மௌ – முதல் சொற்கள்

மௌவல்

(பெ) காட்டு மல்லிகை, wild jasmine, jasminum officinale

மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் – கலி 14/3

மணக்கும் காட்டுமல்லியின் மொட்டுகளைப் போன்ற, வண்டுகள் விரும்பும், ஒழுங்குபட்ட வரிசையான வெண்ணிறப் பற்கள்

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை), பன்னீர்ப் பூ எனவும்
வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம்.
இம்மரம் 18 முதல் 25 மீட்டர் வளரக்கூடியது. 6 முதல் 8 வருடங்களில் மரமாகி 40 வருடங்கள் வரை இருக்கும்.