யோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (பாலகிருஷ்ணன் பிள்ளை பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோக 29
யோகத்தில் 1
யோகத்தின் 2
யோகத்தினை 1
யோகத்து 3
யோகத்துள்ளே 1
யோகம் 18
யோகம்_உடையார் 2
யோகமாய் 1
யோகமே 2
யோகமோ 1
யோகர் 12
யோகர்-தம் 1
யோகர்க்கு 1
யோகாதிசயங்கள் 1
யோகாந்த 9
யோகாந்தத்து 1
யோகாந்தம் 2
யோகானந்தம் 1
யோகி 1
யோகிகள் 1
யோகிகளும் 1
யோகியர் 4
யோகியர்-தம் 3
யோகியர்-தம்முடனே 1
யோகியர்கள் 1
யோகியராம் 1
யோகியராய் 1
யோகியருள் 1
யோகியா 1
யோகியே 1
யோகீச்சுரர் 1
யோகு 3
யோனி 2

யோக (29)

விட்டு அகன்ற யோக வினோதன் எவன் மட்டு அகன்ற – திருமுறை1:3 1/118
பெண் என்றால் யோக பெரியோர் நடுங்குவரேல் – திருமுறை1:3 1/783
நிற்பவருக்கு ஒளித்து மறைக்கு ஒளித்து யோக நீள் முனிவர்க்கு ஒளித்து அமரர்க்கு ஒளித்து மேலாம் – திருமுறை1:5 55/3
முன்னவனே அன்று நால்வர்க்கும் யோக முறை அறம்-தான் – திருமுறை2:58 5/2
பர யோக அனுபவத்தே அகம் புறம் தோன்றாத பரஞ்சோதியாகும் இணை பாத_மலர் வருந்த – திருமுறை4:2 59/1
யோக மலர் திரு_அடிகள் வருந்த நடந்து அருளி உணர்வு_இலியேன் பொருட்டாக இருட்டு இரவில் நடந்து – திருமுறை4:2 65/2
பூத வெளி கரண வெளி பகுதி வெளி மாயா போக வெளி மாமாயா யோக வெளி புகலும் – திருமுறை4:2 89/1
நவ யோக உரு முடி-கண் விளங்கிய நின் வடிவை நாய் கடையேன் நான் நினைத்த நாள் எனக்கே மனமும் – திருமுறை4:6 3/2
பவ யோக இந்தியமும் இன்ப மயமானபடி என்றால் மெய் அறிவில் பழுத்த பெரும் குணத்து – திருமுறை4:6 3/3
சிற்பர யோக திறத்தனடி அந்த – திருமுறை5:53 11/3
பதி பூசை முதல நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் ஈங்கு அசுத்த பாவனை அற சுத்த பாவனையில் நிற்கும் மெய்ப்பதி யோக நிலைமை-அதனான் – திருமுறை5:55 5/1
துய் தழை பரப்பி தழைந்த தருவே அருள் சுகபோக யோக உருவே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 4/4
தொண்டர் இதயத்திலே கண்டு என இனிக்கின்ற சுக யோக அனுபோகமே சுத்த சிவ சன்மார்க்க நிதியே அருள்_பெரும்_சோதி நடராச பதியே – திருமுறை6:25 13/4
நாட்டமுறு வைகறையில் என் அருகு அணைந்து என்னை நன்றுற எழுப்பி மகனே நல் யோக ஞானம் எனினும் புரிதல் இன்றி நீ நலிதல் அழகோ எழுந்தே – திருமுறை6:25 24/2
யோக மெய்ஞ்ஞானம் பலித்த போது உளத்தில் ஓங்கிய காட்சியே என்கோ – திருமுறை6:54 9/1
யோக சித்திகள் வகை உறு பல கோடியும் – திருமுறை6:65 1/243
நேற்றை வரையும் வீண் போது போக்கி இருந்தேன் நெறி அறியேன் நேரே இற்றை பகல் அந்தோ நெடும் காலமும் மெய் தவ யோக
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப அமுது உண்டு அழியா திரு_உருவம் அடைந்தேன் பெரிய அருள் சோதி – திருமுறை6:66 9/2,3
யோக மாந்தர்க்கு காலம் உண்டாகவே உரைத்தேன் – திருமுறை6:95 6/4
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:106 93/1
கணம் கொள் யோக சித்தி எலாம் காட்டும் கொடியே கலங்காத – திருமுறை6:107 6/3
தவ யோக பலமே சிவ ஞான நிலமே தலை ஏறும் அணியே விலையேறு மணியே – கீர்த்தனை:1 114/1
வாம ஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி – கீர்த்தனை:1 152/1
ஏக சதா சிவமே யோக சுகாகரமே ஏம பரா நலமே காம விமோசனமே – கீர்த்தனை:1 189/1
சபள யோக சர பூரக தாரக – கீர்த்தனை:1 208/2
சிற்பர யோக திறத்தனடி அந்த – கீர்த்தனை:10 11/3
ஏக பராபர யோக வெளிக்கு அப்பால் – கீர்த்தனை:17 76/1
ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி மாலையே – கீர்த்தனை:29 31/1
யோக பயனை முழுதும் அளித்தாய் மறுநாள் காலையே – கீர்த்தனை:29 31/2
போக வெளியில் கூத்தும் யோக வெளியுள் ஆட்டமும் – கீர்த்தனை:29 48/2

மேல்


யோகத்தில் (1)

ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:54 9/2

மேல்


யோகத்தின் (2)

யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை1:5 31/1
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை1:5 31/1

மேல்


யோகத்தினை (1)

ஞான யோகத்தினை நண்ணினோர்களும் – தனிப்பாசுரம்:2 18/1

மேல்


யோகத்து (3)

யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ – திருமுறை1:3 1/69
யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை1:5 31/1
இரவும்_பகலும் தூங்கிய என் தூக்கம் அனைத்தும் இயல் யோகத்து இசைந்த பலனாய் விளைந்தது நான் இரண்டு பொழுதும் உண்ட எலாம் – திருமுறை6:66 8/1

மேல்


யோகத்துள்ளே (1)

திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/4

மேல்


யோகம் (18)

பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம்
பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம் – திருமுறை1:1 2/28,29
சித்தி முற்ற யோகம் செழும் பொழிலில் பூவை செயும் – திருமுறை1:2 1/171
அஞ்சு அடக்கி யோகம் அமர்ந்து உலகின் வஞ்சம் அற – திருமுறை1:3 1/520
யோகம் என்றும் பற்பலவாம் யூகம் என்றும் மேகம் என்றும் – திருமுறை1:3 1/1154
யோகம் சுகம் என்றும் உண்டு இலை என்று ஆகம் செய் – திருமுறை1:3 1/1230
யோகம் பொருள் என்பார் ஊடு உறையேல் ஏகம் கொள் – திருமுறை1:3 1/1282
யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம் – திருமுறை1:8 151/1
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3
புன்னை இதழி பொலி சடையார் போக யோகம் புரிந்து_உடையார் – திருமுறை3:14 5/1
யோகம் பயில்வார் மோகம்_இலார் என்னே உனக்கு இங்கு இணங்குவரே – திருமுறை3:16 7/2
யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 4/2
சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும் – திருமுறை6:12 14/1
உரிய பெரும் பகுதியும் அ பகுதி முதல் குடிலை உளம்கொள் பரை முதல் சத்தி யோகம் எலாம் பொதுவில் – திருமுறை6:101 26/2
யோகம் கொடுத்தீரே வாரீர் – கீர்த்தனை:17 61/2
நன்றான சரிதம் எது நவிலுதி என்று உரைத்து அருள ஞான யோகம்
குன்றாத குண_குன்றே குறையாத குளிர் மதியே குருவே என்றும் – தனிப்பாசுரம்:2 33/2,3
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
சைவ யோகம் செய்வர் யானும் ஒரு கால் போன சைவ யோகம் செய்குவேன் – திருமுகம்:3 1/56
குரண்டகம் போன்று குறித்த யோகம்
செய்த பின்னர் சிறிது நேரம் – திருமுகம்:4 1/403,404

மேல்


யோகம்_உடையார் (2)

யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம் – திருமுறை1:8 151/1
யோகம்_உடையார் ஒற்றி_உளார் உற்றார்_அல்லர் உறும் மோக – திருமுறை3:13 9/3

மேல்


யோகமாய் (1)

யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ – திருமுறை1:3 1/69

மேல்


யோகமே (2)

யோகமே யோகத்தின் பயனே யோகத்து ஒரு முதலே யோகத்தின் ஓங்கும் தூய – திருமுறை1:5 31/1
எத்திக்கும் என் உளம் தித்திக்கும் இன்பமே என் உயிர்க்கு உயிர் ஆகும் ஓர் ஏகமே ஆனந்த போகமே யோகமே என் பெரும் செல்வமே நன் – திருமுறை5:55 30/1

மேல்


யோகமோ (1)

யோகமோ பிரிவோ ஒளி-அதோ வெளியோ உரைப்பது எற்றோ என உணர்ந்தோர் – திருமுறை6:67 6/3

மேல்


யோகர் (12)

அளவு_இறந்த நெடும் காலம் சித்தர் யோகர் அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம் – திருமுறை1:5 9/1
கோது அகன்ற யோகர் மன_குகையில் வாழும் குருவே சண் முகம் கொண்ட கோவே வஞ்ச – திருமுறை1:5 34/1
அளவை எலாம் கடந்து மனம் கடந்து மற்றை அறிவை எலாம் கடந்துகடந்து அமல யோகர்
உளவை எலாம் கடந்து பதம் கடந்து மேலை ஒன்று கடந்து இரண்டு கடந்து உணர சூழ்ந்த – திருமுறை1:5 36/1,2
எழுத்து அறிந்து தமை உணர்ந்த யோகர் உள்ளத்து இயல் அறிவாம் தருவினில் அன்பு எனும் ஓர் உச்சி – திருமுறை1:5 59/1
வர யோகர் வியப்ப அடியேன் இருக்கும் இடத்தே வந்து தெரு கதவு-தனை காப்பு அவிழ்க்க புரிந்து – திருமுறை4:2 59/2
உர யோகர் உளம் போல விளங்கும் மணி மன்றில் உயிர்க்கு இன்பம் தர நடனம் உடைய பரம் பொருளே – திருமுறை4:2 59/4
தவ யோகர் கண்டவிடத்து அவர்க்கு இருந்த வண்ணம் தன்னை இந்த வண்ணம் என என்னை உரைப்பதுவே – திருமுறை4:6 3/4
மாறாத பெரும் செல்வ யோகர் போற்றும் மா மணியே ஆறு முக மணியே நின் சீர் – திருமுறை5:44 6/1
தெருள் அமுத தனி யோகர் சிந்தையிலும் ஞான செல்வர் அறிவிடத்தும் நடம் செய்யும் நடராஜன் – திருமுறை6:23 4/1
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – கீர்த்தனை:41 1/26
திளைத்த யோகர் உளத்து ஓங்கி திகழும் துரியாதீதம் மட்டும் – தனிப்பாசுரம்:12 4/3
காழி-தனில் அன்று சுரர் முனிவர் சித்தர்கள் யோகர் கருது சமயாதிபர்களும் – தனிப்பாசுரம்:24 1/26

மேல்


யோகர்-தம் (1)

நித்தமும் தெரிந்து உற்ற யோகர்-தம் நிமலம் ஆகி மெய் நிறைவு கொண்ட சிற்சித்தமும் – திருமுறை2:99 5/3

மேல்


யோகர்க்கு (1)

திர யோகர்க்கு அரிது இதனை வாங்குக என்று எனது செங்கை-தனில் அளித்தாய் நின் திரு_அருள் என் என்பேன் – திருமுறை4:2 59/3

மேல்


யோகாதிசயங்கள் (1)

யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே – திருமுறை6:75 2/4

மேல்


யோகாந்த (9)

யோகாந்த மிசை இருப்பது ஒன்று கலாந்தத்தே உவந்து இருப்பது ஒன்று என மெய்யுணர்வு_உடையோர் உணர்வால் – திருமுறை4:2 75/1
ஆர்ந்த வேதாந்த பதி முதல் யோகாந்த பதி வரையும் அப்பாலும் – திருமுறை6:13 83/1
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம் உடனே நவில்கின்ற சித்தாந்தம் என்னும் ஆறு அந்தத்தின் ஞான மெய் கொடி நாட்டியே – திருமுறை6:25 17/1
நல்லார் சொல் யோகாந்த பதிகள் பல கோடி நாட்டியதோர் போதாந்த பதிகள் பல கோடி – திருமுறை6:60 10/1
ஞான யோகாந்த நட திரு_வெளி எனும் – திருமுறை6:65 1/35
பொருந்தி எலாம் செய வல்ல ஓர் சித்தி புண்ணிய வாழ்க்கையில் நண்ணி யோகாந்த
அரும் தவ வீதியில் ஆடச்செய்தீரே அருள்_பெரும்_ஜோதி என் ஆண்டவர் நீரே – திருமுறை6:69 7/3,4
போதாந்த நிலையும் உயர் யோகாந்த நிலையும் புனித கலாந்த பதியும் புகல்கின்றார் புகலும் – திருமுறை6:106 43/2
சீர் உலவா யோகாந்த நடம் திரு_கலாந்த திரு_நடம் நாதாந்தத்தே செயும் நடம் போதாந்த – திருமுறை6:106 64/3
யோகாந்த நடேச நமோநம – கீர்த்தனை:1 34/2

மேல்


யோகாந்தத்து (1)

ஏகாந்த நல் நிலை யோகாந்தத்து உள்ளது என்று – கீர்த்தனை:17 78/1

மேல்


யோகாந்தம் (2)

பொருள் பெரும் சுடர் செய் கலாந்த யோகாந்தம் புகன்ற போதாந்த நாதாந்தம் – திருமுறை6:64 20/1
பந்தம் எலாம் தவிர்த்து அருளி பதம் தரு யோகாந்தம் முதல் பகராநின்ற – கீர்த்தனை:28 6/1

மேல்


யோகானந்தம் (1)

ஆற்று விடயானந்தம் தத்துவானந்தம் அணி யோகானந்தம் மதிப்பு_அரு ஞானானந்தம் – திருமுறை6:2 10/1

மேல்


யோகி (1)

மா தேவருக்கும் மா தேவர் மௌன யோகி என்றாலும் – திருமுறை3:17 11/3

மேல்


யோகிகள் (1)

நல்லார் மெய்ஞ்ஞானிகள் யோகிகள் பிறரும் நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே – திருமுறை6:90 4/3

மேல்


யோகிகளும் (1)

கலை கடலை கடந்த முனி கணங்களும் மும்மலமாம் கரிசு அகன்ற யோகிகளும் கண்டுகொள மாட்டாது – திருமுறை6:101 11/1

மேல்


யோகியர் (4)

மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடி – திருமுறை1:5 60/2
ஞானம் படைத்த யோகியர் வாழ் நகராம் ஒற்றி நலத்தீர் மால் – திருமுறை1:8 80/1
ஓகை நாட்டிய யோகியர் பரவும் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:51 10/4
பூணும் தடம் தோள் பெருந்தகையே பொய்யர் அறியா புண்ணியமே போகம் கடந்த யோகியர் முப்போகம் விளைக்கும் பொன் புலமே – திருமுறை5:46 3/3

மேல்


யோகியர்-தம் (3)

சித்திக்கும் யோகியர்-தம் சிந்தை-தனில் தேன் போன்று – திருமுறை1:3 1/459
உலகம் எலாம் தனி நிறைந்த உண்மை ஆகி யோகியர்-தம் அநுபவத்தின் உவப்பாய் என்றும் – திருமுறை1:5 2/1
திரம் பழுத்த யோகியர்-தம் யோகத்துள்ளே தினம் பழுத்து கனிந்த அருள் செல்வ தேவே – திருமுறை1:5 42/4

மேல்


யோகியர்-தம்முடனே (1)

உன்னும் பரம யோகியர்-தம்முடனே மருவி உனை புகழ்வான் – திருமுறை5:21 3/2

மேல்


யோகியர்கள் (1)

யோகியர்கள் ஏத்திட வாழ் ஒப்புரவே போகி முதல் – திருமுறை1:2 1/546

மேல்


யோகியராம் (1)

யோகம்_உடையார் புகழ் ஒற்றியூரில் பரம யோகியராம்
தாகம் உடையார் இவர்-தமக்கு தண்ணீர் தர நின்றனை அழைத்தேன் – திருமுறை1:8 151/1,2

மேல்


யோகியராய் (1)

பேர் வாழ் ஒற்றி_வாணர் இவர் பேசா மௌன யோகியராய்
சீர் வாழ் நமது மனையினிடை சேர்ந்தார் விழைவு என் செப்பும் என்றேன் – திருமுறை1:8 33/1,2

மேல்


யோகியருள் (1)

போதமே போதம் எலாம் கடந்துநின்ற பூரணமே யோகியருள் பொலிந்த தேவே – திருமுறை1:5 28/4

மேல்


யோகியா (1)

யோகமாய் யோகியா யோகத்து எழுந்த சிவ – திருமுறை1:3 1/69

மேல்


யோகியே (1)

அரசு செலுத்தும் தனித்த தலைமை பரம யோகியே
பொருளாய் எனையும் உளம்கொண்டு அளித்த புனித நாதனே – கீர்த்தனை:29 50/2,3

மேல்


யோகீச்சுரர் (1)

யோகீச்சுரர் நின்று வந்து வணங்கு திருநாகீச்சுரம் – திருமுறை1:2 1/187

மேல்


யோகு (3)

மாகாளாத்து அன்பர் மனோலயமே யோகு ஆள – திருமுறை1:2 1/240
யோகு அறல் இலா தவத்தோர் உன்ன விளங்கு திரு_மாகறலில் – திருமுறை1:2 1/485
போகின்றாய் மீட்டும் புகுகின்றாய் யோகு இன்றி – திருமுறை1:3 1/550

மேல்


யோனி (2)

நிலை முற்ற யோனி நெருக்கில் உயிர்போய் – திருமுறை1:3 1/965
ஞானம் பழுத்து விழியால் ஒழுகுகின்ற நீர் நம் உலகில் ஒருவர் அலவே ஞானி இவர் யோனி வழி தோன்றியவரோ என நகைப்பர் சும்மா அழுகிலோ – தனிப்பாசுரம்:15 9/2

மேல்