தெ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெகிழ 1
தெங்கம் 1
தெங்கு 1
தெண் 3
தெய்வ 40
தெய்வக்கு 1
தெய்வங்கள் 2
தெய்வதக்கு 1
தெய்வதம் 1
தெய்வதைக்கு 1
தெய்வம் 33
தெய்வமாம் 2
தெய்வமாய் 1
தெய்வமே 3
தெரி 6
தெரி-மின் 1
தெரிசன் 1
தெரிதல் 1
தெரிதியாயின் 1
தெரிந்தது 1
தெரிந்தார் 1
தெரிந்தான் 1
தெரிந்து 15
தெரிய 3
தெரியமாட்டான் 1
தெரியல் 1
தெரியலாமோ 1
தெரியலாய் 2
தெரியலான் 6
தெரியவைப்பதும் 1
தெரியாதோ 1
தெரியின் 4
தெரியும் 1
தெரிவது 1
தெரிவன 1
தெரிவார் 1
தெரிவில் 1
தெரிவு 2
தெரிவு_இலா 1
தெரிவுற 1
தெரிவுறுப்பதும் 1
தெரிவுறுப்பார்க்கு 1
தெரு 5
தெருட்சி 1
தெருட்டல் 2
தெருட்டலுற்றாய் 1
தெருட்டாய் 1
தெருட்டி 4
தெருட்டினளே 1
தெருட்டினன் 1
தெருட்டினாள் 1
தெருட்டு 3
தெருட்டு-மின் 1
தெருட்டுங்கால் 1
தெருட்டும் 1
தெருட்டுவன் 1
தெருட்டுவேன் 1
தெருடல் 1
தெருண்டவர் 2
தெருண்டவர்க்கு 1
தெருண்டனம் 1
தெருண்டாயே 1
தெருண்டார் 2
தெருண்டார்களே 1
தெருண்டாள் 1
தெருண்டிருந்து 1
தெருண்டும் 1
தெருவிடை 2
தெருவு 1
தெருவுகள் 1
தெருவும் 1
தெருவுள் 1
தெருவொடு 1
தெருள் 3
தெருள்_அலன் 1
தெருள்_இலார்க்கு 1
தெருள்கலாள் 1
தெருள்வதும் 1
தெருள்வார் 1
தெருள 4
தெருளலன் 1
தெருளாதவரை 1
தெருளாது 1
தெருளாமையால் 1
தெருளின் 2
தெருளினர் 1
தெருளும் 2
தெருளுமாறு 1
தெவ் 1
தெவ்வர் 5
தெவ்வர்-தம் 1
தெவ்வரை 1
தெழித்தலோடு 1
தெழித்து 3
தெழியா 1
தெள் 13
தெள்ளி 1
தெள்ளிதின் 1
தெள்ளிய 3
தெள்ளியாய் 1
தெள்ளு 1
தெள்ளும் 1
தெளி 5
தெளிக 2
தெளிகிற்பார் 1
தெளித்தது 1
தெளித்தல் 1
தெளித்து 4
தெளிதரு 1
தெளிந்த 12
தெளிந்தது 1
தெளிந்தது-தான் 1
தெளிந்தவாறு 1
தெளிந்தவே 1
தெளிந்தன 1
தெளிந்தனன் 1
தெளிந்தாய் 1
தெளிந்தாய்_அல்லை 1
தெளிந்தார் 1
தெளிந்தாலும் 1
தெளிந்தான் 1
தெளிந்து 5
தெளிந்தே 1
தெளிந்தேன் 1
தெளிந்தோம் 1
தெளிப்ப 6
தெளிய 3
தெளியாது 1
தெளியாமல் 1
தெளியும் 1
தெளிர் 1
தெளிர்த்தார் 1
தெளிர்ப்ப 2
தெளிவித்தான் 1
தெளிவு 8
தெளிவு_இலர் 1
தெளிவு_இலாதார் 1
தெளிவுறின் 1
தெளிவோடு 2
தெற்கில் 1
தெற்ற 1
தெற்றி 1
தெற்றென 4
தெற 1
தெறித்த 1
தெறு 3
தெறும் 2
தெறுவன் 1
தென் 5
தென்-பால் 1
தென்திசை 1
தென்மலை 5
தென்மலையார் 1
தென்முகத்தது 1
தென்றல் 8
தென்றலின் 1
தென்றலும் 2
தென்றை 1
தென்னென் 1

தெகிழ (1)

உளர் வார் கனியும் மதுவும் தெகிழ
கிளர் பார்வை உற கிளர்கின்றது கேள் – சூளாமணி:7 811/3,4

TOP


தெங்கம் (1)

பணை நிலையன கமுகொடு படு பழம் உதிர்வன தெங்கம்
இணை நிலையன சுளை கனி இவை இனியன பல வாழை – நீலகேசி:1 13/1,2

TOP


தெங்கு (1)

தெங்கு அம் தீம் குலை ஊறிய தேறலும் – சூளாமணி:1 32/2

TOP


தெண் (3)

தெண் திரை சிந்திய சங்கொடு செம் கதிர் – சூளாமணி:7 664/1
தெண் கதிர் திரு மணி கனவில் சேர்ந்த பின் – சூளாமணி:10 1730/1
தெண் திரை வாழும் திமிலும் கலங்களும் – சூளாமணி:11 1954/1

TOP


தெய்வ (40)

தெய்வ நல் யானை கண்டு சென்று தன் வீணை பாட – உதயணகுமார:1 19/2
மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்துபோக – உதயணகுமார:1 30/1
செல்வ நல் குமரன் சென்று தெய்வ இந்திரனை கண்டு – உதயணகுமார:5 302/1
தெய்வ வேள்வியில் சேர்ந்து புணர்ந்தனன் – நாககுமார:1 31/4
திரு மணிய துணை முலைய தெய்வ மடவாரோடு – யசோதர:5 285/3
செங்கயல் மதர்த்த வாள் கண் தெய்வ மா மகளிர்-தோறும் – சூளாமணி:2 68/3
நளிரும் தெய்வ நறும் குளிர் நாற்றமே – சூளாமணி:4 123/4
தெய்வ யாறு காந்தள் அம் சிலம்பு தேம் கொள் பூம் பொழில் – சூளாமணி:4 136/1
குல முறை வழிபடும் தெய்வ கோயிலை – சூளாமணி:4 179/2
திளைத்தலின் நல் நகர் தெய்வ உலகம் – சூளாமணி:5 286/3
சீர் அணி திரு_மொழி தெய்வ தேவனே – சூளாமணி:5 403/4
தேன் உடை அலங்கலான் தெய்வ மார்பகம் – சூளாமணி:5 407/3
செம்பொன் வான் அகட்டு இழிந்து தெய்வ யானை உள் மறைஇ – சூளாமணி:6 500/1
தீம் தொடை நரம்பின் தெய்வ செழும் குரல் சிலம்ப ஏத்த – சூளாமணி:6 545/2
கடி மணம் அனுக்கும் தெய்வ கழல் அடி அரசர்-தங்கள் – சூளாமணி:6 553/3
செம் கண் மாலவன் தெய்வ மார்பகம் – சூளாமணி:7 603/1
தெய்வ மணம் நாறு திரு மேனி புறம் காக்கும் – சூளாமணி:8 863/3
திருந்திய மொழியும் தெய்வ செல்வமும் தெய்வம் அன்னீர் – சூளாமணி:8 988/3
செம் சிலம்பு ஒலிக்கும் செல்வ சீறடி தெய்வ பாவை – சூளாமணி:8 1000/1
செழும் மணி சிலை சென்று ஏறும் தெய்வ மா மிதுனம் ஒத்தார் – சூளாமணி:8 1109/4
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ – சூளாமணி:9 1181/2
தேற்றினன் திரு மகிழ் தெய்வ காளையே – சூளாமணி:9 1208/4
சென்றனர் ஆயிடை தெய்வ வாய் மொழி – சூளாமணி:9 1216/2
தெய்வ வாய் நாஞ்சிலும் செம் கண் சீயமும் – சூளாமணி:9 1414/1
படை திறலாளன் தெய்வ படை தொழில் பறைக்கலுற்றான் – சூளாமணி:9 1450/4
ஒண் திறல் உவண புள்ளின் உருவின் ஓர் தெய்வ அம்பு – சூளாமணி:9 1452/2
தீயொடு புணர்த்த போழ்து அ தெய்வ அம்பு எய்தலோடும் – சூளாமணி:9 1453/2
சீற்றமொடு இரியும் செல்வ தெய்வ அம்பு எய்த எல்லாம் – சூளாமணி:9 1457/1
தாழியாது எய்யும் தெய்வ படை முதல் அழிந்தும் சால – சூளாமணி:9 1458/1
சீரின் மன்னும் வள நாடும் தெய்வ படையும் செல்வமும் நீ – சூளாமணி:9 1481/3
அரிதினின் அவன் எய்த தெய்வ அம்புகள் – சூளாமணி:9 1487/1
திரு மணி நிழல் ஒளி தெய்வ வான் படை – சூளாமணி:9 1496/1
திரு மணியின் ஒளி மேனி நிழல் எறிப்ப திகழ்ந்து இலங்கு தெய்வ பாவை – சூளாமணி:9 1535/2
திரு மணி நிழற்றும் செம்பொன் நெடு முடி முகட்டு ஓர் தெய்வ
குரு மணி உமிழும் சோதி குலவிய ஒளி கொள் வட்டம் – சூளாமணி:10 1557/1,2
தேம் கமழ் தெய்வ செம்பொன் தாமரை சுரி வெண் சங்கம் – சூளாமணி:10 1558/1
தென்மலை வளர்ந்த தெய்வ சந்தனம் திளைத்த மார்பன் – சூளாமணி:10 1789/3
தெய்வ மனிதரவரை தெளிவுறின் – சூளாமணி:11 2019/1
தேய வினை வெல்லும் தெய்வ மனிதருள் – சூளாமணி:11 2021/1
சீல வான் தெய்வ யாக்கை திண்ணிதா எய்திநின்றார் – நீலகேசி:4 435/1
மடி_இலார் செய்த மானுயர் தெய்வ
படி இது என்று இடை பாழ்செய்திட்டாயால் – நீலகேசி:5 610/3,4

TOP


தெய்வக்கு (1)

போது சாந்து அவியொடு புகையும் பொருந்திய பொரும் தெய்வக்கு எனலும் – நீலகேசி:1 66/3

TOP


தெய்வங்கள் (2)

தெய்வங்கள் செப்பின் ஈர்_எண்ணாயிரம் திசை நின்று ஓம்ப – சூளாமணி:10 1559/1
பலி பெறு தெய்வங்கள் மேலிட்டு பாற்றும் – சூளாமணி:11 1965/3

TOP


தெய்வதக்கு (1)

தீம் கரும்பு அனைய சொல் சிறுமி தெய்வதக்கு
ஆங்கு ஒரு பெரும் சிறப்பு அயர்தல் மேயினாள் – சூளாமணி:4 212/3,4

TOP


தெய்வதம் (1)

தெய்வதம் என்று தேறினர் செய்யும் சிறப்பு என்றும் – நீலகேசி:5 564/1

TOP


தெய்வதைக்கு (1)

சென்று அ தெய்வதைக்கு என சிலர் சிறப்பு அயர் பொழுதின் – நீலகேசி:1 35/2

TOP


தெய்வம் (33)

நிலம் மிக கடந்தது என்ன நீர்மையில் தந்த தெய்வம்
நலம் மிக தரும் இன்று என்ன பண்ணுகை நம்மால் என்ன – உதயணகுமார:1 113/2,3
கள் அவிழ் மாலை தெய்வம் கனவிடை கொடுப்ப கண்டான் – உதயணகுமார:4 191/4
ஆள் என தெய்வம் வைத்து அருகன் ஆலையத்துள் சென்று – நாககுமார:3 98/3
மேல் இயல் தெய்வம் கண்டே விரும்பினது அடையப்பட்ட – யசோதர:2 146/1
சே இரும் தாமரை தெய்வம் அன்னர் என்று – சூளாமணி:2 62/3
பெருமையை உடைய தெய்வம் பிறிது இனி இல்லை அன்றே – சூளாமணி:5 267/4
தன் அலால் தெய்வம் பேணார் சார்ந்தவர் தானும் சார்ந்தார்க்கு – சூளாமணி:5 302/1
தேவி மற்று அவள் தெய்வம் வழிபட – சூளாமணி:5 338/1
சிலாதலம் இதற்கு உரிய தெய்வம் எனல் வேண்டா – சூளாமணி:6 443/2
பாடலால் நரம்பின் தெய்வம் படிவம் கொண்டு அனைய நீரார் – சூளாமணி:7 676/3
ஆடியிட்டன வன_தெய்வம் அரி_உருவுடையான் – சூளாமணி:7 717/3
தெய்வம் நாறுவ தேம் கொள் செய்குன்றமும் – சூளாமணி:8 897/2
திருந்திய மொழியும் தெய்வ செல்வமும் தெய்வம் அன்னீர் – சூளாமணி:8 988/3
மரு உடை மனுடம் தெய்வம் இருமையும் என்ன மற்ற – சூளாமணி:9 1183/2
அந்தர விசும்பில் தெய்வம் அணுகின பணி என் என்னா – சூளாமணி:9 1202/2
வணங்குபு சூழ மற்று அ மா பெரும் தெய்வம் வந்து – சூளாமணி:9 1428/3
விரை கிளர் உருவ தெய்வம் இது படை விடுத்த ஆறே – சூளாமணி:9 1430/4
கிளர் உலகை தெய்வம் உண்ணிய உடன்ற ஆறே – சூளாமணி:9 1431/4
சலம் புரி தெய்வம் அஞ்சி தன் உரு அடைந்தது அன்றே – சூளாமணி:9 1439/4
சலத்தினை புரிந்த தெய்வம் தலை பனித்து உடைந்தது அன்றே – சூளாமணி:9 1440/4
தெய்வம் ஆங்கு உடைந்து தன் பால் படையினை திரைத்து கொண்டு – சூளாமணி:9 1441/1
வணங்கி வந்து பல தெய்வம் வழிபாடு ஆற்றும் மறை நேமி – சூளாமணி:9 1479/3
பெரும் கலி விழவின தெய்வம் பேணுவ – சூளாமணி:9 1501/2
அரும் கல பெரும் தெய்வம் அவையும் தத்தமக்கு – சூளாமணி:9 1505/1
உடைந்து அழி மனத்தன் வேந்தன் உழையது ஓர் தெய்வம் கூவி – சூளாமணி:10 1663/3
தெய்வம் ஓர் வேழம் ஆகி செய் கடாம் திரண்டு வீழ – சூளாமணி:10 1664/3
கண் கவர் சோதி காமரு தெய்வம் பல காப்ப – சூளாமணி:10 1739/1
தெய்வம் பேணி பெற்றனர் பேணும் திருவே போல் – சூளாமணி:10 1746/3
நலன் உடைத்து அளிய நங்கள் நல்_வினை தெய்வம் அன்றே – சூளாமணி:11 1843/4
இரந்து ஓர் வல் தெய்வம் கொணர்ந்து இவன் கடிதும் என்று எண்ணி – நீலகேசி:1 43/4
மா தெய்வம் தலைப்பட்டு கிளர்ந்து இன்ன உரைக்கும் – நீலகேசி:1 44/4
ஒக்கலி ஓகலி என்று இரு தெய்வம் உரைத்தனவேல் – நீலகேசி:6 681/1
மாயத்தால் அன்றி மந்திரத்தால் தெய்வம்
கூயக்கால் அறம் கோடலை ஒட்டு என – நீலகேசி:10 887/3,4

TOP


தெய்வமாம் (2)

தே மரு சிலாதலம் திருத்தி தெய்வமாம்
தூ மரு மாலையாய் துரும காந்தனை – சூளாமணி:3 116/2,3
தேவனுக்கு அமிர்தமாம் தெய்வமாம் என – சூளாமணி:5 419/3

TOP


தெய்வமாய் (1)

மக்களுள் அரசர்கள் வணங்கும் தெய்வமாய்
தொக்கு எரி சுடர் ஒளி துளும்ப தோன்றினான் – சூளாமணி:9 1502/3,4

TOP


தெய்வமே (3)

தெய்வமே திரி குழல் சிறுமி ஆவதற்கு – சூளாமணி:5 426/1
தேர்ந்துகொண்டு ஒருவர் இன்றி தெய்வமே செகுத்திடு என்றான் – சூளாமணி:9 1426/4
செந்தாஅமரை அடியின் செவ்வியும் மற்று இதுவாயின் தெய்வமே ஆம் – சூளாமணி:9 1539/4

TOP


தெரி (6)

திருவ மன்னர் திறை தெரி ஓலையுள் – உதயணகுமார:1 33/2
நாந்தக கிழவர் கோமான் நயம் தெரி மனத்தன் ஆனான் – சூளாமணி:7 666/4
எண்ணிடை உணரும் மாந்தர்க்கு இடை தெரி அரியது ஒன்றால் – சூளாமணி:8 970/3
திரு உருவின தெரி கதிரின திசைதிசை-தொறு செந்நெல் – நீலகேசி:1 12/4
திணி நிலையன திரள் அரையன தெரி மலரன மருதம் – நீலகேசி:1 13/4
தேரன் சிறிதே தெரி கோதையை நக்கனனே – நீலகேசி:4 412/4

TOP


தெரி-மின் (1)

சென்று நும் இறைவர்க்கு எம் வாய் இன் உரை தெரி-மின் என்றான் – சூளாமணி:7 671/4

TOP


தெரிசன் (1)

தெரிசன் அ விளக்கம் சிறப்பானதே – உதயணகுமார:6 335/4

TOP


தெரிதல் (1)

மெய்ப்பொருள் தெரிதல் மற்று அ பொருள் மிசை விரிந்த ஞானம் – சூளாமணி:4 201/1

TOP


தெரிதியாயின் (1)

இனையன வினையின் ஆகும் இயல்பு இது தெரிதியாயின்
இனையன துணைவர் ஆகும் இளையரின் விளையும் இன்பம் – யசோதர:2 160/1,2

TOP


தெரிந்தது (1)

வெம் கணை தெரிந்தது விலக்கி விறல் வெய்யோய் – சூளாமணி:9 1284/2

TOP


தெரிந்தார் (1)

சொன்மை யார் இடை தெரிந்தார் தொடர் வினை முழுவதும் சுடும் நின் – நீலகேசி:2 161/3

TOP


தெரிந்தான் (1)

சிறை செய் சிந்தையன் அந்தம்_இல் பொருள்களை தெரிந்தான் – நீலகேசி:1 33/4

TOP


தெரிந்து (15)

தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/3
திசை விளக்கு_அனையாள் மூத்தாள் தெரிந்து நீ என்-கொல் என்ன – நாககுமார:2 55/3
அங்க நூல் ஆதி யாவும் அரில்_தப தெரிந்து தீமை – யசோதர:1 55/1
மெய் வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டை எய்தும் – யசோதர:1 70/3
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் – சூளாமணி:5 247/1
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி – சூளாமணி:5 247/3
மெய்ம்மையில் தெரிந்து ஒளி துளும்பும் மேனியன் – சூளாமணி:5 386/3
தேங்கிய உவகையர் தெரிந்து சொல்லினார் – சூளாமணி:5 425/4
சுரை மலி அமிர்த தீம் பால் சுவை தெரிந்து உண்ணல் ஆமோ – சூளாமணி:6 520/2
மெய் புடை தெரிந்து மேலை விழு தவம் முயன்று நோற்றார்க்கு – சூளாமணி:6 528/1
மெய் புடை தெரிந்து சொன்ன தூதுவர் அவரை மீட்டே – சூளாமணி:7 700/2
தம் புலம் தெரிந்து தோன்றும் தடத்தின தலங்கள் எல்லாம் – சூளாமணி:8 855/4
தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4
காதல் கழி பற்று_இலாமை தெரிந்து அறிவு – சூளாமணி:11 1995/3
திறவியாள் கேட்டு தெரிந்து உள்ளம் கொள்ள – நீலகேசி:1 127/3

TOP


தெரிய (3)

மெய் தெரிய கண்டே தளர்ந்து கண் புதைத்து மீண்டேன் – யசோதர:2 104/3
தீது எலாம் தேவிக்கு தெரிய செப்புவேன் – சூளாமணி:10 1594/4
தெரிய குணமுகத்தால் அன்றி என்றும் தெருட்டு உளதோ – நீலகேசி:5 499/4

TOP


தெரியமாட்டான் (1)

மெய் புடை தெரியமாட்டான் விருந்து கொள் மனத்தன் ஆனான் – சூளாமணி:8 1016/4

TOP


தெரியல் (1)

அரு மணி தெரியல் தேன் அழிய வைகினான் – சூளாமணி:5 423/4

TOP


தெரியலாமோ (1)

திரு உடை அடிகள் நின்ற திறம் இது தெரியலாமோ – சூளாமணி:6 556/4

TOP


தெரியலாய் (2)

தேன் மகிழ் தெரியலாய் நின் திரு குலம் தெளிப்ப வந்த – சூளாமணி:5 277/1
கொங்கு அலர் தெரியலாய் கொற்றம் கொள்க என – சூளாமணி:5 378/2

TOP


தெரியலான் (6)

கொங்கு அலர் தெரியலான் கூறி கொய் மலர் – சூளாமணி:3 111/3
செம் சினை தெரியலான் அருளி செய்தது – சூளாமணி:5 239/1
ஆர் அணி தெரியலான் அமிர்தம் மேயினான் – சூளாமணி:5 373/4
அரும்பு சூழ் தெரியலான் அருளின் எய்தினான் – சூளாமணி:5 377/4
கொங்கு அலர் தெரியலான் திறத்தில் கொள் குறி – சூளாமணி:5 409/1
பில்கு பூம் தெரியலான் பெயர்ந்து போயினான் – சூளாமணி:10 1761/4

TOP


தெரியவைப்பதும் (1)

தெருள்வதும் மும்மையின் தெரியவைப்பதும்
அருள் உடை அற நெறி அண்ணல் சேவடி – நீலகேசி:8 821/2,3

TOP


தெரியாதோ (1)

எண் திசையும் பரந்து இசைப்ப ஈது உனக்கே தெரியாதோ
தண்டியாய் கழியாது தவம்செய்தல் உறுதியேல் – நீலகேசி:4 282/2,3

TOP


தெரியின் (4)

நயந்து அது தெரியின் நம்பி நளி கடல்_வண்ணன்-தன்னை – சூளாமணி:3 106/2
தெரியின் தொல் பகை தான் சிறிது ஆயினும் – சூளாமணி:7 643/3
சிறப்பு எனப்படுவது தெரியின் அ பொருள் – நீலகேசி:8 814/1
என்றலின் இருமையும் தெரியின் இன்மையால் – நீலகேசி:8 817/3

TOP


தெரியும் (1)

செம் சுடர் திலத கண்ணி தேவரே தெரியும் காலை – சூளாமணி:6 525/2

TOP


தெரிவது (1)

தெரிவது ஒன்று இலர் செல்வ மயக்கினால் – யசோதர:1 9/4

TOP


தெரிவன (1)

தெரிவன அரியன தெருவொடு திசையே – சூளாமணி:8 937/4

TOP


தெரிவார் (1)

தெருவுகள் படுவது சிலர் இடை தெரிவார் – சூளாமணி:8 939/4

TOP


தெரிவில் (1)

திரையான் நரையான் தெரிவில் உருவம் – நீலகேசி:6 673/2

TOP


தெரிவு (2)

சேதன வடிவு தேவிக்கு எறிந்தனர் தெரிவு ஒன்று இல்லார் – யசோதர:2 155/3
தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும் – யசோதர:4 242/2

TOP


தெரிவு_இலா (1)

தெரிவு_இலா செலவும் சிந்தை பொருள்-வயின் திருகு பற்றும் – யசோதர:4 242/2

TOP


தெரிவுற (1)

தெரிவுற வருவது சிறப்பது ஆம் குண – நீலகேசி:8 787/3

TOP


தெரிவுறுப்பதும் (1)

தெரிவுறுப்பதும் செப்புதல் உற்றதே – யசோதர:0 4/4

TOP


தெரிவுறுப்பார்க்கு (1)

இ வகை தெரிவுறுப்பார்க்கு இனிது வைத்து உரைத்தும் அன்றே – நாககுமார:1 4/4

TOP


தெரு (5)

பெரும் தெரு எல்லாம் பிற்பட போந்தே – உதயணகுமார:1 80/3
பெரும் தெரு நடுவுள் தோன்ற பீடு உடை குமரன் தானும் – உதயணகுமார:1 97/2
சோரி முழா விழவில் தெரு துற்ற பின் – சூளாமணி:7 653/3
மூடிய மூரி நெடும் தெரு ஒப்பவும் – சூளாமணி:7 655/3
தெரு உடை திசைமுகம் தெளிப்ப தேர்த்து அரோ – சூளாமணி:10 1773/2

TOP


தெருட்சி (1)

தின்று தின்றிட்டு படைப்பின் தெருட்சி மற்று – நீலகேசி:7 772/3

TOP


தெருட்டல் (2)

தெருளாதவரை தெருட்டல் அதுவே – நீலகேசி:4 462/2
தேறின ஆறு அவற்று உண்மை எனக்கு தெருட்டல் நலிந்து – நீலகேசி:5 507/2

TOP


தெருட்டலுற்றாய் (1)

பூதங்கள் நான்கும் புகுந்தே தெருட்டலுற்றாய் அவற்றுக்கு – நீலகேசி:5 496/1

TOP


தெருட்டாய் (1)

திரு_உடையாய் அவகாயத்து தேரை அடி தெருட்டாய் – நீலகேசி:5 504/4

TOP


தெருட்டி (4)

செரு அங்கண் விளைந்த போழ்தில் காட்டுதும் தெருட்டி என்பார் – சூளாமணி:9 1191/4
வெவ் வேல் தெருட்டி ஒரு தோள் நிமிர்த்தி விரல் ஒன்று சுட்டி வரவே – சூளாமணி:9 1333/3
திருத்திய நின் உணர்வு_இன்மை தெருட்டி காண் என்ன சொன்னாள் – நீலகேசி:4 299/4
திண் பதத்தில் தெருட்டி எடுத்து இரீஇ – நீலகேசி:10 890/2

TOP


தெருட்டினளே (1)

தீத்தனை போலவும் தேறு என்று அவனை தெருட்டினளே – நீலகேசி:5 517/4

TOP


தெருட்டினன் (1)

மடங்கலை அலைக்கும் நீரான் தெருட்டினன் வினவ ஆர – சூளாமணி:10 1707/3

TOP


தெருட்டினாள் (1)

தேன் நிரைத்த கரும் குழலாள்-தானும் பின் தெருட்டினாள் – நீலகேசி:2 175/4

TOP


தெருட்டு (3)

செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் – நீலகேசி:1 148/4
தினையின் நேரும் தெருட்டு எனக்கு என்னவே – நீலகேசி:3 242/2
தெரிய குணமுகத்தால் அன்றி என்றும் தெருட்டு உளதோ – நீலகேசி:5 499/4

TOP


தெருட்டு-மின் (1)

திதலை மாண் அல்குலீர் தெருட்டு-மின் என சொன்னான் – நீலகேசி:2 172/3

TOP


தெருட்டுங்கால் (1)

தின்கின்றான் பிணம் வீடும் தெருட்டுங்கால் சூனியமே – நீலகேசி:2 190/2

TOP


தெருட்டும் (1)

மெய் கோளால் என்றி யான் மிகை தெருட்டும் திறம் காணேன் – நீலகேசி:4 298/4

TOP


தெருட்டுவன் (1)

இல்லவே என தெருட்டுவன் எடுத்து உரை என தான் – நீலகேசி:5 483/2

TOP


தெருட்டுவேன் (1)

தெருட்டுவேன் இவள் திறம்_இன்மை சிறிது இடைப்படலும் – நீலகேசி:1 49/2

TOP


தெருடல் (1)

தெருடல் இலை அவர் செய்கை இல் செய்கை – நீலகேசி:7 762/3

TOP


தெருண்டவர் (2)

செற்றவர் செருக்கும் சூழ்ச்சி தெருண்டவர் கடவ அன்றே – சூளாமணி:5 246/4
தெருண்டவர் மேற்கொளும் செய் தவ செல்வம் – சூளாமணி:11 2005/1

TOP


தெருண்டவர்க்கு (1)

வாதித்தவாறு என்று தெருண்டவர்க்கு இவையிவை மயா மயக்கே – நீலகேசி:9 834/4

TOP


தெருண்டனம் (1)

தெருண்டனம் பாகுபாடு உற்றற்கும் என்றனன் தேரனுமே – நீலகேசி:4 396/4

TOP


தெருண்டாயே (1)

திண்ணிதா காட்டின் தெருண்டாயே என்றும் – நீலகேசி:6 700/4

TOP


தெருண்டார் (2)

கோமான் அவையுள் தெருண்டார் கொளப்பட்டது அன்றே – சூளாமணி:0 4/4
தேறார் தெருண்டார் என சொல்லினன் தேரனும்மே – நீலகேசி:4 420/4

TOP


தெருண்டார்களே (1)

தேறுவார் உளரோ தெருண்டார்களே – நீலகேசி:2 216/4

TOP


தெருண்டாள் (1)

சீரிற்கு ஒத்தாள் கணிகை தெருண்டாள் பெண் – நீலகேசி:3 249/2

TOP


தெருண்டிருந்து (1)

தேற்றுவன் கேள் நீ தெருண்டிருந்து என்றாள் – நீலகேசி:5 628/4

TOP


தெருண்டும் (1)

வழுவ மயங்கி மாழாந்தும் மருண்டும் தெருண்டும் மடவார்கள் – சூளாமணி:9 1482/2

TOP


தெருவிடை (2)

தெருவிடை திகழ புக்கான் திரு நகர் மகிழ அன்றே – உதயணகுமார:1 96/4
தாம தெருவிடை தாம் பலர் கண்டாய் – சூளாமணி:5 294/4

TOP


தெருவு (1)

தெருவு பட திருத்தி சீலம் புனைவார் – சூளாமணி:10 1651/3

TOP


தெருவுகள் (1)

தெருவுகள் படுவது சிலர் இடை தெரிவார் – சூளாமணி:8 939/4

TOP


தெருவும் (1)

செதுக்கமும் பலி பெறு தெருவும் தேர்ந்து போய் – சூளாமணி:8 1060/3

TOP


தெருவுள் (1)

கார் கலந்து இருண்ட போலும் கண் அகல் தெருவுள் சென்றார் – சூளாமணி:6 506/4

TOP


தெருவொடு (1)

தெரிவன அரியன தெருவொடு திசையே – சூளாமணி:8 937/4

TOP


தெருள் (3)

தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
தெருள்_அலன் நினைந்த தீமை சிறியனேன் என் செய்கேனோ – யசோதர:5 306/4
தெருள்_இலார்க்கு இசைவு_இலள் திருவின் செல்வியே – சூளாமணி:12 2081/4

TOP


தெருள்_அலன் (1)

தெருள்_அலன் நினைந்த தீமை சிறியனேன் என் செய்கேனோ – யசோதர:5 306/4

TOP


தெருள்_இலார்க்கு (1)

தெருள்_இலார்க்கு இசைவு_இலள் திருவின் செல்வியே – சூளாமணி:12 2081/4

TOP


தெருள்கலாள் (1)

தெருள்கலாள் உரையும் ஆடாள் சிறிது போது அசைய கண்டே – யசோதர:2 120/3

TOP


தெருள்வதும் (1)

தெருள்வதும் மும்மையின் தெரியவைப்பதும் – நீலகேசி:8 821/2

TOP


தெருள்வார் (1)

தெருள்வார் திரிவார் செரு ஆர் கணையால் – சூளாமணி:9 1247/3

TOP


தெருள (4)

இன்று யான் யாது செய்வது அருளுக தெருள என்றாள் – யசோதர:1 48/4
ஆகும் மற்று உறுதிக்கு ஏது அருளுக தெருள என்றான் – யசோதர:4 239/4
திங்கள் முக்குடை கவிப்ப தேவர்-தம் திருந்து அவை தெருள
அங்க பூவம்-அது அ/றைந்தாய் அறிவர்-தம் அறிவர்க்கும் அறிவா – நீலகேசி:2 157/3,4
தெருள நீ உரைத்து காண் திருந்து அவையாரிடை என்றாள் – நீலகேசி:2 187/4

TOP


தெருளலன் (1)

தெருளலன் முன்பு செய்த சிறுமைகள் பொறுக்க என்றான் – யசோதர:5 311/4

TOP


தெருளாதவரை (1)

தெருளாதவரை தெருட்டல் அதுவே – நீலகேசி:4 462/2

TOP


தெருளாது (1)

தெள்ளி நரைத்து தெருளாது உறு தீமை செய்யும் – நீலகேசி:0 7/1

TOP


தெருளாமையால் (1)

தெருளாமையால் வினவற்பாலது ஒன்று உண்டு திரு_அடிகள் செம்பொன் ஆர் அரவிந்தம் ஏந்த – சூளாமணி:11 1907/1

TOP


தெருளின் (2)

தெருளின் எழு வகை நரக குழிகள் இவை தாரோய் – யசோதர:5 287/4
செய்ய மனத்தோர் தெருளின் திறமே – சூளாமணி:11 2010/4

TOP


தெருளினர் (1)

தெருளினர் கூடி சேர வந்து அ தினம் – உதயணகுமார:3 168/3

TOP


தெருளும் (2)

மருளும் தெருளும் வரம்பு_இல பயிற்றி – உதயணகுமார:1 80/1
அருளும் தெருளும் குணத்தின்-கண் ஆர்வமும் – சூளாமணி:11 2008/1

TOP


தெருளுமாறு (1)

தெருளுமாறு ஒருவன் சொல்ல கேட்டலும் சேணில் வாழ்வார் – சூளாமணி:9 1135/3

TOP


தெவ் (1)

வட்கி நம் இறைவற்கு வலிது தெவ் என – சூளாமணி:7 691/3

TOP


தெவ்வர் (5)

அஞ்சுதல்_இலாத தெவ்வர் அவிய மேல் அடர்த்து சென்று – யசோதர:2 87/1
வேல் பயம் கொண்டனர் தெவ்வர் நம் தமர் – சூளாமணி:9 1252/3
தெவ்வர் அங்கு இன்மையாலும் திசையினில் வணக்கற்பால – சூளாமணி:9 1552/1
பின்னும் ஓர் நால்வர் தெவ்வர் முறைமுறை பிணங்கி வீழ்ந்தார் – சூளாமணி:12 2118/1
நெடிது உடன் ஆய தெவ்வர் நால்வரை நீறுசெய்திட்டு – சூளாமணி:12 2120/1

TOP


தெவ்வர்-தம் (1)

திரு விளைத்து உலகு கண்மலர தெவ்வர்-தம்
புரி வளை நல் நகர் செல்வம் புல்லென – சூளாமணி:3 79/1,2

TOP


தெவ்வரை (1)

தெவ்வரை திறல் வாட்டிய திண்மையான் – நீலகேசி:3 240/4

TOP


தெழித்தலோடு (1)

சின அழல் எறிப்ப நோக்கி சிவந்தனன் தெழித்தலோடு
மனம் நனி மயங்கி மற்ற விஞ்சையர் அஞ்ச நின்ற – சூளாமணி:9 1142/2,3

TOP


தெழித்து (3)

என்றனன் எனலும் எதிர் தெழித்து அவனும் எழுந்தனன் எழுந்தனன் இவனும் – சூளாமணி:9 1322/3
செற்றலன் தெழித்து மேல் – சூளாமணி:9 1370/2
இன்னணம் மொழிந்து எதிர் தெழித்து மாற்றலர் – சூளாமணி:9 1385/1

TOP


தெழியா (1)

கலங்கும் ஆர்ப்பொடு கார் படு மழை என தெழியா
பிலம் கண்டு அன்ன தன் பெரு முழை வாய் திறந்து அழையா – நீலகேசி:1 51/2,3

TOP


தெள் (13)

பெயரும் தெள் திரை பிறங்கலுள் பிணங்கிய பெரு வரை அகில் தேக்கி – சூளாமணி:8 879/2
தெள் ஒளி குமரரோடும் இருந்தனர் திருந்து வேலோர் – சூளாமணி:8 968/4
உருகினான் போன்று தோன்ற மயிர் துளை உகுத்த தெள் நீர் – சூளாமணி:9 1147/2
திங்கள் ஒளி கருதி தெள் நீர் துளி சிதற – சூளாமணி:10 1654/3
அணங்கு_அனார் நுதலின் மேலில் அரும்பிய ஆர தெள் நீர் – சூளாமணி:10 1669/1
தேம் துணர் அகன்ற தெள் நீர் திரு மணி உருவ வாவி – சூளாமணி:10 1670/3
அன்னவாறு அமைந்த தெள் நீர் அலை புனல் ஆடும் போழ்தில் – சூளாமணி:10 1671/1
கலிங்கின் ஆறு இழிந்து கீழே கலந்து வந்து எழுந்த தெள் நீர் – சூளாமணி:10 1672/2
பாய்ந்தன பவழ செம் கேழ் அங்கையால் படுத்த தெள் நீர் – சூளாமணி:10 1676/2
நின்று அகம் சுழிந்த தெள் நீர் நெரேலென இழிந்தது அன்றே – சூளாமணி:10 1678/4
திரு மணி_வண்ணனோடும் தேவியர் திளைத்து தெள் நீர் – சூளாமணி:10 1680/2
திளைத்து அகம் கழுமிய தரங்க தெள் புனல் – சூளாமணி:10 1686/2
பொங்கு அழல் வலம்செய் போழ்தில் குழை முகம் பொறித்த தெள் நீர் – சூளாமணி:10 1831/2

TOP


தெள்ளி (1)

தெள்ளி நரைத்து தெருளாது உறு தீமை செய்யும் – நீலகேசி:0 7/1

TOP


தெள்ளிதின் (1)

தெள்ளிதின் அவற்றையும் தெளிய செப்பினான் – சூளாமணி:10 1590/4

TOP


தெள்ளிய (3)

தெள்ளிய மணி தெரிந்து சில மணி மாற போந்து – உதயணகுமார:3 166/3
தெள்ளிய ஆழி கொண்டு திக்கு அடிப்படுத்தும் என்ன – உதயணகுமார:4 193/2
தெள்ளிய மதியவன் செய்த தீமை போல் – சூளாமணி:8 1064/3

TOP


தெள்ளியாய் (1)

தெள்ளியாய் தெளிந்து இருந்து சிந்தித்து காணாயோ – நீலகேசி:2 196/4

TOP


தெள்ளு (1)

தெள்ளு வண் பவழ திரள் ஊன்றிய – சூளாமணி:8 896/1

TOP


தெள்ளும் (1)

தெள்ளும் மணி அருவி செய்குன்றம் சேர்ந்தார் – சூளாமணி:10 1646/4

TOP


தெளி (5)

சிங்கம் இவன் என்று தெளி தேர்ந்து உணரின் வேந்தே – யசோதர:5 274/4
சிங்கம் வாய் பிளந்திடும் தெளி ஈது என்னவே – சூளாமணி:5 409/4
ஈனமொடு உறக்கம் காட்டியிடுவன் யான் தெளி இது என்றான் – சூளாமணி:9 1167/4
திருவத்தது என் பொருள் ஆதலை தேர தெளி இது என்றாள் – நீலகேசி:4 387/4
சிந்தமாயவும் உள என தெளி இனி எனலும் – நீலகேசி:5 481/3

TOP


தெளிக (2)

திட்பமாம் சிலையினாய் நீ தெளிக நாள் ஏழு சென்றால் – சூளாமணி:3 108/2
தீங்கு யான் உணர்த்திற்று உண்டோ திரு_அடி தெளிக என்றான் – சூளாமணி:5 305/4

TOP


தெளிகிற்பார் (1)

இங்கிருந்து நீ உரைத்தால் இவன் அருள் யார் தெளிகிற்பார்
அங்கு இருவர் உளர் எனினும் அவரின் முன் அவையீரே – நீலகேசி:2 189/2,3

TOP


தெளித்தது (1)

தெளித்தது செறி பொழில் தேம் பெய் மாரியே – சூளாமணி:8 1067/4

TOP


தெளித்தல் (1)

ஏங்கு நீர் அமிர்தின் தீர்த்தம் சென்றனர் தெளித்தல் அன்றே – சூளாமணி:8 971/3

TOP


தெளித்து (4)

செம் துணர் நறு மலர் தெளித்து தேவர்-மாட்டு – சூளாமணி:3 89/3
வாச நீர் தெளித்து அலர் பரப்பி வானகம் – சூளாமணி:3 93/1
நம்பிய ஒளியவாக தெளித்து நன்கு எழுதப்பட்டு – சூளாமணி:8 855/3
மணி தெளித்து அமைக்கப்பட்ட வண்ணமே வண்ணம் ஆக – சூளாமணி:8 1009/1

TOP


தெளிதரு (1)

தெளிதரு நல் காட்சியது திருந்திய மேல் நெடுந்தகையோர்க்கு – சூளாமணி:11 2057/3

TOP


தெளிந்த (12)

அகம் தெளிந்த வயந்தன் மனைவியாம் – உதயணகுமார:6 344/2
அங்கபூ ஆதி நூலுள் அரிப்பு அற தெளிந்த நெஞ்சில் – நாககுமார:1 2/2
சேர்ந்தவன் அளித்த ஓலை வாசகம் தெளிந்த பின் – நாககுமார:4 125/2
அறிவினில் தெளிந்த மாட்சி அரதனத்திரயம் என்னும் – யசோதர:1 51/3
சென்று இடை விலக்கி நின்று ஓர் தெளிந்த உணர்வு எழுந்தது அன்றே – யசோதர:2 123/4
தெருள் உடை மனத்தில் சென்ற தெளிந்த உணர்வு ஆய செல்வம் – யசோதர:4 244/1
சேய் இடை நிகழ்வது எல்லாம் சிந்தையில் தெளிந்த நீரான் – சூளாமணி:3 103/2
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால் – சூளாமணி:5 247/1
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி – சூளாமணி:5 247/3
தேவன் உரைப்ப தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம் – நீலகேசி:0 5/1
ஒருமையால் அறம் தெளிந்த உழ புலையர் முதலானார் – நீலகேசி:2 180/4
தேவன் என்று தெளியும் தெளிந்த பின் – நீலகேசி:2 210/2

TOP


தெளிந்தது (1)

சென்ற தன் பிறப்பு ஓர்ந்து தெளிந்தது
தின்றுதின்று துறக்கத்து இருத்துதல் – யசோதர:3 186/2,3

TOP


தெளிந்தது-தான் (1)

அரண் என்ன தெளிந்தது-தான் ஆருகதமே மன்னும் – நீலகேசி:4 284/2

TOP


தெளிந்தவாறு (1)

தெளிந்தவாறு எழுதி கொண்டு செம் துகில் உறையின் மூடி – சூளாமணி:8 1006/2

TOP


தெளிந்தவே (1)

மறு_அறு தியானமும் மதியகம் தெளிந்தவே – உதயணகுமார:6 361/4

TOP


தெளிந்தன (1)

திசை எலாம் தெளிந்தன தேவர் பொன் நகர் – சூளாமணி:3 73/1

TOP


தெளிந்தனன் (1)

சிகர மால் வரை தெளிந்தனன் திருவ மார்பினன் பின் – சூளாமணி:7 710/3

TOP


தெளிந்தாய் (1)

நன்று இனி தெளிந்தாய்_அல்லை நவில் இசை அமுத நல் யாழ் – யசோதர:4 246/2

TOP


தெளிந்தாய்_அல்லை (1)

நன்று இனி தெளிந்தாய்_அல்லை நவில் இசை அமுத நல் யாழ் – யசோதர:4 246/2

TOP


தெளிந்தார் (1)

அன்பு அதன்-கண் மிசையே என்று அடிகள் தரு பொருள் தெளிந்தார் – சூளாமணி:11 2060/4

TOP


தெளிந்தாலும் (1)

தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4

TOP


தெளிந்தான் (1)

சீலம் நல்லன சினவரன் திரு மொழி தெளிந்தான்
காலம் மூன்றினும் கடை_இல் பல் பொருள் உணர்வு உடையான் – நீலகேசி:1 48/1,2

TOP


தெளிந்து (5)

செம் தழல் பிறங்கல் அன்மை தெளிந்து சென்று அடைந்த அன்றே – சூளாமணி:4 165/4
தன் நிழல் தான் செய்வ செய்ய தான் தெளிந்து
இன் நிழல் இருந்தனன் இலங்கு நூலினான் – சூளாமணி:10 1600/3,4
சிங்க ஆசனத்து இருந்து தெளிந்து ஒளி மண்டிலம் நிழற்ற – நீலகேசி:2 157/2
தெள்ளியாய் தெளிந்து இருந்து சிந்தித்து காணாயோ – நீலகேசி:2 196/4
ஆத்தனே என தெளிந்து அவண் அமர்ந்திருந்தவர்க்கு – நீலகேசி:5 477/1

TOP


தெளிந்தே (1)

சொல வலார் அன சொல் தெளிந்தே நின்று – நீலகேசி:10 859/2

TOP


தெளிந்தேன் (1)

தேவன் உரைப்ப தெளிந்தேன் பின் தெளிந்த எல்லாம் – நீலகேசி:0 5/1

TOP


தெளிந்தோம் (1)

என்று இனி யாமும் தெளிந்தோம் இதனால் என உரைத்தாள் – நீலகேசி:5 520/3

TOP


தெளிப்ப (6)

தேன் மகிழ் தெரியலாய் நின் திரு குலம் தெளிப்ப வந்த – சூளாமணி:5 277/1
ஊன்றிய மகர பேழ் வாய் ஒளி முகம் தெளிப்ப வீழ்ந்து – சூளாமணி:8 850/1
செம்பொன் அம் களியில் செய்து சித்திரம் தெளிப்ப தீட்டி – சூளாமணி:8 855/1
மாடு அகம் தெளிப்ப வேய்ந்த மண்டப தலமும் வண்ண – சூளாமணி:8 856/3
சேய்மையான் நமக்கு ஒளிர் முத்தின் பரு வடம் தெளிப்ப ஒத்து உள பாவாய் – சூளாமணி:8 881/4
தெரு உடை திசைமுகம் தெளிப்ப தேர்த்து அரோ – சூளாமணி:10 1773/2

TOP


தெளிய (3)

தெளிய நாம் இதனை கண்டும் செய்வினை திறங்கள் ஓராம் – சூளாமணி:7 669/3
தெள்ளிதின் அவற்றையும் தெளிய செப்பினான் – சூளாமணி:10 1590/4
நின் நிழல் ஆவது தெளிய நின் தொழில் – சூளாமணி:10 1600/1

TOP


தெளியாது (1)

தெளியாது எதிர் வருவார் அயில் உருவா வகை செறியா – சூளாமணி:9 1310/4

TOP


தெளியாமல் (1)

தெளியாமல் இல்லை நின் திரு_அடிகள் மெய்ம்மை தெளிந்தாலும் செவ்வனே தெரிந்து உரைக்கல் ஆமே – சூளாமணி:11 1905/4

TOP


தெளியும் (1)

தேவன் என்று தெளியும் தெளிந்த பின் – நீலகேசி:2 210/2

TOP


தெளிர் (1)

தெளிர் முத்த மணலும் செம்பொன் சுண்ணமும் சிதர்ந்து தீம் தேன் – சூளாமணி:6 507/1

TOP


தெளிர்த்தார் (1)

காய் எரி விழித்தனர் களித்தனர் தெளிர்த்தார்
மா இரு விசும்பிடை மடுத்து மலைகுற்றார் – சூளாமணி:9 1288/3,4

TOP


தெளிர்ப்ப (2)

திட்டமிட்டு உருவ நுண் நூல் துகிலிகை தெளிர்ப்ப வாங்கி – சூளாமணி:10 1637/3
திருவொடு திசைமுகம் தெளிர்ப்ப தோன்றினான் – சூளாமணி:10 1722/1

TOP


தெளிவித்தான் (1)

தீது படு சீற்றம் ஒழி என்று தெளிவித்தான் – சூளாமணி:10 1616/4

TOP


தெளிவு (8)

சென்று நல் அறத்தில் தெளிவு இன்மையால் – யசோதர:1 17/2
நடுக்க-அது இன்றி நின்றாம் நல் அற தெளிவு சென்றாம் – யசோதர:1 62/4
இனையது தெளிவு_இலாதார் இரு நில அரசு செய்கை – யசோதர:2 160/3
அறி பொருள்-அதனில் தூய்மை அகத்து எழு தெளிவு காட்சி – யசோதர:4 241/2
செற்றமும் சினமும் நீக்கி திரு அற தெளிவு காதல் – யசோதர:4 253/2
சித்தம் தெளிவு_இலர் சீலம் அடைவு_இலர் – சூளாமணி:11 1972/3
வேட்கையதுவாம் தெளிவு என்றனர் வென்றவரே – நீலகேசி:1 121/4
தெளிவு உளது ஆம் செலவின் முடிவு என்னில் – நீலகேசி:5 606/2

TOP


தெளிவு_இலர் (1)

சித்தம் தெளிவு_இலர் சீலம் அடைவு_இலர் – சூளாமணி:11 1972/3

TOP


தெளிவு_இலாதார் (1)

இனையது தெளிவு_இலாதார் இரு நில அரசு செய்கை – யசோதர:2 160/3

TOP


தெளிவுறின் (1)

தெய்வ மனிதரவரை தெளிவுறின்
ஐய விசயனும் ஆழி வலவனும் – சூளாமணி:11 2019/1,2

TOP


தெளிவோடு (2)

ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவை உண்டார் – நீலகேசி:1 116/3
நைதல்_இல்லா தெளிவோடு நல் ஞானம் நானும் கொண்டேன் உன் நற்குணம் எல்லாம் – நீலகேசி:1 148/2

TOP


தெற்கில் (1)

உதய நல் கிரியும் கண்டே உற்று உடன் தெற்கில் சென்று – உதயணகுமார:5 251/1

TOP


தெற்ற (1)

தெற்ற உயிர் உண்மை செப்பத்தின் ஆம் என – நீலகேசி:4 370/2

TOP


தெற்றி (1)

தீயினால் சுடுதலும் தெற்றி ஏறி வீழ்தலும் – நீலகேசி:4 351/2

TOP


தெற்றென (4)

தெற்றென உண்பதும் தீமை தரும் என்னை – நீலகேசி:4 332/2
தெற்றென தீர்ந்து ஓர் பொருள் என்னை தேற்று இனி தேற்றலையேல் – நீலகேசி:4 388/3
சிறப்பு இனது என்பதை செப்பலும் தெற்றென
பிறப்பு அறுத்து இன்பு எய்தும் பெற்றியின் மிக்க – நீலகேசி:4 461/1,2
மன் உயிர் தெற்றென இல்லது மான் செருக்கு – நீலகேசி:7 735/1

TOP


தெற (1)

வெயில் தெற உணங்கியும் வெள்ளிடை நனைந்தும் ஊன் – நீலகேசி:4 350/1

TOP


தெறித்த (1)

திடுதிடு என்று ஒலி தெறித்த பேரிகை – உதயணகுமார:6 313/3

TOP


தெறு (3)

வெம் சுடர் தெறு தீ விச்சாதரர் என்பார் மிக்க நீரார் – சூளாமணி:6 525/1
சீற்றத்தால் தெறு தீ திரளே_அனான் – நீலகேசி:1 22/4
சென்றும் மறுகி தெறு தீ குணம் சேர்ந்தது அற்றேல் – நீலகேசி:4 414/3

TOP


தெறும் (2)

அயில் தெறும் நெடும்_கணாய் ஆவது இல்லை அல்லதும் – நீலகேசி:4 350/4
ஈயாய் நலியும் எறும்பாய் தெறும் எங்கும் – நீலகேசி:7 774/3

TOP


தெறுவன் (1)

சிங்கம் வாய் பக தெறுவன் என்பது – சூளாமணி:7 607/3

TOP


தென் (5)

தென் திசைக்-கண் சிறப்பொடு சென்றனன் – யசோதர:1 17/4
திருவ நீள் ஒளி தென் திசை சேடி மேல் – சூளாமணி:4 130/2
வாசம் உண்ட மாருதம் தென் வண்டு பாட மாட-வாய் – சூளாமணி:4 134/3
சேந்து எரித்திடுதும் என்று தென் மலை அரசர் சென்றார் – சூளாமணி:9 1187/3
திரு கிளர் மதில் உஞ்சை தென் திசை அகல் நகருள் – நீலகேசி:2 227/3

TOP


தென்-பால் (1)

தென்-பால் சேடியில் சீதரலோகத்தில் – உதயணகுமார:5 275/2

TOP


தென்திசை (1)

தேசம் தாம் பல திரிய அ தென்திசை நீலகேசி – நீலகேசி:1 44/3

TOP


தென்மலை (5)

தீது_அறு தென்மலை மாதிரம் முன்னுபு – சூளாமணி:7 651/1
சிகரமாய் இலங்கு சென்னி தென்மலை சாந்து மூழ்கி – சூளாமணி:10 1636/1
தென்மலை சந்தனம் செறிந்து தாமரை – சூளாமணி:10 1690/2
தென்மலை வளர்ந்த தெய்வ சந்தனம் திளைத்த மார்பன் – சூளாமணி:10 1789/3
தண் சுடரோன் வழி மருகன் தென்மலை மேல் சந்தனமும் செம்பொன் ஆரத்து – சூளாமணி:10 1814/3

TOP


தென்மலையார் (1)

தென்மலையார் திறன் மன்னவன் மன்னிய – சூளாமணி:9 1241/1

TOP


தென்முகத்தது (1)

தேற்றிய இரண்டினும் தென்முகத்தது
பாற்று_அரும் புகழினாய் பரத கண்டமே – சூளாமணி:5 391/3,4

TOP


தென்றல் (8)

குளிர் இளம் தென்றல் வீச கோல முற்றத்து பந்தை – உதயணகுமார:5 256/3
செம் துணர் அளைந்து தென்றல் திசைதிசை சென்று வீச – யசோதர:4 226/3
விரை மலர்ந்த துணர் வீசி விரை ஞாற வரு தென்றல்
புரவலன்-தன் திரு முடி மேல் போது அலர அசைத்ததே – சூளாமணி:4 172/3,4
தேன் அளாவு வண்டு கொண்டு தென்றல் சென்று எழுந்ததே – சூளாமணி:6 489/4
போது உலாய பூம் பொதும்பர் மேல தென்றல் வீசலால் – சூளாமணி:6 493/1
சாமரை பயந்த தென்றல் தகை முடி தாது சிந்த – சூளாமணி:8 969/2
தேம் துவலை வீசி உளர்கின்றது ஒரு தென்றல்
வேந்தர் உலகம்-கொல் மிசை விண்-கொல் இஃது என்று – சூளாமணி:8 1092/2,3
விரை ஏந்து தளிர் ஈனில் வேனில் தென்றல் அலர்தூற்ற – சூளாமணி:8 1126/3

TOP


தென்றலின் (1)

இணர் கொண்டு எதிர் எழு தென்றலின் எதிர்கொண்டது அ இடமே – சூளாமணி:6 438/4

TOP


தென்றலும் (2)

தென்றலும் செழும் மது திவலை மாரியும் – சூளாமணி:4 192/1
திணை வாய கருங்குவளை திளைத்து அசைக்கும் தென்றலும் ஒன்று உடைத்தே மாலை – சூளாமணி:8 1032/4

TOP


தென்றை (1)

தென்றை உளைய திசை-தான் உற போய காற்றேல் – நீலகேசி:6 719/1

TOP


தென்னென் (1)

தென்னென் தேன் நிமிர் திருநிலையகம் எனும் செறி பொழில்அது சேர்ந்தார் – சூளாமணி:8 889/4

TOP