ரா – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

ராச்சியத்திலே (1)

வாதாந்தம் உற்ற பல சத்திகளொடும் சத்தர் வாய்ந்து பணி செய்ய இன்ப மா ராச்சியத்திலே திரு_அருள் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே – திருமுறை6:25 17/3

மேல்


ராஜன் (1)

ஊன் மறந்த உயிரகத்தே ஒளி நிறைந்த ஒருவன் உலகம் எலாம் உடையவன் என்னுடைய நட ராஜன்
பால் மறந்த சிறிய இனம் பருவம்-அதின் மாலை பரிந்து அணிந்தான் தெரிந்த தனி பருவம்-இதில் பரியான் – திருமுறை6:23 9/1,2

மேல்


ராஜனடி (2)

அங்கு அயலார் அன்று பொன்_அம்பலத்து எங்கள் ஆனந்த தாண்டவ ராஜனடி – கீர்த்தனை:7 2/2
ஆனந்த தாண்டவ ராஜனடி நமை – கீர்த்தனை:9 4/1

மேல்


ராசிய (2)

பதி எலாம் கடந்து எவ்வணம் உய்வேன் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை2:92 1/4
படி அனேகமும் கடந்த சிற்சபையில் பரம ராசிய பரம்பர பொருளே – திருமுறை2:92 2/4

மேல்


ராசியத்தை (2)

சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை – திருமுறை6:49 18/1
சுத்த வேதாந்த பிரம ராசியத்தை சுத்த சித்தாந்த ராசியத்தை
தத்துவாதீத தனி பெரும் பொருளை சமரச சத்திய பொருளை – திருமுறை6:49 18/1,2

மேல்


ராசியம் (1)

செலா பரம ராசியம் சிவ_சிதம்பரம் சிவ_சிதம்பரம் – திருமுறை2:99 5/4

மேல்


ராசியமோ (1)

சுத்த வேதாந்த மவுனமோ அலது சுத்த சித்தாந்த ராசியமோ
நித்த நாதாந்த நிலை அனுபவமோ நிகழ் பிற முடிபின் மேல் முடிபோ – திருமுறை6:67 5/1,2

மேல்


ராம (5)

சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – கீர்த்தனை:41 6/2
சீராய தூய மலர் வாய நேய ஸ்ரீராம ராம எனவே – தனிப்பாசுரம்:17 1/2
இருமையும் என் உளத்து அமர்ந்த ராம நாமத்து என் அரசே என் அமுதே என் தாயே நின் – தனிப்பாசுரம்:18 1/3
வெவ் வினை தீர்த்து அருள்கின்ற ராம நாம வியன் சுடரே இ உலக விடய காட்டில் – தனிப்பாசுரம்:18 4/2
தேன் வண்ண செழும் சுவையே ராம நாம தெய்வமே நின் புகழை தெளிந்தே ஓதா – தனிப்பாசுரம்:18 5/2

மேல்


ராமனது (1)

ராமனது ஈசம் பெறும் நிராமயனே தோம் உள் – திருமுறை1:2 1/284

மேல்


ராமீசம் (1)

ராமீசம் வாழ் சீவ ரத்தினமே பூ மீது – திருமுறை1:2 1/400

மேல்