சை – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

சைகரையேல் (1)

சைகரையேல் இங்ஙனம் நான் தனித்து இருத்தல் வேண்டும் தாழ்_குழல் நீ ஆங்கே போய் தத்துவ பெண் குழுவில் – திருமுறை6:106 69/2

மேல்


சைகை (1)

சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனை பல விசை அறிந்தும் – திருமுறை6:13 53/2

மேல்


சைகை-அது (1)

கையிடல் கண்டும் பயந்திலையே சைகை-அது
கையால் ஒருசிலர்க்கும் கண்ணால் ஒருசிலர்க்கும் – திருமுறை1:3 1/768,769

மேல்


சைதன்ய (2)

பரசிவானந்த பரிபூரண சதானந்த பாவனாதீதம் முக்த பரம கைவல்ய சைதன்ய நிஷ்கள பூத பெளதிகாதார யுக்த – தனிப்பாசுரம்:13 1/1
ஜோதி மணியே அகண்டானந்த சைதன்ய சுத்த மணியே அரிய நல் துரிய மணியே துரியமும் கடந்து அப்பால் துலங்கும் மணியே உயர்ந்த – தனிப்பாசுரம்:13 2/1

மேல்


சைய (1)

சைய ஆதி அந்தம் நடு காட்டி ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 9/4

மேல்


சையம் (1)

சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4

மேல்


சையோகமுற (1)

சையோகமுற எனக்கும் வலிந்து ஒன்று கொடுத்தான் தனித்த சிவகாமவல்லிக்கு இனித்த நடத்தவனே – திருமுறை4:7 11/4

மேல்


சைலம் (2)

தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசை சைலம் எனும் ஒரு வில்லவன் – திருமுறை1:1 2/42
சம்பு சிவ சயம்புவே சங்கரா வெண் சைலம் வளர் தெய்வத வான் தருவே மிக்க – திருமுறை2:94 4/3

மேல்


சைவ (73)

செய்வது அறியேன் திகைக்கின்றேன் சைவ நெறியுள் – திருமுறை1:2 1/802
செல்லாதே சைவ நெறி செல் என்றால் என்னுடனும் – திருமுறை1:3 1/541
கோடாது கோடி கொடுத்தாலும் சைவ நெறி – திருமுறை1:3 1/1297
சைவ வடிவாம் ஞானசம்பந்தர் சீர் உரைக்கில் – திருமுறை1:4 41/3
விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்ய – திருமுறை1:6 5/1
சைவ நீறு இடும் தலைவரை கண்காள் சார்ந்து நின்று நீர் தனி விருந்து உண்க – திருமுறை2:7 3/2
தீர்க்கும் தெய்வமே சைவ வைதிகங்கள் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:10 5/4
உடையாய் உன் அடியவர்க்கும் அவர் மேல் பூண்ட ஒண் மணியாம் கண்மணிக்கும் ஓங்கு சைவ
அடையாளம் என்ன ஒளிர் வெண் நீற்றுக்கும் அன்பு_இலேன் அஞ்சாமல் அந்தோ அந்தோ – திருமுறை2:23 1/1,2
தஞ்சனை ஒற்றி_தலத்தனை சைவ தலைவனை தாழ்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:39 7/2
சைவ தலைவர் தவத்தோர்கள்-தம் பெருமான் – திருமுறை2:45 4/1
தீரம் இலேன் நான் ஒருவன் பாவி வஞ்ச செயல் விளக்கும் மனத்தாலே திகைத்தேன் சைவ
சாரம் இலேன் ஆசாரம் இல்லேன் சித்த சாந்தம் இலேன் இரக்கம்_இலேன் தகவும் இல்லேன் – திருமுறை2:59 7/2,3
சைவ சிற்குணர் தம் உளம் மன்னிய – திருமுறை2:72 10/1
நீறு அணிந்து ஒளிர் அக்க மணி தரித்து உயர் சைவ நெறி நின்று உனக்கு உரிய ஓர் நிமலம் உறும் ஐந்தெழுத்து உள் நிலையுற கொண்டு நின் அடி பூசைசெய்து – திருமுறை2:100 10/1
தெளி வண்ணம் உடையர் அன்புசெய்யும் வண்ணம் பொதுவில் தெய்வ நடம் புரிகின்ற சைவ பரம் பொருளே – திருமுறை4:2 2/4
சைவ மணி மன்றிடத்தே தனி நடனம் புரியும் தற்பர நின் அருள் பெருமை சாற்ற முடியாதே – திருமுறை4:2 72/4
உருத்தகு மெய் உணர்ச்சி வடிவு ஆகி சைவ ஒளி விளங்க நாவரசு என்று ஒரு பேர் பெற்று – திருமுறை4:10 1/2
ஆய்மையுறு பெருந்தகையே அமுதே சைவ அணியே சொல்லரசு எனும் பேர் அமைந்த தேவே – திருமுறை4:10 2/4
கண் உளே விளங்குகின்ற மணியே சைவ கனியே நாவரசே செங்கரும்பே வேத – திருமுறை4:10 5/1
கூர்ந்த மதி நிறைவே என் குருவே எங்கள் குல_தெய்வமே சைவ கொழுந்தே துன்பம் – திருமுறை4:10 10/3
சைவ_நாதனே தணிகை மன்னனே – திருமுறை5:12 23/4
சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை5:17 8/1
சாதல் அகற்றும் திரு_தணிகை சைவ கனியே தற்பரமே – திருமுறை5:25 4/2
தடிவாய் என்ன சுரர் வேண்ட தடிந்த வேல் கை தனி முதலே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 1/4
தாயாய் என்னை காக்க வரும் தனியே பரம சற்குருவே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 2/4
தாணு என்ன உலகம் எலாம் தாங்கும் தலைமை தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 3/4
தன்னை பொருவும் சிவயோகம் தன்னை உடையோர்-தம் பயனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 4/4
சத்த உலக சராசரமும் தாளில் ஒடுக்கும் தனி பொருளே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 5/4
சாதல் பிறத்தல் தவிர்த்து அருளும் சரணாம்புயனே சத்தியனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 6/4
தன் பிற்படும் அ சுரர் ஆவி தரிக்க வேலை தரித்தோனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 7/4
சாலும் சுகுண திரு_மலையே தவத்தோர் புகழும் தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 8/4
சாதல் நிறுத்துமவர் உள்ள_தலம் தாள் நிறுத்தும் தயாநிதியே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 9/4
தரு_காதலித்தோன் முடி கொடுத்த தரும_துரையே தற்பரனே தணிகாசலமாம் தலத்து அமர்ந்த சைவ மணியே சண்முகனே – திருமுறை5:46 10/4
தரு ஓங்கு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 1/4
தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 2/4
தடி துன்னும் மதில் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 3/4
தள்ள அரிய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 4/4
ததி பெறும் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 5/4
தாமம் ஒளிர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 6/4
தலைவர் புகழ் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 7/4
தருமம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 8/4
தாய் ஒன்று சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 9/4
தரையில் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 10/4
தாம் பிரிவு_இல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 11/4
தார் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 12/4
தன் புகழ் செய் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 13/4
தானம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 14/4
சற்றை அகல் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 15/4
தடம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 16/4
தப்பு அற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 17/4
சந்தம் மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 18/4
சையம் உயர் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 19/4
தழைவுற்ற சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 20/4
தானம் இங்கு ஏர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 21/4
தனம் நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 22/4
தாய் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 23/4
தற்றகைய சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 24/4
தாய்ப்பட்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 25/4
தாவலம் சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 26/4
தரம் மருவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 27/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 28/4
தளர்வு இலா சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 29/4
சத்திக்கும் நீர் சென்னை கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 30/4
தான் கொண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – திருமுறை5:55 31/4
தார் உண்ட சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண் முக துய்ய மணி உண்முக சைவ மணி சண்முக தெய்வ மணியே – கீர்த்தனை:41 7/4
சைவ யாகங்களும் சாற்றும் மற்றைய – தனிப்பாசுரம்:2 13/1
சைவ நீறு அணி விளங்கி நகை துளும்பி உபசாந்தம் ததும்பி பொங்கி – தனிப்பாசுரம்:2 46/1
ஜாதி மணியே சைவ சமய மணியே சச்சிதானந்தமான மணியே சகஜ நிலை காட்டி வினை ஓட்டி அருள் நீட்டி உயர் சமரச சுபாவ மணியே – தனிப்பாசுரம்:13 2/2
புண்ணிய சைவ போத பூரண – திருமுகம்:1 1/3
சைவ சித்தாந்த ஸ்தாபகம் செய்த – திருமுகம்:2 1/27
மணியே என் கண்மணியே சைவ
மணியே தெய்வ மணியே அணியே – திருமுகம்:2 1/39,40
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
நாய் மட்டுமோ தந்தை_தாய் மட்டுமாம் சைவ – திருமுகம்:5 4/4

மேல்


சைவ_நாதனே (1)

சைவ_நாதனே தணிகை மன்னனே – திருமுறை5:12 23/4

மேல்


சைவ_நாயக (1)

சைவ_நாயக சம்பந்தன் ஆகிய தமிழ் அருள்_குன்றே என் – திருமுறை5:17 8/1

மேல்


சைவத்தில் (1)

சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை – திருமுறை2:94 37/3

மேல்


சைவப்பதி-தொறும் (1)

பற்பல சைவப்பதி-தொறும் அணுகி – தனிப்பாசுரம்:30 2/19

மேல்


சைவம் (13)

சைவம் முதலாய் தழைக்க அருள் சுரக்கும் – திருமுறை1:3 1/433
சைவம் எங்கே வெண் நீற்றின் சார்பு எங்கே மெய்யான – திருமுறை1:3 1/1265
போற்றி என் அன்பாம் தெய்வமே சைவம் புகல் சிவ போகமே போற்றி – திருமுறை2:79 5/2
சைவம் என்பதும் சைவத்தில் சாற்றிடும் தலைமை – திருமுறை2:94 37/3
சைவம் எலாம் தர விளங்கும் நின் வடிவை கொடியேன் தான் நினைத்த போது எனையே நான் நினைத்தது இலையேல் – திருமுறை4:6 5/2
சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த – திருமுறை5:53 12/1
சைவம் நிலைத்து தழைத்து ஓங்க ஆடுகின்றாய் – கீர்த்தனை:5 7/1
சைவம் தழைக்க தழைத்தாண்டி ஞானசம்பந்த – கீர்த்தனை:10 12/1
சைவம் முதலாக நாட்டும் பல – கீர்த்தனை:23 21/1
படி அளவு சாம்பலை பூசியே சைவம் பழுத்த பழமோ பூசுணை பழமோ என கருங்கல் போலும் அசையாது பாழாகுகின்றார்கள் ஓர் – தனிப்பாசுரம்:15 5/1
சைவம் ஆதி சித்தாந்தத்து மறை முடி தலத்தும் – தனிப்பாசுரம்:16 15/2
சைவம் பழுத்த தனித்த அரு நம் குல_தெய்வமாம் – தனிப்பாசுரம்:30 2/64
சைவம் தழைக்க சமண் கழுவேற – திருமுகம்:2 1/43

மேல்


சைவமாம் (1)

நவ நெறி தரும் பர நவிற்றும் சைவமாம்
சிவ நெறி தரும் தரு சிறந்த சீர் அது – தனிப்பாசுரம்:2 4/3,4

மேல்


சைவமும் (1)

வையமும் வானமும் மறையும் சைவமும்
உய்ய ஓங்கிய ஒரு பெரும் குரவன் – தனிப்பாசுரம்:30 2/36,37

மேல்


சைவர் (1)

சைவர் எனும் நின் அடியார் சபை நடுவே வைத்து அருளி – திருமுறை6:83 4/3

மேல்