யா – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் யா யாக்கை யாங்கணும் யாங்கனம் யாங்கு யாங்கும் யாங்ஙனம் யாடு யாண்டு யாண்டும் யாண்டையன் யாண்டோர் யாணது யாணர் யாணு யாத்திரை யாப்பு யாம் யாமம் யாமை யாய் யாரீர் யாரேம் யாவண் யாவது யாவதும் யாழ் யாழ யாளி யாறு யானையங்குருகு யா 1. (வி) கட்டு, பிணி, bind, tie, fasten – 2. (பெ) ஒரு மரம், ஆச்சா மரம், சால் மரம், a tree, Shorea robusta – 3. (வி.பெ) யாவை, what, which things 1 செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர் மூதா தின்றல் அஞ்சி காவலர் பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் தீம் புனல் ஊர திறவிது…

Read More

ய – முதல் சொற்கள்

யமன் (பெ) வரையறுக்கப்பட்ட வாழ்நாள் முடிந்ததும் உயிரை எடுத்துக்கொள்ளும் இறைவன், God of death யமன் இந்து மதத்தில் இறப்பின் தெய்வம் ஆவார். இவர் எமன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் சூரியனின் மகன். சனீஸ்வரனின் அண்ணன். உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்ல துணைக்கு உப்பால் எய்த இறை யமன் வில்லின் கடை மகரம் மேவ பாம்பு ஒல்லை மதியம் மறைய வரு நாளில் – பரி 11/4-10 மிக்க வெண்மையான நிறத்தைக்கொண்ட வெள்ளியானது இடபராசியைச் சேர, மேடராசியைச் செவ்வாய் சேர்ந்துநிற்க, பொருள்களை ஆராய்ந்தறிகின்ற புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில் கார்த்திகை உச்சமாக நிற்க, வியாழன்…

Read More

மௌ – முதல் சொற்கள்

மௌவல் (பெ) காட்டு மல்லிகை, wild jasmine, jasminum officinale மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3 மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள் மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும் வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும்.

Read More

மோ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மோ மோக்கல் மோகூர் மோசி மோசை மோடு மோதகம் மோரியர் மோரோடம் மோவாய் மோழைமை மோ (வி) முகர், மூக்கால் நுகர், smell நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் – கலி 54/7,8 அழகுபெறச் சுற்றிய பூங்கொத்துக்கள் அமைந்த ஒரு பூச்சரத்தை விரலில் ஒழுங்காகச் சுற்றி மோந்துபார்க்கவும் செய்தான்; ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த_காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே – அகம் 5/22-26 (தன்) மார்பில் ஒடுக்கிய தன் புதல்வனின் சிறிய தலையிலுள்ள தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை மோந்து…

Read More

மே – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் மே மேஎம் மேஎய் மேக்கு மேகலை மேதி மேதை மேந்தோன்று மேம் மேம்படு மேம்பாடு மேய் மேய மேயல் மேரு மேல்வரு(தல்) மேலோர் மேவரு(தல்) மேவல் மேவன மேவார் மேவாள் மேவு மேழகம் மேழி மேற்கொள் மேற்செல் மேற்படு மேன மேனி மே 1. (வி) விரும்பு, desire 2. (பெ) மேன்மை, உயர்வு, eminence, excellence 1 வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே – கலி 47/22-24 அவனோ நம்மை விரும்புகின்றான், தழுவிக்கொள்ள மட்டும் வருக என்று கூறுவது போல் காட்டி பின்னர் அவன் விரும்பும் வழியில் விரும்பிச் செல்வாயாக நெஞ்சமே! 2 புழல் காய் கொன்றை கோடு அணி கொடி இணர் ஏ…

Read More

செ – முதல் சொற்கள்

கீழே உள்ள சொல்லின் மேல் சொடுக்கவும் செக்கர் செகில் செகீஇய செகு செங்கழுநீர் செங்காந்தள் செங்குரலி செங்குவளை செங்கொடுவேரி செச்சை செண் செண்ணிகை செத்து செது செதுக்கு செதுக்கை செதும்பல் செதும்பு செந்தில் செந்தினை செந்நாய் செந்நெல் செப்பம் செப்பல் செப்பு செம்பியன் செம்பு செம்பூழ் செம்மல் செம்மலை செம்மா செம்மீன் செய்யர் செயலை செயிர் செரீஇ செரு செருக்கம் செருக்காளர் செருக்கு செருத்தல் செருந்தி செருப்பு செருவம் செருவிளை செல் செல்நாய் செல்லி செலவு செலீஇ செவ்வரக்கு செவ்வழி செவ்வி செவ்வேள் செவிமறை செவிலி செழியன் செற்றம் செற்றார் செற்றை செறல் செறு செறுநர் செறும்பு செறுவர் செறுவர்க்கு சென்னி செக்கர் (பெ) சிவப்பு, redness, crimson செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி – அகம் 20/4 சிவந்த நண்டின் ஆழமான வளைகளைக் கிண்டிக்கிளறி,…

Read More

குறுந்தொகைக்காட்சிகள்

பாடல் 3 – நிலத்தினும் பெரிதே பாடல் 18 – வேரல் வேலி பாடல் 21 – வண்டுபடத் ததைந்த பாடல் 27 – கன்றும் உண்ணாது பாடல் 40 – யாயும் ஞாயும் பாடல் 41 – காதலர் உழையராக பாடல் 49 – அணில் பல் அன்ன பாடல் 54 – யானே ஈண்டையேனே பாடல் 58 – இடிக்கும் கேளிர் பாடல் 85 – யாரினும் இனியன் பாடல் 87 மன்ற மராஅத்த பேஎம் முதிர்- பாடல் 111 – மென்தோள் நெகிழ்த்த செல்லல் பாடல் 119 – சிறுவெள் அரவின் பாடல் 156 – பார்ப்பன மகனே பாடல் 167 – முளி தயிர் பிசைந்த பாடல் 176 – ஒருநாள் வாரலன் பாடல் 196 – வேம்பின் பைங்காய் பாடல்…

Read More

1. அசைவுகள்

சங்க இலக்கியங்களில் அசை அல்லது அசைந்தாடு என்ற பொருளில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அவற்றில் அலங்கு, துயல்(லு), துளங்கு ஆகிய மூன்று சொற்களும்தான் மிக அதிக அளவில் இப் பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. (எ.டு) நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த – பெரும் 83 நீண்ட தாளினையுடைய இலவத்தினது அசைகின்ற கொம்பு காய்த்த … சிறு குழை துயல்வரும் காதின் ———– – பெரும் 161 தாளுருவி அசையும் காதினையும் — இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு – மலை 330 நிரையினின்றும் பெயர்ந்த அசையும் குட்டேற்றினையுடைய (திமில்) இடபமும், இந்த மூன்று இடங்களிலும் மூன்றுவிதமான அசைவுகள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றிற்கு வெவ்வேறு சொற்களும் கையாளப்பட்டுள்ளன. எனினும், அவை மூன்றனுக்கும் உரைகளில் ஒரே பொருள்தான் கொடுக்கப்படுகிறது. சங்க காலத்தில் வெவ்வேறான பொருளில் பயன்படுத்தப்பட்ட…

Read More

ஐங்குறுநூறு 1-50

    சொற்பிரிப்பு மூலம் அடிநேர் உரை # பாரதம் பாடிய பெருந்தேவனார் # பாரதம் பாடிய பெருந்தேவனார் # 0 கடவுள் வாழ்த்து  # 0 கடவுள் வாழ்த்து      நீல மேனி வால் இழை பாகத்து நீல நிற மேனியினளான தூய அணிகலன்கள் பூண்ட மங்கையை தன் இடப்பாகத்தில் வைத்த ஒருவன் இரு தாள் நிழல் கீழ் ஒப்பற்ற ஒரே இறைவனின் இரண்டு திருவடிகளின் நிழலின் கீழ் மூவகை உலமும் முகிழ்த்தன முறையே மேல், நடு, கீழ் என்ற மூவகை உலகங்களும் தோன்றின முறைப்படியே.     # மருதம்      ஓரம்போகியார் # மருதம்      ஓரம்போகியார்     #1 வேட்கை பத்து #1 வேட்கை பத்து #1 #1 வாழி ஆதன் வாழி அவினி வாழ்க ஆதன்! வாழ்க அவினி! நெல் பல…

Read More