நே – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேடியும் 1
நேடு-மின் 1
நேடுகில்லாய் 1
நேடுபு 1
நேத்திரை 1
நேமி 23
நேமிநாதர் 1
நேமியர் 1
நேமியன் 1
நேமியனை 1
நேமியால் 1
நேமியான் 1
நேமீசர் 1
நேயம் 1
நேர் 31
நேர்_இழை 1
நேர்_இழையும் 1
நேர்கின்றாய் 1
நேர்குவை 1
நேர்தரு 1
நேர்தல் 1
நேர்தல்_இல்லாய் 1
நேர்தலால் 1
நேர்தலின் 1
நேர்தலினும் 1
நேர்தும் 1
நேர்ந்தனளே 1
நேர்ந்தனை 1
நேர்ந்தாய் 2
நேர்ந்தார் 1
நேர்ந்தான் 1
நேர்ந்திலன் 1
நேர்ந்து 2
நேர்ப்ப 1
நேர்படுதும் 1
நேர்பவர்க்கும் 1
நேர்மையில் 1
நேர்வது 1
நேர்வல் 1
நேர்வன் 1
நேர்வனவே 1
நேர்வித்தவாறு 1
நேரலன் 1
நேரா 1
நேரின் 1
நேரும் 6
நேரே 1

நேடியும் (1)

நினைத்து காண் அன்றி நேடியும் காண் ஐயா – நீலகேசி:10 872/3
மேல்


நேடு-மின் (1)

நிலையிடத்தவருள் நிகர் எனக்கு உளரேல் நேடு-மின் சென்று என நின்றான் – சூளாமணி:9 1318/4
மேல்


நேடுகில்லாய் (1)

நீ சொல் அறியாய் அறிவார் நெறி நேடுகில்லாய்
பேய் சொல்லுபவே பல சொல்லி பிதற்றல் என்றாள் – நீலகேசி:4 411/3,4
மேல்


நேடுபு (1)

நேர்படுதும் என்று சிலர் நேடுபு திரிந்தார் – சூளாமணி:9 1281/4
மேல்


நேத்திரை (1)

நல் மனைவி விசால நல் நேத்திரை
தன் சுதன் மது தார் அணி சீதரன் – நாககுமார:1 27/2,3
மேல்


நேமி (23)

தரித்த நேமி உருட்டி தரணி ஆண்டு – உதயணகுமார:1 32/3
நிறைந்த நேமி இ நிலமும் ஆளுவன் – உதயணகுமார:5 282/4
நேமி ஆளவே நினைத்த தோன்றலும் – உதயணகுமார:5 290/1
நேமி தான் முதல் நிதிகள் ஒன்பதும் – உதயணகுமார:5 290/4
நெகிழ்ந்த காதலால் நேமி செல்வனும் – உதயணகுமார:5 299/2
கொற்றங்கொள் நேமி நெடுமால் குணம் கூற இப்பால் – சூளாமணி:0 3/1
நிலம் கொண்டு மனிதர் ஆழ நிரந்து அழல் உமிழ்ந்து நேமி
புலம் கொண்ட வயிர குன்றின் புடை வரும் பரிதி போல – சூளாமணி:9 1460/2,3
மின் அவிர் விளங்கும் நேமி விடுத்தனன் விடுத்தலோடும் – சூளாமணி:9 1461/2
கழலவன் கனன்று விட்ட கதிர் நகை நேமி போழ – சூளாமணி:9 1462/1
பொறி-தலை மணந்த காளை மேல் வர புணர்த்த நேமி
செறிதலை இலாத மன்னன்-தன்னையே செகுத்தது அன்றே – சூளாமணி:9 1463/3,4
நெருநல் நெடும் குடை கீழ் நேமி முன் செல்ல – சூளாமணி:9 1465/1
செரு நல் மற நேமி சென்ற அதுவே போழ – சூளாமணி:9 1465/3
தான் எறிந்த நேமி தனக்கே பகை ஆகி – சூளாமணி:9 1466/1
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமி
குணம் கொள் படையாய் கூடாரும் உளரோ நினக்கு கோமானே – சூளாமணி:9 1479/3,4
எரி வளர் ஒளி தரு நேமி எய்திய – சூளாமணி:9 1486/1
உரிதினின் அறுத்து ஒளிர் நேமி கொண்டது – சூளாமணி:9 1487/2
விட்டு எரி மணி வரை நேமி வேந்தனை – சூளாமணி:9 1499/1
நீர் மேக முத்தின் நெடும் தண் குடை கீழ் நிழல் துளும்பும் நேமி தாங்கும் – சூளாமணி:9 1530/3
நெய் ஆர் செவ் வேல் நீள் ஒளி நேமி படையானே – சூளாமணி:10 1743/4
வரி வளை_வண்ணனும் மறம் கொள் நேமி அ – சூளாமணி:12 2101/1
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தாமரை தட கை – சூளாமணி:12 2128/3
நிரை செலல் கொடுஞ்சி நல் நேமி ஊர்தியும் – நீலகேசி:1 25/2
நீ அனாய் இதற்கு இனி நேமி என்று சொல் என – நீலகேசி:4 351/4
மேல்


நேமிநாதர் (1)

அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமிநாதர் பாதம் – உதயணகுமார:1 1/2
மேல்


நேமியர் (1)

நின் முதல் ஈரறு வகையர் நேமியர்
மன் முதல் பலவர் கேசவர்கள் மாற்றவர் – சூளாமணி:5 400/2,3
மேல்


நேமியன் (1)

அதுல நேமியன் அரசு நாட்டினான் – உதயணகுமார:5 300/4
மேல்


நேமியனை (1)

நில்லல என்று உணர்ந்தனன் நேமியனை வா என்றனன் – உதயணகுமார:6 354/4
மேல்


நேமியால் (1)

கரண நேமியால் அடிப்படுத்ததும் – உதயணகுமார:6 306/3
மேல்


நேமியான் (1)

என்று அவன் மொழிதலும் இலங்கு நேமியான்
நின்று அகம் சுடர்தரும் நிதியின் நீத்தம் அங்கு – சூளாமணி:10 1737/1,2
மேல்


நேமீசர் (1)

அணி மலர் பிண்டியின் கீழ் அமர்ந்த நேமீசர் பாதம் – நாககுமார:0 1/2
மேல்


நேயம் (1)

நேயம் மிகு நெஞ்சின் இடையாளும் மடவாளாய் – சூளாமணி:10 1796/2
மேல்


நேர் (31)

நீர் மிக ஆடி மன்னன் நேர் இழை மாதர் கூட – உதயணகுமார:4 199/4
நாகம் நேர் கால மன்னன் நன்கு உடன் இருந்த போழ்தில் – உதயணகுமார:4 200/2
பாக நேர் பிறையா நெற்றி பதுமையும் இதனை சொல்வாள் – உதயணகுமார:4 200/3
தேய்த்து காலின் நேர் தீ உமிழ்வ போல் – உதயணகுமார:6 311/3
சித்திர நேர் மாதரை செல்வன் நோக்கி கூறுவான் – உதயணகுமார:6 356/4
சிங்கம் நேர் சிறுவன் நாமம் சீர் பிரதாபந்தன் என்றார் – நாககுமார:2 49/4
நாகம் நேர் அகலத்தானை நா_மகள் சேர்த்தி இன்ப – நாககுமார:2 53/3
வார் அணி கொங்கைமார்க்கு மாரன் நேர் செயவர்மாவின் – நாககுமார:3 75/3
காந்தி நல் தவத்தோர் வந்தார் கடவுள் நேர் தூமசேனர் – நாககுமார:3 76/3
பன்னக நகரம் நேர் ஆம் பாடலிபுரம் அது ஆமே – நாககுமார:3 78/4
செப்பு நேர் முலையாள் நல் செயவதி – நாககுமார:4 102/4
மின்னின் இடை நேர் இழை மேனகி என ஒரு – நாககுமார:4 131/1
நெரிந்த நுண் குழல் நேர் இமையார் உழை – யசோதர:1 10/1
நேர்_இழை நினைந்து போகி நீடலை முடி இது என்றாள் – யசோதர:2 108/4
நவ்வி நேர் விழியாய் நன்றோ நவில்க நின் கருமம் என்றாள் – யசோதர:2 114/4
இ உலகின் எவ்வுயிரும் எம் உயிரின் நேர் என்று – யசோதர:5 272/1
நேர் எனக்கு இறைவன் ஆக நினைவல் என்று இனிய கூறி – யசோதர:5 312/3
நெறியில் நீதிக்-கண் நேர் இவை ஒப்பவும் – சூளாமணி:7 629/1
மை மலர் தடம் கண் நேர் வகுத்து அலர்ந்த வட்டமும் – சூளாமணி:7 789/2
நிறை என்பது இல்லை காமம் நேர் நின்று பெருகும் ஆயின் – சூளாமணி:8 981/2
நின்று போர் ஆடவர் நேர் ஒப்பார்களோடு – சூளாமணி:9 1271/3
நேர் இகலும் வாள்களொடு கேடகம் நிழற்ற – சூளாமணி:9 1290/2
நீர் குலாம் குருதியுள் குளிப்ப நேர் இனி – சூளாமணி:9 1389/2
நெரிந்தன களிறு உடை மருப்பு நேர் முகம் – சூளாமணி:9 1395/2
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
செம் கதிரோன் ஒளி பருகும் செவ்வரை நேர் அகலத்தான் திறமும் கேளாய் – சூளாமணி:10 1808/4
குரங்கு நேர் குதியா குரங்கு எங்கு உள – நீலகேசி:2 221/3
நெறிக்-கண் சென்று ஆறலைப்பார் ஒப்பன் நேர் நீ – நீலகேசி:4 336/4
நேர் இடத்தால் பன்மை எய்தி உருவு ஆம் நெறியும் என்றாள் – நீலகேசி:4 397/4
நேர் இங்கு இவையும் உணராமை இற்கு என்றனனாய் – நீலகேசி:4 412/3
நிறையினால் செல் என்று நேர்_இழையும் சென்றாள் – நீலகேசி:5 658/4
மேல்


நேர்_இழை (1)

நேர்_இழை நினைந்து போகி நீடலை முடி இது என்றாள் – யசோதர:2 108/4
மேல்


நேர்_இழையும் (1)

நிறையினால் செல் என்று நேர்_இழையும் சென்றாள் – நீலகேசி:5 658/4
மேல்


நேர்கின்றாய் (1)

நின்ற ஆறே நெறியாக நேர்கின்றாய் நீ யாவனோ – நீலகேசி:5 568/2
மேல்


நேர்குவை (1)

நிலையும் ஈறு என்பது நேர்குவை ஆயின் – நீலகேசி:4 337/2
மேல்


நேர்தரு (1)

நினைவு மீட்டுணர்வு ஊகம் நேர்தரு
புனைவு சேர் அணுமை பொய்_இன்மை மெய் உரை – நீலகேசி:1 119/1,2
மேல்


நேர்தல் (1)

நீடு அல என்பதும் நேர்ந்து இனி அ பொருள் நேர்தல்_இல்லாய் – நீலகேசி:4 380/2
மேல்


நேர்தல்_இல்லாய் (1)

நீடு அல என்பதும் நேர்ந்து இனி அ பொருள் நேர்தல்_இல்லாய்
மூடலை ஆவதன் காரணம் என்னை முடி குணத்தின் – நீலகேசி:4 380/2,3
மேல்


நேர்தலால் (1)

நினைவிற்கே இடைகோள் என நேர்தலால்
இனையவும் மலம் ஏறினும் என் செய – நீலகேசி:4 319/2,3
மேல்


நேர்தலின் (1)

நீ அவையவை நேர்தலின் ஆம் பிற – நீலகேசி:5 529/4
மேல்


நேர்தலினும் (1)

நிற்றலும் கேட்டினோடு உண்மையும் இன்மையும் நேர்தலினும்
ஒற்றுமை வேற்றுமை தம்மையும் ஒட்டப்படுதலினும் – நீலகேசி:4 376/1,2
மேல்


நேர்தும் (1)

நீப்பவும் கொள்பவும் நேர்தும் அவை அவை – நீலகேசி:4 343/2
மேல்


நேர்ந்தனளே (1)

நின் திறம் பின் அறிவாம் அறம் கேள் என நேர்ந்தனளே – நீலகேசி:1 88/4
மேல்


நேர்ந்தனை (1)

நின்றனவும் தின நேர்ந்தனை நீயே – நீலகேசி:4 340/4
மேல்


நேர்ந்தாய் (2)

நீதியா நின் கருத்தினால் உண்மையும் நேர்ந்தாய் அன்றோ – நீலகேசி:5 567/4
ஆயின் நோய்_இன்மையின் நேர்ந்தாய் அ வழி ஒருநாள் – நீலகேசி:6 694/2
மேல்


நேர்ந்தார் (1)

ஏறு யானை இரும் கலைகள் நேர்ந்தார் அவை இவை என்று – நீலகேசி:1 38/1
மேல்


நேர்ந்தான் (1)

வீங்கு நீர் கடலுள் பெய்யும் விஞ்சையை விடுக்க நேர்ந்தான் – சூளாமணி:9 1425/4
மேல்


நேர்ந்திலன் (1)

தக்க வாய் மொழி தவத்து அரசன் நேர்ந்திலன்
தொக்க வான் புகழவற்கு அமைச்சர் சொல்லினார் – சூளாமணி:12 2076/3,4
மேல்


நேர்ந்து (2)

நெய் வேல் பெயர்த்து நிருமித்து அஃது ஏந்தி உரும் ஒத்து நேர்ந்து பொருதான் – சூளாமணி:9 1333/2
நீடு அல என்பதும் நேர்ந்து இனி அ பொருள் நேர்தல்_இல்லாய் – நீலகேசி:4 380/2
மேல்


நேர்ப்ப (1)

நிலையா என சொல்லி நேர்ப்ப பொருள் தூய – நீலகேசி:3 253/1
மேல்


நேர்படுதும் (1)

நேர்படுதும் என்று சிலர் நேடுபு திரிந்தார் – சூளாமணி:9 1281/4
மேல்


நேர்பவர்க்கும் (1)

நின்றனவே என்றும் நில்லலவே என்றும் நேர்பவர்க்கும்
ஒன்று எனவேயும் பின் வேறு எனவேயும் தம் உண்மையின்-கண் – நீலகேசி:4 378/1,2
மேல்


நேர்மையில் (1)

நினை-மின் அ குறிகள் உண்டு என் நேர்மையில் கேட்பிர் ஆயின் – நாககுமார:2 45/3
மேல்


நேர்வது (1)

நீ சொன்ன நீ சொன்ன நேர்வது இங்கு என் செய்ய – நீலகேசி:5 623/2
மேல்


நேர்வல் (1)

நின்ற மெய்ம்மை நினது என நேர்வல் யான் – நீலகேசி:10 878/4
மேல்


நேர்வன் (1)

நீதியினால் உரை நீ இனி யான் அது நேர்வன் என்றான் – நீலகேசி:9 827/4
மேல்


நேர்வனவே (1)

நேர்வனவே ஆகும் நிழல் திகழும் பூணாய் – நீலகேசி:1 113/4
மேல்


நேர்வித்தவாறு (1)

நேர்வித்தவாறு அது நீ அறியாயால் – நீலகேசி:5 593/4
மேல்


நேரலன் (1)

நீதி_இலா நெறி நேரலன் என்றாள் – நீலகேசி:5 572/4
மேல்


நேரா (1)

நேரா மாற்றரை நீக்குவன் நான் என்றான் – உதயணகுமார:3 171/4
மேல்


நேரின் (1)

நேரின் அது முடியாது எனின் நெஞ்சகத்து – சூளாமணி:11 2009/3
மேல்


நேரும் (6)

எள்ளி நேரும் அறிவு இல்லையேல் பிணம் – நீலகேசி:2 215/3
தினையின் நேரும் தெருட்டு எனக்கு என்னவே – நீலகேசி:3 242/2
நேரும் மனையில் உண்மையால் நீரும் வேண்டினீர் என – நீலகேசி:4 357/2
எள்ளின் நேரும் இவை இன்மை காட்டுவேன் – நீலகேசி:5 526/3
நீ அத்தா சொன்ன நேரும் திறம் என்னோ – நீலகேசி:5 539/2
நீ சொன்ன ஆறு இது நேரும் திறம் என்னை – நீலகேசி:5 579/3
மேல்


நேரே (1)

நிரை இலங்கு பொன் சிலம்பு நேரே சிலம்பும் – சூளாமணி:10 1649/4

மேல்