நு – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நுகம் 1
நுகர் 1
நுகர்தல் 1
நுகர்தற்கு 1
நுகர்ந்தவற்கு 1
நுகர்ந்தவன் 1
நுகர்ந்தனன் 1
நுகர்ந்தாய்க்கு 1
நுகர்ந்தான் 1
நுகர்ந்து 3
நுகர்ந்தும் 1
நுகர்வவே 1
நுகர்வார்க்கு 1
நுகர்வு 2
நுகர்வு_இலர் 1
நுகரல் 1
நுகரிய 1
நுகரும் 2
நுங்க 3
நுங்கட்கு 2
நுங்கள் 5
நுங்களுக்கும் 1
நுங்கி 1
நுங்கியும் 1
நுசுப்பினாளை 1
நுடங்க 4
நுடங்கி 1
நுடங்கிய 1
நுடங்கு 5
நுடங்கும் 4
நுண் 28
நுண்_இடையார் 2
நுண்_இடையாள் 1
நுண்ணிய 2
நுண்ணுணர்வு 1
நுண்ணுணர்வு_இன்மை-கொல் 1
நுண்மையும் 1
நுணங்கிய 1
நுணங்கியும் 1
நுணங்கு 2
நுணுகாநின்ற 1
நுதல் 34
நுதல்லை 1
நுதலப்பட்டார்களை 1
நுதலவரும் 1
நுதலாய் 4
நுதலார் 1
நுதலாள் 1
நுதலாளொடு 1
நுதலி 2
நுதலிய 6
நுதலியும் 3
நுதலில் 1
நுதலின் 2
நுதலினார்-தம் 1
நுதலும் 1
நுதலே 1
நுதலை 1
நுதி 11
நுதிகள் 1
நுதியால் 2
நுதியில் 1
நுதியின் 1
நுந்தி 4
நுந்தியவர் 1
நுந்து 1
நுந்துதலும் 1
நுந்துபு 1
நுந்தும் 1
நும் 29
நும்மால் 1
நும்மை 1
நுமக்கு 5
நுமக்கும் 1
நுமக்கே 1
நுமது 1
நுமர் 4
நுமர்-தம் 1
நுமர்கள் 1
நுமர்களை 1
நுமரை 1
நுரை 5
நுரைப்ப 1
நுரையவா 1
நுரையொடு 1
நுவல 1
நுவற்சியாளர் 1
நுழை 4
நுழைத்து 1
நுழைந்த 1
நுழைந்தறிவு 1
நுழைந்தறிவு_உடையவரே 1
நுழைந்து 6
நுழைவொடு 1
நுன் 4
நுன்னை 1
நுனக்கு 3
நுனது 2
நுனி 2
நுனித்தகு 1
நுனித்தது 1
நுனித்தல் 1
நுனித்தவர் 1
நுனித்து 2
நுனித்தோர் 1
நுனிப்பொடு 1
நுனை 5

நுகம் (1)

வீங்கு நீர் உலகம் காக்கும் விழு நுகம் ஒருவனாலே – சூளாமணி:5 245/1
மேல்


நுகர் (1)

தாயின் நல் நலம் தான் நுகர் போழ்தினில் – யசோதர:3 188/1
மேல்


நுகர்தல் (1)

அற பொருள் நுகர்தல் செல்லான் அரும் தவர்க்கு எளியன்_அல்லன் – யசோதர:2 156/1
மேல்


நுகர்தற்கு (1)

எல்லா புலமும் நுகர்தற்கு இனிதே – சூளாமணி:5 280/4
மேல்


நுகர்ந்தவற்கு (1)

இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற்கு இறுதிசெய்யும் – சூளாமணி:11 1861/1
மேல்


நுகர்ந்தவன் (1)

ஆதலால் அமர போகம் நுகர்ந்தவன் அரைசர் செல்வம் – சூளாமணி:5 355/1
மேல்


நுகர்ந்தனன் (1)

புலங்களின் மிகுந்த போகம் பொற்புடன் நுகர்ந்தனன்
அலங்கல் அணி வேலினான் அன்பு மிக கூரினான் – உதயணகுமார:2 122/3,4
மேல்


நுகர்ந்தாய்க்கு (1)

முன்னும் நுமர்-தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு
இன்னும் இனிது உன் அவயவங்கள் தினல் என்றே – யசோதர:5 293/1,2
மேல்


நுகர்ந்தான் (1)

நம்பு மணி மேனி நங்கை நலம் நுகர்ந்தான்
கம்பம் செய் யானை கரு மேக_வண்ணனே – சூளாமணி:10 1662/3,4
மேல்


நுகர்ந்து (3)

பூவும் பழனும் நுகர்ந்து பொழில் மரம் – சூளாமணி:11 1976/1
முன் நுகர்ந்து இகந்தவர் மூரி தானையீர் – சூளாமணி:12 2088/2
போகம் நுகர்ந்து பொருந்தா வினை புல்லல் இன்றி – நீலகேசி:1 126/3
மேல்


நுகர்ந்தும் (1)

நிதியினை நுகர்ந்தும் என்று நினைத்து இனிது இருந்த போழ்தில் – சூளாமணி:7 668/2
மேல்


நுகர்வவே (1)

நுங்கியும் நுகர்வவே – நீலகேசி:1 100/4
மேல்


நுகர்வார்க்கு (1)

என்றும் இடையின்றி இமையாரின் நுகர்வார்க்கு
நின்றது பிராயம் அதுவே நிழலும் வேலோய் – சூளாமணி:11 2033/3,4
மேல்


நுகர்வு (2)

புலம் கிளர் பொறி நுகர்வு இலாத புண்ணியன் – சூளாமணி:5 396/3
புனைவு வேண்டலர் போகம் நுகர்வு_இலர் – நீலகேசி:4 319/1
மேல்


நுகர்வு_இலர் (1)

புனைவு வேண்டலர் போகம் நுகர்வு_இலர்
நினைவிற்கே இடைகோள் என நேர்தலால் – நீலகேசி:4 319/1,2
மேல்


நுகரல் (1)

நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ – சூளாமணி:6 520/4
மேல்


நுகரிய (1)

இரவு எனும் மடந்தை செல்வம் நுகரிய எழுந்து போந்தான் – சூளாமணி:10 1701/4
மேல்


நுகரும் (2)

நாமும் நல் நல்_வினை நுகரும் நாள் அவாய் – சூளாமணி:8 1054/2
போது அலர் பருவ சோலை பொழில் நலம் நுகரும் போழ்தில் – சூளாமணி:10 1629/3
மேல்


நுங்க (3)

உரைசெய் கால் சுவடு நுங்க செறித்து ஒன்று புறத்தது ஆக்கி – சூளாமணி:8 927/3
எம் பவமோ நுங்க யாம் எம்மை அறியேமே – சூளாமணி:8 1119/4
தொடி தலை சிதைந்து நுங்க துகள் எழுந்து ஒழிந்தது அன்றே – சூளாமணி:9 1139/4
மேல்


நுங்கட்கு (2)

தொலைவிடத்து அல்லால் சொல் இவை நுங்கட்கு ஒழியுமோ தூமகேதனனே – சூளாமணி:9 1320/4
ஆறுகிற்பின் அமர்_உலகம் நுங்கட்கு அடியதாம் என்றான் – நீலகேசி:1 40/3
மேல்


நுங்கள் (5)

பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவும் என்றான் – யசோதர:1 67/4
நம்பிமீர்கள் நுங்கள் பாதம் நண்ணி நின்று இறைஞ்சுவார் – சூளாமணி:6 500/3
எங்கள் முன்னை நுங்கள் தன்மை என்று பின்னை ஏத்தினான் – சூளாமணி:6 501/4
மலையாது இது நுங்கள் மார்க்கத்தொடு என்றனள் மாண்_இழையே – நீலகேசி:4 382/4
சலம் பொய் அன்று இது ஒன்றே நுங்கள் சத்தையே – நீலகேசி:5 534/4
மேல்


நுங்களுக்கும் (1)

நோய்களும் பேய்களும் ஒழிக்குவம் எனின் அவை நுங்களுக்கும்
ஆய்விடின் உணரின் அஃது ஆம் வினை அகற்றுதற்கு அரியது என்றாள் – நீலகேசி:9 842/3,4
மேல்


நுங்கி (1)

அலகு_இலா ஞானத்து அகத்து அடங்க நுங்கி
உலகு எலாம் நின்னுள் ஒளித்தாயும் நீயே – சூளாமணி:6 539/1,2
மேல்


நுங்கியும் (1)

நுங்கியும் நுகர்வவே – நீலகேசி:1 100/4
மேல்


நுசுப்பினாளை (1)

இடி மின்னின் நுசுப்பினாளை இன்புற புணர்ந்திருப்ப – உதயணகுமார:4 238/3
மேல்


நுடங்க (4)

கொண்டனன் தொடுத்தலோடும் கொடும் சிறை நுடங்க வீசி – சூளாமணி:9 1452/3
நூபுரமும் மேகலையும் கலந்து ஒலிப்ப நுண் மருங்குல் நுடங்க ஓடி – சூளாமணி:9 1529/2
கொடி மருங்குல் தாமே கொடியாய் நுடங்க
வடி நெடும் கண் நோக்கம் மணி வண்டாய் ஓட – சூளாமணி:10 1643/1,2
கொம்பு அழகு கொண்ட குழை நுண் இடை நுடங்க
வம்பு அழகு கொண்ட மணி மென் முலை வளர்ந்து ஆங்கு – சூளாமணி:11 2027/1,2
மேல்


நுடங்கி (1)

நாண்-தனால் நிறைந்த நங்கை நடுங்குபு நுடங்கி நோக்கி – சூளாமணி:10 1666/1
மேல்


நுடங்கிய (1)

நுரை கள் என்னும் அ குழம்பு கொண்டு எதிர்ந்து எழ நுடங்கிய இலையத்தால் – சூளாமணி:8 877/2
மேல்


நுடங்கு (5)

வணங்கு எழில் நுடங்கு இடை மாழை நோக்கி நம் – சூளாமணி:5 382/2
மின் சுலாம் நுடங்கு இடை மெல்லியாள் திறம் – சூளாமணி:5 384/2
நுதி மாளிகை மேல நுடங்கு கொடி – சூளாமணி:7 812/2
கரு முகில் நுடங்கு மின் போல் புருவங்கள் முரிந்து நீங்கான் – சூளாமணி:9 1152/2
மின் போல் நுடங்கு இடையும் வேய் ஏய் திரள் தோளும் – நீலகேசி:1 132/1
மேல்


நுடங்கும் (4)

மஞ்சு இலங்கு உருவ வானின் மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:8 1000/3
உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர் – சூளாமணி:8 1120/2
ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி – சூளாமணி:9 1538/2
மாதர் வண்டு ஒருங்கு பேர மழையிடை நுடங்கும் மின் போல் – சூளாமணி:10 1639/2
மேல்


நுண் (28)

மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
நூல் நெறி வகையில் துய்த்தார் நுண் இடை துவள அன்றே – நாககுமார:4 115/4
நெரிந்த நுண் குழல் நேர் இமையார் உழை – யசோதர:1 10/1
பூ மரு புரிந்த நுண் நூல் புரோகிதன் பொறி வண்டு ஆர்க்கும் – சூளாமணி:3 96/1
வடு தவ மலர்ந்து நுண் நூல் மதியவர் வினையின் மாட்சி – சூளாமணி:5 253/3
நூல் ஆராய்ந்து நுண் பொறி கண்ணும் நொடி_வல்லான் – சூளாமணி:5 308/1
தாழ் புரி தயங்கும் நுண் நூல் சதவிந்து மொழிந்தவாற்றால் – சூளாமணி:5 359/3
ஐய நுண் மருங்கு நோவ அடி கொண்ட குவவு கொங்கை – சூளாமணி:7 673/2
கள்ளின் நுண் துளி கலந்து கால் அசைத்-தொறும் கமழ – சூளாமணி:7 729/2
பில்கும் நுண் துளி உறைத்தலின் பனித்த நம் பெரும் படை மடவார்கள் – சூளாமணி:8 887/2
மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
உண்டே என நுடங்கும் நுண் மருங்கு நோவியீர் – சூளாமணி:8 1120/2
நகு-தொறும் அழல் கொடி நடுங்கும் நுண் துளி – சூளாமணி:9 1207/1
மின் அவிர் நுண்_இடையார் மேல் வந்து அணுகினார் – சூளாமணி:9 1469/4
நூபுரமும் மேகலையும் கலந்து ஒலிப்ப நுண் மருங்குல் நுடங்க ஓடி – சூளாமணி:9 1529/2
முழுதார முத்து அணிந்தார் நுண் மருங்குல் உளதாக முயன்றார்_அல்லர் – சூளாமணி:9 1537/4
ஊது ஆவியால் நுடங்கும் ஒள் அரத்த நுண் கலிங்கம் ஒன்று சேர்த்தி – சூளாமணி:9 1538/2
திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி – சூளாமணி:10 1637/3
சீர் ஆலி மால்_வண்ணன் தேவியும் தானும் செவ்வரத்த நுண் எழினி சேர்ந்து ஒருங்கு நோக்கி – சூளாமணி:10 1757/3
மின் நேர் நுண் இடை நோமால் மென் மலர் மேல் மென்மெலவே ஒதுங்காய் என்று – சூளாமணி:10 1799/3
கொம்பு அழகு கொண்ட குழை நுண் இடை நுடங்க – சூளாமணி:11 2027/1
நுரையவா நுண் துகிலும் மேகலையும் சூழ்ந்த – நீலகேசி:1 129/3
நுனை தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால் – நீலகேசி:2 183/1
நுண் உணர்வு தனக்கு இல்லான் உரைத்தது-தான் நூல் ஆமோ – நீலகேசி:2 193/4
தூவினின் நுண் புழு துய்ப்பன் என்னாமையின் – நீலகேசி:4 344/1
கனை கடலின் நுண் மணலின் கண்ணினையும் ஈந்தான் – நீலகேசி:5 641/3
மன் பெறு நுண் பொருள் ஐந்து இயல்பாய் அவை – நீலகேசி:6 671/3
நூலில் கிடந்த அ நுண் பொருள் அன்றே – நீலகேசி:7 732/4
மேல்


நுண்_இடையார் (2)

மின் பருகு நுண்_இடையார் மெல் உருவம் கொண்டதே – சூளாமணி:8 1116/4
மின் அவிர் நுண்_இடையார் மேல் வந்து அணுகினார் – சூளாமணி:9 1469/4
மேல்


நுண்_இடையாள் (1)

மின்னு நுண்_இடையாள் நாமம் மிகாவதி என்று மிக்காள் – உதயணகுமார:1 11/4
மேல்


நுண்ணிய (2)

நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார் – சூளாமணி:5 242/3
நுண்ணிய நூல் வழி நோக்கி நுனித்தவர் – சூளாமணி:11 2007/3
மேல்


நுண்ணுணர்வு (1)

நோயின் ஆசை-கொல் நுண்ணுணர்வு_இன்மை-கொல் – யசோதர:3 218/1
மேல்


நுண்ணுணர்வு_இன்மை-கொல் (1)

நோயின் ஆசை-கொல் நுண்ணுணர்வு_இன்மை-கொல்
தீய வல்_வினை தேடுதலே-கொலோ – யசோதர:3 218/1,2
மேல்


நுண்மையும் (1)

பல்-அதற்கு ஓதார் பருமையும் நுண்மையும்
சொல் இதற்கு ஆவது உண்டேல் என சொல்லினள் – நீலகேசி:5 633/2,3
மேல்


நுணங்கிய (1)

நுணங்கிய கேள்வியினாய் ஒன்று உரை என நோக்கினனால் – நீலகேசி:4 381/4
மேல்


நுணங்கியும் (1)

வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்கு – சூளாமணி:6 452/3
மேல்


நுணங்கு (2)

நூல் விளை புலவர் அன்றே நுணங்கு போது அணங்கு தாரீர் – சூளாமணி:5 243/4
நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே – சூளாமணி:9 1252/1
மேல்


நுணுகாநின்ற (1)

நோற்றும் பெரிதும் நுணுகாநின்ற பொழுதினானும் – நீலகேசி:4 419/2
மேல்


நுதல் (34)

நீலம் காய்ந்த நெடு வேல் விழி நுதல்
பால் அங்கு ஓர் பிறையாம் படா வெம் முலை – உதயணகுமார:4 218/2,3
சேர மின் சிலம்பும் ஆர்ப்ப சிறு நுதல் முத்து அரும்ப – உதயணகுமார:4 227/2
திரு நுதல் மாது நொந்து சிறப்பு இன்றி இருந்த போழ்தின் – உதயணகுமார:4 228/2
இளம் பிறை நுதல் வேல்_கண்ணி இனிய வில் புருவம் வேய் தோள் – உதயணகுமார:4 229/1
பட்டுடையின் வேர் நுதல் பாங்கினில் துடைப்பவும் – உதயணகுமார:4 232/3
இந்து வாள் நுதல் எழில் மடந்தையர் – உதயணகுமார:5 298/2
பிறை நுதல் பேதை தன்னால் பெறு சுவை_கடலுள் ஆழ்ந்தார் – நாககுமார:2 41/4
பிறை நுதல் தாதி-தானும் பிள்ளை விட்டு உள் புகுந்தாள் – நாககுமார:2 51/2
நல் நுதல் கணை விழியை நாக நல் குமரனுக்கு – நாககுமார:3 99/3
செம்பொன் பட்டம் செறிந்த திரு நுதல்
அம் பொன் பட்டு_உடையாள் அணி ஆயினாள் – சூளாமணி:4 147/3,4
வளர் செங்கிடையின் எழில் வைத்த நுதல்
வளர் செங்கிடையின் ஒளி வவ்விய வாய் – சூளாமணி:7 808/1,2
தேன் நெய் பாலொடு கலந்தன சில் மொழி சிறு நுதல் திருவே நம் – சூளாமணி:8 880/1
துளங்கு வார் குழை துவர் இதழ் துடி இடை சுடர் நுதல் சுரி கோதாய் – சூளாமணி:8 885/1
பொன் நுதல் வேழம் ஒன்று பொலம் கலம் புலம்ப ஏற்றி – சூளாமணி:8 917/3
சாமரை நல் நுதல் தட கை யானையான் – சூளாமணி:8 961/4
பொன் நுதல் பிடியும் தேரும் வையமும் இழிந்து புக்கு – சூளாமணி:8 996/2
விண் விளக்குறுக்கும் திங்கள் சுடர் நுதல் விளக்கினாலும் – சூளாமணி:8 999/1
செம் கனி கனிந்த செவ்வாய் சிறு நுதல் பெரிய_கண்ணாள் – சூளாமணி:8 1004/4
தேன் இவர் குழலி மற்று இ திரு நுதல் மடந்தை என்ன – சூளாமணி:8 1017/2
மாகத்து மதியம் அன்ன வாள் நுதல் மடந்தை-தன்னை – சூளாமணி:8 1021/1
ஆகத்துள் அடக்கி பின்னும் அணி நுதல் அழகு நோக்கி – சூளாமணி:8 1021/2
மெய் மயிரெறிந்து மணி வேர் நுதல் அரும்பி – சூளாமணி:8 1103/2
எறியா உதையா நுதல் ஏறு கரம் – சூளாமணி:9 1237/2
பொறி நுதல் யானை மேலான் சர_மழை பொழிவிக்கின்றான் – சூளாமணி:9 1449/4
பொன் அவிர் ஓடை யானை புகர் நுதல் புக்கது அன்றே – சூளாமணி:9 1461/4
ஒழுகு குருதி சேறு ஆடி ஓடை யானை நுதல் மீது – சூளாமணி:9 1475/3
மன்னும் இங்கு ஓர் மத யானை நுதல் மேல் மறிந்து மணி முடி சாய்த்து – சூளாமணி:9 1476/3
திங்களை அனைய செல்வி திரு நுதல் ஒளியினாலும் – சூளாமணி:9 1548/2
சென்று கடை சேந்து சிறு வாள் நுதல் வியர்த்தாள் – சூளாமணி:10 1608/2
பைம்பொன் திலத நுதல் ஒதுக்கி பாவை பந்து கை கொண்டாள் – சூளாமணி:10 1753/4
அங்கையால் அணி நுதல் அரும்பு நீர் துடைத்து – சூளாமணி:10 1759/2
வாள்_நுதல் மயிர் குளிர்த்து உரைக்கும் மா தவத்து அடிகள் என்றானும் – நீலகேசி:1 69/3
நக்கனன் ஆய்க்கு என்று நல்_நுதல் என்றான் – நீலகேசி:4 459/4
நாடியும் காண் என்று நல்_நுதல் நக்காள் – நீலகேசி:7 764/4
மேல்


நுதல்லை (1)

நல்_நுதல்லை துறந்து அவள் அட்டது – நீலகேசி:4 314/3
மேல்


நுதலப்பட்டார்களை (1)

கொன்றவர்க்கு அல்லது நுதலப்பட்டார்களை கூடலவேல் – நீலகேசி:9 841/1
மேல்


நுதலவரும் (1)

நல்_நுதலவரும் நம்பி தாயரும் நடையில் தூய – சூளாமணி:8 996/1
மேல்


நுதலாய் (4)

வான் உயர் தோன்றல் வளர்_பிறை ஏசிய வாள்_நுதலாய் – நீலகேசி:1 86/4
ஒள்_நுதலாய் உன் தலைவன் ஒழிவு_இன்றி உணர்கலான் – நீலகேசி:2 193/1
நடுவாக நோக்காய் நறு_நுதலாய் என்ன – நீலகேசி:5 644/4
நல்_நுதலாய் இது என் நெறி என்றனன் – நீலகேசி:7 734/2
மேல்


நுதலார் (1)

உருவ நகர் இழைப்பார் ஒண் நுதலார் ஆனார் – சூளாமணி:10 1651/4
மேல்


நுதலாள் (1)

வந்ததும் இது பொருள் மன்னவ யான் என நல்_நுதலாள் – நீலகேசி:2 231/1
மேல்


நுதலாளொடு (1)

நாய் ஒப்ப சீறி நறு_நுதலாளொடு – நீலகேசி:4 349/3
மேல்


நுதலி (2)

வந்தவன் வணங்கலோடும் மாமனை நுதலி என்னை – சூளாமணி:10 1695/1
ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால் – நீலகேசி:9 838/1
மேல்


நுதலிய (6)

நுதலிய செருநில குருதி நீரினுள் – சூளாமணி:9 1404/1
நுதலிய பொருள் நிகழ்வும் நும் கோளும் எமக்கு அறிய – நீலகேசி:2 172/2
தேவரும் பிதிரரும் நுதலிய கொலைகளில் தீ_வினை-தாம் – நீலகேசி:9 837/1
கூட்டி மற்று அவர்களை நுதலிய கொலை வினை-தங்களையும் – நீலகேசி:9 838/3
துறந்தவர் வீடுபெற்றார்களை நுதலிய தொடர் வினையும் – நீலகேசி:9 839/3
பண்பு_இலி தேவரை நுதலிய கொலையினில் பல் வினை-தான் – நீலகேசி:9 840/3
மேல்


நுதலியும் (3)

யாவரையும் நுதலியும் அவரவர் செய்தன அவரவர்க்கேயாய் – நீலகேசி:9 837/3
நண்பரை நுதலியும் பகைவரை நுதலியும் அமிர்தொடு நஞ்சு – நீலகேசி:9 840/1
நண்பரை நுதலியும் பகைவரை நுதலியும் அமிர்தொடு நஞ்சு – நீலகேசி:9 840/1
மேல்


நுதலில் (1)

செம்பொன் பட்டம் சேர்த்தினன் நுதலில்
அம் பொன் சாந்தம் அணிந்த நல் மார்பன் – உதயணகுமார:1 75/1,2
மேல்


நுதலின் (2)

அஞ்சு தோன்ற நுதலின் இழித்து அந்தணாளார் மெய் தீண்டி – சூளாமணி:9 1483/2
அணங்கு_அனார் நுதலின் மேலில் அரும்பிய ஆர தெள் நீர் – சூளாமணி:10 1669/1
மேல்


நுதலினார்-தம் (1)

சிலை மலி நுதலினார்-தம் காதலில் தீமை செப்பும் – யசோதர:1 71/4
மேல்


நுதலும் (1)

அம் பவழ வாயும் அளகம் சேர் வாள் நுதலும்
எம் பவமோ நுங்க யாம் எம்மை அறியேமே – சூளாமணி:8 1119/3,4
மேல்


நுதலே (1)

நறையில் பொலி கோதை நறு_நுதலே – நீலகேசி:5 485/4
மேல்


நுதலை (1)

நட்டு இவண் நகரிடை நகைசெய்து புகுந்த இ நல்_நுதலை – நீலகேசி:2 228/2
மேல்


நுதி (11)

குதி மகிழ்வன குவி குடையன நுதி கோதுபு குயில்கள் – சூளாமணி:6 436/2
புழல் கை திண் நுதி மருப்பின பொரு களிறு இவை-தாம் – சூளாமணி:7 708/1
உரம் கொள் தோளவன் விரல் நுதி உற உடைந்து ஒழிந்த – சூளாமணி:7 716/4
இள வாழை நுதி கமழ் தேன் ஒழுகி – சூளாமணி:7 804/2
நுதி மாளிகை மேல நுடங்கு கொடி – சூளாமணி:7 812/2
மண் இயல் மரத்தின் சாகை நுதி பிடித்து அவையும் விட்டு – சூளாமணி:8 1026/3
சேர்ந்து திகழ் பொன் இயல் சலாகை நுதி தீட்டி – சூளாமணி:8 1095/2
வடி நூல் நுதி கவ்விய வாளையொடும் – சூளாமணி:9 1239/1
அந்தரமே ஆறா சென்று அழல் நுதி வேல் அரசர்கட்கு – நீலகேசி:2 166/1
தந்து உரைப்பின் எரி நுதி போல் தாம் கேடு நிகழ்வு என்றாள் – நீலகேசி:2 177/4
சுடர் மேய சுடர் நுதி போன்ம் எனவும் – நீலகேசி:5 491/4
மேல்


நுதிகள் (1)

நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கி – சூளாமணி:9 1292/3
மேல்


நுதியால் (2)

சூல தலை நுதியால் அவன் ஆகம் துளையிட்டான் – சூளாமணி:9 1315/4
தாங்கிய தாம நுதியால் துடைத்தான் – சூளாமணி:11 1914/4
மேல்


நுதியில் (1)

மன்னவன் கழலை தங்கள் மணி முடி நுதியில் தீட்டி – சூளாமணி:3 97/2
மேல்


நுதியின் (1)

உள் எழு சுருளை வாங்கி ஒளி உகிர் நுதியின் ஊன்றி – சூளாமணி:10 1640/2
மேல்


நுந்தி (4)

மத்த மால் களிறு நுந்தி வள நகர் மருள சென்றான் – சூளாமணி:8 934/4
மாலும் மால் களிறு நுந்தி மற்று அவன் வருதலோடும் – சூளாமணி:9 1442/1
பொரும் மலை பகடு நுந்தி புயல் அலைத்து இருண்டு வீழ்ந்த – சூளாமணி:10 1788/3
தருக்கு எயில் காப்பு வாங்க தட கை மால் பகடு நுந்தி
திரு கிளர் குணம் மேல் சேடி செழும் மலை குவட்டின் ஓட்டி – சூளாமணி:12 2114/1,2
மேல்


நுந்தியவர் (1)

நுந்தியவர் வீசும் ஒளி வாள் நுதிகள் தாக்கி – சூளாமணி:9 1292/3
மேல்


நுந்து (1)

நுந்து பொன் ஒளி திரை எனும் கரதல புடங்களின் நுரை என்னும் – சூளாமணி:8 878/3
மேல்


நுந்துதலும் (1)

அருகு அணைய நுந்துதலும் அலறி அது தழுவி – யசோதர:5 291/3
மேல்


நுந்துபு (1)

சீர் கெழு விஞ்சையர் செம் தடி நுந்துபு
நீர் கெழு வெள்ளம் நிரந்ததை அன்றே – சூளாமணி:9 1240/3,4
மேல்


நுந்தும் (1)

நுரை என நிவந்தன நுந்தும் அ புனல் – சூளாமணி:9 1396/3
மேல்


நும் (29)

என்னை நும் பிறவி முன்னர் இறந்தன பிறந்து நின்ற – யசோதர:1 65/2
அருளினது உருவம் ஆய அடிகள் நும் அடிகட்கேயும் – யசோதர:5 306/3
புரி அணிந்த குழலீர் நும் செல்வம் போல் பொலிந்ததே – சூளாமணி:4 174/4
கார் அணிந்த குழலீர் நும் கைத்தலங்கள் தகை நோக்கி – சூளாமணி:4 175/1
வார் அணிந்த முலையீர் நும் மருங்குல்-தனின் வகை நோக்கி – சூளாமணி:4 175/3
ஏந்து இளம் தீம் குயில் இவை நும் சொல் கற்பான் இசைந்தனவே – சூளாமணி:4 176/2
தேன் தளங்கு குழலீர் நும் செவ்வாயின் எழில் நோக்கி – சூளாமணி:4 176/3
இவ்வகை அணியன கூறி ஈண்டு நும்
அவ்வை-தன் கோயில் புக்கு அடிசில் உண்க என – சூளாமணி:4 226/2,3
நும் குல நிலைமை எல்லாம் நூலின் நீ உரைத்தவாறே – சூளாமணி:6 550/2
சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான் – சூளாமணி:7 671/4
ஏ இ பெற்றியே விளைத்திலன் ஆயின் நும் வேந்தன் – சூளாமணி:7 707/3
என்னை நும் ஈர் அலர் குஞ்சி-தம்முள் இ – சூளாமணி:7 823/1
என்னொடும் பெயர்தி நும் பாடிக்கு என்று ஒரு – சூளாமணி:8 906/3
மண்களை மருட்டும் சீர் நும் மாமியார் அடிகள் சொன்னார் – சூளாமணி:8 1002/4
நும் தொழில் புகுந்த போழ்தின் நோக்கு-மின் எம்மை என்றான் – சூளாமணி:9 1202/4
நும் பெயர் நிறுத்து-மின் என்று நோக்கினான் – சூளாமணி:9 1265/4
மன் உயிர் காவல் நும் மக்கள் தாங்கினால் – சூளாமணி:12 2091/3
பின்னை நும் கருமமே பேணற்பாலிரே – சூளாமணி:12 2091/4
எப்படியும் இயங்குக நும் இறை_மகற்கும் இசை-மின் என்று – நீலகேசி:2 170/2
நுதலிய பொருள் நிகழ்வும் நும் கோளும் எமக்கு அறிய – நீலகேசி:2 172/2
அனையதே நும் அற நெறி என்றனள் – நீலகேசி:3 239/3
வில்லினை ஏற்றி நும் மெய்ம்மை கொளீஇயது – நீலகேசி:4 327/3
நும் பள்ளிக்கு ஈ பொருளால் உணர்வு_இல்லவர் – நீலகேசி:4 338/1
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும்
பெருமையினால் ஒன்று பெற்று ஒன்று பேறு_இன்மை பேதைமையே – நீலகேசி:4 391/3,4
கொள்ளும் நும் குசலாகுசலங்கள்-தாம் – நீலகேசி:5 526/2
கோது_இல் அங்கு ஓர் குறி உயிரே கொள்ளின் நும் கோள் அழிவாம் அ – நீலகேசி:5 567/2
நோய் உழப்பு ஆகிய நும் செய்கை யாவையும் – நீலகேசி:5 587/3
குழுக்களாய் வந்து நும் கோள் இறு-மின் என்றாள் – நீலகேசி:5 655/4
என்னை இங்கு நும் பொருள் என வினவலும் இ இருந்த – நீலகேசி:9 825/1
மேல்


நும்மால் (1)

பெற்றனன் அடிகள் நும்மால் பெரும் பயன் என்று போந்தான் – யசோதர:4 253/4
மேல்


நும்மை (1)

அமைக மாற்றம் நும்மை எங்கள் அடிகள் காண ஏகுவாம் – சூளாமணி:6 502/2
மேல்


நுமக்கு (5)

நாளின் உம் திறை நுமக்கு உவப்ப தந்து நாடு – சூளாமணி:7 685/1
இருப்பது என் இனி அன்னாய் இது நுமக்கு உரைத்தார் யார் – நீலகேசி:2 227/1
திரி வேதனைகளும் தீரா நுமக்கு உளவாதல் அன்றே – நீலகேசி:5 505/1
வரின் அடையும் அ அரு வினை நுமக்கு அறிவு அரியது என்றாள் – நீலகேசி:9 837/4
வீட்டின் அங்கு இடல் இன்றி வினை நிலை நுமக்கு அறிவு அரியது போல் – நீலகேசி:9 838/2
மேல்


நுமக்கும் (1)

உண் பல வகையினின் அடைந்தவை விளையுங்கள் நுமக்கும் என்றாள் – நீலகேசி:9 840/4
மேல்


நுமக்கே (1)

அசிப்பவர் போன்றனிர் ஆயினும் அரு வினையாம் நுமக்கே – நீலகேசி:9 836/4
மேல்


நுமது (1)

மா தளிர் இங்கு இவை நுமது நிறம் கொண்டு வளர்ந்தனவே – சூளாமணி:4 176/1
மேல்


நுமர் (4)

இன்_குரலார் முதலா நுமர் ஈறா இவரும் எண்மர் – நீலகேசி:1 88/1
அல்லால் அகல் துன்பம் ஆகா நுமர் அன்றி – நீலகேசி:1 114/3
என்பதனை நுமர் ஏடி எப்பொழுதும் உரைப்பவால் – நீலகேசி:2 184/2
தீங்கே நுமர் செய்கை தேர மற்று என்றாள் – நீலகேசி:4 329/4
மேல்


நுமர்-தம் (1)

முன்னும் நுமர்-தம் தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்கு – யசோதர:5 293/1
மேல்


நுமர்கள் (1)

இது நுமர்கள் பவம் வினைகள் விளையும் இயல்பு இது என்று – யசோதர:5 300/1
மேல்


நுமர்களை (1)

ஊட்டுதும் யாம் என்று நுமர்களை நுதலி ஓர் சாலை வைத்தால் – நீலகேசி:9 838/1
மேல்


நுமரை (1)

சலம் மேலும் இன்ன உடையாயை வென்று தலை கொண்ட பின்னை நுமரை
குலம் வேர் களைந்து குடி பொன்றுவிப்பன் இது யான் மகிழ்ந்த குணனே – சூளாமணி:9 1329/3,4
மேல்


நுரை (5)

நுரை மலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகரல் ஆமோ – சூளாமணி:6 520/4
உவரி மா கடல் நுரை என ஒளிர்தரு மயிர – சூளாமணி:7 732/1
நுரை கள் என்னும் அ குழம்பு கொண்டு எதிர்ந்து எழ நுடங்கிய இலையத்தால் – சூளாமணி:8 877/2
நுந்து பொன் ஒளி திரை எனும் கரதல புடங்களின் நுரை என்னும் – சூளாமணி:8 878/3
நுரை என நிவந்தன நுந்தும் அ புனல் – சூளாமணி:9 1396/3
மேல்


நுரைப்ப (1)

ஓரி நுரைப்ப உகுத்த பெரும் கடை – சூளாமணி:7 656/3
மேல்


நுரையவா (1)

நுரையவா நுண் துகிலும் மேகலையும் சூழ்ந்த – நீலகேசி:1 129/3
மேல்


நுரையொடு (1)

நிரந்து எழு நுரையொடு நிரைத்த ஒத்தவே – சூளாமணி:11 1883/4
மேல்


நுவல (1)

காந்திய முனிக்கு இறைஞ்சி கனா பயன் நுவல என்றான் – நாககுமார:2 43/3
மேல்


நுவற்சியாளர் (1)

நொதுமலர் வெருவுறா நுவற்சியாளர் பின் – சூளாமணி:2 58/3
மேல்


நுழை (4)

நுண்ணிய நூலின் அன்றி நுழை பொருள் உணர்த்தல் தேற்றார் – சூளாமணி:5 242/3
அகில் இடு நுழை புகை அவை கமழ்வன எனின் – சூளாமணி:8 946/3
அகில் இடு நுழை புகை அவர் புகழ் அதுவே – சூளாமணி:8 946/4
மஞ்சு சூழ் மழை நுழை மானம்-தன் உளோர் – சூளாமணி:10 1725/1
மேல்


நுழைத்து (1)

பெரு மணி நிலம் பிலமாக கீழ் நுழைத்து
அரு மணி நெடு வரை அதனை ஏந்தினான் – சூளாமணி:9 1512/2,3
மேல்


நுழைந்த (1)

நூலினால் பெரியவர் நுழைந்த சுற்றமா – சூளாமணி:2 57/2
மேல்


நுழைந்தறிவு (1)

நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/4
மேல்


நுழைந்தறிவு_உடையவரே (1)

நூல் திறம் செய்தவர் அறிகுவர் நுழைந்தறிவு_உடையவரே – நீலகேசி:9 830/4
மேல்


நுழைந்து (6)

நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் – சூளாமணி:4 235/3
நெய் பருகு கொழும் சுடரின் அகில் ஆவியிடை நுழைந்து நிழல் கால் சீப்ப – சூளாமணி:8 1033/2
கை நிலம் புக நுழைந்து எடுப்ப கல்லென – சூளாமணி:9 1513/1
உன் கருமம் நீ செய்வாய் நுழைந்து அறிவும் உடையையேல் – நீலகேசி:2 169/3
மாடம் ஓங்கி மழை நுழைந்து இன் குயில் – நீலகேசி:3 235/1
நூல் உரை எல்லாம் நுழைந்து உணர்வார்க்கே – நீலகேசி:5 635/4
மேல்


நுழைவொடு (1)

நூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல் – சூளாமணி:4 235/3
மேல்


நுன் (4)

தாது உரித்தாம் கேடு_இன்மை என்பது நுன் தத்துவமோ – நீலகேசி:2 202/2
நோயுற்ற நுன் போல் குணம் ஒன்று இலன் ஆய யானும் – நீலகேசி:6 722/1
பல்லும் நுன் நாவும் பதையாது உரை அன்றி – நீலகேசி:7 748/3
எத்துணையோ அது என்னின் நுன் கைக்குள் – நீலகேசி:7 776/3
மேல்


நுன்னை (1)

நுன்னை படைத்தவர் யார் இனி நோக்காய் – நீலகேசி:7 771/4
மேல்


நுனக்கு (3)

இருக்கும் வாய் ஒருப்படுத்தி இங்கு ஈது நுனக்கு உரைத்தாரை – நீலகேசி:3 266/2
இந்திரன்-தானும் இணை நுனக்கு ஆமோ – நீலகேசி:7 755/4
நோய் கொண்டேன் என அஞ்சல் நுனக்கு அவள் – நீலகேசி:10 891/3
மேல்


நுனது (2)

இல்லாம் பிற நுனது இச்சையும் இச்சை முன் இன்மையினால் – நீலகேசி:5 512/2
பெற்ற எழுத்தேல் பிரிவின்-கண் ஆறாம் பெயர் நுனது
முற்ற உணர்ந்து முடித்து உரை என்னை முதல் எழுத்து – நீலகேசி:5 518/1,2
மேல்


நுனி (2)

தருப்பையின் நுனி தலை வடக்கொடு கிழக்காய் – சூளாமணி:8 1096/3
நுனை தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால் – நீலகேசி:2 183/1
மேல்


நுனித்தகு (1)

நுனித்தகு நல் நெறி நோக்கினள் ஆகி – நீலகேசி:1 146/1
மேல்


நுனித்தது (1)

நொடி வரை அளவில் கீறி நுனித்தது வியத்தல் செய்யா – சூளாமணி:9 1143/2
மேல்


நுனித்தல் (1)

நோற்று நுனித்தல் ஒழுக்கம் தலை நிற்றல் – சூளாமணி:11 2012/2
மேல்


நுனித்தவர் (1)

நுண்ணிய நூல் வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்கள் இன்னும் உளவே – சூளாமணி:11 2007/3,4
மேல்


நுனித்து (2)

நோக்கி வைக நுனித்து அவன் ஆண்ட நாள் – சூளாமணி:4 144/2
நோவது செய்த வேந்தர் நுனித்து உயிர் வாழ்பவாயில் – சூளாமணி:9 1161/2
மேல்


நுனித்தோர் (1)

நூல் பொருள் கேட்டு நுனித்தோர் உணர்வது – சூளாமணி:11 2014/1
மேல்


நுனிப்பொடு (1)

நொந்தோம் என சென்று நோக்கின் நுனிப்பொடு
வந்தோம் என நின்ற மாண்பு_உடையார்களும் – சூளாமணி:11 1963/2,3
மேல்


நுனை (5)

வெம் திறல் வேடர் வில் நாண் வெம் நுனை பகழி வீழ – உதயணகுமார:1 118/3
கொதி நுனை வேலின் கோமுகன்-தனை – உதயணகுமார:5 300/2
வடி நுனை பகழியானும் மலர்_அடி வணங்கி வாழ்த்தி – யசோதர:4 231/1
கொதி நுனை பகழியான் குறிப்பின் அல்லது ஒன்று – சூளாமணி:2 58/1
நுனை தலைய நுண் மயிரை நுனி உறீஇ விதிர்த்திட்டால் – நீலகேசி:2 183/1

மேல்