பை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

பை (16)

பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிற – திருமுறை1:6 4/3
பை உரைத்து ஆடும் பணி புயத்தோய் தமை பாடுகின்றோர் – திருமுறை1:6 58/1
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம் – திருமுறை1:6 157/3
பை ஆளும் அல்குல் சுரர் மடவார்கள் பலருளும் இ – திருமுறை1:7 16/1
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை1:8 146/2
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை2:31 2/3
பை விடம் உடைய வெம் பாம்பும் ஏற்ற நீ – திருமுறை2:32 1/3
கரும் பை நாக அணை கடவுள் நான்முகன் வான்_கடவுள் ஆதியர் கலகங்கள் தவிர்ப்பான் – திருமுறை2:35 4/1
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:88 5/3
பை விரிப்பார் அல்குல் பை விரிப்பார்க்கு அவர்-பால் பரவி – திருமுறை2:88 5/3
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 23/4
திரு உருக்கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திரு_நீற்று பை அவிழ்த்து செம் சுடர் பூ அளிக்க – திருமுறை4:3 1/1
தன் வடிவ திரு_நீற்று தனி பை அவிழ்த்து எனக்கு தகு சுடர் பூ அளிக்கவும் நான்-தான் வாங்கி களித்து – திருமுறை4:3 2/2
பை ஆர் பாம்பு கொடியது என பகர்வார் அதற்கும் பரிந்து முன்_நாள் – திருமுறை6:7 2/1
பை உடை பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே – திருமுறை6:31 6/3
பை உடை பாம்பை பயந்தது போன்று – திருமுகம்:4 1/188

மேல்


பைகளில் (1)

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் – திருமுறை6:65 1/721

மேல்


பைங்கரும்பே (1)

கான் வளர்த்த மலர் கோதை கனியே முக்கனியே பைங்கரும்பே செங்கை – தனிப்பாசுரம்:3 29/2

மேல்


பைங்கிள்ளாய் (1)

சுந்தர வாள் முக தோகாய் மறைகள் சொலும் பைங்கிள்ளாய்
கந்தர வார் குழல் பூவாய் கருணை கடைக்கண் நங்காய் – திருமுறை1:7 82/1,2

மேல்


பைங்கொடியே (2)

வாமம் படர் பைங்கொடியே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை1:7 9/4
பாழை அகற்ற நான் செலினும் பாராது இருந்தால் பைங்கொடியே
ஏழை அடி நான் என் செய்வேன் என்னை மடவார் இகழாரோ – திருமுறை3:18 10/3,4

மேல்


பைச்சு (1)

பைச்சு ஊர் அரவ பட நடத்தான் அயன் பற்பல நாள் – திருமுறை2:6 6/1

மேல்


பைசாசர் (1)

மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை1:1 2/88

மேல்


பைத்த (1)

பைத்த அரவ பணி அணிவார் பணை சூழ் ஒற்றி பதி மகிழ்வார் – திருமுறை3:15 6/1

மேல்


பைதல் (1)

பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம் – திருமுறை6:13 71/3

மேல்


பைந்தேனே (1)

செம் பால் கலந்த பைந்தேனே கதலி செழும் கனியே – திருமுறை1:7 58/2

மேல்


பைப்பறவே (1)

பைப்பறவே காணுதியேல் அ தருணத்து எல்லாம் பட்ட நடு_பகல் போல வெட்டவெளி ஆமே – திருமுறை6:106 90/4

மேல்


பைம் (4)

புல்லை மதித்து ஐயோ பைம் பூ இழந்த பொய் அடியேன் – திருமுறை2:20 18/2
தரும் பைம் பூம் பொழில் ஒற்றியூரிடத்து தலம்கொண்டார் அவர்-தமக்கு நாம் மகிழ்ந்து – திருமுறை2:35 4/3
வரும் பைம் சீர் தமிழ் மாலையோடு அணி பூ_மாலை சூட்டுதும் வருதி என் மனனே – திருமுறை2:35 4/4
மந்தாரம் சேர் பைம் பொழிலின்-கண் மயில் ஏறி – திருமுறை5:49 2/1

மேல்


பைம்பொன் (1)

பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண் – திருமுறை3:1 2/2

மேல்


பைம்பொன்னே (2)

அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே
நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டு – திருமுறை6:65 1/1356,1357
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே
எழு வகை நெறியினும் இயற்றுக எனவே – திருமுறை6:65 1/1364,1365

மேல்


பைய (4)

பைய நடப்பவரை பார்த்திலையோ வெய்ய நமன் – திருமுறை1:3 1/898
பைய பாம்பினை நிகர்த்த வெம் கொடிய பாவியேன் எந்த பரிசு கொண்டு அடைவேன் – திருமுறை5:29 3/2
பைய நான் ஊன்றி பார்த்ததே இல்லை பார்ப்பனேல் பயம் மிக படைப்பேன் – திருமுறை6:13 52/4
பைய மேலெனப்படுவன பலவற்றின் மேலாம் – தனிப்பாசுரம்:16 14/2

மேல்


பையிடை (1)

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் – திருமுறை6:65 1/691

மேல்


பையுள் (3)

கை கலந்த வண்மை கருப்பாசய பையுள்
செய் கருவுக்கு ஊட்டுவிக்கும் சித்தன் எவன் உய் கருவை – திருமுறை1:3 1/143,144
பையுள் உனக்கு என்னையோ நெஞ்சே – கீர்த்தனை:14 6/2
பையுள் உனக்கு என்னையோ – கீர்த்தனை:14 6/3

மேல்


பையுளொடும் (1)

பார் அறியாது அயல் வேறு பகர்வது கேட்டு ஒரு நீ பையுளொடும் ஐயமுறேல் காலை இது கண்டாய் – திருமுறை6:105 8/2

மேல்


பையை (2)

பாவம் எனும் ஓர் பெரும் சரக்கு பையை எடுத்து பண்பு அறியா – திருமுறை2:77 7/1
மலர்ந்த முகம் காட்டி நின்று திரு_நீற்று பையை மலர்_கரத்தால் அவிழ்த்து அங்கு வதிந்தவர்கட்கு எல்லாம் – திருமுறை4:3 5/2

மேல்


பைரவி (1)

எ கணமும் ஏத்தும் ஒரு முக்கணி பரம் பரை இமாசல_குமாரி விமலை இறைவி பைரவி அமலை என மறைகள் ஏத்திட இருந்து அருள்தரும் தேவியே – திருமுறை2:100 3/3

மேல்