நு – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுக 1
நுகர்ந்தார் 1
நுகர்ந்திருந்தேன் 1
நுகர்ந்து 1
நுகர்வார் 1
நுகர்வினை 1
நுங்கினும் 1
நுட்பமே 1
நுண் 5
நுண்_இடையார்க்கு 1
நுண்ணிய 1
நுண்ணியதாய் 1
நுண்ணுணர்வின் 1
நுண்மை 1
நுண்மை-தனிலே 1
நுண்மை-தனை 1
நுணுகவே 1
நுணுகி 1
நுதல் 61
நுதல்-பால் 1
நுதல்_கண் 8
நுதல்_கண்ணனே 1
நுதல்_கண்ணினனே 1
நுதல்_பாகன் 1
நுதலது 1
நுதலாய் 4
நுதலார் 10
நுதலார்-தமை 1
நுதலார்க்கு 1
நுதலால் 1
நுதலாள் 2
நுதலாளை 1
நுதலான் 2
நுதலான்-தன் 1
நுதலானை 2
நுதலிடை 1
நுதலில் 4
நுதலீர் 1
நுதலீரே 1
நுதலும் 2
நுதலே 7
நுதலை 2
நுதலோய் 1
நுதற்கு 1
நுந்தமை 1
நுந்தா 1
நுந்திய 1
நும் 82
நும்-பால் 1
நும்மாலே 2
நும்மிடத்தே 1
நும்மிடை 2
நும்முடைய 1
நும்மை 3
நுமக்கு 8
நுமக்குள் 1
நுமக்கே 6
நுமது 8
நுமை 2
நுமை-தான் 1
நுரை 1
நுரையிலே 1
நுவல் 2
நுவல்கேனோ 1
நுவலுகின்றதோர் 1
நுவலும் 1
நுவன்று 1
நுழைகின்றேன் 1
நுழைத்து 1
நுழைந்தது 2
நுழைந்தனன் 2
நுழைந்தனையே 11
நுழைந்தாண்டி 2
நுழைந்தால் 1
நுழைந்து 2
நுழைந்தே 1
நுழையும் 1
நுழையேனோ 1
நுனிப்படும் 1

நுக (1)

உழுகின்ற நுக படை கொண்டு உலைய தள்ளி உழக்கினும் நெட்டு உடல் நடுங்க உறுக்கி மேன்மேல் – திருமுறை2:23 6/3

மேல்


நுகர்ந்தார் (1)

ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார் நல் ஒற்றி தியாக_பெருமானார் – திருமுறை3:4 4/2

மேல்


நுகர்ந்திருந்தேன் (1)

கொலை பல புரிந்தே புலை நுகர்ந்திருந்தேன் கோடு உறு குரங்கினில் குதித்தே – திருமுறை6:15 25/1

மேல்


நுகர்ந்து (1)

தடி கடி நாய் போல் நுகர்ந்து வாய் சுவைத்து தவம் புரிந்தான் என நடித்தேன் – திருமுறை6:9 12/2

மேல்


நுகர்வார் (1)

கொடியவரே கொலை புரிந்து புலை_நுகர்வார் எனினும் குறித்திடும் ஓர் ஆபத்தில் வருந்துகின்ற போது – திருமுறை6:60 73/1

மேல்


நுகர்வினை (1)

வெண்மை வாழ்க்கையின் நுகர்வினை விரும்பி வெளுக்கின்றாய் உனை வெறுப்பதில் என்னே – திருமுறை2:37 5/2

மேல்


நுங்கினும் (1)

நுங்கினும் அங்கு ஓர் நல் நொறில் உண்டே மங்கையர்-தம் – திருமுறை1:3 1/758

மேல்


நுட்பமே (1)

நூல் காட்டு உயர் வேத நுட்பமே பால் காட்டும் – திருமுறை1:2 1/524

மேல்


நுண் (5)

இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன் – திருமுறை1:2 1/591
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை1:3 1/24
மின்னும் நுண் இடை பெண் பெரும் பேய்கள் வெய்ய நீர் குழி விழுந்தது போக – திருமுறை2:2 3/1
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 24/4
மின்னை அன்ன நுண் இடை இள மடவார் வெய்ய நீர் குழி விழுந்து இளைத்து உழன்றேன் – திருமுறை5:42 6/1

மேல்


நுண்_இடையார்க்கு (1)

இல் நடிக்கும் நுண்_இடையார்க்கு ஏவல் புரிந்தேன் அலது உன் – திருமுறை1:2 1/591

மேல்


நுண்ணிய (1)

நுண்ணிய அறிவால் நோக்குபு திருத்தம் – தனிப்பாசுரம்:30 2/67

மேல்


நுண்ணியதாய் (1)

நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை4:6 6/4

மேல்


நுண்ணுணர்வின் (1)

நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 5/1

மேல்


நுண்மை (1)

அடிக்கடி நுண்மை விழைந்து போய் அவைகள் அடுக்கிய இடம்-தொறும் அலைந்தே – திருமுறை6:9 12/1

மேல்


நுண்மை-தனிலே (1)

நீரிலே நீர் உற்ற நிறையிலே நிறை உற்ற நிலையிலே நுண்மை-தனிலே நிகழ்விலே நிகழ்வு உற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே தண்மை-தனிலே – திருமுறை6:25 7/1

மேல்


நுண்மை-தனை (1)

நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை
தூய விடை மேல் வரும் நமது சொந்த துணையை தோற்றுவிக்கும் – திருமுறை2:1 7/1,2

மேல்


நுணுகவே (1)

ஏறி போகப்போக நூலின் இழை போல் நுணுகவே
அங்கே திகைத்து நடுங்கும் போது என் நடுக்கம் நீக்கியே – கீர்த்தனை:29 3/2,3

மேல்


நுணுகி (1)

ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகி
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தை தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை – திருமுறை6:13 120/1,2

மேல்


நுதல் (61)

பெண்ணால் எவையும் பிறப்பித்து மற்றை நுதல்
கண்ணால் அழிக்கின்ற கள்வன் எவன் எண்ணாது – திருமுறை1:3 1/217,218
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை1:3 1/419
பூ_உலகர்க்கு ஈது ஒன்றும் போதாதோ தாவு நுதல்
கண்_சுமந்தான் அன்பன் கலங்கா வகை வைகை – திருமுறை1:3 1/496,497
ஒண் பிறையே ஒண் நுதல் என்று உன்னுகின்றாய் உள் எலும்பாம் – திருமுறை1:3 1/633
கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான – திருமுறை1:4 99/1
கண் உடைய நுதல் கரும்பே மன்றில் ஆடும் காரண_காரியம் கடந்த கடவுளே நின் – திருமுறை1:5 89/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 68/2
கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை – திருமுறை1:6 109/1
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் – திருமுறை1:6 111/1
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை1:6 119/4
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும் – திருமுறை1:6 214/1
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான் – திருமுறை1:6 214/2
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 221/2
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை1:6 225/4
கண்டாரை கண்டவர் அன்றோ திருவொற்றி கண்_நுதல் சேர் – திருமுறை1:7 43/3
வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால் மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும் – திருமுறை2:2 1/1
கோட்டமுற்றதோர் நிலையொடு நின்ற கொடிய காமனை கொளுவிய நுதல் தீ – திருமுறை2:5 3/3
காற்றி நின்ற நம் கண் நுதல் கரும்பை கைலை ஆளனை காணுதல் பொருட்டே – திருமுறை2:7 2/4
கல்லை வில்லாக்கும் கருணை_வாரிதியே கண் நுதல் உடைய செங்கனியே – திருமுறை2:11 4/3
பொன்னையுற்றவனும் அயனும் நின்று அறியா புண்ணியா கண் நுதல் கரும்பே – திருமுறை2:12 10/1
அண்ணலே அமுதே அரைசே நுதல்_கண்ணனே – திருமுறை2:13 7/2
அக்க_நுதல் பிறை_சடையாய் நின் தாள் ஏத்தேன் ஆண்_பனை போல் மிக நீண்டேன் அறிவு ஒன்று இல்லேன் – திருமுறை2:23 8/1
எரிந்திட எயில் மூன்று அழற்றிய நுதல் கண் எந்தையே எனக்கு உறும் துணையே – திருமுறை2:41 7/3
கண் நுதல் கரும்பே நின் முனம் நீல_கண்டம் என்று ஓதுதல் மறந்தே – திருமுறை2:47 8/1
கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே – திருமுறை2:58 7/2
கண்ணார் நுதல் செங்கரும்பே முக்கனியே கருணை_கடலே செவ் – திருமுறை2:60 5/3
கறையிடும் கண்டத்து ஒரு பெரும் கருணை கடவுளே கண் நுதல் கரும்பே – திருமுறை2:68 1/2
திலக ஒண் நுதல் உண்ணாமுலை உமையாள் சேர் இட பாலும் கண்டு அடியேன் – திருமுறை2:71 7/3
திரு வண்ண நதியும் வளை ஒரு வண்ண மதியும் வளர் செவ் வண்ணம் நண்ணு சடையும் தெருள் வண்ண நுதல் விழியும் அருள் வண்ண வதனமும் திகழ் வண்ண வெண் நகையும் ஓர் – திருமுறை2:78 1/1
கண் உறு நுதல் பெரும் கடவுளே மன்றினில் கருணை நடம் இடு தெய்வமே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 2/4
கற்று வழு_அற்றவர் கருத்து அமர் கருத்தனே கண் நுதல் கடவுள் மணியே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 7/4
கான் முக கட களிற்று உரி கொண்ட கடவுளே கண் கொண்ட நுதல் அண்ணலே கனக அம்பல நாத கருணை அம் கண போத கமல குஞ்சிதபாதனே – திருமுறை2:78 10/4
திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை2:82 1/4
கறை மணி_கண்ட போற்றி கண் நுதல் கரும்பே போற்றி – திருமுறை2:94 6/2
பொழியா மறையின் முதலே நுதல் ஏய் – திருமுறை2:94 42/3
அ கண் நுதல் எம்பிரான் தில்லை அம் பதி மருவும் அண்ணலார் மகிழும் மணியே அகிலாண்டமும் சராசரமும் ஈன்று அருள் பரசிவானந்த வல்லி உமையே – திருமுறை2:100 3/4
திங்கள் நுதல் திருவை அருள் குருவை மலர் ஓங்கிய பெண் தெய்வம்-தன்னை – திருமுறை2:101 2/3
விற்கு அண்டாத நுதல் மடவாள் வேட்ட நடன வித்தகனார் – திருமுறை3:5 7/1
கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே – திருமுறை4:1 6/1
வாள் நுதல் பெருமாட்டிமாரொடு – திருமுறை5:12 28/1
அரை_மதிக்கு உறழும் ஒள் நுதல் வாள் கண் அலர் முலை அணங்கு_அனார் அல்குல் – திருமுறை5:37 4/1
மருந்து என மயக்கும் குதலை அம் தீம் சொல் வாள் நுதல் மங்கையரிடத்தில் – திருமுறை5:37 8/1
திலகம் திகழ்வாள் நுதல் பரையின் செல்வ புதல்வா திறல்-அதனால் – திருமுறை5:45 1/3
கண் நுதல் சேயரே வாரும் – திருமுறை5:54 4/2
ஒள் நுதல் நேயரே வாரும் – திருமுறை5:54 4/3
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னை – திருமுறை6:13 16/1
வில் பூ ஒள் நுதல் மடவார் சொல்_போர் செய்கின்றார் விண் நிலவு நடராயர் எண்ணம் அறிந்திலனே – திருமுறை6:63 16/4
ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திட – திருமுறை6:65 1/1457
காலவனே கனல் கையவனே நுதல் கண்ணவனே – திருமுறை6:84 6/2
கண் நுதல் சேயரே வாரும் – கீர்த்தனை:16 4/2
ஒள் நுதல் நேயரே வாரும் – கீர்த்தனை:16 4/3
எனக்கும் நின்னை போல நுதல் கண் ஈந்து மதனையே – கீர்த்தனை:29 39/1
கை ஆரும் கனியே நுதல் கண் கொண்ட செங்கரும்பே – கீர்த்தனை:32 4/2
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – கீர்த்தனை:41 1/28
கள் நிலவு நுதல் கரும்பின் கழல் பதமும் அன்பினொடு கருதி சென்றே – தனிப்பாசுரம்:3 3/3
தம் பொவு இல் முகம் ஆறு கொண்டு நுதல் ஈன்ற பொறி சரவணத்தில் – தனிப்பாசுரம்:7 3/2
திலகம் தழைத்த நுதல் கரும்பே செல்வ திருவே கலை குருவே சிறக்கும் மலை_பெண்மணியே மா தேவி இச்சை ஞானமொடு – தனிப்பாசுரம்:20 2/2
திலகம் செறி வாள் நுதல் கரும்பே தேனே கனிந்த செழும் கனியே தெவிட்டாது அன்பர் உளத்து உள்ளே தித்தித்து எழும் ஓர் தெள் அமுதே – தனிப்பாசுரம்:22 1/2
கனி மதுரம் ஒழுகு செம் பதிக செழும் சொல்_மழை கண்_நுதல் பவள மலையில் – தனிப்பாசுரம்:24 1/28
மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே – தனிப்பாசுரம்:27 6/4

மேல்


நுதல்-பால் (1)

காணார் நின் நாமம் கருதுகின்றோர் ஒற்றி கண்_நுதல்-பால் – திருமுறை1:7 39/3

மேல்


நுதல்_கண் (8)

கண்ணப்பன் ஏத்தும் நுதல்_கண் அப்ப மெய்ஞ்ஞான – திருமுறை1:4 99/1
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 68/2
ஓயா கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால் – திருமுறை1:6 111/1
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே – திருமுறை1:6 119/4
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே – திருமுறை1:6 178/2
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே – திருமுறை1:6 221/2
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே – திருமுறை1:6 225/4
மோகம் இலாது அளித்த நுதல்_கண் கரும்பே கலிகால முறைமை நன்றே – தனிப்பாசுரம்:27 6/4

மேல்


நுதல்_கண்ணனே (1)

அண்ணலே அமுதே அரைசே நுதல்_கண்ணனே
உனை காண வந்தோர்க்கு எல்லாம் – திருமுறை2:13 7/2,3

மேல்


நுதல்_கண்ணினனே (1)

கம்_கரனே மதி_கண்ணியனே நுதல்_கண்ணினனே
நம் கரம் மேவிய அம் கனி போன்று அருள் நாயகனே – திருமுறை2:58 7/2,3

மேல்


நுதல்_பாகன் (1)

திலகம் பரவும் நுதல்_பாகன் என்பது அருளின் திறத்து அன்றே – திருமுறை2:82 1/4

மேல்


நுதலது (1)

கண் ஆர் நுதலது கண் ஆர் மணியது கண்டு கொள்ள – திருமுறை2:86 4/3

மேல்


நுதலாய் (4)

வாங்கும் நுதலாய் நீயும் எனை மருவி கலந்து மலர் தளியில் – திருமுறை1:8 142/3
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 14/4
வில் ஆர் நுதலாய் மகளே நீ மேலை_நாள் செய் தவம் எதுவோ – திருமுறை3:9 6/1
திலக_நுதலாய் என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை3:10 18/4

மேல்


நுதலார் (10)

வண்டு நின்று அலைக்கும் குழல் பிறை நுதலார் வஞ்சக விழியினால் மயங்கி – திருமுறை2:44 6/3
கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றி காவலனார் – திருமுறை3:3 25/1
கண் ஆர் நுதலார் மணி_கண்டர் கனக வரையாம் கன_சிலையார் – திருமுறை3:4 8/1
காலை மலர்ந்த கமலம் போல் கவின் செய் முகத்தார் கண்_நுதலார் – திருமுறை3:10 9/1
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை3:13 1/2
நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை3:13 1/2
கரு வாழ்வு அகற்றும் கண்_நுதலார் கண்ணன் அயனும் காண்ப அரியார் – திருமுறை3:16 2/1
காதம் மணக்கும் கடி மலர் பூங்கா ஆர் ஒற்றி கண்_நுதலார் – திருமுறை3:18 2/1
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளை சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும் – திருமுறை5:1 3/3
கண் ஆர் நுதலார் விடம் ஆர் களனார் கரம் ஆர் மழுவார் களைகண்ணார் – திருமுறை5:39 7/1

மேல்


நுதலார்-தமை (1)

திலக வாள் நுதலார்-தமை கனவிடத்தும் சிறிதும் நான் விழைந்திலேன் இந்த – திருமுறை6:58 6/1

மேல்


நுதலார்க்கு (1)

திலக வாள்_நுதலார்க்கு உழன்றினை தீமையே புரிந்தாய் விரிந்தனை – திருமுறை2:88 13/3

மேல்


நுதலால் (1)

திரு_கண் நுதலால் திரு_மகனை தீர்த்தார் ஒற்றி தேவர் அவர் – திருமுறை3:16 5/1

மேல்


நுதலாள் (2)

ஒள் நுதலாள் உமை வாழ் இடத்தானை ஒருவனை ஒப்பு இலா உத்தமன்-தன்னை – திருமுறை2:33 6/2
திலக வாள் நுதலாள் இவ்வணம் புலம்பி தியக்கமுற்று அழுங்குகின்றாளே – திருமுறை2:102 3/4

மேல்


நுதலாளை (1)

சிலை பயின்ற நுதலாளை கலை_வாணி அம்மையை நாம் சிந்திப்போமே – திருமுறை2:101 3/4

மேல்


நுதலான் (2)

கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய் கதை ஒலியும் – திருமுறை1:6 142/1
காசு ஆர் அரவ கச்சு ஏர் இடையான் கண் ஆர் நுதலான் கனிவுற்று – திருமுறை2:24 10/3

மேல்


நுதலான்-தன் (1)

இன்புற கண்_நுதலான்-தன் திரு_கோயில் பணிபுரிந்து ஈண்டு இருக்கும் நல்லோர் – தனிப்பாசுரம்:3 43/2

மேல்


நுதலானை (2)

கடு ததும்பும் மணி_கண்டத்தினானை கண்_நுதலானை எம் கண் அகலானை – திருமுறை2:33 2/3
கண்_நுதலானை என் கண் அமர்ந்தானை கருணாநிதியை கறை_மிடற்றானை – திருமுறை2:33 6/1

மேல்


நுதலிடை (1)

தார் வேய்ந்து விடம் கலந்த களம் காட்டி நுதலிடை ஓர் தழல்_கண் காட்டி – திருமுறை5:51 8/2

மேல்


நுதலில் (4)

போக்கு அரிய நல் நுதலில் பொட்டு அழகும் தேக்கு திரிபுண்டரத்தின் – திருமுறை1:3 1/420
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:10 7/3
கண்மணியே கற்பகமே கண் நுதலில் கொள் கரும்பே – திருமுறை2:45 13/2
சிலை நேர் நுதலில் சிறு வியர்வு அரும்ப – திருமுகம்:4 1/312

மேல்


நுதலீர் (1)

விழி ஒண் நுதலீர் ஒற்றி_உளீர் வேதம் பிறவி_இலர் என்றே – திருமுறை1:8 99/1

மேல்


நுதலீரே (1)

மின் கண்_நுதலீரே வாரீர் – கீர்த்தனை:17 65/3

மேல்


நுதலும் (2)

கண்_நுதலும் அங்கை கனி அன்றோ எண்ணுமிடத்து – திருமுறை1:3 1/1142
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை2:71 1/2

மேல்


நுதலே (7)

கண்_நுதலே நின் தாள் கருதாரை நேசிக்க – திருமுறை1:4 35/1
கண்_நுதலே கருணை_கடலே என் கருத்து இதுவே – திருமுறை1:6 214/4
கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:23 2/1
கை ஓர் அனல் வைத்து ஆடுகின்ற கருணாநிதியே கண்_நுதலே – திருமுறை2:60 8/3
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே கண்_நுதலே ஆனந்த களிப்பே மெய் கதியே – திருமுறை4:1 1/2
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய் கண்_நுதலே இங்கு இதற்கு கைம்மாறு ஒன்று அறியேன் – திருமுறை4:1 22/2
கரு வேரற்றிடவே களைகின்ற என் கண்_நுதலே – கீர்த்தனை:31 7/2

மேல்


நுதலை (2)

கறை ஓர் கண்டத்து அணிந்து அருளும் கருணாநிதியை கண்_நுதலை – திருமுறை2:91 4/1
கருத்தனை என் கண்மணியை கண்_நுதலை பெரும் கருணை_கடலை வேத – திருமுறை6:71 1/1

மேல்


நுதலோய் (1)

கண் ஆர் நுதலோய் பெரும் கருணை_கடலோய் கங்கை மதி சடையோய் – திருமுறை2:60 7/1

மேல்


நுதற்கு (1)

பொன் நுதற்கு திலகம் எனும் சிவகாமவல்லி பூவை ஒரு புறம் களிப்ப பொது நடம் செய் பொருளே – திருமுறை4:3 10/4

மேல்


நுந்தமை (1)

எந்தாய் நுந்தமை ஈன்ற நற்றாயின் – திருமுகம்:1 1/47

மேல்


நுந்தா (1)

நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை3:13 1/2

மேல்


நுந்திய (1)

கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்கு கூறுவனே – திருமுறை3:3 8/4

மேல்


நும் (82)

மோகாதிக்கு உள்ளே முயல்கின்றாய் ஓகோ நும்
கோ முடி-கண் தீ பற்றிக்கொண்டது என்றால் மற்று அதற்கு – திருமுறை1:3 1/1076,1077
வீழ்வு கொடு வாளா விழுகின்றாய் தாழ்வு உற நும்
விண்டு உறும் கை வீடு அனலால் வேகின்றது என்ன உள் போய் – திருமுறை1:3 1/1080,1081
நீ நயம் உற்று அந்தோ நிகழ்கின்றாய் ஆன நும் ஊர் – திருமுறை1:3 1/1084
சால்புற சேர் அண்ட சராசரங்கள் எல்லாம் நும்
கால்_விரல்-பால் நின்று ஒடுங்கும் கால் – திருமுறை1:4 11/3,4
செயலார் அடியர்க்கு அருள்வீர் நும் சிரத்தும் உரத்தும் திகழ் கரத்தும் – திருமுறை1:8 43/2
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – திருமுறை1:8 50/1
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் நகை என்றே – திருமுறை1:8 61/3
சுகம் சேர்ந்திடும் நும் மொழிக்கு என்றேன் தோகாய் உனது மொழிக்கு என்றே – திருமுறை1:8 67/3
உய்ய உரைப்பேம் என்றார் நும் உரை என் உரை என்றேன் இங்கே – திருமுறை1:8 70/3
கோடா ஒற்றி_உடையீர் நும் குலம்-தான் யாதோ கூறும் என்றேன் – திருமுறை1:8 115/1
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை1:8 117/1
மதில் ஒற்றியின் நீர் நும் மனையாள் மலையின் குலம் நும் மைந்தருள் ஓர் – திருமுறை1:8 117/1
எதிர் அற்று அருள்வீர் நும் குலம் இங்கு எதுவோ என்றேன் மனைவியருள் – திருமுறை1:8 117/3
விடம் சேர் களத்தீர் நும் மொழி-தான் வியப்பாம் என்றேன் நயப்பால் நின் – திருமுறை1:8 125/3
பெரும் பை அணியீர் திருவொற்றி பெரியீர் எது நும் பெயர் என்றேன் – திருமுறை1:8 146/2
மலையை சிலையா கொண்டீர் நும் மா வல்லபம் அற்புதம் என்றேன் – திருமுறை1:8 147/2
ஏங்கும்படி நும் இடை சிறுமை எய்திற்று அலது ஈண்டு எமக்கு இன்றால் – திருமுறை1:8 165/3
சிந்தை நொந்து உலகில் பிறர்-தம்மை சேர்ந்திடாது நும் திரு_பெயர் கேட்டு – திருமுறை2:15 5/1
ஐய நும் அடி அன்றி ஓர் துணையும் அறிந்திலேன் இஃது அறிந்து அருளீரேல் – திருமுறை2:15 9/3
அறம் கொள் நும் அடி அரண் என அடைந்தேன் அயர்வு தீர்த்து எனை ஆட்கொள நினையீர் – திருமுறை2:46 5/3
நெருப்பு நும் உரு ஆயினும் அருகில் நிற்க அஞ்சுறேன் நீலனும் அன்றால் – திருமுறை2:46 7/3
அடியர்-தம் பொருட்டு அடிபடுவீர் எம் ஐய நும் அடிக்கு ஆட்பட விரைந்தேன் – திருமுறை2:46 8/2
பூதம் நும் படை எனினும் நான் அஞ்சேன் புதிய பாம்பின் பூண் பூட்டவும் வெருவேன் – திருமுறை2:54 2/1
ஆர்ந்து நும் அடிக்கு அடிமைசெய்திட பேர் ஆசைவைத்து உமை அடுத்தனன் அடிகேள் – திருமுறை2:54 5/2
ஓல வெவ் விடம் வரில் அதை நீயே உண்க என்றாலும் நும் உரைப்படி உண்கேன் – திருமுறை2:54 9/2
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3
பன்ன என் உயிர் நும் பொருட்டாக பாற்றி நும் மிசை பழிசுமத்துவல் காண் – திருமுறை2:54 11/3
பொற்றை நேர் புயத்து ஒளிர் திரு_நீற்றை பூசுகின்றனன் புனித நும் அடி-கண் – திருமுறை2:55 3/2
கள்ளம் ஓதிலேன் நும் அடி அறிய காம வேட்கையில் கடலினும் பெரியேன் – திருமுறை2:55 4/2
கலிய நெஞ்சினேன் வஞ்சக வாழ்வில் கலங்கி ஐய நும் கருணையாம் அமுதை – திருமுறை2:55 7/2
ஐய நும் அடிக்கு ஆட்செயல் உடையேன் ஆண்ட நீர் எனை அகற்றுதல் அழகோ – திருமுறை2:55 8/3
கண்ணின் நல்ல நும் கழல் தொழ இசைந்தால் கலக்கம் காண்பது கடன் அன்று கண்டீர் – திருமுறை2:55 11/3
வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம் புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 2/4
அனிச்சய உலகினை பார்க்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 1/4
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1
உறுவது நும் அருள் அன்றி பிறிது ஒன்றும் உவவேன் உன்னல் உம் திறன் அன்றி பிறிது ஒன்றும் உன்னேன் – திருமுறை6:34 2/2
மறு நெறி தீர்த்து எனை வாழ்வித்து கொண்டீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 2/3
அறுசுவை_உண்டி கொண்டு அருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 2/4
விரும்பி நும் பொன் அடிக்கு ஆட்பட்டு நின்றேன் மேல் விளைவு அறிகிலன் விச்சை ஒன்று இல்லேன் – திருமுறை6:34 3/2
துரும்பினும் சிறியனை அன்று வந்து ஆண்டீர் தூய நும் பேர்_அருள் சோதி கண்டு அல்லால் – திருமுறை6:34 3/3
அரும்_பெறல் உண்டியை விரும்பவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 3/4
தொடுத்து ஒன்று சொல்கிலேன் சொப்பனத்தேனும் தூய நும் திரு_அருள் நேயம் விட்டு அறியேன் – திருமுறை6:34 4/2
அடுத்து இனி பாயலில் படுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 4/4
நேச நும் திரு_அருள் நேசம் ஒன்று அல்லால் நேசம் மற்று இலை இது நீர் அறியீரோ – திருமுறை6:34 5/2
ஆசையில் பிறரொடு பேசவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 5/4
இன்பொடு வாங்கிக்கொண்டு என்னை ஆட்கொண்டீர் என் செயல் ஒன்று இலை யாவும் நும் செயலே – திருமுறை6:34 6/2
வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும் திரு_வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 6/3
அன்பொடு காண்பாரை முன்பிட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 6/4
வருந்தலை என்று எனை தேற்றியவாறே வள்ளலே இன்று நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 7/3
அரும் தவர் நேரினும் பொருந்தவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 7/4
வரை கண எண்_குண மா நிதி ஆனீர் வாய்மையில் குறித்த நும் வரவு கண்டு அல்லால் – திருமுறை6:34 8/3
அரை_கணம் ஆயினும் தரித்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 8/4
மடுக்க நும் பேர்_அருள் தண் அமுது எனக்கே மாலையும் காலையும் மத்தியானத்தும் – திருமுறை6:34 9/1
அடுக்க வீழ் கலை எடுத்து உடுக்கவும்_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 9/4
அறுத்து உரைக்கின்றேன் நான் பொறுத்திட_மாட்டேன் அருள்_பெரும்_சோதியீர் ஆணை நும் மீதே – திருமுறை6:34 10/4
உத்தமம் ஆகும் நும் திரு_சமுகத்து என் உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன் – திருமுறை6:76 1/2
ஆணை நும் ஆணை என் அருள்_பெரும்_சோதி ஆண்டவரே திரு_அம்பலத்தவரே – திருமுறை6:76 2/1
தித்திக்க பேசி கசப்பு உள்ளே காட்டும் திருட்டு பேச்சு அன்று நும் திருவுளம் அறியும் – திருமுறை6:76 7/1
புன்_மார்க்கத்து உள்ளும் புறத்தும் வேறு ஆகி புகன்ற சொல் அன்று நும் பொன் அடி கண்ட – திருமுறை6:76 8/1
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே – திருமுறை6:76 9/2
பட_மாட்டேன் துயர் சிறிதும் பட_மாட்டேன் இனி நான் பயப்படவும்_மாட்டேன் நும் பத துணையே பிடித்தேன் – திருமுறை6:79 1/1
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
விட_மாட்டேன் ஏமாந்துவிட_மாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது நும் ஆணை விளம்பினன் நும் அடியேன் – திருமுறை6:79 1/2
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:79 1/3
இது தருணம் என்றேன் நான் என்பதன் முன் கொடுத்தீர் என் புகல்வேன் என் புடை நும் அன்பிருந்தவாறே – திருமுறை6:79 8/4
இ நாளே ஆதலினால் எனக்கு அருள்வீர் என்றேன் என்பதன் முன் அளித்தீர் நும் அன்பு உலகில் பெரிதே – திருமுறை6:79 10/4
பச்சையும் செம்மையும் கருமையும் கூடி பலித்த நும் வாழ்க்கையில் பண்பு ஒன்றும் இல்லீர் – திருமுறை6:96 5/2
என் மார்க்கம் எ சுகம் யாது நும் வாழ்க்கை எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:96 8/4
புரையுறு நும் குலங்கள் எலாம் புழு குலம் என்று அறிந்தே புத்தமுதம் உண்டு ஓங்கும் புனித குலம் பெறவே – திருமுறை6:97 7/3
இகம் அறியீர் பரம் அறியீர் என்னே நும் கருத்து ஈது என் புரிவீர் மரணம் வரில் எங்கு உறுவீர் அந்தோ – திருமுறை6:98 18/2
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:98 23/1
பொருட்டு_அல நும் போகம் எலாம் பொய்யாம் இங்கு இது நான் புகலுவது என் நாள்-தொறும் நும் புந்தியில் கண்டதுவே – திருமுறை6:98 23/1
பெண்டாள திரிகின்ற பேய் மனத்தீர் நும் உயிரை பிடிக்க நாளை – திருமுறை6:99 4/2
மறந்தவரை தீ மூட்ட வல்லீரால் நும் மனத்தை வயிரம் ஆன – திருமுறை6:99 5/3
வாது பேசிய மனிதர்காள் ஒரு வார்த்தை கேள்-மீன்கள் வந்து நும்
போது போவதன் முன்னரே அருள் பொதுவிலே நடம் போற்றுவீர் – திருமுறை6:108 44/1,2
தஞ்சோ என்றவர்-தம் சோபம் தெறு தந்தா வந்தனம் நும் தாள் தந்திடு – கீர்த்தனை:1 186/3
ஊன்று நும் சேவடி சான்று தரிக்கிலேன் – கீர்த்தனை:17 56/1
ஐவணம் காட்டும் நும் மெய் வணம் வேட்டுநின்று – கீர்த்தனை:17 86/1
தண் கா வளம் சூழ் திருவொற்றி தலத்தில் அமர்ந்த சாமி நும் கை – தனிப்பாசுரம்:10 6/1
தேம் ஊன்றின நும் மொழி என்றேன் செவ் வாய் உறும் உன் முறுவல் என்றார் – தனிப்பாசுரம்:10 17/3
வயலார் ஒற்றி மேவு பிடிவாதர் நும் பேர் யாது என்றேன் – தனிப்பாசுரம்:10 28/1
பெருத்த முலையோடு இளம் பருவமுடன் அழகு உடைய பெண் அகப்படுமாகிலோ பேசிடீர் அ பரம பத நாட்டினுக்கு நும் பிறகு இதோ வருவம் என்பார் – தனிப்பாசுரம்:15 7/3

மேல்


நும்-பால் (1)

எணம் புதைக்க துயில்வார் நும்-பால் துயிலற்கு அஞ்சுவரே இழுதையீரே – திருமுறை6:99 7/4

மேல்


நும்மாலே (2)

கூடிய என் கணவர் எனை கூடாமல் கலைக்க கூடுவதோ நும்மாலே என்ற அதனாலோ – திருமுறை6:63 24/1
சற்றும் அதை நும்மாலே தடுக்க முடியாதே சமரச சன்மார்க்க சங்கத்தவர்கள் அல்லால் அதனை – திருமுறை6:98 24/2

மேல்


நும்மிடத்தே (1)

வட்டி இட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணி மன்றில் நடம் புரிவீர் வந்து அருள்வீர் விரைந்தே – திருமுறை6:33 2/4

மேல்


நும்மிடை (2)

தாங்கும் புகழ் நும்மிடை சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும் என்றேன் – திருமுறை1:8 165/2
வெண்மை நெஞ்சினேன் மெய் என்பது அறியேன் விமல நும்மிடை வேட்கையும் உடையேன் – திருமுறை2:55 2/1

மேல்


நும்முடைய (1)

வாங்கி எனக்கு அளித்த அருள் மா தவரே நும்முடைய மலர்_தாள் போற்றி – தனிப்பாசுரம்:3 6/4

மேல்


நும்மை (3)

வள்ளியீர் என நும்மை வந்து அடைந்தால் வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்லீர் – திருமுறை2:15 2/2
அருள் திறம் சேர்ந்து எண்ணியவாறு ஆடு-மினோ நும்மை அடுப்பவரே அன்றி நின்று தடுப்பவர் மற்று இலையே – திருமுறை6:98 23/4
சுட்டாலும் சுடும் அது கண்டு உமது உடம்பு துடியாது என் சொல்லீர் நும்மை
தொட்டாலும் தோஷமுறும் விட்டாலும் கதி இலை மேல் சூழ்வீர் அன்றே – திருமுறை6:99 8/3,4

மேல்


நுமக்கு (8)

பலம் சேர் ஒற்றி பதி_உடையீர் பதி வேறு உண்டோ நுமக்கு என்றேன் – திருமுறை1:8 31/1
நீரை விழுங்கும் சடை_உடையீர் உளது நுமக்கு நீர் ஊரும் – திருமுறை1:8 156/1
சோற்றுத்துறை என்றார் நுமக்கு சோற்று கருப்பு ஏன் சொலும் என்றேன் – திருமுறை1:8 164/2
எணம் ஏது நுமக்கு எனை-தான் யார் தடுக்கக்கூடும் என்று உரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் – திருமுறை6:63 21/2
நாகாதிபதிகளும் நின்று ஏத்த வளர்க்கின்றீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 2/4
நாதாந்த தனி செங்கோல் நான் செலுத்த கொடுத்தீர் நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 3/4
நார் நீட நான் தானாய் நடம் புரிகின்றீரே நடராஜரே நுமக்கு நான் எது செய்வேனே – திருமுறை6:79 4/4
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு மறந்தும் இதை நினைக்கில் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர் – திருமுறை6:98 25/2

மேல்


நுமக்குள் (1)

என் மார்க்கத்து எனை நுமக்குள் ஒருவன் என கொள்வீர் எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர் – திருமுறை6:64 46/2

மேல்


நுமக்கே (6)

முன் போலே ஏமாந்து விட_மாட்டேன் கண்டீர் முனிவு அறியீர் இனி ஒளிக்க முடியாது நுமக்கே
என் போலே இரக்கம் விட்டு பிடித்தவர்கள் இலையே என் பிடிக்குள் இசைந்தது போல் இசைந்தது இலை பிறர்க்கே – திருமுறை6:33 6/2,3
கோணை என் உடல் பொருள் ஆவியும் நுமக்கே கொடுத்தனன் இனி என் மேல் குறை சொல்ல வேண்டாம் – திருமுறை6:76 2/3
உகத்து எனது உடல் பொருள் ஆவியை நுமக்கே ஒருமையின் அளித்தனன் இருமையும் பெற்றேன் – திருமுறை6:76 3/3
ஆய்மட்டில் என் உடல் ஆதியை நுமக்கே அன்புடன் கொடுத்தனன் ஆண்டவரே நீர் – திருமுறை6:76 6/3
தன் மார்க்கத்து என் உடல் ஆதியை நுமக்கே தந்தனன் திரு_அருள் சந்நிதி முன்னே – திருமுறை6:76 8/3
விச்சை எலாம் வல்ல நும் திரு_சமுக விண்ணப்பம் என் உடல் ஆதியை நுமக்கே
நிச்சலும் தந்தனன் என் வசம் இன்றி நின்றனன் என்றனை நீர் செய்வது எல்லாம் – திருமுறை6:76 9/2,3

மேல்


நுமது (8)

பற்று முடித்தோர் புகழ் ஒற்றி பதியீர் நுமது பசுவின் இடை_கற்று – திருமுறை1:8 78/1
ஆற்று சடையார் இவர் பலி என்று அடைந்தார் நுமது ஊர் யாது என்றேன் – திருமுறை1:8 164/1
வல்லவரே நுமது திருவாய்_மலர வேண்டும் வயங்கு திரு_மணி மன்றில் வாழ் பெரிய துரையே – திருமுறை6:62 4/4
எம்பலத்தே மலர் அணையை புனைக என பல கால் இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்து நுமது அருளாம் – திருமுறை6:62 10/3
முன் செய்து கொண்டதும் இங்ஙனம் கண்டீர் மூ வகையாம் உடல் ஆதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன் அடி காண பொருந்தி கொடுத்தேன் – திருமுறை6:76 10/2,3
போதாந்த நிலையும் அப்பால் புகல் அரிதாம் பெரிய பொருள் நிலையும் தெரிவித்தீர் புண்ணியரே நுமது
பாதாந்தம் அறிவித்தீர் சுத்த வடிவுடனே பகர் பிரணவாகார பரிசும் எனக்கு அளித்தீர் – திருமுறை6:79 3/2,3
சினம் உடைய கூற்று வரும் செய்தி அறியீரோ செத்த நுமது இனத்தாரை சிறிதும் நினையீரோ – திருமுறை6:97 8/2
வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் – திருமுறை6:97 9/1

மேல்


நுமை (2)

பொற்றை தனத்தீர் நுமை விழைந்தார் புரத்தே மதியம் தேய்கின்றது – திருமுறை1:8 124/3
பெறுவது நுமை அன்றி பிறிது ஒன்றும் விரும்பேன் பேசல் நும் பேச்சு அன்றி பிறிது ஒன்றும் பேசேன் – திருமுறை6:34 2/1

மேல்


நுமை-தான் (1)

மொழியும் நுமை-தான் வேய் ஈன்ற முத்தர் எனல் இங்கு என் என்றேன் – திருமுறை1:8 99/2

மேல்


நுரை (1)

புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர் – திருமுறை6:65 1/1387

மேல்


நுரையிலே (1)

கரை இலா கடலிலே கடல் உப்பிலே கடல் கடையிலே கடல் இடையிலே கடல் முதலிலே கடல் திரையிலே நுரையிலே கடல் ஓசை-அதன் நடுவிலே – திருமுறை6:25 14/1

மேல்


நுவல் (2)

நொந்தேன் முலை மீது அ உரை என்றார் நுவல் என்னே – திருமுறை5:49 5/4
நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம் – திருமுறை6:65 1/625

மேல்


நுவல்கேனோ (1)

நூல்_இழை நான் என்று நுவல்கேனோ மால் இடு நீ – திருமுறை1:3 1/1132

மேல்


நுவலுகின்றதோர் (1)

நூல் வகை ஞானத்தின் நுவலுகின்றதோர்
நால் வகை நிலைகளின் நண்ணுவோர்களும் – தனிப்பாசுரம்:2 24/2,3

மேல்


நுவலும் (1)

நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை5:8 6/2

மேல்


நுவன்று (1)

நூலொடு மெய்ம்மொழி நுவன்று அருள் பதியே – திருமுகம்:2 1/50

மேல்


நுழைகின்றேன் (1)

நொந்து ஆகுலத்தின் நுழைகின்றேன் சிந்தாத – திருமுறை1:4 87/2

மேல்


நுழைத்து (1)

ஊன் மலர நுழைத்து ஏந்தும் வயிரவ நின் போற்றி என உவந்து வாழ்த்தி – தனிப்பாசுரம்:3 27/4

மேல்


நுழைந்தது (2)

எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3
எந்த மட்டும் நுழைந்தது என்றால் வால் மட்டும் நுழைந்தது என இசைக்கின்றோரும் – தனிப்பாசுரம்:27 9/3

மேல்


நுழைந்தனன் (2)

அன்பு எனும் குடிசை நுழைந்தனன் ஆனால் அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 1/4
அன்பு எனும் குடிசை நுழைந்தனன் அந்தோ அவன்றனை மறுப்பவர் யாரே – திருமுறை6:51 2/4

மேல்


நுழைந்தனையே (11)

ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர் கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே – திருமுறை6:50 2/4
கொள்ளைகொள கொடுத்தது-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 3/4
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 4/4
குறைவு_இலது இ பெரு வரம்-தான் போதாதோ அரசே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 5/4
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 6/4
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 7/4
குரங்கு மன சிறியேனுக்கு இங்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 8/4
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன் குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 9/4
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே – திருமுறை6:50 10/4

மேல்


நுழைந்தாண்டி (2)

குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – திருமுறை5:53 1/1
குறவர் குடிசை நுழைந்தாண்டி அந்த – கீர்த்தனை:10 1/1

மேல்


நுழைந்தால் (1)

செம்மாப்பில் உரைத்தனை இ சிறுமொழி என் செவிக்கே தீ நுழைந்தால் போன்றது நின் சிந்தையும் நின் நாவும் – திருமுறை6:106 79/3

மேல்


நுழைந்து (2)

நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என் – திருமுறை6:50 1/3
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே – திருமுறை6:50 1/4

மேல்


நுழைந்தே (1)

உணர்ந்துணர்ந்து ஆங்கே உணர்ந்துணர்ந்து உணரா உணர்ந்தவர் உணர்ச்சியால் நுழைந்தே
திணர்ந்தனர் ஆகி வியந்திட விளங்கும் சிவ பத தலைவ நின் இயலை – திருமுறை6:24 33/1,2

மேல்


நுழையும் (1)

தூங்கும் மடவார் புலை நாற்ற தூம்பில் நுழையும் சூதகனேன் – திருமுறை2:43 11/3

மேல்


நுழையேனோ (1)

திணி காண் உலகை அழையேனோ சேர்ந்து அ வீட்டு உள் நுழையேனோ
பிணி காண் உலகில் பிறந்து உழன்றே பேதுற்று அலையும் பழையேனே – திருமுறை5:22 9/3,4

மேல்


நுனிப்படும் (1)

புல் நுனிப்படும் துளியினும் சிறிய போகம் வேட்டு நின் பொன்_அடி மறந்தேன் – திருமுறை2:9 9/1

மேல்