பூ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 74
பூ_மகள் 3
பூ_மழை 5
பூ_மாலை 2
பூ_மாலையும் 1
பூ_அணை 2
பூக்கள் 2
பூக்கும் 1
பூக 1
பூங்கோதாய் 1
பூச்சு 1
பூசணிக்காயினை 1
பூசணிக்கு 1
பூசல் 3
பூசலிட்டு 1
பூசலும் 1
பூசவும் 1
பூசனை 4
பூசனையும் 1
பூசி 3
பூசின 1
பூசினது 1
பூசு 2
பூசு-மின் 1
பூசும் 1
பூசை 2
பூசைசெய்து 1
பூட்கை 1
பூட்டல் 1
பூட்டி 1
பூட்டிய 1
பூட்டினம் 1
பூட்டுபு 1
பூட்டும் 1
பூண் 31
பூண்களும் 1
பூண்ட 4
பூண்டது 1
பூண்டான் 2
பூண்டு 2
பூணர் 1
பூணவன் 1
பூணன் 1
பூணாய் 3
பூணான் 17
பூணியோ 1
பூணினன் 1
பூணினாய் 1
பூணினாள் 1
பூணினாளை 1
பூணினாற்கு 1
பூணினான் 2
பூணினானே 1
பூணும் 2
பூணோய் 6
பூணோர் 2
பூத்-தனை 1
பூத்த 9
பூத்து 1
பூத 2
பூதங்கள் 5
பூதங்கள்-தம்முள்ளும் 1
பூதங்களன-கொல் 1
பூதங்களே 1
பூதத்தில் 1
பூதத்தின் 2
பூதத்து 3
பூதத்தை 1
பூதம் 10
பூதமாய் 1
பூதமும் 9
பூதமுமே 1
பூதமே 1
பூதவாதியும் 1
பூதி 2
பூதிகன் 1
பூதிகன்-தான் 1
பூதிகனே 2
பூதியாமே 1
பூதிலகமாபுரம் 1
பூந்திலகம் 1
பூநின்றன 1
பூப்ப 2
பூப்பன 1
பூபன் 1
பூம் 110
பூம்_குழல் 1
பூம்_குழலாட்கு 1
பூம்_குழலினாளே 1
பூம்_குழாஅல் 1
பூம்_குழையார் 1
பூம்_கொடி 1
பூம்_துகில் 1
பூமி 22
பூமிநாதன் 1
பூமியாய் 1
பூமியில் 1
பூமியின் 2
பூமியும் 1
பூமியுள் 1
பூர்ப்பம் 1
பூரண 7
பூரணன் 1
பூரணன்னே 1
பூரணனே 1
பூரித்த 3
பூரித்திட்ட 1
பூரிதத்து 1
பூவம்-அது 1
பூவமே 1
பூவலயம் 1
பூவலன் 1
பூவளவன் 1
பூவின் 9
பூவின்-கண் 3
பூவினது 1
பூவினன் 1
பூவினாள் 1
பூவினும் 1
பூவினுள் 3
பூவினை 1
பூவும் 9
பூவை 6
பூவையும் 2
பூவொடு 4

பூ (74)

பொன் எயில் நடுவண் ஓங்கும் பூ நிறை அசோக நீழல் – உதயணகுமார:1 2/1
பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தை கேட்டான் – உதயணகுமார:4 212/4
பூ இளம் கொடி புத்திரி நாமமும் – உதயணகுமார:5 278/3
புரம் மதிக்க பூ_மாலை தோரணம் – உதயணகுமார:5 297/1
பொறியொடு வல்_வினை வென்ற புனிதன் நீயே பூ நான்கு மலர் பிண்டி போதன் நீயே – நாககுமார:1 16/1
போந்து அவனை கொன்றனன் பூ அலங்கல் மார்பனே – நாககுமார:4 125/4
அங்க பூ ஆதி மெய்ந்நூல் அமிழ்து அகப்படுத்து அடைந்த – யசோதர:1 55/3
போய் வளர்ந்துழி பூ முடி மன்னவன் – யசோதர:3 189/2
பஞ்சிக்கு அனுங்கும் சிலம்பு ஆர் அடி பாவை பூ ஆர் – சூளாமணி:0 6/2
போர்செய் மா இனம் பூ தண் புறணியே – சூளாமணி:1 26/4
பூ கொடி பொதும்பரும் பொன்ன ஞாழலும் – சூளாமணி:1 35/3
துளங்கு பூ_மாலையும் சுரும்பும் தோன்றலால் – சூளாமணி:2 45/3
பூ மரு பொலம் குழை புரளும் காதினன் – சூளாமணி:3 75/4
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி – சூளாமணி:3 99/3
பொங்கு தாதொடு பூ மது கொப்பளித்து – சூளாமணி:4 124/2
மேய பூ_மகள் போல விளங்கினாள் – சூளாமணி:4 146/2
பொரி அணிந்த புன்கு உதிர்ந்து பூ நாறும் துறை எல்லாம் – சூளாமணி:4 174/2
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கினை – சூளாமணி:4 214/2
போதி அம் கிழவனை பூ மிசை ஒதுங்கிய – சூளாமணி:4 214/3
பூ விரி குழல் சிகை மணி பறவை போகா – சூளாமணி:6 455/1
பூ மறிந்த தேம் குழல் முடி பொதிந்து வீழ்த்து உலாய் – சூளாமணி:6 487/3
பூ விரி உருவ கண்ணி பொலம் குழை இலங்கு சோதி – சூளாமணி:6 519/1
ஆடி தன் அணையாமையில் பூ_மகள் – சூளாமணி:7 621/3
பொழில் பொதி அவிழ்ந்த பூ புதைந்து தோன்றுவ – சூளாமணி:7 755/2
பூ உக இளையவர் திளைத்த பொங்கு அணை – சூளாமணி:7 756/3
இணைந்து தேன் முழங்க விண்ட ஏழிலம்பாலை வெண் பூ
மணந்து தாது அணிந்து தோன்றும் மரகத மணி கல் பாறை – சூளாமணி:7 758/1,2
பாசிலை பாரிசாதம் பரந்து பூ நிரந்த பாங்கர் – சூளாமணி:7 768/1
தேன் அவாவி மூசுகின்ற தேம் பிறழ் பூ தாம் கலந்து – சூளாமணி:7 792/1
பூ மரு பொலம் கொள் சோலை பொன் அணி புரிசை வேலி – சூளாமணி:8 832/1
குங்கும குளிர் பூ நெரி தூளி மேல் – சூளாமணி:8 893/1
பூ இயல் இணரொடு கவரி பொங்கலால் – சூளாமணி:8 950/2
புண்ணிய மணி நிரை பரந்து பூ உதிர்ந்து – சூளாமணி:8 952/1
பூ மரு பொன் வரை அகலம் புல்லினான் – சூளாமணி:8 961/3
பூ மரு பொறி வண்டு ஆர்ப்ப பொலிந்து அவர் இருந்த போழ்தின் – சூளாமணி:8 969/3
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/2
பூ மிடை தடமும் காவும் புக்கவர்க்கு அரணம் ஆகா – சூளாமணி:8 992/2
பொன் இயல் அமளி மேலாள் பூ_அணை மருங்கு தீண்ட – சூளாமணி:8 997/1
புலம் கொண்டது அதனை காப்பான் பூ ஒன்று நெரித்து மோந்தாள் – சூளாமணி:8 998/4
பூ மரை முகத்து எறி புனல் திரை முகந்து – சூளாமணி:8 1085/3
வேறுபடு பூ மழையும் ஆட விளைவித்தார் – சூளாமணி:8 1091/4
பொன் இயல் கொடியின் ஒல்கி பூ_அணை பொருந்தும் பாவை – சூளாமணி:8 1110/1
மன உணவு உண்டு மான பூ நின்ற வயிர ஒள் வாள் – சூளாமணி:9 1165/2
மாண்டன மாற்றலர் நாள்கள் பூ_மகள் – சூளாமணி:9 1209/1
பூ ஒளி மழுங்கின போர் செய் ஆடவர் – சூளாமணி:9 1222/3
கரி வளர் குஞ்சி மேல் சொரிந்த பூ_மழை – சூளாமணி:9 1486/3
பூ மரை வேலி போதனம் என்னும் நகர் புக்கார் – சூளாமணி:9 1526/4
பூ விரி உருவ தாரான் பின் சென்று விடுத்து போந்தான் – சூளாமணி:9 1551/4
பொன் அணி உலகின் வந்த பூ விரி பாரிசாதம் – சூளாமணி:10 1561/2
மணம் கமழும் பூ மேனி வாசம் கமழ – சூளாமணி:10 1644/1
பூ மரு மடந்தையர் போன்று தோன்றினார் – சூளாமணி:10 1692/4
பூ மரு தடத்துள் தாழ்ந்து பொன் பொடி புதைய ஆடி – சூளாமணி:10 1704/2
பூ மரு தமனிய குழவி போலுமே – சூளாமணி:10 1733/4
மல்கு பூ மந்திரசாலை மண்டபம் – சூளாமணி:10 1761/3
பஞ்சு உடை தவிசுகள் பரப்பி பூ அடுத்து – சூளாமணி:10 1781/2
முருகு அயாவுயிர்க்கும் பூ ஆர் முறி மிடை படலை மாலை – சூளாமணி:11 1862/2
கண் மருட்டுறுப்பன கமல பூ பலி – சூளாமணி:11 1874/2
ஆர் ஒளி தழுவிய அலர் செய் பூ பலி – சூளாமணி:11 1878/2
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை – சூளாமணி:11 1882/3
நிரந்தன பூ பலி நிரை கொள் மாரியாய் – சூளாமணி:11 1886/1
சொரிந்தன சுரும்பு இவர் துணர் கொள் பூ_மழை – சூளாமணி:11 1886/2
பூ பலி என இவை நிரைத்து புண்ணியன் – சூளாமணி:11 1889/2
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/4
பூ வடிவு கொண்டனவோ பொங்கு ஒளிகள் சூழ்ந்து புலம்கொளாவால் எமக்கு எம் புண்ணியர்-தம் கோவே – சூளாமணி:11 1903/4
வம்பு அழகு கொண்ட மணி மேனி அவர் பூ ஆர் – சூளாமணி:11 2037/2
பூ விரியும் நறு மேனி பொன் இலங்கு நிமிர் சோதி – சூளாமணி:11 2039/1
பூ மாண் புனை குழலாய்க்கு இனி சொல்லல் பொல்லாது-கொல் ஆம் – நீலகேசி:1 87/4
புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த – நீலகேசி:2 156/2
பாதிரி பூ புத்தோடு பாழ்ப்பினும் தான் பல் வழியும் – நீலகேசி:2 202/1
துவர் அடுதி பூ அடுதி சோறு அடலே முனிந்தாயோ – நீலகேசி:4 279/4
பறித்து தின்பான் எனின் பாவமாம் பூ போல் – நீலகேசி:4 336/2
கொங்கு ஆட தேன் அறையும் கொய் மருதம் பூ அணிந்த – நீலகேசி:5 470/3
எம்மை வினை வினை ஆக்கும் நின் பூ உரை – நீலகேசி:5 585/3
புங்கவன்-தன் சேவடியை சேராத பூ உளவோ – நீலகேசி:6 660/4
மேல்


பூ_மகள் (3)

மேய பூ_மகள் போல விளங்கினாள் – சூளாமணி:4 146/2
ஆடி தன் அணையாமையில் பூ_மகள்
ஊடலுற்று இடம் பார்த்து உளள் ஆயினாள் – சூளாமணி:7 621/3,4
மாண்டன மாற்றலர் நாள்கள் பூ_மகள்
ஈண்டு வந்து இவனொடு திளைக்கலுற்றனள் – சூளாமணி:9 1209/1,2
மேல்


பூ_மழை (5)

கரி வளர் குஞ்சி மேல் சொரிந்த பூ_மழை
வரி வளை முரசொடு மயங்கி ஆர்த்தவே – சூளாமணி:9 1486/3,4
போர்த்தன கொடி மிடை பொழிந்த பூ_மழை
வேர்த்தன விளிந்தன வினைகள் என்பவே – சூளாமணி:11 1882/3,4
சொரிந்தன சுரும்பு இவர் துணர் கொள் பூ_மழை
பரந்தன மங்கல பதாகை அவ்வழி – சூளாமணி:11 1886/2,3
பூ_மழை பொன் நிலம் புதைய வீழ்ந்தவே – சூளாமணி:11 1897/4
புரிய பூ_மழை பொழிய பொன் எயில் மண்டிலம் புதைந்த – நீலகேசி:2 156/2
மேல்


பூ_மாலை (2)

பூ_மாலை மார்ப என்றும் பொறித்த வாசகத்தை கேட்டான் – உதயணகுமார:4 212/4
புரம் மதிக்க பூ_மாலை தோரணம் – உதயணகுமார:5 297/1
மேல்


பூ_மாலையும் (1)

துளங்கு பூ_மாலையும் சுரும்பும் தோன்றலால் – சூளாமணி:2 45/3
மேல்


பூ_அணை (2)

பொன் இயல் அமளி மேலாள் பூ_அணை மருங்கு தீண்ட – சூளாமணி:8 997/1
பொன் இயல் கொடியின் ஒல்கி பூ_அணை பொருந்தும் பாவை – சூளாமணி:8 1110/1
மேல்


பூக்கள் (2)

பூக்கள் ஆவன பொன் மரை பூம் பொழில் – சூளாமணி:4 129/1
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
மேல்


பூக்கும் (1)

கண் குளிர்கொள்ள பூக்கும் கடி கய தடமும் காவும் – சூளாமணி:5 264/3
மேல்


பூக (1)

போய் நிழல் பொலிந்து வீழ்வ போன்ற பூக ராசியே – சூளாமணி:4 132/4
மேல்


பூங்கோதாய் (1)

ஏடு இலங்கு பூங்கோதாய் இமையவரின் வேறாயது இமைப்பே கண்டாய் – சூளாமணி:10 1821/4
மேல்


பூச்சு (1)

பொன் கொண்டார் ஆயினும் போர்வை பூச்சு எனில் புலையன் – நீலகேசி:4 274/1
மேல்


பூசணிக்காயினை (1)

பொன்றுந்துணையும் பல் போழ் எய்தும் பூசணிக்காயினை போல் – நீலகேசி:6 715/2
மேல்


பூசணிக்கு (1)

வயா திரு ஆக்கி வளர் பூசணிக்கு
தயாச்செய்கை தீது என்னும் தத்துவம் கண்டாய் – நீலகேசி:4 364/1,2
மேல்


பூசல் (3)

கந்துக பூசல் காண களிற்றின் மீது ஏறி வந்து – உதயணகுமார:4 222/2
கேள் வடுப்படரும் பூசல் கேட்டிரா நாளை என்பார் – சூளாமணி:9 1163/4
பூசல் இங்கு உடையையோ பொருள் இழவோ உயிர் இழவோ – நீலகேசி:2 168/3
மேல்


பூசலிட்டு (1)

பூசலிட்டு ஒருவன் கூவ புரவல குமரன் கேட்டு – நாககுமார:3 93/1
மேல்


பூசலும் (1)

புலவு நீர் பொரு பூண் எறி பூசலும்
நிலவு வெண் மணல் நீள் இரும் கானல் வாய் – சூளாமணி:1 16/2,3
மேல்


பூசவும் (1)

இடு மருந்து பூசவும் இனி பொருள் அளித்த பின் – உதயணகுமார:3 185/2
மேல்


பூசனை (4)

ஆன பூசனை ஆற்றுதல் ஆற்று என – யசோதர:1 21/4
பெருமான் அடி பேணிய பூசனை நாள் – சூளாமணி:8 1071/2
தன் இயல் தானம் தவமொடு பூசனை
என்னும் இ நான்கு என எண்ணி உணர் நீ – சூளாமணி:11 1991/3,4
அலகை_இல் பூசனை ஆற்ற முயன்றால் – சூளாமணி:11 2006/2
மேல்


பூசனையும் (1)

செய துதி தேவர் கூறி சிறந்த பூசனையும் செய்ய – நாககுமார:5 165/3
மேல்


பூசி (3)

உரு நிற சுண்ணம் உடலினில் பூசி
பொருள் நல சுட்டி பொருந்துற சேர்த்தி – உதயணகுமார:1 74/3,4
ஏர் பெறும் வாச வெண்ணெய் எழிலுடன் பூசி வாச – உதயணகுமார:4 199/3
குழல் அணி குஞ்சி மைந்தர் குங்கும குழம்பு பூசி
எழில் அணி திகழ நின்றால் எனைய நீர் அனையது ஒன்றே – சூளாமணி:7 757/3,4
மேல்


பூசின (1)

பூசின சாந்தும் பிணையலும் போர்த்து இடை – சூளாமணி:5 293/3
மேல்


பூசினது (1)

பூசினது எ பொருள் போத்தந்து காட்டாய் – நீலகேசி:5 623/4
மேல்


பூசு (2)

பொங்கு இள முலையில் வாச பூசு சாந்து அழிய புல்லி – உதயணகுமார:4 203/3
பூசு சாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் – சூளாமணி:4 134/2
மேல்


பூசு-மின் (1)

அழுகு பூசு-மின் அங்கணம் ஆடு-மின் – நீலகேசி:5 561/1
மேல்


பூசும் (1)

பொங்கு கொங்கையில் குங்குமம் பூசும் கை – உதயணகுமார:1 58/3
மேல்


பூசை (2)

செல்வ நல் வாமன் பூசை சீர் கண்டு வணக்கம்செய்து – உதயணகுமார:5 302/2
அந்தம்_இல் அருகர் பூசை அருள் முனி தானம் செய்தால் – நாககுமார:5 152/2
மேல்


பூசைசெய்து (1)

தாமம் ஆர் மார்பன் மிக்க தக்க நல் பூசைசெய்து
சேமமாம் முக்குடை கீழ் இருந்து அரியாசனத்தின் – நாககுமார:4 117/2,3
மேல்


பூட்கை (1)

பொங்கு ஒலி புடை மணி பூட்கை குஞ்சரம் – சூளாமணி:8 904/2
மேல்


பூட்டல் (1)

பூட்டல் அங்கு ஓர் பொருள்_இன்மை வேண்டியும் – நீலகேசி:5 533/2
மேல்


பூட்டி (1)

பொன் திரள் கடிகை பூட்டி புரி மணி ஓடை சேர்த்தி – சூளாமணி:8 931/1
மேல்


பூட்டிய (1)

பொன் இயல் கழலன் தாரன் பூட்டிய சிலையன் ஆகி – சூளாமணி:8 1019/2
மேல்


பூட்டினம் (1)

பூட்டினம் உரைத்த அக்கால் போந்தது அங்கு என்னை என்றான் – நீலகேசி:4 424/4
மேல்


பூட்டுபு (1)

பூட்டுபு கொள்ளப்பட்டான் போதியார்க்கு ஆதி_அன்னான் – நீலகேசி:3 265/4
மேல்


பூட்டும் (1)

பங்கயத்து அடி பாடகம் பூட்டும் கை – உதயணகுமார:1 58/4
மேல்


பூண் (31)

மின் பூண் மார்பனும் வேண்டி திளைத்தனன் – உதயணகுமார:5 275/4
காந்து நல் மணி பூண் மார்பன் கைம்மா விட்டு இழிந்தான் அன்றே – உதயணகுமார:6 330/4
புலவு நீர் பொரு பூண் எறி பூசலும் – சூளாமணி:1 16/2
உரை அமர் காவல் பூண் கடையின் ஊடு போய் – சூளாமணி:3 90/2
நல் தவம்_உடையனே நம்பி என்று பூண்
வில் தவழ் சுடர் ஒளி விளங்கும் மேனி அ – சூளாமணி:3 113/1,2
வளரும் பூண் முலையாரொடு வைகலால் – சூளாமணி:4 123/2
பஞ்சு ஆர் அகல் அல்குல் பாவையர் பூண் முலை – சூளாமணி:5 292/1
பொன் சுலாம் சுடர் இழை பொறுத்த பூண் முலை – சூளாமணி:5 384/1
பரு மணி பூண் முலை பாய மார்பிடை – சூளாமணி:5 423/3
வேரி மாலை விம்மவும் விளங்கு பூண் துளும்பவும் – சூளாமணி:6 499/1
மின் அணங்கு உருவ பைம் பூண் விஞ்சையன்-தன்னை கூவி – சூளாமணி:7 696/2
கார் இரும் குழல் அம் கொண்டை கதிர் நகை கனக பைம் பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறை புனல் தடத்து வாழ்வார் – சூளாமணி:7 760/3,4
இலங்கு ஒளி மகர பைம் பூண் இயக்கியர் இடங்கள் கண்டாய் – சூளாமணி:7 763/3
பொன் அவிர் மகர பைம் பூண் பொலம் குழை இலங்கு சோதி – சூளாமணி:7 767/1
வம்பு_அறா மகர பைம் பூண் வானவர்-தமக்கும் ஆமோ – சூளாமணி:7 770/4
அங்கு அ வெம் கடம் கடந்து அலங்கு தார் இலங்கு பூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொடு அம் பொன் மாலை வெண் கடாம் – சூளாமணி:7 786/1,2
முல்லை அம் பிணையலும் மொய்த்த பூண் கடை – சூளாமணி:7 818/2
பொன் நவில் கடக பைம் பூண் புரந்தரன் அனைய மாண்பின் – சூளாமணி:8 843/2
காந்திய கனக பைம் பூண் கரு வரை அனைய தோளார் – சூளாமணி:8 966/4
சொரி கதிர் வயிர பைம் பூண் அரசர்கள் பலரும் சூழ – சூளாமணி:9 1137/1
இலை படு வயிர பைம் பூண் இமையவர் அல்லர் ஆயின் – சூளாமணி:9 1198/3
போர் இகலி ஆரமொடு பூண் மணிகள் மின்ன – சூளாமணி:9 1290/1
வண்டு இனம் பாடும் மாலையன் வரித்த கச்சினன் வயிர பூண் நிரைத்த – சூளாமணி:9 1319/1
மகர பைம் பூண் மடவார்கள் வயிர குழையும் பொன் தோடும் – சூளாமணி:9 1477/1
அம் சுடர் வயிர பைம் பூண் அலை கடல்_வண்ணன்-தன்னால் – சூளாமணி:9 1550/3
போது இவர் அலங்கலொடு பூண் முலை ஞெமுங்க – சூளாமணி:10 1616/1
பொன் கோவை பூண் முலை முன்றில் தவழ்கின்றான் – சூளாமணி:10 1740/4
இலை பயில் மகர பைம் பூண் எரி மணி கடக கையான் – சூளாமணி:11 1853/4
அமையாத நல் உலகில் நகை மணி பூண் அமரரே – சூளாமணி:11 2055/4
பொன் பிதிர்ந்து அன்ன பொறி சுணங்கு ஆகத்து பூண் முலையாய் – நீலகேசி:1 88/2
வண்டு அவாம் வார் குழலும் வாள் எயிறும் பூண் முலையும் – நீலகேசி:1 128/1
மேல்


பூண்களும் (1)

சுடர் விடு குழைகளும் துளும்பு பூண்களும்
விடு சுடர் கலங்களும் விட்டெறிந்தவை – சூளாமணி:12 2100/2,3
மேல்


பூண்ட (4)

பூண்ட மார்பன் நல் நிலம் புரண்டு மிக்கு எழுந்துபோய் – உதயணகுமார:2 140/1
பூண்ட பொன் அணி மார்பினாய் – சூளாமணி:10 1620/2
பூண்ட ஐம்_பொறி மனம் அவதி புண்ணியம் – நீலகேசி:1 118/2
காவல் பூண்ட கணவனோடு ஈமத்தின் – நீலகேசி:2 218/3
மேல்


பூண்டது (1)

போது உலாம் புணர் மென் கொங்கை குவட்டிடை பூண்டது அன்றே – சூளாமணி:10 1705/4
மேல்


பூண்டான் (2)

கொற்றவற்கு இளைய காளை கோ தொழில் பாகம் பூண்டான்
இற்றதால் எங்கள் ஆண்மை யாங்களும் இழிந்து நிற்ப – சூளாமணி:9 1171/2,3
கரு மணி_வண்ணன் தானே கதிரவன் தொழிலும் பூண்டான் – சூளாமணி:10 1557/4
மேல்


பூண்டு (2)

கண்ணளித்து உலகம் எல்லாம் கவின்பெற காவல் பூண்டு
தண் அளி தயங்கு செங்கோல் தாரவர் தவத்தினாலே – சூளாமணி:5 261/1,2
கண்டிகை தவழ பூண்டு கதிர் மணி முடியின் மேலால் – சூளாமணி:10 1786/3
மேல்


பூணர் (1)

அங்கையின் அயில் படையர் ஆண்_உடையர் பூணர்
கொங்கை வளராத குழலார்கள் புடை காப்ப – சூளாமணி:8 861/1,2
மேல்


பூணவன் (1)

மின் நிழல் பூணவன் மெல்ல நக்கு அது – சூளாமணி:10 1599/1
மேல்


பூணன் (1)

ஆடகம் அடுத்த அணி பூணன் அலர் தாரான் – சூளாமணி:9 1282/2
மேல்


பூணாய் (3)

தூசினால் துளும்பும் அல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய் – சூளாமணி:6 536/4
அலங்கல் அம் பூணாய் இரு வகையாம் அவை என்-கொல் என்னின் – நீலகேசி:1 77/2
நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய் – நீலகேசி:1 113/4
மேல்


பூணான் (17)

எரி மணி இமைக்கும் பூணான் இசோதரன் இரு நிலத்துக்கு – யசோதர:2 85/1
திரு மணி திகழும் பூணான் பெருமகன் சிறை வண்டு என்னும் – சூளாமணி:5 326/2
ஈங்கு யான் இருந்தது என்றான் எரி சுடர் வயிர பூணான் – சூளாமணி:6 524/4
மின் அவிர் வயிர சூட்டு விடு சுடர் மணி பொன் பூணான்
தன் நிகர் இகந்த தோன்றல் சரண் என பரமன் பாதம் – சூளாமணி:6 544/2,3
ஆய்ந்து எழில் மகர பூணான் உவப்பன அனைத்தும் ஈந்தான் – சூளாமணி:7 677/4
அம் சுடர் வயிர பூணான் அருளினன் விடுப்ப ஆங்கண் – சூளாமணி:7 678/1
மின் தொடர்ந்து இலங்கு பூணான் விளைவுறா இளைமை-தன்னால் – சூளாமணி:7 695/1
உளர் ஒளி உமிழும் பூணான் பிரீதிவர்த்தனன் என்று ஓதும் – சூளாமணி:8 830/3
சீர் அணங்குறுக்கும் செய்கை செம் சுடர் திலக பூணான் – சூளாமணி:8 834/4
வெண் நிலா விரிந்த பூணான் வேகமாரதன் நீள் முந்நீர் – சூளாமணி:8 835/3
செம் சுடர் இலங்கு பூணான் திறல் சிறீபாலன் என்பான் – சூளாமணி:8 965/4
நாவியே கமழும் தொங்கல் நகை மணி வயிர பூணான்
ஆவியின் அகத்து_உளாளும் அரு வரை அகலத்தாளும் – சூளாமணி:9 1131/1,2
இ திறத்து இனைய என்றான் எரி மணி இமைக்கும் பூணான் – சூளாமணி:9 1184/4
கலம் புரி கன பொன் பூணான் கைவந்து புகுந்த அன்றே – சூளாமணி:9 1437/4
செம் சுடர் மகர பூணான் திரு எதிர்கொள்ள சென்று – சூளாமணி:9 1546/2
ஓங்கிய உருவ தார் மேல் ஒளி நிலா உமிழும் பூணான் – சூளாமணி:10 1626/4
எரி மணி வயிர பூணான் இக்குவா குலத்துள் தோன்றி – சூளாமணி:10 1784/1
மேல்


பூணியோ (1)

தொடர்ப்பாடும் பெரிது அன்றால் தொட்டை நீ பூணியோ – நீலகேசி:4 273/4
மேல்


பூணினன் (1)

எரிந்த பூணினன் இலங்கு தாரினன் – சூளாமணி:7 583/2
மேல்


பூணினாய் (1)

துகள்_இலா சுடர் மணி துளும்பு பூணினாய்
மகள் எலா திசைகளும் மலிர மன்னினாள் – சூளாமணி:5 416/3,4
மேல்


பூணினாள் (1)

சோதிமாலை என்பாள் சுடர் பூணினாள் – சூளாமணி:5 344/4
மேல்


பூணினாளை (1)

கன மணி பூணினாளை காண்க என விடுக்கப்பட்டார் – சூளாமணி:8 993/4
மேல்


பூணினாற்கு (1)

தொடர் மணி பூணினாற்கு சச்சுதன் சொல்ல கேட்டே – சூளாமணி:5 307/3
மேல்


பூணினான் (2)

என்று அவர் மொழிந்த பின் இலங்கு பூணினான்
நன்று அது பெரிதும் என்று அருளி நாள்-தொறும் – சூளாமணி:3 117/1,2
எரி படு விரி சுடர் இலங்கு பூணினான்
திரு அடி தொழுது செல் துருமகாந்தனும் – சூளாமணி:3 118/1,2
மேல்


பூணினானே (1)

வேண்டுவது எவன்-கொல் என்றான் மிடை மணி பூணினானே – சூளாமணி:6 546/4
மேல்


பூணும் (2)

பூணும் நூல் பொலிந்து தோன்றும் பொன் வரை மார்ப என்றான் – சூளாமணி:5 259/4
எடுத்து மறிக்கப்பட்டான் போல் இலங்கு பூணும் ஆரமும் தேம் – சூளாமணி:9 1350/3
மேல்


பூணோய் (6)

வண்ணம் இது வடிவம் இவை வளர் ஒளிய பூணோய் – யசோதர:5 297/4
சிறந்தது ஒன்று இல்லை கண்டாய் திரு மணி திகழும் பூணோய் – சூளாமணி:5 266/4
வெம் சொல் ஒன்று உரைக்கமாட்டா விடு சுடர் விளங்கு பூணோய் – சூளாமணி:5 275/4
விழு பெரும் பூணோய் வினையின் விளைவே – சூளாமணி:11 1939/4
நிலைமைய தானம் நிழல் மணி பூணோய்
உலைவில் ஏற்போன் உடன் ஈபவன் ஈயும் – சூளாமணி:11 1992/2,3
கைப்பொருளா கொள் கதிர் மணி பூணோய் – சூளாமணி:11 2018/4
மேல்


பூணோர் (2)

வளர்ந்து ஒளி திவளும் பூணோர் மண_வினை முயங்கல் இல் என்று – சூளாமணி:6 530/2
வீங்கு பைம் கழல் விடு சுடர் மிடை மணி பூணோர்
ஓங்கு தானையோடு உலாப்போந்த இடம் சென்று ஈது உரைத்தார் – சூளாமணி:7 701/3,4
மேல்


பூத்-தனை (1)

பூத்-தனை தூவி பொருந்து துதிகளின் – நீலகேசி:4 456/2
மேல்


பூத்த (9)

பொன் அணி சுணங்கு பூத்த புணர் முலை அமிர்தம்_அன்னாள் – உதயணகுமார:1 11/3
சங்கம் மேய் தரங்க வேலி தடம் கடல் பொய்கை பூத்த
அம் கண் மா ஞாலம் என்னும் தாமரை அலரின் அம் கேழ் – சூளாமணி:2 37/1,2
புலத்திடை தாமரை பூத்த போலுமே – சூளாமணி:2 47/4
பொற்பு அகம் கமழ பூத்த தேம் துணர் பொறுக்கல் ஆற்றா – சூளாமணி:2 67/3
அம் தழை அசோகம் பூத்த அழகு கண்டு அவாவின் நோக்கி – சூளாமணி:4 165/1
போது உலாம் தாமரை பூத்த பொய்கையை – சூளாமணி:4 223/1
அவ்வழி அமுதம் பூத்த அரும் கல கொம்பை தம் கோன் – சூளாமணி:8 983/1
தண் தார் ஈன்று செம் தளிர் ஏந்தி தழல் பூத்த
வண்டு ஆர் பிண்டி வார் தளிர் நீழல் மணி வட்டம் – சூளாமணி:8 1125/1,2
ஆவியாய அயக்கிரீவற்கு அமிர்தம் பூத்த அம் சாயல் – சூளாமணி:9 1485/1
மேல்


பூத்து (1)

விரி கதிர் செம்பொன் பூத்து விண் அணங்குறுப்ப வீங்கி – சூளாமணி:8 857/4
மேல்


பூத (2)

பூத தேவர்கட்கு எனா புல்லியோர்கள் கொல்லவும் – நீலகேசி:1 105/2
கொள் அ பூத குணம் அவை அல்லவே – நீலகேசி:10 869/4
மேல்


பூதங்கள் (5)

மலி பூதங்கள் நான்கின் மாண்பின்னவையே – நீலகேசி:5 487/4
பூதங்கள் நான்கும் புகுந்தே தெருட்டலுற்றாய் அவற்றுக்கு – நீலகேசி:5 496/1
குறைந்து பூதங்கள் கூட்டம் உண்டாம் அவண் – நீலகேசி:10 876/1
அறைந்த பூதங்கள் ஐந்தும் அங்கு இல் எனின் – நீலகேசி:10 876/3
சென்று பூதங்கள் சேர்வதற்கு ஏது என் – நீலகேசி:10 878/2
மேல்


பூதங்கள்-தம்முள்ளும் (1)

யாது ஐம்_பூதங்கள்-தம்முள்ளும் அஃது இனி – நீலகேசி:10 865/4
மேல்


பூதங்களன-கொல் (1)

அனகள் யாவையும் என்னை நின் பூதங்களன-கொல்
நீ இங்கு அறிந்தனை சொல் என – நீலகேசி:10 885/3,4
மேல்


பூதங்களே (1)

துணிவு ஐம்_பூதங்களே தொழில் சொல்லுவேன் – நீலகேசி:10 856/4
மேல்


பூதத்தில் (1)

மறைந்த பூதத்தில் உண்மை வந்து எய்துமால் – நீலகேசி:10 876/4
மேல்


பூதத்தின் (2)

பொறி ஐந்தால் ஐந்து பூதத்தின் ஆகிய – நீலகேசி:10 870/1
புத்தியான் இன்றி பூதத்தின் ஆயவேல் – நீலகேசி:10 875/1
மேல்


பூதத்து (3)

மிகுதி செய் பூதத்து மெய்ம்மை பெறாமல் – நீலகேசி:7 761/3
கண்ட பூதத்து காரியம் என்றியோ – நீலகேசி:10 873/4
உறைந்த பூதத்து உணர்வு அல்லது இன்மையால் – நீலகேசி:10 876/2
மேல்


பூதத்தை (1)

மனத்துக்கு இன்னும் ஓர் பூதத்தை மன்னும் நீ – நீலகேசி:10 872/2
மேல்


பூதம் (10)

பூதம் என்றனர் புண்ணிய நூல்களின் – யசோதர:3 194/3
கொல் நவில் பூதம் போலும் குறள்மகன் இதனை சொன்னான் – சூளாமணி:7 679/4
பூதம் உண்டு அது புடைத்து உண்ணும் ஆதலால் – சூளாமணி:10 1597/2
நடையாய் முதலதுவும் நால் பூதம் ஆமே – நீலகேசி:1 110/4
பூதம் ஐந்தொடு திசை மனம் பொழுது உயிர் – நீலகேசி:8 786/1
பூதம் அல்லது பொய் பிற நூல் என்று – நீலகேசி:10 864/1
வாதம்செய்கின்ற பூதம் அ வாதமோ – நீலகேசி:10 865/3
பொய் ஐம்_பூதம் புணர்ந்து உணர்வோடு இன்பம் – நீலகேசி:10 868/3
உள் அ பூதம் ஒன்று ஆக்குவது உண்மையை – நீலகேசி:10 869/3
ஐந்து பூதம் அவற்று அவற்றால் ஐந்து – நீலகேசி:10 879/1
மேல்


பூதமாய் (1)

நிலம் முதல் பூதமாய் நின்ற நான்மையும் – நீலகேசி:8 791/1
மேல்


பூதமும் (9)

அன்ன தன்மாத்திரை ஐந்து ஐந்து பூதமும்
பன்னிய ஐ ஐம்பத பொருள் என்றான் – நீலகேசி:7 735/3,4
அன்றியும் ஐ_வகை பூதமும் அன்றே – நீலகேசி:7 737/4
புந்தியில் நால் வகை பூதமும் என்றாள் – நீலகேசி:7 758/4
வலி உடை நிலை_இல மற்று எ பூதமும்
ஒலியொடு முதல் தம்முள் புல்லல் இன்மையால் – நீலகேசி:8 793/2,3
கள்ள பூதமும் காமிக்கும் பூதமும் – நீலகேசி:10 869/1
கள்ள பூதமும் காமிக்கும் பூதமும்
வள்ளல் பூதமும் அல்லவும் அல்லவாம் – நீலகேசி:10 869/1,2
வள்ளல் பூதமும் அல்லவும் அல்லவாம் – நீலகேசி:10 869/2
அறிந்த ஆறு என்-கொலோ ஐந்து பூதமும்
செறிந்த நாள்களுள் செய்வன அல்லவால் – நீலகேசி:10 874/3,4
வேறு வேறு ஐந்து பூதமும் மெய்ம்மையால் – நீலகேசி:10 882/1
மேல்


பூதமுமே (1)

அனைத்து பூதமுமே அறிவு ஆக்கினால் – நீலகேசி:10 872/1
மேல்


பூதமே (1)

பூதமே என போந்திருந்து என்னொடு – நீலகேசி:10 865/2
மேல்


பூதவாதியும் (1)

பூதவாதியும் பொங்கினன் மேல் செல – நீலகேசி:10 854/2
மேல்


பூதி (2)

பூதி கந்தத்தின் மெய்யில் புண்களும் கண்கள் கொள்ளா – யசோதர:2 106/1
பூதி மீது புரளா நரல்கின்றான் – சூளாமணி:10 1568/4
மேல்


பூதிகன் (1)

பூதிகன் எனப்படும் அந்தணன் ஓத்திடம் புக்கனளே – நீலகேசி:9 824/4
மேல்


பூதிகன்-தான் (1)

பூதிகன்-தான் அது சொல்லலும் யான் அது வல்லன் எல்லாம் – நீலகேசி:9 827/1
மேல்


பூதிகனே (2)

போத்தந்தியோ அதன் தீமை என்றான் பொங்கி பூதிகனே – நீலகேசி:9 826/4
பொய்த்து உரையாம் நன்மை போதுவதேல் இல்லை பூதிகனே
சத்தியமே உரை நீ என தானும் அஃதே உரைத்தான் – நீலகேசி:9 852/1,2
மேல்


பூதியாமே (1)

குரவம்பூ மேனியான குலம் அறி பூதியாமே – உதயணகுமார:5 253/4
மேல்


பூதிலகமாபுரம் (1)

பொங்கும் ஆழியுள் ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்-தன் ஆலையம் பொங்கு சொன்ன வண்ணம் முன் – நாககுமார:4 134/1,2
மேல்


பூந்திலகம் (1)

தீது_இல் பூந்திலகம் என்னும் சினாலயம்-அதனின் முன்னில் – நாககுமார:3 91/1
மேல்


பூநின்றன (1)

வாளும் பூநின்றன மலர்ந்தது உள்ளமே – சூளாமணி:9 1218/4
மேல்


பூப்ப (2)

பாங்கு எலாம் செம்பொன் பூப்ப விரிந்தது பருவம் என்றாள் – சூளாமணி:4 161/4
காதலார் கண்கள் பூப்ப காய்த்துதும் கைகோள் என்பார் – சூளாமணி:9 1195/4
மேல்


பூப்பன (1)

பொன் இதழ் தாமரை பொய்கையுள் பூப்பன
பொன் இதழ் தாமம் பொழில்-வாய் அவிழ்ப்பன – சூளாமணி:5 281/1,2
மேல்


பூபன் (1)

பொறையினால் பெரியன் பூபன் சிறியன் யான் என்று நாணி – சூளாமணி:6 529/3
மேல்


பூம் (110)

பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய் தோள் – உதயணகுமார:1 103/2
பூவை வண்டு அரற்றும் காவுள் பூம் பொய்கை கண்டு இருப்ப – உதயணகுமார:1 116/2
இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/4
பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகி – உதயணகுமார:4 230/2
புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே – உதயணகுமார:4 235/4
வளி நறும் பூம் சுகந்தம் மதனமஞ்சிகை-தன் மேனி – உதயணகுமார:5 256/2
புண் தவழ் வேலின் காளை பூம்_குழலாட்கு இரங்கி – உதயணகுமார:5 261/2
பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் என – உதயணகுமார:5 264/3
பூம் தளிர் நிறைந்து இலங்கும் பொழில் வலம் சுற்ற வந்து – உதயணகுமார:6 330/3
தாது பூம் பொழில் சாலி நல் நாட்டிடை – உதயணகுமார:6 336/3
பொரு கயல்_கணி பூம் குழை மாதரும் – நாககுமார:1 24/2
பூம் தடத்தை சுற்றிய பொற்பு உடை கரை மிசை – நாககுமார:2 63/3
மலர்ந்த பூம் சிகை வார் கொடி மங்கையர் – யசோதர:1 12/1
பூம் கணை மாரி வெள்ளம் பொருது வந்து அலைப்ப புல்லி – யசோதர:2 91/2
கை விரிந்தன காந்தளும் பூம் சுனை – சூளாமணி:1 17/1
வளம்கொள் பூம் கற்பக வனமும் போலுமே – சூளாமணி:2 45/4
காவி வாய் கரும்_கணார் காமர் பூம் சிலம்பு – சூளாமணி:2 46/1
வில தகை பூம் துணர் விரிந்த கோதையர் – சூளாமணி:2 47/1
பூம் குழை மகளிர்க்கு எல்லாம் பொன் மலர் மணி கொம்பு அன்ன – சூளாமணி:2 64/1
பொன் அணி வாயில் காக்கும் பூம் கழலவனை நோக்கி – சூளாமணி:3 102/2
பூக்கள் ஆவன பொன் மரை பூம் பொழில் – சூளாமணி:4 129/1
தெய்வ யாறு காந்தள் அம் சிலம்பு தேம் கொள் பூம் பொழில் – சூளாமணி:4 136/1
பூம் குலாய் விரிந்த சோலை பொழி மது திவலை தூவ – சூளாமணி:4 161/2
கொடி வளர் மகளிர் பூம் கள் குடைந்து நீர் குடி-மின் என்று – சூளாமணி:4 163/3
பூம் சினை முருக்கம் சோலை பூக்கள் வாய் ஆர மாந்தி – சூளாமணி:4 166/2
புடை வாசம்கொள மாலம் பூம் கவரி எடுத்து எறிய – சூளாமணி:4 170/3
பூம் துணர் ஓதி நீ பிறந்து பொன் செய் தார் – சூளாமணி:4 221/3
பூம் கமழ் மண்டபம் பொலிய புக்க பின் – சூளாமணி:5 241/2
பூம் குலாம் அலங்கல் மாலை புரவலன் பொறுக்கும் அன்றே – சூளாமணி:5 245/4
புரத்தினை வெல்வது பொன் நகர் பூம் தண் – சூளாமணி:5 285/3
பொன் அவிர் போதனம் உடைய பூம் கழல் – சூளாமணி:5 401/2
பொருவு_அரு போதனம் உடைய பூம் கழல் – சூளாமணி:5 406/2
நிலைமை கொள் மனைவியா நிமிர்ந்த பூம் துணர் – சூளாமணி:5 414/2
பொலம் புரி மயில்_அனாய் பயந்த பூம் கொடி – சூளாமணி:5 417/3
பொது மலர் பூம் பொழில் புகலும் பொம்மென – சூளாமணி:5 430/2
வண்ண சந்தங்கள் நிறைந்தன மணி செப்பு வளர் பூம்
கண்ணி சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் கமழ் பூம் – சூளாமணி:6 468/1,2
கண்ணி சந்தங்கள் நிறைந்தன கரண்டகம் கமழ் பூம்
சுண்ண சந்தங்கள் நிறைந்தன சுடர் மணி பிரப்போடு – சூளாமணி:6 468/2,3
இயங்கு பூம் கொடி அனையவர் இயல்புகள் நினையா – சூளாமணி:6 472/3
பூம் கழல் பொலம் குழை திவிட்டனோடு போர் கதம் – சூளாமணி:6 473/3
போது உலாய பூம் பொதும்பர் மேல தென்றல் வீசலால் – சூளாமணி:6 493/1
புல்லி வண்டு அமர்ந்து தங்கு பூம் தழை பொதும்பிடை – சூளாமணி:6 494/1
பூம் கழல் பொலம் குழை பொலிந்து இலங்கு தாரினான் – சூளாமணி:6 496/2
போந்து அகம் திகழ்ந்து மின்னு பூம் துகில் பொலிந்த அல்குல் – சூளாமணி:6 537/2
பூம் துணர் கற்பலோகம் புடைபெயர்ந்திட்ட போற்றா – சூளாமணி:6 545/3
பூம் கண் தேம் மொழி போதனத்து இறைவன்-தன் புதல்வர் – சூளாமணி:7 701/2
வாய்ந்த பூம் படையும் மலர் கண்ணியும் – சூளாமணி:7 752/3
பொன் விரிந்து அனைய பூம் கோங்கும் வேங்கையும் – சூளாமணி:7 754/1
தா_இல் பூம் துகளொடு ததைந்து தோன்றுவ – சூளாமணி:7 756/2
வான் உயர் இமகிரி மருங்கில் என்று பூம்
தேன் உயர் அலங்கலான் சிறுவன் சொல்லலும் – சூளாமணி:7 825/2,3
போகம் மிகு பூம் தவிசின் மீது புதைவுற்ற – சூளாமணி:8 860/2
மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய் – சூளாமணி:8 887/4
பூம் குழை மகளிர் காக்கும் பொன் அணி வாயில் போகி – சூளாமணி:8 911/3
காமரு பூம் குழை காம வல்லிகள் – சூளாமணி:8 955/1
காமரு பூம் குழை காமவல்லிகள் – சூளாமணி:8 955/3
பூம் கமழ் சோலை வேலி பொன் நகர் புகுக என்ன – சூளாமணி:8 989/2
புடம் கொள் பூம் பொழிலிடை புள்ளின் சேவலே – சூளாமணி:8 1061/4
என்பு உருக வேவ இணை நெடும் கண் பூம் பாவை – சூளாமணி:8 1116/2
உலம் பாராட்டும் தோளவன் ஒண் பூம் குழலாளை – சூளாமணி:8 1123/1
மணங்கள் நாறும் பூம் பாவை வளரல் வாழி நறும் குரவே – சூளாமணி:8 1128/2
மணங்கள் நாறும் பூம் பாவை வளர்த்தி ஆயில் இளையரால் – சூளாமணி:8 1128/3
பூம் கமழ் அலங்கல் உடை மார்பம் இரு போழாய் – சூளாமணி:9 1294/2
பொன் அவிர் பூம்_குழையார் பொங்கு ஏந்து இளம்_முலையார் – சூளாமணி:9 1469/3
பஞ்சும் துகிலும் பூம் பட்டும் பாய பள்ளிபடுத்து அதன் மேல் – சூளாமணி:9 1483/3
அடி மேல் பூம் கழல்கள் அம் பொன் இலங்கு – சூளாமணி:9 1519/1
விரை எடுத்த பூம் தார் விறல் வேந்தர் அஞ்சி – சூளாமணி:9 1520/3
காழ் அகிலும் நறும் சாந்தும் கடி வாச பூம் பொடியும் கமழ்ந்து கைபோய் – சூளாமணி:9 1528/3
கந்தாரம் கொள வீக்கி கடி விரிந்து பூம் பாளை கமழும் காலை – சூளாமணி:9 1539/1
போது அலர் குஞ்சி ஆங்கு ஓர் பூம் துணர் வடத்தின் வீக்கி – சூளாமணி:10 1565/2
மாதவன் நடுங்கி வளர் பூம் பொழில் மறைந்தான் – சூளாமணி:10 1609/2
பூம் கமழும் மாடம் எனதே புகுவன் என்றாள் – சூளாமணி:10 1611/2
போது விரி தேம் குழலி பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:10 1614/4
கட்டி விடு பூம் பிணையல் கைவிடலும் மெய்யுள் – சூளாமணி:10 1617/2
விரவு அம் பூம் தளிரும் போதும் மிடைந்தன மிலைச்சுவாரும் – சூளாமணி:10 1633/1
அரவம் பூம் சிலம்பு செய்ய அம் தளிர் முறி கொய்வாரும் – சூளாமணி:10 1633/2
மரவம் பூம் கவரி ஏந்தி மணி வண்டு மருங்கு சேர்த்தி – சூளாமணி:10 1633/3
குரவம் பூம் பாவை கொண்டு குழவி ஓலுறுத்துவாரும் – சூளாமணி:10 1633/4
பூம் பொழில் விளங்க தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கி – சூளாமணி:10 1638/3
கடி நறும் பூம் சோலையை காரிகையார் வென்றார் – சூளாமணி:10 1643/4
கொந்து ஆர் பூம் சோலைக்கு உலகு அறிவோ கூடின்றே – சூளாமணி:10 1645/4
விரை தரு பூம் படை மேல் மெல்ல அசைந்தார் – சூளாமணி:10 1652/4
போய் ஓங்கு பூம் சோலை வாழும் புன கிளிகள் – சூளாமணி:10 1657/3
பூம் தளிர் தாழ்ந்த பொழில் தயங்கு பொன் வரை-வாய் – சூளாமணி:10 1658/1
வாடல்_இல் பூம் கண்ணி மா மேக_வண்ணனே – சூளாமணி:10 1660/4
மணம் கொள் பூம் துணர் கொள் சோலை மண்டு நீர் வாவி சார்ந்தான் – சூளாமணி:10 1669/4
பூம் துகள் அவிழ்ந்த பொன் தாமரை மலர் புதைந்த வாவி – சூளாமணி:10 1670/2
பொடி கலந்து அந்தி வான் படைத்த பூம் புனல் – சூளாமணி:10 1682/2
வணங்கு பூம் கொடி இடை வளைத்தும் வாவி-வாய் – சூளாமணி:10 1684/3
பொழுது செல் நாழிகை எல்லை பூம் கழல் – சூளாமணி:10 1687/1
பொன்மலை காவியில் திமிர்ந்து பூம் கமழ் – சூளாமணி:10 1690/1
போது ஆர் சாயல் பூம் கொடி போல பொலிவு எய்தி – சூளாமணி:10 1747/2
கொந்து ஆடும் பூம் குழலும் கோதைகளும் ஆட கொய் பொலம் துகில் அசைத்த கொய்சகம் தாழ்ந்து ஆட – சூளாமணி:10 1754/2
கொந்து அவிழும் பூம் குழலும் கோதைகளும் மூழ்கும் குவளை வாள் கண்ணி வரு குறிப்பு அறியமாட்டாள் – சூளாமணி:10 1755/4
பில்கு பூம் தெரியலான் பெயர்ந்து போயினான் – சூளாமணி:10 1761/4
இன் நகைய பூம் தவிசின்-நின்று இனிது இழிந்தாள் – சூளாமணி:10 1794/4
முடி அரக்கு பூம் கண்ணி மூரி தேர் வேந்தர்-தமை முறையா காட்டி – சூளாமணி:10 1801/3
பூம் தளவம் கமழ் சாரல் பொன் அறை சூழ் தண் சிலம்பன் அன்றே பொன்னே – சூளாமணி:10 1818/2
மாடு இலங்கும் மழை தவழ்ந்து மணி அருவி பொன் அறை மேல் வரன்றி வண் பூம்
தோடு இலங்கு கற்பகமும் சுரபுன்னை வனங்களுமே துதைந்து வெள்ளி – சூளாமணி:10 1821/1,2
பூம் கமழ் சேவடி போது தன் பொன் முடி – சூளாமணி:11 1914/3
பூம் கொண்டைமாரை புணரும் அவரும் – சூளாமணி:11 1951/4
போது புனை கோதையவள் பூம் பொழில் அணைந்தாள் – சூளாமணி:11 2029/4
வாடாத கண்ணியினர் மழுங்காத பூம் துகிலர் – சூளாமணி:11 2050/2
செழும் திரள் பூம் பாவைகளும் திகழ் மணியின் சுடர் கொழுந்தும் – சூளாமணி:11 2059/1
புலவன் முடிவு என்னும் பூம் கொடியும் தானும் – சூளாமணி:12 2125/3
போது அன புணர் அரி நெடும் கண் புனல் வர பூம் துகில் புடையா – நீலகேசி:1 73/3
பூம் தடம் கண் நல்லார் புகுதுக என புகலும் – நீலகேசி:2 171/2
புனத்திடை நறு மலர் பூம் கொடி அன்னது ஓர் பொற்பினளாய் – நீலகேசி:2 229/1
பாடு பூம் பொழில் பாங்கர் ஓர் பள்ளியுள் – நீலகேசி:3 235/2
பூம் கமழ் கார் ஆடை போர்த்த எம் புத்தர் என்றான் – நீலகேசி:3 259/4
கொய் தார் நறும் பூம் குழலாய் குழமண்ணர்களா – நீலகேசி:4 408/3
காண்டற்கு இனிதே கடி மலர் பூம் பள்ளி – நீலகேசி:6 667/3
மேல்


பூம்_குழல் (1)

புலம்பு வண்டு தேன் இனம் பூம்_குழல் மேல் ஆடவே – உதயணகுமார:4 235/4
மேல்


பூம்_குழலாட்கு (1)

புண் தவழ் வேலின் காளை பூம்_குழலாட்கு இரங்கி – உதயணகுமார:5 261/2
மேல்


பூம்_குழலினாளே (1)

இளம் புற அடிகள் ஆமை இடை மின் பூம்_குழலினாளே – உதயணகுமார:4 229/4
மேல்


பூம்_குழாஅல் (1)

பூம்_குழாஅல் நீ புதியை மற்று யார் என – உதயணகுமார:5 264/3
மேல்


பூம்_குழையார் (1)

பொன் அவிர் பூம்_குழையார் பொங்கு ஏந்து இளம்_முலையார் – சூளாமணி:9 1469/3
மேல்


பூம்_கொடி (1)

பூம்_கொடி தோல்வி கண்டு பொறுப்பு_இலா மனத்தள் ஆகி – உதயணகுமார:4 230/2
மேல்


பூம்_துகில் (1)

பூம்_துகில் செறி மருங்குல் பொரு கயல்_கண்ணி வேய் தோள் – உதயணகுமார:1 103/2
மேல்


பூமி (22)

உதயணகுமரன்-தன்னை உற்று உடன் அழைத்து பூமி
பதம் உனக்காக என்று பார்த்திபன் கொடுத்து போகி – உதயணகுமார:1 27/1,2
இழந்த பூமி எண்ணிலன் இனிய போகத்து அழுந்தலும் – உதயணகுமார:2 129/1
செறிந்த பூமி வாழ் திரு மருகன் வரும் – உதயணகுமார:5 282/2
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி
மேவும் மின் முகில் சூழ் சோலை மிக்கது ஓர் மகதநாடு – நாககுமார:1 5/3,4
இஞ்சி மூன்று இலங்கும் பூமி ஏழிறை இருக்கை வட்டம் – நாககுமார:1 11/3
போக பூமி ஆண்ட பொரு_இல் எண்ணூறு ஆண்டு – நாககுமார:5 167/3
புனை முடி கவித்து பூமி பொது கடிந்து ஆள்க என்றே – யசோதர:2 158/3
அஞ்சி மெல்ல அசைந்தது பூமி மேல் – யசோதர:3 167/4
துளங்கு ஒளி பவள திண் கால் சுடர் மணி தவழும் பூமி
வளம் கவின்று அனையது ஆய மண்டபம் மலிர புக்கான் – சூளாமணி:3 94/3,4
பொன் எலாம் நெதியம் ஆர பொழிந்திடுகின்ற பூமி
மன் எலாம் அவனை அன்றி வணங்குவது_இல்லை மன்னா – சூளாமணி:5 302/3,4
பூமி மேல் புரிசை மதில் போதனம் – சூளாமணி:7 631/1
புனை மலர் அலங்கல் மார்பின் பூமி அம் கிழவன் தேவி – சூளாமணி:8 993/2
பொன் ஆர் தேரும் புரவிகளும் மிடைந்து பூமி பொறை கூர – சூளாமணி:9 1337/2
பொருவர் ஆயின் யாரோடும் பொருவர் பூமி வேண்டுபவர் – சூளாமணி:9 1340/2
பொலம் கலம் கழலொடு புலம்ப பூமி மேல் – சூளாமணி:9 1386/3
பொலிவும் கடைபோகா பூமி மேல் வாழ்வீர் – சூளாமணி:9 1467/2
புரிசை நகரம் நூற்றொருபது உடையாய் பூமி முழுது ஆண்டாய் – சூளாமணி:9 1473/2
பொன்னே நல் மணி கொம்பே பூமி மேல் ஆர் அணங்கே போற்றி போற்றி – சூளாமணி:10 1799/1
போர்த்தன பதாகை பொங்கி பூமி அம் கிழவர் உள்ளம் – சூளாமணி:10 1826/3
புனைவு-தான் இகந்த கோதை பொன்_அனாள் பூமி பாலர் – சூளாமணி:10 1827/1
பொங்கு ஓதம்-அது உடுத்த பூமி எல்லாம் பொது நீக்கி – சூளாமணி:12 2129/2
பொன்றாவாய் பல் விலங்கும் பூமி மேல் வாழாவோ – நீலகேசி:5 472/4
மேல்


பூமிநாதன் (1)

பொழில் அணிந்து எழுந்த வல்லி புதைந்தன பூமிநாதன்
குழல் அணிந்து எழுந்த குஞ்சி குடைந்தன குருவி கூட்டம் – சூளாமணி:6 555/3,4
மேல்


பூமியாய் (1)

பொன் திரள் அணி பொழில் போக பூமியாய்
முற்றிய ஊழி மூன்று ஏறி மீள் வழி – சூளாமணி:5 392/2,3
மேல்


பூமியில் (1)

புரவிகள் பொங்கி பூமியில் வீழவும் – உதயணகுமார:1 56/4
மேல்


பூமியின் (2)

பறவை உண்டு பாடவும் பால் பரந்த பூமியின்
நறவு விண்ட நாகு முல்லை வாய் திறந்து நக்கவே – சூளாமணி:7 798/3,4
போர் அணி விஞ்சையர் பூமியின் மேலே – சூளாமணி:9 1228/4
மேல்


பூமியும் (1)

பொறையும் ஆற்றலும் பூமியும் மேருவும் அனையான் தான் – நீலகேசி:1 33/3
மேல்


பூமியுள் (1)

பொங்கு பூமியுள் பொடி பட அடி இணை புடையா – நீலகேசி:1 52/1
மேல்


பூர்ப்பம் (1)

பூர்ப்பம் பயந்தான் புகன்ற சுத கடலுள் – நீலகேசி:6 661/1
மேல்


பூரண (7)

புண் தவழ் வேல் கண் கோதை பூரண மயற்கை சின்னம் – நாககுமார:2 48/1
போக புண்ணியங்கள் ஆக்கும் பூரண பஞ்சமீயில் – நாககுமார:5 148/3
பொங்கு அனல் ஆடி ஆதல் பூரண பக்கம்-தன்னில் – நாககுமார:5 151/2
பூரண குடங்கள் செம்பொன் கொழும் கதிர் புதைந்த கீழால் – சூளாமணி:8 852/4
பூரண பொன் குடம் பொலிய வைக்கவே – சூளாமணி:8 902/4
பூரண மணி குடம் நிரைத்த பொன் அணி – சூளாமணி:11 1870/1
பொல்லாத போக்கி இனி பூரண சென்-மின் என்றாள் – நீலகேசி:6 729/4
மேல்


பூரணன் (1)

பூரணன் என்பான் பொருவு_அற கற்றவன் – நீலகேசி:6 668/3
மேல்


பூரணன்னே (1)

பொய் நின்ற எல்லாம் புரைத்தாய் இனி பூரணன்னே
மெய் நின்ற பெற்றி அறிந்தாய் இதன் மேலும் நன்றா – நீலகேசி:6 728/1,2
மேல்


பூரணனே (1)

புரையா அறிவில் புகழ் பூரணனே – நீலகேசி:6 673/4
மேல்


பூரித்த (3)

பூரித்த தார்கள் வேய்ந்த பொன் குடை எழுந்த மேகம் – நாககுமார:1 8/2
பூரித்த சுடரின் செம்பொன் போதிகை புடங்கள்-தோறும் – சூளாமணி:8 848/2
பூரித்த பொழி கதிர் பொன் செய் தாமமும் – சூளாமணி:10 1780/3
மேல்


பூரித்திட்ட (1)

பூரித்திட்ட தன் பெரு வலியொடு புகழ் அரிமா – சூளாமணி:7 722/3
மேல்


பூரிதத்து (1)

பூரிதத்து ஒளிர் மாலை வெண் பொன் குடை – யசோதர:1 8/2
மேல்


பூவம்-அது (1)

அங்க பூவம்-அது அ/றைந்தாய் அறிவர்-தம் அறிவர்க்கும் அறிவா – நீலகேசி:2 157/4
மேல்


பூவமே (1)

பூவமே பொருள் கைக்கொண்டு புற்கலர் – நீலகேசி:5 538/2
மேல்


பூவலயம் (1)

மண் இனிது உண்ண எண்ணும் மைந்தன் பூவலயம் ஆளும் – நாககுமார:2 48/2
மேல்


பூவலன் (1)

பூவலன் உரைத்தான் என்ன புகழ்ந்து அவன் சிறை விடுத்தான் – உதயணகுமார:1 95/4
மேல்


பூவளவன் (1)

பொங்கு நகர் புறத்தினில் பூவளவன் மேவியே – நாககுமார:4 127/3
மேல்


பூவின் (9)

பூவின் மஞ்சரியை போலும் பொற்பு நல் விரிசிகையை – உதயணகுமார:4 240/3
பூவின் வார் கணையன் என்னே புணர்த்தவாறு இதனை என்னா – யசோதர:2 109/3
நீர வாளை பூவின் வைகும் நீள் பரப்பு நண்ணினார் – சூளாமணி:7 799/4
பொன்னின் ஆய அமளி மேல் பூவின் ஆய அணை பொருந்தி – சூளாமணி:9 1476/1
பொரு மாலை வேல் அரசர் போற்று இசைப்ப பூவின்
அரு மா மழை பெய்து அமர் உலகம் ஆர்ப்ப – சூளாமணி:9 1518/1,2
தாது ஆர் பூவின் தண் தவிசு ஏறி தவழ்கின்றான் – சூளாமணி:10 1741/4
பூவின் ஆர்ந்த மணி நிலத்து பொங்கி எழுந்து பொன் ஏந்தி – சூளாமணி:10 1751/3
பொன் அரிமாலை பூவின் பொழி மது பிணையல் முத்தின் – சூளாமணி:12 2122/1
அடியொடு பூவின் இடை அறவு இன்றி – நீலகேசி:5 610/1
மேல்


பூவின்-கண் (3)

பூவின்-கண் காட்டல் பொருந்தாது அதன் வழி – நீலகேசி:5 581/1
வித்தொடு பூவின்-கண் வேற்றுமை காட்டினும் – நீலகேசி:5 582/1
பூவின்-கண் கேடும் புத்தோட்டின்-கண் தோன்றியும் – நீலகேசி:5 624/1
மேல்


பூவினது (1)

மே தக்க நாற்றம் இது பூவினது என்ப மிக்கார் – நீலகேசி:4 423/2
மேல்


பூவினன் (1)

சென்னியுள் சேர்த்திய சேட பூவினன்
கல் நவில் திரு மணி கபாடம் தாழ் உறீஇ – சூளாமணி:4 185/2,3
மேல்


பூவினாள் (1)

பூவினாள் பொறி ஒன்று ஆனாள் புண்ணிய உலகம் காண – சூளாமணி:6 551/3
மேல்


பூவினும் (1)

பூவினும் பொருதல் வேண்டா சூழ்ச்சியே பொருந்த நோக்கி – சூளாமணி:9 1179/1
மேல்


பூவினுள் (3)

பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளி – சூளாமணி:5 419/2
புகழ்ச்சி நூலுள் புகன்றனர் பூவினுள்
திகழ்ச்சி செல் பொன் மணி முடி மன்னனே – சூளாமணி:7 628/3,4
பூவினுள் மடந்தை வந்து புகுந்தவாறு உரைக்கலுற்றேன் – சூளாமணி:9 1131/4
மேல்


பூவினை (1)

பாசனம் ஆகிய பாதிரி பூவினை
பூசினது எ பொருள் போத்தந்து காட்டாய் – நீலகேசி:5 623/3,4
மேல்


பூவும் (9)

பூவும் நல் தளிரும் செற்றி பொழில் மிக சூழ்ந்து இலங்கும் – உதயணகுமார:1 6/1
கோட்டுப்பூ நிறைந்து இலங்கும் கொடி வகை பூவும் கோலம் – உதயணகுமார:3 153/1
விரை கமழ் பூவும் நீரும் வேண்டிய பலமும் ஏந்தி – உதயணகுமார:6 331/1
புது நகர் இழைத்து முந்து பொலம் கல தொகையும் பூவும்
எதிர் நகைத்து உகைத்து மாதர் எதிர்கொள நகரம் சேர்ந்தார் – சூளாமணி:6 504/3,4
சுந்தர பொடியும் பூவும் சுரும்பொடு துதைந்து வீசி – சூளாமணி:8 833/1
புது மலர் கொடியும் பூவும் துணர்களும் புணர்ந்த பேரார் – சூளாமணி:8 994/2
கொண்டு அறையும் இடி முரசும் கொடி மதிலும் குளிர் புனலும் பொறியும் பூவும்
ஒண் துறையும் மும்மூன்றும் உடைய கோவே இவனது எழிலும் காணாய் – சூளாமணி:10 1816/3,4
பூவும் பழனும் நுகர்ந்து பொழில் மரம் – சூளாமணி:11 1976/1
திரு வகை தேவொடு பூவும் சிதைத்தேன் – நீலகேசி:5 597/2
மேல்


பூவை (6)

பூவை வண்டு அரற்றும் காவுள் பூம் பொய்கை கண்டு இருப்ப – உதயணகுமார:1 116/2
பூவை அம் புது மலர் புரையும் மேனியன் – சூளாமணி:3 77/1
பூவினுள் மடந்தை பொன் பூவை நாள் ஒளி – சூளாமணி:5 419/2
புது மகிழ்வன பொழிலிடையன புணர் துணையன பூவை
விதி மகிழ்பவர் மதி மகிழ்வுற விரவுற்றன விரிவே – சூளாமணி:6 436/3,4
பஞ்சு உடைய பந்து கிளி பாவையொடு பூவை
மஞ்சு உடைய மின்னின்_அனையாள் மகிழும் நீர – சூளாமணி:8 869/2,3
பூ மரு பூவை கண்ணி புது மலர் ஒளியும் காட்டி – சூளாமணி:8 980/2
மேல்


பூவையும் (2)

பொழில் அகம் பூவையும் கிளியும் பாடுமே – சூளாமணி:1 10/2
பூவையும் கிளியும் கொண்டு புலம்பின பொழில்கள் எல்லாம் – சூளாமணி:4 167/4
மேல்


பூவொடு (4)

பொன் நவில் திரு நகர் பூவொடு எய்தினான் – சூளாமணி:4 178/4
பொங்கு காடு ஏர்பட ஞெறித்து பூவொடு
கொங்கை-வாய் குழலவர் குளிப்ப விட்டன – சூளாமணி:5 368/2,3
வண்டு அறை பூவொடு வந்தனை செய்வேன் – நீலகேசி:1 144/4
பொய் கைசெய்தே சொன்ன பூவொடு வித்து உரை – நீலகேசி:5 596/3

மேல்