உ முதல் சொற்கள் பகுதி – 5, சங்க இலக்கியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உரையே 1
உரையொடு 3
உரையோடு 1
உரைஇ 14
உரைஇய 2
உரைஇயரோ 1
உரோகிணி 1
உல்கு 2
உலக்கும் 1
உலக்கை 13
உலக்கையால் 2
உலக்கையின் 1
உலக 1
உலகத்தான் 1
உலகத்தானும் 1
உலகத்தானே 5
உலகத்து 52
உலகத்தும் 2
உலகத்துள் 1
உலகத்துள்ளும் 1
உலகத்தோர்க்கு 1
உலகத்தோர்க்கே 1
உலகத்தோரே 1
உலகம் 53
உலகமும் 13
உலகமொடு 6
உலகமோடு 2
உலகில் 1
உலகிற்கு 1
உலகினும் 1
உலகினுள் 1
உலகு 29
உலகுடன் 3
உலகும் 2
உலகே 5
உலண்டின் 1
உலந்த 5
உலந்தமை 1
உலந்தன்று-கொல் 1
உலந்தன்றே 1
உலந்து 5
உலந்து-உழி 1
உலப்பு 1
உலம்பு-தொறு 1
உலம்பும் 1
உலம்வரும் 1
உலமந்தாய் 1
உலமந்து 2
உலமர 2
உலமரல் 4
உலமரும் 1
உலமருவோரே 3
உலர்ந்த 1
உலவு 1
உலவை 13
உலவையால் 1
உலறவும் 1
உலறி 5
உலறிய 11
உலறினும் 1
உலறு 4
உலறும் 1
உலா 1
உலாய் 3
உலை 17
உலை_கல் 2
உலைந்த 2
உலைந்து 1
உலையா 2
உலையாக 1
உலையாது 2
உலையின் 1
உலையே 1
உலைவன 1
உலைவு 6
உலைவும் 1
உலைஇய 2
உவ்வும் 2
உவ 11
உவக்குநள் 2
உவக்கும் 12
உவக்குவமே 1
உவகை 14
உவகைய 1
உவகையர் 8
உவகையள் 2
உவகையன் 4
உவகையின் 3
உவகையும் 1
உவகையேம் 1
உவகையொடு 2
உவகையோடு 1
உவணத்து 1
உவணம் 1
உவத்தல் 1
உவந்த 4
உவந்ததுவே 1
உவந்தன்றே 1
உவந்தனர் 1
உவந்தனள் 1
உவந்தனளே 1
உவந்திசின் 1
உவந்து 18
உவந்தே 1
உவந்தோய் 1
உவப்ப 28
உவப்பது 1
உவப்பான் 1
உவப்பென் 1
உவமம் 4
உவர் 10
உவர்க்கும் 1
உவர்ப்பு 1
உவரா 1
உவரி 3
உவல் 6
உவலை 10
உவவு 6
உவள் 1
உவற்றி 1
உவறு 1
உவன் 2
உவா 4
உவித்த 1
உவியல் 1
உழக்கவும் 1
உழக்கி 13
உழக்கிய 2
உழக்கியும் 1
உழக்கு 2
உழக்குநரும் 1
உழக்கும் 15
உழக்குவம் 1
உழத்தல் 3
உழத்தலின் 1
உழத்தலும் 1
உழந்த 34
உழந்த-காலை 1
உழந்ததன் 1
உழந்ததை 1
உழந்தமை 1
உழந்தன்று-மன்னே 1
உழந்தனள் 1
உழந்தனை-மன்னே 1
உழந்து 22
உழந்தே 2
உழப்ப 5
உழப்பது 2
உழப்பதும் 1
உழப்பவள் 1
உழப்பவன் 1
உழப்பவோ 3
உழப்பார் 1
உழப்பார்-கண் 1
உழப்பாரை 1
உழப்பாளை 1
உழப்பினும் 1
உழப்பேன் 1
உழப்போள் 2
உழல்வென்-கொல்லோ 1
உழல 1
உழலை 1
உழவ 4
உழவர் 34
உழவர்க்கு 1
உழவரொடு 1
உழவன் 4
உழவா 1
உழவின் 6
உழவு 4
உழவு-உறு 1
உழறல் 1
உழாதன 1
உழாது 1
உழாஅ 3
உழாஅது 3
உழி 1
உழிஞ்சில் 2
உழிஞை 8
உழிஞையன் 1
உழிஞையொடு 1
உழிஞையோடு 1
உழிதர 1
உழிதரும் 2
உழியது-கொல் 1
உழு 8
உழுஞ்சில் 3
உழுத்து 1
உழுத 13
உழுதாய் 1
உழுது 6
உழுதும் 1
உழுதோய் 1
உழுந்தின் 2
உழுந்தினும் 1
உழுந்து 3
உழும் 1
உழுவது 1
உழுவாய் 1
உழுவை 18
உழுவையும் 1
உழுவையை 1
உழுவையொடு 1

முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


உரையே (1)

கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/6
TOP


உரையொடு (3)

உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று – பரி 2/35
பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் – பரி 17/4
உரையொடு செல்லும் அன்பினர் பெறினே – அகம் 255/19
TOP


உரையோடு (1)

உரையோடு இழிந்து உராய் ஊர் இடை ஓடி – பரி 6/56
TOP


உரைஇ (14)

கடும் காற்று எடுப்ப கல் பொருது உரைஇ/நெடும் சுழி பட்ட நாவாய் போல – மது 378,379
விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ/மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் – நற் 257/1,2
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ/வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் – பதி 40/9,10
ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇ/போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப – பதி 71/9,10
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ/இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என – பதி 80/9,10
வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇ/போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/14,15
தண் தளிர் தரு படுத்து எடுத்து உரைஇ/மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் – பரி 18/22,23
வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே – கலி 115/7
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும் – அகம் 76/11
கடலினும் உரைஇ கரை பொழியும்மே – அகம் 128/4
ஏறுவது போல பாடு சிறந்து உரைஇ/நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – அகம் 139/3,4
காடு கவின் அழிய உரைஇ கோடை – அகம் 173/12
ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ/தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் – அகம் 222/7,8
போர்க்கு உரைஇ புகன்று கழித்த வாள் – புறம் 97/1
TOP


உரைஇய (2)

போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் – பரி 1/26
புயல்_ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/6
TOP


உரைஇயரோ (1)

ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/3
TOP


உரோகிணி (1)

உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா – நெடு 163
TOP


உல்கு (2)

உல்கு உடை பெரு வழி கவலை காக்கும் – பெரும் 81
உல்கு செய குறைபடாது – பட் 125
TOP


உலக்கும் (1)

உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
TOP


உலக்கை (13)

இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த – சிறு 193
குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 97
அவல் எறி உலக்கை பாடு விறந்து அயல – பெரும் 226
பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை/ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/1,2
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/19
அவல் எறி உலக்கை வாழை சேர்த்தி – பதி 29/1
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி – கலி 40/5
கோடு உலக்கை ஆக நல் சேம்பின் இலை சுளகா – கலி 41/2
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/12
பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கை/கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண்_குருகு – அகம் 141/18,19
வெள்ளி விழு தொடி மென் கருப்பு உலக்கை/வள்ளி நுண் இடை வயின்_வயின் நுடங்க – அகம் 286/1,2
தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி – அகம் 393/11
தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2
TOP


உலக்கையால் (2)

சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்/ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 43/3,4
குற்று ஆனா உலக்கையால்/கலி சும்மை வியல் ஆங்கண் – புறம் 22/18,19
TOP


உலக்கையின் (1)

மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/21
TOP


உலக (1)

உலக இடைகழி அறை வாய் நிலைஇய – புறம் 175/8
TOP


உலகத்தான் (1)

தருநரும் உளரோ இ உலகத்தான் என – அகம் 75/16
TOP


உலகத்தானும் (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7
TOP


உலகத்தானே (5)

என்னோரும் அறிப இ உலகத்தானே – நற் 226/9
மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/12
யான் அலது இல்லை இ உலகத்தானே/இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது – அகம் 268/9,10
மெய் யாண்டு உளதோ இ உலகத்தானே – அகம் 286/17
ஈன்மரோ இ உலகத்தானே – புறம் 74/7
TOP


உலகத்து (52)

இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து/ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 293,294
நில்லா உலகத்து நிலைமை தூக்கி – பொரு 176
மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32
நில்லா உலகத்து நிலைமை தூக்கி – பெரும் 466
பேர் உலகத்து மேஎம் தோன்றி – மது 133
எய் கணை நிழலின் கழியும் இ உலகத்து/காணீர் என்றலோ அரிதே அது நனி – நற் 46/2,3
பலரே மன்ற இ உலகத்து பிறரே – குறு 44/4
இருவேம் ஆகிய உலகத்து/ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/5,6
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே – குறு 99/3
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து/பொருளே மன்ற பொருளே – குறு 174/5,6
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே – குறு 199/8
இருண்டு தோன்று விசும்பின் உயர் நிலை உலகத்து/அருந்ததி அனைய கற்பின் – ஐங் 442/3,4
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து/அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/3,4
வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து/வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து – பதி 31/21,22
உயர்_நிலை_உலகத்து செல்லாது இவண் நின்று – பதி 54/10
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/19
நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து/இல்லோர் புன்கண் தீர நல்கும் – பதி 86/5,6
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து/தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/3,4
உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ – பதி 89/11
பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 22/3
மன்னா உலகத்து மன்னுவது புரைமே – கலி 54/20
குழவியை பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து/மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/4,5
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
தன் உயிர் போல தழீஇ உலகத்து/மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ – கலி 143/52,53
அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் – அகம் 55/14
இம்மை உலகத்து இசையொடும் விளங்கி – அகம் 66/1
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி – அகம் 178/16
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு உலகத்து/உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக – அகம் 258/12,13
இம்மை உலகத்து இல் என பன் நாள் – அகம் 311/6
செல்லும் உலகத்து செல்வம் வேண்டினும் – புறம் 18/13
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
மலர் தலை உலகத்து தோன்றி – புறம் 24/35
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து/வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/14,15
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
யானோ தஞ்சம் பெரும இ உலகத்து/சான்றோர் செய்த நன்று உண்டாயின் – புறம் 34/19,20
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து/அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/4,5
உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை – புறம் 50/15
ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து/வாழேம் என்றலும் அரிதே தாழாது – புறம் 53/9,10
புதுவது அன்று இ உலகத்து இயற்கை – புறம் 76/2
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் – புறம் 165/1
ஈவோர் அரிய இ உலகத்து/வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே – புறம் 171/14,15
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின் – புறம் 174/20
பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து/நின் தலை வந்த இருவரை நினைப்பின் – புறம் 213/3,4
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர் – புறம் 213/23
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறம் 214/8
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின் – புறம் 214/9
உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால் – புறம் 287/12
எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து/மன்பதை எல்லாம் தானாய் – புறம் 356/7,8
நில்லா உலகத்து நிலையாமை நீ – புறம் 361/20
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து/நிலவன்மாரோ புரவலர் துன்னி – புறம் 375/17,18
TOP


உலகத்தும் (2)

ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 24
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
TOP


உலகத்துள் (1)

கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் – கலி 125/1
TOP


உலகத்துள்ளும் (1)

மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ – பெரும் 410
TOP


உலகத்தோர்க்கு (1)

நீ வாழியர் இ உலகத்தோர்க்கு என – பதி 15/24
TOP


உலகத்தோர்க்கே (1)

வெம் திறல் வேந்தே இ உலகத்தோர்க்கே – பதி 37/13
TOP


உலகத்தோரே (1)

உலகத்தோரே பலர்-மன் செல்வர் – பதி 38/1
TOP


உலகம் (53)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161
நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு – முல் 1
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 197
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 471
புத்தேள்_உலகம் கவினி காண்வர – மது 698
நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/6
வந்தனன் வாழி தோழி உலகம்/கயம் கண் அற்ற பைது அறு காலை – நற் 22/8,9
நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் – நற் 196/5
உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/9
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய – நற் 327/6
உலகம் படைத்த காலை தலைவ – நற் 337/1
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம்/உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/9,10
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/2
ஏமாந்தன்று இ உலகம்/நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/7,8
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ – பதி 50/4
உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட – பதி 52/9
உலகம் தாங்கிய மேம்படு கற்பின் – பதி 59/8
நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் – பதி 63/18
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் – பதி 81/1
தாங்கி இ உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் – பரி 4/23
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின் – பரி 5/17
சிறந்தோர்_உலகம் படருநர் போல – பரி 19/11
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா – பரி 29/1
துளி மாறு பொழுதின் இ உலகம் போலும் நின் – கலி 25/28
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம்/புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – கலி 47/1,2
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – கலி 114/19
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை – கலி 141/11
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/18
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ – அகம் 273/8
மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு – அகம் 374/2
அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/18
மிக புகழ் உலகம் எய்தி – புறம் 66/7
நின்னை வியக்கும் இ உலகம் அஃது – புறம் 167/11
உண்டால் அம்ம இ உலகம் இந்திரர் – புறம் 182/1
மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம்/அதனால் யான் உயிர் என்பது அறிகை – புறம் 186/2,3
இன்னாது அம்ம இ உலகம்/இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே – புறம் 194/6,7
பெரிதே உலகம் பேணுநர் பலரே – புறம் 207/7
உயர்ந்தோர்_உலகம் எய்தி பின்னும் – புறம் 213/10
அன்னோனை இழந்த இ உலகம்/என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/12,13
நனம் தலை உலகம் அரந்தை தூங்க – புறம் 221/11
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி – புறம் 223/1
இறந்தோன் தானே அளித்து இ உலகம்/அருவி மாறி அஞ்சுவர கருகி – புறம் 224/11,12
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின் – புறம் 228/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் – புறம் 229/22
மேலோர்_உலகம் எய்தினன் எனாஅ – புறம் 240/6
உயர்_நிலை_உலகம் அவன் புக வார – புறம் 249/11
வாரா உலகம் புகுதல் ஒன்று என – புறம் 341/14
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8
TOP


உலகமும் (13)

நனம் தலை உலகமும் துஞ்சும் – குறு 6/3
விரி திரை பெரும் கடல் வளைஇய உலகமும்/அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும் – குறு 101/1,2
உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை – குறு 361/2
மாடோர் உறையும் உலகமும் கேட்ப – பதி 70/23
பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 2/3
மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை – பரி 3/20
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும்/ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/75,76
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும்/மூலமும் அறனும் முதன்மையின் இகந்த – பரி 13/24,25
மறுமை உலகமும் மறு இன்று எய்துப – அகம் 66/2
தானும் உண்ணான் உலகமும் கெடுமே – புறம் 184/11
வறும் தலை உலகமும் அன்றே அதனால் – புறம் 206/9
பொதுமை சுட்டிய மூவர் உலகமும்/பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் – புறம் 357/2,3
TOP


உலகமொடு (6)

முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு/உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் – மது 199,200
தொலையா நல் இசை உலகமொடு நிற்ப – மலை 70
இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப – மலை 541
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்ப – பதி 37/6
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் – புறம் 72/15
TOP


உலகமோடு (2)

தவாஅலியரோ இ உலகமோடு உடனே – பதி 14/22
நின்று நிலைஇயர் உலகமோடு உடனே – புறம் 56/25
TOP


உலகில் (1)

அரிது_செல்_உலகில் சென்றனன் உடம்பே – புறம் 260/21
TOP


உலகிற்கு (1)

உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
TOP


உலகினும் (1)

நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
TOP


உலகினுள் (1)

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
TOP


உலகு (29)

உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3
ஐது ஏகு அம்ம இ உலகு படைத்தோனே – நற் 240/1
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய – பதி 42/20
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
திரித்திட்டோன் இ உலகு ஏழும் மருள – பரி 5/35
உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் – பரி 8/4
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம் – பரி 11/34
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும் – பரி 29/2
போவார் ஆர் புத்தேள்_உலகு – பரி 34/4
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா – கலி 25/3
வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் – கலி 26/12
இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் – கலி 26/16
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது – கலி 121/1
தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தர – கலி 126/2
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
வேவது அளித்து இ உலகு/மெலிய பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் – கலி 142/54,55
உலகு கடப்பு அன்ன புள் இயல் கலி_மா – அகம் 64/2
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடை – அகம் 204/1
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் – அகம் 255/1
தயங்கு திரை பெரும் கடல் உலகு தொழ தோன்றி – அகம் 263/1
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே – புறம் 107/4
உலகு புக திறந்த வாயில் – புறம் 234/5
நினதே முந்நீர் உடுத்த இ வியன் உலகு அறிய – புறம் 382/17
உலகு காக்கும் உயர் கொள்கை – புறம் 400/7
TOP


உலகுடன் (3)

நனி இரும் பரப்பின் இ உலகுடன் உறுமே – ஐங் 409/4
உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை – அகம் 78/15
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் – புறம் 182/6
TOP


உலகும் (2)

ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும்/உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் – கலி 92/6,7
TOP


உலகே (5)

ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/102
எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே – கலி 103/79
தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே – அகம் 0/16
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
TOP


உலண்டின் (1)

மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் – கலி 101/15
TOP


உலந்த (5)

நின்ற வேனில் உலந்த காந்தள் – நற் 29/1
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
ஈன்று நாள் உலந்த மென் நடை மட பிடி – அகம் 85/6
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை – அகம் 139/6
உறை கழிந்து உலந்த பின்றை பொறைய – அகம் 345/14
TOP


உலந்தமை (1)

ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே – அகம் 22/21
TOP


உலந்தன்று-கொல் (1)

உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
TOP


உலந்தன்றே (1)

பாடு உலந்தன்றே பறை குரல் எழிலி – அகம் 23/2
TOP


உலந்து (5)

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை – நெடு 19
மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து என – நற் 333/1
உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி – அகம் 141/5
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து/அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/9,10
மாக விசும்பின் மழை தொழில் உலந்து என – அகம் 317/1
TOP


உலந்து-உழி (1)

உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
TOP


உலப்பு (1)

உலப்பு இன்று பெறினும் தவிரலர் – நற் 115/10
TOP


உலம்பு-தொறு (1)

ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
TOP


உலம்பும் (1)

புலி என உலம்பும் செம் கண் ஆடவர் – அகம் 239/3
TOP


உலம்வரும் (1)

உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 145/4
TOP


உலமந்தாய் (1)

உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை – கலி 76/17
TOP


உலமந்து (2)

அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து/எழில் எஞ்சு மயிலின் நடுங்கி சேக்கையின் – கலி 137/5,6
உலமந்து வருகம் சென்மோ தோழி – அகம் 106/9
TOP


உலமர (2)

உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/10
பொருந்து நோன் கதவு ஒற்றி புலம்பி யாம் உலமர/இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/2,3
TOP


உலமரல் (4)

உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை – அகம் 18/13
ஏற்று ஏக்கற்ற உலமரல்/போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே – அகம் 39/24,25
புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/10
TOP


உலமரும் (1)

கோடை வெம் வளிக்கு உலமரும்/புல் இலை வெதிர நெல் விளை காடே – அகம் 397/15,16
TOP


உலமருவோரே (3)

நல் தோள் மருவரற்கு உலமருவோரே – ஐங் 464/4
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே – புறம் 51/11
வாயா வன் கனிக்கு உலமருவோரே – புறம் 207/11
TOP


உலர்ந்த (1)

மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் – குறு 347/1
TOP


உலவு (1)

உலவு திரை ஓதம் வெரூஉம் – நற் 31/11
TOP


உலவை (13)

ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
உலவை ஆகிய மரத்த – நற் 62/9
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு – நற் 76/2
அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே – நற் 189/10
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
அலையா உலவை ஓச்சி சில கிளையா – நற் 341/4
அலங்கல் உலவை ஏறி ஒய்யென – குறு 79/3
அலந்தலை வேலத்து உலவை அம் சினை – பதி 39/12
புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவை/குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ் – அகம் 57/5,6
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ – அகம் 199/6
பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்து – அகம் 259/4
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை/வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/1,2
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
TOP


உலவையால் (1)

இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால்/துன்புறூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி 11/10,11
TOP


உலறவும் (1)

காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்/கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/20,21
TOP


உலறி (5)

உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி/பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் – அகம் 19/12,13
வேர் முழுது உலறி நின்ற புழல் கால் – அகம் 145/1
வினை அழி பாவையின் உலறி/மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே – அகம் 157/13,14
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
TOP


உலறிய (11)

உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் – திரு 47
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து – சிறு 18
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி – நெடு 138
கண் அழிந்து உலறிய பன் மர நெடு நெறி – நற் 224/9
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் – கலி 10/7
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/11
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முதுபாழ் – அகம் 167/10
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை – அகம் 293/1
நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் – புறம் 278/1
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/9
TOP


உலறினும் (1)

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
TOP


உலறு (4)

உலறு தலை உகாஅய் சிதர் சிதர்ந்து உண்ட – நற் 66/2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி – அகம் 285/10
TOP


உலறும் (1)

கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ – கலி 150/18
TOP


உலா (1)

நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் – அகம் 81/1
TOP


உலாய் (3)

கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 150
பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப – பட் 233
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் – புறம் 394/1
TOP


உலை (17)

மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன – பெரும் 207
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அகழும் – நற் 125/4
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த – நற் 133/9
உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/6
உயங்கு உயிர் மட பிடி உலை புறம் தைவர – குறு 308/4
ஊது உலை குருகின் உள் உயிர்த்து அசைஇ – அகம் 55/7
பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ – அகம் 141/15
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி – அகம் 202/6
புனல் குருதி உலை கொளீஇ – புறம் 26/9
உலை_கல் அன்ன வல்லாளன்னே – புறம் 170/17
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை – புறம் 261/8
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா – புறம் 393/7
காடி வெள் உலை கொளீஇ நீழல் – புறம் 399/3
TOP


உலை_கல் (2)

உலை_கல் அன்ன பாறை ஏறி – குறு 12/2
உலை_கல் அன்ன வல்லாளன்னே – புறம் 170/17
TOP


உலைந்த (2)

தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி – நற் 310/6
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – அகம் 349/5
TOP


உலைந்து (1)

உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
TOP


உலையா (2)

எறிவிடத்து உலையா செறி சுரை வெள் வேல் – அகம் 216/13
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே – புறம் 169/12
TOP


உலையாக (1)

நீர் உலையாக ஏற்றி மோர் இன்று – புறம் 159/11
TOP


உலையாது (2)

ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/19
TOP


உலையின் (1)

அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின்/இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/17,18
TOP


உலையே (1)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1
TOP


உலைவன (1)

நீல நிரை போது உறு காற்கு உலைவன போல் – கலி 83/12
TOP


உலைவு (6)

ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் – நற் 363/4
உலைவு இல் உள்ளமொடு வினை வலி-உறீஇ – அகம் 325/15
உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/14
TOP


உலைவும் (1)

உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி – புறம் 150/4
TOP


உலைஇய (2)

உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8
TOP


உவ்வும் (2)

அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும்/எ வயினோயும் நீயே – பரி 2/58,59
அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் – பரி 4/33
TOP


உவ (11)

உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/6
செல்க பாக நின் தேரே உவ காண் – நற் 242/6
உவ காண் தோழி அ வந்திசினே – குறு 367/3
அன்னாய் வாழி வேண்டு அன்னை உவ காண் – ஐங் 206/1
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
உவ காண் தோன்றும் குறும் பொறை நாடன் – அகம் 4/13
உவ இனி வாழி தோழி அவரே – அகம் 65/7
உவ இனி வாழிய நெஞ்சே மை அற – அகம் 87/12
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
உவ இனி வாழிய நெஞ்சே காதலி – அகம் 142/7
உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/15
TOP


உவக்குநள் (2)

உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் – அகம் 144/11
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் – அகம் 203/1
TOP


உவக்கும் (12)

அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்/முல்லை சான்ற கற்பின் – நற் 142/9,10
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும்/பெண்ணை வேலி உழை கண் சீறூர் – நற் 392/5,6
மடன் உடைமையின் உவக்கும் யான் அது – குறு 324/5
நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 9/20
ஈவாரை கொண்டாடி ஏற்பாரை பார்த்து உவக்கும்/சேய் மாட கூடலும் செவ்வேள் பரங்குன்றம் – பரி 34/1,2
உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே – கலி 45/24
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/18
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் – அகம் 231/2
ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும்/சின் நாள் கழிக என்று முன்_நாள் – அகம் 345/9,10
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்/அரும் பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர் – அகம் 389/12,13
பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் – புறம் 29/17
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்/வேங்கட வரைப்பின் வட புலம் பசித்து என – புறம் 391/6,7
TOP


உவக்குவமே (1)

பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
TOP


உவகை (14)

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை/திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என – மலை 318,319
மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர – குறு 336/1
உரிமை_மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப – பரி 8/121
தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி – பரி 24/6
செரு குறித்தாரை உவகை கூத்தாட்டும் – கலி 85/34
இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 105/62
பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/11
மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று – அகம் 56/13
ஊர் நணி தந்தனை உவகை யாம் பெறவே – அகம் 254/20
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் – அகம் 346/5
மெய்ம் மலி உவகை செய்யும் இ இகலே – புறம் 45/9
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை/ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் – புறம் 277/3,4
TOP


உவகைய (1)

ஏறு புணர் உவகைய ஊறு இல உகள – அகம் 234/11
TOP


உவகையர் (8)

கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து – நற் 49/5
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/8
நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதி பெயர – பதி 31/10
நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த – பதி 40/26
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
துணை புணர் உவகையர் பரத மாக்கள் – அகம் 30/3
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து – அகம் 83/4
பெயல் கண்மாறிய உவகையர் சாரல் – புறம் 143/4
TOP


உவகையள் (2)

ஊடல் அறியா உவகையள் போலவும் – பரி 7/18
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
TOP


உவகையன் (4)

வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/6
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா – கலி 40/32
பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து – அகம் 172/12
மெய் மலி உவகையன் அ நிலை கண்டு – அகம் 272/12
TOP


உவகையின் (3)

மெய்ம் மலி உவகையின் எழுதரு – குறு 398/7
பாடிய நாவின் பரந்த உவகையின்/நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே – பரி 19/26,27
கோதைமார்பன் உவகையின் பெரிதே – அகம் 346/25
TOP


உவகையும் (1)

செற்றமும் உவகையும் செய்யாது காத்து – மது 490
TOP


உவகையேம் (1)

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13
TOP


உவகையொடு (2)

வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் – அகம் 354/11
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/10
TOP


உவகையோடு (1)

ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
TOP


உவணத்து (1)

செ வாய் உவணத்து உயர் கொடியோயே – பரி 2/60
TOP


உவணம் (1)

விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்/அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/42,43
TOP


உவத்தல் (1)

உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1
TOP


உவந்த (4)

உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி – மலை 560
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் – குறு 225/3
பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/11
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த/இனிய உள்ளம் இன்னா ஆக – அகம் 98/2,3
TOP


உவந்ததுவே (1)

துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/23
TOP


உவந்தன்றே (1)

பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே – நற் 308/11
TOP


உவந்தனர் (1)

நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் – அகம் 107/6
TOP


உவந்தனள் (1)

குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் – அகம் 346/18
TOP


உவந்தனளே (1)

ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே – புறம் 278/9
TOP


உவந்திசின் (1)

வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள் – குறு 351/1
TOP


உவந்து (18)

காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து/ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 188,189
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து/சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற – குறு 41/1,2
கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா – பதி 20/8
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து/நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட – பதி 23/7,8
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து/குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/28,29
மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட – கலி 68/22
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/4
வருக-மாள என் உயிர் என பெரிது உவந்து/கொண்டனள் நின்றோள் கண்டு நிலை செல்லேன் – அகம் 16/10,11
வெள்ள தானை அதிகன் கொன்று உவந்து/ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/13,14
உவந்து இனிது அயரும் என்ப யானும் – அகம் 195/5
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து/ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/3,4
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த – புறம் 130/4
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ – புறம் 159/23
உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே – புறம் 197/18
தாழ் உவந்து தழூஉ மொழியர் – புறம் 360/6
புண் உவந்து/உளை அணி புரவி வாழ்க என – புறம் 373/13,14
சிறிதிற்கு பெரிது உவந்து/விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/17,18
TOP


உவந்தே (1)

உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே – கலி 118/25
TOP


உவந்தோய் (1)

என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் – கலி 85/32
TOP


உவப்ப (28)

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு – திரு 1
நட்டோர் உவப்ப நடை பரிகாரம் – சிறு 104
பாணர் உவப்ப களிறு பல தரீஇ – மது 219
கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ – மது 220
கணவர் உவப்ப புதல்வர் பயந்து – மது 600
வளையோர் உவப்ப தருவனர் சொரிதலின் – மலை 410
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/9
என்னும் நாணும் நல்_நுதல் உவப்ப/வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/5,6
செறி_தொடி உள்ளம் உவப்ப/மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/2,3
பையுள் நெஞ்சின் தையல் உவப்ப/நுண் புரி வண் கயிறு இயக்கி நின் – ஐங் 489/3,4
துப்பு துவர் போக பெரும் கிளை உவப்ப/ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/5,6
பனி சுரம் படரும் பாண்_மகன் உவப்ப/புல் இருள் விடிய புலம்பு சேண் அகல – பதி 59/3,4
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப/சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/2,3
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப/பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/20,21
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
மனை முதல் வினையொடும் உவப்ப/நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே – அகம் 51/13,14
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப/செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/12,13
பெரும் தளர்ச்சி பலர் உவப்ப/பிறிது சென்று மலர் தாயத்து – புறம் 17/21,22
பண்டும்_பண்டும் பாடுநர் உவப்ப/விண் தோய் சிமைய விறல் வரை கவாஅன் – புறம் 151/1,2
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப/உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் – புறம் 159/21,22
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப/அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் – புறம் 171/6,7
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப/ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/8,9
இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே – புறம் 213/18
பாண் உவப்ப பசி தீர்த்தனன் – புறம் 239/17
பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப/மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/6,7
அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை – புறம் 396/24
TOP


உவப்பது (1)

எல்லாரும் உவப்பது அன்றியும் – புறம் 195/8
TOP


உவப்பான் (1)

வாழ்த்து உவப்பான் குன்றின் வகை – பரி 19/66
TOP


உவப்பென் (1)

உற்ற நின் விழுமம் உவப்பென்/மற்றும் கூடும் மனை மடி துயிலே – நற் 360/10,11
TOP


உவமம் (4)

எ வகை செய்தியும் உவமம் காட்டி – மது 516
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
பிறர்க்கு உவமம் தான் அல்லது – புறம் 377/10
தனக்கு உவமம் பிறர் இல் என – புறம் 377/11
TOP


உவர் (10)

வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் – நற் 52/5
உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8
உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை – நற் 138/1
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
கல்லுறுத்து இயற்றிய வல் உவர் படுவில் – அகம் 79/3
உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி – அகம் 136/19
உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/4
உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி – அகம் 390/1
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் – புறம் 142/2
கல் அறுத்து இயற்றிய வல் உவர் கூவல் – புறம் 331/1
TOP


உவர்க்கும் (1)

வெய்ய உவர்க்கும் என்றனிர் – குறு 196/5
TOP


உவர்ப்பு (1)

கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய – அகம் 89/8
TOP


உவரா (1)

உவரா ஈகை துவரை ஆண்டு – புறம் 201/10
TOP


உவரி (3)

வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை – பெரும் 98
உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
TOP


உவல் (6)

அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை – நற் 282/7
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை – குறு 77/3
உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் – குறு 297/4
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8
நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலை – புறம் 314/3
TOP


உவலை (10)

உவலை கூரை ஒழுகிய தெருவில் – முல் 29
உவலை கண்ணி வன் சொல் இளைஞர் – மது 311
உவலை கூவல் கீழ – ஐங் 203/3
உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை – பதி 28/12
உவலை கூரா கவலை இல் நெஞ்சின் – பதி 85/11
ஊறாது இட்ட உவலை கூவல் – அகம் 21/23
உவலை கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் – அகம் 159/10
உவலை சூடிய தலையர் கவலை – அகம் 291/13
பாசிலை தொடுத்த உவலை கண்ணி – புறம் 54/10
உவலை கண்ணி துடியன் வந்து என – புறம் 269/6
TOP


உவவு (6)

உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93
அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி – பரி 10/76
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/9
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை – புறம் 3/1
உச்சி நின்ற உவவு மதி கண்டு – புறம் 60/3
உவவு தலைவந்த பெரு நாள் அமையத்து – புறம் 65/6
TOP


உவள் (1)

பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123
TOP


உவற்றி (1)

ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு – அகம் 3/8
TOP


உவறு (1)

உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
TOP


உவன் (2)

உவன் வரின் எவனோ பாண பேதை – நற் 127/3
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன்/நாணாள் அவனை இ நாரிகை என்மரும் – பரி 12/55,56
TOP


உவா (4)

அரசு உவா அழைப்ப கோடு அறுத்து இயற்றிய – பதி 79/13
எண் மதி நிறை உவா இருள் மதி போல – பரி 11/37
உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 97/25
மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா/சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை – புறம் 374/10,11
TOP


உவித்த (1)

சாந்த விறகின் உவித்த புன்கம் – புறம் 168/11
TOP


உவியல் (1)

நெடு வாளை பல் உவியல்/பழம் சோற்று புக வருந்தி – புறம் 395/4,5
TOP


உழக்கவும் (1)

சினம் சிறந்து களன் உழக்கவும்/மா எடுத்த மலி குரூஉ துகள் – மது 48,49
TOP


உழக்கி (13)

அரசு பட அமர் உழக்கி/முரசு கொண்டு களம் வேட்ட – மது 128,129
சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி/தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து – பரி 5/2,3
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி/களிறு போர் உற்ற களம் போல நாளும் – பரி 10/109,110
நறு வடி மாவின் பைம் துணர் உழக்கி/குலை உடை வாழை கொழு மடல் கிழியா – கலி 41/14,15
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த – கலி 86/8
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி 106/20
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி/ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/20,21
திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து – அகம் 210/5
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது – அகம் 256/6
அரைசு பட அமர் உழக்கி/உரை செல முரசு வௌவி – புறம் 26/6,7
பிணன் அழுங்க களன் உழக்கி/செலவு அசைஇய மறு குளம்பின் நின் – புறம் 98/5,6
TOP


உழக்கிய (2)

மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12
TOP


உழக்கியும் (1)

அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்/பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102
TOP


உழக்கு (2)

வெதிர் உழக்கு நாழியால் சேதிகை குத்தி – கலி 96/27
உழக்கு குருதி ஓட்டி – புறம் 353/13
TOP


உழக்குநரும் (1)

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும்/கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/53,54
TOP


உழக்கும் (15)

துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும்/பணை தோள் அரும்பிய சுணங்கின் கணை கால் – நற் 262/5,6
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும்/நல்_நுதல் பசலை நீங்க அன்ன – குறு 48/4,5
பெய்ய உழக்கும் மழை கா மற்று ஐய – பரி 9/34
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ – பரி 17/41
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் – கலி 38/9
புகர் முக களிறொடு புலி பொருது உழக்கும் நின் – கலி 45/12
கோடு அழிய கொண்டானை ஆட்டி திரிபு உழக்கும்/வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று – கலி 104/41,42
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி – கலி 126/20
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து – அகம் 285/2
ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து – அகம் 307/5
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் – அகம் 388/17
அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை – புறம் 146/7
அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் – புறம் 161/14
வாள் தக வைகலும் உழக்கும்/மாட்சியவர் இவள் தன்னைமாரே – புறம் 342/14,15
TOP


உழக்குவம் (1)

நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
TOP


உழத்தல் (3)

அரும் படர் உழத்தல் யாவது என்றும் – ஐங் 486/2
இ நோய் உழத்தல் எமக்கு – கலி 72/26
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல்/சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் – அகம் 173/5,6
TOP


உழத்தலின் (1)

அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் என – நற் 381/1
TOP


உழத்தலும் (1)

அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2
TOP


உழந்த (34)

பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பொரு 44
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்று – சிறு 3
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின் – மது 731
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட – மலை 437
அல்கு படர் உழந்த அரி மதர் மழை கண் – நற் 8/1
உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் – நற் 63/1
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய – நற் 135/6
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் – நற் 335/9
பெரும் பெயல் உழந்த இரும் பிணர் துறுகல் – குறு 13/2
நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த/குறும் கை இரும் புலி கொலை வல் ஏற்றை – குறு 141/4,5
முனி படர் உழந்த பாடு இல் உண்கண் – குறு 357/1
தொல் பசி உழந்த பழங்கண் வீழ – பதி 12/15
படும் திரை பனி கடல் உழந்த தாளே – பதி 41/27
கடலொடு உழந்த பனி துறை பரதவ – பதி 48/4
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் – பரி 7/13
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி – கலி 134/17
என்றூழ் உழந்த புன் தலை மட பிடி – அகம் 43/3
மற புலி உழந்த வசி படு சென்னி – அகம் 119/16
வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை – அகம் 204/3
கழி படர் உழந்த பனி வார் உண்கண் – அகம் 234/16
திரை சுரம் உழந்த திண் திமில் விளக்கில் – அகம் 240/5
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
நீடு வெயில் உழந்த குறி இறை கணை கால் – அகம் 335/12
உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு – அகம் 379/24
வாள் அமர் உழந்த நின் தானையும் – புறம் 161/31
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/11
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் – புறம் 378/13
TOP


உழந்த-காலை (1)

அரும் துயர் உழந்த-காலை/மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/10,11
TOP


உழந்ததன் (1)

அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே – புறம் 378/24
TOP


உழந்ததை (1)

மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை/என ஆங்கு – கலி 132/19,20
TOP


உழந்தமை (1)

ஏவல் உழந்தமை கூறும் – பரி 1/12
TOP


உழந்தன்று-மன்னே (1)

நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
TOP


உழந்தனள் (1)

அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால் – ஐங் 242/2
TOP


உழந்தனை-மன்னே (1)

நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
TOP


உழந்து (22)

இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து/நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 80,81
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி – மது 222
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
பெயல் உழந்து உலறிய மணி பொறி குடுமி – நற் 357/5
நோய் உழந்து உறைவியை நல்கலானே – குறு 400/7
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து/வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் – பரி 6/101,102
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை – கலி 53/21
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
செல்வேன் விழுமம் உழந்து/என ஆங்கு பாட அருள்-உற்று – கலி 146/50,51
நீ உழந்து எய்தும் செய்_வினை பொருள்_பிணி – அகம் 51/8
நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து/ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/4,5
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய – அகம் 127/2
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு – அகம் 190/1
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து/யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/9,10
களன் உழந்து அசைஇய மறு குளம்பினவே – புறம் 97/13
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என – புறம் 143/8
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து/அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய – புறம் 350/7,8
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி – புறம் 395/22
TOP


உழந்தே (2)

ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9
நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே – அகம் 217/20
TOP


உழப்ப (5)

தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்ப துறந்து உள்ளார் – கலி 16/5
தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்ப துறந்து நீ – கலி 17/5
அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்ப/கழிந்தவை உள்ளாது கண்டவிடத்தே – கலி 72/23,24
இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றி பட்டாய் – கலி 143/42
வாளையொடு உழப்ப துறை கலுழ்ந்தமையின் – அகம் 336/5
TOP


உழப்பது (2)

உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் – குறு 289/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
TOP


உழப்பதும் (1)

ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/11
TOP


உழப்பவள் (1)

நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ – கலி 48/13
TOP


உழப்பவன் (1)

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல – கலி 38/5
TOP


உழப்பவோ (3)

வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ/முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் – கலி 136/8,9
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ/நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் – கலி 136/12,13
சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ/ஆங்கு – கலி 136/16,17
TOP


உழப்பார் (1)

உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்/வளை நெகிழ்பு யாம் காணும்_கால் – கலி 80/12,13
TOP


உழப்பார்-கண் (1)

நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
TOP


உழப்பாரை (1)

காய்ந்த நோய் உழப்பாரை கலக்கிய வந்தாயோ – கலி 120/18
TOP


உழப்பாளை (1)

படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை/குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை – கலி 130/18,19
TOP


உழப்பினும் (1)

அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்/வாரற்க தில்ல தோழி சாரல் – குறு 360/3,4
TOP


உழப்பேன் (1)

சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
TOP


உழப்போள் (2)

துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள்/கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக – ஐங் 477/2,3
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/26
TOP


உழல்வென்-கொல்லோ (1)

அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15
TOP


உழல (1)

திரு மணி அரவு தேர்ந்து உழல/உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/10,11
TOP


உழலை (1)

அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை/மரத்தை போல் தொட்டன ஏறு – கலி 106/21,22
TOP


உழவ (4)

பெரு நெல் பல கூட்டு எருமை உழவ/கண்படை பெறாஅது தண் புலர் விடியல் – நற் 60/2,3
படை ஏர் உழவ பாடினி வேந்தே – பதி 14/17
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ/கடாஅ யானை கால்_வழி அன்ன என் – புறம் 368/13,14
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11
TOP


உழவர் (34)

உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை – சிறு 190
குடி நிறை வல்சி செம் சால் உழவர்/நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 197,198
தண்டலை உழவர் தனி மனை சேப்பின் – பெரும் 355
கொடு மேழி நசை உழவர்/நெடு நுகத்து பகல் போல – பட் 205,206
வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/5
தண்டலை உழவர் தனி மட_மகளே – நற் 97/9
நல் எருது நடை வளம் வைத்து என உழவர்/புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு – நற் 315/4,5
உவர் விளை உப்பின் உழாஅ உழவர்/ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/1,2
செம் சால் உழவர் கோல் புடை மதரி – நற் 340/7
உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினை – குறு 10/3
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர்/விதை குறு வட்டி போதொடு பொதுள – குறு 155/1,2
வித்திய உழவர் நெல்லோடு பெயரும் – ஐங் 3/4
ஏனல் உழவர் வரகு மீது இட்ட – பதி 30/22
கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் – பதி 90/41
உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து – பரி 7/39
களமர் உழவர் கடி மறுகு பிறசார் – பரி 23/27
முது மொழி நீரா புலன் நா உழவர்/புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர – கலி 68/4,5
பெரும் களம் தொகுத்த உழவர் போல – அகம் 30/8
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்/பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் – அகம் 37/2,3
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்/ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/6,7
வானம் வேண்டா வில் ஏர் உழவர்/பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த – அகம் 193/2,3
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த – அகம் 194/13
தண் மழை ஆலியின் தாஅய் உழவர்/வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் – அகம் 211/5,6
கழனி உழவர் குற்ற குவளையும் – அகம் 216/9
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த – அகம் 266/17
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப – அகம் 314/4
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர்/காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை – அகம் 346/5,6
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் – புறம் 13/11
கீழ்_மடை கொண்ட வாளையும் உழவர்/படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் – புறம் 42/13,14
உழவர் ஓதை மறப்ப விழவும் – புறம் 65/4
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/8
மென்_புலத்து வயல் உழவர்/வன்_புலத்து பகடு விட்டு – புறம் 395/1,2
TOP


உழவர்க்கு (1)

இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்கு/புது நிறை வந்த புனல் அம் சாயல் – மலை 60,61
TOP


உழவரொடு (1)

கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி – அகம் 366/8
TOP


உழவன் (4)

ஓர் ஏர் உழவன் போல – குறு 131/5
உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/4
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு – புறம் 230/13
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/3
TOP


உழவா (1)

ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா/பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி – புறம் 164/2,3
TOP


உழவின் (6)

வானம் வேண்டா உழவின் எம் – நற் 254/11
புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் – பதி 15/12
பல் விதை உழவின் சில் ஏராளர் – பதி 76/11
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி 10/103
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/15
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி – புறம் 371/13
TOP


உழவு (4)

கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே – கலி 64/14
குவளையும் நின் உழவு அன்றோ இகலி – கலி 64/16
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த – அகம் 91/11
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 366/13
TOP


உழவு-உறு (1)

பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய் – அகம் 262/2
TOP


உழறல் (1)

நிழல் செய்து உழறல் காணேன் யான் என – அகம் 208/12
TOP


உழாதன (1)

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே – புறம் 109/3
TOP


உழாது (1)

ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2
TOP


உழாஅ (3)

உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் – பெரும் 211
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் – நற் 331/1
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந – புறம் 139/8
TOP


உழாஅது (3)

உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1
இரும் கழி செறுவின் உழாஅது செய்த – அகம் 140/2
உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை – புறம் 168/6
TOP


உழி (1)

புனத்து உழி போகல் உறுமோ மற்று என – அகம் 388/13
TOP


உழிஞ்சில் (2)

நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் – குறு 39/2
கள்ளி அம் காட்ட கடத்து இடை உழிஞ்சில்/உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/7,8
TOP


உழிஞை (8)

வேறு பல் பூளையொடு உழிஞை சூடி – பட் 235
பொன் புனை உழிஞை வெல் போர் குட்டுவ – பதி 22/27
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை/வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் – பதி 43/23,24
நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை – பதி 44/10
பணியா மரபின் உழிஞை பாட – பதி 46/6
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து – புறம் 76/5
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து – புறம் 77/3
TOP


உழிஞையன் (1)

இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன்/மடம் பெருமையின் உடன்று மேல் வந்த – பதி 56/5,6
TOP


உழிஞையொடு (1)

பொலம் குழை உழிஞையொடு பொலிய சூட்டி – புறம் 50/4
TOP


உழிஞையோடு (1)

பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த – கலி 140/4
TOP


உழிதர (1)

மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர/பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் – அகம் 125/10,11
TOP


உழிதரும் (2)

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 383
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும்/மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் – பதி 62/7,8
TOP


உழியது-கொல் (1)

என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22
TOP


உழு (8)

கொல்லை உழு கொழு ஏய்ப்ப பல்லே – பொரு 117
நெல் உழு பகட்டொடு கறவை துன்னா – பெரும் 325
தளி பதம் பெற்ற கான் உழு குறவர் – நற் 209/2
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/5
தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய் – அகம் 26/24
கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டி – அகம் 109/4
பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/25
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக – புறம் 105/5
TOP


உழுஞ்சில் (3)

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் – அகம் 45/1
கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்/தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/8,9
உழுஞ்சில் அம் கவட்டு இடை இருந்த பருந்தின் – புறம் 370/7
TOP


உழுத்து (1)

உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2
TOP


உழுத (13)

தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை – பெரும் 201
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத/கரும் கால் செந்தினை கடியும் உண்டன – நற் 122/1,2
மறு கால் உழுத ஈர செறுவின் – நற் 210/2
துறு கண் கண்ணி கானவர் உழுத/குலவு குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் – நற் 386/2,3
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை – ஐங் 193/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
புன்_புல மயக்கத்து உழுத ஏனல் – ஐங் 283/2
வெள் வரகு உழுத கொள் உடை கரம்பை – பதி 75/11
இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத/கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் – அகம் 302/9,10
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத/உளை குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல் – அகம் 388/3,4
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 125/7
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
TOP


உழுதாய் (1)

உழுதாய்/சுரும்பு இமிர் பூ கோதை அம் நல்லாய் யான் நின் – கலி 64/11,12
TOP


உழுது (6)

கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
பூழி மயங்க பல உழுது வித்தி – புறம் 120/3
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன – புறம் 322/1
TOP


உழுதும் (1)

இரு நீர் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும்/பெரு_நீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/8,9
TOP


உழுதோய் (1)

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24
TOP


உழுந்தின் (2)

இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின்/அகல் இலை அகல வீசி அகலாது – நற் 89/5,6
பூழ் கால் அன்ன செம் கால் உழுந்தின்/ஊழ்ப்படு முது காய் உழை_இனம் கவரும் – குறு 68/1,2
TOP


உழுந்தினும் (1)

உழுந்தினும் துவ்வா குறு வட்டா நின்னின் – கலி 94/27
TOP


உழுந்து (3)

உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் – குறு 384/1
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன – ஐங் 211/1
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1
TOP


உழும் (1)

நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் – பரி 13/34
TOP


உழுவது (1)

உழுவது உடையமோ யாம் – கலி 64/10
TOP


உழுவாய் (1)

என் உழுவாய் நீ மற்று இனி – கலி 64/18
TOP


உழுவை (18)

அளை செறி உழுவை கோள் உற வெறுத்த – மலை 505
பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி – நற் 47/1
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 104/1
பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி – நற் 144/1
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை – நற் 154/5
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி – நற் 205/3
வய களிறு பொருத வாள் வரி உழுவை/கல் முகை சிலம்பில் குழுமும் அன்னோ – நற் 255/4,5
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப – பரி 14/12
கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/11
கடுங்கண் உழுவை அடி போல வாழை – கலி 43/24
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – கலி 46/4
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை/நாம நல்_அரா கதிர்பட உமிழ்ந்த – அகம் 72/13,14
பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை – அகம் 147/6
கடையல் அம் குரல வாள் வரி உழுவை/பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது – அகம் 277/5,6
பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை – அகம் 332/4
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை – புறம் 33/9
அளை செறி உழுவை இரைக்கு வந்து அன்ன – புறம் 78/3
TOP


உழுவையும் (1)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252
TOP


உழுவையை (1)

பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ – புறம் 152/2
TOP


உழுவையொடு (1)

உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் – அகம் 308/1
TOP