கெ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெஞ்ச 2
கெஞ்சி 1
கெஞ்சுதல் 1
கெஞ்சுதற்கு 1
கெட்ட 1
கெட்டி 1
கெட்டு 1
கெட்டுப்போகாது 1
கெட்டேம் 1
கெட்டேன் 2
கெட 5
கெடல் 3
கெடல்_அரும் 2
கெடா 2
கெடாது 1
கெடின் 1
கெடு 15
கெடு_மதி 2
கெடுக்க 3
கெடுக்கல் 1
கெடுக்கின்ற 1
கெடுக்குந 1
கெடுக்குநர் 1
கெடுக்கும் 9
கெடுத்த 2
கெடுத்தது 2
கெடுத்தனை 1
கெடுத்தாய் 1
கெடுத்தான் 2
கெடுத்திட 1
கெடுத்திடும் 1
கெடுத்து 12
கெடுத்தேன் 1
கெடுதி 2
கெடுப்பது 2
கெடுப்பதே 1
கெடுப்பன் 1
கெடுப்பான் 1
கெடும் 10
கெடுமதி 1
கெடுவர் 1
கெடுவலோ 1
கெடுவாய் 2
கெடுவானேன் 1
கெடுவீர் 1
கெத்துசேமில் 1
கெதுசேம் 1
கெந்தகம் 1
கெருவி 1
கெருவிகட்கே 1
கெழீஇய 3
கெழு 9
கெழும் 1
கெழுமி 6
கெழுமிய 3
கெழுமிற்று 1
கெழுமு 2
கெழுமும் 4
கெழுமுவ 1

கெஞ்ச (2)

வாக்கு உண்டு நமக்கு கூட வரும் துணை உண்டு கெஞ்ச
நாக்கு உண்டு வீடு கூடும் நம்பிக்கை உண்டு நல்லீர் – ஆரணிய:5 79/2,3
கிஞ்சித்தும் பயன் இன்றி ஓய்ந்தன கெஞ்ச வந்து உனை கிட்டினேன் – தேவாரம்:2 4/2
மேல்


கெஞ்சி (1)

கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி
ஊழியாய் ஊழிக்கு உறையுளாய் எவையும் உலப்பினும் உலப்பு_இலா தரும – தேவாரம்:6 13/2,3
மேல்


கெஞ்சுதல் (1)

அழுதல் ஏங்குதல் அஞ்சுதல் கெஞ்சுதல்
தொழுதல் ஆற்றி மெய் சொல் நெறி பற்றியும் – ஆரணிய:6 42/3,4
மேல்


கெஞ்சுதற்கு (1)

போய் விழுந்து கெஞ்சுதற்கு முடுகி வாரும் ஜெகத்தீரே – நிதான:9 32/4
மேல்


கெட்ட (1)

தன்மையும் நமக்குள் இல்லை சார்வதா நன்றி கெட்ட
புன்மையும் களவும் சூதும் பொறாமையும் புரட்டும் பொய்யும் – ஆதி:2 24/2,3
மேல்


கெட்டி (1)

கெட்டி நிற்கும் மற்று அகழி வாய் திறந்து இருள் நிரையம் – நிதான:7 6/3
மேல்


கெட்டு (1)

என்று இவ்வாறு உரைத்து உறு நிலை கெட்டு பின்வாங்கி – ஆரணிய:10 31/1
மேல்


கெட்டுப்போகாது (1)

கெட்டுப்போகாது யேசு சரண் கிட்டி பிழை-மின் ஜெகத்தீரே – நிதான:9 43/4
மேல்


கெட்டேம் (1)

மாணுறும் ஓய்வுநாளை மதியாது மதியும் கெட்டேம்
பேணினோம்_இலை பெற்றோரை பேயரில் பேயர் யாமே – ஆதி:2 23/3,4
மேல்


கெட்டேன் (2)

கூடு அடைந்து கெட்டேன் இனி கூறுவது எவனோ – ஆதி:14 110/4
கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய் – ஆதி:14 143/2
மேல்


கெட (5)

மண்ணக இருள் கெட வயங்கு மா சுடர் – ஆதி:10 2/2
ஊன் மனத்து இருள் கெட ஒளிரும் ஒண் சுடர் – ஆதி:14 35/3
மித்தையின் விட தரு வேரொடும் கெட
இ தலத்து அற எறிந்து இயங்க வல்லது – ஆரணிய:4 9/3,4
பித்தளை உயிர்களின் பிறவி நோய் கெட
புத்துயிர் அளித்திடும் புதுமை சான்றது – ஆரணிய:4 10/3,4
நனி கனற்று தாபம் கெட நறும் புனல் ஆடி – ஆரணிய:4 58/1
மேல்


கெடல் (3)

உறை கலந்து தீம் சுவை பால் ஒருங்கு_அற கெடல் போல் – ஆதி:8 3/1
கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய – குமார:4 68/3
மேல்


கெடல்_அரும் (2)

கெடல்_அரும் நறும் கனி கிடைத்த தோற்றம் மெய் – குமார:2 97/2
கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய – குமார:4 68/3
மேல்


கெடா (2)

கெடு_மதி படைத்தனை கெடா பழி படைத்தோய் – நிதான:2 43/4
கெடா முதல் அருள் துணை கிடைக்கும் என நம்பி – நிதான:2 55/2
மேல்


கெடாது (1)

தன்_நயம் கெடாது உலகு உவப்பு ஆக்கலே தருமம் – நிதான:7 58/1
மேல்


கெடின் (1)

நாணயம் கெடின் யாவர்க்கும் உலகத்து நடப்பு – ஆரணிய:6 9/1
மேல்


கெடு (15)

தாழ்_இலேன் உன் கெடு மதியை சார்ந்து நின்று – ஆதி:10 17/3
நல் திறம் கெடு நாச தேசத்தை நண்ணினனால் – ஆதி:11 20/4
கிட்டி வந்து நின்று எம்பி நீ கெடு நொதி இதனுள் – ஆதி:11 29/1
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் என்பார் – குமார:2 322/2
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் எனினும் – குமார:2 322/3
ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி – குமார:4 25/1
கெடு_மதி படைத்தனை கெடா பழி படைத்தோய் – நிதான:2 43/4
நல் முறை ஒரீஇய கெடு தோஷி நனி பொங்கி – நிதான:2 67/1
பூரியன் கெடு புணர்ப்பினால் அருகுற போந்தான் – நிதான:2 100/4
என்று கூறலும் என் நும் கெடு_மதி – நிதான:8 39/1
பொய்ப்படு கெடு முறை புலமைத்து ஆயவாம் – நிதான:10 15/4
கிழக்கு மேற்கு இலர்-தமை கெடு வழி தலைவிடுத்து – நிதான:11 6/1
குடியன தவம் அலது இலை கெடு குடியே – ஆரணிய:5 15/4
கேடு நாடும் கெடு மதி காண்டியால் – ஆரணிய:6 40/4
தத்தமக்கு வைப்பு ஆக்கிய கெடு நிதி சலதிக்கு – ஆரணிய:10 30/3
மேல்


கெடு_மதி (2)

கெடு_மதி படைத்தனை கெடா பழி படைத்தோய் – நிதான:2 43/4
என்று கூறலும் என் நும் கெடு_மதி
துன்று காமியமா சுவை துய்க்கிலீர் – நிதான:8 39/1,2
மேல்


கெடுக்க (3)

மொழிந்து உனை கெடுக்க முற்றும் முரணிய மூட கொள்கை – நிதான:4 93/3
தன்மானத்தை கெடுக்க முயல் தாணும் மால் அயன்-கொல்லாம் – நிதான:9 44/2
புல கணை கெடுக்க நின்ற புல் அறப்பகையின் போக்கும் – நிதான:11 40/2
மேல்


கெடுக்கல் (1)

அய்யோ அழிவு_இல் ஆத்துமத்தை அவமே கெடுக்கல் ஆவதுவோ – நிதான:9 75/1
மேல்


கெடுக்கின்ற (1)

தனை வெறுக்கும் தனை கெடுக்கின்ற தீ_வினை – நிதான:5 72/1
மேல்


கெடுக்குந (1)

கெடுக்குந எவை மற்று இந்த கிளர் நில உலகத்து அம்மா – ஆதி:19 96/4
மேல்


கெடுக்குநர் (1)

கெடுக்குநர் அடர்ந்து பல் கேடு சூழினும் – குமார:1 6/1
மேல்


கெடுக்கும் (9)

திருவன் இ நிலம் கெடுக்கும் தரு இதை சிதைத்தி என்னா – ஆதி:9 109/3
கெடுக்கும் புன்மை சிறுமதியால் கெட்டேன் அந்தோ கிளர் எரி வாய் – ஆதி:14 143/2
வெம் தறுகண் பாம்பின் விடம் போல் மதி கெடுக்கும்
இந்த இடுக்கண் மலையின் சாரல் எதிர்வோர் எவர்க்கும் – ஆதி:19 11/3,4
பழிபடும் மடி குடி கெடுக்கும் பாலது – ஆதி:19 37/3
வித்தக விருத்தியை கெடுக்கும் வெவ் விடம் – ஆதி:19 39/3
ஏவாளை வசப்படுத்தி இகம் கெடுக்கும் கெடு தோஷி – குமார:4 25/1
கெடுக்கும் முப்பகையை வென்று கேவலம் நாடி போகும் – நிதான:3 51/3
கேடு அரங்கம் கெடுக்கும் பல்லாயிரம் – நிதான:7 89/4
ஞாலத்தை கெடுக்கும் பொல்லா நச்சு தீ அலகையே போல் – இரட்சணிய:2 12/3
மேல்


கெடுத்த (2)

ஜெகம் எலாம் கெடுத்த பேயை சிதைத்து அழல் சிறைக்குள் ஆக்கி – குமார:2 439/1
பூதலத்தை கெடுத்த பொல்லாங்கு உடை – இரட்சணிய:3 49/1
மேல்


கெடுத்தது (2)

மாடு அடைந்து உவந்து அலகையும் கெடுத்தது வலய – ஆதி:14 110/3
கேட்டுளான் ஆக உன்னை கெடுத்தது என் மதி கொண்டு என்றான் – ஆதி:14 119/4
மேல்


கெடுத்தனை (1)

என்னையும் கெடுத்தனை எனினும் ஏழையேன் – நிதான:4 36/2
மேல்


கெடுத்தாய் (1)

என்னோ மனனே எனையும் கெடுத்தாய்
அன்னோ இனி என் செயல் ஆவதுவே – ஆதி:9 141/3,4
மேல்


கெடுத்தான் (2)

தன்னையே கெடுத்தான் முன்னம் தற்பெருமையினால் அந்தோ – ஆதி:7 6/1
பின்னையும் பொறாமையாலே பிறரையும் கெடுத்தான் வாளா – ஆதி:7 6/2
மேல்


கெடுத்திட (1)

மதி கெடுத்திட வல்லது வறுமையே அன்றோ – ஆரணிய:4 50/4
மேல்


கெடுத்திடும் (1)

தூண்டாய் என்னில் அந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடும் காண் – தேவாரம்:5 10/2
மேல்


கெடுத்து (12)

சுபாவ இச்சையை கெடுத்து வேரெடுத்து அற துடைக்கும் – குமார:1 69/1
தீபத்தை கெடுத்து இருள்படு தீ_வினை ஈட்டி – குமார:1 87/3
மயல் உறும் பாவ தோட மருங்கு அற கெடுத்து மாந்தர் – குமார:2 442/1
கெடுத்து முப்பகை தொலைத்த மெய் கிறிஸ்தவ முத்தி – குமார:4 51/1
நின்னையும் கெடுத்து நீள் நிலத்தையும் கெடுத்து – நிதான:4 36/1
நின்னையும் கெடுத்து நீள் நிலத்தையும் கெடுத்து
என்னையும் கெடுத்தனை எனினும் ஏழையேன் – நிதான:4 36/1,2
மதியை கெடுத்து பிரபஞ்ச மாய வலைக்குள் உமை மாட்டி – நிதான:9 90/1
என்னையும் கெடுத்து என் உயிர் வான் துணை-தன்னையும் – ஆரணிய:4 71/1
பொருளை கெடுத்து என்னையும் நீவிர் புறக்கணித்த – ஆரணிய:4 111/3
தெருளை கெடுத்து உம் உயிர் ஆர்குவல் திண்ணம் ஓர்-மின் – ஆரணிய:4 111/4
அ இயல் கெடுத்து உளம் அடக்கி அலைவாரால் – ஆரணிய:9 112/4
கெடுத்து அழித்து அலைவுசெய்து கெழுமிய அனைத்தும் தீ வாய் – இரட்சணிய:2 9/3
மேல்


கெடுத்தேன் (1)

கெடுத்தேன் தயங்கும் சுடர் – ஆரணிய:4 71/2
மேல்


கெடுதி (2)

நள்ளுண்டு கெடுதி இன்னும் நவிலுதி நாவில் பத்தி – நிதான:5 91/4
காரிய கெடுதி நம் கடைக்கு நேர்ந்தன – நிதான:10 32/3
மேல்


கெடுப்பது (2)

ஜென்ம சத்துருவாய் எமை கெடுப்பது தீரா – குமார:1 45/1
சித்த விர்த்தியை கெடுப்பது தீ_நெறி ஒழுக – நிதான:2 93/1
மேல்


கெடுப்பதே (1)

கெடுப்பதே கருமம் ஆக புறம்பு போய் கேடு சூழ்ந்தார் – குமார:2 170/4
மேல்


கெடுப்பன் (1)

அடுத்து நான் கெடுப்பன் என்று அறைந்த சூழ் வினை – குமார:2 36/1
மேல்


கெடுப்பான் (1)

தூயரை கெடுப்பான் எண்ணி துணிந்து பேயேல்செபூலாம் – நிதான:7 63/2
மேல்


கெடும் (10)

எரி முன்னர் உற்ற வைத்தூறு என கெடும் என்பர் இன்னல் – ஆதி:2 36/2
என் நிலை விரைந்து கெடும் எம் குரவ எல்லாம் – ஆதி:13 32/3
மதி நலம் கெடும் துர்_சீலம் மலியும் தீ_வினைகள் மல்கும் – ஆதி:14 126/1
கெடும் கொடியர் உணர்வு இன்றி கிளந்த பழி மொழி செருக்கும் – குமார:2 348/2
செய்ய_அல்ல செய கெடும் செய்வன – நிதான:8 45/1
செய்யலாமையினும் கெடும் தேர்க எனா – நிதான:8 45/2
வறுமையால் மதி நலம் கெடும் அறிவு போம் வாழ்நாள் – ஆரணிய:4 55/1
மறுமை ஆக்கமும் கெடும் எனின் மறம் பிறிது எவனோ – ஆரணிய:4 55/4
நிச்சயம் கெடும் என நிறுவ வேண்டுமோ – ஆரணிய:9 74/4
தேக தத்துவங்கள் குன்றும் சீர் கெடும் ஐயம் சேரும் – இரட்சணிய:2 13/1
மேல்


கெடுமதி (1)

கெடுமதி வித்தில் தோன்றி இச்சையில் கிளம்பி பொல்லா – இரட்சணிய:2 15/1
மேல்


கெடுவர் (1)

கெடுவர் ஆர்_உயிரை உறலே பெரும் கேதம் – குமார:2 301/4
மேல்


கெடுவலோ (1)

மார்க்கத்திலே கெடுவலோ எனா – ஆதி:12 47/2
மேல்


கெடுவாய் (2)

அந்தோ கெடுவாய் உன் அகத்துள் முளைத்து வீங்கும் – ஆதி:12 10/1
அம்ம கெடுவாய் முடிவதாம்-கொல் இஃது உன்னால் – நிதான:2 50/3
மேல்


கெடுவானேன் (1)

பிரிவு ஒன்றிடுமோ வீணான பிடிவாதத்தால் கெடுவானேன்
உரு ஒன்றிய சற்குரு நடை பார்த்து உய்ய வாரும் ஜெகத்தீரே – நிதான:9 84/3,4
மேல்


கெடுவீர் (1)

தண்டித்து நின்று கெடுவீர் இனி சாறுகில்லீர் – ஆரணிய:4 122/1
மேல்


கெத்துசேமில் (1)

கெத்துசேமில் வாய் விண்டமை கேட்டிலை-கொல்லோ – ஆதி:14 103/4
மேல்


கெதுசேம் (1)

புனை மர காவின் பாங்கர் பொலன் கெழு கெதுசேம் என்னும் – குமார:2 99/2
மேல்


கெந்தகம் (1)

கெந்தகம் நாறி சாவா கிருமிகள் கெழுமி நித்ய – குமார:2 116/1
மேல்


கெருவி (1)

கேட்டு வாயிலில் திகழ்வன திசைதிசை கெருவி – நிதான:7 11/4
மேல்


கெருவிகட்கே (1)

திண்டாட்டம் பொருள்_இலர்க்கு சிரசாட்டம் கெருவிகட்கே – நிதான:7 57/4
மேல்


கெழீஇய (3)

கிழிபடும் இதயத்து கெழீஇய நண்பினர் – குமார:2 394/1
கேட்டி உன நாட்டிடை கெழீஇய பலவீன – நிதான:2 48/1
அவ்வியத்தின் ஆணவ சுவர் அமைத்து அகம் கெழீஇய
தெவ்வின் வன் துலாம் கிடத்தி வச்சிரத்த கால் செறிந்து – நிதான:7 31/1,2
மேல்


கெழு (9)

வளம் கெழு மருத வைப்பா வறு நிலம் திருத்துவாரும் – ஆதி:4 14/2
வளம் கெழு தடத்தை நீங்கி வருத்தம் என்று உரைபெற்று ஓங்கு – ஆதி:17 37/3
புனை மர காவின் பாங்கர் பொலன் கெழு கெதுசேம் என்னும் – குமார:2 99/2
சிலை கெழு சமாதியும் செறிந்ததே அந்தோ – குமார:2 410/4
நிணம் கெழு குருதி வேல் நிசாசரேசனே – நிதான:2 38/4
பிணி கெழு மாந்தரை பிலத்து என்று ஓங்கிய – நிதான:4 21/3
விரி பசும் பயிர் வளம் கெழு மருத நீர் விபுலம் – ஆரணிய:4 49/4
நம்பி காண்டி இ நலம் கெழு நானில பரப்பும் – ஆரணிய:4 53/1
படு பழம் கனிந்த சாறு இ பயம் கெழு மரண நீத்தம் – இரட்சணிய:2 15/4
மேல்


கெழும் (1)

அடல் கெழும் இறை சீற்றத்தால் அகோர வாதைகள் எழும்பி – ஆதி:2 35/1
மேல்


கெழுமி (6)

கிட்டி பேசினும் கேடு என்றார் சிலர் சிலர் கெழுமி
மட்டிக்கு ஆயிரம் சொலினும் நன் மதி வராது என்றார் – ஆதி:11 24/3,4
கெந்தகம் நாறி சாவா கிருமிகள் கெழுமி நித்ய – குமார:2 116/1
கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர் – குமார:2 434/4
கேட்டினுக்கு எலாம் ஒரு குருபீடமாய் கெழுமி
மேட்டிமை திடர் ஆய கோபுரம் நிரை வியன் பொன் – நிதான:7 11/1,2
கேடு சாலும் இ உலக கோலாகலம் கெழுமி
மாட_மாளிகை கூட_கோபுரம் பொது மன்றம் – நிதான:7 30/1,2
இனைய துர்_குணசீலங்கள் இதயத்து கெழுமி
கனவு போன்று சில் நாள் செல கருத்திடை கதித்து – ஆரணிய:10 26/1,2
மேல்


கெழுமிய (3)

கேடு அணவு தலைவரொடு கெழுமிய பல் யூதர்களும் – குமார:2 346/1
கெடல்_அரும் நறும் பாகு என கெழுமிய கிளைய – குமார:4 68/3
கெடுத்து அழித்து அலைவுசெய்து கெழுமிய அனைத்தும் தீ வாய் – இரட்சணிய:2 9/3
மேல்


கெழுமிற்று (1)

அம் கண் வானகத்து சேனை ஆர்ப்பு ஒலி கெழுமிற்று அன்றே – இரட்சணிய:3 95/4
மேல்


கெழுமு (2)

கடு விடம் கெழுமு பை கவினும் மண்டப நிலை – நிதான:11 8/2
கேவல நகர் புக கெழுமு பாதை இ – ஆரணிய:4 28/1
மேல்


கெழுமும் (4)

பாரகம் கெழுமும் ஜீவ பகுதிகள்-தம்மை எல்லாம் – நிதான:3 17/2
பல் வளம் கெழுமும் நானா தேசத்தும் பயின்று அங்கு உள்ள – நிதான:7 74/1
கேழ் கிளர் திரை ஒலி கெழுமும் நீரது – ஆரணிய:4 12/4
நித்திய சுக பேர்_இன்ப நில வளம் கெழுமும் ஞான – ஆரணிய:5 33/1
மேல்


கெழுமுவ (1)

தழல் என ஒழுகு ஒளி தழுவிய கொழு முகை தழையொடு கெழுமுவ தரு – ஆரணிய:5 7/2

மேல்