மோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மோக 12
மோக_கடலில் 1
மோக_தாகம் 2
மோக_வாரியின் 2
மோகங்களே 1
மோகத்தை 1
மோகம் 12
மோகம்-அதில் 1
மோகம்_இலார் 1
மோகமும் 1
மோகமே 2
மோகாதிக்கு 1
மோகாதிபன் 1
மோகாந்தகாரத்தின் 1
மோகாந்தகாரம் 1
மோகாந்தகாரம்_அறுத்தவர் 1
மோகினியாய் 1
மோகினியும் 1
மோகினியை 1
மோகு 1
மோச 2
மோக்ஷம் 1
மோச_பயலே 1
மோசம் 2
மோசம்செய 1
மோசமும் 1
மோசமே 1
மோசனமே 1
மோக்ஷாதிக்கமாய் 1
மோந 1
மோழை 1
மோன 16
மோனத்தவர்-தம் 1
மோனத்தின் 1
மோனம் 2
மோனம்-தான் 1
மோனமே 2
மோனமொடு 1
மோனர் 1

மோக (12)

தாமதமே மோக சமுத்திரம் காண் தாமதம் என்று – திருமுறை1:3 1/1202
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக
தாகம் ஒழியாது என் செய்கேன் சகியே இனி நான் சகியேனே – திருமுறை3:13 9/3,4
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை4:2 65/1
காம உட்பகைவனும் கோப வெம் கொடியனும் கனலோப முழு_மூடனும் கடு மோக வீணனும் கொடு மதம் எனும் துட்ட கண் கெட்ட ஆங்காரியும் – திருமுறை5:55 6/1
சினமான வெம் சுரத்து உழலுவன் உலோபமாம் சிறு குகையினுள் புகுவான் செறு மோக இருளிடை செல்குவான் மதம் எனும் செய்குன்றில் ஏறி விழுவான் – திருமுறை5:55 22/2
கோபம் எனும் புலை_பயலே காம_வலை_பயலே கொடும் மோக கடை_பயலே குறும்பு மத_பயலே – திருமுறை6:86 18/1
மோக மாந்தருக்கு உரைத்திலேன் இது சுகம் உன்னும் – திருமுறை6:95 6/3
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1
மோக_கடலில் மூழ்கி மயங்குவன் – திருமுகம்:4 1/145

மேல்


மோக_கடலில் (1)

மோக_கடலில் மூழ்கி மயங்குவன் – திருமுகம்:4 1/145

மேல்


மோக_தாகம் (2)

தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – திருமுறை1:8 71/1
தா என்று அருளும் ஒற்றி_உளீர் தமியேன் மோக_தாகம் அற – தனிப்பாசுரம்:10 27/1

மேல்


மோக_வாரியின் (2)

மூட நெஞ்சம் என் மொழி வழி நில்லா மோக_வாரியின் முழுகுகின்றது காண் – திருமுறை2:25 6/1
முன்னை நான் செய்த வல்_வினை சிமிழ்ப்பால் மோக_வாரியின் மூழ்கினனேனும் – திருமுறை2:66 6/1

மேல்


மோகங்களே (1)

கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ – திருமுறை6:13 38/1

மேல்


மோகத்தை (1)

கண்ணை காட்டி இரு முலை காட்டி மோகத்தை காட்டி அகத்தை கொண்டே அழி – திருமுறை5:20 8/1

மேல்


மோகம் (12)

மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்று – திருமுறை1:6 225/1
மோகம் கொண்ட எம் முன் நின்று அருளிரோ – திருமுறை2:19 1/4
மோகம் ஆதியால் வெல்லும் ஐம்புலனாம் மூட வேடரை முதலற எறிந்து – திருமுறை2:26 9/1
மோகம் என்னும் ஓர் மூடரில் சிறந்தோய் முடிவு இலா துயர் மூல இல் ஒழுக்கில் – திருமுறை2:38 6/1
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை3:16 7/2
முந்து அ மதனை வெல்லாரோ மோகம் தீர புல்லாரோ – திருமுறை5:22 4/2
முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றி – திருமுறை6:13 43/1
மோகம் வந்து அடுத்த போது கை பிடித்த முக நகை கணவனே என்கோ – திருமுறை6:54 7/2
இனம் பழ மோகம் கலந்தாள் சிவானுபவத்து அல்லால் எந்த அனுபவங்களிலும் இச்சை_இல்லாள் அவர்-தம் – திருமுறை6:62 3/2
முத்து_அனையாய் நினக்கு என் மேல் இருக்கின்ற மோகம் என்னே – திருமுறை6:72 4/4
மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே – தனிப்பாசுரம்:27 6/4

மேல்


மோகம்-அதில் (1)

தாகம்-அது கொண்டே தவிக்கின்றேன் மோகம்-அதில்
போய்ப்படும் ஓர் பஞ்ச_பொறிகளால் வெம் பாம்பின் – திருமுறை1:2 1/818,819

மேல்


மோகம்_இலார் (1)

யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை3:16 7/2

மேல்


மோகமும் (1)

மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு – திருமுறை6:65 1/795

மேல்


மோகமே (2)

மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
மோகமே உடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்து அருள் எனையே – திருமுறை6:8 1/4

மேல்


மோகாதிக்கு (1)

மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும் – திருமுறை1:3 1/1076

மேல்


மோகாதிபன் (1)

மோகாதிபன் என்று உலகவர் தூற்ற முயலுகின்றேன் – திருமுறை6:78 8/2

மேல்


மோகாந்தகாரத்தின் (1)

மோகாந்தகாரத்தின் மீட்டது என் நெஞ்ச முயங்கிரும்பின் – திருமுறை6:56 11/2

மேல்


மோகாந்தகாரம் (1)

மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4

மேல்


மோகாந்தகாரம்_அறுத்தவர் (1)

மோகாந்தகாரம்_அறுத்தவர் ஏத்த பொதுவில் முயங்கி நடம் புரிகின்ற முக்கண் உடை அரசே – திருமுறை4:2 75/4

மேல்


மோகினியாய் (1)

மான் ஆகி மோகினியாய் விந்தும் ஆகி மற்றவையால் காணாத வானம் ஆகி – திருமுறை1:5 19/1

மேல்


மோகினியும் (1)

மானினொடு மோகினியும் மாமாயையுடனே வைந்துவமும் ஒன்றினொன்று வதிந்து அசைய அசைத்தே – திருமுறை4:2 84/1

மேல்


மோகினியை (1)

தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை1:1 2/53

மேல்


மோகு (1)

காசம் மேகம் கடும் பிணி சூலை மோகு ஆதியா தந்து கண் கலக்கம் செயும் – திருமுறை5:20 6/1

மேல்


மோச (2)

கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:86 7/1
மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே – திருமுறை6:98 10/4

மேல்


மோக்ஷம் (1)

பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம்
பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம் – திருமுறை1:1 2/26,27

மேல்


மோச_பயலே (1)

கலை அறியா சித்தம் எனும் கன மோச_பயலே கால் அறியாய் தலை அறியாய் காண்பன கண்டு அறியாய் – திருமுறை6:86 7/1

மேல்


மோசம் (2)

முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1
முன் பாட்டு காலையிலே வருகுவர் என் கணவர் மோசம் இலை மோசம் என மொழிகின்றார் மொழிக – திருமுறை6:105 3/1

மேல்


மோசம்செய (1)

மோசம்செய நான் முதல் பாதம் பாசம் உளோர் – திருமுறை1:2 1/722

மேல்


மோசமும் (1)

முயன்று உலகில் பயன் அடையா மூட மதம் அனைத்தும் முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே – திருமுறை6:98 17/1

மேல்


மோசமே (1)

மோசமே நிசம் என்று பெண் பேய்களை முன்னினேன் நினை முன்னிலன் ஆயினேன் – திருமுறை5:20 6/2

மேல்


மோசனமே (1)

ஆகம போதகமே ஆதர வேதகமே ஆமய மோசனமே ஆர்_அமுது ஆகரமே – கீர்த்தனை:1 192/1

மேல்


மோக்ஷாதிக்கமாய் (1)

பணிகொண்ட கடவுளாய் கடவுளர் எலாம் தொழும் பரம பதியாய் எங்கள்-தம் பரமேட்டியாய் பரம போதமாய் நாதமாய் பரம மோக்ஷாதிக்கமாய்
அணி கொண்ட சுத்த அனுபூதியாய் சோதியாய் ஆர்ந்து மங்கள வடிவமாய் அற்புத சிதாகாச ஞான அம்பலம் ஆடும் ஆனந்த நடன மணியே – தனிப்பாசுரம்:13 10/3,4

மேல்


மோந (1)

மோந வடிவாம் மருந்து சீவன் – கீர்த்தனை:20 6/3

மேல்


மோழை (1)

மோழை மனத்தால் குரங்கு எறிந்த விளங்காய் ஆகி மொத்துண்ணும் – திருமுறை6:7 3/3

மேல்


மோன (16)

தானும் ஒழியாமல் தான் ஒழிந்து மோன நிலை – திருமுறை1:3 1/110
கோவே எண்_குண குன்றே குன்றா ஞான கொழும் தேனே செழும் பாகே குளிர்ந்த மோன
காவே மெய் அறிவு இன்ப மயமே என்றன் கண்ணே முக்கண் கொண்ட கரும்பே வான – திருமுறை1:5 24/1,2
பூணே மெய்ப்பொருளே அற்புதமே மோன புத்தமுதே ஆனந்தம் பொலிந்த பொற்பே – திருமுறை1:5 27/2
குறை முடிக்கும் குண_குன்றே குன்றா மோன கோமளமே தூய சிவ_கொழுந்தே வெள்ளை – திருமுறை1:5 33/2
வளவை எலாம் இருள் அகற்றும் ஒளியே மோன வாழ்வே என் உயிர்க்குயிராய் வதியும் தேவே – திருமுறை1:5 36/4
விண்டு அலறி ஓலமிட்டு புலம்ப மோன வெளிக்குள் வெளியாய் நிறைந்து விளங்கும் ஒன்றே – திருமுறை1:5 43/2
விழு துணையாய் அமர்ந்து அருளும் பொருளே மோன வெளியில் நிறை ஆனந்த விளைவாம் தேவே – திருமுறை1:5 59/4
திரு_மணி மன்று அகத்து இன்ப உருவாய் என்றும் திகழ் கருணை நடம் புரியும் சிவமே மோன
பெரு மலையே பரம இன்ப நிலையே முக்கண் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே – திருமுறை1:5 67/3,4
மோன அந்தத்தார் பெறும் தான அந்தத்தானை முத்தனை முத்தியின் வித்தனை முத்தை – திருமுறை2:33 1/3
மோக இருள்_கடல் கடத்தும் புணை ஒன்று நிறைந்த மோன சுகம் அளிப்பிக்கும் துணை ஒன்று என்று உரைக்கும் – திருமுறை4:2 65/1
எண்ணினால் அளப்ப அரிய பெரிய மோன இன்பமே அன்பர்-தமது இதயத்து ஓங்கும் – திருமுறை5:9 13/3
தற்பரம் பொருளே வேத தலை நின்ற ஒளியே மோன
சிற்பர சுகமே மன்றில் திரு_நடம் புரியும் தேவே – திருமுறை6:24 6/1,2
விண் தகும் ஓர் நாத வெளி சுத்த வெளி மோன வெளி ஞான வெளி முதலாம் வெளிகள் எலாம் நிரம்பிக்கொண்டதுவாய் – திருமுறை6:60 80/3
வயமான வரமே வியமான பரமே மனம் மோன நிலையே கன ஞான_மலையே – கீர்த்தனை:1 116/1
மோன நடேசரே வாரீர் – கீர்த்தனை:17 53/2
நலம்கொள் சிவயோக மணம் நால் திசையும் மணக்கும் ஞான மணம் கந்திக்கும் மோன மணம் நாறும் – தனிப்பாசுரம்:29 1/1

மேல்


மோனத்தவர்-தம் (1)

மோனத்தவர்-தம் அக விளக்கே முறையோ முறையோ முறையேயோ – திருமுறை5:28 7/4

மேல்


மோனத்தின் (1)

மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4

மேல்


மோனம் (2)

சூரிட்ட நடையில் என் போரிட்ட மனதை நான் சொல் இட்டமுடன் அணைத்து துன்றிட்ட மோனம் எனும் நன்றிட்ட அமுது உண்டு சும்மா இருத்தி என்றால் – திருமுறை2:100 6/1
ஞானம் எங்கே முனிவர் மோனம் எங்கே அந்த நான்முகன் செய்கை எங்கே நாரணன் காத்தலை நடத்தல் எங்கே மறை நவின்றிடும் ஒழுக்கம் எங்கே – திருமுறை5:55 21/2

மேல்


மோனம்-தான் (1)

மோனம்-தான் கொண்டு முடிந்த இடத்து ஓங்கு பரமானந்தாதீதத்து – திருமுறை1:3 1/1395

மேல்


மோனமே (2)

மோகமே மோகம் எலாம் அழித்து வீறு மோனமே மோனத்தின் முளைத்த தேவே – திருமுறை1:5 31/4
மோனமே பொருள் என முன்னினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/2

மேல்


மோனமொடு (1)

தானம் கண்டு ஆடும் தவத்தோரும் மோனமொடு
தாழ் சடையும் நீறும் சரி கோவண கீளும் – திருமுறை1:3 1/1354,1355

மேல்


மோனர் (1)

கானப்பேர் ஆனந்த காளையே மோனர் உளே – திருமுறை1:2 1/404

மேல்