கி – முதல் சொற்கள், திருவருட்பா தொடரடைவு (ஊரன் அடிகள் பதிப்பு)

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கிட்ட 2
கிட்டா 1
கிட்டாத 1
கிட்டாது 1
கிட்டுகின்றோய் 1
கிட்டும் 1
கிடக்கின்றேன் 1
கிடக்கும் 1
கிடக்கை 1
கிடங்கரினை 1
கிடத்தி 1
கிடத்திய 1
கிடத்தினள் 1
கிடத்தும் 1
கிடந்த 7
கிடந்தனன் 2
கிடந்தாய் 1
கிடந்து 13
கிடந்தே 2
கிடந்தேன் 1
கிடந்தேன்-தனை 1
கிடந்தேனை 1
கிடப்பாரை 1
கிடப்பேன் 1
கிடைக்க 2
கிடைக்கும் 6
கிடைக்கும்-கொலோ 1
கிடைக்குமே 2
கிடைக்குமோ 1
கிடைக்குள் 1
கிடைத்த 40
கிடைத்தது 6
கிடைத்ததை 1
கிடைத்ததொன்று 1
கிடைத்தல் 1
கிடைத்தார் 1
கிடைத்தால் 1
கிடைத்திட 1
கிடைத்திடுமோ 1
கிடைத்திலனே 1
கிடைத்து 4
கிடைத்தும் 1
கிடைத்துளேன் 1
கிடைத்தே 2
கிடைத்தோய் 1
கிடைப்ப 4
கிடைப்பது 1
கிடைப்பாரோ 1
கிடையா 10
கிடையாத 2
கிடையாதாகில் 1
கிடையாதாய் 1
கிடையாது 1
கிடையார் 1
கிண்கிணி 1
கிணற்றிலே 1
கிணறு 1
கிம்புருடர் 1
கிர்த்திய 1
கிரண 2
கிரணங்கள் 1
கிரணத்திலே 1
கிரணம் 2
கிரணாங்க 1
கிரணாங்கியாய் 1
கிரணாதிகள் 1
கிரிமி 1
கிரியா 1
கிரியை 5
கிரீசன் 1
கிருமி 1
கிலம் 1
கிலேசத்தை 1
கிலேசம் 2
கிலேசமும் 1
கிழ 4
கிழக்கு 2
கிழங்கு 1
கிழங்கை 1
கிழம் 1
கிழமலையாய் 2
கிழமாய் 1
கிழவன் 1
கிழி 1
கிழித்தேன் 1
கிள்ளி 2
கிள்ளியெடுத்தால் 1
கிள்ளை 1
கிள்ளையை 1
கிளக்க 2
கிளக்கிலனோ 1
கிளக்கின்ற 2
கிளக்கும் 1
கிளத்தா 1
கிளத்தும் 1
கிளத்துவார் 1
கிளந்திடும் 1
கிளம்புகின்றாய் 1
கிளர் 23
கிளர்கின்றோய் 1
கிளர்ச்சி 1
கிளர்ச்சியும் 1
கிளர்தரும் 1
கிளர்ந்த 1
கிளர்ந்தது 1
கிளர்ந்தனையே 1
கிளர்ந்திட 3
கிளர்ந்திடும் 1
கிளர்ந்து 6
கிளர்ந்தேன் 1
கிளர்வது 1
கிளர 1
கிளரும் 1
கிளி 3
கிளி_பிள்ளை 1
கிளிஞ்சிலிடை 1
கிளியே 3
கிளை 5
கிளைக்குறும் 1
கிளைத்த 6
கிளைத்தார் 1
கிளைத்திலேன் 1
கிளைத்தீர் 1
கிளைத்து 1
கிளைத்தேன் 2
கிளையே 1
கிளையை 1
கிறி 1
கின்னரம் 1
கின்னரர் 2

கிட்ட (2)

இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய் – திருமுறை3:6 2366/3
கிட்ட வர வேண்டும் என்றார் பாங்கிமாரே நான் – திருமுறை4:26 2835/1

மேல்


கிட்டா (1)

பட்டாலும் அங்கு ஓர் பலன் உண்டே கிட்டா மெய் – திருமுறை3:3 1965/748

மேல்


கிட்டாத (1)

வேடருக்கும் கிட்டாத வெம் குணத்தால் இங்கு உழலும் – திருமுறை3:2 1962/735

மேல்


கிட்டாது (1)

பன்ன அரும் வன் துயரால் நெஞ்சு அழிந்து நாளும் பதைத்து உருகி நின் அருள்_பால் பருக கிட்டாது
உன்ன அரும் பொய் வாழ்க்கை எனும் கானத்து இந்த ஊர் நகைக்க பாவி அழல் உணர்ந்திலாயோ – திருமுறை1:7 109/1,2

மேல்


கிட்டுகின்றோய் (1)

கேட்டிலாய் அடியேன் செய் முறையை அந்தோ கேடு இலா குணத்தவர்-பால் கிட்டுகின்றோய்
ஏட்டில் ஆயிரம்_கோடி எனினும் சற்றும் எழுத முடியா குறை கொண்டு இளைக்கின்றேன் நான் – திருமுறை4:12 2696/1,2

மேல்


கிட்டும் (1)

கிட்டும் முன்னே எட்ட நின்றார் பாங்கிமாரே – திருமுறை4:26 2835/2

மேல்


கிடக்கின்றேன் (1)

களியேன் கருங்கல் பாறை என கிடக்கின்றேன் இ கடையேனை – திருமுறை4:10 2673/2

மேல்


கிடக்கும் (1)

நாட நீறு இடா மூடர்கள் கிடக்கும் நரக இல்லிடை நடப்பதை ஒழிக – திருமுறை2:38 1005/1

மேல்


கிடக்கை (1)

மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி – திருமுறை6:81 4615/367,368

மேல்


கிடங்கரினை (1)

ஞால கிடங்கரினை நம்பாதே நீல – திருமுறை2:65 1298/2

மேல்


கிடத்தி (1)

புன்செய் விளவி பயன்_இலியாய் புறத்தில் கிடத்தி என அடியார் – திருமுறை4:10 2671/3

மேல்


கிடத்திய (1)

தூங்கி மிக புரண்டு விழ தரையில் விழாது எனையே தூக்கி எடுத்து அணைத்து கீழ் கிடத்திய மெய் துணையே – திருமுறை6:57 4134/2

மேல்


கிடத்தினள் (1)

திரு இலா பொத்தை தொட்டிலில் செவிலி சிறியனை கிடத்தினள் எந்தாய் – திருமுறை6:14 3550/2

மேல்


கிடத்தும் (1)

உகந்த நான் கிடத்தும் ஓங்கிய அமுதே – திருமுறை6:81 4615/1286

மேல்


கிடந்த (7)

மண் கிடந்த வாழ்வின் மதி மயக்கும் மங்கையரால் – திருமுறை2:36 977/1
புண் கிடந்த நெஞ்ச புலையேன் புழுக்கம் அற – திருமுறை2:36 977/2
ஒண் கிடந்த மு தலை வேல் ஒற்றி அப்பா நாரணன்-தன் – திருமுறை2:36 977/3
கண் கிடந்த சேவடியின் காட்சி-தனை காணேனோ – திருமுறை2:36 977/4
கிடந்த பச்சை பெரு மலைக்கு கேடு இல் அருள்தந்து அகம் புறமும் – திருமுறை3:13 2478/3
ஆணவமாம் இருட்டு அறையில் கிடந்த சிறியேனை அணி மாயை விளக்கு அறையில் அமர்த்தி அறிவு அளித்து – திருமுறை6:57 4166/1
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:98 4795/2

மேல்


கிடந்தனன் (2)

கெஞ்சி கொஞ்சி நிறை அழிந்து உன் அருட்கு இச்சை நீத்து கிடந்தனன் ஆயினேன் – திருமுறை1:18 252/2
காய் என காய்த்தேன் கடை என நடந்தேன் கல் என கிடந்தனன் குரைக்கும் – திருமுறை6:15 3578/3

மேல்


கிடந்தாய் (1)

ஏற்று கிடந்தாய் என்கின்றார் இது-தான் சேடி என்னேடீ – திருமுறை2:98 1817/4

மேல்


கிடந்து (13)

கணத்தினில் உலகம் அழிதர கண்டும் கண்_இலார் போல் கிடந்து உழைக்கும் – திருமுறை2:28 877/1
நாடும் மாயையில் கிடந்து உழைக்கின்றாய் நன்று நின் செயல் நின்றிடு மனனே – திருமுறை2:42 1042/2
தணியா உலக சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் – திருமுறை3:10 2462/3
நீண்ட மால் அரவு ஆகி கிடந்து நின் நேயத்தால் கலி நீங்கிய வாறு கேட்டு – திருமுறை3:24 2544/1
விளக்கு அறியா இருட்டு அறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவியினும் மிக பெரிதும் சிறியேன் – திருமுறை6:4 3294/1
துரு பிடி இருப்பு துண்டு போல் கிடந்து தூங்கினேன் என் செய்வேன் எந்தாய் – திருமுறை6:9 3363/4
மலத்திலே உழைத்து கிடந்து அழல் கேட்டும் வந்து எனை எடுத்திலார் அவரும் – திருமுறை6:14 3548/2
போக_மாட்டேன் பிறரிடத்தே பொய்யில் கிடந்து புலர்ந்து மனம் – திருமுறை6:19 3621/1
பொறுக்க_மாட்டேன் உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு இனி நான் – திருமுறை6:19 3623/2
வாட்டமொடு சிறியனேன் செய் வகையை அறியாது மனம் மிக மயங்கி ஒருநாள் மண்ணில் கிடந்து அருளை உன்னி உலகியலினை மறந்து துயில்கின்ற போது – திருமுறை6:22 3674/1
தனியே கிடந்து மனம் கலங்கி தளர்ந்துதளர்ந்து சகத்தினிடை – திருமுறை6:98 4790/1
விதி பாலை அறியேம் தாய்_பாலை உண்டு கிடந்து அழுது விளைவிற்கு ஏற்ப – திருமுறை6:125 5333/2
வாய் குறும்பு உரைத்து திரிந்து வீண் கழித்து மலத்திலே கிடந்து உழைத்திட்ட – திருமுறை6:125 5420/1

மேல்


கிடந்தே (2)

யோகம் உறு நிலை சிறிதும் உணர்ந்து அறியேன் சிறியேன் உலக நடையிடை கிடந்தே உழைப்பாரில் கடையேன் – திருமுறை6:6 3316/2
தும்மினேன் வெதும்பி தொட்டிலில் கிடந்தே சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும் – திருமுறை6:14 3549/1

மேல்


கிடந்தேன் (1)

எடுத்து ஆள் என நினையாதே கிடந்தேன் என்னை – திருமுறை6:97 4770/3

மேல்


கிடந்தேன்-தனை (1)

மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர் – திருமுறை6:13 3417/1

மேல்


கிடந்தேனை (1)

எ கரையும் காணாதே இருள்_கடலில் கிடந்தேனை எடுத்து ஆட்கொண்டு – திருமுறை6:77 4517/1

மேல்


கிடப்பாரை (1)

பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர் பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் – திருமுறை6:132 5561/3

மேல்


கிடப்பேன் (1)

அரங்கா கிடப்பேன் என் செய்வேன் ஆரூர் அமர்ந்த அரு மணியே – திருமுறை3:10 2461/4

மேல்


கிடைக்க (2)

கருதாயோ நெஞ்சே கதி கிடைக்க எங்கள் – திருமுறை2:65 1279/1
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4139/2

மேல்


கிடைக்கும் (6)

சுணங்கு_அனேன்-தனக்கு உன் திரு_அருள் கிடைக்கும் சுகமும் உண்டாம்-கொலோ அறியேன் – திருமுறை2:27 858/2
இ பரிசானால் என் செய்வேன் எளியேன் எவ்வணம் நின் அருள் கிடைக்கும்
துப்புரவு_ஒழிந்தோர் உள்ளகத்து ஓங்கும் சோரியே ஒற்றியூர் துணையே – திருமுறை2:27 862/3,4
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும்
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே – திருமுறை3:6 2196/3,4
நாய்க்கு கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர் – திருமுறை3:6 2292/3
உளவில் கிடைக்கும் மருந்து ஒன்றும் – திருமுறை3:9 2454/3
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே – திருமுறை6:81 4615/1376

மேல்


கிடைக்கும்-கொலோ (1)

எடுத்து ஏற்ற கிடைக்கும்-கொலோ வெண் பளிதம் எற்கே – திருமுறை1:33 372/4

மேல்


கிடைக்குமே (2)

கஞ்ச மா மலர் கழல் கிடைக்குமே – திருமுறை1:10 154/4
கலகமில் இன்பமாம் கதி கிடைக்குமே – திருமுறை1:45 480/4

மேல்


கிடைக்குமோ (1)

வரத்தை காட்டும் மலை தணிகேசனே வஞ்சனேற்கு அருள் வாழ்வு கிடைக்குமோ – திருமுறை1:18 256/4

மேல்


கிடைக்குள் (1)

கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன் – திருமுறை1:10 155/1

மேல்


கிடைத்த (40)

கேழ்வி மேவிய அடியவர் மகிழ்வுற கிடைத்த அருள் பெரு வாழ்வே – திருமுறை1:15 229/3
கேட்டை தரு வஞ்சக உலகில் கிடைத்த மாய வாழ்க்கை எனும் – திருமுறை1:23 305/3
நேர்ந்த உயிர் போல் கிடைத்த நேசன் காண் சேர்ந்து மிக – திருமுறை3:3 1965/400
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம் – திருமுறை6:13 3531/1
ஊழி-தோறு ஊழி பல அண்ட பகிரண்டத்து உயிர்க்கு எலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவு ஆகி அடியேற்கு உவப்பொடு கிடைத்த நிதியே – திருமுறை6:22 3672/1
எய்ப்பு அற எனக்கு கிடைத்த பெரு நிதியமே எல்லாம் செய் வல்ல சித்தாய் என் கையில் அகப்பட்ட ஞான மணியே என்னை எழுமையும் விடாத நட்பே – திருமுறை6:22 3682/1
ஆவியும் தனது மயம் பெற கிடைத்த அருள்_பெரும்_சோதி அம்பலவா – திருமுறை6:26 3737/2
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே பலத்தினால் கிடைத்த என் பதியே – திருமுறை6:34 3829/2
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த கற்பக தீம் சுவை கனியே – திருமுறை6:34 3831/1
மெய்ம்மையே கிடைத்த மெய்ம்மையே ஞான விளக்கமே விளக்கத்தின் வியப்பே – திருமுறை6:39 3890/1
குரு முதல் குருவாய் குரு எலாம் கிடைத்த கொள்கையாய் கொள்கையோடு அளவா – திருமுறை6:48 4003/2
எய்ப்பிலே கிடைத்த வைப்பு-அது என்கோ என் உயிர்க்கு இன்பமே என்கோ – திருமுறை6:50 4016/1
நிச்சலும் எனக்கே கிடைத்த வாழ்வு என்கோ நீடும் என் நேயனே என்கோ – திருமுறை6:50 4017/2
அத்தம் நேர் கிடைத்த சுவை கனி என்கோ அன்பிலே நிறை அமுது என்கோ – திருமுறை6:50 4018/1
வெட்டியே என்கோ வெட்டியில் எனக்கு விளங்குற கிடைத்த ஓர் வயிர – திருமுறை6:51 4025/2
தாகம் உள் எடுத்த போது எதிர் கிடைத்த சர்க்கரை அமுதமே என்கோ – திருமுறை6:51 4030/1
உள் அமுதோ நான்-தான் உஞற்று தவத்தால் கிடைத்த
தெள் அமுதோ அம்பலவன் சீர் – திருமுறை6:52 4044/3,4
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே தரு நிழலே நிழல் கனிந்த கனியே – திருமுறை6:57 4091/1
ஒசித்த கொடி_அனையேற்கு கிடைத்த பெரும் பற்றே உள் மயங்கும் போது மயக்கு ஒழித்து அருளும் தெளிவே – திருமுறை6:57 4093/1
பசித்த பொழுது எதிர் கிடைத்த பால்_சோற்று திரளே பயந்த பொழுது எல்லாம் என் பயம் தவிர்த்த துரையே – திருமுறை6:57 4093/2
கங்குலிலே வருந்திய என் வருத்தம் எலாம் தவிர்த்தே காலையிலே என் உளத்தே கிடைத்த பெரும் களிப்பே – திருமுறை6:57 4095/1
பரை வெளிக்க பால் விளங்கு தனி வெளியில் பழுத்தே படைத்த எனது உளத்து இனிக்க கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4130/3
பார்ப்பு_அனையேன் உள்ளகத்தே விளங்கி அறிவு இன்பம் படைத்திட மெய் தவ பயனால் கிடைத்த தனி பழமே – திருமுறை6:57 4131/3
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறும் கனியே – திருமுறை6:57 4181/1
கையில் கிடைத்த மருந்து சிவகாமக்கொடியை – திருமுறை6:78 4538/3
கிளர்ந்திட எனக்கு கிடைத்த மெய் துணையே – திருமுறை6:81 4615/1168
கிளர்ந்திட உரைத்து கிடைத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1354
களைப்பு அற கிடைத்த கருணை நல் நீரே – திருமுறை6:81 4615/1399
தென்னை-வாய் கிடைத்த செவ்விளநீரே – திருமுறை6:81 4615/1401
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
கருணை ததும்பி பொதுநோக்கும் கண்ணில் கிடைத்த கண்ணே ஓர் கனியில் கனிந்து அன்பு உருவான கருத்தில் கிடைத்த கருத்தே மெய் – திருமுறை6:83 4625/1
அருள் நல் நிலையில் அதுஅதுவாய் அறிவில் கிடைத்த அறிவே என் அகத்தும் புறத்தும் ஒளி நிறைவித்து அமர்ந்த குருவே ஐம்பூத – திருமுறை6:83 4625/2
பொய்யில் கிடைத்த மனம்_போன_போக்கில் சுழன்றே பொய் உலகில் – திருமுறை6:98 4795/1
வெய்யில் கிடைத்த புழு போல வெதும்பி கிடந்த வெறியேற்கு – திருமுறை6:98 4795/2
நான் செய் தவத்தால் எனக்கு கிடைத்த நல்ல நண்பனே – திருமுறை6:112 4980/4
அமர்ந்த துணைவ எனக்கு கிடைத்த அமுத வெள்ளமே – திருமுறை6:112 5014/2
ஒன்றும் முன் எண்-பால் எண்ணிட கிடைத்த உவைக்கு மேல் தனை அருள் ஒளியால் – திருமுறை6:125 5379/1
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1
அன்னியர் அல்லடி அவரே எனது குல_தெய்வம் அரும் தவத்தால் கிடைத்த குரு ஆகும் அது மட்டோ – திருமுறை6:142 5738/3

மேல்


கிடைத்தது (6)

ஏதம் தலை மேல் சுமந்தேனுக்கு இ சீர் கிடைத்தது எவ்வாறே – திருமுறை6:19 3627/4
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில் ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும் – திருமுறை6:24 3714/2
இன்பம் கிடைத்தது என்று உந்தீபற – திருமுறை6:107 4898/2
கருணை கிடைத்தது என்று ஊதூது சங்கே – திருமுறை6:122 5279/2
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1
கேழ் வகையில் அகம் புணர்ந்தேன் அவர் கருணை அமுதம் கிடைத்தது நான் ஆண்_மகன் ஆகின்றது அதிசயமோ – திருமுறை6:142 5765/4

மேல்


கிடைத்ததை (1)

துருவாமல் இங்கு எனக்கு கிடைத்ததை என் சொல்வேன் சொல்அளவு அல்லாத சுகம் தோன்றுவது என் தோழி – திருமுறை6:137 5625/4

மேல்


கிடைத்ததொன்று (1)

தத்துவம் அனைத்தும் தவிர்த்து நான் தனித்த தருணத்தில் கிடைத்ததொன்று என்கோ – திருமுறை6:51 4031/1

மேல்


கிடைத்தல் (1)

நாட கிடைத்தல் நமக்கு அன்றி நான்முகற்கும் – திருமுறை3:3 1965/315

மேல்


கிடைத்தார் (1)

தாயினும் பேர்_அருள்_உடையார் என் உயிரில் கலந்த தனி தலைவர் நான் செய் பெரும் தவத்தாலே கிடைத்தார்
வாயினும் ஓர் மனத்தினும் மா மதியினும் எத்திறத்தும் மதித்து அளத்தற்கு அரும் துரிய மன்றில் நடம் புரிவார் – திருமுறை6:142 5812/1,2

மேல்


கிடைத்தால் (1)

சோறு கிடைத்தால் அதுவே சொர்க்கம் காண் வீறுகின்ற – திருமுறை3:2 1962/676

மேல்


கிடைத்திட (1)

கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் – திருமுறை6:48 3999/2

மேல்


கிடைத்திடுமோ (1)

காட்டு வழி கிடைத்திடுமோ நாட்டு வழி தருமோ கால் இளைப்பு கண்டிடுமோ காணாதோ களிப்பாம் – திருமுறை6:11 3384/2

மேல்


கிடைத்திலனே (1)

கண்ணே உன் பொன்_முகத்தை காண கிடைத்திலனே – திருமுறை2:59 1213/4

மேல்


கிடைத்து (4)

எவ்வகைத்தாம் தவம் செயினும் எய்த அரிதாம் தெய்வம் எனக்கு எளிதில் கிடைத்து என் மனம் இடம்கொண்ட தெய்வம் – திருமுறை6:41 3912/1
ஏக மெய்ஞ்ஞான யோகத்தில் கிடைத்து உள் இசைந்த பேர்_இன்பமே என்கோ – திருமுறை6:51 4032/2
மனம் இளைத்து வாடிய போது என் எதிரே கிடைத்து வாட்டம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த நிதியே – திருமுறை6:57 4094/1
இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே – திருமுறை6:81 4615/1350

மேல்


கிடைத்தும் (1)

தரும் பொன்னை மாற்று அழிக்கும் அரும் பொன் நீ கிடைத்தும் உனை தழுவிலேனே – திருமுறை4:15 2745/4

மேல்


கிடைத்துளேன் (1)

கேழ் ஆர் மணி அம்பலம் போற்ற கிடைத்துளேன் நான் – திருமுறை6:91 4710/2

மேல்


கிடைத்தே (2)

வாழ்வனோ நின் பொன் அடி நிழல் கிடைத்தே வயங்கும் ஆனந்த_வெள்ளத்துள் – திருமுறை1:32 369/1
மெய்யில் கிடைத்தே சித்தி எலாம் விளைவித்திடும் மா மணியாய் என் – திருமுறை6:98 4795/3

மேல்


கிடைத்தோய் (1)

கையில் கிடைத்தோய் நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே – திருமுறை6:98 4795/4

மேல்


கிடைப்ப (4)

என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனை – திருமுறை2:79 1536/1
உம்பருக்கும் கிடைப்ப அரிதாம் மணி மன்றில் பூத உரு வடிவம் கடந்து ஆடும் திரு_அடிகளிடத்தே – திருமுறை5:2 3138/1
பண்ணுகின்ற பெரும் தவத்தும் கிடைப்ப அரிதாய் சிறிய பயல்களினும் சிறியேற்கு கிடைத்த பெரும் பதியே – திருமுறை6:57 4172/2
வான் பதிக்கும் கிடைப்ப அரியார் சிற்சபையில் நடிக்கும் மணவாளர் எனை புணர்ந்த புற புணர்ச்சி தருணம் – திருமுறை6:142 5807/3

மேல்


கிடைப்பது (1)

பெரு நெறிக்கே சென்ற பேர்க்கு கிடைப்பது பேய் உலக – திருமுறை6:53 4052/2

மேல்


கிடைப்பாரோ (1)

நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:141 5705/1

மேல்


கிடையா (10)

எய்ச்சு ஊர் தவம் செய்யினும் கிடையா பதம் ஏய்ந்து மண் மேல் – திருமுறை2:24 829/2
கொள்ள கிடையா மாணிக்க கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும் – திருமுறை2:25 843/2
சேமம் என்பதாம் நின் அருள் கிடையா சிறுமையே இன்னும் செறிந்திடுமானால் – திருமுறை2:49 1111/2
கண்ணன் நெடுநாள் மண் இடந்தும் காண கிடையா கழல்_உடையார் – திருமுறை2:78 1503/1
பிடிக்கும் கிடையா நடை உடைய பெண்கள் எல்லாம் பிச்சி என – திருமுறை2:78 1505/3
கருதற்கு அரியார் கரியார் முன் காண கிடையா கழல்_அடியார் – திருமுறை2:81 1556/1
கொள்ள கிடையா அலர் குமுதம் கொண்ட அமுதம் கொணர்ந்து இன்னும் – திருமுறை2:98 1878/3
தேட கிடையா நம் தெய்வம் காண் நீட சீர் – திருமுறை3:3 1965/316
பார் நின்ற நாம் கிடையா பண்டம் எது வேண்டிடினும் – திருமுறை3:3 1965/397
படைப்பவனும் காப்பவனும் பற்பல நாள் முயன்று பார்க்க விரும்பினும் கிடையா பாத_மலர் வருந்த – திருமுறை5:2 3088/1

மேல்


கிடையாத (2)

தாய்க்கும் கிடையாத தண் அருள் கொண்டு அன்பர் உளம் – திருமுறை3:2 1962/557
இனியும் பருக்கும் கிடையாத இன்பம் அடைந்தே இருந்திடவும் – திருமுறை3:13 2479/2

மேல்


கிடையாதாகில் (1)

கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில்
நாளாய் ஓர் நடுவன் வரில் என் செய்வானோ நாயினேன் என் சொல்வேன் நாணுவேனோ – திருமுறை1:6 99/2,3

மேல்


கிடையாதாய் (1)

கேவலங்கள் சற்றும் கிடையாதாய் மா வலத்தில் – திருமுறை3:3 1965/72

மேல்


கிடையாது (1)

கட்ட துகிலும் கிடையாது கந்தை உடுத்தது அறிந்திலையோ – திருமுறை2:92 1688/3

மேல்


கிடையார் (1)

நல் பாட்டு மறைகளுக்கும் மால் அயர்க்கும் கிடையார் நம் அளவில் கிடைப்பாரோ என்று நினைத்து ஏங்கி – திருமுறை6:141 5705/1

மேல்


கிண்கிணி (1)

தண்டை எழில் கிண்கிணி சேர் சரண மலர்க்கு அனுதினமும் தமியேன் அன்பாய் – திருமுறை3:21 2511/3

மேல்


கிணற்றிலே (1)

கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் கேணியில் எறிந்தனன் எந்தாய் – திருமுறை6:12 3396/2

மேல்


கிணறு (1)

நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் நெடும் தூரம் ஆழ்ந்து உதவா படும் கிணறு போல்வேன் – திருமுறை6:4 3302/2

மேல்


கிம்புருடர் (1)

மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம் – திருமுறை3:1 1960/88

மேல்


கிர்த்திய (1)

பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம் – திருமுறை3:1 1960/14

மேல்


கிரண (2)

தெரிது ஆன வெளி நடுவில் அருளாம் வண்மை செழும் கிரண சுடர் ஆகி திகழும் தேவே – திருமுறை3:5 2083/4
அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:22 3662/1

மேல்


கிரணங்கள் (1)

குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசி குல அமுத மயம் ஆகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே – திருமுறை6:22 3659/3

மேல்


கிரணத்திலே (1)

அணி மதியிலே மதியின் அருவிலே உருவிலே அ உருவின் உருவத்திலே அமுத கிரணத்திலே அ கிரண ஒளியிலே அ ஒளியின் ஒளி-தன்னிலே – திருமுறை6:22 3662/1

மேல்


கிரணம் (2)

தண் அமுத மதி குளிர்ந்த கிரணம் வீச தடம் பொழில் பூ மணம் வீச தென்றல் வீச – திருமுறை3:5 2108/1
அருள் எனும் அமுதம் தரும் ஒரு கடலே அருள் கிரணம் கொளும் சுடரே – திருமுறை4:19 2798/2

மேல்


கிரணாங்க (1)

பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம் – திருமுறை3:1 1960/23

மேல்


கிரணாங்கியாய் (1)

இடல் எலாம் வல்ல சிவ_சத்தி கிரணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்ப நிலை என்னும் ஒரு சிற்சபையின் நடுவே இலங்கி நிறைகின்ற சுடரே – திருமுறை6:22 3653/2

மேல்


கிரணாதிகள் (1)

தெருள் நிலை சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப முதல் அந்தம் இன்றி திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே – திருமுறை6:22 3651/3

மேல்


கிரிமி (1)

வெய்யல் கிரிமி என மெய் சோர்ந்து இளைத்து அலைந்தேன் – திருமுறை2:36 986/2

மேல்


கிரியா (1)

கானலினை நீராய் களித்தனையே ஆன கிரியா
சத்தி என்றிடும் ஓர் அம்மை விளையாட்டு எனும் இ – திருமுறை3:3 1965/1062,1063

மேல்


கிரியை (5)

சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம் – திருமுறை3:1 1960/51
கிரியை நெறி அகற்றி மறை முடிவில் நின்று கேளாமல் கேட்கின்ற கேள்வியே சொற்கு – திருமுறை3:5 2116/1
வலகம் தழைக்கும் கிரியை இன்பம் வழங்கும் ஆதி பரை என்ன வயங்கும் ஒரு பேர்_அருளே எம் மதியை விளக்கும் மணி_விளக்கே – திருமுறை3:15 2488/3
சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகம் ஓர் நான்கும் – திருமுறை6:12 3399/1
சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும் தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன் – திருமுறை6:142 5806/1

மேல்


கிரீசன் (1)

விதி ஆகி அரி ஆகி கிரீசன் ஆகி விளங்கும் மகேச்சுரன் ஆகி விமலம் ஆன – திருமுறை3:5 2088/1

மேல்


கிருமி (1)

வஞ்ச மட மாதரார் போகம் என்னும் மலத்தினிடை கிருமி என வாளா வீழ்ந்தேன் – திருமுறை1:25 326/1

மேல்


கிலம் (1)

கிடைக்குள் மாழ்கியே கிலம் செய் அந்தகன் – திருமுறை1:10 155/1

மேல்


கிலேசத்தை (1)

புரி கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை – திருமுறை6:13 3542/3

மேல்


கிலேசம் (2)

சொல் கிலேசம் இல் அடியவர் அன்பினுள் தோய்தரு பசும் தேனே – திருமுறை1:15 221/3
கீழாக நான் அதன் மேலாக நெஞ்ச கிலேசம் எல்லாம் – திருமுறை4:15 2730/2

மேல்


கிலேசமும் (1)

கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3530/4

மேல்


கிழ (4)

கொன் நரை சேர் கிழ குருடன் கோல் போல் வீணே குப்புறுகின்றேன் மயலில் கொடியனேனே – திருமுறை3:5 2146/4
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முட கிழ நாய் – திருமுறை3:6 2206/3
கேட்டு கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்ச கிழ குரங்கால் – திருமுறை3:6 2243/3
கண்ணை கட்டிக்கொண்டு ஊர் வழி போம் கிழ கழுதை வாழ்வில் கடை எனல் ஆகுமே – திருமுறை4:15 2778/4

மேல்


கிழக்கு (2)

கிழக்கு அறியீர் மேற்கு அறியீர் அம்பலத்தே மாயை கேதம் அற நடிக்கின்ற பாதம் அறிவீரோ – திருமுறை6:125 5329/2
கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1

மேல்


கிழங்கு (1)

தண்டு காய் கிழங்கு பூ முதல் ஒன்றும் தவறவிட்டிடுவதற்கு அமையேன் – திருமுறை6:9 3361/1

மேல்


கிழங்கை (1)

அகங்கார கொடும் கிழங்கை அகழ்ந்து எறிய அறியேன் அறிவு அறிந்த அந்தணர்-பால் செறியும் நெறி அறியேன் – திருமுறை6:6 3314/1

மேல்


கிழம் (1)

கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:27 3749/2

மேல்


கிழமலையாய் (2)

பாதி மலை முத்தர் எலாம் பற்றும் மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2484/4
பாக்கியங்கள் எல்லாமும் பழுத்த மலை என்னும் பழமலையை கிழமலையாய் பகருவது என் உலகே – திருமுறை3:14 2485/4

மேல்


கிழமாய் (1)

வெண்மை கிழமாய் விருத்தம் அந்த வெண்மை-அதாய் – திருமுறை3:3 1965/161

மேல்


கிழவன் (1)

சாகான் கிழவன் தளர்கின்றான் என்று இவண் நீ – திருமுறை3:3 1965/903

மேல்


கிழி (1)

மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த – திருமுறை3:6 2265/2

மேல்


கிழித்தேன் (1)

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் – திருமுறை6:93 4736/2

மேல்


கிள்ளி (2)

தோலிலே எனினும் கிள்ளி ஓர்சிறிதும் சூழ்ந்தவர்க்கு ஈந்திட துணியேன் – திருமுறை6:9 3358/3
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளி தொட்டிலும் ஆட்டிடுகின்றாள் – திருமுறை6:14 3547/3

மேல்


கிள்ளியெடுத்தால் (1)

கிள்ளியெடுத்தால் இரத்தம் கீழ் வருமே கொள்ளும் அவர் – திருமுறை3:3 1965/716

மேல்


கிள்ளை (1)

இலவு காக்கின்ற கிள்ளை போல் உழன்றாய் என்னை நின் மதி ஏழை நீ நெஞ்சே – திருமுறை2:29 882/1

மேல்


கிள்ளையை (1)

கிள்ளையை தூதா விடுத்தேன் பாங்கிமாரே அது – திருமுறை4:26 2837/1

மேல்


கிளக்க (2)

கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


கிளக்கிலனோ (1)

கேள்வி இலா துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே – திருமுறை4:12 2695/4

மேல்


கிளக்கின்ற (2)

செவ் ஒரு சார் நின்று சிறியேன் கிளக்கின்ற
இ ஒரு சொல் கேட்டிடுக என் நெஞ்சே எவ்வெவ் – திருமுறை3:3 1965/5,6
கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:140 5703/1

மேல்


கிளக்கும் (1)

கேள்வி இலா துரைத்தனமோ அலது நாயேன் கிளக்கும் முறை கிளக்கிலனோ கேட்டிலாயே – திருமுறை4:12 2695/4

மேல்


கிளத்தா (1)

கெடு நிலை நினைக்கும் சிற்றதிகார கேடரை பொய் அலால் கிளத்தா
படு நிலையவரை பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம் – திருமுறை6:13 3474/2,3

மேல்


கிளத்தும் (1)

கேளாயோ என் செய்கேன் எந்தாய் அன்பர் கிளத்தும் உனது அருள் எனக்கு கிடையாதாகில் – திருமுறை1:6 99/2

மேல்


கிளத்துவார் (1)

கெடுக்கும் வண்ணமே பலர் உனக்கு உறுதி கிளத்துவார் அவர் கெடு மொழி கேளேல் – திருமுறை2:29 887/1

மேல்


கிளந்திடும் (1)

கிளக்கின்ற மறை அளவை ஆகம பேர்_அளவை கிளந்திடும் மெய் சாதனமாம் அளவை அறிவு அளவை – திருமுறை6:140 5703/1

மேல்


கிளம்புகின்றாய் (1)

மெய்ப்பொருளாம் சிவம் ஒன்றே என்று அறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய் நீ கிளம்புகின்றாய் மீட்டும் – திருமுறை6:142 5803/2

மேல்


கிளர் (23)

உரம் கிளர் வானோர்க்கு ஒரு தனி முதலை ஒப்பு_இலாது ஓங்கிய ஒன்றை – திருமுறை1:38 413/3
தரம் கிளர் அருணகிரிக்கு அருள்பவனை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 413/4
சந்தாரம் சூழ் தண் கிளர் சாரல் தணிகேசர் – திருமுறை1:47 494/3
கேளாது அலைகின்றதால் ஒற்றி மேவும் கிளர் ஒளியே – திருமுறை2:62 1243/4
கீழ் கோவணத்தின் கிளர் அழகும் கீழ் கோலம் – திருமுறை3:3 1965/456
கேட்டாலும் அங்கு ஓர் கிளர் உண்டே கோள் தாவி – திருமுறை3:3 1965/762
ஆறு விளங்க அணி கிளர் தேர் ஊர்ந்த உலா – திருமுறை3:14 2486/1
வளம் கிளர் சடையும் விளங்கிய இதழி மாலையும் மால் அயன் வழுத்தும் – திருமுறை3:16 2490/1
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை3:16 2490/2
குளம் கிளர் நுதலும் களம் கிளர் மணியும் குலவு திண் புயமும் அம்புயத்தின் – திருமுறை3:16 2490/2
தளம் கிளர் பதமும் இளங்கதிர் வடிவும் தழைக்க நீ இருத்தல் கண்டு உவத்தல் – திருமுறை3:16 2490/3
உளம் கிளர் அமுதே துளங்கு நெஞ்சகனேன் உற்று அருணையில் பெற அருளே – திருமுறை3:16 2490/4
கேளாய் என் உயிர் துணையாய் கிளர் மன்றில் வேத கீத நடம் புரிகின்ற நாத முடி பொருளே – திருமுறை5:2 3079/4
கிடைத்திட கீழ் மேல் நடு என காட்டா கிளர் ஒளியாய் ஒளிக்கு எல்லாம் – திருமுறை6:48 3999/2
கரை வளர் தருவே தரு வளர் கரையே கரை தரு வளர் கிளர் கனியே – திருமுறை6:62 4243/3
கெட_மாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும்_மாட்டேன் கிளர் ஒளி அம்பலத்து ஆடல் வளர் ஒளி நும் அல்லால் – திருமுறை6:95 4747/3
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1
இயல் கிளர் மறையே மறை கிளர் இசையே இசை கிளர் துதியே துதி கிளர் இறையே – திருமுறை6:117 5238/1
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
செயல் கிளர் அடியே அடி கிளர் முடியே திரு_நட மணியே திரு_நட மணியே – திருமுறை6:117 5238/2
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1

மேல்


கிளர்கின்றோய் (1)

கிளர்கின்றோய் ஓதுகின்றோர்-பால் – திருமுறை3:2 1962/386

மேல்


கிளர்ச்சி (1)

கிழம் பெரும் பாட்டும் கேட்பது உன் உள்ள கிளர்ச்சி என்று அறிந்த நாள் முதலாய் – திருமுறை6:27 3749/2

மேல்


கிளர்ச்சியும் (1)

கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும் – திருமுறை6:13 3530/4

மேல்


கிளர்தரும் (1)

கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4

மேல்


கிளர்ந்த (1)

கேழியல் சம்பந்தர் அந்தணர் வேண்ட கிளர்ந்த நல் சீர் – திருமுறை2:24 827/2

மேல்


கிளர்ந்தது (1)

கிழக்கு வெளுத்தது கருணை அருள் சோதி உதயம் கிடைத்தது எனது உள_கமலம் கிளர்ந்தது எனது அகத்தே – திருமுறை6:125 5387/1

மேல்


கிளர்ந்தனையே (1)

கேட்டு நின்றும் அந்தோ கிளர்ந்தனையே ஈட்டி நின்ற – திருமுறை3:3 1965/1068

மேல்


கிளர்ந்திட (3)

கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும் கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ – திருமுறை6:14 3544/3
கிளர்ந்திட எனக்கு கிடைத்த மெய் துணையே – திருமுறை6:81 4615/1168
கிளர்ந்திட உரைத்து கிடைத்த செம்பொன்னே – திருமுறை6:81 4615/1354

மேல்


கிளர்ந்திடும் (1)

நலம் கிளர்ந்திடும் தணிகை அம் பதி அமர் நாயக மணி_குன்றே – திருமுறை1:15 227/4

மேல்


கிளர்ந்து (6)

கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4
தரும் பரசிவத்துள் கிளர்ந்து ஒளிர் ஒளியை தணிகையில் கண்டு இறைஞ்சுவனே – திருமுறை1:38 414/4
ஒற்றிக்கு இறைவனை எங்கள் கேள்வனை கிளர்ந்து நின்று ஏத்தா – திருமுறை2:31 901/2
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/4
அள் இரவு போல் மிடற்றில் அழகு கிளர்ந்து ஆட அம்பலத்தில் ஆடுகின்ற செம்பவள_குன்றே – திருமுறை5:2 3083/4
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4139/2

மேல்


கிளர்ந்தேன் (1)

உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளனவாய் நிறைந்தேன் – திருமுறை6:125 5449/3

மேல்


கிளர்வது (1)

தனியே நின்னை நினைக்க கிளர்வது எனது சிந்தையே – திருமுறை6:112 4980/2

மேல்


கிளர (1)

களி மருவும் இமய வரை அரையன் மகள் என வரு கருணை தரு கலாப மயிலே கருதும் அடியவர் இதய_கமல மலர் மிசை அருள் கலை கிளர வளர் அன்னமே – திருமுறை4:3 2599/3

மேல்


கிளரும் (1)

கொட்டையூர் உள் கிளரும் கோமளமே இட்டமுடன் – திருமுறை3:2 1962/90

மேல்


கிளி (3)

தேடும் கிளி நீ நின்னை விளம்பி திரு_அன்னார் – திருமுறை1:47 500/1
ஓதை உறும் உலகாயதத்தின் உள உண்மை போல் ஒருசிறிதும் இல்லை இல்லை உள்ளது அறியாது இலவு காத்த கிளி போல் உடல் உலர்ந்தீர்கள் இனியாகினும் – திருமுறை3:8 2425/2
பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:127 5476/4

மேல்


கிளி_பிள்ளை (1)

பின் இயல் மானிட பிள்ளை பேச்சினும் ஓர் பறவை பிறப்பின் உறும் கிளி_பிள்ளை பேச்சு உவக்கின்றதுவே – திருமுறை6:127 5476/4

மேல்


கிளிஞ்சிலிடை (1)

கானலிடை நீரும் ஒரு கட்டையில் கள்வனும் காணுறு கயிற்றில் அரவும் கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னை கதித்த பித்தளையின் இடையும் – திருமுறை1:1 14/1

மேல்


கிளியே (3)

இரும் பேய் மனத்தினர்-பால் இசையாத இளம் கிளியே
வரும் பேர் ஒளி செம் சுடரே வடிவுடை_மாணிக்கமே – திருமுறை2:75 1441/3,4
அம் சொல் கிளியே மகளே நீ அரிய தவம் ஏது ஆற்றினையோ – திருமுறை2:85 1600/1
தென் சொல் கிளியே என்னடி நான் செய்வது ஒன்றும் தெரிந்திலனே – திருமுறை2:86 1610/4

மேல்


கிளை (5)

கலகம் தரு சூர் கிளை களைந்த கதிர் வேல் அரசே கவின்தரு சீர் – திருமுறை1:43 460/2
வில்வ கிளை உதிர்த்த வெய்ய முசுக்கலையை – திருமுறை3:2 1962/761
கீள்_உடையாய் பிறை கீற்று_உடையாய் எம் கிளை தலை மேல் – திருமுறை3:6 2178/1
கிடைக்க எனக்கு அளித்து அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் கிளர்ந்து ஒளி கொண்டு ஓங்கிய மெய் கிளை எனும் பேர்_ஒளியே – திருமுறை6:57 4139/2
கிளை அனந்த மறையாலும் நிச்சயிக்க கூடா கிளர் ஒளியார் என்னளவில் கிடைத்த தனி தலைவர் – திருமுறை6:141 5710/1

மேல்


கிளைக்குறும் (1)

கிளைக்குறும் பிணிக்கு ஓர் உறையுளாம் மடவார் கீழுறும் அல்குல் என் குழி வீழ்ந்து – திருமுறை1:35 385/1

மேல்


கிளைத்த (6)

கிளைத்த வான் கங்கை நதி சடையவனே கிளர்தரும் சிற்பர சிவனே – திருமுறை2:6 628/4
கிளைத்த மலையை பழமலையில் கிளர்ந்து வயங்க கண்டேனே – திருமுறை3:13 2477/4
நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன் – திருமுறை6:3 3285/3
இரங்கில் ஓர்சிறிதும் இரக்கம் உற்று அறியேன் இயலுறு நாசியுள் கிளைத்த
சிரங்கினில் கொடியேன் சிவ நெறி பிடியேன் சிறு நெறி சழக்கையே சிலுகு – திருமுறை6:3 3288/2,3
கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3
கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 3397/1

மேல்


கிளைத்தார் (1)

விருந்தார் திருந்தார் புரம் முன் தீ விளைத்தார் ஒற்றி நகர் கிளைத்தார்
தரும் தார் காம மருந்து ஆர் இ தரணி இடத்தே தருவாரே – திருமுறை2:82 1565/3,4

மேல்


கிளைத்திலேன் (1)

கிளைத்த இ உடம்பில் ஆசை எள்ளளவும் கிளைத்திலேன் பசி அற உணவு – திருமுறை6:12 3397/1

மேல்


கிளைத்தீர் (1)

எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போல் கிளைத்தீர் எ துணை கொள்கின்றீர் பித்து உலகீரே – திருமுறை6:132 5561/4

மேல்


கிளைத்து (1)

அலகில் வெம் துயர் கிளைத்து அழுங்கு நெஞ்சமே – திருமுறை1:45 480/2

மேல்


கிளைத்தேன் (2)

நடுமை ஒன்று அறியேன் கெடுமையில் கிளைத்த நச்சு மா மரம் என கிளைத்தேன்
கொடுமையே குறித்தேன் அம்பல கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே – திருமுறை6:3 3285/3,4
அரசர் எலாம் மதித்திட பேர்_ஆசையிலே அரசோடு ஆல் எனவே மிக கிளைத்தேன் அருள் அறியா கடையேன் – திருமுறை6:4 3298/1

மேல்


கிளையே (1)

கிளக்க அரும் புகழ் கொள் தணிகை அம் பொருப்பில் கிளர்ந்து அருள் புரியும் என் கிளையே – திருமுறை1:35 384/4

மேல்


கிளையை (1)

பொல்லாத சூர் கிளையை தடிந்து அமரர் படும் துயர புன்மை நீக்கும் – திருமுறை3:21 2510/1

மேல்


கிறி (1)

கிளக்க அறியா கொடுமை எலாம் கிளைத்த பழு_மரத்தேன் கெடு மதியேன் கடுமையினேன் கிறி பேசும் வெறியேன் – திருமுறை6:4 3294/3

மேல்


கின்னரம் (1)

கின்னரம் கேள் என்று இசைத்தார் பாங்கிமாரே நான் – திருமுறை4:26 2836/1

மேல்


கின்னரர் (2)

மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம் – திருமுறை3:1 1960/89
மான் நிமிர்ந்து ஆட ஒளிர் மழு எழுந்து ஆட மகவான் ஆதி தேவர் ஆட மா முனிவர் உரகர் கின்னரர் விஞ்சையரும் ஆட மால் பிரமன் ஆட உண்மை – திருமுறை4:4 2603/2

மேல்