கீ – முதல் சொற்கள், இரட்சணிய யாத்திரிகம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கீடங்களை 1
கீடத்துக்கு 1
கீடம் 2
கீண்டது 1
கீண்டி 1
கீண்டு 7
கீத 7
கீதம் 14
கீதமும் 2
கீதரோன் 1
கீதேயோன் 1
கீதை 1
கீர்த்தன 1
கீர்த்தனை 2
கீர்த்தி 1
கீர்த்தியை 1
கீரை 1
கீழ் 3
கீழ்-பால் 2
கீழ்ப்பட்டு 1
கீழ்ப்படிதலை 1
கீழ்ப்படிந்து 2
கீழ்ப்படும் 1
கீழ 1
கீழியான் 1
கீழும் 3
கீழுமே 1
கீழுற 2
கீழே 1
கீற்றவாய் 1
கீறி 1

கீடங்களை (1)

புன் நர கீடங்களை ஓர் பொருளாய் உன்னி புகல்_அரிய பெரும் பாவ பொறை சுமந்து – தேவாரம்:8 4/2
மேல்


கீடத்துக்கு (1)

உலகை நச்சி இங்கு உழல் நர கீடத்துக்கு உயிர் ஈந்து – ஆதி:9 13/2
மேல்


கீடம் (2)

அலகு_இல் வெம் சீற்ற செம் தீ அவிக்குமோ அளிய கீடம் – ஆதி:14 122/4
ஈன கீடம் என துடித்து ஏங்கினார் – ஆதி:14 176/4
மேல்


கீண்டது (1)

கோட்டால் முயல் கீண்டது மேனி குளித்த காய – ஆதி:12 11/1
மேல்


கீண்டி (1)

கீண்டி தலை கீழுற மேல் எழுவான் – ஆதி:9 136/3
மேல்


கீண்டு (7)

கீண்டு எறிந்திடுவன் என்று கிளந்தனன் தெளிந்து கொள்-மின் – ஆதி:9 110/4
என்-கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார் – குமார:2 281/1
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் என்பார் – குமார:2 322/2
கீண்டு எறிவார் இந்த கெடு தோஷிகள் எனினும் – குமார:2 322/3
நீண்ட சிலுவையை எடுத்து நிறுத்தினார் நிலம் கீண்டு – குமார:2 340/4
கீண்டு இருப்பு முளை உடலை கிழித்து உருவி வதைப்புண்டு – குமார:2 344/1
கீண்டு அரிந்து அழலுக்கு இரையாக்கிய கேடும் – ஆரணிய:1 18/2
மேல்


கீத (7)

முரசம் கறங்க சுரமண்டலம் முந்து கீத
பிரசம் பொழிய திருமுன் தருமம் பிறங்க – ஆதி:5 13/1,2
பண் கவர் மிதுன கீத பாட்டு ஒலி செவிமடுப்பர் – ஆதி:6 18/2
நன்னர் நவிலும் இசை கருவி நாத கீத நயம் பொழிய – ஆதி:14 152/2
கீத கானம் தொடுத்து உருகுவார் கிடை-தொறும் – ஆரணிய:9 31/2
ஆனக தொனியோடு எழும் ஆரண கீத
கான கந்தருவம் செவிமடுப்பன காணாய் – இரட்சணிய:1 25/3,4
மதுர கீத கானம் மல்கும் மரபு உணர்ந்து மகிழுவார் – இரட்சணிய:3 25/2
மறை திகழ் மங்கல கீத வாத்தியர் – இரட்சணிய:3 59/2
மேல்


கீதம் (14)

முத்திவீட்டு அறவோர் நட்பு முறை வழா தோத்ர கீதம்
இத்தகு பேறே அன்றோ ஈறு_இல் பேர்_இன்ப செல்வம் – ஆதி:4 66/3,4
துதி தோத்திர கீதம் மலிந்து இசை துன்னி ஓங்க – ஆதி:5 11/3
பண் நிலவிய கீதம் பயில் இசையொடு பாடி – ஆதி:15 3/2
ஓடுவன் நடை கூடி விரைகுவன் ஒரு கீதம்
பாடுவன் மேல் நோக்கி பார்த்து உளம் பதைத்து ஏங்கி – ஆதி:19 23/1,2
துள்ளிய மதுர கீதம் செவித்தொளை தொகுத்தது அன்றே – ஆதி:19 88/4
வரும் அவமதிப்பு பொன் பூண் வசை_மொழி மதுர கீதம்
மருவு பூ அடுக்கு மெத்தை மௌன நித்திரை வண் செல்வ – நிதான:10 54/2,3
ஆடுவர் தெவிட்டா உண்டி அருந்துவர் ஆர கீதம்
பாடுவர் துதித்து போற்றி பவித்திர பதாம்புஜத்து – நிதான:10 58/2,3
தெள்ளிய மதுர கீதம் செவிமடுத்திடும் எ பாலும் – ஆரணிய:5 27/4
துள்ளிய மதுர கீதம் செவி புலம் தொகுப்ப யாவும் – ஆரணிய:5 37/3
ஓவு_இல் ஆனந்த கீதம் உளம் கனிந்து உருகி பாடி – ஆரணிய:5 39/2
மங்கல கீதம் மல்க மனை புகூஉ வரிசை செய்தார் – ஆரணிய:5 53/4
உம்பர் மேய சீயோன் மலை உன்னத கீதம்
பம்ப வேதியன் அகத்து உறை ஆத்தும பன்னி – இரட்சணிய:1 43/1,2
மண அணி பொதுளி நித்ய மங்கள கீதம் மல்கி – இரட்சணிய:3 5/1
மங்கல மதுர கீதம் மலிந்த வானக முழக்கம் – இரட்சணிய:3 95/2
மேல்


கீதமும் (2)

நன்று நினைத்து ஏத்தி ஒரு தோத்திர கீதமும் இசையாய் நவிற்றினாரால் – குமார:2 50/4
தொழுது பல் முறை தோத்திர கீதமும் பாடி – நிதான:2 109/2
மேல்


கீதரோன் (1)

காசு உறும் புனல் கீதரோன் ஆற்றையும் கடந்தார் – குமார:2 76/4
மேல்


கீதேயோன் (1)

வகை கண்டு கீதேயோன் வன் கையின் வய படையா – குமார:4 35/3
மேல்


கீதை (1)

ஓது கீதை வந்து உறு செவிமடுத்தலும் ஒடுங்கா – ஆரணிய:8 25/2
மேல்


கீர்த்தன (1)

கீர்த்தன நறும் பூ மாரி பெய்தனர் கெழுமி விண்ணோர் – குமார:2 434/4
மேல்


கீர்த்தனை (2)

கீர்த்தனை அக களி கிளைப்ப பாடுவார் – ஆரணிய:4 31/4
கீர்த்தனை கிளக்கும் செவ்வி கேட்டு அதிசயித்து கிட்டி – ஆரணிய:5 38/3
மேல்


கீர்த்தி (1)

கீர்த்தி மலி இளவரசன் கிறிஸ்துவின் போர்ச்சேவகர்கள் – குமார:4 43/1
மேல்


கீர்த்தியை (1)

மித்தை ஆய சம்பத்தினை கீர்த்தியை வேட்டு – ஆரணிய:2 68/1
மேல்


கீரை (1)

குப்பை கீரை கொழும் கவடு ஓச்சினும் – நிதான:5 81/1
மேல்


கீழ் (3)

ஒரு குடை நிழல் கீழ் ஆக்கி உவந்து காத்து அளிக்கும் வேந்தன் – ஆதி:2 16/2
மருவு தம் குடை நிழல் கீழ் வாழும் மன் உயிர்கட்கு எல்லாம் – ஆதி:2 16/3
இ நிலத்து உரிமை எல்லாம் ஈந்தனம் எம் கோலின் கீழ்
மன்னவன் ஆகி நீயே மனுமுறை வழுவா வண்ணம் – ஆதி:6 5/2,3
மேல்


கீழ்-பால் (2)

சே ஒளி பரப்பி கீழ்-பால் தினகரன் உதயம் செய்தான் – குமார:2 437/4
உய்வு அளித்து அருக்கன் கீழ்-பால் உதித்தனன் ஒளியை வீசி – நிதான:3 66/4
மேல்


கீழ்ப்பட்டு (1)

சேனை காவலருக்கு எல்லா சித்தமும் இணங்கி கீழ்ப்பட்டு
ஆனிக கருமம் ஆற்றும் அந்தணர் ஒழுக்கம் கண்டார் – ஆரணிய:5 35/3,4
மேல்


கீழ்ப்படிதலை (1)

நினது கீழ்ப்படிதலை நீதி ஆக்கவே – ஆரணிய:9 70/1
மேல்


கீழ்ப்படிந்து (2)

ஞாயமுடன் கீழ்ப்படிந்து யேசு நம்பன் தொழு-மின் ஜெகத்தீரே – நிதான:9 13/4
நின்று கீழ்ப்படிந்து பார்க்கு நிருமித்த தண்டம் ஏற்று – ஆரணிய:8 79/3
மேல்


கீழ்ப்படும் (1)

ஆவிவிட்டனர் அவற்கு அடங்கி கீழ்ப்படும்
தா_அரும் நீதியால் சாபம் போக்கி எம் – ஆரணிய:9 61/2,3
மேல்


கீழ (1)

தீவம்-அதாக உதித்தது கீழ திசை திங்கள் – குமார:2 418/4
மேல்


கீழியான் (1)

கீழியான் பிழைத்த பிழை எலாம் பொறுத்து உன் கிருபை தந்து அருள் என கெஞ்சி – தேவாரம்:6 13/2
மேல்


கீழும் (3)

சருகு என சுழல்வன் யாண்டும் தரிக்கிலன் மேலும் கீழும்
கருதி நோக்கிடுவன் உள்ளம் கசந்து அழுதிடுவன்-மன்னோ – ஆதி:2 5/3,4
நண்ணு_அரிய திரு_நகர்க்கு நால் திசையும் புடை வளைந்து மேலும் கீழும்
அண்ணல் அரசாணை வழி அநாதி நியமனமாக அகண்ட மாய – ஆதி:4 34/2,3
வெரு கொளீஇ அலமந்து ஏங்க இருண்டது மேலும் கீழும் – ஆதி:14 134/4
மேல்


கீழுமே (1)

விஞ்சியது இருள் குழாம் மேலும் கீழுமே – குமார:1 2/4
மேல்


கீழுற (2)

கீண்டி தலை கீழுற மேல் எழுவான் – ஆதி:9 136/3
பள்ளி உற்று அதன் கீழுற பார்க்கையில் – ஆதி:19 77/4
மேல்


கீழே (1)

சத்துரு ஆகி கீழே தள்ளுண்டு கிடந்த பேயால் – ஆதி:7 1/3
மேல்


கீற்றவாய் (1)

கிழிந்தது ஆலய திரை இரண்டு கீற்றவாய்
கிழிந்தது ஆசாரியர் கேடு சூழ் உளம் – குமார:2 387/1,2
மேல்


கீறி (1)

கதிர் ஒளி மறைய பூமி கம்பிக்க சிமயம் கீறி
பிதிர்பட சிலுவை மீது பெருந்தகை குருதி சிந்தி – தேவாரம்:9 4/1,2

மேல்