நோ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 5
நோக்ககில்லன் 1
நோக்கம் 3
நோக்கமும் 1
நோக்கமோடு 1
நோக்கல 1
நோக்கலார் 1
நோக்கா 1
நோக்காது 1
நோக்காய் 6
நோக்கார் 2
நோக்காள் 1
நோக்கி 116
நோக்கிநோக்கி 1
நோக்கிய 2
நோக்கியர் 1
நோக்கியும் 1
நோக்கியே 1
நோக்கிலன் 1
நோக்கின் 8
நோக்கின்னவளாய் 1
நோக்கினள் 1
நோக்கினன் 1
நோக்கினனால் 1
நோக்கினாய் 1
நோக்கினார் 1
நோக்கினால் 2
நோக்கினாள் 2
நோக்கினான் 8
நோக்கினானே 1
நோக்கினும் 1
நோக்கு 5
நோக்கு-மின் 1
நோக்குக 1
நோக்குகிற்பார் 1
நோக்குதியேல் 1
நோக்குபு 2
நோக்கும் 3
நோக்குமே 1
நோக்குமோ 1
நோக்குவது 1
நோக்குவன் 1
நோக்குவாள் 1
நோக்குவான் 2
நோக்கொடு 1
நோக 1
நோதலே-கொல் 1
நோதும் 1
நோம் 2
நோமால் 2
நோய் 32
நோய்_இன்மையின் 1
நோய்_உடையவர்க்கு 1
நோய்க்கு 2
நோய்களும் 3
நோய்த்தி 1
நோயர் 1
நோயின் 1
நோயினால் 1
நோயும் 1
நோயுற்ற 1
நோயை 2
நோயொடும் 1
நோவ 11
நோவது 1
நோவியீர் 1
நோவு 1
நோவே 1
நோற்க 1
நோற்கிய 1
நோற்ற 1
நோற்றார்க்கு 1
நோற்றால் 1
நோற்றானே 1
நோற்று 6
நோற்றும் 1
நோற்றேனே 1
நோன் 2
நோன்பி 1
நோன்பினால் 1
நோன்பு 15
நோன்புகள் 1
நோன்பை 1
நோன்மை 5
நோன்றல் 1
நோன்றலையும் 1
நோனார் 2
நோனான் 1

நோக்க (5)

முறையின் நல் வழியை நோக்க மொய்ம்பன் அ தினத்தில் தோன்ற – உதயணகுமார:1 15/3
நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த – உதயணகுமார:1 82/2
தீது இன்றி கோள்கள் எல்லாம் சிறந்து நல் வழியை நோக்க
போதின் நல் குமரன் தோன்ற புரவலன் இனியன் ஆகி – உதயணகுமார:5 252/2,3
மருவிய அமைச்சர்-தம்மை மன்னவன் இனிதின் நோக்க
பெரு விறல் யூகி சொல்வான் பெரும் தவர்-பால் அறத்தை – உதயணகுமார:6 329/2,3
வசை இன்றி மூத்தாள்-தன்னை மனோகரி நோக்க கண்டேன் – நாககுமார:2 55/4
மேல்


நோக்ககில்லன் (1)

ஆர நோக்ககில்லன் அன்னன் அரச நம்பிமார்களை – சூளாமணி:6 499/3
மேல்


நோக்கம் (3)

இமைகள் விட்ட நோக்கம் ஏற இன்ன போல்வ சொல்லலும் – சூளாமணி:6 502/1
வடி நெடும் கண் நோக்கம் மணி வண்டாய் ஓட – சூளாமணி:10 1643/2
இறுதி_இல் பல் குண நோக்கம் என்று இன்ன – சூளாமணி:11 2011/3
மேல்


நோக்கமும் (1)

சிறை கண் நோக்கமும் சிறு நகை தொழில்களும் சுருக்கி – சூளாமணி:6 470/3
மேல்


நோக்கமோடு (1)

கடுத்திடும் அரவு என கனன்ற நோக்கமோடு
அடுத்து எரிந்து அழல் நகை நக்குநக்கு இவை – சூளாமணி:7 683/2,3
மேல்


நோக்கல (1)

முற்ற நோக்கினும் முற்ற நோக்கல
உற்ற நூல் எலாம் உற்ற நூல்களாய் – சூளாமணி:7 593/2,3
மேல்


நோக்கலார் (1)

நீ இனே சொன்ன மெய்ம்மையை நோக்கலார்
தூய்மை யாம் பிறர் தூய்மை_இலர் என்று – நீலகேசி:5 559/1,2
மேல்


நோக்கா (1)

வேயிடை_தோளி மெல்ல விழித்தனள் வியந்து நோக்கா
தீயிடை மெழுகின் நைந்த சிந்தையின் உருகினாளே – யசோதர:2 94/3,4
மேல்


நோக்காது (1)

உரை எடுப்பான் போல் நிமிர்ந்து நோக்காது நிற்ப – சூளாமணி:9 1520/2
மேல்


நோக்காய் (6)

ஒலி கற்ற உதிர நீத்தம் ஒழுகுவது இன்னம் நோக்காய் – சூளாமணி:7 769/4
பொங்கி குங்கும பொடி ஒத்து பொலிகின்ற பொலம்_கொடி புடை நோக்காய் – சூளாமணி:8 884/4
வளம் கொள் நம் படை கடலிடை மறித்தவை சுழல்கின்ற வகை நோக்காய் – சூளாமணி:8 885/4
மெல்கு பூம் துகில் விரித்தவா வருகின்ற விதலைகள் மிக நோக்காய் – சூளாமணி:8 887/4
நடுவாக நோக்காய் நறு_நுதலாய் என்ன – நீலகேசி:5 644/4
நுன்னை படைத்தவர் யார் இனி நோக்காய் – நீலகேசி:7 771/4
மேல்


நோக்கார் (2)

தோற்றவர் புறக்கொடையும் நாணி மிக நோக்கார்
வேற்றவரை வீர நெறி காண்-மின் இது என்று – சூளாமணி:9 1280/2,3
அத்தலை இன்பம் நோக்கார் அஞ்சுவ மாக்கள் அந்தோ – நீலகேசி:3 263/2
மேல்


நோக்காள் (1)

பேர்_இசை தத்தை ஆயம் பெரும் குழாத்து இனிதின் நோக்காள் – உதயணகுமார:4 227/4
மேல்


நோக்கி (116)

எஞ்சல்_இல் எல்லை காணா எழில்பெற நிற்றல் நோக்கி
அஞ்சல் இல் வருக என்றே அணிபெற இலங்கி நீண்ட – உதயணகுமார:1 8/2,3
தாமரை கண் தழல் எழ நோக்கி அ – உதயணகுமார:1 34/1
யூகியும் வஞ்சம்-தன்னை உற்று சூழ் வழாமை நோக்கி
வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் – உதயணகுமார:1 109/1,2
வத்தவகுமரன் கேட்டு வயந்தகன்-தன்னை நோக்கி
அ திசை போவோம் என்றே அகம் மகிழ்ந்து இனிய கூறி – உதயணகுமார:2 150/1,2
பொள்ளென வெகுண்டு நோக்கி பொரு மனத்து உருகி மன்னன் – உதயணகுமார:4 191/1
மன்னனும் முடி அசைத்து அமைச்சனை நெடிது நோக்கி
மன்னிய உவகை-தன்னால் மகிழ்வுரை விளம்பினானே – உதயணகுமார:4 213/3,4
சித்திர நேர் மாதரை செல்வன் நோக்கி கூறுவான் – உதயணகுமார:6 356/4
நலம் உறு தோத்திரங்கள் நாதன்-தன் வதனம் நோக்கி
பல மனம் இன்றி ஒன்றி பல துதி செப்பலுற்றான் – நாககுமார:1 15/3,4
மன்னன் நோக்கி மயங்கி மகிழ்ந்த பின் – நாககுமார:1 29/1
நூல் மொழி இறைவன் பாதம் நோக்கி நன்கு இறைஞ்சினாளே – நாககுமார:1 35/4
அ முனி அவரை நோக்கி அருந்து நல் கனவு-தன்னை – நாககுமார:2 44/1
வாகு நல் சுதனை நோக்கி யானை நீ கைக்கொள் என்றான் – நாககுமார:2 57/4
வில்லினது எல்லை கண்ணால் நோக்கி மெல் அடிகள் பாவி – யசோதர:1 28/1
நின்றவர்-தம்மை நோக்கி நிலைதளர்ந்திட்டு மன்னன் – யசோதர:1 61/1
தையலாள் மெல்ல தேறி சாரனை மகிழ்ந்து நோக்கி
வெய்ய நீ முனிவு செல்லல் மேதினிக்கு இறைவன்-தன்னோடு – யசோதர:2 121/1,2
ஆர் அருள் புரிந்த நெஞ்சின் அ முனி அவனை நோக்கி
சீர் அருள் பெருகும் பான்மை திறத்தனே போலும் என்றே – யசோதர:4 232/1,2
தனயர்கள்-தம்மை நோக்கி தரியலீர் சரியை போ-மின் – யசோதர:5 319/2
ஏம் மரு கடல் அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கி
தாமரை செம் கண்-தம்மால் பணித்த தானத்தர் ஆனார் – சூளாமணி:3 96/3,4
பூ அலர் பொலிவு நோக்கி புல மயம் களிப்ப ஆகி – சூளாமணி:3 99/3
பொன் அணி வாயில் காக்கும் பூம் கழலவனை நோக்கி
என்னவரேனும் ஆக நாழிகை ஏழு-காறும் – சூளாமணி:3 102/2,3
கொற்றவன் குறிப்பு நோக்கி இருந்த பின் குண_குன்று ஒப்பான் – சூளாமணி:3 105/2
முற்றிய உலகின் மூன்று காலமும் முழுதும் நோக்கி
கற்ற நூல் புலமை-தன்னை காட்டுதல் கருதி சொன்னான் – சூளாமணி:3 105/3,4
என்று அவன் இயம்ப கேட்டே இருந்தவர் வியந்து நோக்கி
சென்று உயர் திலக கண்ணி திவிட்டன் இ திறத்தனேயாம் – சூளாமணி:3 109/1,2
அரசவை விடுத்த வேந்தன் அகத்த நூலவரை நோக்கி
வரை உயர் மாட கோயில் மந்திரசாலை சேர்ந்தான் – சூளாமணி:3 110/3,4
நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள் – சூளாமணி:4 144/2
வாம வாள் நெடு நோக்கி மடம் கனி – சூளாமணி:4 157/1
அம் தழை அசோகம் பூத்த அழகு கண்டு அவாவின் நோக்கி
வெம் தழல் பிறங்கல் என்று வெருவிய மறு_இல் தும்பி – சூளாமணி:4 165/1,2
கார் அணிந்த குழலீர் நும் கைத்தலங்கள் தகை நோக்கி
சீர் அணிந்த செழும் பிண்டி தளிர் ஈன்று திகழ்ந்தனவே – சூளாமணி:4 175/1,2
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி
ஏர் அணிந்த குருக்கத்தி இளம் கொடித்தாய் ஈன்றனவே – சூளாமணி:4 175/3,4
தேன் தளங்கு குழலீர் நும் செவ்வாயின் எழில் நோக்கி
தாம் தளிர் மென் முருக்கு இனிய தாதோடு ததைந்தனவே – சூளாமணி:4 176/3,4
மறம் மலி மன்னனை நோக்கி மற்று அவற்கு – சூளாமணி:4 191/3
முனிவருள் பெரியவன் முகத்து நோக்கி ஒன்று – சூளாமணி:4 196/1
மற்று அவற்கு உறுதி நோக்கி வரு பழி வழிகள் தூர – சூளாமணி:5 246/3
பணிந்து மற்று ஏனையார் பாங்கு இருப்ப நூல் பலவும் நோக்கி
துணிந்து தன் புலைமை தோன்ற சச்சுதன் சொல்லலுற்றான் – சூளாமணி:5 257/1,2
இறந்து அலையுறாமை நோக்கி இன் உயிர் போல காக்கும் – சூளாமணி:5 266/2
திருமையால் முயங்கும் செல்வ செருக்கொடு திளைப்ப நோக்கி
இருமையும் ஒருமையாலே இயற்றலின் இறைவன் போல – சூளாமணி:5 267/2,3
என்று அவன் மொழிந்த போழ்தின் ஏனையார் இனிதின் நோக்கி
மின் தவழ் விளங்கு வேலோய் மெய் இனும் மேவல் வேண்டும் – சூளாமணி:5 360/1,2
வணங்கு எழில் நுடங்கு இடை மாழை நோக்கி நம் – சூளாமணி:5 382/2
மாவினை மருட்டிய நோக்கி நின் மகள் – சூளாமணி:5 419/1
அலகை_இல் தானை வேந்தன் அம்பரசரனை நோக்கி
உலகு உபசாரம் மாற்றம் உரைத்தலுக்கு உரிய கூறி – சூளாமணி:6 511/1,2
விஞ்சையன் எழுந்து தம் கோன் வெள்ளி வேதண்டம் நோக்கி
அஞ்சலி தட கை கூப்பி அரக்கு இலச்சினையின் வைத்த – சூளாமணி:6 512/1,2
எஞ்சல்_இல் ஓலை காட்ட இறைமகன் குறிப்பு நோக்கி
வஞ்சம்_இல் வயங்கு கேள்வி மதிவரன் கரத்தில் வாங்கி – சூளாமணி:6 512/3,4
பகர அரும் பதங்கள் நோக்கி பயின்று பின் வாசிக்கின்றான் – சூளாமணி:6 513/4
மீட்டு உரை கொடாது சால விம்மலோடு இருப்ப நோக்கி
வாட்ட அரும் பெருமை எம் கோன் ஓலையை மதியா ஆறு என்று – சூளாமணி:6 517/2,3
ஏவரே போல நோக்கி இகழ்ந்து உரைத்து எழுவது அன்றே – சூளாமணி:6 519/3
ஆங்கு அவன் உரைப்ப கேட்டே அம்பரசரனை நோக்கி
தேம் கமழ் அலங்கல் மார்ப சிவந்து உரையாடல் வேண்டா – சூளாமணி:6 524/1,2
மாண்ட தன் நிலைமை உள்ளி வரு பொருள் மெய்ம்மை நோக்கி
தூண்டிய சுடரின் நின்ற தியானத்தை துளங்குவாய் போல் – சூளாமணி:6 546/1,2
உள் மிசை தொடர்பு நோக்கி உறு_வலி அதனை கேளா – சூளாமணி:6 547/2
பின் அவன்-தன்னை நோக்கி பேசினன் பிறங்கு தாரோய் – சூளாமணி:6 564/2
நின்ற கேசரரை நோக்கி நில மன்னன் அனைய சொன்னார்க்கு – சூளாமணி:7 671/2
மோட்டு இளம் கண்ணி தீய முனிந்து அழல் முழங்க நோக்கி
ஊட்டு இலங்கு உருவ கோலோர் தங்களுக்கு உரைத்த எல்லாம் – சூளாமணி:7 693/2,3
உள் எரி உமிழ நோக்கி உரும் என அதிரும் பேழ் வாய் – சூளாமணி:7 697/3
நிழல்-கண் நோக்கி நின்று அழன்றன நிலையிடம் புகுக – சூளாமணி:7 708/2
வெம்ப ஏங்கு உயிரை எல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கி
கம்பமா உலகம்-தன்னை கண்டிடும் களிகொள் சீயம் – சூளாமணி:7 770/1,2
ஆங்கு நீ முனிந்த போழ்தின் அரி அது அகல நோக்கி
வாங்கு நீர்_வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன் – சூளாமணி:7 771/1,2
முன்னு முக ஓரையொடு மூர்த்த நலம் நோக்கி
மன்னு புலவோர்கள் சொல மன்னன் மகள்-தன்னை – சூளாமணி:8 866/2,3
மலை இனம்மொடு வருவ ஒத்து உள அவை வரவு_இல மடன்_நோக்கி – சூளாமணி:8 888/2
கருமை கொள் குவளை_கண்ணி கழி நல கதிர்ப்பு நோக்கி
திரு_மகள் இவளை சேரும் செய் தவம் உடைய காளை – சூளாமணி:8 986/2,3
அங்கு அவள் குறிப்பு நோக்கி அமுதமாபிரபை என்னும் – சூளாமணி:8 1004/1
துணிய முன் கலந்து செய்த துகிலிகை தொழில்கள் நோக்கி
அணியினது ஒளிகளோ இ அணங்கினது உருவமோ இ – சூளாமணி:8 1009/2,3
மான் இவர் நோக்கி அன்னோர் மகள் அல்லள் மற்று நின்ற – சூளாமணி:8 1017/3
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி – சூளாமணி:8 1019/3
மன்னிய வில் கை நோக்கி மலர் அணி கணையும் நோக்கி
துன்னிய பொழுது நோக்கி சுடு சரம் தொடுக்கலுற்றான் – சூளாமணி:8 1019/3,4
துன்னிய பொழுது நோக்கி சுடு சரம் தொடுக்கலுற்றான் – சூளாமணி:8 1019/4
ஆகத்துள் அடக்கி பின்னும் அணி நுதல் அழகு நோக்கி
நாகத்தை நடுக்கும் அல்குல் நங்கை-தன் திறத்து காம – சூளாமணி:8 1021/2,3
திங்கள் அம் குழவி பால் வாய் தீம் கதிர் முறுவல் நோக்கி
தங்கு ஒளி விரிந்த ஆம்பல் தாமரை குவிந்த ஆங்கே – சூளாமணி:8 1031/2,3
இனைந்த போன்று இடையிடை நோக்கி இன் குரல் – சூளாமணி:8 1062/2
கன்னி நாண் ஏற்றம் காளை கண் களி கொள்ள நோக்கி
பின் அவள் ஒடுங்க வாங்கி பெரு வரை அகலம் சேர்த்தி – சூளாமணி:8 1110/2,3
வம்பு அழகு நோக்கி வழிபடுவதே சாலும் – சூளாமணி:8 1119/2
கள்ள மட_நோக்கி தன்னை கரந்து எனது – சூளாமணி:8 1121/1
போது உலாம் வாள் முகமே நோக்கி பொலிவேன் என் – சூளாமணி:8 1122/3
வெம் சினம் கனன்று மீட்டும் விஞ்சையன் அவனை நோக்கி
வஞ்சனை மனத்தர் ஆய மனிசரை வலியர் என்பாய் – சூளாமணி:9 1140/2,3
சின அழல் எறிப்ப நோக்கி சிவந்தனன் தெழித்தலோடு – சூளாமணி:9 1142/2
அருகினோர் நடுங்க நோக்கி அழல் நகை அடுத்து நின்றான் – சூளாமணி:9 1147/4
உற்றன பிறவும் நோக்கி உள்ளங்கள் நடுங்கியிட்டார் – சூளாமணி:9 1151/4
வாள்களை துடைத்து நோக்கி வகை செய்வது எளிது யார்க்கும் – சூளாமணி:9 1166/2
பூவினும் பொருதல் வேண்டா சூழ்ச்சியே பொருந்த நோக்கி
ஆவது காண்டல் ஆகும் அரசர்க்கு நீதி என்று – சூளாமணி:9 1179/1,2
மொழி எதிர் உலகம் ஆள்வான் உவந்து அவன் முகத்தை நோக்கி
பழி பெரிது ஒழிய சொன்னான் படைத்திறலாளன் என்றான் – சூளாமணி:9 1180/3,4
செயிர்_இல் வில்-அதனை நோக்கி செம் கதிர் பெயரன் சொன்னான் – சூளாமணி:9 1196/4
வேரொடு பறித்தனர் எழுத்து வரி நோக்கி
பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி – சூளாமணி:9 1281/2,3
தோளொடு துதைந்து எறியும் வாள்-அதனை நோக்கி
கோளொடு மடுத்த குளிர் மா மதியம் ஏய்ப்ப – சூளாமணி:9 1293/2,3
எய் வேல் அறுத்து வறியானை நோக்கி எறியாது நிற்ப அவன் ஓர் – சூளாமணி:9 1333/1
இரும் கலி உலகம் எல்லாம் இருள் கொள வெருவி நோக்கி
பொரும் கலி அரசர் தானை போக்கிடம் அற்றது அன்றே – சூளாமணி:9 1432/3,4
அன்னணம் உடைந்த போழ்தின் அருக்கனை முகத்து நோக்கி
என் இது விளைந்தவாறு என்று இரும் கடல்_வண்ணன் கேட்ப – சூளாமணி:9 1434/1,2
நீ பெரிது இனியை என்னா நெடியவன் அதனை நோக்கி
காய் எரி சுடர் விட்டாங்கு கனன்றனன் கனலலோடும் – சூளாமணி:9 1436/2,3
வையகம் நடுங்க நோக்கி மழ களிறு அணைக என்றான் – சூளாமணி:9 1441/4
வேலினான் உடங்கு நில்லாது உடைந்திட வெகுண்டு நோக்கி
நீல மா மணி குன்று ஒப்பான் நெடும் சிலை இடம் கை கொண்டான் – சூளாமணி:9 1442/3,4
புடைத்திட நெரிந்து பொங்கி சரங்கள் போய் புரள நோக்கி
விடை திறல் விடலை-தன் மேல் வெம்பிய மனத்தன் ஆகி – சூளாமணி:9 1450/2,3
மாற்றினன் மறுப்ப நோக்கி மற்று அவன் மாற்றலான் பேர்_ஆற்றலை – சூளாமணி:9 1457/2
தா_இலாத தழை சார்வன நோக்கி
காவு காமர் கனி கண்டது கையால் – சூளாமணி:10 1579/2,3
தாது இவர் கரும் குழலி-தன்னை முகம் நோக்கி
மாதவன் நடுங்கி வளர் பூம் பொழில் மறைந்தான் – சூளாமணி:10 1609/1,2
மாதவனை நோக்கி மணி வாய் முறுவல் தோற்றி – சூளாமணி:10 1614/2
மங்கையர் வனப்பு நோக்கி மணி_வண்ணன் மகிழ்ந்து மற்று அ – சூளாமணி:10 1624/2
பாங்கு அமை பாரிசாதம் பருவம்செய் பொலிவு நோக்கி
ஈங்கு இவற்கு இசைந்த கோலம் இனிதினின் இயற்றுக என்றான் – சூளாமணி:10 1626/2,3
பூம் பொழில் விளங்க தோன்றும் பொன் இதழ் மறிந்து நோக்கி
தேம் பொழி செய்யுள் இன்பம் செவி முதல் சேர்த்துவாரும் – சூளாமணி:10 1638/3,4
தம் பருவ சோலை தழைத்த தகை நோக்கி
எம் பெருமான் போலும் எழில இவை என்று – சூளாமணி:10 1653/2,3
நாண்-தனால் நிறைந்த நங்கை நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையார் அடிகள் என்னும் ஆயிடை அஞ்சல் பொன்னே – சூளாமணி:10 1666/1,2
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி
வார் ஆலி மென் கொங்கை மை அரி கண் மாதர் வருந்தினாள் நங்கை இனி வருக ஈங்கு என்றார் – சூளாமணி:10 1757/3,4
வண்டு இவர் மாலை நோக்கி மாதராள் மறைதலோடும் – சூளாமணி:10 1825/2
சுரி குழல் மடந்தை என்னும் தோகை அம் மஞ்ஞை நோக்கி
எரி கதிர் ஆழி வேந்தன் திருமகன் என்னும் செம்பொன் – சூளாமணி:10 1834/2,3
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழ் உயிர் வவ்வும் காலன்-தன்னை – சூளாமணி:11 1860/3
நுண்ணிய நூல் வழி நோக்கி நுனித்தவர் – சூளாமணி:11 2007/3
பின்னும் அவர் தம் வழி பிறந்தவரை நோக்கி
மன்னும் இனிது ஏறுவது வான்_உலகம் மன்னோ – சூளாமணி:11 2035/3,4
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார் – சூளாமணி:12 2118/3
ஆமான் மட பிணை அன்ன மெல் நோக்கி அவர் திறமே – நீலகேசி:1 83/4
பெடை ஊடு சாயல் பிணை அன்ன நோக்கி
இடையூறு இரண்டும் இனி யாவை என்னின் – நீலகேசி:1 110/1,2
மான் ஒத்த நோக்கி மருந்து என்றவை மூன்றினுள்ளும் – நீலகேசி:1 117/1
நீட்சி ஓக்கமோடு அகலம் நினைய நின்று எங்கணும் நோக்கி
மாட்சியால் வலம்கொண்டு மா தவத்து இறைவனில் பிழையா – நீலகேசி:2 151/1,2
வாயிலோன் உரை கேட்டு வடி_கண்ணாள் முகம் நோக்கி
கோயிலை யான் புக விலக்கும் குறை என்னை முறை திருத்தும் – நீலகேசி:2 168/1,2
மான் செய் நோக்கி மதிப்பு ஒழி நீ என – நீலகேசி:2 224/3
மான் அறா நோக்கி மணல் சுமையும் தான் பெரிதால் துக்கம் துக்கம் – நீலகேசி:3 256/2
பெண் என்றும் பிற என்றும் தான் நோக்கி பெரும் பேதாய் – நீலகேசி:4 275/3
என்றாளை முகம் நோக்கி இது பெரிதும் பொய்த்தனை நீ – நீலகேசி:4 286/1
இ கோள்கள் எழல் நோக்கி இவை இவையே ஆம் என்றால் – நீலகேசி:4 298/1
அ கோள்கள் எழல் நோக்கி அவை அவையா கண்டிருந்து – நீலகேசி:4 298/2
மதத்தினின் மிக்கவன் மாதரை நோக்கி
உதப்பி என்னும் குற்றம் உரை எனக்கு என்ன – நீலகேசி:7 739/3,4
மேல்


நோக்கிநோக்கி (1)

நூல் கொள் சிந்தை கண் கடாவ நோக்கிநோக்கி ஆர்கலன் – சூளாமணி:6 498/2
மேல்


நோக்கிய (2)

மேவிய அரும் கலம் விளங்க நோக்கிய
காவலன் செல்வ நீர் கடலுள் மூழ்கினான் – சூளாமணி:9 1553/3,4
நூல் படை முனிவர் கண்ணா நோக்கிய நயத்தன் ஆகி – சூளாமணி:12 2109/2
மேல்


நோக்கியர் (1)

மான் உயர் நோக்கியர் பரவ மங்கை தன் – சூளாமணி:4 218/3
மேல்


நோக்கியும் (1)

கண்களில் நோக்கியும் காதலின் உள்ளியும் – சூளாமணி:11 1966/1
மேல்


நோக்கியே (1)

அருகு நின்று அந்தணன் அமர்ந்து நோக்கியே
வெருவிய மனத்தினன் விதலை மேனியன் – சூளாமணி:10 1596/2,3
மேல்


நோக்கிலன் (1)

ந கணத்தை நயந்துடன் நோக்கிலன்
அக்கணத்தில் அகம் மகிழ்வு எய்தி தன் – உதயணகுமார:1 48/1,2
மேல்


நோக்கின் (8)

மான் அளாம் மதர்வை நோக்கின் மை அரி மழை_கணார்-தம் – சூளாமணி:2 40/1
பேர் இருள் கிழிய தோன்றும் பிறை எயிற்று அமர நோக்கின்
சூர்_அர_மகளிர் வாழும் இடம் இவை சுடர்ப எல்லாம் – சூளாமணி:7 759/3,4
ஏதிலார் போல நோக்கின் இரு மடங்காக எய்தும் – சூளாமணி:8 991/2
மான் நிலா மட கண் நோக்கின் மகளிர்-தம் வலையில் பட்டான் – சூளாமணி:10 1556/4
நொந்தோம் என சென்று நோக்கின் நுனிப்பொடு – சூளாமணி:11 1963/2
பிண்டம் ஒன்று ஆயினும் பிரிய நோக்கின் அது – நீலகேசி:5 552/1
உழப்பு மூன்றும் உடன் ஒக்க நோக்கின் அது – நீலகேசி:5 554/1
மான் நின்ற நோக்கின் மற வேல் நெடும் கண்ணின் நல்லாய் – நீலகேசி:6 725/1
மேல்


நோக்கின்னவளாய் (1)

மான் கொண்ட நோக்கின்னவளாய் மறம் மாற்றிய பின் – நீலகேசி:0 9/2
மேல்


நோக்கினள் (1)

நுனித்தகு நல் நெறி நோக்கினள் ஆகி – நீலகேசி:1 146/1
மேல்


நோக்கினன் (1)

தொகையுறும் தன தொல் படை சூழ ஊர்முகம் நோக்கினன்
நகையுறும் நலம் தவ மார்பனும் நகர வீதியில் வந்தனன் – உதயணகுமார:3 183/3,4
மேல்


நோக்கினனால் (1)

நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால் – நீலகேசி:4 381/4
மேல்


நோக்கினாய் (1)

மான் கடியும் நோக்கினாய் வழி அற கெட்டு ஒழிவதோ – நீலகேசி:2 181/4
மேல்


நோக்கினார் (1)

மான் அளாய நோக்கினார் மனம் கலந்து பின் செல – சூளாமணி:6 489/1
மேல்


நோக்கினால் (2)

குணிக்கணால் நோக்கினால் குணங்கள் இல் குணத்து – நீலகேசி:8 819/1
அணிக்கணால் நோக்கினால் அதுவும் அன்னதே – நீலகேசி:8 819/2
மேல்


நோக்கினாள் (2)

ஒருங்கு இயன்று ஒளி நகை உமிழ நோக்கினாள் – சூளாமணி:8 1043/4
மான் இவர் நோக்கினாள் வயாவினாள் அது – சூளாமணி:10 1731/3
மேல்


நோக்கினான் (8)

மல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:4 227/4
நூல் நெறி-கண் மிக்க நீர்மை ஒக்க நின்று நோக்கினான் – சூளாமணி:6 497/4
மால் கொள் சிந்தையார்கள் போல மற்றும்மற்றும் நோக்கினான் – சூளாமணி:6 498/4
முன்னம் வெல்க என்றான் முகம் நோக்கினான் – சூளாமணி:7 623/4
வான் அவாம் தட_கையான் மகிழ்ந்து நோக்கினான் – சூளாமணி:7 822/4
நும் பெயர் நிறுத்து-மின் என்று நோக்கினான் – சூளாமணி:9 1265/4
வேலை_நீர்_வண்ணனை வெருண்டு நோக்கினான் – சூளாமணி:10 1587/4
நங்கை-தன் நலம் கிளர் மேனி நோக்கினான் – சூளாமணி:10 1759/4
மேல்


நோக்கினானே (1)

சூழ நல் மாதர் நிற்ப துளக்கு இன்றி நோக்கினானே – உதயணகுமார:1 87/4
மேல்


நோக்கினும் (1)

முற்ற நோக்கினும் முற்ற நோக்கல – சூளாமணி:7 593/2
மேல்


நோக்கு (5)

விடம் உடை எரி கொடி விலங்கு நோக்கு உடை – சூளாமணி:7 686/1
நிழல் அவாம் பகழி போலும் நெடும் கண் நோக்கு என்னும் வெய்ய – சூளாமணி:8 1022/3
நோன்றலையும் நோன்பு என்னான் நோக்கு உடைய கணிகையரே – நீலகேசி:2 163/2
உணர்ச்சியொடு அல்லன ஒன்று ஒன்றில் நோக்கு இலவாம் எனினும் – நீலகேசி:5 506/3
சுட்டினாள் அங்கு தோற்றமும் நோக்கு என – நீலகேசி:10 888/3
மேல்


நோக்கு-மின் (1)

நும் தொழில் புகுந்த போழ்தின் நோக்கு-மின் எம்மை என்றான் – சூளாமணி:9 1202/4
மேல்


நோக்குக (1)

நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏது எனில் விரதம் காக்கவே – யசோதர:5 330/3,4
மேல்


நோக்குகிற்பார் (1)

தூண் தொழ வளர்த்த தத்தம் தோள்களை நோக்குகிற்பார் – சூளாமணி:9 1162/4
மேல்


நோக்குதியேல் (1)

நூல் பொருள் தாம் பரிணாம திரிவு என நோக்குதியேல்
பால் பொருள் தான் தயிர் ஆய பொழுதின்-கண் பாழ்த்திலதேல் – நீலகேசி:4 386/2,3
மேல்


நோக்குபு (2)

பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான் – சூளாமணி:10 1585/4
இ நிழல் காண் என இறைஞ்சி நோக்குபு
தன் நிழல் தான் செய்வ செய்ய தான் தெளிந்து – சூளாமணி:10 1600/2,3
மேல்


நோக்கும் (3)

பாரோர்கள் இனிது நோக்கும் பல கலம் சிலம்போடு ஆர்ப்ப – உதயணகுமார:4 225/2
பக்கம் நோக்கும் பறவை ஒர்பால் எலாம் – சூளாமணி:1 22/4
மான் மருவா அந்த நோக்கும் அரியாள் – நீலகேசி:7 760/4
மேல்


நோக்குமே (1)

கற்றவர்-தம்மையும் கழற நோக்குமே – சூளாமணி:12 2084/4
மேல்


நோக்குமோ (1)

துணிபவன் தன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
அணி முடி துற-மின் எம் அடிகள் என்றனர் – சூளாமணி:12 2079/2,3
மேல்


நோக்குவது (1)

நோக்குவது ஏது எனில் ஞானம் நோக்குக – யசோதர:5 330/3
மேல்


நோக்குவன் (1)

நூல் நின்றவாறே பொருள் நோக்குவன் யானும் என்றான் – நீலகேசி:6 725/4
மேல்


நோக்குவாள் (1)

மண்டலத்தின் நோக்குவாள் மடுத்த தனது அவதியால் – நீலகேசி:2 164/1
மேல்


நோக்குவான் (2)

பற்றுவான் அடி தொழ படிவம் நோக்குவான்
ஒற்றை வார் குழல் மயிர் உச்சி வெண்மையை – யசோதர:2 79/2,3
நீறும் ஓடும் நிழல் மணியும் பொன்னும் நிகரா நோக்குவான் – நீலகேசி:1 40/4
மேல்


நோக்கொடு (1)

வடித்த சிறு நோக்கொடு முக தொழில் வகுத்தார் – சூளாமணி:6 454/4
மேல்


நோக (1)

தனையன் மாளிகை தன் உளம் நோக முன் – யசோதர:3 204/3
மேல்


நோதலே-கொல் (1)

நோதலே-கொல் நொசிந்து உள ஆம்களே – சூளாமணி:4 153/4
மேல்


நோதும் (1)

புத்தனை நோதும் அத்த புலம்பல் நீ போக என்றாள் – நீலகேசி:3 263/4
மேல்


நோம் (2)

அல்குல் நோம் என சிலம்பு அணிந்து மெல்லவே – சூளாமணி:4 227/2
செம்பொன் அணி சீரியன சேரின் இடை நோம் என்று – சூளாமணி:8 865/1
மேல்


நோமால் (2)

நறு மாலை வந்து அலைப்ப நல் மேனி நோமால் நங்காய் இ பந்தாடல் நன்று அன்றாம் என்பார் – சூளாமணி:10 1756/1
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
மேல்


நோய் (32)

பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் – உதயணகுமார:1 15/2
மாது தன் வயா_நோய் தீர்ந்து வள நகர் புக்க பின்பு – உதயணகுமார:5 252/1
தன்னுடை நோய் உரைக்க தையலும் மோனம் கொண்டே – உதயணகுமார:5 259/1
நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும் – யசோதர:1 16/1
என் மனத்து இவரும் என் நோய் இவண் அறிந்திலை-கொல் என்றே – யசோதர:2 100/1
பிறவியின் மறுகு வெம் நோய் பிழைத்தனம் என்ற அன்றே – யசோதர:4 255/4
சாவ அரிது இவண் அரசி தகவு_இல் வினை தரும் நோய்
யாவும் விளை நிலம்-அதனில் இனிய உளவாமோ – யசோதர:5 292/3,4
வரி வளை தோளியர் மனத்துள் காம_நோய் – சூளாமணி:3 79/3
கார் வளர் கொம்பு_அனார் இவர்கள் காம_நோய் – சூளாமணி:3 82/3
திரு வளர் செல்வர் மேல் சென்ற சிந்தை_நோய் – சூளாமணி:3 84/1
என்னை யான் கொடுத்தும் வையத்து இடுக்கண் நோய் கெடுப்பன் என்னும் – சூளாமணி:7 775/3
கை பெருகு காம நோய்_உடையவர்க்கு ஓர் கனல் போல வருமே காணில் – சூளாமணி:8 1033/4
பிணி மொழி பிறவி நோய் பெயர்க என்னவே – சூளாமணி:8 1040/4
ஒன்றிய உள்ள நோய் ஒளிக்கலுற்றனள் – சூளாமணி:8 1045/2
இன்று இவள் அகத்தது காம நோய் என – சூளாமணி:8 1045/3
மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉ – சூளாமணி:10 1588/2
செற்றம் நோய் செயிர் பகை என்று இவை முதல செல உணர் நீ – சூளாமணி:11 2041/4
பிணிபடு பிறவி நோய் பெயர்க்கும் மா தவம் – சூளாமணி:12 2079/1
நமைப்பு உறு பிறவி நோய் நடுங்க நோற்கிய – சூளாமணி:12 2096/2
ஓதும் நோய் மருந்து என ஊட்டுதற்கு உரைப்பவும் – நீலகேசி:1 105/3
ஒன்று அ நோய் பகை ஒருங்கே உடைந்து வெம் களத்து உதிர – நீலகேசி:2 154/3
சாதல் நோய் சரை பிறவி-தாம் செய் தீ_வினை கடலுள் – நீலகேசி:2 155/1
மா துயர் உழந்து உறும் நோய் மறுகும் மன் உயிர்க்கு எல்லாம் – நீலகேசி:2 155/2
ஏ புண் பட்டான் பட நோய் ஏதிலர்க்காய் சோமாகி – நீலகேசி:4 303/3
குன்றினில் கூர்ங்கை நட்டால் கூடும் நோய் யாதிற்கு உண்டோ – நீலகேசி:4 429/3
நோய் உழப்பு ஆகிய நும் செய்கை யாவையும் – நீலகேசி:5 587/3
நோய் இல்லை வாழி கடவுள் என உரைத்தான் – நீலகேசி:6 694/1
ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள் – நீலகேசி:6 694/2
தீயினும் வெய்ய நோய் சேர்தலையும் காண்டும் நீ – நீலகேசி:6 694/3
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு – நீலகேசி:6 723/1
தீர்ப்பவன் நோய் அவன் சீறுமவன் உயிர் – நீலகேசி:7 773/2
நோய் கொண்டேன் என அஞ்சல் நுனக்கு அவள் – நீலகேசி:10 891/3
மேல்


நோய்_இன்மையின் (1)

ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள் – நீலகேசி:6 694/2
மேல்


நோய்_உடையவர்க்கு (1)

கை பெருகு காம நோய்_உடையவர்க்கு ஓர் கனல் போல வருமே காணில் – சூளாமணி:8 1033/4
மேல்


நோய்க்கு (2)

ஆதலால் காம நோய்க்கு ஓர் அரு மருந்து இல்லை அன்றே – சூளாமணி:8 991/4
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு
ஆய மருந்தே அறிந்து ஊட்டும் அஃது உண்டு காட்டின் – நீலகேசி:6 723/1,2
மேல்


நோய்களும் (3)

தொழு வல் பல் பிணி நோய்களும் துன்னினாள் – யசோதர:3 216/4
நோய்களும் பேய்களும் ஒழிக்குவம் எனின் அவை நுங்களுக்கும் – நீலகேசி:9 842/3
எம்முறை நோய்களும் செய்குப அவர் என இகழ்ந்தனளே – நீலகேசி:9 843/4
மேல்


நோய்த்தி (1)

உண்ணும் வாய் உதட்டோடு மூக்கு இலள் உறு நோய்த்தி
பெண் அழகிற்கு இவள் பிறரால் பேசவும் படுவாளோ – நீலகேசி:2 191/2,3
மேல்


நோயர் (1)

புறப்படும் போர்வையாலேல் புண் தொழு நோயர் ஆக – நீலகேசி:4 445/3
மேல்


நோயின் (1)

நோயின் ஆசை-கொல் நுண்ணுணர்வு_இன்மை-கொல் – யசோதர:3 218/1
மேல்


நோயினால் (1)

நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற – நீலகேசி:4 351/3
மேல்


நோயும் (1)

பொது என்ற நோயும் புணர்ந்து இரண்டு பாகு ஆம் – நீலகேசி:1 109/2
மேல்


நோயுற்ற (1)

நோயுற்ற நுன் போல் குணம் ஒன்று இலன் ஆய யானும் – நீலகேசி:6 722/1
மேல்


நோயை (2)

பொருத்தனை என்று உரைக்கின்றாய் உறு நோயை தீர்ப்பது ஓர் – நீலகேசி:4 299/2
நோயை துணிந்தே உறும் நோய் முதல் நாடி அ நோய்க்கு – நீலகேசி:6 723/1
மேல்


நோயொடும் (1)

விலங்கு வெம் நரகு ஆதிகள்-தம்முள் விளிந்து தோன்றி விழு நோயொடும் உற்று – நீலகேசி:1 147/1
மேல்


நோவ (11)

துவளுமாறு ஒருவன் எல்லி தொடங்கினன் நோவ என்றாள் – யசோதர:2 98/4
மின் அவாம் இடை நோவ விளையாட அருளினான் – சூளாமணி:4 173/4
வளர்வன போலும் மருங்குல்கள் நோவ
தளர்வன போல்பவர் தாம குழல் மேல் – சூளாமணி:5 291/1,2
ஐய நுண் மருங்கு நோவ அடி கொண்ட குவவு கொங்கை – சூளாமணி:7 673/2
வஞ்சி நல் மருங்குல் நோவ மணி நகை கலாவம் மின்ன – சூளாமணி:7 675/3
வணங்கிய கனம்_குழையை வாங்கி முலை நோவ
குணம் கெழு குல தலைவி கொண்டு மிசை புல்லி – சூளாமணி:8 864/1,2
கொம்பு அஞ்சு மருங்குல் நோவ குவி முலை முறிகொண்டு அப்பி – சூளாமணி:10 1632/2
திரை தவழ சீறடிகள் நோவ நடந்து – சூளாமணி:10 1652/3
அம் மெல் அடி தாம் அரைசர் ஆவியொடு நோவ
செம் மெல் இதழ் வாயொடு அவர் சிந்தனை துடிப்ப – சூளாமணி:10 1798/1,2
பஞ்சியின் மெல் அடி நோவ நடை பயிற்றி படை வேந்தர் பலரை காட்டி – சூளாமணி:10 1820/2
பஞ்சி மெல் அடி நோவ பகல் நடந்து – நீலகேசி:5 550/1
மேல்


நோவது (1)

நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில் – சூளாமணி:9 1161/2
மேல்


நோவியீர் (1)

உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர்
தண் தேன் காணீர் உம் தளிர் மேனி நாற்றத்தால் – சூளாமணி:8 1120/2,3
மேல்


நோவு (1)

நோவு செய்திடும் நோய் பல ஆக்கிடும் – யசோதர:1 16/1
மேல்


நோவே (1)

ஆவன எலாம் அடக்கம்_இல்லவர்-தம் நோவே – நீலகேசி:1 107/4
மேல்


நோற்க (1)

புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/4
மேல்


நோற்கிய (1)

நமைப்பு உறு பிறவி நோய் நடுங்க நோற்கிய
அமைச்சரும் அரசர்_கோன் அருளினால் தம் – சூளாமணி:12 2096/2,3
மேல்


நோற்ற (1)

ஓங்கு இரும் பெயர் கொள் நோன்பு உயர நோற்ற பின் – சூளாமணி:4 212/2
மேல்


நோற்றார்க்கு (1)

மெய் புடை தெரிந்து மேலை விழு தவம் முயன்று நோற்றார்க்கு
ஒப்பு உடைத்து உங்கள் சேரி உயர் நிலை செல்வம் எல்லாம் – சூளாமணி:6 528/1,2
மேல்


நோற்றால் (1)

தங்கும் ஆண்டு ஐந்து நோற்றால் தான் ஐந்து திங்கள் அன்றே – நாககுமார:5 151/4
மேல்


நோற்றானே (1)

வேனில் உடை வேந்தன் வென்றிக்கு நோற்றானே
யானும் அளியத்தேன் இத்துணை ஓர் காலமும் – சூளாமணி:8 1117/2,3
மேல்


நோற்று (6)

சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின் – உதயணகுமார:6 366/2
இந்த நல் கிரமம்-தன்னில் இனிமையின் நோன்பு நோற்று
அந்தம்_இல் அருகர் பூசை அருள் முனி தானம் செய்தால் – நாககுமார:5 152/1,2
துக்கமே தொடர நோற்று துணை அறம் துறந்த பெற்றி – யசோதர:5 303/3
தந்திரம் துறந்து நோற்று மறைந்த சாசாரம் என்னும் – சூளாமணி:5 354/2
தீது எலாம் அகல நோற்று சிவகதி சேரும் என்று அ – சூளாமணி:5 355/3
நோற்று நுனித்தல் ஒழுக்கம் தலை நிற்றல் – சூளாமணி:11 2012/2
மேல்


நோற்றும் (1)

நோற்றும் பெரிதும் நுணுகாநின்ற பொழுதினானும் – நீலகேசி:4 419/2
மேல்


நோற்றேனே (1)

தேன் ஆர் நறு மேனி தீண்டுதற்கு நோற்றேனே – சூளாமணி:8 1117/4
மேல்


நோன் (2)

அங்கையின் நோன் புணை தழுவி ஆடியும் – சூளாமணி:10 1681/2
கழல் வலம் புரிந்த நோன் தாள் கடல்_வண்ணன் புதல்வன் காமர் – சூளாமணி:10 1836/1
மேல்


நோன்பி (1)

பால மா பண்டிதனே பழ நோன்பி இவன் என்பாய் – நீலகேசி:4 297/3
மேல்


நோன்பினால் (1)

குழல் கொடி_அனையவள் கொண்ட நோன்பினால்
எழில் கொடி சுடர்வது ஓர் இயற்கை எய்தினாள் – சூளாமணி:4 209/3,4
மேல்


நோன்பு (15)

புண்ணிய நோன்பு நோற்க பொருந்திய மனத்தன் ஆனான் – உதயணகுமார:6 304/4
புண்ணிய நோன்பு போந்த வேளை வேல் – உதயணகுமார:6 309/2
பக்க நோன்பு உடை பரம மா முனி – உதயணகுமார:6 322/1
சமைத்த நோன்பு நோற்று உயர்ந்து சமாதி நல் மரணத்தின் – உதயணகுமார:6 366/2
பக்க நோன்பு உடை பரம முனிவரர் – நாககுமார:4 103/3
வாகு நல் தருமம் கேட்டு அனசன நோன்பு கொண்டான் – நாககுமார:5 148/2
எங்களுக்கு அந்த நோன்பு இனிது வைத்து அருள என்றான் – நாககுமார:5 150/4
அங்குறு பஞ்சமியின் அனசன நோன்பு கொண்டு – நாககுமார:5 151/3
இந்த நல் கிரமம்-தன்னில் இனிமையின் நோன்பு நோற்று – நாககுமார:5 152/1
பன்னி ஒர் நோன்பு மேற்கொண்டு பாங்கினால் – சூளாமணி:4 205/3
வகுத்தவாறு உயர்ந்தன நோன்பு மாசு_இலா – சூளாமணி:4 210/3
தந்திர நோன்பு ஒளி தவழ தையலாள் – சூளாமணி:4 211/2
ஓங்கு இரும் பெயர் கொள் நோன்பு உயர நோற்ற பின் – சூளாமணி:4 212/2
நொந்து இ தீ நிகர் நோன்பு கைவிடும் இவன் எனவே – நீலகேசி:1 58/4
நோன்றலையும் நோன்பு என்னான் நோக்கு உடைய கணிகையரே – நீலகேசி:2 163/2
மேல்


நோன்புகள் (1)

பொறிகளை மனத்து அடக்கி புண்ணிய மா நோன்புகள்
அறிகுறி அநசனம் ஆற்றுதற்கு அரிது என – உதயணகுமார:6 361/2,3
மேல்


நோன்பை (1)

என்று அவர் உரைப்ப கேட்டு இறைஞ்சி கைக்கொண்டு நோன்பை
சென்று தன் பவனம் புக்கான் சே_இழையோடு மன்னன் – நாககுமார:5 153/1,2
மேல்


நோன்மை (5)

கூடலர் துறந்து நோன்மை குணம் புரிந்து உயர்தற்காக – யசோதர:2 110/2
அரும் கலம் மும்மை-தம்மால் அதிசயம் உடைய நோன்மை
பெரும் குழு ஒருங்கு சூழ பெறற்கு அரும் குணங்கள்-தம்மால் – யசோதர:5 318/1,2
பால் படு விரதம் நோன்மை படை பெரும் தலைவர் ஐவர் – சூளாமணி:12 2109/3
நிறை_இலார் பொறுத்தல் ஆற்றா நிலை இது நிறைந்த நோன்மை
கறை_இல் ஈர்_ஆறுக்கு ஒத்த கண்ணியர் கவரி வீச – சூளாமணி:12 2115/1,2
நோயினால் திரங்கலும் நோன்மை என்னலாம் பிற – நீலகேசி:4 351/3
மேல்


நோன்றல் (1)

கோலம்_இல் நோன்றல் குமானுயர்-தம்மையும் கூறுவன் கேள் – நீலகேசி:1 85/1
மேல்


நோன்றலையும் (1)

நோன்றலையும் நோன்பு என்னான் நோக்கு உடைய கணிகையரே – நீலகேசி:2 163/2
மேல்


நோனார் (2)

கச்சையர் கரும் கழலர் காலனையும் நோனார்
வெச்சென விழித்து விறல் வீரர் திரிகின்றார் – சூளாமணி:9 1279/3,4
தன்னை மெய் பதைப்ப நோக்கி அவனையும் தபுப்ப நோனார்
துன்னிய துயிலும் ஏனை துளக்கம்செய்து இருவர் பட்டார் – சூளாமணி:12 2118/3,4
மேல்


நோனான் (1)

பெரும் பகை அதனை கேட்டால் பெரியவன் சிறிதும் நோனான்
இரும் பகை இதனை என்-கொல் விலக்குமாறு என்று தானே – சூளாமணி:7 694/2,3

மேல்