழ்ந்த – ஆரணிய:4 105/2
மேல்


கொடு (88)

புண்ணியம் உரு கொடு பொலிந்து இலங்கிய – ஆதி:3 3/2
தேவ உத்தரம் கொடு திகந்தத்து ஏகுவர் – ஆதி:4 57/1
செஞ்செவே கொடு போயினர் திரு_நகர்க்கு அவனை – ஆதி:8 21/4
தம்பிரான் உரை தலை கொடு தரணி செல் மார்க்க – ஆதி:8 24/1
பொருள் படைத்து ஒரு தனதனாய் நெறி கொடு போனான் – ஆதி:8 26/4
தீர்வு_அரும் கொடு விலங்குகள் தீ விட பாந்தள் – ஆதி:9 2/2
கண்டகம் கொடு தடிந்தனர் வன் கண்டகன் – ஆதி:9 35/3
மற்று இ வாய்மை மன கொடு வான் நெறி – ஆதி:9 75/1
ஓரும் பற்பல் உவமை கொடு உண்மையை – ஆதி:9 79/3
கிட்டி உன் கரம் கொடு கிளர் கபாடத்தை – ஆதி:9 172/2
திணி சுடர் குறி கொடு செல்லவேண்டுமால் – ஆதி:10 30/4
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள் – ஆதி:11 32/3
விலங்காது இ வழி கொடு சென்று அ விலங்கல் உற்றால் – ஆதி:12 20/1
வஞ்ச லௌகிக வாய்மொழியாம் கொடு
நஞ்சம் நுங்கி மயங்கி என் நன் மதி – ஆதி:12 66/1,2
இ குறி மன கொடு இனி ஏகுக என உள்ளம் – ஆதி:13 52/1
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/3
உள கவலையை நீக்கி உரம் கொடு கால் ஊன்ற – ஆதி:19 25/2
கூர்த்த செம் நெறி கொடு குன்றத்து உச்சியை – ஆதி:19 43/2
கொந்து இருள் படலம் போர்ப்ப கொடு விலங்கு உழலும் காட்டில் – ஆதி:19 91/2
வஞ்சனை உரு கொடு கரந்து வௌவிய – குமார:1 3/2
திரு_அருள் கொடு அறிந்தன செப்புகேன் – குமார:1 111/4
சொற்ற என் உரை உள் கொடு தூ நெறி – குமார:2 16/1
துணிந்து பக்தி விசுவாசமாம் பெரிய தோள் பலம் கொடு தொடுத்துமே – குமார:2 65/4
உய்த்த உதவி திறனை ஒல்லை கொடு போனார் – குமார:2 149/3
குணித்த மனை நாடி மறுகூடு கொடு போனார் – குமார:2 154/4
ஐயனை கொடு பிலாத்து முன் அடுத்து இவன் கிறிஸ்தாம் – குமார:2 214/1
கூக்குரல் படுத்தார் அந்த கொடு மன யூதர் – குமார:2 222/4
மாறி இங்கு இவன் கொடு பிலாத்து உறையுளை மருவி – குமார:2 230/3
வேந்தன் ஆக்கினை கொடு வெய்ய மள்ளர்-தாம் – குமார:2 263/1
வன் திறல் கொடு உறுத்த மறுத்து ஒரு மாற்றம் – குமார:2 294/2
தனித்த சூழலில் நாண் கொடு தற்கொலை செய்தே – குமார:2 299/2
ஒன்றி வருக என கொலைஞர் உத்தமரை கொடு போனார் – குமார:2 334/4
குணம் காணா கொடு மனத்தர் கூறிய தீ மொழி ஒன்றோ – குமார:2 347/2
விஞ்சி யாம் விளைத்த கொடு வினை பயனை அடைகின்றேம் – குமார:2 349/4
ஆர்த்து அன்பு வடம் கொடு இழுக்கும் நம் ஐயன் ஆற்றல் – குமார:2 367/2
ஓதுற்ற ஈசோ எனும் கோல் கொடு உயர்த்தி நீட்டி – குமார:2 373/2
கோலி உயிர்த்தான் என்று அவன் ஆக்கை கொடு போகி – குமார:2 420/3
ஏன்று வந்து அருள் உரு கொடு மகிதலத்து இறுத்தார் – குமார:2 492/4
அங்க ரத்தம் கொடு மீட்ட அடிமைகளை சூறையிட – குமார:4 38/2
மேதகு நல் தவத்தியர் அ விருந்தினனை கொடு சென்று – குமார:4 46/3
தெள்ளு தீம் கனி வற்றலும் கை கொடு செல்க – குமார:4 81/3
சாவதான நல் விடை கொடு போயினன் சதுரன் – குமார:4 84/4
புலம் திகழ் நெறி கொடு போயினான் அரோ – நிதான:1 13/4
காய் எரி பங்கியன் கடுத்துறும் கொடு
வாயினன் வக்கிர தந்தன் வன்கணன் – நிதான:2 5/2,3
கொடு மதி படைத்து உலவு கோழை நரம் அல்லால் – நிதான:2 43/1
ஈசுர நேச சரம் கொடு அறுத்தனன் எதிர்_இல்லான் – நிதான:2 75/4
புனையும் ஓர் வயிராக தண்டம் கொடு புடைத்தான் – நிதான:2 94/4
இ கொடு மரண சூழல் எண்_இலர் எய்த கண்டும் – நிதான:3 27/1
சலம் கொடு பிசாச வர்க்கம் தனித்தனி வெருட்டி சார – நிதான:3 36/1
எங்கணும் நடுங்கி ஏங்க எரி கொடு மல பாதால – நிதான:3 40/3
வெம் கொடு நரகு அங்காந்து விரித்த பேழ் வாயை கண்டான் – நிதான:3 40/4
கூற்றம் இ உரு கொடு என் உயிர் குடிக்க வந்து – நிதான:4 43/1
பத்தி மறுகு ஊடு திகழ் பாதை கொடு போந்தேன் – நிதான:4 54/4
வன் திறல் கொடு விழுத்தினென் நிலத்து மறிய – நிதான:4 88/3
குத்திரையில் புறம் பேசி அகத்து அடக்கும் கொடு_வினையர் – நிதான:5 54/3
விலகினீர்_அலீர் வெம் கொடு வினை பகை வெறுத்து – நிதான:6 9/2
பண்டு கேடு சூழ் கொடு விட பாந்தள் வாய் முழையோ – நிதான:7 10/1
திருக்கு உலாவி உள்ளகம் புறம் கொடு வினை திருந்தி – நிதான:7 29/2
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர் கொள்ளைகொள் – நிதான:7 82/3
கோடிகோடி திரட்டும் கொடு வினை – நிதான:7 86/3
செல் நெறி கொடு போயினர் சீரியோர் – நிதான:8 12/4
உத்தமர் இருவரை கொடு சென்று ஓங்கிய – நிதான:10 12/2
கொடு சினத்து அலகை கூட்டுறவை கொள்கிலேம் – நிதான:10 26/4
மறந்து ஒரு கொடு_மொழி வழுத்துவார்_அலர் – நிதான:10 42/3
எய்தினர் வேதியர் இருவரை கொடு
செய் திறம் யாவையும் செய்து வெம் சிறை – நிதான:10 49/2,3
கொடு விட பற்களே குழுமியோர் அவர் உளம் – நிதான:11 8/1
தூய ஆவி துணை கொடு நல் நெறி துன்னு என்று – ஆரணிய:1 23/3
வீறு பெற்று மாயாபுரி வெம் கொடு வினையின் – ஆரணிய:2 4/2
குத்திர கொடு வினையுமாம் குறித்திடில் கொடியோய் – ஆரணிய:2 33/3
குத்திர பொருள் தழை மல்கி கொடு வினை மலர்ந்து – ஆரணிய:2 75/2
நித்திய கொடு மரணத்தை கனிந்திடும் நினை-மின் – ஆரணிய:2 75/4
கொடியோன் உரிமை பழன கொடு வேலி சூழ்ந்த – ஆரணிய:4 105/2
கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு – ஆரணிய:4 143/3
பொன்று பெளவம் புகுந்து நெறி கொடு போந்தாய் – ஆரணிய:4 153/3
வெம் கொடு மயலின்-நின்று மீட்டு எனை புரந்தது இன்னே – ஆரணிய:4 166/4
மன்றல் மா நகரத்து வழி கொடு
நின்றிடாது முன் சென்றனர் நீர்மையார் – ஆரணிய:6 60/3,4
பொறி திகழ்த்திய கொடு வலை புக்கு உழன்று அயர்ந்தீர் – ஆரணிய:7 24/4
மகத்துவம் புனைந்து ஏத்தினர் வழி கொடு போனார் – ஆரணிய:7 31/4
கானகத்து உறு கள்ள வழி கொடு
போனக தொழில் முற்று உறு புன்மையன் – ஆரணிய:9 3/1,2
பன்_அரும் கொடு விட பை என்று ஓர்வரால் – ஆரணிய:9 43/4
ஆயது கொடு என்-வயின் அடுத்து நிலைகேடன் – ஆரணிய:10 4/2
பேதமை துணிகரம் கொடு பிரபஞ்ச மயக்கம் – ஆரணிய:10 25/3
பத்தியின் விழி கொடு பார்ப்பின் அல்லது – இரட்சணிய:1 10/3
ஆபத்தின் குகை ஆம் இந்த அற கொடு மரண சூழல் – இரட்சணிய:2 14/4
கொடு வினை திரளை காய்த்து குலவிய பாவ தாரு – இரட்சணிய:2 15/3
வெம்பும் இ கொடு மரணத்துள் விடுத்தனர் என்றான் – இரட்சணிய:2 38/4
நன்று உரம் கொடு நம்பிக்கைக்கு இ உரை நவிற்ற – இரட்சணிய:2 47/2
பன்னியரை கொடு பரம நாயகன் – இரட்சணிய:3 62/3
மேல்


கொடு_மொழி (1)

மறந்து ஒரு கொடு_மொழி வழுத்துவார்_அலர் – நிதான:10 42/3
மேல்


கொடு_வினையர் (1)

குத்திரையில் புறம் பேசி அகத்து அடக்கும் கொடு_வினையர்
எத்தனையர் தகும் காலம் இடம் தேடி திரிகின்றார் – நிதான:5 54/3,4
மேல்


கொடுக்கவும் (1)

மக பலி கொடுக்கவும் மறுத்திலன் ஓர் வள்ளல் – ஆதி:13 36/4
மேல்


கொடுக்கும் (1)

கதியை கொடுக்கும் ஏசு திரு_கழற்கு ஆட்படு-மின் ஜெகத்தீரே – நிதான:9 90/4
மேல்


கொடுங்கணாளனே (1)

கொல் பயில் ஒரு மற கொடுங்கணாளனே – குமார:2 397/4
மேல்


கொடுங்கோல் (1)

மடுத்திடும் கொடுங்கோல் வேந்தை மானுமால் மரண வாரி – இரட்சணிய:2 9/4
மேல்


கொடுங்கோலும் (1)

கும்பி பாகத்தின் அதிபதி மற கொடுங்கோலும்
அம்பர் ஆதிபன் திருவுளத்து எட்டிய அம்மா – ஆதி:9 9/3,4
மேல்


கொடுங்கோற்கு (1)

கொண்டாட்டம் பரத்தையர்க்கு குடி ஆட்டம் கொடுங்கோற்கு
திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/3,4
மேல்


கொடுங்கோன்மை (2)

கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/4
கொற்றவன் ஆணையின் என்று கூறினான் கொடுங்கோன்மை
பெற்றி எலாம் நிலைநிறுத்தும் பிணக்கு உடைய குணக்கேடன் – நிதான:11 71/3,4
மேல்


கொடுசென்று (1)

கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று
மன்னவன் ஆணையை புரிந்து தெரித்தார் அ மறவனுக்கே – நிதான:11 72/3,4
மேல்


கொடுத்த (6)

கொடுத்த அ பதிதரை குறுகினான் கொலும் – குமார:2 36/3
கொலை செய்யாதே என பரம கோமான் கொடுத்த கற்பனைக்கு – நிதான:9 14/1
தந்தை கொடுத்த தச_விதியை தள்ளி அக_சாட்சியை மழுக்கி – நிதான:9 24/1
எல்லாம் கொடுத்த தாதாவை இறைஞ்சி பிழைக்க மதி குலைந்து – நிதான:9 27/1
நேசத்தாலே உயிர் கொடுத்த நிமலன் தொழும்பு வெட்கம் என – நிதான:9 42/3
திரும்பி பாரும் உமக்காக ஜீவன் கொடுத்த தியாகேசன் – நிதான:9 97/2
மேல்


கொடுத்தவோ (1)

கொடுத்தவோ எமக்கு உயிர் யாது கூறுகேம் – ஆதி:19 53/4
மேல்


கொடுத்தனன் (1)

அக பலி கொடுத்தனன் அது அன்றி ஒரு பேறாம் – ஆதி:13 36/3
மேல்


கொடுத்தான் (1)

கோதுற்றிலாத குமரேசனுக்கு கொடுத்தான்
மா துக்கதுக்கம் ஜல பஞ்சமும் வந்து இவற்கே – குமார:2 373/3,4
மேல்


கொடுத்திட (1)

ஜீவனை கொடுத்திட வரு திறம் நினைந்து இரத்த வேர் துளி சிந்தி – குமார:2 4/2
மேல்


கொடுத்து (6)

குருதியை கொடுத்து ஜீவ_கோடியை மீட்பல் என்ன – ஆதி:7 11/1
தன் திரு_மைந்தனை கொடுத்து இவ்வளவாக உலகில் அன்பு சார்ந்த தேவை – குமார:2 50/3
சாவ கொடுத்து எ பாவிகட்கும் சலியாது இரக்ஷை-தனை அருளும் – நிதான:9 4/3
மத்தகத்துளே மானுவேல் உயிர் கொடுத்து ஈட்டி – இரட்சணிய:3 85/2
இன் உயிர் கொடுத்து இரக்ஷை ஈட்டிய இறையை ஏத்தி – தேவாரம்:9 2/3
கோலை நீத்து ஒரு செங்கோல் இசாய் மகற்கு கொடுத்து அருள் கொற்றவா போற்றி – தேவாரம்:11 10/1
மேல்


கொடுப்பது (3)

கொன்று உயிரை கவரும் விடம் கொடுப்பது அதன் குணம் ஆமால் – நிதான:5 45/4
கும்பி வாதை கொடுப்பது இங்கு என் செய கூடும் – ஆரணிய:4 141/4
குணி மற்று எங்ஙனம் கொடுப்பது அ அணி பிறர் கொள்ள – ஆரணிய:6 10/4
மேல்


கொடுப்பல் (1)

தம்தமக்கு கொடுப்பல் தரும் பொருள் – ஆரணிய:9 8/4
மேல்


கொடுப்பவர் (1)

ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர் – ஆதி:6 13/2
மேல்


கொடுப்பன் (1)

முத்தி வேண்டி கொடுப்பன் முறைமுறை – ஆரணிய:9 9/2
மேல்


கொடுப்பார் (1)

ஆன வழி ஏது அஞ்சல் என அபயம் கொடுப்பார் எவர் புனித – நிதான:9 62/2
மேல்


கொடுபோய் (1)

தொண்டனை வலிந்து நகர் புறம் கொடுபோய் துரந்த பேர்_அருளினாய் போற்றி – தேவாரம்:11 4/1
மேல்


கொடும் (70)

வாயிடும்படி கோல் கொடும் அடித்தனன் மருங்கை – ஆதி:8 32/2
கொள்ள கரி முகம் குப்புற கொடும் தீ_வினை குலைய – ஆதி:9 18/3
அந்தோ அற கொடும் தீ_வினைக்கு இலக்காகிய அவனி – ஆதி:9 21/1
வெம் கொடும் பஞ்சம் நேர்ந்து வெதுப்பிரும் பசிக்கு ஆற்றானாய் – ஆதி:9 113/3
குற்றும் இ தவிடும் கிட்டா கொடும் பஞ்சம் அதிகரிக்க – ஆதி:9 114/1
வெம் கொடும் பருக்கள் மிக்கு வேதனை உழக்கும் நீரான் – ஆதி:9 124/4
தீ கொடும் சிறை புகுந்தவர் தீ_வினை பயன் மேல் – ஆதி:9 155/1
கொச்சை துன்_மதியே கொடும் கூற்று அன்றோ – ஆதி:12 71/4
ஆசாபாச கொடும் சுழலில் அகப்பட்டு உலைந்தேன் அருள் அணுக – ஆதி:13 10/1
பிழையை ஓர் பிழை என்று உணரா கொடும் பிழையார் – ஆதி:14 109/1
விஞ்சிய கொடும் சும்மை விழுதலும் மறைவாணன் – ஆதி:15 7/1
பாவிகளில் பிரதான பாவி கொடும் பாவி முழு – ஆதி:15 17/1
விந்தையாய் புனைந்தனர் விசித்த வெம் கொடும்
பந்தம் இற்று உக நடு நின்ற பண்ணவன் – ஆதி:15 23/3,4
வெம் கொடும் பயங்கரம் விளைந்த மூலம் என் – ஆதி:19 45/2
நிலை தப கொடும் தொழில் நினையும் பேய் கண – குமார:1 4/2
தீக்க நின்ற சின கொடும் தீ திரள் – குமார:1 107/3
ஆவியில் கொடும் துயரமுற்று ஐயருக்கு அபயமிட்டதும் அ நாள் – குமார:2 4/3
பேய் கொடும் கையிலும்-நின்று இழுத்து அழிவு_இல் பேறு அளித்த பெருமான் அருள் – குமார:2 72/2
வெம் கொடும் கலகத்தினை விளைத்தனன் மெய்ம்மை – குமார:2 223/4
நிகர்_இலா கொடும் பாதகம் நேர்ந்தது இங்கு என்னா – குமார:2 275/3
இருள் உறும் கொடும் பாதலத்து எய்துவை இன்றே – குமார:2 287/4
பற்றவைத்தனையே கொடும் பாழ் மதி இன்னும் – குமார:2 293/3
பேச_அரும் கொடும் பாதகம் பேணிய பித்தேன் – குமார:2 297/1
எ பெரும் கொடும் பாவிகளும் கரையேற – குமார:2 298/1
துற்றி விளைத்த கொடும் துன்பம் தனி உழந்து – குமார:2 306/2
புந்தி_அற்று கொடும் கூளிக்கு அடி தொழும்பு புரிந்து ஒழுகும் பொல்லாருக்காய் – குமார:2 377/2
பார் உதித்த இளவரசன் பகைப்புலத்து கொடும் கூளி – குமார:4 20/1
பித்து அளைந்த கொடும் காம பேய் தலையும் பிரபஞ்ச – குமார:4 22/2
குத்திரம் மித்தியம் ஆதி கொடும் படைகள் பல வீசி – குமார:4 24/1
குரை பழி பொய் நிந்தை எனும் கொடும் சிலீமுகத்தானும் – குமார:4 26/2
குச்சிதமாய கொடும் சொல் முக கணை கோத்து எய்ய – நிதான:2 74/2
எய்த கொடும் கணை எத்தனை கோடிகள் எல்லாமும் – நிதான:2 77/1
கொய்து குறைத்தனன் என்பது என் என்று கொடும் பேயன் – நிதான:2 77/3
கொண்டு நிந்தனை கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம் – நிதான:2 82/2
ஆய இ கொடும் படைக்கலம் அகங்கரித்து உலம்பி – நிதான:2 83/1
கோலி வெம் சின கொடும் தழல் பகழி கோத்து எய்தான் – நிதான:2 97/3
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/3
கூற்றம் வந்து உடற்றி நெஞ்சில் கொடும் தழல் இறைப்ப வாதை – நிதான:3 24/3
கொந்து அழல் பருகி ஓங்கு கொடும் புகையாய கொண்மூ – நிதான:3 41/1
போயினன் அற கொடும் கிழவன் பொங்கியே – நிதான:4 39/4
கொன்னுரை வழங்கல் ஆதி கொடும் தொழில் துக்கம்துக்கம் – நிதான:5 7/2
குன்றாத தீ_கருமி குணம் காணா கொடும் தோஷி – நிதான:5 26/4
வஞ்சக கொடும் பகைமையாம் ஆதலின் மக்காள் – நிதான:6 11/3
கோறலை துணிந்து ஆக்குவர் கொடும் சிறை புறத்தில் – நிதான:6 17/2
முந்து வெம் கொடும் துன்பம் முருக்கினும் – நிதான:8 10/3
தீ கொடும் தொழில் தேர்-மின் என்பார் சிலர் – நிதான:8 29/4
துன்னினார் கொடும் சூனிய ஆவணம் – நிதான:8 31/4
ஜென்ம வினையும் அனாதிகளால் தினமும் புரிந்த தீய கொடும்
கன்ம வினையும் கதிரவனை கண்ட பனி போல் கழிந்து ஓடும் – நிதான:9 68/1,2
உத்த தீ கொடும் சிறை உரைத்துமேல் அரோ – நிதான:10 1/4
தீ கொடும் சிகை கனல் சிந்தை-தோறு எழ – நிதான:10 4/2
பொறையொடும் உணர்வொடும் புகழொடும் கொடும்
சிறையிடை கிடந்தனர் தெள்ளியோர்களே – நிதான:10 50/3,4
கொலை தீர்வை கொடும் கூற்றம் குறுகி வெருட்டிடு பொழுதும் – நிதான:11 73/1
கைதவம் தந்திரம் கொடும் சூது வன்கண்மை – ஆரணிய:1 14/2
புத்தியீனம் எத்தனை கொடும் பாதகம் பொல்லீர் – ஆரணிய:2 69/4
கொடிதினில் கொடிது ஆய இ கொடும் சுடு பாலை – ஆரணிய:4 35/1
கொள்ளி ஆர் அழல் பரந்தன கொடும் சுரம் குறுகில் – ஆரணிய:4 36/1
திசை நடுங்கும் அ தீ சுர கொடும் பெயர் செப்பின் – ஆரணிய:4 37/4
எண்திசாமுகத்து இரிந்தன இ கொடும் சுரத்தின் – ஆரணிய:4 39/3
தீ கொடும் சுரம் அஞ்சி யாம் திகைத்து பின்னிடையில் – ஆரணிய:4 44/3
கூவலில் கவிழ துணிந்தேன் கொடும்
பாவம்பாவம் பழிப்பு உறு பாவமால் – ஆரணிய:4 74/3,4
வெம் கால_தண்டில் கொடும் கோலை விடாதகண்டன் – ஆரணிய:4 121/2
மருளின் எய்தினமால் இ மற கொடும் சூழல் – ஆரணிய:4 157/1
தீண்டிடாதும் சுடும் கொடும் தீயவர் – ஆரணிய:6 50/3
சோதனை திரளை கொடும் துர்_ஜன – ஆரணிய:6 57/3
அற கொடும் பாவி கல்லா அசடர்க்குள் அசடன் அஞ்சா – ஆரணிய:8 58/1
மற கொடும் புலையன் ஆய வஞ்சக புலையனேன் யான் – ஆரணிய:8 58/2
தீ கொடும் சிறை மீட்டும் என் நாயகன் செறுக்கும் – இரட்சணிய:1 52/2
வெம் கொடும் பசி தாகம் வன் பிணி இடர் மேற்கொள் – இரட்சணிய:2 49/1
பாவம் மல்கு பூ_உலகுளே மற கொடும் பாவர் – இரட்சணிய:3 84/1
கோது ஆர் குணக்கேடன் மிக கொடியன் கொடும் பாவி – தேவாரம்:10 8/1
மேல்


கொடுமுடி (1)

மால் உறு கொடுமுடி மணி அணி என விழும் அருவிகள் பொருவன தடம் – ஆரணிய:5 6/1
மேல்


கொடுமை (3)

கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
ஆயிடை நிசாசரன் அற கொடுமை பூண்ட – நிதான:2 63/1
கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/4
மேல்


கொடுமையில் (1)

பொய்யர் ஈட்டு வெம் கொடுமையில் புன்கண் உற்றிடுவீர் – நிதான:6 16/4
மேல்


கொடுமையின் (1)

கொடுமையின் குலம் என கூடினார் கேடினார் – நிதான:11 5/4
மேல்


கொடுமையினும் (1)

கொடுமையினும் கொடுமை இது குவலயத்து இ கொடுங்கோன்மை – நிதான:11 70/4
மேல்


கொடுமையும் (1)

வஞ்சமும் கொடுமையும் மறமும் தீமையும் – நிதான:2 4/2
மேல்


கொடுமொழியால் (1)

கொன்னே மறம் கூர் பொய்யாணை கூறி கடிய கொடுமொழியால்
அன்னோ தன்னை சபித்திடவும் அமைந்தான் என்னில் யாவர் இனி – குமார:2 196/2,3
மேல்


கொடே (4)

ஆவலில் துணிந்தனன் அருள் துணை கொடே – பாயிரம்:1 9/4
மன்று இரக்ஷணை வழங்க வரு மா மறை கொடே
நன்று அருள் குமர நாயகன் நடுப்புரிவர் ஈது – நிதான:4 78/1,2
கூவி என்னை குரவன் உரு கொடே
ஏவி நல் வழிக்கு ஈட்டியது எவ்வணம் – ஆரணிய:4 77/3,4
மங்கலம் புனைந்து பாடி நாடுவார் வழி கொடே – ஆரணிய:5 98/4
மேல்


கொண்ட (30)

கொண்ட பேர்_ஆற்றலாலே கூறும் இ பனுவல் என்றும் – பாயிரம்:1 13/3
சேய் கொண்ட மனையாள் உற்ற சினேகரை வெறுப்பான் ஏதோ – ஆதி:2 43/1
கூக்குரல் படுப்பினும் பயன் என்னை-கொல் கொண்ட
ஆக்கை வீழும் முன் அற பயன் கூட்டிடாது அவமே – ஆதி:9 155/3,4
சேதம் எற்கு என கொண்ட திறத்தினே – ஆதி:12 68/4
கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
இன்மையின்-நின்றும் ஆன்ம விவேகத்து எழில் கொண்ட
ஜென்மம் எடுத்தீர் மெய் வழி கண்டும் தெருமந்து – ஆதி:16 9/1,2
கொண்ட செவ்வியில் பரவு தொண்டரை பொரூஉம் கொழும் கா – ஆதி:18 9/4
பாந்தள் போல் துயில் கொண்ட பயித்தியம் – ஆதி:19 70/3
இரு நிலம் உய்ய கொண்ட எம் பிரான் ஆக்கை ஈமம் – குமார:2 426/1
அமராரை செயம் கொண்ட அ நாளில் சிம்ஸோற்கு – குமார:4 36/3
இதம் கொண்ட அருள் தாவீது எனும் சிறுவன் எதிரூன்றி – குமார:4 37/1
விதம் கொண்ட பெரும் சேனை பெலிஸ்தியர் வெந்நிட்டு ஓட – குமார:4 37/2
மதம் கொண்ட பெரும் காய வல் அரக்கன் மடிந்து விழ – குமார:4 37/3
கொண்ட கொள்கையும் மத அகங்காரமும் குலைந்து – நிதான:2 95/2
கொண்ட பேர்_அச்சத்து ஆவி குலைந்து அறிவு அழிந்து யாக்கை – நிதான:3 43/2
திரு_அருள் உய்ய கொண்ட செல்வன் ஓர் திடர் வந்து உற்றான் – நிதான:3 65/2
மண்ணினை இகத்தி என் மதி கொண்ட ஏழை நீ – நிதான:4 28/4
கொண்ட கரு பயன் இழந்த குடம்பையுமே நிகர் குணிக்கின் – நிதான:5 27/4
கொண்ட நல் வயிராக்கியமும் குணித்து அருள் குரவன் – நிதான:6 31/2
கொண்ட மார்க்கரை விழுங்கு தீ கும்பியின் குகையோ – நிதான:7 10/2
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி – நிதான:7 53/1
கோது_அற்று ஒழுகி பரம பதம் கூட கருதி குழாம் கொண்ட
ஜாதியொடு சேர்ந்து இறைவன் அடி-தனை போற்றிடு-மின் ஜெகத்தீரே – நிதான:9 86/3,4
கோன்மை குண தோஷம் உரையாமை புகழ் கொண்ட
பான்மை மதியாது படுபாவியர் என்று எள்ளும் – நிதான:11 27/2,3
உள் நைவு நீங்கினான் திரு_அருள் பலம் கொண்ட உரவோன் – ஆரணிய:2 3/4
கொண்ட பத்தியின் கோலத்தை குவலயம் நகைக்கும் – ஆரணிய:2 63/3
கொண்ட மான தீ சுடச்சுட உளம் கொதிகொதிக்கும் – ஆரணிய:4 38/3
ஞானமே திரு_மேனியா கொண்ட நம் தாதை – ஆரணிய:6 18/3
நம்பர் நாட்டிய நம்பிக்கை உரு கொண்ட நண்ப – இரட்சணிய:1 23/1
இலகும் ஐந்து காயம் கொண்ட அடைக்கலத்து எழிலும் – இரட்சணிய:3 81/1
குடி தொழும்பு ஆக்கி கொண்ட கோமானே குன்றிடா விழு நிதி குவையே – தேவாரம்:6 7/2
மேல்


கொண்டது (1)

கொண்டது தனித்தனி குறித்து வரு போழ்தில் – ஆதி:14 73/2
மேல்


கொண்டல் (5)

கொண்டல் மின்னி இடித்து குமுறியும் – ஆதி:9 76/2
குழுமி நின்று உரறு கொண்டல் கொடு போயது இவண் மற்று – ஆதி:14 189/3
கொண்டல் அம் குழவி வந்து உறங்கும் கொள்கைத்த – குமார:2 93/4
பார் உண்ட பாவ கொண்டல் படர்ந்து வேதனையாம் ஆழி – குமார:2 122/1
கொண்டல் இடி முழக்கம் என கோத்த பேர்_ஒலி கிளப்பி – குமார:4 33/3
மேல்


கொண்டலின் (2)

கொண்டலின் திரள் என குழுமி நின்று உரறுமால் – ஆதி:14 7/3
உரவு செழும் கொண்டலின் நாப்பண் உற்றது அமரர் உவப்பு எய்த – ஆதி:14 148/4
மேல்


கொண்டலே (1)

குமர நாயகன் திரு_அடி துணை கூட்டி உய் அருள் கொண்டலே
எமரொடும் தடுத்தாண்ட பேர்_அருள் என்றும் வாழிய வாழிய – தேவாரம்:2 10/2,3
மேல்


கொண்டலை (1)

கொண்டலை இரு கரம் குவித்து இறைஞ்சியே – ஆதி:12 36/4
மேல்


கொண்டவர் (2)

உலகு எலாம் உய கொண்டவர் வினை சுமை ஒழித்தோர் – குமார:1 73/2
மன்னவ ஞானி சொல் மதித்து கொண்டவர்
பன்_அரும் கொடு விட பை என்று ஓர்வரால் – ஆரணிய:9 43/3,4
மேல்


கொண்டனம் (1)

காரியம் பிறிது என கண்டு கொண்டனம் – ஆதி:19 46/4
மேல்


கொண்டனன் (1)

கொண்டனன் திகிலேனும் குறுகுறு நின்று ஒல்லை – ஆதி:19 24/3
மேல்


கொண்டனிர் (1)

மேதக ஜெயம் கொண்டனிர் மிக மகிழ்சிறந்தேன் – நிதான:6 5/3
மேல்


கொண்டனை (1)

சொல்வது மெய் எனை தொழும்பு கொண்டனை
செல்வதோ இளந்தையில் தீட்டு சாசனம் – நிதான:2 23/3,4
மேல்


கொண்டாட்டம் (1)

கொண்டாட்டம் பரத்தையர்க்கு குடி ஆட்டம் கொடுங்கோற்கு – நிதான:7 57/3
மேல்


கொண்டாட (1)

அம் கண் வானகம் கொண்டாட அறம் குடி புகுத்தி வாழ்வார் – ஆதி:6 16/4
மேல்


கொண்டாடவே (1)

விண் தலத்து விபுதர் கொண்டாடவே – ஆரணிய:6 58/4
மேல்


கொண்டாடி (1)

பல் வகை ஒரு பற்று இல்லா பரதேசிகளை கொண்டாடி
நல் வரை ஆயர் காட்டும் நண்பு எவாறு ஆயது என்னில் – ஆரணிய:5 54/1,2
மேல்


கொண்டாடுவார் (1)

அன்பின் வல்லபத்தை உன்னி ஆனந்தம் கொண்டாடுவார் – இரட்சணிய:3 19/4
மேல்


கொண்டார் (6)

கள்ள வேட குரவ ஒன்னாரே சதி புரியும் கருத்து உள் கொண்டார் – ஆதி:9 166/4
கொண்டார் துணுக்கம் கொதித்தார் கடு விடத்தை – குமார:2 319/2
உஞ்சம் என்று உளம் வலித்து உரம் கொண்டார் அரோ – குமார:2 414/4
விசுவாசத்தால் வெம் சீய விரி வாய் அடைத்தார் விறல் கொண்டார்
விசுவாசத்தால் முப்பகையை வென்றார் முது வேதியர் அதனால் – நிதான:9 69/2,3
கந்தக நாற்றம் கொண்டார் கதழ்ந்து எரி கதுவி பொங்கும் – ஆரணிய:5 71/2
நித்திய_ஜீவ வாயில் இது எனும் நினைவுள் கொண்டார் – ஆரணிய:5 84/4
மேல்


கொண்டான் (4)

மிக உளமுடைந்து நைந்தான் மெய் மனஸ்தாபம் கொண்டான்
தகவு உடை தாதை பக்கல் சார்குவன் ஏற்றான் பெற்ற – ஆதி:9 115/2,3
பாங்கு உணர்வு_இல்லா துணிகரனும் கண்படை கொண்டான் – ஆதி:16 20/4
குத்திர வாகை மிலைச்சுவல் என்று குறி கொண்டான் – நிதான:2 78/4
கொண்டான் அவரும் விழித்தார் இது கூறலுற்றான் – ஆரணிய:4 106/4
மேல்


கொண்டிடும் (1)

கோடிகோடி குடி வெறி கொண்டிடும்
கோடி கோடி சிற்றின்ப குகை புகும் – நிதான:7 88/2,3
மேல்


கொண்டு (118)

ஒரு தனி ரக்ஷணிய வழி துணை ஆகி அடியோமை உய்ய கொண்டு
கருதிய நல் கருமம் எலாம் கைகூட பெரும் கருணை கடைக்கண் நோக்கம் – பாயிரம்:1 7/2,3
ஒண் தமிழ் வலவர் வாக்கின் உரம் கொண்டு இ உலக காதை – பாயிரம்:1 13/1
நினைவு கொண்டு உடன் சிந்தை யாத்திரை செயும் நீர்மை – ஆதி:1 7/4
கருவற சுருதி என்னும் கட்கம் கொண்டு எறிந்து போக்கி – ஆதி:4 12/2
திரு வளர் புனித நித்ய ஜீவ_நீர் கால் கொண்டு உய்த்து – ஆதி:4 12/3
தமர நீர் கடல் ஆழம் நரி வால் கொண்டு அளந்து அறிய சமைவது ஒக்கும் – ஆதி:4 38/4
இரக்க சமரசமாய திரு_கடை கோபுர வாயில் எழில் கொண்டு ஓங்கி – ஆதி:4 39/2
உன்னத அரசன் சொற்ற உத்தரம் சிரம் மேல் கொண்டு
மன்னவன் மிருத்திகேயன் அத்தினி எனும் பூ மாதை – ஆதி:6 6/1,2
மேதகையவரை கொண்டு விளம்பரப்படுத்த செய்தார் – ஆதி:7 16/2
ஊன் ஆடிய திரு_மேனி கொண்டு உதித்தார் உலகு உவப்ப – ஆதி:9 19/4
இத்தகு சாந்து கொண்டு இசைத்து பத்தி செய் – ஆதி:9 37/2
முற்று உலக மயல் கொண்டு துயிலாதீர் விழித்திரு-மின் மோசம்போகீர் – ஆதி:9 99/3
தெறு மருந்தாக கொண்டு ஜெகத்து நாள் கழித்த பிற்றை – ஆதி:9 126/3
பகலே என் நிதி குவை பார் உள கொண்டு
உகவாய் அருள் நாழிகை ஒன்று உயவே – ஆதி:9 133/3,4
கள்ளத்தை விடுத்து உள கட்டுரை கொண்டு
உள்ள_கரியே சில காலம் உளைத்து – ஆதி:9 138/1,2
ஏதம் கொண்டு நல் ஊதியம் போகவிட்டிடும் இ – ஆதி:11 21/3
போத கதி கொண்டு ஒளி வாயில் பொருந்த நோக்கி – ஆதி:12 1/3
கோது_இலா மெய் விசுவாசம் கொண்டு நல் – ஆதி:12 43/1
வாதை கொண்டு உயிர் வாழ்வது எவ்வாறு இனி – ஆதி:12 69/4
அல்லியன் மனத்தினர் அமார்க்க வெறி கொண்டு
வல்லியம் என குழுமி வன் கல் மழை சிந்தி – ஆதி:13 40/1,2
கேட்டுளான் ஆக உன்னை கெடுத்தது என் மதி கொண்டு என்றான் – ஆதி:14 119/4
பூதி சாதனம் கொண்டு முன் போல் உரு – ஆதி:14 164/3
கொண்டு இறைஞ்சி பரவச கூத்தராய் – ஆதி:14 170/2
ஏங்கி இரங்கி கூ விளி கொண்டு இங்கு எமை உய்ய – ஆதி:16 20/1
கண்ணையே கண்ணா கொண்டு காக்கின்ற இமையை போல – ஆதி:17 10/1
தெருள் உரையேனும் கொண்டு தேடலீர் அருளை வாளா – ஆதி:17 32/3
உடையவன் திரு_வாக்கு ஒன்றே உறுதுணையாக கொண்டு
நடை வழி பிடித்து சென்ற நலம் கிளர் மறை_வலாளன் – ஆதி:17 41/2,3
நாதனது அருள் ஒன்றே நல் துணை என கொண்டு
போதருகுவன் என்னா பொறி ஒரு புலன் ஆக – ஆதி:19 22/2,3
காக்கையே கடனா கொண்டு காப்பினும் – ஆதி:19 71/2
உச்சித விசுவாசத்தின் உரம் கொண்டு அங்கு உற்று நோக்கி – ஆதி:19 112/3
நினைவு கொண்டு ஒலிவாசல சாரலில் நின்ற – குமார:2 75/3
கொண்டு பாடுகள் பட குறித்து செல்லும் அ – குமார:2 85/3
இனையன வளம் கொண்டு ஓங்கி இறும்பு சூழ் கிடந்த அந்த – குமார:2 99/1
தரிசனம்செய்த மூன்று தாஸரை உடன் கொண்டு ஏகி – குமார:2 106/2
பண்ணவும் என நிண்ணயம் பண்ணினர் பகை கொண்டு
ஒண்ணுமோ வறும் கூவலுக்கு உததியை ஒடுக்க – குமார:2 205/3,4
குற்றம்_அற்ற குருதி நிலத்து உக கொண்டு
விற்ற காசு எனும் வெம் தழல் உன் மடி மேவ – குமார:2 293/1,2
பூரியர் விலை கொண்டு புதைத்திடும் ஈம – குமார:2 303/3
பருவரல் கொண்டு ஐம்பூத பௌதிக மாத்திரையாய – குமார:2 336/3
ஒப்பு_அரிய முது மூலத்து ஒரு பொருளை கொண்டு உய்த்தார் – குமார:2 339/3
கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார் – குமார:2 372/4
தாவாத கருணையினால் பேர்_அன்பு மயமான தனு கொண்டு ஈண்டி – குமார:2 376/2
கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள் – குமார:2 396/1
வித்தக உடற்கு என கொண்டு மேவினான் – குமார:2 404/4
ஒள் நிற பனி நீரோடு கலந்து மென் கால் கொண்டு ஓச்சல் – குமார:2 428/3
உய வரும் நலம் கொண்டு ஐயன் உயிர்த்தெழ ஊர்த்த நன்மை – குமார:2 442/2
தெள்ளிது அச்சமும் கொண்டு தியங்கினார் – குமார:2 452/4
தூதர் சொற்ற சுமங்கல வார்த்தை கொண்டு
ஏதம்_இல்லவர் ஏகுழி எம் உயிர் – குமார:2 454/1,2
கதம் கொண்டு வீசி எறி கவண்கற்கள் இவை காணாய் – குமார:4 37/4
வழியாக விசுவாச கண் கொண்டு
விண் நாடு புகும் சிகர வியன் கிரியை வேதிய நீ – குமார:4 47/2,3
துள்ளு செம்மறி திரளொடு தொடர்பு கொண்டு உலவி – குமார:4 58/3
பொறி வரி வைர தண்டு கொண்டு ஊன்றி போகவும் கூடும் என்று உரைத்தான் – நிதான:1 2/4
கொள்ளுவை நல்கு புன்_கூலி கொண்டு எவன் – நிதான:2 24/2
உய் வழி பிறிது எனும் உரை கொண்டு ஏகினை – நிதான:2 33/3
தைவிக அநுக்கிரக சத்தியின் உரம் கொண்டு
உய் வழி ஒழுக்கம் விலகாது எதிரில் ஊன்றி – நிதான:2 40/1,2
சத்திரமா படை கொண்டு இவனோடே சமராடும் – நிதான:2 78/1
அத்திரமாய அரும் படை கொண்டு இங்கு அமராடி – நிதான:2 78/3
கொண்டு நிந்தனை கொடும் தழல் இறைப்ப வீண் குதர்க்கம் – நிதான:2 82/2
வானகத்து அரசன் போற்றி வண் தழை கொண்டு வாளி – நிதான:3 1/2
மந்திர வாள் கை கொண்டு மரண வைப்பூடு செல்வான் – நிதான:3 20/4
கொள்ளும் நாள் முத்தி வேட்டு குரைப்பது என் பயன் கொண்டு என்னா – நிதான:3 31/2
கொண்டு உளம் நடுங்கி ஆவி குலைகுவன் குமார வள்ளல் – நிதான:3 37/2
மேதகு திரு_நாமத்தின் விறல் கொண்டு வேத நுண் நூல் – நிதான:3 55/3
கூர் ஆர் விழி கொண்டு குணித்து அணுகி – நிதான:4 3/3
குச்சிதன் முகம் குறி கொண்டு நோக்கியே – நிதான:4 35/4
இ நிலை உசாவினான் இங்கு என்பதை அகத்துள் கொண்டு
புன்னகை கோட்டி என்-கொல் மருண்டனை புலமை மிக்கோய் – நிதான:5 20/2,3
ஆயவற்றின் நுட்பம் விரித்து அறிவுறுத்து ஒப்புரை கொண்டு
வாய் அளவோ கிரியை மனை-வயின் உளவோ என வகுப்பாய் – நிதான:5 46/3,4
அம் சொல் கொண்டு பகட்டும் இம்பர் தம் – நிதான:5 74/2
அன்பின் அஞ்சலி பல் முறை அளித்தனர் அகம் கொண்டு
என்பு நெக்கு நன்று அறி மொழி இனியன இசைத்தார் – நிதான:6 3/1,2
பாழி அம் புவி முழுவதும் இரக்ஷணை பயன் கொண்டு
ஊழியூழி நின்று உயர்க என்று உளம் குவிந்து ஏத்தி – நிதான:6 30/2,3
ஒன்றின் ஊதியம் ஒன்பதா கொண்டு விற்று ஓம்பி – நிதான:7 37/1
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/3
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி – நிதான:7 53/1
நல் வளம் ஒருவி ஜீவ நாசத்தை மலிய கொண்டு
சொல் வளம் பெருக்கி விற்று சூனிய பொருளை ஆக்கி – நிதான:7 74/2,3
கொண்டு நின்று பிரான் அடி கூடினார் – நிதான:7 92/4
நலிவு கொண்டு உளம் நைந்தனர் போயினார் – நிதான:8 21/4
வாக்கில் வேறலம் வன் தடி கொண்டு யாம் – நிதான:8 27/1
தாதை உவப்ப மாது வித்தாய் தயாள உரு கொண்டு அவதரித்து – நிதான:9 6/2
மரண சுழல் கொண்டு உய்க்கா முன் மனப்பூருவமாய் வழிபடுவோர்க்கு – நிதான:9 33/2
ஆசை பேய் கொண்டு அலைந்து துழாய் அணிந்து காமம் தணிந்தானாம் – நிதான:9 45/3
பண்ணும் பூஜை பயன்படுமோ பரவை கடக்க கல் புணை கொண்டு
ஒண்ணுமோ ரக்ஷணிய கலத்து உவந்து புகு-மின் ஜெகத்தீரே – நிதான:9 70/3,4
அலகு_இல் கருணாகரன் வாக்கை அகம் கொண்டு உய்-மின் ஜெகத்தீரே – நிதான:9 79/4
ஓங்கும் அருளை துணையா கொண்டு உறுதியா நிண்ணயம்பண்ணி – நிதான:9 93/2
உலவிய மூர்க்கர் அ உரை கொண்டு ஒல்லையே – நிதான:10 10/2
கட்டு பாசத்தொடும் கடியர் கொண்டு உய்த்திட – நிதான:11 9/3
கருக்கிய சிந்தையாளன் அறப்பகை கதம் கொண்டு ஒல்லை – நிதான:11 47/3
சொன்ன உரை முடியாமுன் சுருதி நூல்_வலவனை கொண்டு
அ நியமர் சிறைச்சாலை அடைவிக்க அரும் தவனை – நிதான:11 72/1,2
குப்பையாய் உவர்த்து ஏகினன் கோன் முறை கொண்டு – ஆரணிய:1 27/4
ஒடுக்கும் வெம் பகை உறின் தக்க வேடம் கொண்டு உய்வல் – ஆரணிய:2 44/2
மருட்டுரை கொண்டு கிட்டி மண் இடி விழுந்து அ ஒல்லை – ஆரணிய:3 14/3
அயில் எயிற்று அரா விடம் தலை கொண்டு என அயர்ந்தார் – ஆரணிய:4 43/2
பேயே நிருத உரு கொண்டு உழல் பெற்றி ஈது என்று – ஆரணிய:4 108/2
நஞ்சு உண்டு சா-மின் மனமின்று எனில் நாணி கொண்டு
துஞ்சுண்டு போம் இன்னலது ஆவி தொலைக்கும் ஏதி – ஆரணிய:4 123/1,2
இன் துணைவன் கொண்டு இன்னல் அளக்கரிடை உய்த்தேன் – ஆரணிய:4 133/2
வென்றி கொண்டு கதித்தனை வெவ் இருள் ஆர்ந்த – ஆரணிய:4 153/2
துனை இருள் பிழம்பு காட்டி சொற்ற நும் உரை கொண்டு இன்னே – ஆரணிய:5 76/3
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
ஆயர் அளித்த தூய படம் கொண்டு அறிகில்லேம் – ஆரணிய:7 13/2
கைப்படு தீபம் கொண்டு கிணற்றில் கவிழ்வார் போல் – ஆரணிய:7 14/1
தீய கொண்டு விற்று ஊதியம் திரட்டும் நீ தெருண்டு – ஆரணிய:8 13/2
பாவி என்று உளம் கவன்றனன் முடிவு உன்னி பயம் கொண்டு
ஆவி நைந்தனன் ஆயினும் அகத்துள் அங்குரித்து – ஆரணிய:8 21/1,2
நனி திகழ் மத்தியஸ்த நர தேவ மூர்த்தம் கொண்டு
வனிதை-பால் தோன்றி தூய வரன்முறை விதியை ஓம்பி – ஆரணிய:8 45/2,3
கொண்டு அணைந்தனையோ என கூறினான் – ஆரணிய:9 6/4
மாக மா நகர் அணித்து உறும் எனா மகிழ்வு கொண்டு
ஏகினார் ஊகமோடு ஏது_இல் வேதியர் அரோ – ஆரணிய:9 33/3,4
கோது_இலா கிறிஸ்துவின் குறைவு_இல் நீதி கொண்டு
ஆதியான் திரு_சரண் அடைகுவாய்_அலை – ஆரணிய:9 59/2,3
நல் மதி ஆதலின் நயந்து உள் கொண்டு நீ – ஆரணிய:9 96/2
தீங்கு மொழி கொண்டு எழும் நல் சிந்தனை தொலைத்தான் – ஆரணிய:10 8/4
கல்வியும் செல்வமும் கவின் கொண்டு ஓங்கிய – இரட்சணிய:1 2/2
எண் தகு தேவாரம் கொண்டு இசைத்தனர் பிணிப்பார் நெஞ்சில் – இரட்சணிய:2 3/4
தா_அரும் கடும் தாக விடாய் கொண்டு தவித்து இங்கு – இரட்சணிய:3 80/2
பொன் பொலிந்த சொல் மாலை கொண்டு உனை போற்றினும் பயன் என்னை யாம் – தேவாரம்:2 7/2
கொண்டு அருள் குமரேசன் புண்ணியம் ஒன்றையே குறிக்கொண்டு எனில் – தேவாரம்:2 9/2
கொண்டு எனை மீட்டதும் குறி கொண்டு அன்பொடு – தேவாரம்:7 6/2
கொண்டு எனை மீட்டதும் குறி கொண்டு அன்பொடு – தேவாரம்:7 6/2
பொல்லார் முள்முடி சூடி கோல் கொண்டு ஓச்ச பொழி குருதி உடல் நனைப்ப போதம் யாதும் – தேவாரம்:8 9/1
கொண்டு ஒரு மகவை பலியிட துணிந்த கொற்றவன் தெய்வமே போற்றி – தேவாரம்:11 4/3
ஈசனார் உரை கொண்டு ஏகி எகிப்து நாடு அடைந்து மீண்டு – தேவாரம்:11 15/1
கொண்டு ஒரு முத்தத்தாலே குறிப்பிட கட்டுண்டு ஏகி – தேவாரம்:11 24/3
சிறை வழி பட்டோர்க்கு உள்ளம் தெளிந்த நோவாவை கொண்டு
முறை வழி போதம் ஈந்த முக்தி ஆரணனே போற்றி – தேவாரம்:11 33/3,4
மேல்


கொண்டும் (1)

கொண்டும் இரு கண் கலுழி கோத்திடு குறிப்பை – ஆரணிய:10 5/2
மேல்


கொண்டே (3)

நாயகன்-தனையும் அந்த நாரியை கொண்டே மாற்றி – ஆதி:7 5/3
பித்தரில் பிதற்றுகின்றேன் பேதை பேர்_ஆசை கொண்டே – குமார:2 104/4
பல் முறையும் நுண் துகள் பட பரிசை கொண்டே
சொல் முறை அறிந்தவன் எதிர்ந்தவை தொலைத்தான் – நிதான:2 67/3,4
மேல்


கொண்டேம் (2)

தூதரை எதிர்ந்தால் அன்ன சுப தினம் ஆக கொண்டேம்
பேதம் இன்று எம்மில் நும்மில் பிறங்கும் இ தலத்தில் உள்ள – ஆரணிய:5 51/2,3
நும்பிக்கை கொண்டேம் என்றான் நோம்பு உரு ஆய தக்கோன் – ஆரணிய:5 60/4
மேல்


கொண்மூ (5)

செஞ்செவே உலகை மூடி திசை-தோறும் செறிந்த கொண்மூ
எஞ்சுறா புனித நீதி இறைவன் வெம் சின தீ யாவும் – ஆதி:14 136/2,3
மன்னும் கரும் கொண்மூ வயிறு வகிர பிடித்த பொன் நூல் ஈது – ஆதி:14 144/1
முறை புரி நடுநாள் கொண்மூ முற்றத்தும் விளங்க காண்பீர் – குமார:2 180/4
நளியுண்ட முந்நீர் உலகத்து நலம் பெய் கொண்மூ
துளி உண்டு உணவு உண்டு பல் போக சுகாயுவும் உண்டு – குமார:2 368/1,2
கொந்து அழல் பருகி ஓங்கு கொடும் புகையாய கொண்மூ
அந்தரத்து எழுந்து மூடி அவிர் ஒளி ஆர மின்னி – நிதான:3 41/1,2
மேல்


கொணர்க (1)

புன் தலை பதிதரை கொணர்க எனா போக்கினான் – நிதான:11 3/3
மேல்


கொணர்ந்தனம் (1)

நாதன் என்று நின்-பால் கொணர்ந்தனம் என நவின்றார் – குமார:2 216/4
மேல்


கொணர்ந்து (1)

கொள்ளுக ஐய என்று உதவினர் அமைவன கொணர்ந்து – குமார:4 81/4
மேல்


கொணர்ந்தே (1)

நங்கள் அருள் நாதனை நராந்தகர் கொணர்ந்தே
சங்க மறவோர் எதிர் நிறுத்த ஒரு தானாம் – குமார:2 157/2,3
மேல்


கொணர்வம் (1)

பற்றி யாம் கொணர்வம் என்று இருவர் பன்னி போய் – ஆதி:10 5/1
மேல்


கொத்து (1)

கான் நனை விரி பூம் கொத்து காய்_கனி முதல போலும் – ஆரணிய:5 83/3
மேல்


கொத்துவான் (1)

குலங்கள் வந்து அடர்ந்து சீறி கொத்துவான் வளைந்துகொள்ள – நிதான:3 36/3
மேல்


கொதி (3)

கொதி நரகமும் அங்கு ஆக்கும் குவலயம் கூவும் கூற்றை – ஆதி:14 126/3
செறிய வாரி அடைய கொதி கொள் செம் தழலிடை – ஆதி:14 187/2
கொதி அழற்கிடை நடப்பினும் கொளுத்திடாது உன்னை – இரட்சணிய:2 46/2
மேல்


கொதிக்கின் (1)

கூவல் நீர் குளிர்ப்பிக்கும்-கொல் வாரிதி கொதிக்கின் – ஆரணிய:1 5/4
மேல்


கொதிக்குமால் (1)

கோமகன் அறிவர் என்று உளம் கொதிக்குமால் – ஆரணிய:9 55/4
மேல்


கொதிகொதிக்கும் (1)

கொண்ட மான தீ சுடச்சுட உளம் கொதிகொதிக்கும்
விண்ட வாய் வரு பழி புகை மெய் எலாம் கருக்கும் – ஆரணிய:4 38/3,4
மேல்


கொதிகொள்ளும் (1)

கோலிய பேயோ கார் இருளேயோ கொதிகொள்ளும்
ஆலம் அதேயோ பாதகமோ தீயவை எல்லாம் – ஆரணிய:7 3/1,2
மேல்


கொதித்தார் (2)

கொண்டார் துணுக்கம் கொதித்தார் கடு விடத்தை – குமார:2 319/2
குயிலுறுத்திய மாயமோ என்று உளம் கொதித்தார்
செயலினில் பிறிது இலை என சிந்தனைசெய்வார் – ஆரணிய:4 43/3,4
மேல்


கொதித்து (3)

வெம் துயர்க்கு உறையுள் ஆகி மிக கொதித்து எழும்பும் கும்பி – குமார:2 116/2
கொல்வதும் உருத்து உளம் கொதித்து பொங்கி மேல் – நிதான:2 23/1
மண்ணை விழுங்க கொதித்து எழும்பி வரும் தீ ஆற்றை கடப்பதற்கு – நிதான:9 7/1
மேல்


கொதித்தே (1)

குலையும் அண்டமும் குப்புறும் என்பர் கொதித்தே – குமார:2 278/4
மேல்


கொதிப்புடன் (1)

ஈண்டு உறும் துரோகி யார் என கொதிப்புடன்
ஆண்டகை மடி அருகு அணைந்த அன்பனை – குமார:2 27/1,2
மேல்


கொதிப்பே (1)

கொள்ளையில் பறிபோயின உள்ள கொதிப்பே
எள்ளி என்னை அடர்த்தலின் என் உயிர் மாய்ப்பான் – ஆரணிய:4 145/2,3
மேல்


கொதியுற்று (1)

கொதியுற்று எழும்பும் எரிநரக கும்பிக்கு இடவே கூளி செயும் – நிதான:9 90/2
மேல்


கொந்தளித்த (1)

மயலை தவிர்க்கும் திரு_வசனம் வளர் தீ_வினையாம் கொந்தளித்த
புயலை தவிர்க்கும் குமரேசன் மேனாள் ஈட்டும் புண்ணியம் போல் – ஆரணிய:5 94/1,2
மேல்


கொந்தளிப்பும் (1)

மண்டலம் சூழ் வாரிதியின் கொந்தளிப்பும் கடும் சூறை மாருதத்தின் – ஆதி:9 161/2
மேல்


கொந்து (6)

கொந்து அழல் மடுத்த இறை கோபம் என மூண்டு – ஆதி:13 39/2
கொந்து இருள் படலம் போர்ப்ப கொடு விலங்கு உழலும் காட்டில் – ஆதி:19 91/2
கொந்து அழல் அனைய துன்பம் குவைகுவையாக என் மேல் – நிதான:3 20/1
கொந்து அழல் பருகி ஓங்கு கொடும் புகையாய கொண்மூ – நிதான:3 41/1
கொந்து ஆர்_இருள் துற்று புழைக்கு அருகாய குன்றில் – ஆரணிய:4 99/2
கொந்து இருள் குழுமி துற்றும் கொழும் புகை படலம் கண்டார் – ஆரணிய:5 71/1
மேல்


கொப்பத்தில் (1)

அம் புவி படு கொப்பத்தில் ஆழ்ந்திலன் – ஆரணிய:6 44/4
மேல்


கொப்பத்து (2)

கோள் நிலைப்படு கொப்பத்து குப்புறீஇ – ஆரணிய:4 64/3
குத்திர படு கொப்பத்து குப்புறீஇ – ஆரணிய:4 65/1
மேல்


கொப்பம் (2)

கோவினுக்கு அரசு இருக்கை மாந்தருக்கு ஒரு கொப்பம்
ஜீவனுக்கு எலாம் கேடு மாயாபுரி சிறையே – நிதான:7 19/3,4
அ புலையன் பின் ஆழ்படு கொப்பம் அறியாமே – ஆரணிய:7 9/1
மேல்


கொம்பரால் (1)

வண்ண வான் மீன்களால் மலர்ந்த கொம்பரால்
விண் உற நிவந்து எழு வியன் பொதும்பரால் – குமார:2 87/2,3
மேல்


கொம்பரின் (1)

மீ வணக்கிய கொம்பரின் வேய் நறும் – ஆதி:19 64/1
மேல்


கொம்பில் (1)

கொம்பில் உறங்கும் கொள்கையர் ஆனீர் குணம் நாடில் – ஆதி:16 12/3
மேல்


கொம்பு (3)

கொம்பு இழந்த குரங்கு எனல் ஆயினேன் – ஆதி:12 70/4
குன்றுறாத பூம் கொம்பு_அனாள் வினவலும் குறித்த – குமார:1 44/3
கொம்பு இறால் இழிந்து ஒழுகு ஒலிவாசலம் குறுகி – குமார:2 480/3
மேல்


கொம்பு_அனாள் (1)

குன்றுறாத பூம் கொம்பு_அனாள் வினவலும் குறித்த – குமார:1 44/3
மேல்


கொம்பும் (2)

மின் ஒளி என நேரின் மிளிர்வது மிதி_கொம்பும் – ஆதி:19 16/2
உன்ன ஓர் பிடி_கொம்பும் உளது என அறிகில்லேன் – ஆதி:19 16/3
மேல்


கொமரா (1)

பண்டு இ உலகு பிரளயத்தால் பாழானதும் சோதோம் கொமரா
மண்டி எரிகந்தக தீயின் மழையால் மண்மேடு ஆகியதும் – நிதான:9 87/1,2
மேல்


கொய் (2)

முற்றவிடும் கொய் பருவத்து எறிந்து எரி-வாய் இடுதும் என மொழிந்தான் தேரில் – ஆதி:9 82/4
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
மேல்


கொய்து (1)

கொய்து குறைத்தனன் என்பது என் என்று கொடும் பேயன் – நிதான:2 77/3
மேல்


கொய்ய (1)

பிணியொடும் இ துர்க்குணி தலை கொய்ய
பணிதருக என்றான் துணிகரன் என்பான் – நிதான:11 62/1,2
மேல்


கொல் (9)

கொல் நுனை பகழி மாரி உளத்திடை குளிப்ப ஏவி – ஆதி:14 121/2
கொல் வாள் அரவம் குறுக்கு எதிர்ந்த கொள்கை போல் – ஆதி:19 3/2
கொல் நுனை அழுந்தி வெம் குருதி பீறிட – குமார:2 265/3
கொல் பயில் ஒரு மற கொடுங்கணாளனே – குமார:2 397/4
கொல் மலிதரும் குருசிலே குருதி சிந்தி – குமார:3 5/2
கொல் வளம் படுக்கும் மாய குத்திரம் குலவும் சந்தை – நிதான:7 74/4
கொல் இனத்தினும் உண்டு ஒர் குணக்கியன் – நிதான:8 32/2
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று – நிதான:11 72/3
குப்புற நாடும் கொல் சின வேழ குலமே போல் – ஆரணிய:7 9/2
மேல்


கொல்க (2)

அஞ்சிடேல் சிலுவையில் அறைந்து கொல்க என – குமார:2 247/1
அங்கம் நோவ குருசறைந்து கொல்க என – குமார:2 256/2
மேல்


கொல்கதாவில் (1)

இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில்
செல்லா நின்று அருகு இரண்டு திருடர் நாப்பண் சிலுவை மரத்து அறையுண்டு செயல் முடிந்தது – தேவாரம்:8 9/2,3
மேல்


கொல்லவும் (1)

கொல்லவும் கருதான் புரியும் கொடு வாதைக்கு – ஆரணிய:4 143/3
மேல்


கொல்லாது (3)

கொல்லாது விட்டுவிட கொற்றவன் பல் கால் முயன்றும் – குமார:2 325/1
கொல்லாது விடாத ஓர் தாகமும் கொண்டு இரந்தார் – குமார:2 372/4
கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை – நிதான:11 14/1
மேல்


கொல்லிய (2)

கொல்லிய மலைந்தும் ஒரு கோட்டம்_இலன் ஆகி – ஆதி:13 40/3
கொல்லிய வளைந்து பல குக்கல்கள் குரைத்து – குமார:2 150/2
மேல்


கொல்லும் (4)

நாடி உள் நினைப்பினும் கொல்லும் நஞ்சம் மிக்கு – நிதான:4 16/3
கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை – நிதான:11 14/1
உள்ளுற பரவி ஒல்லை உயிர் வதைத்து ஒருங்கு கொல்லும்
கள்ள வெவ் விட அராவில் கிடந்தது மரண கங்கை – இரட்சணிய:2 8/3,4
வேதனை குணிக்கற்பாற்றோ வெம் குருசு அறைந்து கொல்லும்
பாதகர்க்காய் மன்றாடி பரிந்து வாக்கு அருளி சோரற்கு – தேவாரம்:11 28/1,2
மேல்


கொல்வதும் (1)

கொல்வதும் உருத்து உளம் கொதித்து பொங்கி மேல் – நிதான:2 23/1
மேல்


கொல்வம் (1)

முழுதும் கொல்வம் என்று ஒருப்படு மனத்தராய் முடுகி – குமார:2 204/3
மேல்


கொல (1)

வெம்பி யான் உனை கொல விடுக்க ஆயினும் – குமார:2 249/2
மேல்


கொலு-வயின் (1)

கொலு-வயின் ஆசனம் குறுகி கூறினான் – குமார:2 252/3
மேல்


கொலும் (1)

கொடுத்த அ பதிதரை குறுகினான் கொலும்
கடு துறு மனத்து யூதாசு என் கள்வனே – குமார:2 36/3,4
மேல்


கொலை (19)

கொலை திறம் துர்_இச்சை நீசம் களவு பொய்க்கூற்று என்றாய – ஆதி:2 18/2
கொலை செய்யற்க என்று உரைத்த கற்பனை உண்மை குணிக்கில் – ஆதி:9 53/1
வெம் கொலை நாவினால் விளம்புவான் விரைந்து – குமார:2 256/3
கொள்ளை புரிந்து கொலை தீர்ப்பு பெற்று வரு – குமார:2 309/3
பொல்லாருக்கு அஞ்சி புகன்றான் கொலை என்பார் – குமார:2 325/2
சாட்டி கொலை புரி சண்டாளர் மன_சாக்ஷியும் தம்பாட்டில் – குமார:2 326/3
செற்றமொடு குருசு ஏற்றி கொலை மாக்கள் செயல் ஒழிய – குமார:2 341/2
நீதி_அரசன் கொலை நினைத்தும்_இலவாய் இ – நிதான:2 54/1
கொலை செய்யாதே என பரம கோமான் கொடுத்த கற்பனைக்கு – நிதான:9 14/1
கொலை தொழிற்கு உரியர் செங்கோன்மை காட்டி இங்கு – நிதான:10 39/2
கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை
கற்ற பாதகர் இவர் கோறலே கடன் எனா – நிதான:11 14/1,2
வடு_அறு நல் நிலை உரைத்த மா தவற்கு கொலை தீர்ப்பு – நிதான:11 70/2
குற்றவாளியை பிணித்து கொலை தொழிலர் களத்து உய்க்க – நிதான:11 71/1
கொலை தீர்வை கொடும் கூற்றம் குறுகி வெருட்டிடு பொழுதும் – நிதான:11 73/1
துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள் – ஆரணிய:4 120/4
மாக மா நகராதிபன் வன் கொலை செய்யாய் – ஆரணிய:4 150/1
சித்திர கொலை செயப்பட்ட தீர்க்க விஸ்வாசி – ஆரணிய:8 19/2
நிந்தனை செய்து இருப்பு ஆணி நிரை அழுத்தி கொலை புரியும் – தேவாரம்:4 8/1
இல்லா மன்னவன் கொலை தீர்ப்பு இசைந்து கூற எருசலேம் நகர் கடந்து கொல்கதாவில் – தேவாரம்:8 9/2
மேல்


கொலை_பாதக (1)

துன்றும் கொலை_பாதக வம்பி துணிந்து சொன்னாள் – ஆரணிய:4 120/4
மேல்


கொலைக்களத்தில் (1)

மைப்படு வன் மன கொலைஞர் வதை புரிவான் கொலைக்களத்தில் – குமார:2 339/4
மேல்


கொலைக்களத்து (2)

கொலைக்களத்து இருவரும் குறுகி ஒல்லையில் – குமார:2 405/1
கொல் நுனை வாள் வய வீரர் கொலைக்களத்து கொடுசென்று – நிதான:11 72/3
மேல்


கொலைக்களப்படுத்த (1)

கொலைக்களப்படுத்த வல்ல குற்றங்கள் இவன்-பால் உண்டு என்று – குமார:2 171/1
மேல்


கொலைக்களப்படுத்தி (1)

குத்திர குழு ஈண்டி வெம் கொலைக்களப்படுத்தி
சித்திர கொலை செயப்பட்ட தீர்க்க விஸ்வாசி – ஆரணிய:8 19/1,2
மேல்


கொலைக்களம் (1)

கதி புகுந்த மெய் நிதானியின் கொலைக்களம் கண்டு – ஆரணிய:2 1/1
மேல்


கொலைக்கு (1)

தந்திரத்தவர் கொலைக்கு தக்க சான்று இது அன்று என்றார் – குமார:2 172/4
மேல்


கொலைசெய்தார் (1)

உக்கிரமாய் தலைவன் ஒரு புதல்வனையும் கொலைசெய்தார் உதிரம் சிந்தி – ஆதி:9 93/4
மேல்


கொலைசெய்ய (1)

மித்திர_பேதம் விளைத்த குத்திரனை கொலைசெய்ய
எத்தனை யோசனை என்றான் சத்துருவாய சழக்கன் – நிதான:11 65/1,2
மேல்


கொலைசெய்வதும் (1)

ஈசன் மைந்தனையோ கொலைசெய்வதும் என்பார் – குமார:2 276/2
மேல்


கொலைஞர் (3)

ஒன்றி வருக என கொலைஞர் உத்தமரை கொடு போனார் – குமார:2 334/4
மைப்படு வன் மன கொலைஞர் வதை புரிவான் கொலைக்களத்தில் – குமார:2 339/4
அடும் கொலைஞர் பொருட்டு அமலன் அகம் கனிந்த அருள் திறமும் – குமார:2 348/1
மேல்


கொலைப்படு (1)

வன் கொலைப்படு வாதனை வரம்பு_அறும் எனினும் – நிதான:6 19/3
மேல்


கொலைப்படுத்துக (1)

கொலைப்படுத்துக என்று இட்ட கூக்குரல் குறித்து நோக்கில் – குமார:2 187/3
மேல்


கொலைபாதகன் (1)

பதிதரில் பதிதன் கொலைபாதகன் நட்பில் – குமார:2 289/2
மேல்


கொலையின் (1)

புண்ணியருக்கு உறும் கொலையின் புணர்ப்பு உன்னி பொருமி அழு – குமார:2 338/3
மேல்


கொலையும் (2)

வருந்த அடித்து உயிர் கொலையும் வகுத்தனர் மன்னவன் தேர்ந்து அ மறவர்-தம்மை – ஆதி:9 95/3
வள்ளலுக்கு வன் கொலையும் மா பாதகம் புரிந்த – குமார:2 324/2
மேல்


கொலையுமாம் (1)

உலைய மீப்படில் கொலையுமாம் ஆதலின் உடையார் – ஆதி:9 53/3
மேல்


கொலையோடு (1)

கொலையோடு ஒக்கும் என விதந்து கூறும் பொருளை குறிக்கொண்டு – நிதான:9 14/3
மேல்


கொழு (11)

கூர் நுதி கொழு எம் பெம்மான் திரு_மொழி கூறது ஆக – ஆதி:4 13/3
கொழு நிழல் வைகி கோமான் குணம் குறி விதந்து பேசி – ஆதி:4 15/3
கோது அகன்ற அ கொழு நறை குழீஇக்குழீஇ நுகர்ந்து – ஆதி:18 33/3
தண் நறும் தடங்களால் தடத்து உலாம் கொழு
வண்ண வான் மீன்களால் மலர்ந்த கொம்பரால் – குமார:2 87/1,2
கொழு முகை அவிழ்ந்து செம் தேன் குளிர் நறும் துளி வார் காட்சி – குமார:2 102/2
தேன் அளாவிய கொழு மலர் செழும் பயன் செருமி – குமார:4 56/2
கொய் திறம் போல மற்று ஓர் கொழு நிதி கவர நாளும் – நிதான:3 28/2
குன்றிடாது உயர் கல்வியும் கொழு நிதி குவையும் – நிதான:7 33/1
குரை கடல் புவியின் மேய கொழு நிதி குவையும் விண்மீன் – நிதான:7 72/2
குணித்து இவண் வம்-மின் கொழு நிதி குவை ஈண்டு – ஆரணிய:3 4/2
தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு – ஆரணிய:5 7/2
மேல்


கொழுகொம்பு (1)

படரும் முந்திரி கொழுகொம்பு பற்றியே – குமார:2 97/1
மேல்


கொழுத்து (1)

தின்று கொழுத்து தீ சிறை வேட்டு திரிகின்றீர் – ஆதி:16 11/3
மேல்


கொழுந்துவீசி (1)

செம் தழல் கொழுந்துவீசி ஜெகதலம் புரக்க வந்த – குமார:2 116/3
மேல்


கொழும் (18)

துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/2
மச்சை என்பு வழும்பு கொழும் தசை – ஆதி:12 71/1
குன்று காலும் வெம் சாப கொழும் கனல் – ஆதி:13 2/1
அத்தகு கொழும் கனல் அவிக்க ஆண்டு ஒரு – ஆதி:14 55/3
கொண்ட செவ்வியில் பரவு தொண்டரை பொரூஉம் கொழும் கா – ஆதி:18 9/4
குலவு கோடு ஆதி ஆய கொழும் கடி மலர்கள் பூத்த – குமார:2 440/2
கார் உதித்தது என எதிர்ந்து கைகலப்ப கொழும் குருதி – குமார:4 20/2
குலவு முள் புற கொழும் கனி சுளை உண்டு குதட்டி – குமார:4 65/3
குப்பை கீரை கொழும் கவடு ஓச்சினும் – நிதான:5 81/1
மண்டு வன் மிடி கொழும் கனல் பிழம்பினை மறுகி – ஆரணிய:4 39/4
சினை-தொறும் திகழுவ கொழும் கனி திரள்கள் – ஆரணிய:5 14/3
கோட்டு_மா கிளை தூங்கும் கொழும் பொழில் – ஆரணிய:5 20/1
கோட்டு மா கிளை தூங்கும் கொழும் கனி – ஆரணிய:5 20/2
கொந்து இருள் குழுமி துற்றும் கொழும் புகை படலம் கண்டார் – ஆரணிய:5 71/1
எழு கொழும் தழலில் வீழ்ந்தும் இறுதி காண்கிலராய் ஏங்கி – ஆரணிய:5 72/1
நனி திகழ்ந்த முந்திரிகையின் நறும் கொழும் குலைகள் – இரட்சணிய:1 18/3
கோது_இலா நீதி கொழும் கதிர் பிழம்பே குணிப்பு_அரும் கருணை வாரிதியே – தேவாரம்:6 1/3
கோது_அறு புனித ஆவி கொழும் கதிர் பிழம்பை நல்கி – தேவாரம்:11 31/2
மேல்


கொள் (74)

வீறு கொள் மதுர செந்தேன் விளைக்கும் முந்திரிகை வாய்ந்த – ஆதி:4 18/1
அறா விழா அணி கொள் முன்றில்-வாய் – ஆதி:4 63/3
நல் தச_விதி கைக்கொண்டு இங்கு ஈட்டுவல் நலம் கொள் நீதி – ஆதி:7 9/4
காண்டி கால் மிதிப்பாய்_அலை கவின் கொள் கானானை – ஆதி:8 35/1
நன்றி கொள் முது தீர்க்கரும் நலத்தகு வாழ்நாள் – ஆதி:9 1/2
இடம்-தொறும் இடம்-தொறும் ஏர் கொள் மாளிகை – ஆதி:9 38/1
அங்கு அவன் அணி கொள் மாடத்து அலர் கடை துச்சில் ஆக – ஆதி:9 124/1
பற்றுக என்று தன் கரம் கொடு பற்றி ஈர்த்து உரம் கொள்
நல் தரைக்-கணே நிறுவி மற்று அவற்கு இவை நவில்வான் – ஆதி:11 32/3,4
மேல் நிமிர்த்தவொட்டாது அமிழ்த்துவது இதை விறல் கொள்
ஆனி துற்றிய அழிம்பனாம் அலகை முன் அகழ்ந்தான் – ஆதி:11 44/2,3
நருள் உண்டு அரியேறு விடம் கொள் பல் நாகம் உண்டு – ஆதி:12 7/3
துன்றிய கொழும் கனல் சுவாலை மீ கொள் வெம் – ஆதி:12 64/2
சேரும் மா கொடிய தீ_வினை திரள் சுமந்து இளைத்து அளி கொள் ஜீவ நல் – ஆதி:13 16/1
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/2
மயல்_அற தெருண்டு ஜீவ மார்க்கம் நீ வழி கொள் என்னா – ஆதி:14 129/2
கரு மா மேக காத்திரத்த கவின் கொள் யானை குழூஉ கலங்கி – ஆதி:14 146/3
செறிய வாரி அடைய கொதி கொள் செம் தழலிடை – ஆதி:14 187/2
நோக்கினார் இடையறாது எனை அ நோக்கு அயில் கொள் வேல் – ஆதி:14 192/2
கந்தையை களைந்து ஒரு கவின் கொள் வெள் உடை – ஆதி:15 23/2
அருத்தியில் குடி அமைத்த ஏதேன் எனும் அணி கொள்
மரு தழைத்த கா வனம் இதை மானும் என்று உரைக்கில் – ஆதி:18 27/2,3
அயல் புறம் விலகி ஏகின் ஆவது அன்று அதோமுகம் கொள்
மயல் படு குழியுள் வீழ்ந்து மடிவது திண்ணம் என்னே – ஆதி:19 104/2,3
வெற்று ஒலி இது என்று எள்ளி நடந்தனன் விறல் கொள் வீரன் – ஆதி:19 115/4
அடங்கின பல்லியத்து அணி கொள் பேர்_இசை – குமார:1 10/2
உத்தரம் கிடைக்குமோ உலம் கொள் தோளினாய் – குமார:1 14/3
நன்றி கொள் மடவரல் நம்பி எங்கு உளை – குமார:1 21/2
உலம் கொள் தோளினாய் உன் உளத்து உள்ளது உன் உரையாம் – குமார:1 50/1
நலம் கொள் மார்க்கத்து மற்று எதை எதிர்ந்தனை நம்பி – குமார:1 50/3
கண் இணை களிப்புறும் கடி கொள் காவனம் – குமார:2 87/4
அயில் கொள் வேல் என உளத்திடை குளித்தது எம் ஐயன் – குமார:2 200/1
வன் தொடர் படு சிறை மறம் கொள் வேலினாய் – குமார:2 244/4
வைதனர் பழித்தனர் மறம் கொள் நீசரே – குமார:2 267/4
பணம் விடம் கொள் பணாமுடி என்பதும் மற்று அ – குமார:2 285/1
பழுது_அறு மெய் பரம்பொருளை மகவா கொள் பசும்_தோகை – குமார:2 337/3
நல் முறை வளர்த்தினார் நலம் கொள் மொய்ம்பினார் – குமார:2 408/4
கையடை என புனை கவின் கொள் பதிகத்தை – குமார:3 12/1
கடி கொள் நந்தனவனத்து எழில் கவினுவ காணாய் – குமார:4 66/4
அண்ணலார் கருணை ஆற்று அணி கொள் தீரத்து – நிதான:1 6/1
உருக்கு இயல் உலம் பொரூஉம் உரம் கொள் தோளினன் – நிதான:2 6/1
வன் திறல் கொள் வெம் கத மடங்கல் என ஆர்த்தான் – நிதான:2 56/4
முற்றும் அவை இற்று உக முரண் கொள் விசுவாச – நிதான:2 64/3
வென்றி கொள் மானத வெம் சிலை வாகை மிலைந்து ஏற்றி – நிதான:2 71/3
சமைய முகம் கொள் அத்திரம் வாங்கி தனு நாணிட்டு – நிதான:2 79/2
மதம் கொள் துன் முகம் தனித்தனி மாறுகொண்டு அடர்த்து – நிதான:2 81/1
கதம் கொள் சீற்றம் மிக்கு இகலுவ தத்தமில் கறுவி – நிதான:2 81/2
விதம் கொள் மாந்தரை சிற்றின்ப படுகரில் விழுத்தி – நிதான:2 81/3
நாத்திக படை தொடுத்தனன் நராந்தகன் நலம் கொள்
ஆத்திக படை தொடுத்து உடன் அழித்தனன் அறவோன் – நிதான:2 96/1,2
உண்டு இளைப்பாறி ஒல்லை ஒளி கொள் பட்டயத்தை ஏந்தி – நிதான:3 2/1
வெருண்ட போது உரம் தந்து உய்க்கும் விறல் கொள் கேடகத்தை பற்றி – நிதான:3 45/3
உத்தம பத்தி பின்னின்று உந்திட ஒளி கொள் வேத – நிதான:3 47/3
எம்மவர் குழாம் கொள் அதலத்தின் இனிதின் உய்க்கும் – நிதான:4 58/3
நான் மதித்து உரை நவிற்றிடின் நலம் கொள் நடுநாள் – நிதான:4 85/2
மாண்ட போதனர் வாய்மை மன கொள் நீ – நிதான:5 63/4
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/3
அவம் தரு திருவின் ஆய ஆவணத்து அணி கொள் வீதி – நிதான:7 70/1
கலை பொருள் புகழ் பலம் கவின் கொள் காத்திரம் – நிதான:10 16/1
உண்மையை தெரிவரோ உலம் கொள் தோளினாய் – நிதான:10 30/4
உறை உற புகுந்திடும் ஒளி கொள் வாள் என – நிதான:10 50/1
வளம் கொள் முத்தியும் திரு_அருள் பயத்தினால் வாய்க்கும் – ஆரணிய:2 35/2
கோது_இலா வளம் கொள் சோதோம் குடிகள் நன்று எள்ளி செய்த – ஆரணிய:3 23/2
வெற்றி கொள் விசுவாச பரிசை கை – ஆரணிய:6 56/1
புரை_அற விளக்கும் இந்த புத்தகம் கொள் நீ என்று ஈந்து – ஆரணிய:8 53/3
செஞ்செவே பற்றி நிற்றி திடம் கொள் என்று அமுத செவ் வாய் – ஆரணிய:8 74/3
முகந்து கொள் பொருள்_ஆசையர் முழு குடி_வெறியர் – ஆரணிய:10 28/2
நனி தவ ஒழுக்கத்தின் நலம் கொள் மொய்ம்பது – இரட்சணிய:1 6/4
கண்ணிய பயிர் வளம் கவின் கொள் காட்சியின் – இரட்சணிய:1 7/3
அத்தகு சேத்திரத்து அணி கொள் மாட்சியை – இரட்சணிய:1 10/1
ஆவலில் புனைந்து ஏத்து இசையாம் என அணி கொள்
காவகத்து எழு புள் ஒலி காட்டுவ காணாய் – இரட்சணிய:1 29/3,4
அவ்வயின் ஒளி கொள் தூதர் ஆரணர்-தம்மை நோக்கி – இரட்சணிய:2 19/1
புண்ணிய திரளே என்ன திகழ்வது அ பொலன் கொள் வெற்பு – இரட்சணிய:3 3/4
ஆயிடை திரு_நகர் அணி கொள் சேனையின் – இரட்சணிய:3 55/1
பல் நெறி கொள் பரசமய படுகுழி வீழ்ந்து அழிவேற்கு – தேவாரம்:4 6/2
பாய் ஒளி கொள் பசும்பொன்னை பணிக்க_அரும் சிந்தாமணியை – தேவாரம்:4 10/2
தூய் ஒளி கொள் நித்திலத்தை தூண்டாத சுடர் விளக்கை – தேவாரம்:4 10/3
சேய் ஒளி கொள் செம் மணியை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 10/4
நன்றி கொள் மாந்தர் போல நடித்திடும் நடலை_உள்ளேன் – தேவாரம்:9 5/2
மேல்


கொள்-மின் (5)

கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின் – ஆதி:9 110/4
திறம் குலாம் அநுமானத்தின் திரவியம் கொள்-மின் போர்த்த – ஆதி:17 33/2
காசு கொள்-மின் எனா அவர் கொள்ளலர் காசை – குமார:2 297/3
கோன் புகன்ற மெய் வாக்கு இது நெஞ்சகம் கொள்-மின் – நிதான:6 13/4
ஈங்கு அணைந்து உமக்கு வேண்டும் இருநிதி திரள் கை கொள்-மின்
தாங்கு பேர்_இன்ப லோகம் சார்தற்கு தகவு ஈது அன்றோ – ஆரணிய:3 5/2,3
மேல்


கொள்க (4)

நொய்ய நிதி புதைத்து வைத்தேன் மற்று இதனை கொள்க என்று நுவன்றான் ஆக – ஆதி:9 101/4
குன்றிடாது உன் உளத்து இது கொள்க எனா – ஆதி:12 84/4
நன்றி கொள் மாதிரி நயந்து கொள்க எனா – ஆதி:14 23/2
கண்டு கொள்க என உள் புக காட்டுவான் – ஆரணிய:9 6/2
மேல்


கொள்கிலர் (1)

ஒப்பி நடை கொள்கிலர் கண்ணீர் நனி உகுக்கும் – ஆரணிய:10 6/3
மேல்


கொள்கிலான் (1)

கொள்ளுதிர் என்றனன் குணத்தை கொள்கிலான் – ஆரணிய:9 97/4
மேல்


கொள்கிலேம் (1)

கொடு சினத்து அலகை கூட்டுறவை கொள்கிலேம் – நிதான:10 26/4
மேல்


கொள்கை (11)

கும்பி பாகத்தில் குடிபுகுத்துவது அவன் கொள்கை – ஆதி:11 41/4
கோன் உடம்படிக்கையை குலைத்த கொள்கை சால் – ஆதி:14 28/3
கூன் முதுகு இரவணம் உவர்க்கும் கொள்கை போல் – ஆதி:14 49/2
கொல் வாள் அரவம் குறுக்கு எதிர்ந்த கொள்கை போல் – ஆதி:19 3/2
கொன்று தீர்த்தனன் இது அன்றோ குவலய கொள்கை – குமார:1 94/4
சத்தும் இலை என்பது எமர் சாசுவத கொள்கை – நிதான:4 67/4
மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை
அழிந்திட சிதைத்த உன்றன் ஆண்மையே ஆண்மை ஆமால் – நிதான:4 93/3,4
கோவணி பைத்தியன் என்னும் கொள்கை போல் – நிதான:10 41/2
வெம்பு இரும் பகை சூழினும் தம் கொள்கை விடுக்கார் – ஆரணிய:2 43/2
கோது என்று எள்ளுதல் வைதிகர் பயித்திய கொள்கை
தீது_இலா பத்தி வேடமே பெரும் பொருள் சேர்க்கும் – ஆரணிய:2 51/2,3
குரவன் நீ எனக்கு என்றும் இது என் மன கொள்கை – ஆரணிய:4 148/4
மேல்


கொள்கைத்த (1)

கொண்டல் அம் குழவி வந்து உறங்கும் கொள்கைத்த – குமார:2 93/4
மேல்


கொள்கைத்தாய (1)

கோன் நகர் புக வரும் கொள்கைத்தாய எ – ஆதி:19 29/1
மேல்


கொள்கைத்தால் (1)

கூவல் இறைத்து வீண் விழல் உய்க்கும் கொள்கைத்தால் – ஆதி:16 24/4
மேல்


கொள்கைத்து (1)

கோர வெம் பகு வாய் ஆர விழுங்கிடும் கொள்கைத்து அம்மா – ஆதி:19 103/2
மேல்


கொள்கையர் (1)

கொம்பில் உறங்கும் கொள்கையர் ஆனீர் குணம் நாடில் – ஆதி:16 12/3
மேல்


கொள்கையும் (4)

குத்திரன் விரைந்து நீர் சொரியும் கொள்கையும் – ஆதி:14 55/4
தெருள்படும் சில கொள்கையும் சிதைந்து ஒழிந்திடல் போல் – குமார:2 210/3
கொண்ட கொள்கையும் மத அகங்காரமும் குலைந்து – நிதான:2 95/2
ஜாதியும் சமயாசார கொள்கையும் தழுவி நின்ற – நிதான:11 49/3
மேல்


கொள்கையோ (1)

கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ
மற்று நும் கருத்து எது வழுத்துவீர் என்றான் – ஆதி:10 5/3,4
மேல்


கொள்கையோர் (1)

கூறிக்கூறி மருட்டிய கொள்கையோர்
ஈறு_இல் துன்பத்துக்கு எங்கு அகல்வேம் எனா – ஆதி:14 178/2,3
மேல்


கொள்வது (1)

நஞ்சு அமுதாக கொள்வது நாசம் நமரங்காள் – ஆதி:16 7/4
மேல்


கொள்வதும் (1)

சாக்ஷிக்கு ஆம் மன_சான்றினை கொள்வதும்
மூச்சுக்கு ஆயிரம் பொய்_மொழி முந்தும் வெள்_வீச்சுக்காரர் – நிதான:5 82/2,3
மேல்


கொள்வர் (1)

சந்தனாடவி பொதும்பரில் தடம் துயில் கொள்வர்
விந்தையாய் பல காட்சியை வியந்து உளம் களிப்பர் – இரட்சணிய:1 41/2,3
மேல்


கொள்வரால் (1)

குரவர் நல்கும் நெறி வரைந்த குறி அறிந்து கொள்வரால் – ஆரணிய:5 99/4
மேல்


கொள்வல் (1)

கதி வழிப்படை கொள்வல் கருத்தொடே – நிதான:5 58/4
மேல்


கொள்வன் (1)

அ தகு நல் நிலம் கொள்வன் அரு விலை நித்திலம் கண்டோன் அவ்வாறாக – ஆதி:9 86/2
மேல்


கொள்வாம் (1)

தரு திரியேகத்து ஒரு நல் ஆவி திரு_அடி கமலம் தலை மேல் கொள்வாம் – பாயிரம்:1 7/4
மேல்


கொள்வாய் (1)

குலவு நெறி விட்டு இழி_குலீனர் நெறி கொள்வாய்
உலகர் உளது என்பது இலை என்னில் உலகுக்கு ஓர் – நிதான:4 59/2,3
மேல்


கொள்வார் (3)

ஆதலின் கொள்வார் இல்லர் கொடுப்பவர் ஆரும் இல்லர் – ஆதி:6 13/2
துற்று உடலின் இச்சை வழியில் துணிவு கொள்வார் – ஆரணிய:9 106/4
துன்னு மா தவ குழுவொடு தோழமை கொள்வார்
பன்னு வேதியரோடு சம்பாஷணை பயில்வார் – இரட்சணிய:1 42/1,2
மேல்


கொள்வான் (1)

ஈசன் நடை ஏறு நடை என்று நடை கொள்வான் – நிதான:11 23/4
மேல்


கொள்வீர் (1)

சிந்தனை இன்றி கண்படை கொள்வீர் தெறு காலன் – ஆதி:16 8/1
மேல்


கொள்வேம் (1)

தூய சத்தியமே துருவி கொள்வேம்
ஆயும் நல் நிதிக்கே விலை ஆக்குவேம் – நிதான:8 38/2,3
மேல்


கொள்ள (9)

கொள்ள கரி முகம் குப்புற கொடும் தீ_வினை குலைய – ஆதி:9 18/3
துள்ளி கொள்ள துடித்து இவை வேதியன் – ஆதி:12 78/2
என்பு நெக்கு உளம் மாழ்கி இரு விழி புனல் கொள்ள
பொன் புரை சரண் நீழல் புக்கனன் புகலுற்றான் – ஆதி:15 8/3,4
கொள்ள_அரும் துயில்கொண்டவர்க்கு அறிவினை கொளுத்த – குமார:1 53/1
கொள்ளுவல் புறத்து மதி கொள்ள மனம் உள்ளேன் – நிதான:2 44/3
ஓவு_இல் கூட்டுறவு கொள்ள உளம் ஒல்குவன் எனில் – நிதான:4 86/3
விருக்கம் கொள்ள விழைந்தது என்னோ என்றார் – நிதான:8 36/4
பாதலம் ஒன்றே கொள்ள இருந்தேன் படு பாவி – ஆரணிய:4 135/4
குணி மற்று எங்ஙனம் கொடுப்பது அ அணி பிறர் கொள்ள – ஆரணிய:6 10/4
மேல்


கொள்ள_அரும் (1)

கொள்ள_அரும் துயில்கொண்டவர்க்கு அறிவினை கொளுத்த – குமார:1 53/1
மேல்


கொள்ளல் (1)

நீசரொடு தாழ் படுகர் நேர்ந்து நடை கொள்ளல்
மோசம் அறியாத முழு மூட மதி அன்றி – நிதான:4 68/2,3
மேல்


கொள்ளலர் (2)

குறுமைத்து என்பதும் கொள்ளலர் குவலய வாழ்வின் – குமார:1 86/3
காசு கொள்-மின் எனா அவர் கொள்ளலர் காசை – குமார:2 297/3
மேல்


கொள்ளலை (1)

சொன்ன நல்_மதி கொள்ளலை தூய நல் ஆவி – ஆரணிய:1 17/2
மேல்


கொள்ளா (3)

ஆத்தும கவலை கொள்ளா அறிவிலி அகோர பாவ – ஆதி:14 132/1
சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும் – ஆதி:16 21/2
புலப்படும் ஆறு கொள்ளா பொறி_இலி அகத்து பொங்கி – நிதான:5 97/1
மேல்


கொள்ளாது (3)

ஆரண பயன் உள் கொள்ளாது அருள் மொழி அலப்பி கூறி – நிதான:5 88/2
மீதலமும் கொள்ளாது விடுக்கும் விசுவாச – ஆரணிய:4 135/2
வான கண் கொள்ளாது ஓங்கு வளர் ஒளி திரளை தீர்ந்த – ஆரணிய:5 85/1
மேல்


கொள்ளாய் (3)

குணம் விளக்குவது ஆள்கொலி என்பதும் கொள்ளாய்
மணம் விழைந்து இறும் வண்டு எனல் ஆயினை மாளா – குமார:2 285/2,3
அளவில் உன்னை அதட்டினன் ஆவது கொள்ளாய்
உளவறிந்து உனக்கு உற்றுழி உண்மை உரைக்கும் – குமார:2 286/2,3
ஏதிலான் என எள்ளினை என் மதி கொள்ளாய்
நீதியுற்ற நெறி பிடித்தாய்_அலை நீச – ஆரணிய:1 11/2,3
மேல்


கொள்ளார் (3)

மேவலர் சொற்ற மெய் உரை கொள்ளார் விழி துஞ்சி – ஆதி:16 24/2
நடு மதி படைத்தவர் உன் நச்சு மதி கொள்ளார்
அடு மதி படைத்து இழி அழிம்ப அழிவு எய்தும் – நிதான:2 43/2,3
அங்கிலோ தேசத்து உள்ள அரும் புருஷார்த்தம் கொள்ளார்
பொங்கு டாம்பீகம் வன்கண் பொருள் ஈட்டு தந்திரங்கள் – நிதான:7 75/1,2
மேல்


கொள்ளான் (1)

நாச நடை என்று அதின் நடக்கு நடை கொள்ளான்
ஜேசு நடை நாடு நடை செவ்வி நடை ஒன்றே – நிதான:11 23/2,3
மேல்


கொள்ளி (4)

கொள்ளி திகழ துருவி வந்தனிர் குறிப்பு என் – குமார:2 146/2
பாதகர் குழுமி சொற்ற பழிப்புரை என்னும் கொள்ளி
ஏதம்_இல் கருணை பெம்மான் இருதயத்து ஊன்றவூன்ற – குமார:2 189/1,2
கொள்ளி ஆர் அழல் சுடு கணை யாக்கையில் குளிப்ப – நிதான:2 99/1
கொள்ளி ஆர் அழல் பரந்தன கொடும் சுரம் குறுகில் – ஆரணிய:4 36/1
மேல்


கொள்ளில் (1)

கையரை கடிந்து கூறி தெருட்டுதல் கடனா கொள்ளில்
துய்யராய் திகழ்வர் அன்றேல் சுடு நெருப்பு இவர் நட்பு என்னா – நிதான:5 98/2,3
மேல்


கொள்ளினும் (2)

கொள்ளுமால் உலகம் பகை கொள்ளினும்
வள்ளலார் அருள் வாய்க்கும் மலங்கலீர் – குமார:2 15/3,4
கொள்ளினும் வண் பயன் குன்றிடாதது – குமார:2 92/4
மேல்


கொள்ளு (1)

கொள்ளு நீ உரைத்தவை என்ன கூறலும் – குமார:2 32/4
மேல்


கொள்ளுக (1)

கொள்ளுக ஐய என்று உதவினர் அமைவன கொணர்ந்து – குமார:4 81/4
மேல்


கொள்ளுதல் (1)

ஈடு காட்டி இழி சுகம் கொள்ளுதல்
நீடு பேர்_இன்ப நித்திய வாழ்வு ஒரீஇ – ஆரணிய:6 40/2,3
மேல்


கொள்ளுதிர் (2)

எத்தனையாக வீண் எண்ணம் கொள்ளுதிர்
எத்தனை நுணுக்கமாய் எடுத்தியம்புதிர் – ஆரணிய:9 87/1,2
கொள்ளுதிர் என்றனன் குணத்தை கொள்கிலான் – ஆரணிய:9 97/4
மேல்


கொள்ளும் (11)

கண் அகல் திரு_நாடு எங்கும் கடி விழா கொள்ளும் அன்றே – ஆதி:4 19/4
கதி திருக்காப்பு கொள்ளும் காம பேய் கதுவும் காலை – ஆதி:14 126/4
சொற்றவை கொள்ளா துணிகரமும் கண் துயில் கொள்ளும்
பெற்றிமையும் கண்டு உன்னத இன்பம் பெற நாடும் – ஆதி:16 21/2,3
கொன்னே போக்கி நித்திரை கொள்ளும் குணம் அம்மா – ஆதி:16 22/4
குரிசிலை குருசேற்றி உயிர் பழி கொள்ளும்
பரிசும் ஓடி பரந்தது பற்று செம் தீயில் – குமார:2 274/2,3
கொள்ளும் நாள் முத்தி வேட்டு குரைப்பது என் பயன் கொண்டு என்னா – நிதான:3 31/2
உவந்து உலகு அருந்த ஊட்டி உயிர்ப்பலி கொள்ளும் அன்றே – நிதான:7 70/4
குலவு வேடம் என்று இவற்றினால் பொருள் கொள்ளை கொள்ளும்
வலவர் தன்னயன் வரவு கண்டு அவனொடு மகிழ்ந்து – ஆரணிய:2 39/2,3
கொள்ளும் வீண் பத்தியாய் குலவிற்றாம் அரோ – ஆரணிய:9 66/4
கொள்ளும் நீரரே நிலை பிசகா நிற்கும் குணத்தர் – ஆரணிய:10 23/4
கொள்ளும் நல் மருந்தை எல்லாம் கூட்டுண்டு குணம் கொடாமே – இரட்சணிய:2 8/2
மேல்


கொள்ளுமால் (1)

கொள்ளுமால் உலகம் பகை கொள்ளினும் – குமார:2 15/3
மேல்


கொள்ளுமோ (1)

கோன் முறைக்கு இது அணுத்துணை கொள்ளுமோ – ஆதி:19 73/4
மேல்


கொள்ளுவல் (1)

கொள்ளுவல் புறத்து மதி கொள்ள மனம் உள்ளேன் – நிதான:2 44/3
மேல்


கொள்ளுவன் (1)

கொச்சை வன் சிறைப்படுத்து உயிரை கொள்ளுவன்
நிச்சயம் என ஒரு நினைவு தோன்றலால் – நிதான:4 35/2,3
மேல்


கொள்ளுவார் (1)

குலவும் இ சீவ நீர் கொள்ளுவார் எனின் – ஆரணிய:4 15/3
மேல்


கொள்ளுவிர் (1)

சிந்தை ஆனந்தம் கொள்ளுவிர் சேர்ந்து இனி – இரட்சணிய:3 38/4
மேல்


கொள்ளுவை (1)

கொள்ளுவை நல்கு புன்_கூலி கொண்டு எவன் – நிதான:2 24/2
மேல்


கொள்ளேன் (1)

அறிவிலி ஆதலாலே ஆத்தும கவலை கொள்ளேன்
செறி உடல் போகம் நச்சி திரண்ட பேர்_ஆசை என்னும் – தேவாரம்:9 8/2,3
மேல்


கொள்ளை (8)

கூற்று வைகலும் கோடியா ஜீவரை கொள்ளை
ஆற்றி நுங்குவது அறிந்தும் மெய் ஆக்கத்தை கருதார் – ஆதி:9 156/1,2
கொள்ளை மானிடம் எங்கும் குழீஇ இரைத்து – ஆதி:14 166/2
கொள்ளை புரிந்து கொலை தீர்ப்பு பெற்று வரு – குமார:2 309/3
கொண்டு கட்டி விற்று ஊதிய கொள்ளை கொள் வணிகர் – நிதான:7 38/3
கூக்குரல் விளைத்தனர் கொள்ளை மாக்களே – நிதான:10 4/4
குலவு வேடம் என்று இவற்றினால் பொருள் கொள்ளை கொள்ளும் – ஆரணிய:2 39/2
குரை கடல் புவி கூட்டுண்ண குவித்த பேர்_இன்ப கொள்ளை
வரை நிலை தெருண்டு துய்க்கும் மா தவர் உணர்வார் அன்றி – ஆரணிய:5 32/2,3
கொள்ளை வண்டு இமிர் இன் ஓசை கோகில துவனி பூவை – ஆரணிய:5 37/1
மேல்


கொள்ளைகொள் (2)

குருடர் மற்றோர் உரிமையை கொள்ளைகொள்
முருடர் கோபிகள் மூர்க்கர் குதர்க்கராம் – ஆதி:13 6/2,3
கொடு விடம் பொதிந்து ஆர்_உயிர் கொள்ளைகொள்
நெடிய பாந்தள் அம் நீள் கடை வீதியே – நிதான:7 82/3,4
மேல்


கொள்ளைகொள்ளும் (1)

கொள்ளைகொள்ளும் குணம் உடைத்து என்று கண் – இரட்சணிய:1 61/3
மேல்


கொள்ளைபோம் (1)

கோடிகோடி உல்லாசத்தில் கொள்ளைபோம்
தேடி வைகலும் சேமித்த தீ நிதி – நிதான:7 87/3,4
மேல்


கொள்ளையாடு (1)

கொள்ளையாடு கோணாய் திரள் குல பகை இன்றி – குமார:4 58/2
மேல்


கொள்ளையாடும் (1)

கொள்ளையாடும் குறி உடைத்து ஆதலின் – ஆரணிய:6 55/3
மேல்


கொள்ளையிட (1)

கொள்ளையிட துணிந்தான் நித்திய_வாழ்வை குறிக்கோடி – குமார:2 351/4
மேல்


கொள்ளையில் (1)

கொள்ளையில் பறிபோயின உள்ள கொதிப்பே – ஆரணிய:4 145/2
மேல்


கொள்ளையே (1)

கோடிகோடி குவை நிதி கொள்ளையே – நிதான:7 86/4
மேல்


கொள (13)

இரு விழி புனல் கொள இரங்கி எந்தையார் – ஆதி:9 31/2
வஞ்சம்_இலனாம் என மன கொள மதித்தே – ஆதி:13 20/3
மன் உரிமை யாவையும் மன கொள வரைந்து ஆண்டு – ஆதி:13 37/2
புலம் கொள தெரித்து உரை என ஆரியன் புகல்வான் – குமார:1 50/4
விருந்தினன் உளம் கொள விரித்திடுவதானார் – குமார:4 5/4
முற்றும் காக்கும் என்று ஒருப்படீஇ வழி கொள முயன்றான் – குமார:4 79/4
வெரு கொள தடித்து எழு மெய்யன் வெவ்விய – நிதான:2 6/3
வித்தினும் கொள கிட்டாது விடம் அன்றி தருமோ நாகம் – நிதான:7 69/4
உளம் கொள தெருட்டி உய்த்த உண்மையும் தவறி நேர்ந்த – ஆரணிய:5 59/2
மாயம் இன்றி என் மன கொள கிடந்த விஸ்வாசம் – ஆரணிய:6 22/4
மாயம்_இல் உண்மை என்று என் மன கொள கிடந்த மாண்பால் – ஆரணிய:8 68/4
முக விழி கொள பொறாத முதிர் ஒளி பிழம்பினூடு என் – ஆரணிய:8 73/3
ஒரு மனத்து இருவர் நின்று ஒல்லை கூவிளி கொள – ஆரணிய:9 35/4
மேல்


கொளப்பட்டவர் (1)

தெரிந்து கொளப்பட்டவர் மற்று அவர் உலகில் சிலர் ஆவர் தெரியும் காலை – ஆதி:9 97/4
மேல்


கொளவும் (1)

மன்னு ஜீவ வசனத்தினொடு மாறு கொளவும்
என் உளே நனி இனைந்து இனைய எண்ணினன் அரோ – நிதான:4 76/3,4
மேல்


கொளா (2)

மன்றல் வாசகம் கண்டு மன கொளா – ஆதி:13 7/4
உளம் கொளா பத்தி வேடத்தால் உறு நரகு என்றே – ஆரணிய:2 35/3
மேல்


கொளின் (1)

சேம வைப்பா கொளின் செல்வர் நின்னில் யார் – நிதான:4 17/4
மேல்


கொளீஇ (4)

வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/4
வெரு கொளீஇ கலக்கமுற்று வேதியன் கவலலுற்றான் – ஆதி:19 90/4
உளம் கொளீஇ சிலர் உழை உரம் கொண்டு நின்று ஓங்கி – ஆரணிய:6 26/2
மருள்படு துயில் கொளீஇ மறந்து இ கங்குல்-வாய் – தேவாரம்:7 2/2
மேல்


கொளு (1)

குறுமையுற்று அயரும் காலை கொளு நிதி குவை தொக்கார் போல் – ஆரணிய:4 173/2
மேல்


கொளுத்த (4)

கோர வெம் கனல் தழைத்து எதிர் கொளுத்த அதனால் – ஆதி:14 185/1
கொள்ள_அரும் துயில்கொண்டவர்க்கு அறிவினை கொளுத்த
எள்ளி மூவரும் துயின்றனர் எழுந்திலர் ஒருசார் – குமார:1 53/1,2
பேச_அரிய பெரும் துன்ப பிரளய வெம் கனல் கொளுத்த பேதுற்று அந்தோ – குமார:2 130/1
கொன் புலையர் பைப்பய வளர்த்து எரி கொளுத்த
என்பு கருகி தனு எரிந்துபடு போழ்தும் – குமார:4 13/1,2
மேல்


கொளுத்தி (2)

குரவ மெய்யறிவினை கொளுத்தி ஏகு என – ஆதி:12 38/2
அனந்தர் நீக்கி மெய் அறிவினை கொளுத்தி ஆண்டகை-பால் – குமார:2 495/1
மேல்


கொளுத்திடவும் (1)

நிந்தனையாம் செம் நெருப்பு நெஞ்சை கொளுத்திடவும்
நொந்து ஒரு சொல் சொல்லாத நோன்மை நுனித்து உணரின் – குமார:2 327/1,2
மேல்


கொளுத்திடாது (1)

கொதி அழற்கிடை நடப்பினும் கொளுத்திடாது உன்னை – இரட்சணிய:2 46/2
மேல்


கொளுத்தினாலும் (1)

பந்தமே கொளுத்தினாலும் பயன் உண்டோ குருடர்க்கு அம்மா – ஆதி:2 39/4
மேல்


கொளுத்தும் (3)

கொண்ட நல் தவத்தை ஞான சீலத்தை கொளுத்தும் காம – ஆதி:14 125/3
செம் தழல் போல கொளுத்தும் சிந்தனையை ஜீவியத்தை – ஆதி:19 11/1
ஆவது ஈது என்று அறிவு கொளுத்தும் நம் – நிதான:8 5/2
மேல்


கொளும் (9)

ஞாலம் மீ திகழ்த்திய நலம் கொளும் ஜெய – ஆதி:4 59/3
சிந்தனை கலங்கிலர் திடம் கொளும் முச்சித்தர் – ஆதி:13 39/4
உய கொளும் நெறி வருவோரை ஒண் மதி – நிதான:2 10/1
வதம் கொளும் பழம் கதை எடுத்து உயிர் கொளும் வலத்த – நிதான:2 81/4
வதம் கொளும் பழம் கதை எடுத்து உயிர் கொளும் வலத்த – நிதான:2 81/4
நன்று உளம் கொளும் சொல் மதி புகட்டினன் நவை தீர் – நிதான:6 25/3
கோடிகோடி குல பெருமை கொளும்
கோடிகோடி வெம் நோயில் குறைந்திடும் – நிதான:7 87/1,2
சதி புரி ஆழம் உண்டு தரி கொளும் திடரும் உண்டு எம் – இரட்சணிய:2 21/2
செம் தனி கோல் கொளும் தேவை சிலுவை மிசை கண்டேனே – தேவாரம்:4 8/4
மேல்


கொளுவி (10)

கோலி எங்கணும் தண் நிழல் கொளுவி விண் குலவி – ஆதி:8 7/2
பருந்தினுக்கு விருந்தூட்டி எரி கொளுவி ஊரையும் பாழ்படுத்தான் சீறி – ஆதி:9 95/4
குணித்து வல் விரைந்து ஒரு கையில் கேடகம் கொளுவி
பணித்த மந்திர பட்டயம் ஒரு கையில் பற்றி – நிதான:2 102/2,3
கொண்ட பெண்டிரால் ஊதியம் கொண்டு உயிர் கொளுவி
உண்டு தேக்கெறிந்து உழலுவார் பாழ் வயிறு ஓம்பி – நிதான:7 53/1,2
கூண்டில் வல் விலங்கு கால் கொளுவி பெய்து ஒரு – நிதான:10 35/2
கோலி நாள்_மலரொடு கொளுவி தோன்றுமால் – ஆரணிய:4 20/4
வறுமையால் நெறி திறம்பி மான தீ கொளுவி ஆவி – ஆரணிய:4 173/1
செம் கரம் கொளுவி நண்பீர் சேறுதும் நம் இல் வம்-மின் – ஆரணிய:5 53/1
மெய் விசுவாசம் என்னும் வியன் திரி கொளுவி மாறா – ஆரணிய:8 62/2
வம்-மின் ஈண்டு என மலர் கரம் கொளுவி உய்யானத்து – இரட்சணிய:1 35/1
மேல்


கொளேன் (1)

ஒன்றும் உத்தரம் சொல்ல உளம் கொளேன்
என் திறத்து வினாய இவற்றினுக்கு – நிதான:5 87/2,3
மேல்


கொற்ற (3)

கொற்ற வாழ் மனை முன்றிலின் வயின்-தொறும் குறுகி – ஆதி:14 81/3
கோர வெம் சிறையில் உய்ப்பர் முடிவு_இல் எம் கொற்ற வேந்தன் – ஆதி:17 30/4
மடங்கல் ஏறு அனைய கொற்ற மன்னவன் தரியு ஆணைக்கு – நிதான:11 52/2
மேல்


கொற்றக்குடை (1)

குன்றாத கொற்றக்குடை வெண் மதி மேல் நிழற்ற – ஆதி:5 9/4
மேல்


கொற்றம் (5)

கூராற்றும் படைக்கல யந்திர பொறிகள் பல குழுமி கொற்றம் முற்றி – ஆதி:4 37/2
கோன் முயங்கிய தைவிக துரைத்தனம் கொற்றம்
மேல் முயங்கிய அரும் பதம் யாவையும் விடுத்தார் – ஆதி:9 11/2,3
கொட்புறும் புல பகை தெறில் கொற்றம் உற்றிடுவீர் – நிதான:6 12/4
கோணை வெம் நெருப்பு சூளை குளித்திட எறிந்த கொற்றம்
சேணுற புகுந்தும் பாரில் திகாந்தம்-மட்டு உலாயது இன்னும் – நிதான:11 51/3,4
குன்றுகுன்று என நேரவும் குன்றிலை கொற்றம் – ஆரணிய:4 153/4
மேல்


கொற்றமொடு (1)

கொற்றமொடு இஸரேல் வளம் மிகு கானான் குடிபுக அருளினாய் போற்றி – தேவாரம்:11 8/4
மேல்


கொற்றவரும் (1)

கொற்றவரும் துன்ப மலை கோடு எதிர் கண்டு ஏங்குவர் உள் – ஆதி:19 12/2
மேல்


கொற்றவன் (22)

கொற்றவன் திரு_நகர் செல குறித்தது கோணல் – ஆதி:8 12/2
கொற்றவன் திரு_நகர் குறித்த கொள்கையோ – ஆதி:10 5/3
குற்றம் யாவும் பொறுப்பர் நம் கொற்றவன் – ஆதி:12 85/4
கூட்டு_உளான் இனைய கூற கொற்றவன் அருள் பெற்று உய்யும் – ஆதி:14 119/1
கொற்றவன் உலக போகம் கூட்டு உண்டு களிக்கும் நீரார் – ஆதி:14 128/3
கொற்றவன் ஒரு சேய் அ குருசினில் அறையுண்டு – ஆதி:15 5/2
கொற்றவன் திரு_கோபுர வாயிலுக்கு – ஆதி:19 82/2
கொற்றவன் அவன் இ நகரத்து உளன் குறுகி – குமார:2 225/3
கொல்லாது விட்டுவிட கொற்றவன் பல் கால் முயன்றும் – குமார:2 325/1
கொற்றவன் உத்தரம் கொண்டு யூதர்கள் – குமார:2 396/1
குடிகள் செய்கையில் கொற்றவன் அரும் பெரும் குணத்தில் – குமார:4 66/2
கொற்றவன் கிருபாஸ்தமே குறிக்கொண்டு காத்தது – குமார:4 79/2
கொற்றவன் சுதன் திரு_அடி கோகனகத்தில் – நிதான:2 108/3
கொற்றவன் ஆணையின் என்று கூறினான் கொடுங்கோன்மை – நிதான:11 71/3
கொற்றவன் அவர் திரு_அருள் பேற்றினை குறிக்கொண்டு – ஆரணிய:2 20/2
கொற்றவன் கடை வரை குறிக்கொண்டு அன்பரை – ஆரணிய:4 22/3
கொற்றவன் திரு_நகரத்து கூட்டுவது என்றான் – ஆரணிய:4 59/4
கொற்றவன் நகருக்கு இன்னும் குறிப்பிடு தூரம் எம்மட்டு – ஆரணிய:5 44/2
கொற்றவன் நகர்க்கு இ மேலே குறிப்பிடு தூரம் கூறில் – ஆரணிய:5 50/1
குறி திகழ்த்திய படம் தந்து கொற்றவன் நகர்க்கு – ஆரணிய:7 24/2
கூருற்று ஓங்கிய மதி_வலோய் கொற்றவன் மகிமை – இரட்சணிய:1 15/1
கொண்டு ஒரு மகவை பலியிட துணிந்த கொற்றவன் தெய்வமே போற்றி – தேவாரம்:11 4/3
மேல்


கொற்றவன்-தனை (1)

கோ_முறை வழுவா தூய கொற்றவன்-தனை போற்றாமல் – ஆதி:2 22/2
மேல்


கொற்றவனும் (1)

குரவனோ_அலை கொற்றவனும்_அலை – நிதான:5 86/2
மேல்


கொற்றவனும்_அலை (1)

குரவனோ_அலை கொற்றவனும்_அலை
விரவு குற்றம் பிடித்தி வெறும்_சொலில் – நிதான:5 86/2,3
மேல்


கொற்றவனை (1)

கொடி சாய்த்த கொற்றவனை குருசின் மிசை கண்டேனே – தேவாரம்:4 2/4
மேல்


கொற்றவா (3)

கொற்றவா ஓர்தி கொல்லாது கொல்லும் கொலை – நிதான:11 14/1
குழுமியோர் குலைய பாஷை வேறு ஆக்கி குழப்பிடும் கொற்றவா போற்றி – தேவாரம்:11 3/1
கோலை நீத்து ஒரு செங்கோல் இசாய் மகற்கு கொடுத்து அருள் கொற்றவா போற்றி – தேவாரம்:11 10/1
மேல்


கொற்றி (2)

கொற்றி வானிட்டு வீடு குயிற்றிய – ஆதி:9 75/3
ஆண்டகாய் இன்னும் ஓர் ஆண்டு அளவும் யான் சுற்றி கொற்றி
வேண்டு உரம் இட்டு தக்க விதம் பல பருவம் செய்தும் – ஆதி:9 110/1,2
மேல்


கொன் (4)

கொன் புலத்தும் சிதறுண்ட சிற்சில வித்து அதர் அருகு குளித்தவற்றை – ஆதி:9 80/3
மாண்டு அன்றொடு ஒழிந்தனை யாம் கொன் மதி – ஆதி:9 136/2
கொன் புலையர் பைப்பய வளர்த்து எரி கொளுத்த – குமார:4 13/1
கொன் பயில் கலினமாம் குறிக்கொள்வாய் என்றான் – ஆரணிய:9 84/4
மேல்


கொன்ற (1)

அழஅழ அமிழ்த்தி கொன்ற அற்புதம் அறிகிலீரோ – ஆதி:2 33/4
மேல்


கொன்றனை (1)

நன்றி கொன்றனை நல்_உணர்வு அற்றனை நாசம் – குமார:2 291/1
மேல்


கொன்றிட (1)

கொன்றிட துணிந்து நீதாசனிக்கு இது கூறலுற்றார் – நிதான:11 56/4
மேல்


கொன்று (17)

கொன்று உளே அடக்கிவைத்தேம் கொடுமை இங்கு இதில் வேறு உண்டோ – ஆதி:2 27/4
ஜீவசாக்ஷியரை கொன்று சேமித்தோம் என்று நம் மேல் – ஆதி:2 42/1
நன்றி கொன்று இறைவனை மறந்து நாள்-தொறும் – ஆதி:3 7/1
தேரில் ஜீவரை கொன்று தினம்-தொறும் – ஆதி:14 162/1
கொன்று தீர்த்தனன் இது அன்றோ குவலய கொள்கை – குமார:1 94/4
கொன்று உயிர் களைவது அல்லால் குறிப்பிடு தண்டம் வேறு ஒன்று – குமார:2 186/3
கொன்று நீக்குதற்கு ஆவதோர் குற்றமும் இவன்-பால் – குமார:2 221/2
கொன்று உயிர் களைக வெம் குருசில் ஏற்றி இ – குமார:2 244/2
கொன்று உயிர் குடிப்பன் ஈது உளத்து கோடியால் – நிதான:2 21/4
கொன்று உயிர் குடிக்க வரு கூற்று என மறித்து – நிதான:2 56/2
கொன்று உழல் மரணம் பொங்கி கொடும் சிறை விரித்து போர்த்து – நிதான:3 10/3
வருத்தி வேதியரை கொன்று ஊன் சுவை பெறும் மறவோர்-தம்மில் – நிதான:3 73/3
பழுத்தவன் கொன்று உயிர் பருகுவான் அன்றேல் – நிதான:4 46/3
கொன்று உயிரை கவரும் விடம் கொடுப்பது அதன் குணம் ஆமால் – நிதான:5 45/4
கொன்று உழல் விலங்கினும் கொடியிராம் அன்றோ – நிதான:10 44/4
இன்று இவனைத்-தான் கொன்று உயிர் கோடி – நிதான:11 58/1
துன்று இருள் வண்ணன் கொன்று உழல் கூற்றின் துணை உள்ளம் – ஆரணிய:7 17/1
மேல்


கொன்றுகொளில் (1)

கொன்றுகொளில் துன்பு ஒன்றும் இல் என்பு குவை காண்-மின் – ஆரணிய:4 139/3
மேல்


கொன்றும் (1)

பக்குவ காலத்து உரிமை பெற வந்தோர்-தமை கொன்றும் பழிக்கு அஞ்சாமல் – ஆதி:9 93/3
மேல்


கொன்றை (2)

பொன் இணர்ப்படு கொன்றை அச்சுவத்தம் ஆல் புன்கு – ஆதி:18 3/4
பூ நந்து நறும் தண் கொன்றை பொன் அணி பரிசு நல்கி – ஆரணிய:5 31/3
மேல்


கொன்னுரை (1)

கொன்னுரை வழங்கல் ஆதி கொடும் தொழில் துக்கம்துக்கம் – நிதான:5 7/2
மேல்


கொன்னே (3)

கொன்னே போக்கி நித்திரை கொள்ளும் குணம் அம்மா – ஆதி:16 22/4
கொன்னே மறம் கூர் பொய்யாணை கூறி கடிய கொடுமொழியால் – குமார:2 196/2
கொன்னே சோர குக்கலின் வன் கோல் அடியுண்டு இங்கு – ஆரணிய:4 129/3

மேல்