நோ – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோக்க 3
நோக்கம் 9
நோக்கமும் 1
நோக்கமே 1
நோக்கற்கு 1
நோக்கா 1
நோக்காது 3
நோக்காதே 2
நோக்கி 55
நோக்கிட 1
நோக்கிடுவாள் 1
நோக்கிய 8
நோக்கியது 1
நோக்கியே 3
நோக்கில் 1
நோக்கினால் 2
நோக்கினிலே 1
நோக்கினுள் 1
நோக்கினேன் 5
நோக்கினையே 1
நோக்கு 9
நோக்கு_உடையார் 1
நோக்குக்கு 1
நோக்குக 1
நோக்குகின்ற 1
நோக்குகின்றோர்களை 1
நோக்கும் 6
நோக்கேன் 1
நோகின்றது 1
நோகும் 2
நோகேன் 2
நோதல் 2
நோம்-மினோ 1
நோய் 17
நோய்-தன்னை 1
நோய்-தனை 1
நோய்க்கு 2
நோய்க்கும் 1
நோய்கள் 2
நோய்களின் 1
நோய்களே 2
நோயால் 6
நோயில் 1
நோயின் 1
நோயினில் 1
நோயும் 4
நோயுற்ற 1
நோயை 6
நோவ 1
நோவது 2
நோவதுவும் 1
நோவதுவே 1
நோவனோ 1
நோவாத 1
நோவாதா 11
நோவாது 2
நோவாமே 1
நோவார் 2
நோவாரை 1
நோவு 3
நோவை 1
நோவையும் 1
நோற்ற 1
நோற்றவரும் 1
நோன்பு 4
நோன்மையோர் 1

நோக்க (3)

நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை3:3 1965/419
நூல் உணர்வாம் நுண்ணுணர்வின் நோக்க நடம் ஆடுகின்றாய் – திருமுறை4:29 2943/1
என்னே பிறர்-தம் வரவு நோக்க கண்கள் வெதும்புதே – திருமுறை6:112 5050/3

மேல்


நோக்கம் (9)

பெய்ய வல்ல நின் திரு_அருள் நோக்கம் பெற விழைந்தனன் பிற ஒன்றும் விரும்பேன் – திருமுறை2:46 1079/3
பாகு அனைய மொழியே நல் வேத வாக்கியம் அவர்கள் பார்வையே கருணை நோக்கம் பாங்கின் அவரோடு விளையாட வரு சுகம்-அதே பரம சுகம் ஆகும் இந்த – திருமுறை3:8 2418/2
ஏன் செய்தாய் என்பார் இல்லை மற்று எனக்கு உன் இன் அருள் நோக்கம் செய் போற்றி – திருமுறை4:2 2590/2
கல்லும் கனிய திரு_நோக்கம் புரியும் கருணை கடலே நான் – திருமுறை6:7 3333/1
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3633/2
ஆர்த்தானை அம்பலத்தில் ஆடாநின்ற ஆனந்த நடத்தானை அருள் கண் நோக்கம்
பார்த்தானை பாராரை பாராதானை பார்ப்பு அறவே பார்த்திருக்க பண்ணி என்னை – திருமுறை6:45 3948/2,3
சிற்றம்பலத்தான் திரு_அருள் பெற்றார் நோக்கம்
உற்றவரை உற்றவர்கள் உற்று – திருமுறை6:129 5524/3,4
திரு_அம்பலத்தான் திரு_நோக்கம் பெற்றார்க்கு – திருமுறை6:129 5526/3
பொய் குலம் பேசி புலம்பாதே பெண்ணே பூரண நோக்கம் பொருந்தினை நீ-தான் – திருமுறை6:138 5675/3

மேல்


நோக்கமும் (1)

பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும் – திருமுறை3:6 2253/3

மேல்


நோக்கமே (1)

நூல் வழி காட்டி என்னுளே விளங்கும் நோக்கமே ஆக்கமும் திறலும் – திருமுறை6:39 3878/2

மேல்


நோக்கற்கு (1)

நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை – திருமுறை2:25 840/1

மேல்


நோக்கா (1)

திடம் கொள் புகழ் கச்சூரிடம் சேர்ந்தீர் என்றேன் நின் நடு நோக்கா
குடம் சேர்ந்ததும் ஆங்கு அஃது என்றார் குடம் யாது என்றேன் அஃது அறிதற்கு – திருமுறை2:98 1790/2,3

மேல்


நோக்காது (3)

யாதொன்றும் நோக்காது அமைந்திடுக தீது என்ற – திருமுறை3:3 1965/1404
என் சிறுமை நோக்காது எனக்கு அருளல்வேண்டும் என்றே – திருமுறை3:4 2053/1
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி – திருமுறை6:13 3470/1

மேல்


நோக்காதே (2)

சொல் விளைவு நோக்காதே சொன்னது எலாம் எண்ணு-தொறும் – திருமுறை4:28 2912/1
மேல் விளைவு நோக்காதே வேறு சொன்னது எண்ணு-தொறும் – திருமுறை4:28 2913/1

மேல்


நோக்கி (55)

பேர் பூத்த நின் புகழை கருதி ஏழை பிழைக்க அருள்செய்வாயோ பிழையை நோக்கி
பார் பூத்த பவத்தில் உறவிடில் என் செய்கேன் பாவியேன் அந்தோ வன் பயம் தீரேனே – திருமுறை1:6 93/3,4
பாவ வாழ்க்கையில் பாவியேன் செய்திடும் பண்பு இலா பிழை நோக்கி
தேவரீர் மனது இரக்கமுற்றே அருள்செய்திடாது இருப்பீரேல் – திருமுறை1:15 222/1,2
கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி
எண்ணி எண்ணி நெஞ்சு அழிந்து கண்ணீர் கொளும் ஏழையேன்-தனக்கு இன்னும் – திருமுறை1:15 226/2,3
வாரேனோ திரு_தணிகை வழி நோக்கி வந்து என் கண்மணியே நின்று – திருமுறை1:16 233/1
மஞ்சு ஏர் பிணி மடி ஆதியை நோக்கி வருந்துறும் என் – திருமுறை1:31 365/1
மருளோர் எனினும் தமை நோக்கி வந்தார்க்கு அளித்தல் வழக்கு அன்றோ – திருமுறை2:1 574/3
ஈங்கு ஒடியாத அருள் கணால் நோக்கி ஏன் எனாது இருப்பதும் இயல்போ – திருமுறை2:9 654/4
சென்று தூது அருள் என்று இரங்குதல் நோக்கி சென்ற நின் கருணையை கருதி – திருமுறை2:35 947/2
தீது நோக்கி நீ செயிர்த்திடில் அடியேன் செய்வது என்னை நின் சித்தம் இங்கு அறியேன் – திருமுறை2:45 1071/2
ஏம_நெஞ்சினர் என்றனை நோக்கி ஏட நீ கடை என்றிடில் அவர் முன் – திருமுறை2:49 1111/3
வானை நோக்கி மண் வழி நடப்பவன் போல் வயங்கும் நின் அருள் வழியிடை நடப்பான் – திருமுறை2:61 1233/1
செய்ய மேல் ஒன்றும் அறிந்திலன் சிவனே தில்லை மன்றிடை தென் முகம் நோக்கி
உய்யவைத்த தாள் நம்பி நிற்கின்றேன் உனை அலால் எனை_உடையவர் எவரே – திருமுறை2:67 1313/3,4
பூண்டது உண்டு நின் புனித நல் ஒழுக்கே பூண்டது இல்லை என் புன்மையை நோக்கி
ஈண்ட வந்து அருளாய் எனில் அந்தோ என் செய்கேன் நரகிடை இடும் போதே – திருமுறை2:69 1330/3,4
கரம் நோக்கி நல் அமுது ஆக்கி நின் போற்றும் கருத்தினர் ஆதரம் – திருமுறை2:75 1417/2
நோக்கி உள் இருள் நீக்கி மெய்ஞ்ஞான தனி சுகம்-தான் – திருமுறை2:75 1417/3
வர நோக்கி ஆள் விழி மானே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1417/4
கூறாத வாழ்க்கை சிறுமையை நோக்கி குறித்திடும் என் – திருமுறை2:75 1479/1
நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே – திருமுறை2:86 1626/2
ஒரு மா_முகனை ஒரு மாவை ஊர் வாகனமாய் உற நோக்கி
திருமால் முதலோர் சிறுமை எலாம் தீர்த்து எம் இரு கண்மணியாகி – திருமுறை2:98 1771/1,2
முந்தை மறையோன் புகழ் ஒற்றி முதல்வர் இவர்-தம் முகம் நோக்கி
கந்தை_உடையீர் என் என்றேன் கழியா உன்றன் மொழியாலே – திருமுறை2:98 1787/1,2
விரிஞ்சு ஈர்தர நின்று உடன் கீழும் மேலும் நோக்கி விரைந்தார் யான் – திருமுறை2:98 1805/2
உடையார் துன்னல் கந்தை-தனை உற்று நோக்கி நகைசெய்தே – திருமுறை2:98 1812/3
அள்ளல் பழன திருவொற்றி அழகர் இவர்-தம் முகம் நோக்கி
வெள்ள சடையீர் உள்ளத்தே விருப்பு ஏது உரைத்தால் தருவல் என்றேன் – திருமுறை2:98 1878/1,2
பெரும் தாரணியோர் புகழ் ஒற்றி பெருமான் இவர்-தம் முகம் நோக்கி
அருந்தா அமுதம் அனையீர் இங்கு அடுத்த பரிசு ஏது அறையும் என்றேன் – திருமுறை2:98 1899/1,2
நூல் துறையில் நின்றவர்கள் நோக்கி மகிழ்வு எய்து திருப்பாற்றுறையில் – திருமுறை3:2 1962/119
நூல் தாயில் அன்பர்-தமை நோக்கி அருள்செய் திருக்காறாயில் – திருமுறை3:2 1962/365
சார்ந்தவர்க்கும் மற்று அவரை தான் நோக்கி வார்த்தை சொல – திருமுறை3:4 2006/3
தீங்கு_உடையாய் என்ன இவண் செய் பிழையை நோக்கி அருள் – திருமுறை3:4 2022/3
பேராத வஞ்ச பிழை நோக்கி யாரேனும் – திருமுறை3:4 2048/2
நின் பெருமை நோக்கி இங்கு நிற்கின்றேன் என் பெரும – திருமுறை3:4 2053/2
பின் ஒன்று அறியேன் பிழை நோக்கி என்னை – திருமுறை3:4 2067/2
பெற்றவளை காணாத பிள்ளை போல பேதுறுகின்றேன் செய்யும் பிழையை நோக்கி
இற்றவளை கேள் விடல் போல் விடுதியேல் யான் என் செய்வேன் எங்கு உறுவேன் என் சொல்வேனே – திருமுறை3:5 2151/3,4
பை ஏல் அரவு_அனையேன் பிழை நோக்கி பராமுகம் நீ – திருமுறை3:7 2404/3
தென் பால் நோக்கி இன்ப நடம் செய்யும் இறைவா சிறுவனுக்கா – திருமுறை4:10 2684/3
வள்ளல் அருள் திறம் நோக்கி நிற்கின்றேன் என் மன துயர் போம் வகை அருள மதித்திடாயே – திருமுறை4:12 2700/4
அன்னையினும் பரிந்து அருளி அணி கதவம் திறப்பித்து அங்கையில் ஒன்று அளித்து எனையும் அன்பினொடு நோக்கி
என்னை இனி மயங்காதே என் மகனே மகிழ்வோடு இருத்தி என உரைத்தாய் நின் இன் அருள் என் என்பேன் – திருமுறை5:2 3089/2,3
துன்பு அளிக்கும் நெஞ்சகத்து என்றனை கூவி அழைத்து தூய இளநகை முகத்தே துளும்ப எனை நோக்கி
முன்பு அளித்தது என்றனது கையில் ஒன்றை அளித்தாய் முன்னவ நின் அருள் பெருமை முன்ன அறியேனே – திருமுறை5:2 3123/3,4
மருள் உதிக்கும் மனத்தேனை வரவழைத்து நோக்கி மகிழ்ந்து எனது கரத்து ஒன்று வழங்கிய சற்குருவே – திருமுறை5:2 3132/3
நாடுகின்ற சிறியேனை அழைத்து அருளி நோக்கி நகை முகம் செய்து என் கரத்தே நல்கினை ஒன்று இதனால் – திருமுறை5:2 3146/3
என் வடிவம் தழைப்ப ஒரு பொன் வடிவம் தரித்தே என் முன் அடைந்து எனை நோக்கி இளநகைசெய்து அருளி – திருமுறை5:3 3161/1
முன்னுதற்கு ஓர் அணுத்துணையும் தரம் இல்லா சிறியேன் முகம் நோக்கி செழும் மண பூ முகம் மலர்ந்து கொடுத்தாய் – திருமுறை5:3 3169/2
என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம் – திருமுறை6:13 3468/1
பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள் – திருமுறை6:13 3470/1,2
தென் புடை ஓர் முகம் நோக்கி திரு_பொது நிற்கின்றோய் சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே – திருமுறை6:28 3763/4
கலைகள் ஓர் அனந்தம் அனந்தம் மேல் நோக்கி கற்பங்கள் கணக்கில கடப்ப – திருமுறை6:39 3874/1
தள்ளானை கொலை புலையை தள்ளாதாரை தழுவானை யான் புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானை கண்டு களித்து இருக்கின்றேனே – திருமுறை6:44 3936/3,4
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றானானை ஒரு சிறியேன்-தனை நோக்கி உளம் நீ அஞ்சேல் – திருமுறை6:44 3943/3
குழைத்தானை என் கையில் ஓர் கொடை_தந்தானை குறை கொண்டு நின்றேனை குறித்து நோக்கி
அழைத்தானை அருள் அமுதம் அளிக்கின்றானை அச்சம் எலாம் தவிர்த்தானை அன்பே என்-பால் – திருமுறை6:45 3952/2,3
வசை யாதும் இல்லாத மேல் திசை நோக்கி வந்தேன் என் தோழி நீ வாழி காண் வேறு – திருமுறை6:111 4953/2
பொது வளர் திசை நோக்கி வந்தனன் என்றும் பொன்றாமை வேண்டிடில் என் தோழி நீ-தான் – திருமுறை6:111 4955/3
தலையும் காலும் திரித்து நோக்கி தருக்கினேனையே – திருமுறை6:112 4979/1
இன்று நோக்கி ஓர_வாரன் என்பர் அன்பரே – திருமுறை6:112 5008/4
கல்லை நோக்கி கனிந்து பழுத்த கனி-அது ஆக்கியே – திருமுறை6:112 5022/1
கொலை தொழிலில் கொடியீர் நீர் செத்தாரை சுடுகின்ற கொடுமை நோக்கி
கலை தொழிலில் பெரியர் உளம் கலங்கினர் அ கலக்கம் எலாம் கடவுள் நீக்கி – திருமுறை6:135 5613/2,3
வியந்து வருகின்றது கண்டு உபசரியாது இங்கே மேல் நோக்கி இருப்பது என் நீ என்கின்றாய் தோழி – திருமுறை6:140 5691/2

மேல்


நோக்கிட (1)

பச்சிதாம் திரு_உரு பாவை நோக்கிட
மெச்சிதாகாரமா விளைப்பர் மெல் அடி – திருமுறை4:15 2782/2,3

மேல்


நோக்கிடுவாள் (1)

வம்பு அணி முலைகள் இரண்டும் நோக்கிடுவாள் வள்ளலை பரிகிலீர் என்பாள் – திருமுறை4:36 3004/3

மேல்


நோக்கிய (8)

பற்று நோக்கிய பாவியேன்-தனக்கு பரிந்து நீ அருள்_பதம் அளித்திலையே – திருமுறை2:49 1109/1
மற்று நோக்கிய வல்_வினை அதனால் வஞ்ச மாயையின் வாழ்க்கையின் மனத்தின் – திருமுறை2:49 1109/2
அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:49 1109/3
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:61 1233/3
தேனை நோக்கிய கொன்றை அம் சடையோய் திகழும் ஒற்றியூர் தியாக_நாயகனே – திருமுறை2:61 1233/4
நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து – திருமுறை3:9 2449/4
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4
நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3633/2

மேல்


நோக்கியது (1)

நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இறையும் இங்கு உண்டோ – திருமுறை6:20 3633/2

மேல்


நோக்கியே (3)

பொறுக்கினும் அன்றி என் பொய்மை நோக்கியே
வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் – திருமுறை2:5 612/1,2
அந்த உலகில் உள்ளார் பலரும் என்னை நோக்கியே
அப்பா வாழி எனவும் புரிந்தாய் அடிமையாக்கியே – திருமுறை6:112 5006/3,4
படி_உளோரும் வான்_உளோரும் இதனை நோக்கியே
பதியும் ஓர_வாரன் என்பர் பரிவு தேக்கியே – திருமுறை6:112 5035/3,4

மேல்


நோக்கில் (1)

பிழை புரிந்தனன் ஆகிலும் உமது பெருமை நோக்கில் அ பிழை சிறிது அன்றோ – திருமுறை2:41 1036/1

மேல்


நோக்கினால் (2)

உற்று நோக்கினால் உருகுது என் உள்ளம் ஒற்றி மேவிய உலகு_உடையோனே – திருமுறை2:49 1109/4
புரம் நோக்கினால் பொடி தேக்கிய ஒற்றி புனிதர் கள – திருமுறை2:75 1417/1

மேல்


நோக்கினிலே (1)

நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4

மேல்


நோக்கினுள் (1)

நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து – திருமுறை3:9 2449/4

மேல்


நோக்கினேன் (5)

ஊனை நோக்கினேன் ஆயினும் அடியேன் உய்யும் வண்ணம் நீ உவந்து அருள் புரிவாய் – திருமுறை2:61 1233/2
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 3564/2
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம நோக்கினேன் பொய்யர்-தம் உறவு – திருமுறை6:15 3564/2
சூழ் இயல் செஞ்சுடர் தோற்றுறு கீழ்-பால் தூய் திசை நோக்கினேன் சீர் திகழ் சித்தி – திருமுறை6:111 4952/2
தென் பாலே நோக்கினேன் சித்தாடுகின்ற திரு_நாள் இது தொட்டு சேர்ந்தது தோழி – திருமுறை6:111 4954/2

மேல்


நோக்கினையே (1)

நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை3:3 1965/1172

மேல்


நோக்கு (9)

கண்ணில் நண்ண அரும் காட்சியே நின் திரு கடைக்கண் நோக்கு அருள் நோக்கி – திருமுறை1:15 226/2
மானை நோக்கிய நோக்கு உடை மலையாள் மகிழ மன்றிடை மா நடம் புரிவோய் – திருமுறை2:61 1233/3
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை3:3 1965/419
நோக்க அரிய நோக்கு அழகும் நோக்கு ஆர் நுதல் அழகும் – திருமுறை3:3 1965/419
நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4
புலத்தவா எனது புலத்தவா தவிர்த்து பூரண ஞான நோக்கு அளித்த – திருமுறை6:26 3733/2
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கி கருணை நோக்கு அளித்து – திருமுறை6:98 4796/2
நவ நோக்கு அளித்தான் என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5274/3
மாண் ஆகம் பொன் ஆகம் ஆக வரம் பெற்றேன் வள்ளல் அருள் நோக்கு அடைந்தேன் கண்டாய் என் தோழி – திருமுறை6:142 5804/4

மேல்


நோக்கு_உடையார் (1)

நூல் மொழிக்கும் பொருட்கும் மிக நுண்ணியதாய் ஞான நோக்கு_உடையார் நோக்கினிலே நோக்கிய மெய்ப்பொருளே – திருமுறை5:6 3195/4

மேல்


நோக்குக்கு (1)

நோக்குக்கு அடங்கா அழகு_உடையார் நோக்கி என்னை அணைந்திலரே – திருமுறை2:86 1626/2

மேல்


நோக்குக (1)

உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிர் எலாம் விடுக என செப்பிய சிவமே – திருமுறை6:81 4615/969,970

மேல்


நோக்குகின்ற (1)

நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் – திருமுறை2:59 1216/1

மேல்


நோக்குகின்றோர்களை (1)

நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து – திருமுறை3:9 2443/4

மேல்


நோக்கும் (6)

நோக்கும் தொழில் ஓர்சிறிது உன்-பால் உளதேல் மாயா நொடிப்பு எல்லாம் – திருமுறை1:43 463/3
நுதலில் ஆர் அழல் கண்_உடையவனே நோக்கும் அன்பர்கள் தேக்கும் இன் அமுதே – திருமுறை2:61 1239/3
நோக்கும் திறத்து எழுந்த நுண் உணர்வாய் நீக்கம் இலா – திருமுறை3:3 1965/24
நோக்குகின்றோர்களை நோக்கும் மருந்து – திருமுறை3:9 2443/4
நோக்கிய நோக்கினுள் நோக்கும் மருந்து – திருமுறை3:9 2449/4
மண்ணை கட்டிக்கொண்டே அழுகின்ற இ மடைய பிள்ளைகள் வாழ்வினை நோக்கும் கால் – திருமுறை4:15 2778/3

மேல்


நோக்கேன் (1)

கண்_நுதலே நின் அடியார்-தமையும் நோக்கேன் கண்மணி மாலைக்கு எனினும் கனிந்து நில்லேன் – திருமுறை2:73 1371/1

மேல்


நோகின்றது (1)

ஏங்கி நோகின்றது எற்றினுக்கோ நீ எண்ணி வேண்டியது யாவையும் உனக்கு – திருமுறை2:20 785/1

மேல்


நோகும் (2)

வாசிக்க என்றால் என் வாய் நோகும் காசிக்கு – திருமுறை3:2 1962/658
வெந்நீரில் ஆட்டிடில் எம் மெய் நோகும் என்று அருளாம் – திருமுறை3:3 1965/365

மேல்


நோகேன் (2)

தரியேன் தணிகை-தனை காணேன் சாகேன் நோகேன் கும்பிக்கே – திருமுறை1:13 208/3
எங்கே போகேன் யாரொடு நோகேன் எது செய்கேன் – திருமுறை6:125 5344/3

மேல்


நோதல் (2)

நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே – திருமுறை2:64 1265/4
நோதல் புரிந்த சிறியேனுக்கு இரங்கி கருணை நோக்கு அளித்து – திருமுறை6:98 4796/2

மேல்


நோம்-மினோ (1)

விதியை நோம்-மினோ போம்-மினோ சமய வெப்பகத்தே – திருமுறை6:131 5554/4

மேல்


நோய் (17)

மருவு பெண்_ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோய் அற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் – திருமுறை1:1 8/3
சீர் கொண்ட நிறையும் உள் பொறையும் மெய் புகழும் நோய் தீமை ஒருசற்றும் அணுகா திறமும் மெய் திடமும் நல் இடமும் நின் அடியர் புகழ் செப்புகின்றோர் அடைவர் காண் – திருமுறை1:1 12/2
விலங்குறா பெரும் காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல் அழியா – திருமுறை2:37 992/3
அடியார்களுக்கே இரங்கி முனம் அடுத்த சுர_நோய் தடுத்தது போல் – திருமுறை2:76 1490/3
மாலை மலர்ந்த மையல் நோய் வசந்தம் அதனால் வளர்ந்தது ஐயோ – திருமுறை2:86 1612/3
ஆர்ந்து ஓங்கும் பரசிவமே எள்ளுறு நோய்
ஏய் அவலம் புரத்தை எண்ணாமல் எண்ணுகின்றோர் – திருமுறை3:2 1962/216,217
நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை3:2 1962/323
கண்டம் இது பொல்லா கடு நோய் எனும் குமரகண்டம் – திருமுறை3:3 1965/905
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை3:3 1965/913
சித்தம் நோய் செய்கின்ற சீத_நோய் வாதமொடு – திருமுறை3:3 1965/913
பித்த_நோய் கொண்டவர்-பால் பேர்ந்திலையோ மெத்து அரிய – திருமுறை3:3 1965/914
பிடி அளவு சாதமும் கொள்ளார்கள் அல்லது ஒரு பெண்ணை எனினும் கொள்கிலார் பேய் கொண்டதோ அன்றி நோய் கொண்டதோ பெரும் பித்து ஏற்றதோ அறிகிலேன் – திருமுறை3:8 2422/2
நோய் பொடியாக்கும் மருந்து அன்பர் – திருமுறை3:9 2449/3
புண் தரு இ நோய் தணிக்க புரை_இலியோய் யான் செய்யும் புன்மை-தானோ – திருமுறை3:21 2511/2
வெட்டை மாட்டி விடா பெரும் துன்ப நோய் விளைவது எண்ணிலர் வேண்டி சென்றே தொழு – திருமுறை4:15 2777/1
சேர்ப்பு இலதாய் எஞ்ஞான்றும் திரிபு இலதாய் உயிர்க்கே தினைத்தனையும் நோய் தரும் அ தீமை ஒன்றும் இலதாய் – திருமுறை6:57 4131/2
வன் மாலை நோய் செயுமே கேட்டிடவும் படுமோ மன்று ஆடி பதம் பாடிநின்று ஆடும் அவர்க்கே – திருமுறை6:142 5797/4

மேல்


நோய்-தன்னை (1)

என்னை கொடுத்தேன் பெண் பேய்கட்கு இன்பம் எனவே எனக்கு அவர் நோய்-தன்னை
கொடுத்தார் நான் அந்தோ தளர்ந்து நின்றேன் அல்லது செம்பொன்னை – திருமுறை2:34 938/1,2

மேல்


நோய்-தனை (1)

பவனே வெம் பவ நோய்-தனை தீர்க்கும் பரஞ்சுடரே – திருமுறை6:64 4273/1

மேல்


நோய்க்கு (2)

வன் புலைய வயிறு ஓம்பி பிறவி நோய்க்கு மருந்தாய நின் அடியை மறந்தேன் அந்தோ – திருமுறை1:7 105/2
விளைத்தனன் பவ நோய்க்கு ஏதுவாம் விடய விருப்பினை நெருப்பு உறழ் துன்பின் – திருமுறை2:6 628/1

மேல்


நோய்க்கும் (1)

நோய்க்கும் உறு துயர்க்கும் இலக்கானேன் மாழ்கி நொந்தேன் நின் அருள் காணேன் நுவலும் பாசத்து – திருமுறை1:6 98/2

மேல்


நோய்கள் (2)

வெய்ய நோய்கள் விலகுவது இல்லையே – திருமுறை2:64 1269/4
நோய்கள் கொண்டிடும் – திருமுறை2:71 1356/1

மேல்


நோய்களின் (1)

அற்று நோக்கிய நோய்களின் மூப்பின் அலைதந்து இ உலகம் படும் பாட்டை – திருமுறை2:49 1109/3

மேல்


நோய்களே (2)

நைவதற்கு நணுகுவ நோய்களே – திருமுறை2:64 1273/4
ஆற்ற நோய்களே – திருமுறை2:71 1355/4

மேல்


நோயால் (6)

நிந்தையுறும் நோயால் நிகழவைத்தல் நீதியதோ – திருமுறை2:16 723/3
சொல்லா மன_நோயால் சோர்வுற்று அலையும் அல்லல் – திருமுறை2:16 727/3
சண்ட பவ நோயால் தாய் இலா பிள்ளை என – திருமுறை2:54 1164/3
நோயால் மெலிந்து உன் அருள் நோக்குகின்ற நொய்யவனேன் – திருமுறை2:59 1216/1
நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை2:78 1505/4
அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயோ நான் – திருமுறை3:2 1962/807

மேல்


நோயில் (1)

நோதல் நேரும் வன் நோயில் சிறிதுமே – திருமுறை2:64 1265/4

மேல்


நோயின் (1)

தொல்லை நோயின் தொடக்கு-அது நீங்கலே – திருமுறை2:64 1270/4

மேல்


நோயினில் (1)

துள்ளுண்ட நோயினில் சூடுண்டு மங்கையர் தோய்வு எனும் ஓர் – திருமுறை1:3 49/2

மேல்


நோயும் (4)

வன் நோயும் வஞ்சகர்-தம் வன் சார்பும் வன் துயரும் – திருமுறை1:28 351/1
என் நோயும் கொண்டதனை எண்ணி இடிவேனோ – திருமுறை1:28 351/2
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை3:6 2217/2
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட – திருமுறை3:6 2306/2

மேல்


நோயுற்ற (1)

மாமாந்த நோயுற்ற குழவியில் குழைந்தீர் வாழ்க்கையிலே அற்ப மகிழ்ச்சியும் பெற்றீர் – திருமுறை6:132 5559/2

மேல்


நோயை (6)

நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனை – திருமுறை2:25 840/1
பொன் நேர் புரி சடை எம் புண்ணியனே என் நோயை
அன்னே நீ நீக்காயேல் ஆர் நீக்க வல்லாரே – திருமுறை2:63 1255/3,4
மேவா உழல்கின்ற வெண்மையேன் மெய் நோயை
சே ஆர் கொடி எம் சிவனே சிவனேயோ – திருமுறை2:63 1257/2,3
சிறியேன் அடியேன் தியங்க வந்த வல் நோயை
செறிவே பெறும் தொண்டர் சிந்தை-தனில் ஓங்கும் – திருமுறை2:63 1262/2,3
வன்பே செய்து உள்ளம் மயக்கி நின்ற வன் நோயை
இன்பே அருள்கின்ற என் ஆர்_உயிரே என் – திருமுறை2:63 1263/2,3
மருந்து ஏன் மையல் பெரு நோயை மறந்தேன் அவரை மறந்திலனே – திருமுறை2:82 1573/4

மேல்


நோவ (1)

நுந்தா விளக்கின் சுடர்_அனையார் நோவ நுதலார் கண்_நுதலார் – திருமுறை2:89 1655/2

மேல்


நோவது (2)

நோவது ஒழியா நொறில் காம வெப்பின் இடை – திருமுறை3:3 1965/583
நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி – திருமுறை6:10 3371/2

மேல்


நோவதுவும் (1)

நோவதுவும் கண்டு அயலில் நோக்கினையே தாவும் எனக்கு – திருமுறை3:3 1965/1172

மேல்


நோவதுவே (1)

நொடிக்கும்படிக்கு மிகும் காம நோயால் வருந்தி நோவதுவே – திருமுறை2:78 1505/4

மேல்


நோவனோ (1)

ஊழையே மிக நொந்திடுவேனோ உளத்தை நோவனோ உலகிடை மயக்கும் – திருமுறை2:69 1331/1

மேல்


நோவாத (1)

படிக்குள் நோவாத பண்பு_உடையோர் வாழ்த்தும் – திருமுறை3:2 1962/345

மேல்


நோவாதா (11)

என்_உடையாய் உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2939/2
என் அமுதே உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2940/2
புண்ணியனே உன்றனது பொன் அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2941/2
இன்பு உருவாம் உன்றன் இணை அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2942/2
மால் அறியா உன்றன் மலர் பாதம் நோவாதா – திருமுறை4:29 2943/2
வள்ளலே உன்றன் மலர்_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2944/2
தெய்வ மணியே திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2945/2
வல்லாரின் வல்லாய் மலர்_பாதம் நோவாதா – திருமுறை4:29 2946/2
சிவமே நினது திரு_அடி-தான் நோவாதா – திருமுறை4:29 2947/2
சிற்பரமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2948/2
செல்வமே உன்றன் திரு_மேனி நோவாதா – திருமுறை4:29 2949/2

மேல்


நோவாது (2)

ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:83 4631/1
நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் – திருமுறை6:136 5624/1

மேல்


நோவாமே (1)

விதியை நொந்து இன்னும் விழித்திருக்கின்றார் விழித்திருந்திடவும் நோவாமே
மதி_இலேன் அருளால் சுத்த சன்மார்க்க மன்றிலே வயங்கிய தலைமை – திருமுறை6:93 4733/2,3

மேல்


நோவார் (2)

குட்டம் என நோவார் குறித்திலையோ துட்ட வினை – திருமுறை3:3 1965/908
நொந்தால் உடன் நின்று நோவார் வினை பகை-தான் – திருமுறை3:3 1965/1015

மேல்


நோவாரை (1)

சூலை என நோவாரை சூழ்ந்திலையோ சாலவும் இ – திருமுறை3:3 1965/910

மேல்


நோவு (3)

ஏவில் வயப்பட்டால் எதிராதே நோவு இயற்றி – திருமுறை3:3 1965/568
கோ என்று அழுவார் குறித்திலையோ நோவு இன்றி – திருமுறை3:3 1965/968
ஏகமே பொருள் என்று அறிந்திலேன் பொருளின் இச்சையால் எருது நோவு அறியா – திருமுறை6:8 3343/2

மேல்


நோவை (1)

நோவது இன்று புதிது அன்றே என்றும் உளதால் இந்த நோவை நீக்கி – திருமுறை6:10 3371/2

மேல்


நோவையும் (1)

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:93 4736/2

மேல்


நோற்ற (1)

பொறுக்க தகும் கண்டாய் மேல் நோற்ற
மால்-தனக்கும் மெட்டா மலர்_கழலோய் நீ என்னை – திருமுறை3:2 1962/780,781

மேல்


நோற்றவரும் (1)

நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் – திருமுறை6:136 5624/1

மேல்


நோன்பு (4)

நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய் – திருமுறை3:6 2217/2
வெய்து அட்டி உண்ட விரதா நின் நோன்பு விருத்தம் என்றே – திருமுறை4:6 2630/3
ஓவாது உண்டு படுத்து உறங்கி உணர்ந்து விழித்து கதை பேசி உடம்பு நோவாது உளம் அடக்காது ஓகோ நோன்பு கும்பிட்டே – திருமுறை6:83 4631/1
நோவாது நோன்பு எனை போல் நோற்றவரும் எஞ்ஞான்றும் – திருமுறை6:136 5624/1

மேல்


நோன்மையோர் (1)

நோய் கரை உள் செய்யாத நோன்மையோர் சூழ்ந்த கடுவாய்க்கரையுள் – திருமுறை3:2 1962/323

மேல்