கெ – முதல் சொற்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெட்ட 3
கெட்டக்-கண் 1
கெட்டது 1
கெட்டமைக்கேல் 1
கெட்டவன் 1
கெட்டன 1
கெட்டனன் 1
கெட்டால் 1
கெட்டு 5
கெட்டேன் 1
கெட 14
கெடல் 2
கெடல்-தான் 1
கெடலும் 1
கெடா 2
கெடாத 1
கெடின் 1
கெடினும் 1
கெடு 1
கெடுக 3
கெடுகின்றார் 1
கெடுத்தவனும் 1
கெடுத்தற்கு 1
கெடுப்பன் 1
கெடும் 5
கெடுமால் 1
கெடுமே 1
கெடுமேல் 1
கெடுமோ 1
கெடுவதன் 1
கெடுவது 1
கெடுவர் 1
கெடுவன 2
கெடுவார்களை 1
கெடூஉ 1
கெண்டிகை 1
கெண்டை 3
கெண்டையோடு 1
கெணிகை 1
கெர்ப்பமாதல் 1
கெழீஇயினர் 1
கெழு 33
கெழும 1
கெழுமி 2
கெழுமிய 1
கெழுமும் 1
கெழுவல் 1

கெட்ட (3)

கெட்ட திரட்சியும் தோன்றிய சாந்தும் பொருள் எனவும் – நீலகேசி:4 389/1
ஆற்று அ மகன் கெட்ட போழ்தே அமரில் – நீலகேசி:5 604/1
கெட்ட பின் ஆற்றல்கள் எல்லாம் வழியதற்கு – நீலகேசி:5 618/1
மேல்


கெட்டக்-கண் (1)

கந்தங்கள் எல்லாம் கடை அற கெட்டக்-கண்
அந்தம்_இலா குற்றம் ஆம் என சொல்லும் – நீலகேசி:5 603/1,2
மேல்


கெட்டது (1)

இன்மை முடியின் என் இட்டம் உரைப்பினும் கெட்டது என்னோ – நீலகேசி:5 501/2
மேல்


கெட்டமைக்கேல் (1)

விரியும் என அது வேண்டுகின்றாய் அற கெட்டமைக்கேல்
கரியும் உடையன் பயறொடு நீரும் கலந்து பெய்தால் – நீலகேசி:4 390/2,3
மேல்


கெட்டவன் (1)

அன்னணம் செய்தான் அறம் கெட்டவன் வழி – நீலகேசி:5 602/1
மேல்


கெட்டன (1)

குணங்களும் தொழில்களும் குழுமி கெட்டன
புணர்ந்து உடன் பொருள்-வயின் போந்தவாறும் நீ – நீலகேசி:8 810/2,3
மேல்


கெட்டனன் (1)

கெட்டனன் இது கேட்க வினை நிலை – நீலகேசி:5 545/4
மேல்


கெட்டால் (1)

அ வினை அற கெட்டால் அது விளையும் என்பதூஉம் – நீலகேசி:4 311/2
மேல்


கெட்டு (5)

மான் கடியும் நோக்கினாய் வழி அற கெட்டு ஒழிவதோ – நீலகேசி:2 181/4
உள்ளம்-தான் நின்றவற்றை உணர்ந்து அவற்றோடு அற கெட்டு இங்கு – நீலகேசி:2 196/2
இருமையும் கெட்டு உடன் ஆயின் கும்மாயமும் இல் அற்கல் நும் – நீலகேசி:4 391/3
அரக்கொடு பீசம் அற கெட்டு அ ஆற்றல் – நீலகேசி:5 601/1
தண் மதி கெட்டு அதன் சாயை உடன் பெறல் – நீலகேசி:5 608/1
மேல்


கெட்டேன் (1)

கேள் ஒருவன் வந்து இடை புகுந்து அரச கெட்டேன்
வாள் உருவுகின்றது என் மாதவன் முன் என்றான் – யசோதர:5 267/3,4
மேல்


கெட (14)

ஈனகத்து இருள் கெட இன்பம் எய்துமே – சூளாமணி:4 224/2
தான் அகத்து இருள் கெட தயங்குகின்றதே – சூளாமணி:4 224/4
சூழ் துயர் பல கெட சோதி மூர்த்தியாய் – சூளாமணி:5 394/2
மரம் கெட தின்று வாழும் களபக்கு மதிக்கல் ஆமோ – சூளாமணி:6 522/2
முறை கெட முளைப்பது ஓர் முனிவின் ஒள் எரி – சூளாமணி:7 681/3
அரி விசயம் கெட நின்ற ஆணை வேலான் – சூளாமணி:10 1838/2
முன் உபகாரி-தன்னை முதல் கெட முயலும் கீழ்மை – சூளாமணி:11 1844/3
செய்த தீமை கெட கடல் நாட்டில் சினவரன் நெறியே தெருட்டு என்றான் – நீலகேசி:1 148/4
பகை பசி பிணியொடு பரிவு இன பல கெட
முகை மலர் தளிரொடு முறி மரம் வெறிசெய – நீலகேசி:4 449/1,2
மனை இருள் நெறி பெற மதி கெட அடைவன – நீலகேசி:4 455/3
ஏத்துநர் கண்டாய் இரு_வினையும் கெட
பாத்து_இல் சிவகதி பான்மையர் என்றாள் – நீலகேசி:4 456/3,4
தன் வழி தோற்றி கெடுமோ அது கெட
பின் வழி தோற்றம் பெறுமோ இரண்டனுள் – நீலகேசி:5 629/1,2
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் – நீலகேசி:8 803/1
இருள் கெட நினைத்தலும் இனையை ஆகு என – நீலகேசி:8 821/4
மேல்


கெடல் (2)

பிறந்து பிறந்து நின் இச்சை கெடல் அன்றி பின் ஒன்றின் மேல் – நீலகேசி:5 511/1
ஒருங்கு புலம் தோன்றி அவை ஒத்த கெடல் ஆனால் – நீலகேசி:5 525/2
மேல்


கெடல்-தான் (1)

அற கெடல்-தான் அது என்னில் அட்டக வித்து வெந்து ஆம் – நீலகேசி:4 445/2
மேல்


கெடலும் (1)

பிறப்பித்து கேடும் பின் தோற்ற கெடலும்
இறப்பவும் கூடாது இரு திறத்தானும் – நீலகேசி:5 631/1,2
மேல்


கெடா (2)

எப்பாலும் தான் கெடா இல்லனவும் தோன்றா என்று – நீலகேசி:6 696/1
இல்லாத தோன்றா கெடா உள்ளன என்பாய் – நீலகேசி:6 698/1
மேல்


கெடாத (1)

எடுத்து உரை கெடாத முன்னம் கேசரன் இதனை சொன்னான் – சூளாமணி:6 562/4
மேல்


கெடின் (1)

ஓதின கந்தம் உடன் கெடின் வாசனை – நீலகேசி:5 622/3
மேல்


கெடினும் (1)

தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க என்பதனை – நீலகேசி:2 181/1
மேல்


கெடு (1)

துணிவு இது என நம துயர் கெடு முறைமையும் – நீலகேசி:4 452/2
மேல்


கெடுக (3)

பந்தித்தாகிய பழ_வினை கெடுக என படிற்றால் – நீலகேசி:1 58/2
கொன்ற பாவம் கெடுக என கையிட்டு – நீலகேசி:4 315/1
தந்து இங்கு உரைத்த உரை-தானும் கெடுக என்றான் – நீலகேசி:4 400/3
மேல்


கெடுகின்றார் (1)

வழி வாழ கெடுகின்றார் மாந்தருள் மேலாயார் – நீலகேசி:2 182/1
மேல்


கெடுத்தவனும் (1)

இரு_வினை கெடுத்தவனும் இன்ப_உலகு அடைந்தான் – நாககுமார:5 158/1
மேல்


கெடுத்தற்கு (1)

சொன்னதன் பொருள் எல்லாம் சுவடு இன்றி அற கெடுத்தற்கு
அன்னதே எனில் ஆதன் ஆழிநாட்டு ஆகாதோ – நீலகேசி:2 199/3,4
மேல்


கெடுப்பன் (1)

என்னை யான் கொடுத்தும் வையத்து இடுக்கண் நோய் கெடுப்பன் என்னும் – சூளாமணி:7 775/3
மேல்


கெடும் (5)

ஆதி தான் பெரியனாய் அற கெடும் அளவு எல்லாம் – நீலகேசி:2 176/1
தான் கெடும் அளவு எல்லாம் நினைந்து உரைத்த தத்துவம்-தான் – நீலகேசி:2 181/3
கேடு இலவாய குணத்தின் நிலையும் கெடும் குணத்தின் – நீலகேசி:4 380/1
நில்லாது அற கெடும் தோன்றிற்றும் தோற்றமும் – நீலகேசி:5 616/1
கெட கெடும் பொருள் எனில் கேடும் உண்டு எனப்படப்பெறும் – நீலகேசி:8 803/1
மேல்


கெடுமால் (1)

பக்கம் உடன் கெடுமால் என்னை பாவம் – நீலகேசி:5 605/4
மேல்


கெடுமே (1)

கெடுமே அவை கேட்டினும் வாள் கண் நல்லாய் – நீலகேசி:5 491/3
மேல்


கெடுமேல் (1)

வழி ஒன்று தோற்றி கெடுமேல் மக பெற்று – நீலகேசி:5 630/1
மேல்


கெடுமோ (1)

தன் வழி தோற்றி கெடுமோ அது கெட – நீலகேசி:5 629/1
மேல்


கெடுவதன் (1)

கெடுவதன் உள் நின்று தோன்றுவதன்-கண் – நீலகேசி:5 621/1
மேல்


கெடுவது (1)

கெடுவது தோற்றம் நிலையுதல்-தான் அ பொருள் எனவும் – நீலகேசி:4 392/3
மேல்


கெடுவர் (1)

அழுக்கு உடம்பிற்கே கெடுவர் ஆடவர்கள் அந்தோ – நீலகேசி:1 108/4
மேல்


கெடுவன (2)

கெடுவன தோன்றுவ நிற்பன-தாமும் குணம் என்றியேல் – நீலகேசி:4 392/1
கெடுவன தோன்றுவ நிற்பன-தாம் குணம் ஆயினக்கால் – நீலகேசி:4 392/2
மேல்


கெடுவார்களை (1)

இகழ்ச்சியில் கெடுவார்களை எண்ணுக – சூளாமணி:7 628/1
மேல்


கெடூஉ (1)

மஞ்சு இவர் மகிழம்-தன் வயவு நோய் கெடூஉ
பஞ்சு இவர் அல்குலார் பவழ வாயினால் – சூளாமணி:10 1588/2,3
மேல்


கெண்டிகை (1)

மண்டை கெண்டிகை மாடம் மடாமனை – நீலகேசி:5 532/1
மேல்


கெண்டை (3)

கெண்டை அம் சினை மேய்ந்து கிளர்ந்து போய் – சூளாமணி:1 28/1
கெண்டை கண் கிளரும் புருவம் சிலை – சூளாமணி:4 152/3
இட்ட வில் இரட்டையும் இரண்டு கெண்டை போல்பவும் – சூளாமணி:6 483/1
மேல்


கெண்டையோடு (1)

கெண்டையோடு நின்று அலைந்த கேழவாய் கிளர்ந்தவே – சூளாமணி:6 479/4
மேல்


கெணிகை (1)

கின்னரி மனோகரீ என் கெணிகை நல் கன்னிமாரும் – நாககுமார:2 54/1
மேல்


கெர்ப்பமாதல் (1)

நிறை_மதி முக நல் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறை-வயின் நோய் மீக்கூர பொருவு_இல் வான் கோள்கள் எல்லாம் – உதயணகுமார:1 15/1,2
மேல்


கெழீஇயினர் (1)

கிழவு எனும் எல்லை கெழீஇயினர் சார்ந்து – சூளாமணி:11 1987/3
மேல்


கெழு (33)

வளம் கெழு வத்தவற்கு மன்னிய காதல் மிக்க – உதயணகுமார:6 303/1
உளம் கெழு கற்பினார்கள் ஓதிமம் போலும் நீரார் – உதயணகுமார:6 303/2
கறை கெழு வேலினான் தன் காரிகை நீர் மேல் நிற்ப – நாககுமார:2 52/1
வளம் கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் – யசோதர:2 77/2
பன்னிய பவங்கள் தீர்க்கும் பயம் கெழு மொழிகள்-தம்மால் – சூளாமணி:4 204/2
உலம் கெழு வயிர திண் தோள் ஒளி முடி அரசன் செம்மல் – சூளாமணி:5 322/2
குலம் கெழு குரிசில் கண்டாய் கொண்டல் வான் உருமோடு ஒப்பான் – சூளாமணி:5 322/4
பொன் அருவி நூல் கெழு புரோகிதன் உரைத்தான் – சூளாமணி:6 444/4
கணம் கெழு கலாவம் ஒளி காலும் அகல் அல்குல் – சூளாமணி:6 452/1
ஈங்கு வாழிய இருள் கெழு முழையகத்து ஒளித்தாய் – சூளாமணி:7 719/1
கணம் கெழு களி வண்டு ஆல பாசடை கலந்த பொய்கை – சூளாமணி:7 758/3
வளம் கெழு குமரரை வலம்கொண்டு எய்தின – சூளாமணி:7 815/3
குணம் கெழு குல தலைவி கொண்டு மிசை புல்லி – சூளாமணி:8 864/2
இலைய நாடகத்து எழில் கெழு விமானம் அஃது இயல்கின்ற விசை-தன்னால் – சூளாமணி:8 888/1
கணம் கெழு கவரிகள் கலந்து காழ் அகில் – சூளாமணி:8 954/1
சினம் கெழு காலன் மற்றோர் காலன் மேல் சிவந்தது ஒப்பான் – சூளாமணி:9 1149/4
மருவிய மனித போரோ வான் கெழு தெய்வ போரோ – சூளாமணி:9 1181/2
சீர் கெழு விஞ்சையர் செம் தடி நுந்துபு – சூளாமணி:9 1240/3
நீர் கெழு வெள்ளம் நிரந்ததை அன்றே – சூளாமணி:9 1240/4
எண் திசை மருங்கும் இடைநிலத்திடையும் இருள் கெழு விசும்பினது அகமும் – சூளாமணி:9 1324/3
தோளையும் சுடர் கெழு நாஞ்சில் வாயினால் – சூளாமணி:9 1417/3
புலம் கெழு திரட்சிய புச்சம் தாழ்வன – சூளாமணி:9 1514/2
கலி கெழு கனை கடல் கலங்கி அன்னது ஓர் – சூளாமணி:10 1713/3
பலி கெழு முரசு ஒலி பரந்து ஒலித்ததே – சூளாமணி:10 1713/4
மங்குல் வான் மழை கெழு மின்னின் மன்னவன் – சூளாமணி:10 1729/1
மன் மலர்ந்து இலங்கு செய்கை வளம் கெழு மதுரை ஆள்வான் – சூளாமணி:10 1789/2
மருவி சயம் கெழு கோயில் மலர்ந்து புக்கான் – சூளாமணி:10 1838/4
படை கெழு தானைய பல் களி யானை – சூளாமணி:11 1997/3
குடை கெழு வேந்தர்கள் ஆகுவர் கோவே – சூளாமணி:11 1997/4
முடி கெழு மன்னர் முன் இறைஞ்ச நம்மை தம் – சூளாமணி:12 2103/1
படை கெழு புரிசை வெல்வார் புறம் நின்று பதின்மர் காக்க – சூளாமணி:12 2112/1
மிடை கெழு வினைவர் தானை மெலிய மேற்சென்றுவிட்டான் – சூளாமணி:12 2112/4
வளம் கெழு நெடு மதில் வாயில் யாவையும் – நீலகேசி:1 24/1
மேல்


கெழும (1)

கிளையவர் உவகையின் கெழும ஈன்றனள் – யசோதர:2 78/3
மேல்


கெழுமி (2)

மையலுற்று அழுந்தி நான்கு கதிகளுள் கெழுமி செல்வர் – யசோதர:4 238/3
அரசன் நகரார் குழுவும் கெழுமி
விரையும் புகையும் மலரும் பலியின் – சூளாமணி:8 1072/2,3
மேல்


கெழுமிய (1)

கேட்டலும் அடிகள் வாயில் கெழுமிய மொழிகள்-தம்மை – யசோதர:4 254/1
மேல்


கெழுமும் (1)

கிளைமையும் அனையதே கெழுமும் நம் உளம் அ – யசோதர:2 81/3
மேல்


கெழுவல் (1)

கிளர் ஒளி மாட கோயில் கின்னரர் கெழுவல் ஓவா – சூளாமணி:8 830/1

மேல்